Advertisement

“ஐயா! இந்த மரம் வேண்டாம்னு இதுக்கு முன்னாடி நாங்க ஏதாவது சொல்லியிருக்கோமா? கடை முன்னாடி இவ்ளோ பெரிய மரம் இருக்குதுன்னு தெரிஞ்சு தான் பில்டிங் வாங்கவே செஞ்சோம். சொல்ல போனா எங்க குடும்பத்துல எல்லாருக்கும் ரொம்பவே சாமி நம்பிக்கை உண்டு. அம்மாக்கு அதிக நம்பிக்கை, அப்படி இருக்கும் போது நாங்க இப்படி செய்வோங்களா ஐயா?”

“ஐயா, இவனுங்க கிட்ட பேசிட்டு இருக்கக் கூடாது ஐயா. ரெண்டு போடு போட்டா தான் உண்மையை சொல்லுவாங்க”

“ஏய்! நானும் பார்த்துட்டே இருக்கேன். என்ன ரொம்ப ஓவரா பேசிட்டே போற? அதான் பொறுமையா சொல்றாங்கல!! எங்களுக்கும் சாமி நம்பிக்கை இருக்குது. ஒரு கோயிலை இடிக்கற அளவுக்கு எங்களுக்கு தைரியம் கிடையாது. இதை நாங்க செய்யலை. உங்களால என்ன முடியுமோ பார்த்துக்கோங்க!! அண்ணா! வாங்க நாம போகலாம். இவங்கக் கூட என்ன பேச்சு?” தர்மன் அர்ஜுனை இயலாமையுடன் பார்க்க, எதிரில் நின்றவர்களின் எதிர்ப்பை பெற்ற அர்ஜுனின் கோபம் பன்மடங்கானது!! பிரச்சனை தீவிரமானது!!

“போயிருவியா? இங்கிருந்து போயிருவியா? ஐயா பேசாம போலீஸ்க்கு போவோம். புடிச்சு உள்ள போடட்டும். இந்த கடையை இனிமே ஜென்மத்துக்கும் இவங்க நடத்தவே கூடாது. அப்போ தான் இவனுங்களுக்கு புத்தி வரும்” 

“போலீஸ்னு சொன்னா நாங்க பயந்திருவோம்னு நினைச்சியா? நாங்க யாருன்னு தெரியுமா?”

“ஹாங்…..நினைச்சேன். வாடி மவனே…..நீ அங்க தான் வந்து நிப்பேன்னு தெரியும்…..என்ன? நீ எம்.எல்.ஏ ஆளு அதானே? உங்க எம்.எல்.ஏ பவுசு எல்லாம் எங்க முன்னாடி செல்லாது தம்பி. எங்க? உங்க எம்.எல்.ஏவை இங்க முன்னாடி வந்து பேசச் சொல்லு பார்ப்போம். மொத்த ஊரும் ஒண்ணா நிக்கோம். மீடியாவை கூட்டிட்டு வரோம். அதையெல்லாம் மீறி உனக்கு சப்போர்ட் பண்ணி பேசிடுவாராமா உங்க எம்.எல்.ஏ? அதையும் பார்ப்போம். வரச் சொல்லு அவரை”

சண்டை முற்ற, காவல்துறை அதிகாரிகள் அங்கே வந்து ஜே.சி.பி மூலம் மரத்தை அகற்ற, தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியும் அங்கே வந்தனர். கலெக்டர் பிசியாக வேலை பார்த்த மலயனாதனை அறியாதவர்கள் கிடையாது, எனவே அவரிடம் தகறாரின் வேரறிந்து கொண்டிருந்தனர்!! 

“சார்! என்ன குசுகுசுன்னு அங்கேயே பேசிட்டு இருக்கீங்க? அவங்க பெரிய கையுன்னு அவங்க மேல ஆக்ஷன் எடுக்காம இருந்தீங்க, நாங்க இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம். கலெக்டரை கூப்பிடுங்க. அவரு அக்ஷன் எடுக்கட்டும், சும்மா இல்லை, எங்க குலதெய்வத்தை சாயச்சுருக்கீங்க. ஆக்ஷன் எடுக்கலை, போராட்டம் பண்ணுவோம்”

“ஏய்! இருப்பா! விஷயம் என்னனு விசாரிச்சிட்டு தானே இருக்கேன். குறுக்கால பேசனா உள்ள தூக்கி போட்டிருவேன். முதல கொரோனா சமயம் இப்படி கூட்டம் கூடறதே தப்பு. எல்லாரும் கலைஞ்சு போங்க. உங்க சார்பா யாரவது ஒருத்தர்  மட்டும் ஸ்டேஷன் வாங்க. அடுத்த என்ன செய்யலாம்னு பார்ப்போம்”

