Advertisement

அத்தியாயம் – 31
பார்வதி அடுத்த வீட்டில் ஏதோ மரணம் என்று லீவ் சொல்லியிருக்க இந்துதான் சமைத்துக் கொண்டிருந்தாள். பெரியசாமி மளிகை சாதனம் வாங்குவதற்காய் வெளியே சென்றிருந்தார். பவித்ரா வருணிடம் கதை சொல்வதற்காய் ஸ்கூலுக்குப் போயிருந்தாள்.
மாடி அறையில் கட்டிலில் லாப்டாப்புடன் அமர்ந்திருந்த வெற்றியின் மனம் அதில் லயிக்காமல் எதையோ யோசித்துக் கொண்டே இருந்தது. சிறைக்கு சென்று வந்ததில் இருந்து இப்படிதான் இருக்கிறான். தனக்கு அமைந்தது போல் தம்பிக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டுமென்று அவன் மனம் கவலைப்பட்டது.
குழந்தை சித்தப்பா என்று அழைக்கும்போது அவனது முகத்தில் தெரிந்த வேதனையும், அதை நொடியில் மாற்றிக் கொண்டு “ஆம், சித்தப்பாதான்…” என்று அழுத்தமாய் உரைத்ததும் எல்லாம் யோசிக்கையில் உடன் பிறந்தவனின் வேதனையைப் புரிந்து கொள்ள முடிந்தது.
கையில் ஜூஸ் கிளாசுடன் வந்த இந்து முன்னில் நிற்பதைக் கூட அவன் கவனிக்காமல் யோசனையில் இருக்க அருகில் அமர்ந்தாள் அவள்.
“ஹலோ வெட்டி ஆபீசர், எந்தக் கோட்டையைப் பிடிக்க இந்த யோசனை…” அவள் குரலில் திகைத்துத் திரும்பியவனை நோக்கிப் புன்னகைத்தாள்.
“எ..என்னம்மா சொன்ன…”
“ஹூம்… வெட்டி ஆபீசர் எந்த கோட்டையைப் பிடிக்க இப்படி யோசனை பண்ணறீங்கன்னு கேட்டேன்…” சொல்லிக் கொண்டே ஆரஞ்சு ஜூஸை அவனிடம் நீட்ட, வாங்கிக் கொண்டவன், “என்னது, வெட்டி ஆபீசரா…” என்று முறைக்க அவள் சிரித்தாள்.
“ஆமா, நம்ம பொண்ணு கிட்ட உங்க பேரைக் கேட்டா வெட்டின்னு தான் சொல்லுறா…” என்று அவள் சிரிக்க அவன் மனது சற்று லேசானது.
“அதுக்காக நீயும் என்னை வெட்டின்னு சொல்லுவியா… இந்த வெட்டிப்பய என்னெல்லாம் பண்ணுவான் தெரியும்ல…” அவனது பார்வை குறும்புடன் அவள் இதழ்களில் பதிய நாணத்துடன் குனிந்து கொண்டவளுக்கு அந்த இதழ் முத்தம் நினைவில் வந்து தேகம் படபடத்தது.
“ஹூக்கும், போதுமே… ஜூசைக் குடிச்சிட்டு கிளாஸைக் கொடுங்க… எனக்கு சமையல் முடிக்கணும்…” என்றவள் எழுந்து கொள்ள, “என்ன அவசரம்… ஜூஸ் கொஞ்சம் புளிக்குதே…” என்றவனின் வார்த்தை போகும் பாதை அவளுக்குப் புரிய, “சக்கரை, போட்டுத் தரட்டுமா…” என்றாள்.
“அதை விட இனிப்பு இங்க இருக்கும்போது சக்கரை எதுக்குடா போடணும்…” என்றவன் அவளை அருகில் இழுத்து இதழைக் கவ்விக் கொள்ள அந்த ஆழ்ந்த முத்தத்தில் கிறங்கிப் போனவளின் கைகள் அவன் முதுகில் துளாவிக் கொண்டிருந்தன. சில நிமிடம் கழித்து விடுவித்தவன் அவளது கிறங்கிய பார்வையும், சிவந்த இதழும் கண்டு உணர்ச்சிகள் கை மீற மீண்டும் அணைத்துக் கொண்டு முகமெங்கும் முத்தமிடத் தொடங்க குழைந்து தவித்தவள் அவன் நெஞ்சில் தஞ்சம் புகுந்தாள்.
