Advertisement

*14*
மீராவின் சீண்டல் பேச்சில் கொதித்தெழுந்து கண்ணாடி மேசையை சுக்கு நூறாக்கியவர் மேல்மூச்சு வாங்கி ரெளத்திரமாய் வெறியேறி நிற்க, மீரா நிற்கவில்லை.
“பார்த்தாருன்னு சொன்னதுக்கே இப்பிடின்னா அப்போ… மீதியை சொன்னா… உயிரை விட்டிருவீங்களோ!” என்று எள்ளல் கூடி எலக்காரமும் சேர்ந்து கொள்ள, சூறாவலியாய் பிரளயம் உண்டாக்க கிளம்பியிருப்பவளை நிறுத்த எவரும் முனையவில்லை.
“என்ன திண்ணக்கம் இருந்தா என்கிட்டேயே இப்படி பேசுவ… உன்னை இத்தனை நாள் விட்டுவச்சதே பெருசு… நீயெல்லாம் என்னை பேசுறீயா?” என்று அவரும் எகிற, வாக்குவாதங்கள் வளவளவென இழுத்தாலும் தேவையான தகவல்களை நிதானமின்றி வாரியிறைத்தார் வரதன்.
“ஐயோடா… நீங்க என்னை விட்டுவச்சிருக்கீங்களா…! நான்தான் உங்களை இத்தனை நாளா சும்மா விட்டு வச்சிருக்கேன் வரதன்…” மீராவும் சுருதி இறங்காது அவரை கடுப்பேத்தினாள்.
“யாரு நீ! என்னை! டிப்ரெஷன் அதிகமாகி நிறைய கற்பனை செய்யுறீயா என்ன? இப்படி உளறுற?”
“நீங்க முக்கியமான ஒன்னை மறந்துட்டீங்க வரதன்… உங்க ஆசை மகன் இப்போ என் பக்கம். நான் ‘ம்’னா போதும் உங்க மகன் கையாலேயே உங்களை காலி பண்ண வைக்க முடியும்… செய்யவா?” என்று மீரா குரல் உயர்த்த,
“அது உன்னால முடியாது…” மகன் வெறுப்பாய் இருப்பது தெரிந்தாலும் சுப்பிரமணியம் திடமாகவே அவளை எதிர்த்தார்.
“ஹாஹா… உங்களுக்கு விஷயம் தெரியாத மாதிரியே பேசுறீங்களே… உங்க பையன் அதான் என் புருஷன் இப்போ என்னோட கட்டுப்பாட்டில் இருக்காரு… எப்படின்னு கேளுங்களேன்… உங்களை மாதிரி அதட்டி மிரட்டி கட்டுப்பட வைக்கலை. என் மனசுக்கு கட்டுப்பட்டு இருக்காரு. அவரை வச்சி என்னவும் என்னால செய்ய முடியும். உங்களால என்ன செய்ய முடியும்?” என்று பெருமையாகவே சவால் விடுத்தாள் அவள்.
அவளின் தைரியம் அவரை அசைத்துப் பார்க்க, அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், “உன்னால என்ன கிழிக்க முடியும்னு நானும் பார்க்குறேன்… நீ கிழிச்சதுக்கு அப்புறம் நான் என்ன பண்றேன்னு நீயும் பாரு… என் பையன் உன் பக்கத்துல இருக்காங்குற ஒரே விஷயம்தான் உன்னை இத்தனை நாள் உயிரோட வாழ விட்டுருக்கு… இல்லைன்னா இந்நேரம் எந்த சந்துலையோ நாறி போயிருப்ப…” என்று அமிலத்தை உமிழ்ந்தார் வரதன்.
அதுவரை அவரை சீண்டிக் கொண்டிருந்த மீரா அவரின் கடைசி வாக்கியத்தில் வெறி கொண்டவளாய் நாடி நரம்பு புடைக்க அவரின் கழுத்தை நெறிக்க சென்றுவிட்டாள்.
