Sunday, August 2, 2026

    புயல் காற்றில் விளக்காகவே

    PKV 97 3

    0
    ‘உன்னால தான். உன் தப்பு தான்’ சல்மா சொன்னதின் தாக்கம் குறையாமல் இருந்தாலும், ருஹானா இவானை மடியில் படுக்க வைத்து அவன் தலையை வருடியபடி அவனை தூங்க வைக்க முயன்றாள். “அம்ஜத் பெரியப்பா சொன்னது போல நாம ஒளிஞ்சிக்கலாம், சித்தி!” இவான் சொன்னதைக் கேட்டபடியே உள்ளே வந்த ஆர்யன் முகத்திலும் கவலை பரவிக் கிடந்தது. “அது தப்பு...

    PKV 97 2

    0
    ருஹானாவை சோபாவில் அமர வைத்து ஆர்யன் பக்கத்தில் இருந்து அவளை தேற்றிக் கொண்டு இருந்தான். “என்னை பாரு. நீ தப்பு எதும் செய்யல.” அவள் அழுவது அவனுக்கு துன்பத்தை தந்தாலும், அவள் அவனுடைய கைக்குட்டையால் முகத்தை துடைப்பது அவனுக்கு இதமாக இருந்தது. “நான் இவானை வச்சி ரிஸ்க் எடுத்துட்டேன். இதெல்லாம் நான் முன்னமே யோசித்திருக்கணும்.” “நீ தைரியமா...

    PKV 97 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 97 சமூகசேவை நிறுவனத்தின் இரு பெண் அதிகாரிகளும் நேரிடையாக விசாரணையை ஆரம்பித்தனர். “எவ்வளவு நாளா இங்க இருக்கீங்க, ருஹானா மேடம்?” “கொஞ்ச நாளாக தான்” என்றாள் ருஹானா கூம்பிய முகத்துடன். “உங்க கிட்டே அப்புறம் பேசுறோம். இப்போ இவான் அர்ஸ்லானை நாங்க பார்க்கணும்” “நான் போய் கூட்டிட்டு வரேன்” என சொல்லிவிட்டு, ஆர்யனை ‘எதாவது...

    PKV 96 3

    0
    தயங்கியபடி ஆர்யன் அறைக்குள் வர, அது காலியாக இருந்தது. “உன் சித்தப்பா இல்ல, நாம அப்புறம் வரலாம், கண்ணே!” வேகமாக சென்றுவிட முயன்றாள். “இந்த மேசையில வைக்கவா சித்தி? சித்தப்பா வந்து பார்க்கும்போது சர்ப்ரைஸா இருக்கும்” “சரி தான் தேனே!” “பறந்து போயிடுமோ? இந்த ட்ராயர் திறந்து வைக்கறேன், சித்தி!” என இவான் இழுப்பறையை திறக்க, ருஹானா பதறிப் போய்...

    PKV 96 2

    0
    “இரு பகுதியாய் இருந்த நாங்கள் இருவரும் ஒன்றாக முயற்சித்தோம். காதல் என்று சொல்வார்களே அது இது போல் தான் இருக்குமோ என வியந்து போனேன். ஒன்றாக இணைவோமா? காலம் கடந்த அமரத்துவம் அடைவோமா?” அப்போது சரியாக சல்மா கதவருகே வந்து நின்று ஒட்டுக் கேட்டாள். அவளுக்கு ஆர்யன் சொல்வது கேட்காவிட்டாலும், அவனது கனிவான குரலும், அவன்...

    PKV 96 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 96 பர்வீனை வழியனுப்பி விட்டு வந்த ருஹானா வாசலில் நின்ற ஆர்யனை பார்த்து திருதிருவென விழித்தாள். தாங்கள் பேசியதை அவன் கேட்டுவிட்டானோ என அச்சம் கொண்டாள். “நான்.... நீங்க வீட்டுக்குள்ள போயிட்டீங்கன்னு நினைச்சேன்” “வெளிக்காற்று வாங்கலாம்னு வந்தேன்” என அவன் அவள் முகத்தை உற்று பார்த்துக்கொண்டே சொல்ல, அவள் “நீங்க என்கிட்டே...

    PKV 95 3

    0
    பர்வீன் வீட்டிலிருந்து எடுத்து வந்த பொருட்களை ஒவ்வொன்றாக ருஹானா கட்டிலில் எடுத்து வைத்து பார்த்துக்கொண்டிருந்தாள். ஆர்யன் வந்து வாசலில் நின்று அவள் மகிழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தான். “நீங்க எப்போ வந்தீங்க? நான் உங்களை கவனிக்கலயே!” “இப்போ தான் வந்தேன். இத்தனை நேரம் இவான் கூட இருந்தேன்.” ‘நான் போய் இவானை தூங்க வைக்கணுமே!” என அவள் நகர, “இன்னைக்கு நீ...

