Monday, July 20, 2026

    விலகி இருந்திட கூடுமோ?!

    ஆனால் விஷயம் அறிந்ததும் மீனாளுக்கு சும்மா இருக்க முடியவில்லை. என்னவோ கண்ணில் விழுந்த தூசிபோல, மனதினில் இவ்விசயம் நுழைந்து உறுத்திட தொடங்கியது. அவள் பிறந்ததில் இருந்து தாத்தா பாட்டி என்று உரிமையோடு சொந்தம் கொண்டாட்டிய மனிதர்கள். அவர்களின் அந்த வீடு, அவளது அப்பா சில வருடங்கள் வாழ்ந்த வீடு என்ற அடையாளத்தையும் கொண்டது. அத்தனை...
    அத்தியாயம் – 8 ‘நம்ம எல்லாம் ஒரே பேமிலி..’ என்று ப்ரித்வி சொன்னதில், தங்கமீனாளுக்கு அப்படியே மனம் குளிர்ந்து போனது என்றுதான் சொல்லவேண்டும். மனதில் ஒட்டிக்கொண்டு இருந்த சிறு சஞ்சலமும் கூட இப்பொழுது எங்கோ ஓடிப்போனது. முறையில் இருப்பவர்களோடு சாதாரணமாய் இரண்டு வார்த்தை பேசினாலே கூட, கிராம புறங்களில் இன்றும் இந்த கேலி கிண்டல்கள் எல்லாம் உண்டுதான்....
    அத்தியாயம் – 7 வேம்பரசன் சொன்ன சங்கதி கேட்டு, யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ ராதாவிற்குத்தான் ஏகப்பட்ட மகிழ்ச்சி. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. அதை வெளிப்படுத்தவும் முடியவில்லை. வெளிப்படுத்தாமல் இருக்கவும் முடியவில்லை. தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த ஒருமாதிரி திண்டாடிக்கொண்டு இருந்தார். போஸ்ராஜனோ “நல்ல யோசனைதான் சித்தப்பா..” என்று தன் சம்மதத்தை இப்படிச் சொல்லிவிட்டார். மகன் புதிய வீடு என்று சொன்னதுமே, மனதில்...
    அத்தியாயம் – 4 ப்ரித்வியைக் கண்டதும், தங்கமீனாளுக்கு உள்ளுக்குள்ளே ஒரு சிறு உதறல், பேசியதை கேட்டிருப்பானோ என்று. அச்சிறு தவிப்புடனே அவனைக் கண்டு லேசாய் புன்னகைத்தவள் “வாங்க.. நல்லாருக்கீங்களா?” என்று நலம் விசாரிக்க. “ராஜாக்களுக்கு என்ன குறை? ரொம்பவே நல்லா இருக்கேன்..” என்று அவனும் குறையாத புன்னகையோடு பதில் சொல்லியதிலேயே புரிந்துபோனது, அவளது வார்த்தைகள் அவன் செவிகளில்...
    லட்சக்கணக்கான பணத்தை வீட்டினில் முதலீடு செய்துவிட்டால், பின்னே மகளது திருமணத்திற்கு என்ன செய்வது? கையிருப்பில் தானே கை வைக்க வேண்டி வரும் என்று பதறிக்கொண்டு பார்க்க, பிருந்தாவோ “நல்ல ஐடியா அண்ணா..” என்று அண்ணனை பாராட்டிக்கொண்டு இருந்தாள். வேம்பரசனோ உடனே பதில் எதுவும் சொல்லாமல், சில நொடி மௌனங்களுக்கு பிறகு “போஸ் கூட கலந்து பேசினியா...
    அத்தியாயம் – 3 போஸ்ராஜன் குடும்பம் மதுராபுரி வந்து சேர்ந்திருந்தது. வந்தவர்களை இன்முகமாய் வரவேற்று, உபசரித்து, உணவுண்ண வைத்து வழக்கமாய் வரும்போது தங்குவதுபோல், இப்போதும் அவரவருக்கான அறைகளை ஒதுக்கிக்கொடுத்து, அழகரசியும், வேம்பரசனும்  நல்லபடியே கவனித்திருந்தார். போஸ்ராஜன் ஒருவிதத்தில் இறுக்கமாய் இருந்தார் என்றால், ப்ரித்விராஜன் அவன் ஒருபக்கம் முகத்தில் கல்லைக்கட்டிக் கொண்டுதான் இருந்தான். ராதா தான் அனைவருக்கும் சேர்த்து...
