Advertisement

என்னதான் தாலி கட்டிய கணவன் என்றாலும் முதன் முதலில் தன் தேகத்தை ஒரு ஆண்மகன் பார்க்கும் போது எல்லாப் பெண்களுக்கும் இயல்பாய் தோன்றும் அச்சமும் நாணமும் அவள் முகத்தை சிவக்க செய்தது.
“இ..இந்து…” அவனது குரல் காதல் வேட்கையுடன் பின்னில் ஒலிக்க, அவள் தேகம் மெல்ல நடுங்கியது. அவளது பளிச்சென்ற இடுப்பு அவன் கைகளை இழுக்க ஆவலுடன் கை வைத்தவன் அவள் தேகம் சிலிர்ப்பதை உணர்ந்தான்.
“இந்தூ…” அழைத்துக் கொண்டே அவளது முதுகில் அவனது இதழ்கள் ஊர்வலம் செல்ல உடலுக்குள் நரம்புகள் இசைக்கத் தொடங்கிய உணர்வுகளைத் தாங்க முடியாமல் திரும்பியவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
விரலால் முகத்தை மெல்ல நிமிர்த்த அவள் கண்கள் நிலம் பார்த்தன. அவள் நெற்றியில் முத்தமிட்டு முகம் நோக்க, முகமும் உதடும் சிவந்து ஒரு தவிப்புடன் கண்கள் மூடி லயித்து நின்றவளை மேலும் சோதிக்க விடாமல் அவன் இதழ்கள் கீழிறங்கி அவள் இதழ் கள்ளை அருந்தத் தொடங்க சில நிமிடங்கள் நீண்ட முத்தத்தில் அவனுக்குள் குழைந்து சரணடைத்திருந்தது அவள் பெண்மை. மூச்சு முட்டியவளை ரசித்துக் கொண்டே மீண்டும் முத்தெடுத்தான் அவளவன்.
“இந்தூ…” அவனது கம்பீரக் குரல் குழைந்து ஒலிக்க, உயிரை உறிஞ்சும் அந்த முத்தத்தில் மார்பை மறைத்திருந்த சேலையை நழுவ விட்டவளின் கழுத்து வளைவில் அவன் இதழ்கள் ஆவேசத்துடன் இறங்கத் தொடங்கின. மெல்லியவளின் தேகம் மெல்ல நடுங்கத் தொடங்கினாலும் அவனது தேடல்கள் அவளுக்கும் ஆறுதலாய் இருக்க அவனுக்கு ஈடு கொடுத்து நின்றாள் அவள்.
சட்டென்று குழந்தையின் நினைவு வர, “ம்ம்… பவி…” என்று விலக முயன்ற அவளது குரலில் நிறைந்திருந்த கிறக்கத்தை உணர்ந்தவன், “சத்தம் வராம நான் பார்த்துக்கறேன்…” என்றவன் மீண்டும் அவள் இதழை சுவைக்கத் தொடங்க கிறங்கிக் கண் மூடிக் கொண்டவளின் கைகள் அவன் முதுகில் துளாவிக் கொண்டிருந்தன.
சத்தமில்லா முத்தத்தில் தொடங்கிய காதல் யுத்தத்தில் யார் வென்றது, யார் தோற்றதேன்று இல்லாமல் இருவரும் சரிசமமாய் முன்னேறிக் கொண்டிருந்தனர்.
அவனது தேடல்களின் முகவரியாய் அவளிருக்க, அவனது வேட்கைக்கு விருந்தாய் அவள் மாறியிருந்தாள். அவனது வேகம் அவளைத் தடுமாற வைக்க உணர்வுகளின் போராட்டத்தில் குழைந்து தவிப்புடன் நின்றவளை அள்ளிக் கொண்டு கட்டிலுக்குச் சென்றான் வெற்றி.
அவளை படுக்கையில் அலுங்காமல் கிடத்தியவன், கண் மூடிக் கிடந்தவளின் காதில் முத்தமிட்டு, இந்தூ…” என்று தாபத்துடன் அழைத்து அவள் சம்மதத்திற்காய் முகம் நோக்க, கண்ணைத் திறந்தவளின் கைகள் நீண்டு அவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டன. வெகுநேரம் வரை அவனது தேடல்களும் தேவைகளும் நீண்டு கொண்டே இருக்க அமுதசுரபியாய் ஈடு கொடுத்து நின்றாள் அவள்.  
சங்கமித்த உடல்களும், உள்ளங்களும் காதலுடன் துணையைத் தழுவிக் கொண்டிருக்க சோர்ந்து கண் மூடிக் கிடந்தவளைத் தன் அணைப்புக்குள்ளேயே வைத்திருந்த வெற்றி, அவள் காதில் “தேங்க்ஸ் இந்து…” என்று கிசுகிசுக்க, செல்ல கோபத்துடன் திரும்பியவள், “எனக்கு தேங்க்ஸா…” என்று முறைக்க, அவன் கைகள் அவள் தேகத்தில் கோலமிட்டுக் கொண்டே, “என்னதான் நீ எனக்கு உரிமையானவளா இருந்தாலும் உனக்கும் இதில் சம்மதம் இருக்கணும்ல… அதுக்குதான் இந்த தேங்க்ஸ்…” என்றான்.