“உனக்கெல்லாம் எங்களை பார்த்தா எப்படி தெரியுது ஹான்? நீங்க ஏறி மிதிச்சு உங்க இஷ்டத்துக்கு எங்களை வளைச்சு உங்க தேவையை பூர்த்தி செய்யுற மிஷினா நாங்க? கொஞ்சம் சதை தெரிஞ்சா போதும் கற்பனையில் கூட பலவந்தப்படுத்தி உங்க இச்சையை தீர்த்துகிறவங்க தானே நீங்கெல்லாம்… உணர்வுகளும் உணர்ச்சிகளும் இல்லாத சதை பிண்டமாதானே எங்களை பார்க்குறீங்க நீங்க… பொண்ணுங்கன்னா அவ்வளவு இளக்காரம். உன்னை மாதிரி ஆளை எல்லாம் சும்மாவே விடக்கூடாது. உன் முகத்திரையை நான் கிழிக்குறேன். நீ செஞ்ச வேலைக்கான ஆதாரம் எல்லாம் என்கிட்ட இருக்கு. நான் போலீசுக்கு போவேன்… நீ செஞ்ச பாவத்துக்கான பலனை நீ அனுபவிச்சே ஆகணும்.” என்று அவள் சூளுரைக்க, அத்தனை நேரம் அவளை கொலைவெறியுடன் பார்த்துக்கொண்டிருந்த வரதன் அல்ப்பமாய் சிரித்து ஷோபில் கால் மேல் கால்போட்டு அமர்ந்தார்.
“ஹான் என்னமோ சொல்லிட்டு இருந்தீயே… தப்பு தப்பு… ஏதோ சபதம் எடுத்திட்டு இருந்தீயே என்ன அது?” என்று சாவுகாசமாய் காதில் விரல் விட்டு தேய்த்தவரை புரியாமல் பார்த்தாள் மீரா.
“ஹான் போலீசுக்கு போவேன்னு சொன்னீயே? போய்?… போய்… யார் மேல புகார் கொடுப்ப? வரதன் மேலையா? இல்லை தி கிரேட் பிசினஸ்மேன் சுப்பிரமணியம் பேருலேயா? யார் மேல கொடுப்ப? என்னனு கொடுப்ப? ஆள்மாறாட்டம்னு கொடுப்பீயா? ஆனா பாரேன் உனக்கு தொந்தரவு கொடுக்காம நானே வரதன் மேல புகார் கொடுத்துட்டேன்… சீக்கிரமே நீ சொன்ன போலீஸ் வரதனை கண்டுபிடிச்சி அவனை உள்ள தள்ளி நியாயம் வாங்கிக் கொடுப்பாங்க… என்ன இருந்தாலும் நீ என்னோட மருமகளா ஆகிட்ட, உனக்கு இதுகூட செய்யலைன்னா எப்படி…” என்று ஆணவச் சிரிப்பு சிரிக்க, அவரை அற்பமாய் பார்த்து முகத்தை சுழித்தவள் சட்டென்று நினைவு வந்தவளாய் முகம் தெளிந்து வேகமெடுத்தது அவளது ரௌத்திரம்.
“மனுஷன்னா கொஞ்சமாச்சும் வெக்கம் மானம் சூடு சொரணை எல்லாம் இருக்கணும்… தொலைஞ்சி போகுது, இந்த வெக்கம் மானத்தை எல்லாம் விடு… மனுஷத்தன்மையோடவா இருக்க நீ? என்ன சொன்ன நீ? என்னனு சொல்லி கேஸ் கொடுப்பேன்னு கேட்டீல்ல… குழந்தைகளை கடத்தி வியாபாரம் செய்யுறேன்னு நான் கொடுக்கப் போற புகாருக்கு பக்காவா என்கிட்ட ஆதாரம் இருக்கு… நீ என்னென்ன செஞ்ச,  பசங்களை கடத்தி என்னவெல்லாம் செய்யுறேன்னு இந்த உலகத்துக்கு போட்டு காட்டுவேன். ஏற்கனவே நான் கொடுத்த ஆதாரத்தால் உன் கடத்தல் தொழிலையே முடக்கிட்டேன். உன்னை முடக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்? பொழைக்க எவ்வளவோ தொழில் இருக்கு அதையெல்லாம் விட்டுட்டு உலகம் தெரியாத பிஞ்சு பசங்களை எவ்வளவு டார்ச்சர் பண்ணி இப்படி கோடி கோடியா சம்பாரிச்சு காரு பங்களா குடி கூத்துன்னு இருக்க, கொஞ்சமாச்சும் அந்த குழந்தைகளை நினைச்சி பார்த்தீயா?
