தங்கக்கூ(ண்)டு
தர்மன் அந்த மலைப்பகுதியின் வளைந்த பாதைகளில் இலக்கில்லாமல் வெறித்தனமாய் ஓடிக் கொண்டிருந்தான். எதிர்காற்று அவன் முகத்தில் ஓங்கி அறைய, அவன் கண்களில் நீர் வழிந்துக் கொண்டிருந்தது. கண்கள் பாதை மேல் நிலைக்குத்தியிருக்க, அவன் மனம் உலைக்களமாய் கொதித்துக் கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் கால் இடறி கீழே விழுந்தவன் கால் முட்டி பாதையில் உரசி நிற்க, யாருமற்ற...
கீ கொடுத்த பொம்மையை போல் வந்து ஏறியவன் பத்மஜாவை எதிர்த்து ஒரு வார்த்தை பேசினானில்லை. அதற்கு காரணம் யக்ஞா! ‘நான் உங்களை நம்பினேன் எம்.பி’ என்பதை தவிர அவள் எதுவும் பேசாததே அவனை பொம்மை போல் ஆட்டி வைத்தது. அவளே எதுவும் பேசாத போது, பத்மஜாவிடம் மல்லுக்கு நின்று என்ன நடந்துவிட போகிறது??
வீட்டுக்கு வந்ததும்...
அதிர்ச்சி! பேரதிர்ச்சி! ஒரு அலை ஓய்வதற்குள் கரை தொடும் அடுத்த அலையை போல் ஒன்றன் பின் ஒன்றாய் வந்த பேரதிர்ச்சிகள்!
அர்ஜுன் தன் அறையில் சோர்வாய் படுத்திருந்தான்.
ஒருவேளை அவள் அவனிடம் நாக்கை பிடுங்குவது போல் நாலு கேள்வி கேட்டிருக்கலாம்......
அல்லது கன்னத்தில் ஓங்கி அரைந்திருக்கலாம்..........
அன்று அலைபேசியில் பேசும்போது, உனக்கு காதல் தோல்வி ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேனே,...
திருமண உடைகளை வாங்கியபின், நகைக்கடைக்கு சென்று தாலிக் கொடி வாங்கினர். பத்மஜா அதை தன் செலவென்று கூறினார். திருமணத்திற்கான செலவுகளை சமாளிக்க, அவரது ஜி.பி.ஃஎப் (GPF) பணத்தை எடுத்திருந்தார். பத்து பவுனில் தாலி சங்கிலி வாங்க, அது பார்க்க பெரிதாய் இருந்தது.
“இதை பாரு மா. இது நல்லா பார்க்க பளிச்சுன்னு இருக்குதுல?” யக்ஞாவிடம் அவர்...
“அண்ணி! சாப்பாடு ரெடி ஆயிடுச்சா?” கேட்டபடியே சமையலறைக்குள் அர்ஜுன் நுழைய, சுசித்ரா பதற்றமாய் நாக்கை கடித்தாள்.
“சாரி அர்ஜுன்! இன்னைக்கு அத்தை ஃபீல்டுக்கு போய்டாங்க. நீ எப்படியும் சாப்பிட மாட்டேன்னு நினைச்சு நான் இன்னைக்கு வெறும் தாளிச்ச பருப்பு சாதம் தான் வச்சேன். உனக்கு பருப்பு சாதம் பிடிக்காதே”
“இல்லண்ணி! நான் சாப்பிடுறேன். நீங்க வைங்க”
அவனை ஆச்சர்யமாய்...
தெரு முனையிலிருந்த பூங்கா கொரோனா காரணமாக மூடப்பட்டிருக்க, வெளியிலிருந்த நடை மேடையில் அமர்ந்திருந்தனர் அர்ஜுனும், யக்ஞாவும்.
முகத்தில் எந்த சலனமுமின்றி யக்ஞா அமர்ந்திருக்க, அவளருகில் அவளை தலை முதல் கால் வரை அங்குலம் அங்குலமாய் அளந்தவாறு அர்ஜுன்! முன்பே யக்ஞா நெடுநெடுவென ஒல்லி தான். இப்பொழுது மேலும் மெலிந்திருந்தாள். கன்னங்கள் ஓட்டி, கண்கள் சுருங்கி சோர்ந்து...
முடிவே இல்லாமல் நீண்ட அந்த வலிமிகு இரவுகளுக்கு பின்னும், நல்ல செய்தியை அவர்கள் கேட்கவில்லை! ஆனால் தினமொரு பணக்கணக்கை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தனர்! தர்மனும், அர்ஜுனும் மாற்றி மாற்றி வந்து பார்த்துவிட்டு சென்றனர். வயதின் காரணத்தால், கொரோனா தொற்றின் பயத்தால், மலயனாதனை அலைய வைக்க துணியவில்லை.