    “ஓ..!” என்றவள் அடுத்து பிருந்தாவோடு பேச்சினை ஆரம்பித்துவிட்டாள். “சூப்பாரா இருக்கும் பிருந்தா. அதுவும் திருக்கல்யாணம் அன்னிக்கு போகணும் செமையா இருக்கும். என்ன கூட்டம் தான் ஜாஸ்தி. அடுத்த வருஷம் அப்படி ப்ளான் பண்ணிப்போம்..” என்று பேச்சுக் கொடுக்க, இதனை கேட்ட ராதாவோ “அடுத்த வருஷம், எல்லாம் அவங்கவங்க ஜோடியோட போகணும்னு ப்ளான் போடுங்க. வேண்டிக்கோங்க..” என்று சொல்ல,...
    அத்தியாயம் – 9 தங்கமீனாளின் வார்த்தைகளை யாரும் அத்தனை ஒன்றும் தவறாய் எடுத்துக்கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அவளின் விருப்பத்தினைக் கேட்டு, இந்த பெண்ணுக்குள் இப்படியொரு எண்ணமா, இக்கால யுவதிக்கு இப்படியொரு ஆசையா என்றுதான் எண்ணினர்.  ப்ரித்வி கூட அவளை வியப்பாய் பார்த்து வைத்தான். ‘இங்கேதான் பிறந்து வளர்ந்திருக்கிறாள். இங்கேயே காலம் தள்ள வேண்டும் என்று எப்படி நினைக்க...
    அத்தியாயம் – 20 பிருந்தாவிற்கு அன்றைய தினத்தில் அப்படியொரு சந்தோஷ பூரிப்பு. பின்னே வினோதனோடு சேர்ந்தாற்போல ஐந்து நிமிடங்கள் பேசியிருக்கிறாளே. அதிலும் அவளிடம் தெரிந்த அதே ஆர்வமும், ஆசையும், அவளோடு பேசிடவேண்டும் என்கிற துடிப்பும் அவன் கண்களிலும் தெரிய, பிருந்தாவின் சந்தோஷ அளவை, அளவிட முடியுமா என்ன?! இதற்கும் அத்தனை பெரிதாக எல்லாம் ஒன்றும் பேசிடவில்லை. எல்லாமே...
    அத்தியாயம் – 5 நல்ல ஆழ்ந்த உறக்கம் தங்கமீனாளுக்கு. வீட்டினில் விடுமுறையில் இருக்கையில் தான் இப்படி உண்டுவிட்டு, நிம்மதியாய் உறங்கிட முடியும். சந்திராவின் சமையல் எப்போதுமே அருமையாய் இருக்கும். விடுமுறை நாளென்றால் போதும், தங்கமீனாள் ஒருபிடி பிடித்துவிடுவாள். இன்றோ ப்ரித்வி மீதிருந்த கோபத்தில் இன்னும் நன்றாய் உண்டுவிட்டு, ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தாள். வீட்டின் பின் பக்கம் தனியாய்...
    “பின்ன அவங்க சொன்னது மட்டும் சரியா?!” என்றாள் விசும்பலோடு. “அந்த பையன் தப்பாவும் ஒன்னும் சொல்லலையே மீனா. எப்பவும் போல வந்து போக இருன்னு, உன் மனசு நோகாமத்தானே சொல்லிருக்கான். இதுல நீ என்ன தப்பைக் கண்ட. அதைவிடு, நீ ஆச்சிக்கிட்ட கிண்டலா பேசினதைக் கேட்டும் கூட, அதை பெருசு பண்ணாம இப்படி சொல்லிருக்கான். அது...
    அத்தியாயம்  - 6 வேம்பரசன் மற்றும் காசிராஜனோடு ப்ரித்வி பேசிக்கொண்டு இருக்க “இந்தா இந்த டீ கொண்டு போய் குடு. வந்தவங்களுக்கு டீ போட்டுக் குடுக்கணும்னு கூட இல்லை. வாய் பார்த்து நிக்கிற?” என்று சொன்னபடி சந்திரா, அவளிடம் தட்டினை நீட்ட, “ம்மா.. என்ன தட்டுல வச்சு குடுக்குற?” என்றாள். “அவங்க மூணு பேரு டி. ரெண்டு கைல...
    ‘திமிரை பாரேன்..’ என்று பல்லைக் கடித்தவள் “நான் அப்புறம் சாப்பிடுறேன் ம்மா..” என்று சொல்லி உள்ளே எழுந்து சென்றுவிட்டாள். காசிரஜான் கூட “என்ன சந்திரா, உடம்பு சரியில்லையா மீனாக்கு?” என, சந்திராக்கு தான் மகள் ப்ரித்வியிடம் பேசியது எல்லாம் தெரியுமே. அதுவும் அவனே வீட்டிற்கும் மனதில் எதையும் வைக்காமல் வந்திருக்கவும், மனது அவருக்கு கேட்கவில்லை. அதனால் கணவர் கேட்ட...
