Advertisement

முழுசா சொல்லவிடு தானே. உன்கிட்ட நான் நல்ல பிள்ளைன்னு பேர் வாங்கி அவார்ட்டா வாங்கப் போறேன். அது மத்தவங்களை பொறுத்தவரை மட்டுமே இருக்கட்டும். சோ…” என்று இழுத்தான் அவன்.
ஹப்பா கமுக்கமா இருக்கவங்களை நம்பக் கூடாதாம். எங்க பெரியத்தை சொல்லுவாங்க. அது சரியா போச்சே. நீங்க இவ்வளவு பேசுவீங்கன்னு இன்னைக்கு தான் பார்க்கறேன். ரொம்ப சாப்ட்டா இருக்கீங்கன்னு நினைச்சேன்” 
இவ்வளவு பேசுவீங்களா நீங்க… ஹ்ம்ம்… உங்களை…” என்றவள் அவன் தலை முடியை பிடித்து ஆட்ட சந்தோசமாய் அவளிடம் சரணடைந்தான் அவன்.
நயனா”
என்ன??”
சொல்லவா என்று அவன் சொல்லவும் அவன் மார்பில் சாய்ந்திருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
இன்னும் என்ன மிச்சமிருக்கு என்கிட்ட சொல்ல, அதான் எல்லாமே சொல்லியாச்சே
நீ எப்படி இருக்கேன்னு கேட்டியே
ஏதோ வில்லங்கமா சொல்லப் போறீங்கன்னு தான் நானே அதை அவாய்ட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க சொல்லித்தான் ஆவேன்னு அடம் பிடிக்கறீங்க. உங்க ஆசையை ஏன் கெடுப்பானேன் சரி சொல்லுங்க
செமையா இருக்கே
இவ்வளவு தானாநான் ரொம்ப பெரிசா சொல்வீங்கன்னு நினைச்சேன்
என்ன நினைச்சேன்னு சொல்லு நீ அப்படி இருக்கேன்னு நான் சொல்லிடறேன்
போய்யா என் வாயை பிடுங்கறது எப்போ பார்த்தாலும் நான் வாயை திறக்க மாட்டேன்
நான் திறக்க வைப்பேன்
முடியாதே என்றவள் வாயை இறுக மூடிக்கொள்ள செங்கதிர் அவளின் முகம் முழுதும் முத்திரை பதித்துக் கொண்டே வந்தான்.
தன்னையுமறியாமல் அவள் அழுந்த மூடிய பூவிதழ்கள் தன்னை போல விடுபட அவன் இதழ் கொண்டு அதை அணைத்தான். இருவருமாய் தங்கள் வாழ்க்கையின் முதல் அத்தியாயத்தை படிக்க தொடங்கினர்.
மறுநாள் நால்வரும் சற்று தாமதமாகவே எழுந்து குளித்து காலை உணவருந்தி வெளியே சுற்றி பார்க்க சென்றனர். உடன் ஆதியும் விலோசனாவும் வருவதை மற்ற இருவரும் கண்டுக்கொள்ளவே இல்லை
நயனா பிடித்திருந்த கதிரின் கையை விடாமல் பற்றிக்கொண்டு அவனோடே சுற்றிக் கொண்டிருந்தாள்.
என்னங்க இப்படி பண்றாங்க??” என்றாள் விலோசனா.
ஆதியோ கடுப்பானவன்நீ தான் எதுவும் பண்ண மாட்ட, அவங்களாச்சும் சந்தோசமா இருக்கட்டுமே
நான் என்ன செஞ்சேன், என்னை குறை சொல்லலைன்னா உங்களுக்கு தூக்கமே வராது என்று இடித்தாள் அவன் மனைவி.
இவங்களோட நம்ம சுத்துறது எல்லாம் வேலைக்கு ஆகாது என்ற ஆதிகதிர் என்றழைக்க முன்னே சென்றுக் கொண்டிருந்த இருவரும் நடையை தடை திரும்பி பார்த்தனர் இவர்களை.
நீங்க தனியா போய் சுத்தி பார்த்திட்டு வாங்க. நாங்க இப்படியே தனியா சுத்தி பார்க்கறோம். லஞ்ச்க்கு நான் போன் பண்றேன்
ஆதி நாம டின்னர்க்கு மீட் பண்ணுவோம் என்றான் கதிர்.
