UU
“இப்ப நீ சொல்லப் போறியா இல்லையாடா?!” என்று கண்ணன் உக்கிரமூர்த்தியாய் கார்த்திக்கின் சட்டையைப் பற்றி இழுத்து நிறுத்த,
“ஹேய் சொல்றேன் சொல்றேன்டா!” என்றவன்,
“உன் அப்பா கவியை எனக்கு கல்யாணம் செய்து கொடுத்த சம்மதிச்ச கொஞ்ச நேரத்துலயே கவி என்கிட்ட வந்து பேசுனாங்க” என்றான்.
‘என்ன பேசினா?!’ என்பது போல் அவன் பார்க்க,...
18
அவன் தன்னை ஆட்கொண்டதை விட அவன் உதிர்த்த வார்த்தைகளே அவளுள் அத்தனை வலியையும் வேதனையையும் ஆக்ரோஷத்தையும் ஒருங்கே தோற்றுவித்தது.
தன்னை விட்டு விலகியவனை கொன்று புதைத்துவிடலாமா எனும் அளவிற்கு எழுந்த ஆத்திரத்தை கண்களில் மொத்தமாய்த் தேக்கி நிறுத்தியவள் பார்த்த பார்வை அவனின் கோபமும் உணர்ச்சிகளும் மட்டுப்பட்ட பின்பே அவனுக்குத் தென்பட்டது.
...
இருவருமே ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசாமல், சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் மூடி மறைத்ததனால் பெரும் மனஉளைச்சலில் தவித்துக் கொண்டிருந்தனர் ஒருவர் மற்றொருவரின் செயலையும் சொல்லையும் ஏற்க முடியாமல்.
பொழுது சாயும் நேரம் அனைவரும் வேலை முடித்து வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமாக, அவள்,
“நான் கொஞ்ச நேரம் இங்கயே இருந்துட்டு வரேன். நீங்க எல்லோரும் போங்க”...
16
உணவுண்ணும் நேரம் வரை அனைவருமே சிரிப்பும் பேச்சுமாக மகிழ்ச்சியுடன் உண்டு முடிக்க, இவன் மட்டும் எதிலும் ஒட்டாமல், அமைதியாகவே சாப்பிட்டு முடித்து எழுந்து சென்றுவிட்டான்.
மற்றவர்கள் அவன் எப்போதுமே இப்படித்தானே ஒரு நேரம் நன்றாய்ப் பேசுவதும், ஒருநேரம் உம்மென்று இருப்பதும் என்று பெரிதாய் எதுவும் கண்டுகொள்ளவில்லை! ஆனால் அவளுக்கு மட்டும் என்னவோ...
15
எப்போதும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டு வார இறுதி நாட்களில் மட்டுமே வீட்டில் தங்குபவன், இப்போது திங்களன்றும் வேலைக்குக் கிளம்பிச் செல்லாமல் அங்கேயே இருக்கவும் வீட்டில் இருப்பவர்களுக்கு அதிசயமாய் இருந்தது.
அதென்னவோ தெரியவில்லை, கார்த்திக்கை அங்கு கண்டதிலிருந்து அவனால் அங்கிருந்து கிளம்ப முடியவில்லை!
வீட்டில் இருக்கும் அனைவரும் அவனைத் தாங்கு...
அவன் குளித்து வரும்போது அவள் அவனது அறையை விட்டு அவளது அறையில் வந்து படுத்திருக்க,
“உன்னைக் கட்டில்ல தானே படுக்கச் சொன்னேன். இங்க எதுக்குடி வந்த?!” என்றான்.
“இல்லை பரவாயில்லை மாமா” என்று அவள் படுத்தபடியே சொல்ல,
“எந்திரிச்சு வந்துப் படுடி” என்றான் மீண்டும் அதட்டலாய்.
இவளுக்குமே அவனது துவனியில், சட்டென கோபம்...
14
கண்ணன் சென்னைக்குக் கிளம்பிக் கொண்டிருக்க, அங்கு இருந்த அனைவருமே மறுப்பேதும் சொல்லாமல் அமைதியாகத்தான் நின்றிருந்தனர் கனகாம்புஜம் பாட்டியைத் தவிர.
