தங்கக்கூ(ண்)டு
விடிந்தும் விடியாத அந்த அதிகாலை பொழுதில் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி முன்பு நின்று நகத்தை கடித்துத் துப்பிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
அவன் கண்கள் நொடிக்கொருமுறை கைக்கடிகாரத்தையும், காலேஜ் வாசலையும் தீண்டிக் கொண்டிருந்தது. அதீத படபடப்பில் அவன் கால்கள் தாளம் போட்டுக் கொண்டிருந்தது.
அவன் அலைபேசி அதிர்ந்து ‘இம்சை’ என ஒளிர்ந்தது. அவன் வாய் எப்பொழுதும் உதிர்க்கும்...
அதிர்ச்சி! பேரதிர்ச்சி! ஒரு அலை ஓய்வதற்குள் கரை தொடும் அடுத்த அலையை போல் ஒன்றன் பின் ஒன்றாய் வந்த பேரதிர்ச்சிகள்!
அர்ஜுன் தன் அறையில் சோர்வாய் படுத்திருந்தான்.
ஒருவேளை அவள் அவனிடம் நாக்கை பிடுங்குவது போல் நாலு கேள்வி கேட்டிருக்கலாம்......
அல்லது கன்னத்தில் ஓங்கி அரைந்திருக்கலாம்..........
அன்று அலைபேசியில் பேசும்போது, உனக்கு காதல் தோல்வி ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேனே,...
‘பக்கி! நான் என்ன சொன்னேன்னு அப்படி சிரிச்சிட்டு போச்சு? லூசு....கடன்காரா......ராட்சசா.....உலகத்துல எத்தனையோ பசங்க இருக்கும் போது நான் ஏன் இவனை போய் லவ் பண்ணி தொலைச்சேன்? தப்பு என் மேல தான். அன்னைக்கு முதல் தடவை என்னை பார்த்தப்போ சிடுசிடுன்னு மூஞ்சியை வச்சிட்டு எனக்கு அரசியல் தான் முக்கியம்னு சொன்னப்பவே போடா போனு விட்டுருக்கனும்....
“இது ரொம்ப சின்ன கடையா இருக்குதுங்களே? இதுக்கு போய் ஐயாயிரம் வாடகைனா எப்படிங்க? கொஞ்சம் யோசிச்சு பாருங்க”
தர்மன் அவருக்கு பொறுமையாக பதிலளித்தான், “இல்லைங்கண்ணா! கடை இருக்கிற இடத்தை வச்சு தானே ரேட் ஃபிக்ஸ் பண்ண முடியும். இது சென்டரான ஏரியா. நிறைய ஆட்கள் வந்து போற இடம். நீங்க வைக்க போறது டீக்கடை. அதனால...
அர்ஜுனும் யக்ஞாவும் தங்களை ஒரு அழகான வாழ்வியலுக்கு உட்படுத்த, ஒரு ஆண் மகவை பெற்றெடுத்தனர். ஏற்கனவே இரு பெண்களின் வாழ்க்கை கூண்டு கிளியாய் மாறிவிட்ட காரணத்தாலோ என்னவோ கடவுள் அந்த வீட்டுக்கு மற்றுமொரு பெண் மகவை கொண்டு வரவில்லை. தான் மனதார வணங்கும் மூகாம்பிகையே தனக்கு மகளாய் பிறக்க பத்மஜா தவமிருக்க, அவருக்கு...
சேலம் பிரதான இடத்தில் அமைந்திருந்த அந்த மூன்று தளங்களைக் கொண்ட வீட்டின் முன்பு கொழு கொழு லேப்ரடார் ஒன்று கூடியிருந்த சொந்தங்களை பார்த்து வெகு நேரமாக குறைத்துக் கொண்டிருந்தது.
அந்த வீட்டின் முன்பு வந்து நின்ற மெரூன் நிற எர்ட்டிகாவிலிருந்து கம்பீரமாய் இறங்கினார் மாப்பிளை அர்ஜுன் எம்.பி. அவன் பின்னால் அவனின் மித்ரன் இறங்க, அவர்கள்...
தெரு முனையிலிருந்த பூங்கா கொரோனா காரணமாக மூடப்பட்டிருக்க, வெளியிலிருந்த நடை மேடையில் அமர்ந்திருந்தனர் அர்ஜுனும், யக்ஞாவும்.
