Friday, April 19, 2024

    Layam Thedum Thalangal

    அத்தியாயம் – 33 ஆகஸ்ட் 15. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே... ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே... இரவானால் பகல் ஒன்று வந்திடுமே... நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே ஓ மனமே நீ மாறிவிடு... மலையோ அது பனியோ நீ மோதி விடு... மிமிக்ரியில் திறமை கொண்ட சிவா பெண் குரலில் அழகாய் பாடிக் கொண்டிருக்க முன்னில்...
    அத்தியாயம் – 32 நிரஞ்சனாவின் உதையில் எட்டி விழுந்த சொர்ணாக்கா ஆவேசமாய் எழுந்து வந்து அவள் முகத்தில் ஓங்கி அறைந்து, “என்ன திமிருடி உனக்கு... என்னையே உதைக்கறியா... உன்னை என்ன செய்யறேன் பார்...” என்றபடி முகத்தில் மாறி மாறி அறைய ஓடி வந்து அவளைப் பிடித்து மாற்றினர் சிறைக் காவலர்கள். “ஏய் அருக்காணி, வர வர உன்...
    அத்தியாயம் – 31 பார்வதி அடுத்த வீட்டில் ஏதோ மரணம் என்று லீவ் சொல்லியிருக்க இந்துதான் சமைத்துக் கொண்டிருந்தாள். பெரியசாமி மளிகை சாதனம் வாங்குவதற்காய் வெளியே சென்றிருந்தார். பவித்ரா வருணிடம் கதை சொல்வதற்காய் ஸ்கூலுக்குப் போயிருந்தாள். மாடி அறையில் கட்டிலில் லாப்டாப்புடன் அமர்ந்திருந்த வெற்றியின் மனம் அதில் லயிக்காமல் எதையோ யோசித்துக் கொண்டே இருந்தது. சிறைக்கு சென்று...
    “ம்ம்... சரி சார்...” என்றவன் சென்றான். பெரிய பெரிய அண்டாக்களில் சோறு வெந்து கொண்டிருக்க வெந்ததை மூங்கில் கரண்டியால் அள்ளி கூடையில் போட்டு வடித்துக் கொண்டிருந்தனர். ஒரு அண்டாவில் சோறும் இன்னொரு அண்டாவில் குழம்பும் கொண்டு செல்லத் தயாராய் இருக்க, அதை இரண்டிரண்டு பேராய் பிடித்து டிராலியில் ஏற்றி வைத்தனர். அதைத் தள்ளிக் கொண்டு கேட்டுக்கு...
    அத்தியாயம் – 30 “சக்தி, உனக்கு விசிட்டர் வந்திருக்காங்களாம்... வார்டன் அழைச்சிட்டு வர சொன்னார்...” அடுக்களையில் தேங்காய் துருவிக் கொண்டிருந்த சக்தி சிறைச்சாலை சிப்பந்தி சொன்ன தகவலால் முகம் மலர்ந்தான். அருகிலிருந்தவரிடம், “பார்த்திட்டு வந்திடறேன்...” என்றவன் எழுந்து கை கழுவிக் கொண்டு பார்வையாளர்கள் சந்திக்கும் இடத்துக்கு சென்றான். சிறை கண்காணிப்பாளருக்கு முன்னமே மனு கொடுத்து அனுமதி வாங்கியிருந்தான்...
    என்னதான் தாலி கட்டிய கணவன் என்றாலும் முதன் முதலில் தன் தேகத்தை ஒரு ஆண்மகன் பார்க்கும் போது எல்லாப் பெண்களுக்கும் இயல்பாய் தோன்றும் அச்சமும் நாணமும் அவள் முகத்தை சிவக்க செய்தது. “இ..இந்து…” அவனது குரல் காதல் வேட்கையுடன் பின்னில் ஒலிக்க, அவள் தேகம் மெல்ல நடுங்கியது. அவளது பளிச்சென்ற இடுப்பு அவன் கைகளை இழுக்க...
    அத்தியாயம் – 29 “இப்ப தான் மனசு நிறைஞ்சிருக்கு மாப்பிள... என் பொண்ணு வாழ்க்கை தனி மரமாவே நின்னுடுமோன்னு ரொம்ப கவலைப்பட்டேன்... நல்ல வேளை... ஆகாஷ் அம்மா, அப்பா மூலமா உங்களைப் பேச வச்சேன்... இல்லன்னா இந்த கல்யாணத்துக்கு அவ இப்பவும் சம்மதிச்சிருக்க மாட்டா...” “ம்ம்... உங்க கவலை புரியுது மாமா... பெத்தவங்களுக்கு பொண்ணு வாழாம வீட்ல...