அடப்பாவிகளா ஒரு வார்த்தைக்கு கூட அதெல்லாம் வேணாம்ன்னு சொல்லலையேஎன்று ஆதியின் மனம் புலம்ப பேக்கிரவுண்டில்யார் யாரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டுஎன்று ஓடியது.
ஒரு வருடத்திற்கு பின்
———————————
இளவரசனுக்கு உடல்நிலை சற்று குன்றிப் போனதால் நயனா தான் கார்மெண்ட்சை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் குழந்தை உண்டான பிறகு கதிர் தான் அதற்கு முழு பொறுப்பும் ஏற்றிருந்தான்.
நல்ல நல்ல ஆர்டர்கள் எல்லாம் வந்து கார்மெண்ட்ஸ் பிசினஸ் ஏறுமுகமாகவே இருந்தது. அவன் ஆரம்பித்த தொழிலையும் விடாமல் இன்று வரை செய்துக் கொண்டிருக்கிறான்.
காலையில் கடைக்கு சென்று அளவுகள் குறித்துக் கொடுப்பது இன்றளவும் அவன் செய்யும் வேலையே. ஆட்கள் குறைவாக உள்ள போது அவனே தையல் மெசினிலும் உட்கார்ந்து தைப்பதை விடவுமில்லை.
தற்போது நயனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள் பிரசவத்திற்காக. உடன் செங்கதிர், ராஜாத்தி மற்றும் விலோசனாவும் ஆதியும் இருந்தனர்.
இளவரசனை வீட்டிலேயே விட்டு வந்திருந்தனர். அவர் நொடிக்கொரு தரம் ஆதிக்கு போன் செய்து நிலவரத்தை கேட்டுக் கொண்டிருந்தார்.
காலையிலேயே அவளுக்கு வலி கண்டிருக்க உடனேயே அழைத்து வந்திருந்தனர். இரவாகிப் போனது இன்னமும் பிரசவிக்கவில்லை அவள்.
வலி மட்டும் விட்டு விட்டு வந்துக் கொண்டிருந்தது அவளுக்கு. அவளை நடக்க சொல்லியிருக்க கதிர் தான் அவளை தாங்கிக் கொண்டு நடக்க வைத்திருந்தான்.
ஆதி விலோசனாவுடன் இருந்தான். அவர்களுக்கு இன்னும் குழந்தை உண்டாகியிருக்கவில்லை. எங்கே நயனாவின் வலியை கண்டு அவள் பயந்து விடப் போகிறாள் என்று அவன் மருத்துவமனையின் வெளியில் மனைவியுடன் இருந்தான்.
என்னங்க உள்ளே போகலாம் ப்ளீஸ்என்றாள் விலோசனா.
வேணாம் சனா
எனக்கு அவளை பார்க்கணுங்க, பாவம் வலியில துடிச்சுட்டு இருக்கா காலையில இருந்து
நீ சங்கடப்படுவே சனா, நான் சொல்றதை கேளு
கண்டிப்பா சங்கடப்பட மாட்டேன். ப்ளீஸ் உள்ள போகலாங்க…”
சனா…”
எனக்கு அவளோட குழந்தையை பார்க்கணும். அதை பார்க்கும் போதாச்சும் கடவுள் எனக்கும் அந்த வரத்தை கொடுப்பார்ல. எனக்கு தோணுதுங்க எங்கம்மாவே வந்து நயன்க்கு பிறப்பாங்க பாருங்களேன் என்று இவள் இங்கே சொல்லியது தான் தாமதம் உள்ளே நயனாவிற்கு வலி அதிகமாகி லேபர் வார்ட் அழைத்து செல்லப்பட்டிருந்தாள்.
அவளின் பேச்சை கேட்டு தாங்காதவனாக மனைவியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். இவர்கள் உள்ளே செல்லவும் குழந்தையின் அழுகுரல் கேட்கவும் சரியாக இருந்தது.
சில நொடிகளில் ஒருவர் பெண் குழந்தை என்று சொல்ல விலோசனா தன் கணவனை அர்த்தத்துடன் பார்த்தாள்.
