Saturday, August 1, 2026

    தங்கக்கூ(ண்)டு

    சேலம் பிரதான இடத்தில் அமைந்திருந்த அந்த மூன்று தளங்களைக் கொண்ட வீட்டின் முன்பு கொழு கொழு லேப்ரடார் ஒன்று கூடியிருந்த சொந்தங்களை பார்த்து வெகு நேரமாக குறைத்துக் கொண்டிருந்தது. அந்த வீட்டின் முன்பு வந்து நின்ற மெரூன் நிற எர்ட்டிகாவிலிருந்து கம்பீரமாய் இறங்கினார் மாப்பிளை அர்ஜுன் எம்.பி. அவன் பின்னால் அவனின் மித்ரன் இறங்க, அவர்கள்...
    “அப்பா! மம்மி! ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? எல்லாரும் நம்மளை தான் பார்கிறாங்க” “அதை அந்தாளு கிட்ட சொல்லு” “அவ கிட்ட சொல்லு. நான் என்னாச்சுனு தானே கேட்டேன்? அவ தான் ஓவரா பேசுறா. தூக்கி அடிச்சிடுவேன்”  “என்னாச்சுங்க? ஏதாச்சும் பிரச்சனையா?” வெகு நேரமாக இவர்கள் ஐவர் முகத்தை பார்த்துக்கொண்டிருந்த பெண்ணின் தந்தை குரலில் தீவிர கலவரம்.  “அதெல்லாம்...
    ‘பக்கி! நான் என்ன சொன்னேன்னு அப்படி சிரிச்சிட்டு போச்சு? லூசு....கடன்காரா......ராட்சசா.....உலகத்துல எத்தனையோ பசங்க இருக்கும் போது நான் ஏன் இவனை போய் லவ் பண்ணி தொலைச்சேன்? தப்பு என் மேல தான். அன்னைக்கு முதல் தடவை என்னை பார்த்தப்போ சிடுசிடுன்னு மூஞ்சியை வச்சிட்டு எனக்கு அரசியல் தான் முக்கியம்னு சொன்னப்பவே போடா போனு விட்டுருக்கனும்....
    “அம்மா! உன் புருஷன் பண்ணுறது கொஞ்சம் கூட நல்லா இல்லை” “மரியாதையா பேசு” “புள்ளைங்க மட்டும் தான் பெத்தவங்களுக்கு மரியாதை கொடுக்கணும்னு இல்லை, பெத்தவங்களும் புள்ளைங்களுக்குள்ள மரியாதை தரனும் தானே?” “சரி! இனிமே உன்னை வாங்க சார், போங்க சார் என்னங்க சார்னு பேச சொல்றேன்” “மரியாதைங்கிறது வார்த்தைல மட்டுமில்லைமா. செய்யுற செயல்ல இருக்குது” “அப்படி என்ன செயல் செஞ்சிட்டாரு அவரு?” “எனக்கு...
    “என்னால முடியலைமா! என்னால ரசிக்க முடியல. சிலருக்கு அவங்க ஊர்ல கடல் இருக்காது. எப்பவாச்சும் ஒருக்க தான் கடல் பார்பாங்க. அவங்களுக்கு அந்த கடல் ஒரு பெரிய ஆச்சரியம், அதிசயம்! அவங்க கடலை ஆராதிப்பாங்க! ஆனால் கடல் இருக்கிற ஊர்ல பிறந்து வளர்ந்தவங்களுக்கு அது ஒரு பொருட்டாவே தெரியாது. அதை தூக்கிக் கொண்டாட மாட்டாங்க....
    “ம்ம்ம். சரி” “பதிமூணு” “என்ன பதிமூணு?” “நீங்க பதிமூணு தடவை ம்ம் சரின்னு சொன்னீங்க” “வேற என்ன சொல்ல?” “நீங்க என்னை எதுவும் கேட்க மாட்டீங்களா? நான் காலையில கண்ணு முழிச்சதுலேர்ந்து இப்போ வரைக்கும் என்ன பண்ணினேன், என்ன கலர் டிரஸ் போட்டேன், என்ன சாப்பிட்டேன், எங்க வீட்டு ஆளுங்க, ஆடு மாடு, கோழி, தூசு, தும்பு எல்லாத்தையும் பத்தி விலாவரியா...