    “ம்ம்... மாமாவுக்கு உடம்புக்கு முடியாம ஹாஸ்பிடல்ல இருந்தப்ப நான் கூட இருந்தேன்ல... அப்ப உன்னைப் பத்தி தான் ரொம்ப கவலைப்பட்டு உனக்கு நடந்ததை சொல்லிட்டு இருந்தார்... அப்பத்தான் உன் மேல உள்ள மரியாதை அன்பா மாறுச்சு...” அவள் புரியாமல் பார்க்க, “காதலிச்சு தாலி கட்டின புருஷன், பெத்த குழந்தையை விட்டுட்டு கண்டவனோட ஓடிப் போன அவ...
    அத்தியாயம் – 28 ஒரே நாளில் வாழ்க்கையை அழகாய், அலங்கோலமாய் மாற்றும் வித்தை ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும். ஆகாஷ் இறந்த பிறகு எந்த சுப நிகழ்ச்சிகளுக்கும் செல்லாமல் வீடு, கோவில் என்று ஒதுங்கிப் போயிருந்தாள் இந்து. அவனது நேசம் வாழாமல் போனதன் துக்கம் அவளை மிகவும் வாட்டியது. வெளியே சென்றால் யாராவது குத்தலாய் வார்த்தையை விட்டு விடுவார்களோ...
    உடை மாற்றியவன் கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, எழுந்து அமர்ந்த பவிக்குட்டி கண்ணைத் தேய்த்துக் கொண்டு, “குத் மார்னிங் அப்பா...” என்றது. “குட் மார்னிங் செல்லம்... வாங்க, பிரஷ் பண்ணிட்டு பால் குடிக்கலாம்...” அவன் சொல்ல, “அம்மா எங்கேப்பா... எனக்கு அம்மாதான் செய்யணும்...” என்றாள் குழந்தை. “ம்ம்... கீழ இருப்பாங்க, போயி பாரு...” என்றதும் குழந்தை எழுந்து...
    அத்தியாயம் – 27 அதிகாலை மூன்று மணி. நல்ல உறக்கத்தில் இருந்த இந்து கதவு தட்டும் சத்தம் கேட்டு உணர்ந்து விட்டாள். ஜீரோ வாட்ஸ் வெளிச்சத்தில் கலைந்திருந்த உடையைத் திருத்திக் கொண்டு எழுந்தவள் வெற்றி ஒரு கையைத் தலைக்கு மேல் வைத்து நல்ல உறக்கத்தில் இருப்பதைக் கண்டவள் முடியை ஒதுக்கிக் கொண்டு, “ஒருவேளை பவித்ராவா இருக்குமோ...” என...
    “கல்பனா, இந்துவை அழைச்சிட்டுப் போம்மா...” என்றதும் பால் சொம்பை எடுத்து அவள் கையில் கொடுத்து மாடியறைக்கு அழைத்துச் சென்றார் கல்பனா. அதுவரை அவளது காலடிச் சத்தத்திற்காய் காத்திருந்த வெற்றி அவள் வருவது புரிந்ததும் கண்ணை மூடிக் கொண்டு உறங்குவது போல் பாவனை செய்தான். அழகாய் அலங்கரிப்பட்டிருந்த அறையும் கட்டிலும் ரம்மியமாய் மனதை நிறைக்க தயக்கத்துடன் உள்ளே...
    அத்தியாயம் – 26 “வெற்றி… வராதீங்க…” இந்துவின் கத்தலைக் கேட்டவன் திகைத்து திரும்பிப் பார்த்தான். சற்று தூரத்தில் கார் ஒன்று வருவதைக் கண்டவன், “கார் அங்க தானே வந்துட்டு இருக்கு... என்னை எதுக்கு வர வேண்டாம்னு கத்துறா...” என யோசித்துக் கொண்டே வேகமாய் முன்னில் நடக்க இந்து ஓடி வந்து அவனை கை பிடித்து இழுத்துச் சென்றாள். “ஏன்...