“எய்யா கண்ணா... வாரத்துக்கு ஒருமுறை எப்போவும் போல ஊருக்கு வந்துட்டுப் போய்யா! உன் அப்பனுக்கு வேற இப்படி உடம்புச் சுகமில்லாம கெடக்கு! நீ வர போக இருந்தாத்தானே எங்க மனசுக்கும் கொஞ்சம்...
*****
இன்று, கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் தன் மாமனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி படுத்திருந்தாள் கவி.
‘ஏன் மாமா இப்படி எல்லாம் பண்ற?! வேணாம் வேணாம்னு சொல்லிட்டு இருந்த நீ, கடைசி நொடியில என்னை விட்டுக் கொடுக்க முடியாம, நான் வேணும்னு தானே கட்டிக்கிட்ட?! அப்புறமென் இப்படி என்னையக் கொல்லாமக்...
13
வெகு நேரமாக கண்ணன் மண்டபத்தில் தென்படவே இல்லையே என்று தங்கரத்தினம் அவனைத் தேடிக் கொண்டும் ஒரு சிலரிடம் விசாரத்துக் கொண்டும் இருக்க,
“அவன் எப்போவோ காரை எடுத்துக்கிட்டுக் கிளம்பிப் போனானே” என்றார் ஒருவர்.
“ஓ! சரி சரி” என்றவர், அவரிடம் பதட்டத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,
‘எங்க போய்த் தொலைஞ்சான் இவன்?! கல்யாண...
12
‘சிரிப்பா சிரி! பெத்த பிள்ளையோட வாழ்க்கைக்கு ஆப்பு வச்ச முதல் அப்பா நீயாதான் இருப்ப!’ என்று பல்லைக் கடித்தபடி முனகியவன், கார்த்திக்கை அடித்து துவம்சம் செய்து அங்கிருந்து வெளியே தள்ளிவிட்டுட்டு தான் அந்த இடத்தில நிற்க வேண்டும் என்பது போல் பரபரத்த மனதை சபை நாகரிகம் கருதி வெகுவாய்க் கட்டுப் படுத்தி...
“என்னடா சொல்றான் இவன்?!” என்று நினைத்துக் கொண்டே நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கலக்கத்துடன் பார்க்க, கண்ணனோ, பித்துப் பிடித்தவன் போல் நின்றிருந்தான்.
“பேசுடா” என்பது போல் பிரதாப், கிஷோரைப் பார்த்து கண்களால் சைகை செய்ய,
“என்னத்தப் பேச?! அதான் நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டானே?!” என்றான் கிஷோர் மெல்லிய...
11
“எனக்கு உங்க பொண்ணைக் கட்டிக் கொடுங்க! நான் அவங்களை மகாராணி மாதிரி வச்சுப் பார்த்துக்கறேன்” என்று கார்த்திக் சொன்னதும் எல்லோருமே சில கணங்கள் திகைத்துப் போயினர் என்ன சொல்வது என்று புரியாமல்.
மற்றவர்கள் ஒருவிதமான திகைப்பில் இருக்க, கண்ணன் மற்ற அனைவரையும் விட மிகுந்த திகைப்போடும், கோபத்தோடும் அவனை வெட்டவா குத்தவா...
1௦
திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டிருந்தது. மணம் முடித்த கையோடு கிளம்பிச் சென்றவன்தான். தன்னையும் வருத்திக் கொண்டு, அவளையும் தவிக்க வைத்துக் கொண்டு, குடும்பத்தினரையும் வேதனைப் படுத்திக் கொண்டிருந்தான் தன் வறட்டு பிடிவாதத்தாலும், தவறான புரிதலாலும்.
தங்கரத்தினம் இதோடு நூறு முறைக்கும் மேல் அழைத்து விட்டிருப்பார் அவனின் கைபேசிக்கு! ஆனால் அவரின்...
அவர் சொன்னதைக் கேட்டு பொத்திக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்ட கார்த்திக்,
“டேய் இவனுக்கு அவுங்க மாமா கத்துக் கொடுக்குறாராம்டா! கேட்க தமாஷா இல்லை!” என்று கிஷோர் காதில் கிசுகிசுக்க,
“டேய் சும்மா இருடா” என்றான் கிஷோர்.