“ஓஹோ, ஒவ்வொரு முறையும் பர்மிஷன் கேட்பிங்களா…”
“ச்சே ச்சே… முதன் முறை மட்டும் தான் பர்மிஷன் தேவை… அப்புறம் எல்லாம் உத்தரவின்றி உள்ளே வா தான்…” சொல்லிக் கொண்டே அவள் நெஞ்சில் முகம் புதைத்தவனை தலையில் கோதிக் கொடுத்தவள், “அப்ப நானும் தேங்க்ஸ்…” என்றாள் அவன் காதில்.
அவளை விட்டு விலகியவன், “நீ எதுக்கு…” என்றான்.
“என் வாழ்க்கையை அழகாக்கித் தந்ததுக்கு… என் மனசுல நான் இருக்கேன்னு நம்பிக்கையைப் பதிச்சதுக்கு…”
“ஓ… நீதான் என் வாழ்க்கையை அழகாக்கின தேவதை…” என்றான் வெற்றி அவள் கன்னத்தை கிள்ளிக் கொண்டே.
“இல்லங்க, நீங்களும் அப்பாவும் பேசினதை நான் கேட்டுட்டு தான் இருந்தேன்… ஆகாஷ் மேல எனக்கு லவ்வெல்லாம் இல்லை… அதனால அவரோட காதலை எண்ணி நான் தவிக்கவும் இல்லை… ஆனா, என் ராசிதான் நல்லா இருந்த மனுஷனோட ஆசையை, உயிரைப் பறிச்சிடுச்சோன்னு ஒரு பயம் எனக்குள்ள அழுத்தமாப் பதிஞ்சிருச்சு… அதனால தான் உங்க மேல ஒரு விருப்பம் வந்தப்ப கூட எங்க உங்களையும் இழந்திருவமோன்னு அந்த ஆசையை மனசுக்குள்ளேயே புதைச்சுகிட்டேன்…” இந்து சொல்ல வியப்புடன் நோக்கினான்.
“நீ என்ன சொல்லற இந்து… உனக்கு என் மேல விருப்பமா…”
“ம்ம்… பவி மேல நீங்க காட்டிய பாசம், என் அப்பாவுக்கு முடியலைன்னதும் ஓடி வந்து உதவினது, ஹாஸ்பிடல்ல இருக்கும்போது மனசு கலங்கி நின்ன என்கிட்டே ஒரு காபி குடிச்சா சாமி ஒண்ணும் கண்ணைக் குத்திடாதுன்னு சொன்னது இதெல்லாம் எனக்குப் பிடிச்சிருந்துச்சு… ஆனா உங்க வாழ்க்கையைப் பத்தி தெரியாததால அந்த சலனத்தை நான் பெருசா எடுத்துக்கல… அன்னைக்கு பவியை வீட்டுல விட வந்தப்பவும் நீங்க அதே போல என்கிட்டே சொல்லவும் ஒரு மாதிரி மனசுக்குள்ள சந்தோஷமா இருந்துச்சு… இப்படி நினைவை வளர்த்துக்கறது தப்பாயிடுமோன்னு தான் நான் நிக்காம ஓடிட்டேன்… அதுக்கப்புறம் போட்டோ விஷயம் தெரிஞ்சதும் வேணும்னே பிளான் பண்ணி எல்லாம் பண்ணறிங்களோன்னு கோபம் வந்துச்சு… அப்புறம் நீங்க வந்து எல்லா விவரத்தையும் சொன்னதும் மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு… தம்பி குழந்தைக்காக கல்யாணமே பண்ணிக்காம சொந்தக் குழந்தையா வளர்க்குறதுக்கு எல்லாம் எவ்ளோ பெரிய மனசு வேணும்… மனசு மறுபடி சலனபடத் தொடங்கும்போது மறுபடியும் ஆகாஷ் போல உங்களுக்கும் என் ராசியால எதாச்சும் ஆகிடுமோன்னு பயம் வந்துச்சு… என் ராசி உங்களை அழிச்சிடக் கூடாதுன்னு தான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்… அப்புறம் ஆகாஷ் அம்மா, அப்பாவே உங்களைக் கல்யாணம் பண்ண சொல்லி சொல்லவும் ரெண்டு மனசாவே சம்மதிச்சேன்… கல்யாணம் முடிஞ்சு கோவிலுக்குப் போயிட்டு வரப்ப கார்ல உங்களுக்கு அடி பட்டிருமோன்னு பயத்துல என்னையும் மீறி வந்து கட்டிகிட்டேன்… அந்த அணைப்பும், உங்க வார்த்தையும் நான் இருக்கேன், பயப்படாதன்னு சொல்லற போலவே ஆறுதலா இருந்துச்சு… உங்க அருகாமை ஒவ்வொரு நிமிஷமும் மனசுக்கு பெரிய பலத்தைக் கொடுத்துச்சு… என்னை நானே தேத்திகிட்டேன்…” சிறிது நிறுத்தினாள்.