முகத்தில் எந்த சலனமுமின்றி யக்ஞா அமர்ந்திருக்க, அவளருகில் அவளை தலை முதல் கால் வரை அங்குலம் அங்குலமாய் அளந்தவாறு அர்ஜுன்! முன்பே யக்ஞா நெடுநெடுவென ஒல்லி தான். இப்பொழுது மேலும் மெலிந்திருந்தாள். கன்னங்கள் ஓட்டி, கண்கள் சுருங்கி சோர்ந்து...
அவர் சென்றதும், “ஏன்டா? நீயே போய் சாப்பாடு எடுத்து போட்டு சாப்பிடலாம்ல? உனக்கு தட்டு கொண்டு வந்து கொடுக்கிறாங்க, அதுலேயே கை கழுவுற, அப்புறம் குடிக்க தண்ணி எடுத்துட்டு வராங்க. ஊட்டி மட்டும் தான் விடலை. வயசாயிடுச்சுல அவங்களை இப்படி கஷ்ட்டபடுத்தலாமா?”
“கஷ்டம்னு அவங்க உன் கிட்ட சொன்னாங்களா? போடா, அட்வைஸ் அறுவை ஆறுமுகம்!”
“ம்ம்கும்! நீ...
“மம்மி இப்போ என்ன ஆச்சுன்னு அழுவுறீங்க? அதான் கரெக்ட் டயத்துக்கு அண்ணா வந்துட்டாருல”
தர்மன் அறைக்குள் நுழைந்தான்.
“மம்மி! புரிஞ்சிகோங்க மம்மி. ஆபிஸ்ல வேலை ரொம்ப ஜாஸ்த்தி. விட்டுட்டு கிளம்ப முடியல. அதான் இன்னைக்கு காலையிலே கிளம்புனோம்”
“டேய் போடா போக்கத்தவனே! பெரிய புடலங்காய் வேலை! என்ன பெரிய வேலை செஞ்சு கிழிச்சிட்ட நீ? இந்த வயசுலேயும் தினம்...
திருமண உடைகளை வாங்கியபின், நகைக்கடைக்கு சென்று தாலிக் கொடி வாங்கினர். பத்மஜா அதை தன் செலவென்று கூறினார். திருமணத்திற்கான செலவுகளை சமாளிக்க, அவரது ஜி.பி.ஃஎப் (GPF) பணத்தை எடுத்திருந்தார். பத்து பவுனில் தாலி சங்கிலி வாங்க, அது பார்க்க பெரிதாய் இருந்தது.
“இதை பாரு மா. இது நல்லா பார்க்க பளிச்சுன்னு இருக்குதுல?” யக்ஞாவிடம் அவர்...
கீ கொடுத்த பொம்மையை போல் வந்து ஏறியவன் பத்மஜாவை எதிர்த்து ஒரு வார்த்தை பேசினானில்லை. அதற்கு காரணம் யக்ஞா! ‘நான் உங்களை நம்பினேன் எம்.பி’ என்பதை தவிர அவள் எதுவும் பேசாததே அவனை பொம்மை போல் ஆட்டி வைத்தது. அவளே எதுவும் பேசாத போது, பத்மஜாவிடம் மல்லுக்கு நின்று என்ன நடந்துவிட போகிறது??
வீட்டுக்கு வந்ததும்...
மித்ரன் காரை இயக்கிக் கொண்டிருக்க, கார் வேகமாக சீறி பாய்ந்துக் கொண்டிருந்தது. அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த தர்மனின் கண்கள் சிவந்து கன்றியிருந்தது. பின் இருக்கையில் மலயனாதன்!
தர்மனது அலைபேசி ஒலிக்க பதற்றத்துடன் அதை எடுத்தான்.
“சுச்சி! மம்மி வந்துட்டாங்காளா? அங்க தானே இருக்காங்க?” அவன் குரல் நடுங்கி, டன் கணக்கில் எதிர்பார்ப்பு வழிந்தோடியது.
“இல்லை பா. நீங்க அத்தையை...
“அப்பா! மம்மி! ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? எல்லாரும் நம்மளை தான் பார்கிறாங்க”
“அதை அந்தாளு கிட்ட சொல்லு”
“அவ கிட்ட சொல்லு. நான் என்னாச்சுனு தானே கேட்டேன்? அவ தான் ஓவரா பேசுறா. தூக்கி அடிச்சிடுவேன்”
“என்னாச்சுங்க? ஏதாச்சும் பிரச்சனையா?” வெகு நேரமாக இவர்கள் ஐவர் முகத்தை பார்த்துக்கொண்டிருந்த பெண்ணின் தந்தை குரலில் தீவிர கலவரம்.
“அதெல்லாம்...