உனக்கு உன் புள்ளை மட்டும் சொகுசா அலுங்கள் குலுங்கள் இல்லாம எல்லா வசதியோடையும் சுகமா பங்களால வாழனும்… ஆனா மத்தவங்களோட பசங்க மட்டும் உன்னை மாதிரி கேடுகெட்டவன் கிட்ட சிக்கி சுதந்திரமா வாழுற தன்னோட பிறப்புரிமையை தொலைச்சிட்டு அடிமையா வாழனும்… அதுவும் பாலியல் அடிமையா… இவ்வளவு கீழ்த்தரமான வேலை செஞ்சிட்டு நெஞ்சை நிமிர்த்தி உன்னால எப்படி நடக்க முடியுது? எப்படி தூங்க முடியுது… மனசாட்சி உறுத்தல… உலகம் தெரியாத பசங்களை அவங்க அப்பா அம்மாகிட்ட இருந்து பிரிச்சி கடத்திட்டு போய் அவங்களை அடிமையாக்கி சம்பாரிக்குறது எல்லாம் ஒரு பொழப்பா? உன் புள்ளையை இதுமாதிரி யாராவது செஞ்சா சும்மா விடுவீயா? அவங்களை முடிச்சிட மாட்ட… உனக்குன்னா ஒரு நியாயம் மத்தவங்களுக்குன்னா ஒரு நியாயமா… இவ்வளவு பித்தலாட்டமும் பண்ணிட்டு சமூகத்தில் நல்லவன் மாதிரி வேஷம் போட்டு மரியாதையோட சுத்துற. அந்த மரியாதைக்கு எல்லாம் தகுதியே இல்லாத ஆள் நீ… உன்னை மாதிரி ஆளை எல்லாம் சும்மா விடக்கூடாது.” என்று ஆங்காரமாய் அவள் கத்த, முகம் சிவந்தவர் அவளை எரித்துவிடுவது போலப் பார்த்தார்.
“என்னத்தை பார்த்துட்டு வந்து இப்படி உளறிட்டு இருக்க? ஆதாரம் அதுஇதுன்னு போக்கு காட்டுறீயா?” உள்ளுக்குள் அவள் எந்த ஆதாரத்தை பற்றி பேசுகிறாள் என்ற யோசனை இருந்தாலும் வெளியே ஒன்றும் காட்டிக்கொள்ளாமல் கெத்தாகவே பேசினார் வரதன்.
அவளும் சளைக்காது அருகில் இருந்த அவளது ஹார்டுடிஸ்க் மற்றும் ப்ராஜெக்ட் தீசிஸையும் அவர் முன்னே ஆட்டி, “என்  வீட்டுல இருந்தது எப்படி உங்க ரூமுக்கு வந்துச்சுன்னு நல்லாவே புரிஞ்சு போச்சு வரதன். இதை பார்க்கறதுக்கு முன்னாடி வரை எனக்கு சந்தேகம் மட்டும்தான் இருந்துச்சு, இதைப் பார்த்ததும் எல்லாமே புரிஞ்சிடுச்சு. உறுதியாகிடுச்சு.”
“உறுதியாகிடுச்சுல்ல… ரொம்ப சந்தோசம். ஆனா, அதுல எங்கேயுமே வரதன் பேரோ சுப்பிரமணியம் பேரோ இல்லையே, பாவம் நீ எப்படி என் மேல புகார் கொடுப்ப? எப்படி இதெல்லாம் நான்தான் செஞ்சேன்னு நிரூபிப்ப? இவ்வளவு தெளிவா என்னோட இருண்ட பக்கத்தை கண்டுபிடிச்சு என்னோட கடத்தல் பிஸினஸை க்ளோஸ் பண்ணவ இப்படி கோட்டை விட்டுட்டீயே… ச்சு… ச்சு பாவம்… நான் வேணும்னா உனக்கு ஹெல்ப் பண்ணவா?” என்று அவர் கேலியாய் கொக்கி போட, புருவம் சுருக்கினாள் அவள்.
“மூளையை ரொம்ப போட்டு குழப்பாத, ஏற்கனவே முகம் அபேஸ்.. அப்புறம் மூளையும் மழுங்கினா பைத்தியம்னு முத்திரை குத்திடுவாங்க. இல்லைனா நான் குத்த வச்சிடுவேன். என்ன பார்க்குற? வரதங்குற அருவத்தை உருவாக்கின நானே தேவைப்பட்டா வரதனை கொல்லுவேன். அப்புறம் இந்த சுப்பிரமணியன் மட்டும்தான் வெளியுலகத்தில் இருப்பான்… இந்த நல்லவன் உன்னை பைத்தியம்னு சொன்னா ஊரே நம்பும், அவ்வளவு ஏன் உன் குடும்பத்தையே நீ மனநலம் பாதிக்கப்பட்டவன்னு சொல்ல வைப்பேன். அதுக்கப்புறம் நீ ஒண்ணுமே பண்ண முடியாது. என் பையன்… உன்கிட்ட இருக்குற என் பையன் என்கிட்டேயே வந்துடுவான்…” என்று கர்வமாய் சொல்லி முடித்தார்.
