VK
*3*
“அம்மு..”
பதட்டத்துடன் மூச்சிரைக்க ஓடிவந்து நின்ற ராகவ் கார்த்திக் பிடியில் இருந்த மீராவை தன் மேல் சாய்த்துக் கொண்டு அவளின் கன்னத்தை தட்டி எழுப்ப, அவளோ சுயநினைவில் இருப்பதைவிட மயக்கத்தில் இருப்பதே மேல் என்று நினைத்தால்போலும் இமைகளை பிரிக்க மறுத்தாள்.
தன் படபடப்பில் கார்த்திக்கை துளியும் கண்டுகொள்ளாமல் அம்மு அம்முவென்று மீராவின் கன்னங்களை மீண்டும் மீண்டும் ராகவ்...
கார்த்திக் கையசைத்து வெளியே செல்லும்படி சைகை செய்ய, பாண்டியனை அங்கேயே விட்டுவிட்டு அந்த அதிகாரி வெளியே சென்றுவிட, மீராவின் நினைவு அடுக்குகள் அவனை இனம்காண வேகமாய் தனக்குள் அலசியது.
முழு கை கட்டம் போட்ட சட்டையில் மேல் இரண்டு பட்டன்கள் கழற்றப்பட்டு, நடையில் ஒரு நேர்த்தி இல்லாமல் ஏனோதானோவென்று வந்த பாண்டியன் பொத்தென்று மீரா எதிரில்...
“அதுக்கில்லை சார்... இப்போ தான் நீங்களே மாற்றலாகி இங்கே வந்திருக்கீங்க, வந்தவுடனேயே சிக்கலில் மாட்டுறீங்களே…”
“சிக்கலுக்கும் பிரச்சனைகளுக்கும் பயந்தா இந்த வேலையில் இருப்பதற்கே தகுதியில்லை. அவனுங்க தனியா ஒரு App உருவாக்கி அதில் முன்பதிவு செய்து பண்டமாற்று முறையைப் போல தங்களுடைய காதலியையோ மனைவியையோ மாற்றிக்கிட்டு(swap) செஞ்சு உல்லாசமா இருக்கானுங்க. அந்த பெண்களும் எல்லாத்தையும் தெரிஞ்சி...
*1*
அழலில் அமிழ்ந்தெழுந்த சொற்கள்
அமிலத்தில் உழலும் உலகம்
எதிரிகளான நண்பர்கள்
கானல் நீரான காதல்
அந்நியர்களான பெற்றோர்
இதில் தொலைந்தேன் நான்
மீளமுடியாமல்.
-மீரா.
“மீரா... மீரா…”
தன் பெயர் ஏவப்படும் அரவம் செவியில் விழுந்து கருத்தில் பதிய எழுதுவதை அக்கணமே நிறுத்தியவள், தன் நாட்குறிப்பை மூடி அதை தன்னெதிரே இருந்த மேசை இழுவையில் வைக்காமல் சிந்தை தப்பி ஏதோவொரு நினைவில் தன் அலமாரியை திறந்து தன்...
“அந்த ஆள் லேசுப்பட்டவன் மாதிரி தெரியல. இதை இப்படியே விடமாட்டானு நினைக்கிறன். ஏதாவது செய்யணும். இந்த விஷயத்துக்காகவே நான் கார்த்திக் சாரை போய் பார்க்கலாம்னு இருக்கேன். அவரும் நல்லமனிதரா தெரியுறார். இந்த வாய்ப்பை கெட்டியா பிடிச்சிகனும். நாளைக்கே நான் அவரை போய் பார்க்குறேன். இந்த மாதிரி நேரத்தில் நமக்கும் பெரிய பதவியில் இருக்குறவங்க ஆதரவு...
மீராவோ அந்த வரதனை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டதை பற்றி சரமாரி கேள்வியெழுப்பி வசவுகளை வீசுவார்கள் என்று எதிர்பார்த்திருக்க ராகவ் கேட்ட கேள்வியில் சற்று நிதானித்து எந்தவித உணர்ச்சியும் காட்டாது சிலையென நிற்க, ராகவ் அவள் எதிரே வந்து அவள் முகத்தில் ஏதும் உணர்ச்சி தென்படுகிறதா என்று ஆராய்ந்தான்.
“வீட்டை விட்டு வெளியே போய் வெளியுலகோடு பழகணுங்கிற...