இதழ் ரசத்தைக் குடித்தவனுக்கு பழ ரசத்தின் சுவை குறைவாகத் தோன்ற அவனது கைகள் அவள் உடலில் எல்லை கடந்து பயணிக்கத் தொடங்கியது. மறுக்க மனம்  நினைத்தாலும் உணர்ச்சிகளின் சதிராட்டத்தில் அவளது உடல் அவனது கட்டுப்பாட்டில் இயங்கத் தொடங்க கொடியாய் அவன்மீது பற்றிக் கொண்டிருந்தாள் அவள்.   அவனது தேவை அவளுக்கும் தேவையாக மாற இருவரும் வேண்டியதைப் பெற்றுக் கொண்டே விலகினர். சோர்ந்து தன் நெஞ்சில் கிடந்தவளை அணைத்துக் கொண்டு கழுத்து வளைவில் மீண்டும் இதழ் பதித்தான் அந்தக் கயவன்.
“ம்ம்… போதும், விடுங்க…” அவளது இதழ்கள் உரைத்தாலும் உடல் அவனது அணைப்பிலிருந்து விலகிக் கொள்ளாமல்  இருக்க புன்னகையுடன் மனையாளை இறுக்கிக் கொண்டான்.
சில நிமிடங்கள் விலகாமல் அப்படியே இருவரும் கிடக்க விரல்கள் மட்டும் மற்றவர் உடலில் அங்கங்கு அலைந்து கொண்டிருந்தது. இப்போது அவனது மனம் சஞ்சலமின்றி இருக்க அமைதியாய் கண் மூடிக் கிடந்தவனின் நெற்றியில் முத்தமிட்டாள் இந்து.
“டைம் ஆச்சு, நான் குளிச்சிட்டு சமைக்கப் போறேன்…” சொல்லிக் கொண்டே எழுந்தவளை மீண்டும் இழுத்து நெஞ்சில் போட்டுக் கொண்டவன், அவளது முகத்தைக் காதலுடன் பார்த்தான்.
“என்னவாம்…” அவனது பார்வையைத் தாங்கிக் கொள்ளாமல் அவனது நெஞ்சத்து ரோமத்தில் விரலாய் அலைந்து கொண்டே கேட்டாள் இந்து.
“இந்து… என் மனசு இப்ப எவ்ளோ சந்தோஷமாருக்கு தெரியுமா… கொஞ்ச நேரம் முன்னாடி வரை இருந்த குழப்பம் கூட இப்ப என் மனசுல இல்ல… உன்னோட அருகாமை எனக்கு சந்தோஷத்தோட தெளிவையும் கொடுக்குது…” என்றான் கைகளை நீவிக் கொண்டே.
“ம்ம்… என்ன குழப்பம் என் புருஷனுக்கு…” கேட்டுக் கொண்டே அவன் நெஞ்சில் முகத்தை வைத்துக் கொண்டு மூக்கைப் பிடித்து ஆட்டினாள் இந்து.
“இந்து… சக்தி பேசினதைக் கேட்டல்ல… அவன் மனசுல எத்தனை வலி இருந்தா ஆசையா பெத்த மக, நீங்க என்  சித்தப்பாவான்னு கேட்டப்ப ஆமான்னு சொல்லிருப்பான்…”
“ம்ம்… அதுக்கு ஒரு காரணம் இருக்குங்க…” என்றவள் எழுந்து உடையைத் திருத்திக் கொண்டு அமர்ந்தாள்.
“காரணமா, என்ன காரணம் இந்து…”
“பவி சின்னப் பொண்ணு… அவ மனசுல நாம எந்த குழப்பத்தையும் விதைக்கக் கூடாது… அவரை அப்பான்னு சொன்னா கொஞ்சம் பெருசானா ரெண்டு அப்பாவான்னு கேள்வி வரும்… ஜெயில்ல இருக்கறது அவ அப்பான்னு தெரிஞ்சா அவ அம்மா பண்ணின கேவலமான விஷயம் தெரிஞ்சு குழந்தையோட மனசு பாதிக்கப்படும்… அதெல்லாம் வேண்டாம், அவ நம்ம குழந்தையாவே வளரணும்னு நினைச்சு தான் உங்க தம்பி இப்படி சொல்லி இருப்பார்னு எனக்குத் தோணுது…” என்றாள் இந்து.
