அவனின் விளக்கத்தைக் கேட்டவள், அதில் திருப்தியடையாமல்,
“அதுவரைக்கும் ஏன் அந்த மாதிரி நீங்க உணரலே?” என்று அவனைக் கேள்வி கேட்டாள்.
“நீ சென்னைலே, இங்கே, இதே காலனிலே ‘D’ பிளாக்கிலே இருக்க முடியுமுன்னு நான் யோசிக்கவே இல்லை பவி..திருச்சிலேதான் இருப்பேன்னு நினைச்சேன்…தப்பானஇன்ஸெப்ஷன் (inception) அதனால் தான்னு நினைக்கறேன்.” என்றான் ஜெய்.
“நேக்குத் தெரிஞ்சு என் விஷயத்திலே உங்களோட AI ஃபெயிலாயிடுத்து.” என்றாள் பவி.
“அம்மாவோட விஷயத்திலே என் AI எப்பவும் கரெக்ட் அண்ட் இன்னைக்கு மத்தியானம் உன்னோடேயும் ஐ வாஸ் கரெக்ட்.” என்றான்.
“எப்பவும் கரெக்டா இருக்க முடியாதுன்னு சொல்ல வரேன்.” என்றாள் பவி.
“யெஸ்..எப்பவும் கரெக்ட்டா இருக்க முடியாது ஆனா எங்கே தப்பாயிடுத்துன்னு தெரிஞ்சுக்கணும்..ஸமிக்ஷா பர்த்டே அன்னைக்கு நேக்கு என்ன நடந்ததுன்னு நான் கண்டு பிடிக்கணும்..அந்த நாளை இன்னும் நிறைய தடவை அலசிப் பார்க்கணும்.” என்றான் ஜெய்.
அதற்கு,“அன்னைக்கு நம்ம இரண்டு பேருக்கும் நடந்தது என்னென்னு நேக்குத் தெரியும்.” என்று பவி சொன்னவுடன்,
“ரியலி..அதை பற்றி நான் அனலைஸ் பண்ணி அலுத்துப் போயிட்டேன்.” என்றான் ஜெய்.
“என்கிட்டே முன்னடியே கேட்டிருந்தா அது என்னென்னு நான் சொல்லியிருப்பேனே.” என்று ஸிம்பிலாக பதில் சொன்னாள் பவி.
“சரி..இப்ப கேட்கறேன் சொல்லு.” என்று பவியின் பதிலைக் கேட்க ஆவலானான் ஜெய்.
“ஸமிக்ஷா பர்த்டே அன்னைக்கு நம்ம இரண்டு பேரோட BIயையும் ஒரே மாதிரி வேலை பண்ணித்து.” என்றாள் பவி.
“ரியலி..இரண்டு ‘BI’ ல எந்த BI?” என்று கேட்டான் ஜெய்.
“உங்களோட BI இல்லை இது..நான் சொல்றது வேற BI ண்ணா.” என்றாள் பவி.
“அது என்ன வேற ‘BI’ ?” மூன்றாவது BI ?” என்று கேட்டான் ஜெய்.
“பர்த்டே அன்னைக்கு நீங்களும் நானும் உணர்ந்தது ஸேம்..அந்த இராத்திரி வேளைலே ‘D’ பிளாக்கிற்கு உங்களை வரவழைச்சுது உங்களோட BI..என்னையும் அங்கே வரவழைச்சது என்னோட BI..ஆனா நாம இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் எதிர்பார்த்து அங்கே வரலே..கரெக்டா?” என்று கேட்டாள் பவி.
“யெஸ்….நான் உன்னை அங்கே எதிர்பார்க்கலே..நீ பார்க் உள்ள வந்த அப்புறம் தான் அது நீன்னு நேக்குத் தெரிஞ்சுது..நோக்கும் நான் பேசின அப்புறம் தான் அது நான்னு கன்ஃபார்ம் ஆச்சு.” என்றான் ஜெய்.
“நாம இரண்டு பேரும் வீட்டை விட்டு வெளிலே வந்தது இன்ஸ்டிங்டிவ் (instinctive)..
