Nayanthol Kannae
“அதையும் நான் சொல்லலை. உனக்கு அது வேணாம்ன்னா நீ அன்னைக்கே அவர்கிட்ட வேணாம்ன்னு சொல்லியிருக்கலாம்ல”
“அப்போ நீ பழிவாங்க தான் அவரை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டியா??” என்று முகத்துக்கு நேராகவே கேட்டாள் தமக்கையை.
“நயன் ஏன் என்னை புரிஞ்சுக்க மாட்டேங்குறே?? நீயும் கூட என்னையே குற்றம் சொல்றே??”
“நான் குற்றம் சொல்லலை விலோ. எனக்கு உன் வாழ்க்கையை நினைச்சு...
2
செங்கதிருக்கு மதுரை அழகர் நகரில் சொந்தமாய் தையல் கடை ஒன்று உள்ளது. அவன் வீடும் கொஞ்சம் தள்ளி அருகேயே இருப்பதால் மதிய உணவிற்கு அவன் வீட்டிற்கு சென்றிருந்தான்.
அப்போது தான் அவன் கடையில் இருந்து அவனுக்கு போன் வந்தது நாச்சியப்பன் பேசினார்.
“அண்ணே நீங்க நம்ம சிவாவை வெட்டச் சொல்லுங்க. மணி இதெல்லாம் செய்ய மாட்டான். இவ்வளோ...
8
“உனக்கு என்னை பிடிக்கலையா??”
“பிடிக்கலைன்னு சொன்னா விட்டுட போறீங்களா என்ன??”
அவனுக்கு பொறுமை கரைந்து கொண்டிருந்தது அவளின் பேச்சில். ஏற்கனவே அவளை அதிகம் காயம் செய்துவிட்டோம் என்று எண்ணித்தான் சற்று தணிந்து பேசிக் கொண்டிருந்தான் அவளிடத்தில்.
“விடமாட்டேன்”
“அப்புறம் எதுக்கு கேட்கறீங்க??”
“என்னை வேணாம்ன்னு சொல்றதுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு ஒரு வாய்ப்பு இருந்தது அதை நீ தவறவிட்டுட்டே, இப்போ வந்து...
22
ராஜாத்தியும் பூங்கோதையும் அடுத்தடுத்த நிகழ்வுக்கு அவசரப்படுத்த ஆரம்பித்தனர். பூங்கோதை தன் கணவர் குடும்பத்தினருடன் வந்திருந்தார்.
“எங்களுக்கு ரொம்ப திருப்தி மேற்கொண்டு பேசிடலாமே” என்றாள் பூங்கோதை தன் தாயை பார்த்தவாறே.
நயனா நடப்பதை வேடிக்கை பார்க்க முடியாமலும் தன் கை மீறி செல்வதை தடுக்க முடியாமலும் ஆதியை முறைத்து பார்த்திருந்தாள்.
நீங்க இப்போ பேசலை நானே பேசிடுவேன் என்பது போல்...
14
“வீட்டுக்கு ஏன் சொல்லலை??”
“போன் பண்ணேன்...”
“யாருக்கு??”
“அக்காவுக்கு...”
“சொல்லியாச்சா??”
“இல்லை அவ போனை எடுக்கலை”
“உங்கப்பா என்ன பண்றார் அவருக்கு தானே முதல்ல நீ போன் பண்ணியிருக்கணும்??”
“இல்லை அவர் ஊருக்கு போயிருக்கார். இன்னைக்கு நைட் தான் திருப்பூர்ல இருந்து வருவாரு”
“உன்னை தனியாவிட்டு போனாரா அவர்”
“காலையில தான் போனார், நைட் வந்திடுவார்” என்று சொல்லும் போது முகத்தில் ஒரு வலி தெரிந்தது.
ரொம்ப கேள்வி...
9
நயனாவிற்கு அன்று செங்கதிர் தனக்காக பேசியது குறித்து அப்படியொரு சந்தோசம் பொங்கியது. அவளுடன் வேலை பார்க்கும் எழில் சில நாட்களாய் அவளிடம் இப்படித்தான் தொந்திரவு செய்துக் கொண்டிருக்கிறான்.
இன்று இப்படி வந்து கையை பிடிக்க வருவான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. செங்கதிரும் அதற்கு தக்க பதிலடி கொடுப்பான் என்றும் அவள் நினைத்திருக்கவில்லை.
அதை நினைக்க நினைக்க நெஞ்சம்...
6
“உட்காரும்மா” என்றார் சந்தியா.
விலோசனா திரும்பி தன் தந்தையை பார்த்தாள். அவர் கண்ணசைக்கவும் அங்கிருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்தாள் அவள்.
கதிரின் பார்வை நயனாவை தொட்டு மீண்டது. ‘நல்ல வேளை இவளை தான் நான் பொண்ணுன்னு நினைச்சுட்டு பயந்திட்டு இருந்தேன்’
‘அவ கல்யாண பொண்ணா இருந்தா உனக்கென்ன இல்லைன்னா உனக்கென்ன’ என்ற மனசாட்சியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்...