பத்மஜா உடளவிலும், மனதளவிலும் பாதியாய் கரைந்து விட்டார். அவருக்கும்...
ஊரடங்கு முடிந்து ஒரு வாரம் ஆன நிலையில் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட, பத்மஜாவின் பயம் உண்மையானது. கொரோனா கோர தாண்டவமாடிய சமயம் அது! சாதாரண இருமலாக ஆரம்பித்தது, காய்ச்சலாக வளர்ந்து, கொரோனா என்று உறுதியானது!
உடளவில் பாதிக்கப்பட்டதை விட மனதளவில் அதிகம் பாதிக்கப் பட்டார். செய்திதாள், ஊடகங்கள், சமூக வலைதளங்கள் என தினம் கேட்கும்...
“மம்மி! கல்யாணம் ஆன இந்த எட்டு வருஷத்துல ஒரு தடவை கூட அவ உங்களை பத்தி என் கிட்ட தப்பா பேசுனதே இல்லை, நானே ஏதாவது பேசுனாலும், பரவாயில்லை கவலைப்படாதீங்க விடுங்கனு தான் சொல்லுவாளே தவிர உங்களை பத்தி ஒரு வார்த்தை தப்பா பேச மாட்டா. எவ்ளோ வருஷம் ஆனாலும் என்னையும் நீங்க புரிஞ்சிக்கலை,...
“தமிழ்நாடு முழுவதும் வரும் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வருவதை ஒட்டி, இன்றும், நாளையும் காலை ஆறு மணி முதல் அனைத்து அத்தியாவசிய கடைகளும் செயல்படும்” செய்திகள் வாசித்துக் கொண்டிருக்க,
“ஏன்பா, லாக்டவுன் போட போறாங்க. வீட்டுல மளிகை எல்லாம் காலி ஆக போகுது. காய்கறி, மளிகை எல்லாம் வாங்கணும்”
“வாங்கலாம் மா” தர்மன் விட்டேத்தியாக...
“ஐயா! இந்த மரம் வேண்டாம்னு இதுக்கு முன்னாடி நாங்க ஏதாவது சொல்லியிருக்கோமா? கடை முன்னாடி இவ்ளோ பெரிய மரம் இருக்குதுன்னு தெரிஞ்சு தான் பில்டிங் வாங்கவே செஞ்சோம். சொல்ல போனா எங்க குடும்பத்துல எல்லாருக்கும் ரொம்பவே சாமி நம்பிக்கை உண்டு. அம்மாக்கு அதிக நம்பிக்கை, அப்படி இருக்கும் போது நாங்க இப்படி செய்வோங்களா ஐயா?”
“ஐயா,...
ஏப்ரல் 15
முகத்தில் சலன ரேகைகள் அப்பியிருக்க, காரை செலுத்திக் கொண்டிருந்தான் தர்மன்! பின் இருக்கையில், கவலை தோய்ந்த முகத்துடன் அவன் மீதிருந்து கண்களை அகற்றாது சுசித்ரா!
இவர்கள் வெளியே கிளம்பும் செய்தி கேட்டபின் பத்மஜாவின் எதிர்வினை எப்படி இருக்குமென்பதை நினைத்து அச்சம் கொண்டவன், அதை அவரிடம் சொல்லாமல் இழுத்தடித்தான். காலையில் கிளம்பியபின் அவரின் முன்னால் நின்று...
வெளியே வந்து புல்லட்டில் சாவியை நுழைக்க போனவன் நினைவில், கண்களில் நாணமும், எதிர்பார்ப்பும் போட்டி போட அவள் நின்றதும், ‘உங்க கூட பைக் ரைட் நான் ரொம்பவே மிஸ் பண்றேன்’ என்றதும் அவன் நினைவுக்கு வர, ஒரு வித ஆற்றாமை அவனை அண்டியது. ஏனோ அந்த புல்லட்டை இயக்க அன்று அவன் மனம் வரவில்லை,
மறுபடியும்...
ஏப்ரல் 14
முகமெங்கும் சிரிப்பு பொங்க பத்மஜா, அந்த ஐம்பதாயிரத்தை கையில் பெற்றுக்கொண்டார்.
“ரொம்ப சந்தோஷம்! அப்புறம் கடையை எப்போ திறக்க போறீங்க?”