அன்னைக்கு என் கல்யாணத்தைப் பற்றி நான் ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்திலேஇருந்தேன்..என்னைவிட சின்னவளுக்குக் கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்ணிட்டூ அதை கொஞ்சம் கூட சங்கடமில்லாம சித்தப்பா சொன்னதிலேர்ந்து எங்க அம்மாவுக்கு ஒரே மனசு கஷ்டம்..ஆத்துலே நான் கல்யாணமாகாமஇருக்கறச்சே அவரோட பொண்ணுக்குக் கல்யாணத்தை நிச்சயம் பண்ணிட்டார்ன்னு தெரிஞ்சவுடனே எங்கம்மாவாலே தாங்கிக்கவே முடியலே..
என்னோட மாமா ஏற்கனவே எனக்காக திருச்சிலே ஒரு வரன் பார்த்து வைச்சிருந்தர்..நான் தான் எங்கம்மாகிட்டே அடுத்த விநாயக சதுர்த்தி வரைக்கும் அவகாசம் கேட்டிருந்தேன்..ஸமிக்ஷா பிறந்த நாள் அன்னைக்குதான் சித்தப்பா பெங்களூர்லே நிச்சயதார்தத்தை நடத்தினர்.. அன்னைக்கு எங்கம்மா, ‘இனியும் உன் கல்யாணத்தைத் தள்ளி போட்டா ஊர் ஏதாவது கதை கட்டி விட்டிடும்..வம்பு பேசும்..அதனாலே கிறிஸ்மஸ் லீவுலே திருச்சிக்குப் போய் அந்த வரனைப் பேசி முடிக்க போறேன்னு.’ என்கிட்டே சொன்னா..
நேக்கும் எங்கம்மா சொல்றது சரின்னு தோணித்து..ஆனா அதே சமயம் உங்களை மனசுலே வைச்சிண்டு எப்படி என்னாலே இன்னொரு வாழ்க்கைக்குச் சரி சொல்ல முடியும்?..பழைசு எதையுமே நினைக்காம வேற வாழ்க்கையை எப்படி வாழp போறேன்னு நினைச்சவுடனே என்னாலே அதுக்கு மேலே ஆத்துலே இருக்க முடியலே..உடனே கிளம்பி பார்க்குக்கு வந்துட்டேன்..
அந்த க்ஷணத்திலே என்னோட அறிவோ, உள்ளுணர்வோ நேக்கு எதுவும் சொல்லலே..அதனாலே என்னை அந்தப் பார்க்குக்கு கொண்டு வந்தது வாஸ் மை “பேஸிக் இன்ஸ்டிங்க்ட்” (Basic instinct).” என்றாள் பவி.
பவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஜெய்யின் மனத்திலும் அதே எண்ணங்கள் தான் ஓடிக் கொண்டிருந்தன.அந்த இராத்திரி வேளையில் அவனை எந்த உணர்வு அவளுடைய பிளாக்கின் முன்னாலிருந்த பார்க்கிற்கு அழைத்து சென்றது என்று அவனால் இன்றுவரை தனியாக, தெளிவாக, திடமாகப் பிரித்து சொல்ல முடியவில்லை.
“ஒரு கட்டத்துக்கு மேலே அமெரிக்காலே இருக்க முடியாம நான் இந்தியா திரும்பினது..உன் சித்தப்பாவைப் பார்த்த அப்புறம் உன்னை நேர்லே சந்திச்சு உன் வாயால உன் விருப்பத்தைக் கேட்கணும்னு நான் முடிவு பண்ணினது….நீ மெஸெஜ் எழுதியிருந்த அந்தக் கேக்கை சாப்பிட்டவுடனே ஆத்துலே இருக்க முடியாம அந்த பார்க்குக்கு நான் வந்தது.. என் ஸர்வைவலுக்காக நான் எடுத்த இன்ஸ்டிங்டிவ் முடிவுகள்..யு ஆர் ரைட் தட் வாஸ் மை “BI”. என்று ஒப்புக் கொண்டான ஜெய்.
“அன்னைக்கு நடந்ததுலே தப்பு எதுவுமில்லே அதுவே வேறன்னு இப்ப தெரிஞ்சுடுத்தோனோ இனி அம்மா முகத்தைப் பார்த்து அவர் மனசைப் படிக்கறேன்னு அவரை டிரபிள் பண்ணாதீங்கோ.” என்று அந்த நேரத்திலும் ஜெய்யிடம் மினி மாமிக்காகப் பரிந்து பேசினாள் பவி.