    இரண்டு நாளாய் தர்மனிடம் அமைதி காத்து வந்தார் பத்மஜா. இந்த அமைதி தர்மனுக்கு ஒரு பயத்தை உண்டு பண்ணியது. இதற்கு பின்னொரு பூகம்பம் உண்டென்பதை அவன் மனம் உணர்ந்தேயிருந்தது. அன்று அந்த பூகம்பம் வெடித்தது! அலுவலிலிருந்து திரும்பிய பத்மஜா முகம் மலர தர்மனிடம் வந்தார். “கண்ணு” “மம்மி! சொல்லுங்க மம்மி” “கண்ணு! உன் கஷ்டமெல்லாம் தீர போகுது கண்ணு. இனிமே எல்லாம்...
    பத்மஜா தன் அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். அவர்  முன்  ஒரு திருமண பத்திரிக்கையை  வீசினான்  அர்ஜுன். "என்ன கண்ணு இது?" "என்னோட கல்யாண பத்திரிக்கை" "அர்ஜுன்!!!!!" பத்மஜாவின் அதிர்ச்சி குரல் அலுவலகத்தில் இருந்தவர்களை திரும்பிப்பார்க்க வைத்தது. "என்ன பேசுற நீ?" "வர வெள்ளிக்கிழமை எனக்கும் யக்ஞாவுக்கும் நம்ம குலதெய்வ கோயில்ல வச்சு கல்யாணம். நீங்க வந்தா வாங்க வராட்டி போங்க" "டேய் ! என்னடா பேச்சு...
    ”அண்ணா! மம்மியை பத்தின உங்க கவலை வீண் ண்ணா. அவங்களை கடந்து வாங்க. இன்னும் எவ்ளோ நாள் தான் அவங்களுக்கு பயந்து பயந்து வாழ்வீங்க. அவங்களை கண்டுக்காம உங்க வேலையை பார்த்துட்டு போங்க. நான் அப்படி தான் செஞ்சிட்டு இருக்கேன்” “அப்படியெல்லாம் கடந்து போக அவங்க நமக்கு ஏதோ ஒரு உறவு இல்லை. கடைசி மூச்சு...
    தர்மன் அந்த மலைப்பகுதியின் வளைந்த பாதைகளில் இலக்கில்லாமல் வெறித்தனமாய் ஓடிக் கொண்டிருந்தான். எதிர்காற்று அவன் முகத்தில் ஓங்கி அறைய, அவன் கண்களில் நீர் வழிந்துக் கொண்டிருந்தது. கண்கள் பாதை மேல் நிலைக்குத்தியிருக்க, அவன் மனம் உலைக்களமாய் கொதித்துக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் கால் இடறி கீழே விழுந்தவன் கால் முட்டி பாதையில் உரசி நிற்க, யாருமற்ற...
    “யக்ஞா இங்க வந்திருக்காங்க போல பா” “என்னடி சொல்ற?” இருவரும் வெளியே சென்று எட்டி பார்க்க, வீட்டின் எதிர்புறம் உள்ள மாமரத்தின் நிழலில் நின்றபடி கையசைத்தாள் யக்ஞா. “வாங்க எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? ஏன் இங்கேயே நின்னுட்டீங்க உள்ள வாங்க” “ம்ம்கும் சரியா போச்சு போங்க. இந்த விஷயம் அத்தைக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா? அவரு ஏதோ...
    கீ கொடுத்த பொம்மையை போல் வந்து ஏறியவன் பத்மஜாவை எதிர்த்து ஒரு வார்த்தை பேசினானில்லை. அதற்கு காரணம் யக்ஞா! ‘நான் உங்களை நம்பினேன் எம்.பி’ என்பதை தவிர அவள் எதுவும் பேசாததே அவனை பொம்மை போல் ஆட்டி வைத்தது. அவளே எதுவும் பேசாத போது, பத்மஜாவிடம் மல்லுக்கு நின்று என்ன நடந்துவிட போகிறது?? வீட்டுக்கு வந்ததும்...
    விடிந்தும் விடியாத அந்த அதிகாலை பொழுதில் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி முன்பு நின்று நகத்தை கடித்துத் துப்பிக் கொண்டிருந்தான் அர்ஜுன். அவன் கண்கள் நொடிக்கொருமுறை கைக்கடிகாரத்தையும், காலேஜ் வாசலையும் தீண்டிக் கொண்டிருந்தது. அதீத படபடப்பில் அவன் கால்கள் தாளம் போட்டுக் கொண்டிருந்தது. அவன் அலைபேசி அதிர்ந்து ‘இம்சை’ என ஒளிர்ந்தது. அவன் வாய் எப்பொழுதும் உதிர்க்கும்...