“என்னால முடியலைமா! என்னால ரசிக்க முடியல. சிலருக்கு அவங்க ஊர்ல கடல் இருக்காது. எப்பவாச்சும் ஒருக்க தான் கடல் பார்பாங்க. அவங்களுக்கு அந்த கடல் ஒரு பெரிய ஆச்சரியம், அதிசயம்! அவங்க கடலை ஆராதிப்பாங்க! ஆனால் கடல் இருக்கிற ஊர்ல பிறந்து வளர்ந்தவங்களுக்கு அது ஒரு பொருட்டாவே தெரியாது. அதை தூக்கிக் கொண்டாட மாட்டாங்க....
வெளியே வந்து புல்லட்டில் சாவியை நுழைக்க போனவன் நினைவில், கண்களில் நாணமும், எதிர்பார்ப்பும் போட்டி போட அவள் நின்றதும், ‘உங்க கூட பைக் ரைட் நான் ரொம்பவே மிஸ் பண்றேன்’ என்றதும் அவன் நினைவுக்கு வர, ஒரு வித ஆற்றாமை அவனை அண்டியது. ஏனோ அந்த புல்லட்டை இயக்க அன்று அவன் மனம் வரவில்லை,
மறுபடியும்...
“அம்மா! உன் புருஷன் பண்ணுறது கொஞ்சம் கூட நல்லா இல்லை”
“மரியாதையா பேசு”
“புள்ளைங்க மட்டும் தான் பெத்தவங்களுக்கு மரியாதை கொடுக்கணும்னு இல்லை, பெத்தவங்களும் புள்ளைங்களுக்குள்ள மரியாதை தரனும் தானே?”
“சரி! இனிமே உன்னை வாங்க சார், போங்க சார் என்னங்க சார்னு பேச சொல்றேன்”
“மரியாதைங்கிறது வார்த்தைல மட்டுமில்லைமா. செய்யுற செயல்ல இருக்குது”
“அப்படி என்ன செயல் செஞ்சிட்டாரு அவரு?”
“எனக்கு...
இரண்டு நாளாய் தர்மனிடம் அமைதி காத்து வந்தார் பத்மஜா. இந்த அமைதி தர்மனுக்கு ஒரு பயத்தை உண்டு பண்ணியது. இதற்கு பின்னொரு பூகம்பம் உண்டென்பதை அவன் மனம் உணர்ந்தேயிருந்தது.
அன்று அந்த பூகம்பம் வெடித்தது!
அலுவலிலிருந்து திரும்பிய பத்மஜா முகம் மலர தர்மனிடம் வந்தார்.
“கண்ணு”
“மம்மி! சொல்லுங்க மம்மி”
“கண்ணு! உன் கஷ்டமெல்லாம் தீர போகுது கண்ணு. இனிமே எல்லாம்...
“மம்மி! கல்யாணம் ஆன இந்த எட்டு வருஷத்துல ஒரு தடவை கூட அவ உங்களை பத்தி என் கிட்ட தப்பா பேசுனதே இல்லை, நானே ஏதாவது பேசுனாலும், பரவாயில்லை கவலைப்படாதீங்க விடுங்கனு தான் சொல்லுவாளே தவிர உங்களை பத்தி ஒரு வார்த்தை தப்பா பேச மாட்டா. எவ்ளோ வருஷம் ஆனாலும் என்னையும் நீங்க புரிஞ்சிக்கலை,...
பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சீறிக் கொண்டிருந்தது அந்த புது சிவப்பு நிற சான்ட்ரோ.
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
யுவன் சங்கர் ராஜா இசைத்துக் கொண்டிருக்க, காரை ஓட்டிக் கொண்டிருந்த தர்மனின் உதடுகளில் ஒரு அலட்சிய புன்னகை. மாநிறம், சராசரி உயரம், பூசிய உடல்வாகு, எளிமையான...
“என்னாச்சு பா? ஒரு மாதிரி டென்ஷனா இருக்க?”
“ஒண்ணுமில்ல அண்ணி”
“அட! எனக்கு தெரியாததா அர்ஜுன்?! சும்மா சொல்லு. உனக்கு சொல்ல பிடிக்கலைனா வேண்டாம்” அர்ஜுனுக்கு காபியை கொடுத்தவாறே எம்.எல்.ஏவின் மனைவி அவனை வினவ,
“இல்லை அண்ணி. கல்யாணம் பண்ணி வைக்கிறேனு சொல்லிட்டு டார்ச்சர் பண்றாங்க. வீட்ல இருக்கவே எரிச்சலா வருது. தினம் தினம் சண்டை தான்”
“என்ன செய்ய...