கதிர், நயனாவின் செல்லப் பெண் நேத்ராவிற்கு ஓராண்டு ஆகவிருந்த தருவாயில் தான் விலோசனா கருவுற்றாள் சில பல பரிசோதனைகளுக்கு பின். ஆதிக்கு அளவில்லா மகிழ்ச்சி உண்டானது. அவளை பூவாய் தாங்கினான்.
——————-
தாத்தா” என்று வந்து நின்றாள் ஆதி விலோசனாவின் செல்ல மகள் அற்புதா. விலோசனாவிற்கு ஆபரேஷன் செய்து தான் பிறந்திருந்தாள் அவள். தற்போது அவளுக்கு ஒன்றரை வயது நிரம்பியிருந்தது.
நேத்ரா தான் அவளுக்கு எல்லாம். விலோசனாவிற்கு நயனா எப்படி ஒவ்வொன்றுக்கும் துணை நிற்பாளோ அப்படித்தான் நேத்ராவும் அற்புதாவிற்காக நிற்பாள்.
யாரும் அவளை திட்டிவிட முடியாது, அவர்களை ஒரு வழி செய்துவிடுவாள் நேத்ரா. அற்புதாவும் லேசுப்பட்டவள் இல்லை நேத்ராவிடம் பழகி பழகி அவளின் தைரியம் அனைத்தும் அவளுக்கும் வந்திருந்தது.
தாத்தா”
சொல்லுடா”
உங்களுக்கு கல்யாணமா”
அதைக்கேட்டதும் அருள்செல்வன் சிரித்துவிட்டு “யாரு சொன்னது உனக்கு” என்றார்.
சொல்லுங்க“
எனக்கு எதுக்குடா இன்னொரு கல்யாணம் எல்லாம் அதான் உங்க பாட்டி இருக்காளே” என்று இவர் சொல்ல  “கிழவனுக்கு வயசாகிப் போச்சு, நினைப்ப பாரு இன்னொரு கல்யாணமாம். அதுவும் குழந்தையை வைச்சுட்டு பேச்சை பாரு… ரொம்பத்தான் உங்க தாத்தாவுக்கு” என்றவாறு நொடித்தவாறே வந்தார் சந்தியா.
குழந்தை சொல்ல வர்றதை முழுசா கேளுங்க… அதுக்குள்ள பதில் சொல்லாதீங்க” என்ற சந்தியாவின் முறைப்பில் கப்பென்று அடங்கினார் அவர்.
இரண்டு வருடத்திற்கு முன்பு தான் அவர் வாலண்டரி ரிடையர்மென்ட் வாங்கியிருந்தார். கதிர், நயனாவின் திருமணம் முடிந்த நேரம் அது.
அவர் வேலையில் இருக்கும் போது நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இதயத்தில் பிளாக் இருப்பதாக சொல்லியிருக்க அடுத்த சில மாதத்தில் அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.
ஆதி அப்போதே சொல்லிவிட்டான் இனி அவர் வேலை செய்யக்கூடாது என்று. சந்தியாவும் அதிகம் பயந்து போயிருந்தார் அந்நேரம். அவரும் மகன் பேச்சையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு கணவரிடம் பேச வேறுவழியில்லாது அவர் தன் வேலையை விட்டு வீட்டில் தானிருக்கிறார்.
செல்லக்குட்டி இதை யாரு உங்களுக்கு சொன்னாங்கன்னு முதல்ல சொல்லுங்க”
ஆதிப்பா அம்மாகிட்ட சொன்னாங்க”
என்ன சொல்றா இவ??” என்று மனைவியை திரும்பி பார்த்து இவர் கேட்கவும் ஆதியும் விலோசனாவும் வரவும் சரியாக இருந்தது.
அப்பா உங்களுக்கும் அம்மாவுக்கும் அறுபதாம் கல்யாணம் பண்ணிடலாம்ன்னு இருக்கோம்ப்பா. அதைத்தான் பேசிட்டு இருந்தேன் சனாகிட்ட இந்த வாண்டு உங்ககிட்ட வந்துஸ் சொல்லிட்டா” என்றவன் மகளை அப்படி அள்ளித் தூக்கியவன் மேலே தூக்கிப்போட்டு பிடித்து விளையாடினான்.