“இவன் சொல்றதை நம்பாதீங்க. இவன் என்கிட்ட தப்பா பேசறான்” என்றாள் உடைந்த குரலில்.
அவள் கையை ஆதரவாய் பிடித்துக்கொண்ட ஆதி மற்றவனை பார்த்து “யார் நீ??” என்றான்.
“அதான் சொன்னேன்ல இவளோட ஆளுன்னு” என்று மீண்டும் அதையே சொல்லிட அவன் மூக்கில் இருந்து ரத்தம் வந்தது ஆதி கொடுத்த அடியில்.
“டேய்” என்று அவன் கத்த “கொன்னுடுவேன்” என்று...
“ஏன் இப்படி சொல்றே சனா?? உனக்கு நான் இருக்கேன்”
“இப்போ நீங்க இருக்கீங்க. அப்போ அந்த வயசுல நான் எங்கம்மாவை எவ்வளவு தேடினேன் தெரியுமா” என்றவள் விசும்பலுடன் பேசினாள்.
“நயன் எப்பவும் அப்பா பொண்ணு. ஆனா நான் அம்மாவோட தான் இருப்பவும் எப்பவும். எனக்கு பதினாலு வயசு இருக்கும் போது அம்மா தவறிப்போனாங்க உடம்பு சரியில்லாம”
“அப்போ நான்...
13
“வாடா புது மாப்பிள்ளை, என்ன இந்த பக்கம் விசிட் போட்டிருக்கே??”
“சும்மா தான் உன்னை பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன்” என்றவனின் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. எதையோ தொலைத்தவன் போல இருந்தான். முகத்தில் அப்படியொரு இறுக்கம் இருந்தது அவனுக்கு.
“கிளினிக் போகலையா??”
“இல்லை திறக்கலை மனசே சரியில்லை” என்றான் விட்டேத்தியாய்.
“ஆதி இது நீ இல்லை” என்றவன் கடைக்கு ஒரு கஸ்டமர்...
3
“ஹலோ சொல்லு ஆதி”
“என்னத்தை சொல்ல உன்னை காலையிலவே போன் பண்ணி கூப்பிட்டேன்ல இன்னைக்கு பொண்ணு பார்க்க போகணும்ன்னு”
“நான் தான் வேலை இருக்கு முடியாதுன்னு சொன்னேன்ல ஆதி”
“ஓ நீங்க ரொம்ப பெரிய மனுசர் ஆகிட்டீங்க நாங்க கூப்பிட்டால்லாம் நீங்க வருவீங்களா. இருடா இரு அப்படியே இரு...” என்றுவிட்டு போனை வைத்துவிட்டான் ஆதி.
செங்கதிர் அவனுக்கு மீண்டும் அழைக்க...
26
“பூங்கோதை உன் தம்பி ஜாதகம் ஒரு பொண்ணு ஜாதகத்தோட பொருந்தி போகுது. பொண்ணு வீட்டுக்காரங்களும் வந்து விசாரிச்சுட்டு போய்ட்டாங்க”
“நாம அடுத்து வர்ற நல்ல நாள்ல அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்திடுவோம். நான் மாப்பிள்ளைக்கு போன் பண்ணி சொல்லிடறேன், நீயும் அவங்களும் வந்திடுங்க” என்றார் ராஜாத்தி.
“ஹ்ம்ம் அவர்கிட்ட பேசிட்டு வர்றேன்ம்மா” என்றாள் அவள்.
“நீ ரெண்டு நாளைக்கு...
“இன்னைக்கு உங்களைப் பார்க்க ரெண்டு பேர் வந்திருந்தாங்க” என்று மொட்டையாய் சொல்லியிருந்தாள் அவள்.
புரியாமல் அவளை ஏறிட்டான் செங்கதிர். “பொண்ணு வீட்டுல இருந்து உங்களைப்பத்தி விசாரிக்க வந்திருந்தாங்க, நல்... நல்லவிதமா சொல்லிட்டேன், வா... வாழ்த்துகள்...” என்று சொல்லியவளின் முகம் இன்னமும் அழுகையை அடக்கிக் கொண்டிருந்தது.
பற்களால் உதட்டை அழுந்தக் கடித்தவாறே நின்றிருந்தாள் அவள். செங்கதிருக்கு என்ன செய்வதென்றே...
16
“என்னம்மா நயனா வேற வேலைக்கு எதுவும் முயற்சி பண்ணலையா??”
“இல்லைப்பா எனக்கு பிடிக்கலைப்பா”
“அப்புறம் நீ பண்ண நினைக்கிறம்மா. இப்படி வீட்டிலவே இருந்தா உனக்கு போர் அடிக்காதா??”
“இப்படியே இருக்கப் போறேன்னு யார் சொன்னது??”
“அப்போ என்னம்மா செய்யப் போறே??”