“எங்கம்மாக்கும் நோக்கும் ஆகவே ஆகாது.. ஆனா, இப்ப, நீங்க இரண்டு பேரும் இப்படி ஒருத்தருக்கொருத்தர் தாங்கிக்கறேள்..எப்படி?” என்று கேட்டான் ஜெய்.
“இன்னைக்கு மத்தியானம் உங்களோட சேர்ந்து சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ளே உங்க பாட்டால நான் பட்ட பாடு.. அதான் அம்மாவோட சேர்ந்துட்டேன்..பார்ட்னர்ஸ் அகெய்ன்ஸ்ட் பாட் (Partners Against Bot).” என்று சொல்லிச் சிரித்தாள் பவி.
“நோ..நம்ம சந்திப்புக்குக் காரணம் ‘BI’..நம்ம கல்யாணதுக்கு காரணம் “A2B2” தான்.” என்று என் ஜினியரைக் குழப்பினாள் டீச்சர்.
“A2B2 வா?” என்று புரியாமல் கேட்டான் என்ஜினியர்.
“ஆமாம்..நேக்கும் உங்கம்மாக்கும் ஆகவே ஆகாதுன்னு தெரிஞ்சும் மினி மாமியாலே மட்டும்தான் நம்ம கல்யாணத்தை நடத்தி வைக்க முடியும்னு உங்களோட பாட் தானே உங்களுக்கு சொல்லித்து அதனாலே உங்களுக்கு ‘AB’ ந்னா ஆல்மைட்டி பாட் (Almighty Bot)…என் கல்யாணத்தை என் விருப்பப்படி நடத்துணும்னு பகவானைக் காட்டி மினி மாமி தானே எங்கம்மாக்குப் புரிய வைச்சா அதனாலே நேக்கு ‘AB’ ந்னா ஆல்மைட்டி பகவான் (Almighty Bhagavan)…ஸோ இட்ஸ் ‘A2B2’.” என்று தெளிவாக விளக்கினாள் டீச்சர்.
“ஸோ நம்ம இரண்டு பேரையும் சேர்த்து வைச்சது இரண்டு AB..ரைட்?”
“ஆமாம்.”
“இன்னும் இரண்டும்கூட நம்மளை முன்னாடியே சேர்த்து வைச்சிருக்கலாம்.” என்றான் ஜெய்.
“எந்த இரண்டு ண்ணா?”
“இரண்டு விஷயங்கள்.” என்றான் ஜெய்.
“இரண்டு விஷயமா?”
“உன் மெயில் செக் பண்ணினியா?” என்று ஜெய் கேட்க,
“இல்லை.” என்று சொன்ன பவியின் மனது சூழ்நிலைக்கு சற்றும் சம்மந்தமில்லாத, பொருந்தாத அந்தக் கேள்வியை உள்வாங்கி, அன்று மதியத்திலிருந்து அவனுடன், அவனைப் பற்றி ருக்மிணியுடனும் நடத்திய உரையாடல்கள் அனைத்தையும் அவளின் “AI” யை உபயோகித்து, குவாண்ட்டம் ஸ்பீடில் அலசியவள், அன்று காலையில், அவள் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு கணவனாகிய அவளின் இன்ஸ்பிரெஷனின் ஜீரோ அண்ட் ஒன் அப்ஸெஷனில் (obsession) ஆரம்பித்து அத்தனை முடிச்சுகளையும் (knots) அவிழ்த்தாள். அதன் முடிவில்,
“எத்தனை மெயில் அனுப்பின?” என்று ஜெய்யிடம் கேட்டாள் பவி.அவள் கேள்வியில் அசந்து போன ஜெய்,
“சிவனென்னு இருந்த நேரத்திலே பத்து.” என்றான் ஜெய்.
“புது சைக்கிள் டியுப்ட் டையரா (tubed tyre)?” என்று அடுத்த கேள்வி கேட்டாள்.
அந்தக் கேள்வியில் ஒரு நொடி அதிர்ந்த ஜெய்,“ஆமாம்.” என்றான்.