எங்களுக்கு எதுக்குப்பா அதெல்லாம்??” என்றார் அருள்செல்வன்.
அப்பா அதெல்லாம் செய்யணும்ப்பா” என்று மகன் முடித்துவிட தன் மனைவியை பார்த்தார் அவர்.
சந்து…”
அவன் தான் ஆசைப்படுறான்ல” என்றார் அவர்.
அவன் மட்டுமா” என்று அவர் கேட்க சந்தியாவிற்கு வெட்கம் வந்துவிட்டது. ஒன்றும் சொல்லாமல் வேறு புறம் அவர் திரும்பிக் கொள்ள விலோசனா தன் கணவனுக்கு ஜாடைக்காட்டினாள் அவர்களை.
இருவரும் குழந்தையுடன் நழுவிக்கொள்ள அருள்செல்வன் “சந்து உனக்கு ஆசையிருக்கா” என்று சொல்லி அவர் கையை பிடித்தார்.
சின்ன பையன் மாதிரி கையை பிடிக்கறீங்க விடுங்க. அதான் ஆதி சொல்லிட்டான்ல” என்று அவர் எழப்போக “நீ சொல்லு அப்போ தான் நான் சரி சொல்வேன்” என்றார் அருள்செல்வன் விடாப்பிடியாய்.
ஹ்ம்ம் எனக்கும் ஆசை தான்” என்றுவிட்டு அங்கிருந்து அவர் நகரப்போக “அப்போ எனக்கு சக்கரை தூக்கலா ஒரு காபி போட்டு கொண்டு வா சந்து” என்று இவர் சத்தமாக சொல்லிவிட “அம்மா அதெல்லாம் போடாதீங்க” என்று உள்ளிருந்து குரல் வரவும் அடங்கினார் அவர்.
இதோ அவர்களின் அறுபதாம் கல்யாணமும் அமோகமாய் முடிந்தது. ஆதியும், கதிரும் சேர்ந்து அதை சிறப்பாய் நடத்தி முடித்திருந்தனர். கதிரும் ஒரு பிள்ளையாய் இருந்து ஆதிக்கு அத்தனையிலும் துணை நின்றான் உடன் நயனாவும்.
வந்திருந்த சொந்தகள் அனைவரும் கிளம்பி சென்றிருந்தனர். தற்போது கதிர் குடும்பத்தினரும் அவர்களும் மட்டுமே இருந்தனர். “அப்பா” என்று வந்து நின்றான் ஆதி.
சொல்லுப்பா ஆதி”
நீங்களும் அம்மாவும் இன்னும் கொஞ்ச நேரத்துல கொடைக்கானலுக்கு கிளம்பணும். அங்க நான் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்ப்பா”
என்னது” என்றவர் எப்போதும் போல் தன் மனைவியை பார்த்தார் உடன் “சந்து” என்றழைப்புடன்.
இவரு வேற எப்போ பார்த்தாலும் சந்து பொந்துன்னுட்டு என்னைய பார்த்து வைப்பாரு” என்று வேறு புறம் திரும்பி முணுமுணுத்தார் சந்தியா.
என்னங்க” என்று கணவருக்கு பதிலும் கொடுத்தார்.
அவர் தன் மனைவியிடம் பேச்சை விடுத்து மகனிடமே பேசினார். “என்னப்பா ஆதி இதெல்லாம் இந்த வயசுல ஹனிமூன் எல்லாம் எங்களுக்கு எதுக்கு??” என்று சொல்ல ஆதி லேசாய் சிரித்துக் கொண்டான்.
விவஸ்தைகெட்ட மனுஷன் அவன் சொன்னானா ஹனிமூன்னு இவரா வாயை கொடுக்கறாரு’ என்று மனதிற்குள் புலம்பியது சந்தியாவே தான். “அதெல்லாம் வேணாம் நாங்க போகலை” என்று திட்டவட்டமாக மறுத்தார் அவர். 