    PKV 95 2

    0
    நடந்து போய் வேறு சோடாவை கொண்டுவந்தவன், கேட்டவன் அருகே அதை சத்தம் வருமாறு வேகமாக வைத்தான். “குளிர்ச்சியா இருக்கா?” என்றும் கேட்டான். “எனக்கு புரியல, ஆர்யன் சார்” என சொல்ல “சோடா. நீங்க கேட்டது போல ஜில்லுனு இருக்கா?” என ஆர்யன் கேட்க, சோடாவை வாங்கியவன் நன்றி சொன்னான். ருஹானாவிற்கு உள்ளே சந்தோசம் பொங்கியது. தன்னை ஏவுவது...

    PKV 95 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே                                                             அத்தியாயம் – 95 அன்னையின் புகைப்படத்துடன் தன்னருகே ஓடிவந்தவளை ஆர்யன் ஆர்வமாக பார்க்க, ருஹானா அவன் முகத்தை பார்த்து கண்களும், உதடுகளும் சிரிக்க ஆனந்த கண்ணீருடன் நின்றாள். “நான்....... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. உங்களுக்கு மனமார நன்றி சொல்றேன். என்னோட அம்மாவோட நான் திரும்ப சேர்ந்த மாதிரி இருக்கு” என்று சொல்லி...

    PKP 94 3

    0
    “அக்கா! இங்க ஒன்னும் கிடைக்கல. ஆர்யன் ஆபீஸ்க்கும் வரலயே? அவ வீட்டுக்கு திரும்பிட்டாளா?” “இல்லயே! ஒருவேளை ரெண்டுபேரும் லாயரை பார்க்க போயிருப்பாங்களா, சல்மா? சரி நான் அதை கண்டுபிடிக்கிறேன். நீ அங்க பார்” என போனை வைத்த கரீமா, அங்கே வந்த இவான் அருகே போனாள். “இவான் நீ உன் சித்தியை தேடுறியா?” “ஆமா” “வா, நாம உன் சித்தி...

    PKP 94 2

    0
    மருத்துவ பரிசோதனைக்கு பின் ஆர்யன் ருஹானாவை பர்வீன் வீட்டில் இறக்கி விட்டான். “டாக்டர் உங்க காயம் ஆறிடுச்சின்னு சொன்னா கூட நீங்க மெத்தனமா இருக்கக்கூடாது” என ருஹானா அறிவுறுத்த, ஆர்யன் “சரி, நான் கவனமா இருக்கேன்” என மகிழ்ச்சியாக கேட்டுக்கொண்டான். அதற்குள் அங்கே வாசலில் ஓடிய ஒரு பூனை ருஹானாவின் அருகே வந்து அவளை உரசியது...

    PKP 94 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 94 “நீ வித்தியாசமானவள்” என ஆர்யன் அவள் பெயரில் தான் செய்த கம்பெனியின் பங்கு மாற்றத்திற்கான காரணத்தை சொல்ல, அத்தனை நேரம் ஓங்கிய குரலில் பேசிக்கொண்டிருந்த ருஹானா மறுமொழி கூறாமல் அவன் பேசுவதை கேட்கலானாள். “எல்லாரும் இவானை விட்டுடுவாங்க. ஆனா நீ விட மாட்டே. என்ன நடந்தாலும் விட மாட்டே! ஏன்,...

    PKV 93 3

    0
    மிஷால் சொன்ன இடத்தில் காத்திருக்க, காரை நிறுத்தி இறங்கிய ஆர்யன் காயம் காரணமாக மென்னடை என்றாலும் கம்பீரமாக மிஷாலின் எதிரே வந்து நின்றான். “நான் வந்திட்டேன். என்ன வேணும் உனக்கு?” “நீ சிறைக்கு போனதுக்கும், உனக்கு அடிப்பட்டதுக்கும் நான் தான் காரணம். காரணம்னா நேரிடையான காரணம் இல்ல. உன் இடத்துல ரெய்டு நடக்கப்போகுதுன்ற தகவலை மட்டும் உன்...