‘எப்படி மெயின்டெயின் பண்ணி இருக்கான் பாரு பச்சை புள்ளையாட்டம்?!’ என்று பிரதாப்பும் பாவமாய்...
9
‘என்ன இவன் இவ்ளோ கோபமாகிட்டான்?!’ என்று கவிதாயினி யோசிக்க,
செவலையோ கீழே விழுந்த ரங்கனை மற்றவர்களைப் போல் போனால் போகட்டும் என்று விட்டுவிடாமல், மேலும் அவன் அருகே ஓடி அவனைத் தன் கொம்பால் முட்டி மண்ணில் உருட்டிவிட,
“என்ன ஆச்சு இவனுக்கு?!” என்று வாய்விட்டு முனகியவள், ரங்கன் படுத்தபடியே செவலையின் கொம்பைப்...
8
‘எதுக்கு இவளுக்கு இந்த வேலை?!’ என்று கவியை முறைத்தவன்,
“ஆச்சா?! கிளம்பலாமா?!” என்று சிடுசிடுக்க,
“ம் ஆச்சுப்பா?! அடுத்து காய் வாங்கப் போக வேண்டியதுதான். நீங்க போய் சந்தையைச் சுத்திப் பார்த்துட்டு வாங்க. நாங்க அதுக்குள்ள காய்கறி எல்லாம் வாங்கிட்டு அதோ அங்க இருக்க அம்மன் கோவில் கிட்ட...
இத்தனை நாட்களாய் அவன் அவளை வேண்டாமென்றபோது வராத உணர்வு அவள் வாயால் அதைச் சொல்லும்போது வந்து ஒட்டிக் கொண்டது.
அவன் பதில் ஏதும் உரைப்பதற்குள், “என்னடி மசமசன்னு நிக்க?! வா எல்லாத்தையும் எடுத்துட்டு போய் கூடத்துல வை. எல்லாரும் பசியாறனும்ல!” என்றார் வைரம் மகளைப் பார்த்து.
“நான் ஹெல்ப் பண்றேங்க” என்று கார்த்திக்கும்...
“டேய் கொடுத்துட்டுப் போன மேளத்தை அடிக்காம அங்க என்னடா லுக்கு?! கிராமத்துக்கு வந்தும் உன் வேலைய ஆரம்பிச்சுடாத! தோலை உரிச்சிடுவாங்க” என்று கிஷோர் அவன் காதைக் கடிக்க,
‘போடா!’ என்ற ரீதியில் பார்த்தவன், மேளத்தை அடிக்கத் துவங்க, அமைதியாய் இருந்த வீட்டில் நண்பர்களின் வரவால் கொண்டாட்டம் ஆரம்பமானது.
அனைவரும் போகிக் கொண்டாட்டத்தில் இருக்க,...
7
இரவு அனைவரும் உறங்கும் வரையிலும் கூட அவள் வெளியே வரவே இல்லை பிடிவாதமாய்!
அவன் வீட்டிற்கு வந்தும் அவள் முகம் காணாது இருப்பது இதுவே முதன்முறை என்பதில் மனம் முழுக்க கோபத்தில் திளைத்திருந்தான் கண்ணன். அங்கு அவளோ?
நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனது கார் சத்தத்தைக் கேட்டதற்கே அத்தனை சந்தோஷம் கொண்டவள்,...
சில நொடிகள் அமைதி காத்தவன், “இப்ப என்ன பொங்கலுக்கு நான் ஊருக்கு வரணும் அவ்ளோதானே?!” என்றவன்,
“ஆனா ஒண்ணு, நான் ஊருக்கு வந்த பிறகு மறுபடியும் எனக்கும் அவளுக்கும் கல்யாணப் பேச்சை எடுக்க மாட்டேன்னு சொல்லுங்க! நான் வரேன்” என்றான் அவனும் விடாப்பிடியாய்.
மற்றவர்கள் சட்டென அமைதியாகிவிட, பாட்டியோ, “சரிய்யா சரி. எடுக்க...