*2*
“எப்போதும் செய்ற மாதிரி தான். இந்த விஷயம் தம்பிக்கு தெரியாமல் பார்த்துக்கணும். யாரிடமும் இதைப் பற்றி மூச்சு விடக்கூடாது. அதோட இ.சி.ஆரில் இருக்கும் நம் பங்களாக்களில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் ஒரு பங்களாவை சுத்தம் செய்யச்சொல். கொஞ்ச நாள் என்னோட கட்டுப்பாட்டில் அந்த பங்காளவில் இருக்கட்டும் பிறகு அவளை எங்கு அனுப்பனுமோ...
“குற்றவுணர்ச்சியும் ஒரு காரணம் தான், நான் மறுக்கல... ஆனால் அதுமட்டுமே காரணமில்லை. வேலையிலிருந்து எல்லாத்துலேயுமே எங்க ரெண்டு பேருக்கும் நல்லா ஒத்துபோகும்னு தோணுச்சு. வேண்டாம்னு சொல்ற மாதிரி வேற எந்த ரீசனும் இல்லையே… எங்க வாழ்க்கை சம்மந்தமா நான் எடுத்த இந்த முடிவை செயல்படுத்த எனக்கு கொஞ்ச காலஅவகாசம் தேவைப்பட்டுச்சு. திடீர்னு எல்லாம் மாயம்...
அவர் செல்வதையே பார்த்த மீரா தோள்களை குலுக்கி விட்டு பார்வையை திசையெட்டுக்கும் விரட்டினாள். அவள் கண்ணில் மலை தீபத்தை எதிர்பார்த்தபடி பார்வையை உயர்த்தி கம்பீரமாய் நிற்கும் மலை மீது பதித்து காத்திருக்கும் பல தரப்பட்ட மக்கள் கூட்டம் தென்பட, மனம் நிர்மலமாய் இருந்தது.
“மேடம்… நாங்க இங்க லோக்கல் சேனல்லேந்து வர்றோம்… பேசலாமா?” என்று ஒரு...
*8*
தன் கரங்களிலேயே மயங்கிச் சரிந்த மனைவியைக் கண்டு பதறியவன் அவளை தன் இடப்பக்கம் சாய்த்துக்கொண்டு தாங்கினான். மறுகரத்தால் அவள் கன்னம் தட்டி அழைத்தவன் அவளை எழுப்ப முயன்று தோற்றவனாய் தண்ணீரும் அவளுக்கு கொடுத்துப் பார்த்தான். ஒன்றுக்கும் அவள் மசியாது போக, தாமதியாது தனக்கு நன்கு தெரிந்த ஷோபாவிடம் அழைத்து வந்துவிட்டான். அவர்களின் முதல் சந்திப்பில்...
“பொய். எல்லாம் பொய். இன்னைக்கு நான் எந்த மறுப்பும் சொல்லக்கூடாதுன்னு இப்படி சொல்ற. எங்க உன் மனசை தொட்டு சொல்லு, நான் அழகா? நான் அழகா? இப்படி ஒருத்தியை நீ உன் பையனுக்கு பார்த்து கட்டிவைப்பீயா?” என்று மீரா சட்டென்று பிறந்த ஆவேசத்தில் எகிற, அம்புஜம் தன் முந்தியால் வாயை மூடி வெடித்து கிளம்பும்...
அவளின் உயர்ந்த குரலுக்கு போட்டியாய், “ஆமாம் வந்து தான் ஆகணும்.” என்று ஒலித்த கணீர் குரல் ராகவின் வருகையை தெரியப்படுத்தியது.
“டோன்ட் ட்ரை டூ பிளேக்மைல் மீ.” என்று முன்னெச்சரிக்கையாக மீண்டும் வீம்புப்பிடித்து வாதாடினாள் மீரா.
“ஐ கேன்.” என்றான் அவனும் திட்டவட்டமாய்.
“என்னதான் வேணும் உங்களுக்கு? என்னை ஏன் என் விருப்பப்படி இருக்கவிட மாட்டேங்குறீங்க?” என்று அவனுக்கு...
விக்கிறதுக்கு இவ என்ன பொருளா? இவளும் உங்களை பெத்து வளர்த்த உங்கம்மா மாதிரி, உங்க கூட வாழ்ந்த என் அம்மா மாதிரி ஒரு பொண்ணு தானே. அது ஏன் உங்களுக்கு புரியல? ஒருவேலை நான் பையனா பிறந்ததாலதான் இவ்வளவு ஆணவம் பிடிச்சு ஆடுறீங்களா? உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தா இப்படியெல்லாம் செய்வீங்களா…” உணர்ச்சி வேகத்தில்...