    PKV 93 2

    0
    சல்மாவிடம் அலுவலக நிலவரத்தை கேட்டுக்கொண்ட கரீமா, உணவு மேசையில் அமர்ந்தபடி இங்குள்ளதை அவளுக்கு தெரிவித்தாள். நஸ்ரியா வரவும் பேச்சை நிறுத்தி போனை அடைத்தாள். “ருஹானாக்கு தட்டு வைக்க மறந்திட்டியா, நஸ்ரியா?” “லிட்டில் சாரும், ருஹானா மேடமும் ஆர்யன் சார் கூட அவரோட அறையில சாப்பிடுறாங்க” “ஓஹோ! அப்படியா! சரி நீ போ” “அன்புப் பரிசு, சேர்ந்து உணவு, கம்பெனில பங்கு.......

    PKV 93 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே                                                             அத்தியாயம் – 93 ஆர்யன் தன் கையில் கொடுத்த முடிவிலி சின்னத்தின் மேற்புறத்தை ருஹானா அவனைப் போலவே விரல் கொண்டு தடவினாள். அத்தனை மூர்க்கமாக இருந்த ஆர்யன் இத்தனை சாத்வீகமாக மாறியதை கண்கூடாக கண்டவளுக்கு தனது ஆனந்தத்தை வெளிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. அனிச்சையாக உதட்டில் புன்னகை மலர்ந்தது. முடிவிலி பற்றி அறிந்து கொண்டதாக...

    PKV 92 3

    0
    அந்த சமயம் அவள் உள்ளே வந்தாள். “பிடித்ததா புத்தகம்? உடம்பு சரியில்லாதபோது படிக்க வேண்டிய புத்தகம் இல்லை இது.” “ஆமா, நல்லா இருக்கு. சில பக்கங்கள் புரட்டினேன். படுத்த நிலையில் படிக்க சிரமமாய் இருக்கு. உன்னால எனக்கு வாசித்துக் காட்ட முடியுமா.?” தயங்கினாலும் அவன் எதிரே கட்டிலில் அமர்ந்தாள்.. படிக்க வசதியாக இல்லாத ஆர்யனுக்கு அவளை பார்க்க மட்டும்...

    PKV 92 2

    0
    “சித்தப்பா மெல்ல வாங்க. கட்டிலை பிடிச்சிக்கங்க. மெதுவா உட்காருங்க.” “இப்படியா?” என கேட்ட ஆர்யன் தன் குளிராடையை கழட்ட, ருஹானா பின்னால் இருந்து அதை வாங்கிக் கொண்டாள். “அதிகமா குனியாதீங்க. வயிறு வலிக்கும். மெதுவா படுங்க” என இவான் கட்டளைகள் இட, மருந்து மாத்திரைகளை கையில் வைத்திருந்த ருஹானா அதை சிரிப்புடன் பார்த்திருந்தாள். கட்டிலில் மெல்ல சாய்ந்த ஆர்யன்...

    PKV 92 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே                                                             அத்தியாயம் – 92 ஆர்யன் ருஹானாவை வரவழைத்த மருத்துவமனையின் மேல்தளம் அமைந்த பகுதி மனதை கொள்ளை கொள்வதாக இருந்தது. பெரிய நதி ஒன்று இரு மலைகளுக்கு நடுவே ஓடி கடலை சென்றடையும் காட்சி பின்னணியில் தெரிந்தது. நீல வானமும், நீல கடலும் தொட்டு தழுவ, வானில் பறக்கும் பறவைகள் நாவாய்களாக தெரிய, நீரில்...

    PKV 91 2

    0
    மருத்துவமனையின் வெளிப்புறம் தோட்டம் போல இருந்த பகுதியில் நீள பென்ச் ஒன்றில் அமர்ந்திருந்த ருஹானா “ப்ளீஸ்! எழுந்திருங்க” என சொல்லிக்கொண்டே இருந்தாள். மருத்துவமனைக்கு வந்த தன்வீர் உள்ளே நுழையப் போனவன் அவளை பார்த்துவிட்டு அங்கே வந்தான். “ருஹானா! அர்ஸ்லான் எப்படி இருக்கார்?” “இன்னும் கண் திறக்கல. தீவிர சிகிச்சை பிரிவுல தான் வச்சிருக்காங்க. நிஸாம் அறிக்கை கொடுத்ததும்...

    PKV 91 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 91 எதிரி காதரின் ஆட்களால் காயம் பட்ட ஆர்யனை, மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக நகரும் படுக்கையில் கூட்டிச்செல்லும் வேளையில் ரஷீத்தும், ருஹானாவும் வந்துவிட்டார்கள். ஆர்யன் கூடவே ஓடிச் சென்ற ருஹானா “தயவுசெய்து திரும்பி வாங்க!” என கண்ணீர்க்குரலில் சொல்ல, அரை மயக்கமாக இருந்த ஆர்யன் கண்விழித்தான். “நான் இங்க தான் இருக்கேன்....
    error: Content is protected !!