“ஓ… இப்படி ஒரு கண்ணோட்டத்துல நான் யோசிக்கவே இல்லையே…” என்றவன், “எந்தத் தப்பும் பண்ணாம அவன் வாழ்க்கை இப்படியே முடிஞ்சுடக் கூடாது… அவனுக்கும் நம்மைப் போல ஒரு சந்தோஷமான வாழ்க்கை அமையணும் இந்து…” என்றான் வெற்றி நெகிழ்வுடன்.
“ம்ம்… நிச்சயம் அமையுங்க… சரி நான் குளிச்சுட்டு வரேன்…” என்றவள் சேலையை உருவிவிட்டு பாவாடை பிளவுசுடன் டவலை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு செல்ல பின்னிலேயே சென்று கதவைத் தட்டினான் வெற்றி.
“இந்து, ஒரு நிமிஷம் கதவைத் திற… நான் யூரின் போகணும்…” என்றதும் அவள் கதவைத் திறந்து வெளியே செல்லப் போக அவளை உள்ளே தள்ளிக் கொண்டு நுழைந்தவன் கதவைத் தாளிட, “அச்சோ, என்னங்க இது,  டைம் ஆச்சு…” பதறியவளின் வார்த்தைகளை அடுத்த நிமிடம் அவன் விழுங்கிக் கொண்டிருக்க மீண்டும் ஒரு யுத்தம் முடித்து இருவருமாய் குளித்து வெளியே வந்தனர்.
கண்ணாடி முன் நின்று அவசரமாய் சேலையை சுற்றிக் கொண்டிருந்த இந்து, “அச்சோ… பவி வேற பசிக்குதுன்னு சொல்லுவா… நான் இன்னும் எதுமே பண்ணலியே…” புலம்பிக் கொண்டே தலையைத் துவட்டி நின்றவளைக் கண்டு வெற்றி வெற்றிசிரிப்பு சிரிக்க, “எல்லாம் இந்த வெட்டி ஆபீசரால வந்தது… நாளைக்கு நீங்க ஆபீஸ்க்கே போயி வொர்க் பார்த்தாப் போதும்…” என்று கீழே ஓடினாள்.
அவள் ஓட்டத்தைக் கண்டு, “ஹஹா…” என்று வாய்விட்டு சிரித்துக் கொண்டே இடுப்பிலிருந்த டவலை மாற்றி ஒரு டிரவுசரைப் போட்டுக் கொண்டு டீஷர்ட்டுடன் கீழே வந்தான். அடுக்களையில் வேகமாய் காய்கறியை கட் பண்ணிக்  கொண்டிருந்தவள் அருகே வந்து நின்றவனைக் கண்டதும், “மறுபடியுமா… ஒழுங்கா போங்க…” என்று கத்தியைக் காட்டி மிரட்ட அவனுக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது.
“ஹேய்… நான் உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு வந்தா… இப்படிலாம் மிரட்டுற…” என்றவன் அவள் கையிலிருந்த கத்தியை வாங்கி அவளைப் பார்வையில் தின்று கொண்டே ஸ்டைலாய் வெட்ட அழகாய் துண்டாகி விழுந்தது.
“அட, உங்களுக்கு காய்கறி எல்லாம் கட் பண்ணத் தெரியுமா…” அவள் ஆச்சர்யமாய் கேட்க, “ம்ம்… அப்பப்போ அம்மாக்கு ஹெல்ப் பண்ணுவேன்…” என்றவனிடம், “சூப்பர்… இதையும் கட் பண்ணிடுங்க…” என்று பாக்கி காய்களையும் நீக்கி விட்டு அரிசியைக் களைந்து குக்கரில் வைத்தாள்.
“ம்ம்… நாங்களாம் ஒரு விஷயத்துல இறங்க மாட்டோம்… இறங்கிட்டோம்னு வை… அப்புறம்…” என்று இழுத்துக் கொண்டே அவளை நோக்கி புன்னகைக்க, “ஹூக்கும், போதும் உங்க ஜம்பம் எல்லாம்… காயைக் கட் பண்ணாம கையைக் கட் பண்ணிக்காதிங்க… பாத்து வெட்டுங்க…” என்றவள் அடுத்து பருப்பை ஒரு குக்கரில் வைத்தாள்.