“அடுத்த வாரத்துலேயே ஒரு நல்ல நாள் பார்த்து திறந்திடலாம்னு நினைக்கிறோம். கடை திறப்புக்கு மேடம் கண்டிப்பா வரணும்”
“பார்க்கலாம். நீங்க தேதி பார்த்துட்டு சொல்லுங்க. டைம் கிடைச்சா வரேன்”
“சரிங்க! அப்போ நாங்க வரோம்”
“வாங்க!”
அவர்கள் சென்றதும் கடைக்கு...
அவர் சென்றதும், “ஏன்டா? நீயே போய் சாப்பாடு எடுத்து போட்டு சாப்பிடலாம்ல? உனக்கு தட்டு கொண்டு வந்து கொடுக்கிறாங்க, அதுலேயே கை கழுவுற, அப்புறம் குடிக்க தண்ணி எடுத்துட்டு வராங்க. ஊட்டி மட்டும் தான் விடலை. வயசாயிடுச்சுல அவங்களை இப்படி கஷ்ட்டபடுத்தலாமா?”
“கஷ்டம்னு அவங்க உன் கிட்ட சொன்னாங்களா? போடா, அட்வைஸ் அறுவை ஆறுமுகம்!”
“ம்ம்கும்! நீ...
“எப்படி டா இருக்குது?” தன் புது ஆப்பிள் ஐ.பேடை, மித்ரனிடம் காட்டிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
“செம்மயா இருக்குது டா. சும்மா கிளாசா இருக்குது!! எவ்ளோ டா?”
“ஃபிப்டி ஃபோர் டா”
“ஆத்தி!” அந்த ஐ.பேடை கண்களில் ஓற்றியபடி அதை அர்ஜுனிடம் திரும்ப அளிக்க, அர்ஜுன் சிரித்தான்!!
“சரிடா, இதெல்லாம் விடு. ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அன்னைக்கு நீ காணோம்னு...
தன் தம்பியாவது செய்த செயலுக்கு வருந்துகிறானே என்று ஆறுதலுற்றவன், “அர்ஜுன்! நேத்து நடந்ததை பத்தி மம்மி கிட்ட நீ எதுவும் பேச வேண்டாம். அது மறுபடியும் தேவையில்லாத மனஉளைச்சல் தான்”
“ம்ம் சரி! இப்போ என்ன கவுன்சிலிங்க்கு கோயம்பத்தூர் போறோமா என்ன?”
காலை உணவு இட்லி தானே என்பது போல் மனநல மருத்துவரிடம் செல்வதை சாதரணமாய் கேட்கும்...
அர்ஜுன் வீட்டிற்கு வரவில்லை என்பதை அறிந்து பத்மஜா நிலைகுலைந்து நிற்கையிலே, அவர்கள் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது.
தர்மன் ஓடிச் சென்று வாசல் கதவை திறந்தான். வெளி கதவின் அருகே நின்றுக் கொண்டிருந்தான் அவனதருமை இளவல் அர்ஜுன்!
அவனை பார்த்ததும் எழுந்த ஆசுவாசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை! பெரு நதி சுழலிலிருந்து தப்பித்தது போல்! திக்கு திசை...
பத்மஜாவை அங்கிருத்து வீட்டுக்கு கூட்டி வந்த மலயனாதன், மறுநாள் கோயம்பத்தூரில் உள்ள புகழ்பெற்ற மனநல மருத்துவரிடம், பல போராட்டங்களுக்கு பின் அழைத்துச் சென்றார்.
அதன் பின் பல முறை அந்த மருத்துவரை சென்று சந்தித்து விட்டனர். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிரச்சனை. ஒவ்வொரு சண்டைக்கும் ஒவ்வொரு காரண காரியம்.
மலயனாதன், பத்மஜா இருவருக்கும் கவுன்சிலிங் நடைபெறும். கவுன்சிலிங்...
மித்ரன் காரை இயக்கிக் கொண்டிருக்க, கார் வேகமாக சீறி பாய்ந்துக் கொண்டிருந்தது. அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த தர்மனின் கண்கள் சிவந்து கன்றியிருந்தது. பின் இருக்கையில் மலயனாதன்!
தர்மனது அலைபேசி ஒலிக்க பதற்றத்துடன் அதை எடுத்தான்.
“சுச்சி! மம்மி வந்துட்டாங்காளா? அங்க தானே இருக்காங்க?” அவன் குரல் நடுங்கி, டன் கணக்கில் எதிர்பார்ப்பு வழிந்தோடியது.
“இல்லை பா. நீங்க அத்தையை...