    அத்தியாயம் – 25 வெற்றி சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆகாஷை நினைவுபடுத்த தவிப்புடன் அவனைப் பார்த்தாள் இந்து. “இந்துமா... இந்த மரத்தடியில் நீ தனியா உக்கார்ந்திருக்கறதை எத்தனயோ தடவ பார்த்திருக்கேன்... இப்ப உன் பக்கத்துல நானும் இருக்கிற இந்த நிமிஷம் எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா... இந்த நிமிஷம் என் உயிர்...” அவன் சொல்லி முடிப்பதற்குள் வாயைப்...
    இந்துவின் வீட்டினர் ஒரு சுமோவிலும், காரிலுமாய் கோவிலுக்குக் கிளம்ப ஆகாஷின் வீட்டிலிருந்து இரண்டு காரில் அவனது ஆட்கள் கிளம்பினர். பரமசிவம் முன்னமே கோவிலுக்கு சென்று ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார். இந்து எளிமையான அலங்காரத்தில் ரெடியாகியிருக்க, பட்டு வேட்டி சட்டையில் ராம்ராஜ் வேட்டி விளம்பர மாடல் போலிருந்த வெற்றியின் கண்கள் அடிக்கடி ஆவலுடன் அவளைத் தழுவி மீண்டது....
    “இது எப்படி அதற்குள் இவருக்குத் தெரியும்...” என யோசித்த அகிலா, “இன்னும் முடிவாகல, பேசிருக்கோம்... உங்களுக்கு எப்படித் தெரியும்...” என்றார் திகைப்புடன். “அதெல்லாம் வீட்டு விஷயம் வெளிய வரவா தாமதம்... காத்து வாக்குல எல்லார் காதுக்கும் வந்துடாது...” கேட்டுக் கொண்டே அவர் எடுத்து வைத்த காய்களை நிறுத்திப் போட்டவர், “உங்க ஸ்கூல்ல வேலை செய்யுற ஜோதி...
    அத்தியாயம் – 24 வெற்றி நீட்டிய தட்டை வாங்குவதற்காய் நீண்ட இந்துவின் கைகள் நடுங்குவதை அவன் கவனிக்கத் தவறவில்லை. “இப்பதான் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு...” என்ற ஆகாஷின் அன்னை, “சீக்கிரமே வீட்ல கலந்து பேசி அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வச்சிடலாம்...” என்றார். இந்து அமைதியாய் இருக்க, “அம்மா, எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க...” என்ற வெற்றி இந்துவைப்...
    “இந்துமா... வாடா... உக்கார்... என்னங்க, நம்ம இந்து வந்திருக்கா பாருங்க...” என்று மேலே நோக்கிக் குரல் கொடுக்க, “இதோ வந்துட்டேன்...” என்று மாடியிலிருந்து இறங்கி வந்தார். ஆகாஷின் தந்தையின் குரலில் இருந்த உற்சாகம் உடலில் இல்லை.   “வாம்மா இந்து, எப்படிடா இருக்க... உக்காருமா...” அமராமல் நின்று கொண்டிருந்தவளிடம் கூற, “ரெண்டு பேரும் ரொம்ப மெலிஞ்சு...
    அத்தியாயம் – 23 ஞாயிற்றுக் கிழமை... காலை நேரத்திலேயே வானம் மப்பும் மந்தாரமுமாய் இருக்க துணிகளை வாஷிங் மெஷினில் போடலாமா, வேண்டாமா... என்று யோசித்தாள் இந்து. “என்னக்கா, வானத்தைப் பார்த்து மழை வருமா, வராதான்னு ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கியா...” கேட்டுக் கொண்டே கையில் இருந்த நிலக் கடலையை வாய்க்கு பவுலிங் செய்து கொண்டு அருகே வந்து நின்றாள் சிந்து. “அழுக்குத் துணி...
    அத்தியாயம் – 22 “பவித்ரா, என் தம்பியோட குழந்தை...” வெற்றி சொன்னதைக் கேட்டு பரமசிவம் அதிர்ச்சியுடன் நோக்க மற்றவர்கள் மனமும் அதிர்ந்தது. “என்ன தம்பி சொல்லறிங்க...” “ஆமாம் அங்கிள்... அவளோட அம்மாவை என் தம்பியே கொன்னுட்டு ஜெயிலுக்குப் போயிட்டான்...” சொன்னவனை மேலும் அதிர்ச்சியுடன் பார்த்தார் பரமசிவம். காபியுடன் அகிலா வரவும், “குடிச்சிட்டு சொல்லுங்க தம்பி...” என்றார். காபியை எடுத்துக் கொண்டவன்...
    error: Content is protected !!