அவர்கள் பேசிக் கொண்டே பவி வருவதற்குள் சமையலை முடித்திருக்க, “சூப்பர்… சாம்பார், ரசம், பொரியல் எல்லாம் ரெடி… தேங்க்ஸ்டா புருஷா…” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டு எல்லாவற்றையும் மேசை மீது எடுத்து வைக்க, “ஆஹா, இப்படி அப்பப்போ போனஸ் கிடைக்கும்னா டெய்லி செய்து தர நான் தயார்…” என்று அவன் கையைக் கழுவி துடைத்துக் கொண்டே வர, காலிங் பெல் அழைத்தது.
பெரியசாமி ஆட்டோவில் வந்து இறங்கியவர் மளிகை சாதனத்துடன் உள்ளே வந்தார். சிறிது நேரத்தில் பவியை அவர் அழைத்து வர இனிதே பொழுது நகரத் தொடங்கியது.
சென்ட்ரல் ஜெயில்.
நிரஞ்சனா அமைதியாய் மரத்தடியில் அமர்ந்திருக்க துணியைத் துவைத்துக் கொண்டிருந்த ஒருத்தி அவளைப் பார்த்துவிட்டு அருகில் உள்ள பெண்ணிடம் கேட்டாள்.
“ஏண்டி, யாருடி அது புதுசா… பார்க்க சிவப்பா, ஷோக்கா இருக்கா…” வாயைத் திறந்ததும் காவி படிந்த பற்கள் கோரமாய் எதிரில் நிற்பவரை அச்சுறுத்தின. கலைந்த முடியும் தடித்த உருவமுமாய் காணவே சற்று பயம் தோன்றும் வகையில் சொர்ணாக்கா போல இருந்தாள்.
“அது புதுசா பொள்ளாச்சி ஜெயில்ல இருந்து வந்திருக்குகா…”
“என்ன பண்ணிட்டு வந்தா…”
“கொலை முயற்சியாம்… அதும் புருஷனை…” அவள் சொல்ல, “ஓஹோ, அவ்ளோ பெரிய அப்பாடக்கரா…” என்றாள்.
“ம்ம்… ஆனா யாரோடவும் பேசறதில்ல… இப்படியே எங்காச்சும் வெறிச்சுப் பார்த்துட்டு உக்கார்ந்திருப்பா…”
“ஓ… செவப்பிக்கு கொழுப்பு போல… குறைச்சிருவோம்…”
“என்ன பேச்சு… சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு செல்லுக்குப் போங்க…” வார்டன் அதட்டிக் கொண்டே சென்றார்.
“சாயந்திரம் டியூட்டி மாறினதும் இவ போயிட்டு நம்ம கல்யாணி வரட்டும்… அப்புறம் பாரு…” சொல்லிக் கொண்டே தங்களது அறைக்கு சென்றனர்.
நிரஞ்சனா அப்போதும் அங்கேயே அமர்ந்திருக்க அவளிடம் வந்த வார்டன், “என்ன… உனக்கு தனியா சொல்லணுமா… போ…” என்று விரட்ட அவள் பயப் பார்வையுடன் தயக்கமாய் நடந்து அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றாள். சக்தியைக் கண்டதில் இருந்து மனம் கலங்கிக் கொண்டிருக்க  அவனை நினைத்தபடி சுவரோடு சேர்ந்து அமர்ந்தாள்.
அவளைக் கண்டதும் அதிர்ச்சியுடன் நோக்கிய சக்தியின் முகம் கண்ணுக்குள் வந்து சென்றது.
“சக்தி…” மனதுக்குள் அந்தப் பெயரை சொல்லும்போதே இதமாய் உணர்ந்தாள் நிரஞ்சனா.
“ஹூம், விதியோட விளையாட்டப் பார்த்தியா… வாழ்க்கை முழுசும் உன்னோட சேர்ந்து இருக்கணும்னு ஆசைப்பட்டது  நடக்கவே இல்ல… ஆனா, ஒரே ஜெயில்ல சேர்ந்து இருங்கன்னு இப்படி கொண்டு வந்து சேர்த்திருக்கு…” அவளது இதழ்கள் விரக்தியில் புன்னகைக்க கண்ணீர் தழும்பியது.