    திருமண உடைகளை வாங்கியபின், நகைக்கடைக்கு சென்று தாலிக் கொடி வாங்கினர். பத்மஜா அதை தன் செலவென்று கூறினார். திருமணத்திற்கான செலவுகளை சமாளிக்க, அவரது ஜி.பி.ஃஎப் (GPF) பணத்தை எடுத்திருந்தார். பத்து பவுனில் தாலி சங்கிலி வாங்க, அது பார்க்க பெரிதாய் இருந்தது. “இதை பாரு மா. இது நல்லா பார்க்க பளிச்சுன்னு இருக்குதுல?” யக்ஞாவிடம் அவர்...
    முடிவே இல்லாமல் நீண்ட அந்த வலிமிகு இரவுகளுக்கு பின்னும், நல்ல செய்தியை அவர்கள் கேட்கவில்லை! ஆனால் தினமொரு பணக்கணக்கை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தனர்! தர்மனும், அர்ஜுனும் மாற்றி மாற்றி வந்து பார்த்துவிட்டு சென்றனர். வயதின் காரணத்தால், கொரோனா தொற்றின் பயத்தால், மலயனாதனை அலைய வைக்க துணியவில்லை.  பத்மஜா உடளவிலும், மனதளவிலும் பாதியாய் கரைந்து விட்டார். அவருக்கும்...
    “ஐயா! இந்த மரம் வேண்டாம்னு இதுக்கு முன்னாடி நாங்க ஏதாவது சொல்லியிருக்கோமா? கடை முன்னாடி இவ்ளோ பெரிய மரம் இருக்குதுன்னு தெரிஞ்சு தான் பில்டிங் வாங்கவே செஞ்சோம். சொல்ல போனா எங்க குடும்பத்துல எல்லாருக்கும் ரொம்பவே சாமி நம்பிக்கை உண்டு. அம்மாக்கு அதிக நம்பிக்கை, அப்படி இருக்கும் போது நாங்க இப்படி செய்வோங்களா ஐயா?” “ஐயா,...
    அவர் சென்றதும், “ஏன்டா? நீயே போய் சாப்பாடு எடுத்து போட்டு சாப்பிடலாம்ல? உனக்கு தட்டு கொண்டு வந்து கொடுக்கிறாங்க, அதுலேயே கை கழுவுற, அப்புறம் குடிக்க தண்ணி எடுத்துட்டு வராங்க. ஊட்டி மட்டும் தான் விடலை. வயசாயிடுச்சுல அவங்களை இப்படி கஷ்ட்டபடுத்தலாமா?” “கஷ்டம்னு அவங்க உன் கிட்ட சொன்னாங்களா? போடா, அட்வைஸ் அறுவை ஆறுமுகம்!” “ம்ம்கும்! நீ...
    “அதானே பார்த்தேன். நீங்க ரீல் விடுறீங்கனு தெரியும். இருந்தாலும் ஒரு ஓரத்துல ஒருவேளை உண்மையா இருக்குமோனு ஒரு சின்ன ஆசை எட்டி பார்த்துச்சு. எப்படி எப்படி? நாம மட்டும் சின்ன டூர், அதுவும் வர பதினைஞ்சாம் தேதி போறோம். ஏன்பா இப்படி கடுப்பை கிளப்புறீங்க?” “ஏய்! நிஜமா தான்டி சொல்றேன்” “அப்போ பதினைஞ்சாம் தேதி எம்.எல்.ஏ வீட்டில...
    ஊரடங்கு முடிந்து ஒரு வாரம் ஆன நிலையில் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட, பத்மஜாவின் பயம் உண்மையானது. கொரோனா கோர தாண்டவமாடிய சமயம் அது! சாதாரண இருமலாக ஆரம்பித்தது, காய்ச்சலாக வளர்ந்து, கொரோனா என்று உறுதியானது! உடளவில் பாதிக்கப்பட்டதை விட மனதளவில் அதிகம் பாதிக்கப் பட்டார். செய்திதாள், ஊடகங்கள், சமூக வலைதளங்கள் என தினம் கேட்கும்...
    “அண்ணி! சாப்பாடு ரெடி ஆயிடுச்சா?” கேட்டபடியே சமையலறைக்குள் அர்ஜுன் நுழைய, சுசித்ரா பதற்றமாய் நாக்கை கடித்தாள். “சாரி அர்ஜுன்! இன்னைக்கு அத்தை ஃபீல்டுக்கு போய்டாங்க. நீ எப்படியும் சாப்பிட மாட்டேன்னு நினைச்சு நான் இன்னைக்கு வெறும் தாளிச்ச பருப்பு சாதம் தான் வச்சேன். உனக்கு பருப்பு சாதம் பிடிக்காதே” “இல்லண்ணி! நான் சாப்பிடுறேன். நீங்க வைங்க” அவனை ஆச்சர்யமாய்...
    error: Content is protected !!