பலமணி நேர சமாதானத்திற்கு பின் அந்த தலைவரை மட்டும் பேச சொல்லவிட்டு அவர்கள் கலைந்து செல்ல, இன்ஸ்பெக்டர் மலயனதனிடம் வந்தார்

“என்ன சார்? ஏன் இப்படி பண்ணினீங்க? அதுவும் கோயில் மரத்தை? இது வச்சு எவ்ளோ இஸ்யு பண்ணுவாங்க தெரியுமா? இவங்க எல்லாம் ரொம்ப ஸ்ட்ராங்கா இருப்பாங்க. அவ்ளோ ஈசியா இந்த விஷயத்தை விட மாட்டாங்க”

“அய்யோ சார்! நிஜமாவே நாங்க பண்ணலை”

“சார்! பாஸ்கர்னு ஒருத்தன் மேல எங்களுக்கு டவுட். அவனுக்கு நாங்க கடையை கொடுக்கலைன்னு பதினைஞ்சாம் தேதி பழி வாங்குறதா சொல்லி மிரட்டிட்டு போனான்” 

“சரி நீங்க ஒன்னு பண்ணுங்க. வந்து அந்தாள் மேல ஒரு கம்ப்ளயின்ட் கொடுங்க. ஆக்ஷன் எடுக்கலாம்”  

போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளித்துவிட்டு, தலைவரிடம் பேசிவிட்டு வீடு வந்து சேரும் சமயம் மூவரும் களைத்து விட்டனர். சாப்பிட தோன்றாமல், அடுத்து எதுவும் செய்ய தோன்றாமல் ஆளுக்கு ஒரு மூலையில் ஒடுங்கி விட, எல்லாரையும் இயல்புக்கு கொண்டு வரும் பொறுப்பு சுசித்ராவிடம் வந்து சேர்ந்தது!!!

இரவு வரை எம்.எல்.ஏவிடமிருந்து ஒரு அழைப்பு கூட இல்லை, பிரச்சனை என்னவென்று கூட அவர் விசாரிக்காதது அர்ஜுனுக்கு ஒரு பெரிய அடி!! அதோடன்றி மித்ரனிடமிருந்து பல அழைப்புகள், எதையுமே அர்ஜுன் ஏற்று பேசவில்லை!! குற்றவுணர்ச்சியில் அவன் முகம் வாடியது! மித்ரன் தங்கையின் திருமணத்திற்கு செல்லாததையும், உண்மையை மறைத்ததையும் மித்ரன் எப்படி எடுத்துக் கொள்வானோ என்ற கவலை பிறந்தது! 

ஒரு தவறு செய்வதற்கு முன்பிருக்கும் அசட்டு தைரியம், தவறிழைத்தபின் காணாமல் போய்விடும்!! மனம் மீண்டும் அந்த பழைய நொடிக்கு சென்று தவறு செய்யாமல் இருந்திருக்கலாமோ என்று ஏங்கும்! ஆனால் தவற விட்ட அந்த நொடியை மீட்பது நடவாத ஒன்று!! அர்ஜுனின் மனம் மித்ரன் விஷயத்திலும், யக்ஞா விஷயத்திலும் தான் தவற விட்ட நொடிகளை எண்ணி மருண்டு கிடந்தது!!   

யக்ஞாவின் ஊடல், தன் பிதாமகரின் உதாசீனம், பாஸ்கரின் நரித்தனம் எல்லாம் சேர்ந்த பலவித கலவையான உணர்வுகளால் அவன் மனம் ஆடி போயிருந்தது!! யக்ஞாவிடம் பேசினால் தன் மனம் சற்று தெளியலாம் என்று தோன்றவே அவன் வீம்பை எல்லாம் வீட்டில் விட்டுவிட்டு அவள் எண்ணிற்கு அழைத்து விட்டான்!

அழைப்பு ஏற்கப்பட அவன் குரலில் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது!!

“யக்ஞா!” முதல் முறையாக அவளை பெயர் சொல்லி அழைத்திருந்தான்!!

“———“  

“யக்ஞா! ப்ளீஸ்!”

“மாப்பிளை”

சட்டென்று அவன் வானிலை இருண்டது!

“ஆங்…..நீங்களா….யக்ஞா அங்க?” இதுவரை அவரை ‘மாமா’வென அவன் அழைத்ததில்லை. அப்படி அழைக்க அவனுக்கு இயல்பாய் வரவில்லை.

“மாப்பிளை! யக்ஞாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை”

“என்னாச்சு?” ஏனோ அவன் இதயம் டிரம்ஸ் வாசிக்கத் தொடங்கியது.