“நாம மட்டும் ஒண்ணு சேர்ந்திருந்தா இப்ப ரெண்டு பேருமே கொலைக் குற்றவாளியா ஜெயிலுக்கு வந்திருக்க மாட்டோமே… கடவுளே, ஏன் எங்க வாழ்க்கைல இப்படி விளையாடற… சக்தி, அபர்ணாவையும் சதீஷையும் கொன்னுட்டு ஜெயிலுக்குப் போயிட்டான்னு கேட்டப்ப இருந்து என் மனசு பட்ட வலி எனக்கு தான் தெரியும்…”
“அதே போல என் வாழ்க்கைலயும் நடக்கும்னு அப்ப எனக்குத் தெரியாது… உனக்கு அபர்ணா போல எனக்கு செந்தில்… அந்த மனுஷ மிருகத்துகிட்ட இருந்து என்னைக் காப்பாத்திக்கவே ஒவ்வொரு நாளும் போராட்டமா இருந்துச்சு… தாங்கிக்க முடியாம தான் கழுத்துல வெட்டினேன்… அப்ப சாகாம கிடந்தாலும் அப்புறம் நீ தண்டிசிட்டன்னு சந்தோஷப்பட்டேன்… இப்ப அதை விடப் பெரிய தண்டனையா என்னை சக்தி இருக்கற ஜெயிலுக்கே கொண்டு வந்துட்டியே…” கண்ணீர் கன்னத்தில் உருண்டோட துடைக்க கூடத் தோணாமல் அமர்ந்திருந்தாள்.
அப்போது கதவு திறக்கும் ஓசை கேட்டு நிமிர அந்த சொர்ணாக்காவும் தோழியும் இவளை ஒரு மாதிரி முறைப்புடன் பார்த்து கொண்டு நின்றனர். அதைக் கண்டு பயத்துடன் இவள் எழுந்து நிற்க சொர்ணாக்கா திண்டின் மீது வந்து அமர்ந்தாள்.
“ம்ம்… என்ன ரொம்ப யோசனை போலருக்கு…”
அவள் கேட்க இவள் எதுவும் சொல்லாமல் அமைதியாய் நிற்கவும் சொர்ணாக்கா கடுப்பானாள்.
“வாயில என்ன கொழுக்கட்டையா, ஏதாச்சும் கேட்டா பதில் சொல்ல மாட்டியோ…” சொல்லிக் கொண்டே அருகில் வந்தவள் கன்னத்தைப் பிடித்து அமிழ்த்த வலியில் முகம் சுளித்தவள், “வி…விடுங்க… எதுக்கு இப்படிப் பண்ணறீங்க…” என்று கேட்க, “ஓ… அப்ப வாயில கொழுக்கட்டையும் இல்ல, ஊமச்சியும் இல்லை… நல்லாவே பேசத் தெரியுது…” என்று முறைக்க இவள் அமைதியாய் நின்றாள்.
“ஏய், இங்க பாருடி… இங்க நான் இருக்கறவரைக்கும் யாரு புதுசா வந்தாலும் எனக்கு அடிபணிஞ்சு தான் போகணும்… எங்காச்சும் படிச்ச திமிர காமிச்ச… அப்புறம் வெளியவே போக முடியாது, சொல்லிட்டன்…” என்றபடி திண்டில் அமர்ந்து கொண்டு, “ம்ம்… வந்து காலைப் பிடிச்சு விடு…” என்று சொல்ல, “போடி… அக்கா சொல்லுறாங்கல்ல…” என்றாள் அவளுடன் வந்த அசிஸ்டன்ட்.
தயங்கிக் கொண்டே நின்றவளை அவள் பிடித்துத் தள்ளிவிட பயத்துடன் கீழே அமர்ந்தவள் சொர்ணாக்காவின் காலைப் பிடித்து விடத் தொடங்க, “என்னடி தடவிட்டு இருக்க… நல்லா அமுத்திப் புடிச்சு விடு…” என்று வசதியாய் காலை நீட்டி அமர்ந்து கொண்டவளை பயத்துடன் பார்த்துக் கொண்டே பிடிச்சு விடத் தொடங்கினாள் நிரஞ்சனா.