“ஃபைன் ஜெய்..இன்னுமொரு மெஸ்ஜ் உன்கிட்டேயிருந்து என் மெயில் ஐடிக்கு வந்தது உன்னை நான் பிளாக் பண்ணிடுவேன்….
நான் எப்ப மடிசார் கட்டப் போறேன்?…உன் மடிலே எப்படி உட்காரப் போறேன்? உன் மெயிலுக்கு நான் எப்படி, எப்ப பதில் போட போறேன்? உன் புது சைக்கிளுக்கு நீ காத்து அடிக்கற சாக்கிலே என்னைப் பார்த்து எத்தனை தடவை கண் சிமிட்ட போற? இதெல்லாத்தையும் உன் பாட்டை வைச்சு என் மனசைப் படிச்சு, நோக்கு ஏத்த மாதிரி அதை மன்யுபிளேட் (manipulate) பண்ணி என் முடிவை நீ எடுக்க முடியாது.” என்று மொத்தமாக ஜெய்யின் ‘AIயை’ முதல் இரவிலேயே டெமாலிஷ் செய்தாள் பவி.
அவளின் அனலிஸிஸை கேட்டு அதிர்ச்சியான அனலிஸ்ட், “பவி டார்லிங்..தட் வாஸ் ப்ரில்லியண்ட்..எப்படி? எப்படி?” என்று ஆச்சரியத்துடன் கேட்க,
“உன்னாலே உன் பாட்டை வைச்சு பெரியவா மனசைதான் சரியாப் படிக்க முடியும்..நான், சரியா பேச்சுக்கூட வராத சின்ன குழந்தைகளோட மனசை தினமும் படிச்சு, அவாளுக்குப் பிடிச்சதை, பிடிக்காததைப் புரிஞ்சிண்டு அவளோட பழகிண்டு வரேன்..அதனாலே உன் மனசைப் படிக்கறது நேக்குப் பெரிய விஷயமில்லே…
இனி உன்னோட AI ஆராய்ச்சியை ஆய்வுக்கூடத்தோட நிறுத்திக்கோ…நம்மாத்து கூடத்துக்கு வரக்கூடாது..அம்மாவோட கூடாது..ஆத்துக்காரியோட கூடவே கூடாது.” என்று ஆர்டர் போட்டாள் பவி.
அதற்கு,“கமான்…தட்ஸ் த் ஃபன் பார்ட் (That’s the fun part).” என்றான் ஜெய்.
“ஃபைன்….வேடிக்கை பார்க்கணும் நோக்கு அவ்வளவுதானே..ஃபன் வித் பைனரியா? (fun with binary) ஃபன் வித் பவியா? நாட் அண்ட் ஒன்னா? (nought and one) ஒன் க்நாட்டான்னு? (one knot)நான் தான் இனி முடிவு பண்ண போறேன்..நீ வெறுமன வேடிக்கை பாரு.” என்று அமைதியாக அணுக்குண்டைப் போட்டாள் பவி.
அன்று மதியம் மடியைப் பற்றிமுடிவு எடுக்க சொன்னவனிடம் இப்போது அவளே அவனுடைய முடிவுகளையும் எடுக்க போவதாக சொல்லி, அவள் வீட்டில் நுழைந்த முதல் நாளே அவனின் ‘AI’ யை அவள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவளை அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ள ஆசைப்பட்ட இன்ஸ்பிரெஷன்,
“இந்த ஆத்துலே யாரோட எப்படி நடந்துக்கணும்..என்ன வேடிக்கை காட்டணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன்.” என்று வேண்டுமென்றே அவளை வம்புக்கு இழுத்தான் ஜெய்.
“பண்ணுவ..பண்ணுவ..நேக்கு நீ டிரபிள் கொடுக்கற..நான் சொல்றதைக் கேட்கமாட்டேங்கறேன்னு என் அப்பாகிட்டே நான் கம்ப்ளெண்ட் பண்ணுவேன்.” என்று ஜெய்யை மிரட்டினாள் பவி.