கதிர் முன்னே வந்தவர் “அப்பா நீங்க ஏன் அப்படி நினைக்கறீங்க. உங்களுக்கும் அம்மாவுக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்ப்பா, அதுக்கு தான் போயிட்டு வாங்க, ஒரு வாரம் தானே” என்று சொல்ல அதிர்ந்து பார்த்தார் அவர்.
என்னது ஒரு வாரமா அதெல்லாம் முடியாது. என் பேத்தியை பார்க்காம என்னால ஒரு நாள் கூட இருக்க முடியாது. தவிர வாரா வாரம் நேத்ராவும் இங்க வருவா, நான் இங்க தான் இருப்பேன்”
என்னோட சந்தோசமே இங்க தான் இருக்கு. அதைவிட்டு அங்க போய் நான் என்ன செய்யப் போறேன். வேலையை தான் விடச் சொன்னீங்க விட்டேன். இது என்னால முடியாது” என்று சிறு குழந்தையாய் அடம் பிடித்தார் அவர்.
அப்பா உங்களை யாரு அவங்களை விட்டு தனியா போகச் சொன்னது. அவங்களையும் கூட்டிட்டு தான் போகப் போறீங்க” என்றான் கதிர்.
நேத்ராவும் அனுப்பி வைப்பியா கதிரு” என்றார் அவர் ஆர்வமாய்.
ஆமாப்பா ரெண்டு பேரும் உங்களோட தான் வர்றாங்க” என்றான் ஆதியும்.
அப்போ சரி சந்து நாம போவோம்” என்று அப்போது தான் திரும்பினார் மனைவியின் புறம்.
அவரோ கொலைவெறியாய் பார்த்தார் தன் கணவரை. ‘நான்லாம் ஒரு மனுஷியா உமக்கு தெரியலையா’ என்ற பார்வை அது.
அருள்செல்வனுக்கு அப்போது தான் மனைவியின் முறைப்பே புரிய “சந்து” என்றார்.
என்ன”
போயிட்டு வருவோம்”
உங்க ரெண்டு பேத்திங்க வருவாங்க. நீங்க போயிட்டு வாங்க, அவங்க இல்லாம உங்களால இருக்க முடியாதுல” என்றார் அவர்.
நீயில்லாம நான் எப்படி??” என்று அவர் ஆரம்பிக்க “ஓ அப்போ அவங்களை பார்த்துக்க நானும் உங்ககூட வரணும்ன்னு சொல்றீங்களா”
சந்து என்னதிது நமக்கென்ன நேத்திக்கா கல்யாணம் ஆச்சு…”
இல்லை இன்னைக்கு தான் ஆச்சு” என்று அதற்கும் பதில் வைத்திருந்தார் அவர்.
சந்து நாம என்ன சின்னஞ்சிறுசுகளா என்னை தெரியாதா உனக்கு. உன்னளவுக்கு விவரமா பேச எனக்கு தெரியாது சந்து. நான் பேசினதுல தப்பிருந்தா மன்னிச்சுக்கோ நீ இல்லாம நான் மட்டும் அங்க போவனா. நான்னா அதுல நீயும் தானே இருக்கே” என்றார் அவர். அதில் அப்படியே உருகியிருந்தார் சந்தியா. ‘இவருக்கா பேசத் தெரியாது’ என்றும் மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
அதுவரை அவர்களின் சம்பாஷனையை பார்த்திருந்த மற்ற இரு தம்பதிகளுக்கும் தாங்களும் தங்கள் இணையுடன் இப்படியொரு அன்னியோன்யமாய் கடைசி வரை இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதாய்.
குழந்தைகளும் அந்த மூத்த தம்பதிகள் கொடைக்கானல் கிளம்பிச் சென்றனர். இங்கு நம் இளம் தம்பதிகள் அடுத்த வாரிசுகளுக்கு தயார் செய்யும் முனைப்புடன் இருந்தனர்.
மலைகளின் இளவரசி கொடைக்கானலுக்கு சென்று வந்ததால் தான் அவர்களுக்கு முதலில் இளவரசி பிறந்தாளாம். அவர்களுக்கு அடுத்த இளவரசர்கள் வேண்டுமாம் அதற்கு தான் தங்கள் மனைவியின் பின்னே தனித்தனியே சுற்ற ஆரம்பித்தனர் ஆதியும், கதிரும். 

Advertisement