மனம் அவமானத்திலும் வேதனையிலும் துடிக்க விரக்தியுடன் கைகள் வேலையை செய்து கொண்டிருந்தன. அவர்கள் இருவரும் அன்று அதே அறையிலேயே தங்க அவளுக்கு தனிமையே தேவலாம் போலத் தோன்றியது. குத்தலாய் பேசிக் கொண்டும் மிரட்டிக் கொண்டும் குரூரமாய் சந்தோஷித்துக் கொண்டிருந்தனர் அந்தப் பெண்மணிகள்.
இரவு சாப்பிடப் பிடிக்காமல் அவள் அமர்ந்திருக்க, “ஏன், சோறு இறங்கலையோ…” என்றவள் அதையும் எடுத்து சாப்பிட்டு விட தண்ணியைக் குடித்துவிட்டு படுத்துவிட்டாள் நிரஞ்சனா.
அவளுக்கு அருகில் பாய் போட்டு இருவரும் படுத்திருக்க அவர்களின் குறட்டை ஒலியும், அவர்களிடமிருந்து வந்த ஒருவித விருப்பமில்லா மணமும் உறங்கவிடாமல் செய்தன.
சிறைச்சாலை முழுதும் உறக்கத்தில் இருக்க பணியில் இருந்த காவலர்களும் ஓய்ந்து அமர்ந்திருந்தனர். மகளிர் செல்லுக்கு முன்னில் இருந்த விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டிருக்க எங்கும் இருட்டே அப்பிக் கிடந்தது.
உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த நிரஞ்சனா தன் மீது கை விழவும் திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க சொர்ணாக்கா அவளுக்கு மிகவும் நெருக்கமாய் படுத்துக் கொண்டிருந்தார். உறங்கும்போது தெரியாமல் கை போட்டாரோ என நினைத்தவள் கையை விலக்கிவிட்டு சற்றுத் தள்ளிப் படுக்க சிறிது நேரம் கழித்து மீண்டும் அவள் மீது சொர்ணாக்காவின் தடித்த கை விழ அவஸ்தையாய் உணர்ந்தவள் கையை விலக்கி விட முயல அந்தக் கைகள் நீங்கி அவள் மார்பின் மீது விழ அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தாள் நிரஞ்சனா.
சொர்ணாக்கா ஒரு அசிங்கமான சிரிப்புடன் அவளைப் பார்க்க இருட்டில் காவி இல்லா பற்கள் மட்டும் பளிச்சிட்டது.  பயத்துடன் எழுந்து அமர்ந்து கொண்டவள், “எ..என்ன, பண்ணறீங்க…” என்று கேட்க அவள் இளித்தாள்.
“ஏய், சத்தம் போடாம ஒழுங்கு மரியாதையா வாய மூடிட்டு படு… இதெல்லாம் இங்க சகஜம் தான்… சத்தம் போட்டு மாட்டி விட நினைச்ச தொலைஞ்ச…”
அவள் மிரட்டலாய் சொல்லிக் கொண்டே இவளைப் பிடித்து இழுக்க அதிர்ந்தவள், “ச்சீ… என்ன விடு…” என்று உதற மற்றவள் வந்து இவள் வாயைப் பொத்திக் கொண்டாள்.
“ஏய்ய்ய்…” நிரஞ்சனா திணறலுடன் அவள் கையை மாற்ற முயல, சொர்ணாக்காவின் கைகள் அவள் மேனியில் தப்பும் தவறுமாய் ஊறத் தொடங்க அருவருப்புடன் முகம் சுளித்தவள் அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஓங்கி அவள் வயிற்றிலேயே மிதிக்க தெறித்து விழுந்தாள்.
சட்டென்று எழுந்தவள் சாப்பிடும் தட்டை எடுத்து மற்றவளின் தலையிலும் ஓங்கி அடிக்க, ஆ…” என்று அலறியவளின் தலையில் ரத்தம் வழியத் தொடங்கியது. சத்தம் கேட்டு சிறை சிப்பந்திகள் ஓடி வந்தனர்.
உன்னை நான் தேடும்
பொழுதெல்லாம் எட்டி
நின்று ஏமாற்றினாய்…
எல்லாம் முடிந்ததென்று
எண்ணிக் கொண்டிருக்கையில்
எதற்கு கண் முன்னில்
காட்சி தருகிறாய்…
இருப்பதாய் நினைத்து
ஏமாறுவதும்
இல்லாததை எதிர்பார்த்து
அலைப்புறுதலும் மட்டுமே
நான் வாங்கி வந்த வரமோ…

Advertisement