அவன் மனது, அவளும் தன்னை விரும்பி இருக்கிறாள், தனது அருகாமையைத் தேடியிருக்கிறாள் என்பது தெரிந்து  ஆனந்த நர்த்தனம் செய்து கொண்டிருக்க அவள் சொல்லப் போகும் அடுத்த வார்த்தைக்காய் காத்திருந்தான்.
“வாழாத வாழ்க்கையை நினைச்சு கிடைச்ச வாழ்க்கையை வாழாம வீணாக்கிடக் கூடாது… அதனால…” என்றவள் குறும்புடன் நோக்க காதலுடன் நோக்கினான் அவன்.
“அதனால…” என்று வார்த்தையை எடுத்துக் கொடுத்தான்.
“அதனால மனசுல தோணின காதலைப் பூட்டி வச்சுக்காம உங்களோட மனசு நிறைய வாழ்ந்திடணும்னு முடிவுக்கு வந்துட்டேன்…” என்றவள் அவனது மீசையைக் கடித்துக் கொண்டே சொல்ல, “ஆ…” அலறினான் அவன்.
“என் காதலை உன்கிட்ட சொல்லற வரைக்கும் தான் இந்த ஒதுக்கம் எல்லாம்… சொன்ன பின்னால உன்னால தாங்கிக்க முடியுமா புருஷா…” ஆசையுடன் வார்த்தைகள் குழைய கேட்டவளின் மூக்கில் மெல்ல கடிக்க அவள் நெளிந்தாள்.
“அடியே, காதல்காரி… உனக்குள்ள இவ்ளோ ஒளிச்சு வச்சிருக்கியா… உன் காதலுக்காக நான் காத்திருக்க எதையும் காட்டிக்காம இருந்தியா… உன்னை அப்படியே திங்கப் போறேன்…” என்றவன் காதலுடன் அவளை அணைத்துக் கொள்ள, எல்லா சுமையும் இறங்கிய சந்தோஷத்தில் அந்த நெஞ்சத்தில் முகத்தைப் பதித்துக் கொண்டாள் இந்து.
அவனது அணைப்பிலேயே உறங்கிக் கொண்டிருந்தவள் குழந்தை, உறக்கத்தில் அம்மா என்று அழைக்கவும் திரும்பிப் படுத்து மகளை அணைத்துக் கொண்டாள். அவன் அவளை அணைக்க அவள் குழந்தையை அணைத்திருக்க அழகான இரவு பல கவலைகளை நீக்கி கனவுகளைத் தந்து விடிந்தது.
காலையில் நேரமே எழுந்து குளித்தவள் கண்ணாடி முன்னில் அமர சிவந்திருந்த கன்னங்களும், இதழ்களும் கணவன் செய்த அட்டகாசத்தை நினைவுபடுத்த வெட்கத்தில் மேலும் சிவந்தது அவள் முகம். அப்போதுதான் முழிப்பு வந்த வெற்றி கண்ணாடியில் தெரிந்த அவள் முகத்தைக் கண்டு புன்னகையுடன் நோக்க, உதட்டைக் குவித்து முத்தம் ஒன்றை கண்ணாடி வழியே கணவனுக்கு அனுப்பி வைக்க சந்தோஷமாய் எழுந்து அமர்ந்தான் வெற்றி.
“என்ன காதல்காரி… காலைலயே அமர்க்களமா ஸ்டார்ட் பண்ணிட்ட…” கேட்டுக் கொண்டே அவள் அருகே வர எழுந்து வேகமாய் கதவருகே சென்றவள், “நீங்க போயி குளிங்க… நான் காபி எடுத்திட்டு வர்றேன்…” என்று பழிப்புக் காட்டி கீழே செல்ல நிறைவான மனதுடன் சிரித்தான் வெற்றி.
நான் எட்டி நிற்கும் வரை தான்
உன் ஏகாந்தம் எல்லாம்…
நான் உன்னை நெருங்கும்போது
உள்ளத்தில் உணர்வாய் என்னை…
ஆயிரம் வார்த்தை தராத சந்தோஷத்தை
நான் இருக்கிறேன் என்ற
பார்வை உணர்த்தும்போது
உனக்குள் தான் நானிருப்பேன்…
உனது பார்வையின் விழியாக…
உனது தேடலின் விடையாக…
உனது கனவின் நிஜமாக…
உனது பாடலின் லயமாக…
உனது தாளத்தின் ஸ்ருதியாக…
உனது உயிரின் துடிப்பாக
உன்னிலேயே கலந்திருப்பேன்…

Advertisement