“அப்பாகிட்டே அந்த மாதிரி நீ எதையாவது உளறி வைச்ச உன் ஆத்துக்காரனைப் பெயரைச் சொல்லி கூப்பிடுற..அவனோட எல்லாத்துக்கும் ஆர்கியு பண்றேன்னு எங்கம்மாகிட்டே உன்னைப் பற்றி நான் கம்ப்ளெண்ட் பண்ணுவேன்.” என்று பதிலுக்கு மிரட்டினான் ஜெய்.
“நிஜமாதான்..இனி உன் பாடு அவன் பாடுன்னு என்கிட்டே அம்மா சொன்னாஆஆ” என்று ராகம் இழுத்த பவியை இழுத்து அவன் மடியில் போட்டு,” எப்பாடு பட்டாவது நம்மளோட ‘BI’ யை சோதிச்சுப் பார்க்கணும்ங்கறதை தான் அம்மா அப்படி சொல்லியிருக்கா.” என்று கணவன் வேலையை ஆரம்பித்தான் ஜெய். அவன் ‘BI’ யில் பவியின் கவனம் சிதறி,
“ ‘BI’ யா?” என்று அவள் கேட்க,
அவள் அசந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல்,
“கல்யாணத்துக்கு அப்பறம் எல்லாரும் இந்த ‘BI’ சோதனையை கண்டிப்பா டிரை பண்ணுவா.” என்று பவியைக் கலவரப்படுத்தினான் ஜெய்.
“எந்த BI ண்னா?” என்று அவள் அறியாமையை வெளிபடுத்தி மனைவியானாள் பவி.
“ப்ரொகிரியேஷன்.” (procreation) டு நைட்ஸ் டிரெடிஷன்” (tonight’s tradition).” என்று சொல்லி,வார்த்தையில் ஆரம்பித்த விளக்கம், சிறிது சிறிதாக செயல்முறை சோதனை முயற்சியாக மாறி, முன்னேறி, அந்த இரவின் பாரம்பர்யத்தை பின்பற்றி, இரண்டு இன்ஸ்பிரேஷன்களும் ஒன்றாகி அவர்களின் அடுத்த தலைமுறையை உருவாக்கும் கடமைக்குப் பிள்ளையார் சுழிப் போட்டனர்.
*****ஆரம்பம்*****
Thanks to “AB”
பொதிப்பருவம், இந்தக் கதையோட முகவுரைலே சொன்ன மாதிரி மூன்று விஷயங்களை வைச்சு கதையை எழுத ஆரம்பிச்சு முடிவுலே ஒரே ஒரு விஷயத்தை வைச்சு முடிச்சிருக்கேன்.
நம்மளோட முடிவுகளை மூன்று விதமா எடுக்க முடியும், intelligence based, intuition based, instinct based. எது எப்போன்னு, சூழ்நிலை, அதை எதிர்கொள்ளும் மனிதர்களைப் பொறுத்து. இந்த மூன்றை தவிர இன்னும் ஒண்ணும் மறைமுகமா நம்ம முடிவுகளை எடுக்க உதவி செய்யுது. அந்தக் கண்ணுக்குத் தெரியாத சக்தியைப் பகவான்னு இந்தக் கதைலே சொல்லியிருக்கேன்.
முதல் முறை இந்தக் கதையைப் பதிவேற்றம் செய்த போது “US Airways Flight 1549 யை Hudson River ல emergency landing செய்த Capt Sullenberger அனுபவத்தையும் இந்தக் கதையையும் கனெக்ட் செய்து எழுதிய அந்த ஒரிஜினல் ரைட் அப் இப்போ என்கிட்டே இல்லை. அவரோட அந்த முடிவுக்கு அவரோட instinct தான் காரணம்னு சொல்லியிருப்பார்.All 155 passengers and crew survive ஆனது கடவுளோட கருணைன்னு எடுத்துக்கிட்டா என்னோட தாட் ப்ராஸஸோட சரியா கனெக்ட் ஆச்சு.
இதோட ரீன்ரனை முடிச்சுக்கலாம்னு நினைக்கறேன். பழசை போடறது அதாவது அரைச்ச மாவையே அரைக்கறது எனக்கு ஒத்து வரலை. அ நிருத்தன், மிகுகாதல் இரண்டையும் முடிக்கற முயற்சிலே இறங்கப் போறேன். இந்தக் கதைக்கு ஆதரவு தந்த அனைவர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள். Stay blessed readers.