இன்னும் எவ்வளவுதான் கீழிறங்குவார் என்று பேச்சு கொடுத்துக் கொண்டிருந்த மீராவே சோர்வாகி பெருமூச்சிழுத்து, “என் வீட்டுக்காரர் முன்னாடி உங்க முகத்திரை கிழிஞ்சு ரொம்ப நாளாச்சு. இதுக்கு மேல நடிக்காதீங்க…” என்றுவிட, இவ்வளவு நேரமாய் மீரா எதிர்பார்த்து காத்திருந்த அவரின் பீதியடைந்த முகம் தற்போது வெளிப்பட்டு அவளை உற்சாகமாக்கியது.
“என்ன சொல்லி என் பையனை ஏமாத்தி வச்சிருக்க? எல்லாமே உன்னாலதான்… இத்தனை வருஷம் நான் கட்டிக்காப்பாத்தி சீராட்டி பாராட்டி பாசம் வச்சி வளர்த்த மகனை என்கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போய் வச்சிக்கிட்டு போக்கு காட்டிட்டு இருக்கீயா நீ… உன்னையெல்லாம் இவ்வளவு நாள் விட்டுவச்சதே தப்பு. என் பொழப்பை கெடுத்த அன்னைக்கே உன்னை முடிச்சிருக்கணும்… முடிச்சிருக்க வேண்டியது, எவனோ ஒரு கூறுகெட்டவன் உள்ள புகுந்து உன் மேல ஆசிட் வீசி காரியத்தை கெடுத்துட்டான்… இல்லைன்னா…”
“இந்நேரம் அவளை கடத்தி வெளிநாட்டுக்கு வித்திருப்பீங்க அதுதானே…” என்ற இறுகிய குரல் திடுமென ஒலிக்க, பதறிய வரதன் திரும்பிப் பார்க்க, மாடிப்படிக்கட்டின் இறுதி படியில் நின்றிருந்தான் கார்த்திக்.
அதிர்ச்சியில் வார்த்தைகள் விடைபெற்று விக்கித்து நின்ற சுப்பிரமணியம் தலையில் கைவைத்துவிட, இறுகிய குரலுக்கு இணையாக உணர்ச்சிகள் துடைத்தெடுக்கப்பட்ட இறுகிய முகத்துடன் மீராவை நெருங்கி நின்றுகொண்டான் கார்த்திக்.
“என்ன பேச்சையே காணோம்? இவ்வளவு நேரம் இந்த வாய் என்னவெல்லாம் பேசுச்சு. இப்போ பேசுங்க… என்னோட கேள்விக்கு பதில் சொல்லுங்க… ஏன் இதெல்லாம்? எதுக்கு இப்படி ஒரு பொய்யான வாழ்க்கை? இப்படி பாவம் செஞ்சுதான் காசு சேர்த்து மாடமாளிகை கட்டணும்னு என்ன அவசியம்? கூலி வேலை செஞ்சு எங்க வயித்தை நிறைச்சிருந்தா கூட சந்தோசமா இருந்திருப்போம்… ஆனா இப்படி அதர்ம வழியில் கோடி கோடியா சம்பாரிசு என்னத்தை கண்டீங்க? பாவத்தை சேர்த்து என்னை கூனி குறுக நிற்க வச்சி இப்படியான ஒரு தகப்பன் எனக்கு வேண்டவே வேண்டாம்னு நினைக்க வச்சிட்டீங்க. 
அம்மா… அம்மாவுக்கு எவ்வளவு பெரிய துரோகம் பண்ணியிருக்கீங்க… உங்க கீழ்த்தரமான வேலையெல்லாம் அவங்களுக்கு தெரியுமானு கூட எனக்கு தெரியல, ஆனா தெரிஞ்சிருந்தா எப்படி புழுங்கி இருப்பாங்க. யார்கிட்டயும் சொல்ல முடியாம இந்த வாழ்க்கையை உதறி தள்ளிட்டு போக முடியாம எவ்வளவு வேதனை பட்டிருப்பங்க… அதை பத்தியெல்லாம் கொஞ்சம்கூட கவலை இல்லாம மனசாட்சியை அடமானம் வச்சிட்டு என்னவெல்லாம் என் பொண்டாடிக்கிட்ட பேசுறீங்க. அவளை கல்யாணங்குற பேரில் முடக்கி அவளை நாடு கடத்த பிளான் போட்டு… ச்சை… 

Advertisement