    அத்தியாயம் - 19 கிடா விருந்து தடபுடலாய் தான் நடந்துகொண்டு இருந்தது. காசிராஜனோடு வேலை செய்யும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என்று அனைவருமே பரிமாறும் வேலையில் இறங்கியிருக்க, மீனாளும் அவர்களுடன் தான் இணைந்து நின்று இருந்தாள். “என்னதான் ஆள் விட்டு சமையல் பண்ணாலும், நம்ம கையாள சாப்பாடு போட்டாதானே நல்லாருக்கும்..” என்று அழகரசி ராதாவிடம்...
    அத்தியாயம் – 11 காசிராஜனுக்கு அத்தனை சந்தோசம், கணேசனே மீனாளை தன் மகன் வினோதனுக்கு பெண் கேட்டது. தானே பேச்சினை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்திருந்தார் தானே. ஆனால் இந்த பெண்கள் எல்லாம் ஜாதகம் பார்க்கவென்று சென்று வந்ததில், தங்கமீனாளுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் கழித்தே திருமண பேச்சினை எடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்க, என்ன செய்வது...
    அத்தியாயம் – 15 ப்ரித்வியை நேரில் கண்டு பேசும் வரைக்கும்தான் தங்கமீனாளுக்கு உள்ளுக்குள்ளே தடுமாற்றம் எல்லாம். இப்போது பேச்சு வளர்ந்து, நேரம் கடக்கவும் மனது கொஞ்சம் மட்டுப்பட்டது. உள்ளிருந்த உதறல்கள் எல்லாம் கொஞ்சம் அமிழ்ந்து போனது நிஜம். அதிலும் அவள் பேசியதை கேட்டு, அவன் சிரித்துவிடவும் ‘அப்பாடி...’ என்கிற ஆசுவாசம் அவளுள். அவன் கரத்தால் பூ வாங்கி,...
    அத்தியாயம் – 16 “மச்சா யார்டா இது?” என்று ரித்திக்கின் உற்சாக குரல் வந்து ப்ரித்வியின் செவியில் விழவும் “என்னடா?” என்று கேட்டுத் திரும்பினான். “டேய்.. டேய் இந்த பக்கம் பாருடா.. யாரு அந்த பொண்ணு?” என்று ரித்விக் ஆர்வமாய் கேட்க, “யார்ரா?!” என்று சற்று எரிச்சலுடனே கேட்டவன், ரித்திக்கின் பார்வை சென்ற பக்கம் செல்ல, தங்கமீனாள் அழகரசியுடன்...
    அத்தியாயம்  - 13 ப்ரித்விக்கு உறக்கமே வரவில்லை. படுத்தான்.. எழுந்தான்.. நடந்தான்.. தலையை கோதினான்.. ஆழ மூச்செடுத்து விட்டான்.. ம்ம்ஹூம் என்ன செய்தும் அவனது மனதினில் உஷ்ணம் அடங்குவதாய் இல்லை. அத்தனை கோபம். அதுவும் தன்மீதே அவனுக்கு. அவன் இப்படித்தான். பார்க்கத்தான் ஆள் சாதுபோல. அவனைப் பார்ப்பவர்கள் யாராகினும் எண்ணுவது இதைதான் ‘சாப்ட் நேச்சர்...’ என்று. பழகுவதற்கும்...
    அத்தியாயம் – 14 கணேசன் ஐந்து வரைபடங்கள் கொண்டு வந்திருந்தார். அதில் இரண்டு தனி வீடு அமைப்பாய் இருந்தது. ப்ரித்வி சொன்ன பண அளவில் இருந்து கொஞ்சம் கூடுதல் செலவாகக் கூடும் என்றும் கணேசன் சொல்லிட, போஸ்ராஜன் பதில் எதுவும் சொல்லவில்லை. மகன் எடுத்துச் செய்கிறான். அவனே முடிவு சொல்லட்டும் என்று ப்ரித்வியைத் தான் பார்த்தார். வேம்பரசனோ...
    அத்தியாயம் -  21 எத்தனை முறை கண்ணிமைகளை சிமிட்டி சிமிட்டி, ப்ரித்வி கேட்டனுப்பியிருக்கும் கேள்வியை படித்திருப்பாளோ தெரியவில்லை.  எத்தனை முறை படபடக்கும் நெஞ்சத்தினை நீவி நீவி, நீர் அருந்தி பெருமூச்சினை வெளியிட்டாளோ, அதுவும் தெரியவில்லை. வியர்க்கிறதா, வியர்க்கவில்லையா என்று தெரியாமலே, கழுத்தையும் நெற்றியையும் எத்தனை முறை துடைத்துக்கொண்டாளோ தெரியவில்லை. கிட்டத்தட்ட ஒருமணி நேரமாய் தங்கமீனாள் இதனைத்தான் செய்துகொண்டு...
    error: Content is protected !!