“உங்ககூட கார்மென்ட்ஸ்க்கு வரலாம்ன்னு இருக்கேன்ப்பா...”
“என்ன!!” என்றார் அவர் ஆச்சரியமாய்.
“நிஜமா தான்ப்பா... ஏன்பா நான் வரக்கூடாதா??”
“தாராளமா வாம்மா. நான் யாருக்காச்சும் கொடுத்திடலாம்...
அவன் சொன்னதை கேட்டு அவள் முகத்தில் எந்த பாவமும் இல்லை. தனக்காக தான் அவன் இதை செய்திருக்கிறான் என்று அவள் மனம் சந்தோசப்படக்கூட முயற்சிக்கவில்லை.
“நயனா என்ன அமைதியா இருக்கே??”
“நான் என்ன சொல்லணும்ன்னு நினைக்கறீங்க. என்கிட்ட சொல்லாம நீங்களே எல்லாம் செஞ்சு முடிச்சாச்சு. அப்புறம் நான் சொல்ல என்ன இருக்கு” என்றாள் விட்டேத்தியாய்.
“நாம விரும்பி கல்யாணம்...
12
இரவு உணவுக்கு பின் வேலை எல்லாம் முடித்து அப்போது தான் அறைக்குள் நுழைந்திருந்தாள் விலோசனா.
ஆதித்யன் மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். இன்று அவளுடன் பேசிவிடுவது என்று அவளுக்காக காத்திருந்தான்.
குளியலறை சென்று வந்தவள் கட்டிலில் அந்த பக்கம் சென்று படுக்க ஆயத்தமாக “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றிருந்தான் அவள் கணவன்.
“சொல்லுங்க” என்று அவள் அங்கிருந்த வாக்கிலேயே...
23
கதிர் சாவகாசமாய் வண்டியை நிறுத்தியவன் உள்ளே வந்துக் கொண்டிருந்தான்.
“வண்டியை எதுக்கு அங்க நிறுத்தினீங்க??”
“வேற எங்க நிறுத்தணும்??”
“வாசலுக்கு நேரவா விடுவாங்க??”
“தெரியும் சாவி கொடு, வண்டியை உள்ள நிறுத்தறேன்??”
“என்னது சாவியா??”
“ஆமா கொடு, டைம் ஆகுது” என்றான் அவன்.
“இப்போ எதுக்கு இங்க வந்தீங்க??”
“வீட்டுக்கு எதுக்கு வருவாங்களாம்”
“வீட்டில இப்போ யாருமில்லை”
“தெரியும், தெரிஞ்சு தானே வந்திருக்கேன்”
“என்னது தெரியுமா??”
“ஆமா தெரியும் நீ சாவியை...
17
“உள்ள வாடா” என்ற ஆதியுடன் நடந்தான் கதிர்.
“எப்படி இருக்கீங்க??” என்று நேரடியாக நயனாவை பார்த்து கேட்க அதில் பல்லைக் கடித்தவள் ஆதி அருகில் இருப்பதால் “ஹ்ம்ம் நல்லாயிருக்கேன்” என்றாள்.
“நயனா மாமா எங்க இன்னும் ஆளைக் காணோம். பேசணும்ன்னு சொன்னேனே??” என்றான் ஆதித்யன்.
“அப்பா எனக்கு மெடிசன் வாங்க கடைக்கு போயிருக்காங்க மாமா. இப்போ வந்திடுவாங்க”
“அவங்களை எதுக்கு...
5
“அப்புறம் மாப்பிள்ளை பிரண்டு எப்படி இருக்கீங்க??” என்றாள் நயனா.
“என்ன வேணும் உனக்கு எப்போ பார்த்தாலும் இங்க வந்து நிக்கறே??” என்றான் செங்கதிர்.
“ஹலோ என் டிரெஸ்ஸை தைக்க கொடுத்திருக்கேன். இன்னைக்கு டியூ சொல்லியிருக்கீங்க அதுக்கு தான் வந்திருக்கேன்”
“நீ யார்கிட்ட கொடுத்தியோ அவர்கிட்டவே கேளு” என்றான் அவனும்.
“அவர்கிட்ட வந்ததுமே கேட்டுட்டேன். நீங்க தான் நானே தைச்சுக்கறேன்னு எடுத்திட்டு...
7
வீட்டிற்கு வந்த நயனாவிற்கு வீடே வெறுமையானது போல இருந்தது. உறவினர்கள் எல்லாம் போட்டது போட்டபடியே கிளம்பிச் சென்றுவிட்டனர்.
அனைத்தும் ஒதுக்கி வைத்துவிட்டு இரவு உணவை அவளுக்கும் தந்தையுமாய் சாப்பிட்டு முடிக்க அவருக்கு மாத்திரை கொடுத்து முன்பே உறங்கி சொல்லிவிட்டு தன் அறைக்குள் புகுந்துக் கொண்டாள் நயனா.
அடக்க முடியாமல் அப்படியொரு கேவல் வெடித்தது அவளிடம். தந்தை இந்நேரம்...