“எதுக்கு சரண்டர் ஆகுறீங்கன்னு கேட்டதுக்கு அவர் எதுவுமே சொல்லாம அப்டியே அங்க அமைதியா உட்கார்ந்து இருந்தாராம். கொஞ்ச நேரத்தில் மயங்கி விழுந்துட்டாராம்… ஹாஸ்ப்பிடலில் சேர்த்திருக்காங்கன்னு போன் வந்துச்சு… பிபீ, சுகர் டேப்லெட் எல்லாம் தேவைக்கதிகமா சாப்பிட்டுட்டு தான் போலீஸ்கிட்ட போயிருக்காரு. க்ரிட்டிகலா இருக்காராம்… ஏற்கனவே… லிவர்ல பிரச்சனை இருக்கு… பொழைக்கிறது கொஞ்சம் கஷ்டம்தானாம்...” என்கவும்...
“கார்த்தி கையை கீழிறக்கு முதல்ல... நீ எதுக்கு இந்த ஒன்னுமில்லாதவ முன்னாடி கைகூப்பி நிக்குற…” வஞ்சம் வெளிப்பட வரதனின் குணம் மெல்ல எட்டிப் பார்த்தது.
“என்ன ஒண்ணுமில்லாதவளா... என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க? இவ்வளவு பெரிய பையன் இருக்கான், அவனுக்கு கல்யாணம் பண்ணுகிற வயசில் நீ செய்யுற காரியம் தான் அநாகரீகமானது.” மகளை மட்டம் தட்டவும்...
*13*
“என்ன சொன்னாங்க? வீட்டுல இருக்காரா இல்லையா?”
அலைபேசியில் பேசி முடித்துவிட்டு யோசனையுடன் புருவம் சுருக்கி நிற்பவனை நெருங்கியவள் அவன் தோள் தட்டி கேள்வி எழுப்ப,
“வெளியூர் போயிருக்காராம்… வர ஒருவாரம் ஆகுமாம்…” என்றான் நெற்றி சுருக்கி. இரவு வெகுநேரம் பேசிவிட்டு தாமதமாய் தூங்கியதன் விளைவாய் காலையும் தாமதமாய் எழுந்து குளித்து காலை உணவை மட்டுமே முடித்திருந்தனர். முடித்த...
*11*
கண்ணுக்கெட்டிய திசையெங்கும் துரோகத்தால் சூழ்ந்து கரை இருக்கும் திசையறியா ஆழத்தில் மூழ்கி உயிரை தக்கவைத்துக் கொள்ள தத்தளிப்பவனாய் மீராவை பற்றிக்கொண்டவன் அவளை நகரவிடவே இல்லை. முயன்று மிரட்டி அவனை மெத்தையில் அமரச் சொன்னவள் அவன் மறுக்க மறுக்க கேட்காது தட்டில் பிரியாணி எடுத்துவந்து அவனிடம் நீட்டினாள்.
வார்த்தையின்றி இடவலமாய் தலையசைத்து மறுப்பு தெரிவித்தவன் வீடுவந்து சேர்ந்துவிட்ட...
*12*
“ராகவா இது எல்லாம் சரியில்லை சொல்லிட்டேன். இப்போ நீ போய் கதவை தட்டுறீயா இல்லை நானே போவா?” பார்வை மூடியிருக்கும் மீரா அறையின் புறம் பதிந்திருக்க, முகத்தில் அப்பட்டமான அதிருப்தி வெளிப்பட்டது.
“அப்பா… இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்ப்போமே… தூங்குறாங்களோ என்னவோ!.” என்று ராகவ் சங்கடமாய் நெளிந்தான். அவனும் வந்ததிலிருந்து இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறான்,...
“என்னடி அம்மு இது? அந்தாளு என்ன லூசா? அவர் மேல எப்படி அவரே புகார் கொடுக்க முடியும்?”
“அதுதானே… அவருக்கு என்ன இந்த அந்நியன் அம்பி மாதிரி மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸ்சார்டரா?” என்று சுஜாவும் புருவம் சுருக்க,
“அவர லூசுன்னு சொல்ற நம்மளத் தான் லூசாக்க இப்படி பண்ணியிருக்காரு… பலநாள் திருடன் ஒருநாள் மாட்டுவான்னு அவருக்கு தெரிஞ்சிருக்கு....
*4*
“வேலைபளு அதிகமா இருக்கும் போது வந்து தொந்தரவு செய்துட்டனா சார்?” என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தான் ராகவ்.
அவனை இன்முகத்தோடு வரவேற்ற கார்த்திக் கையில் இருந்த கோப்புகளை ஒதுங்க வைத்துவிட்டு, இருக்கையை சுட்டிக்காட்டி, “முதல்ல உட்காருங்க. எங்க துறையில் எப்போ எந்த வேலை வரும்னு சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரம் பிரச்னைகள் வந்த...