“ஒரு வாரமாவே சளி, இருமல் இருந்துச்சு. ரெண்டு நாளா காய்ச்சல் வேற. அதான்……எதுக்கும் கொரோனா டெஸ்ட் கொடுத்திருவோம்னு போய் கொடுத்திட்டு வந்தோம். இன்னைக்கு காலையில தான் ரிசல்ட் வந்துச்சு. நானே உங்க வீட்டுக்கு கூப்பிடலாம்னு தான் இருந்தேன்”

‘விஷயத்தை பேசாமல் இவர் ஏன் இப்படி வள வள கொழ கொழனு?’ எரிச்சல் மூழ, “ரிசல்ட் என்ன வந்திச்சு?”

“அது……வந்து……பாசிடிவ் தான் மாப்பிளை. கவலைப்படாதீங்க. ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆக்சிஜன் லெவல் சரியா தான் இருக்குது. வீட்லயே இருக்க சொல்லிட்டாங்க. சரி ஆயிடும்னு நம்புவோம்”

“————“ இந்நாளுக்கான பேரதிர்ச்சி இது தான் என்பது போல வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கி நின்றது!

“மாப்பிளை?”

“எப்படி? எப்படி வந்துச்சு அவளுக்கு? உங்க வீட்ல வேற யாருக்காச்சும் வந்திருக்குதா? கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க மாட்டீங்க? 

அவனின் பேச்சு அவருக்கு கோபத்தை வரவழைத்தாலும் இது தன் மகளின் மேலிருந்த கரிசனத்தால் வந்ததென்பதால் மனதுக்குள் பூரிப்பாய் உணர்ந்தார்

“இப்போ அவ எப்படி இருக்கா? நான் அவ கிட்ட பேசணும். நீங்க போனை கொடுங்க”

“அவ இப்போ தூங்கிட்டு இருக்கிறா மாப்பிளை. காய்ச்சல் விடவே இல்லை. இப்போ தான் மாத்திரை போட்டுட்டு தூங்கினா”

“எந்த ஹாஸ்பிடல்ல காட்டுனீங்க?”

“இங்க வீட்டு பக்கத்துல எம்.எஸ் ஹாஸ்பிடல்னு ஒரு ப்ரைவேட் ஹாஸ்பிடல் இருக்குது மாப்பிளை. அங்க தான் காமிச்சோம்”

“ப்ச்…..எதுக்கு அந்த மாதிரி சின்ன ஹாஸ்பிடல் எல்லாம் கூட்டிட்டு போறீங்க? சரியா பார்த்தாங்களா என்னனு தெரியல?! நீங்க முதல உடனே அவளை கூட்டிட்டு காவேரி ஹாஸ்பிடல் போங்க. எனக்கு தெரிஞ்ச டாக்டர் ஒருத்தர் இருக்காரு. நான் அவரு கிட்ட சொல்றேன்”

“மாப்பிளை, காவேரி ஹாஸ்பிடல் போக முடியாம ஒன்னும் கூட்டிட்டு போகாம இல்லை, அங்க கூட்டிட்டு போற அளவுக்கு சீரியஸ் இல்லை, அதுவும் அவ்ளோ தூரம் அலைஞ்சு போய் அதனால ஏதாவதுனா என்ன பண்றது? இப்போதைக்கு வீட்லயே நல்ல ரெஸ்ட் எடுக்கட்டும்”

“இந்த கஷாயம் ஏதாவது செஞ்சு கொடுங்க. அப்புறம் சூப், ஜூஸ்னு நீர் ஆகாரம் நிறைய கொடுக்கணுமாம். வேற என்னென்ன கொடுக்கனும் நான் என் டாக்டர் ஃப்ரெண்டுட்ட கேட்டு சொல்றேன்”

“சரிங்க மாப்பிளை நாங்க நல்லா பார்த்துக்கிறோம்”

“ஆங்….இந்த ரெம்டெசிவர் மருந்து கிடைக்க மாட்டிக்குதுன்னு சொல்றாங்களே. நான் வேணா எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு பார்க்கவா?”

“மாப்பிளை! அந்த மருந்து கொடுக்க தேவையில்லேன்னு சொல்றாங்க”

“தேவையில்லையா? நியுஸ் எல்லாம் அதை பத்தி தான் சொல்றாங்க. அதை வாங்க எல்லாரும் கியுவுல நிக்குறாங்க. வேண்டாம்னா எப்படி? அது நல்ல ஹாஸ்பிடல் தானா? இதுக்கு தான் காவேரி ஹாஸ்பிடல் போங்கனு சொல்றேன்”

“மாப்பிளை! உங்க கவலை எனக்கு புரியுது. என்னை நம்புங்க. என் பொண்ணை நான் ரொம்பவே நல்லபடியா பார்த்துக்குவேன். எந்த பிரச்சனையும் கிடையாது”

மனமின்றி அலைபேசியை அணைத்தவனை, தூக்கம் அணைக்க மறுத்தது!! 

அன்றோடு முடிந்துவிட போவதில்லை அவர்களுக்கான பேரதிர்சிகள்!!!   

 

Advertisement