Tamil Novels
மணிப்புறாவும் மாடப்புறாவும்-11
அத்தியாயம் 11
சுப்ரியா காலையில் ஜாகிங் முடித்துவிட்டு வீட்டுக்கு வெளியில் இருந்த பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள். காபி கலந்து எடுத்துவந்து அதை பருகிக்கொண்டே தி ட்ரூத் பத்திரிக்கையில் அன்று அவள் எழுதியிருந்த கட்டுரையை படித்துக்கொண்டிருந்தாள்.
காவல்துறை அதிகாரிகளின் வரம்புமீறிய அட்டகாசம் பற்றி எழுதப்பட்ட கட்டுரை அது. சென்னையில் இருந்த ஒரு நகரில்...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-10
அத்தியாயம் 10
காலையில் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து தயாராகிவிட்டான் இன்பா. ரம்யா, ரவி, சுபாஷினி ஆகியோருக்கு அன்று மாதிரி தேர்வு நடைபெற இருப்பதால், பத்மினி அவர்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு முருகேசனுடன் வருவதாக கூறி விட்டார். தர்ஷினியும் மருத்துவமனை செல்ல தயாராகி இருந்தாள். இருவரும் தேநீர் மட்டும் அருந்தி விட்டு, வெளியே வந்தனர். இன்பா அவனது...
இதயம் இணையும் தருணம்
அத்தியாயம் 9
நிவேதா கவனித்தவரை எம்.டி அறையின் உள்ளே ஆட்கள் போய் வந்து கொண்டுதான் இருந்தனர். இன்னும் அவள்தான் பார்க்கவில்லை. பார்க்கவே வேண்டாம் என்பது தான் அவள் எண்ணம். அவர் வேறு எதாவது கேட்டு, தான் எதாவது உளறி வைப்பதை விடப் பார்க்காமல் இருப்பதே நல்லது என நினைத்திருந்தாள்.
எம் டி அறைக்கு அந்தப்...
28
பூஜை அறைக்கு மனைவியைத் தூக்கிக் கொண்டு சென்றவன், சற்று உயர்ந்த மேடையில் வைக்கபட்டிருந்த காமாட்சி விளக்கின் அருகே சென்று, மெல்ல அவளைக் கீழே இறக்கிவிட்டு அவள் தடுமாறாமல் இருக்க கெட்டியாய் அவளைத் தாங்கிப் பிடித்தபடி நின்றான்.
எப்போதும் கீழே வைக்கபட்டிருக்கும் விளக்கு இன்று மேலே மாற்றி வைக்கப் பட்டிருப்பதைக் கண்டு, அன்னையைத்...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-9
அத்தியாயம் 9
இன்பாவுக்கும், தர்ஷினிக்கும் திருமணம் நடக்க இருப்பதால் அவர்களிடம் லிங்கேஷ் பற்றி தான் கண்ட காட்சியை சுப்ரியா கூறவில்லை. நசீரிடம் மட்டும் கூறினாள். அவன் “இது பிரம்மை. நீ முதல்ல தனியா வீட்டுல இல்லாம ஏதாவது ஹாஸ்டலுக்கு மாறு. இல்லைன்னா உன் ஃப்ரெண்ட்ஸ் யாரோடையாவது வீட்டை ஷேர் பண்ணிக்கோ” என அறிவுரை வழங்கினான்.
சுப்ரியாவிற்கும்...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-8
அத்தியாயம் 8
வீட்டுக்கு வெளியில் இருந்த தோட்டத்தில், மொட்டு விட்டிருந்த மஞ்சள் நிற ரோஜா செடிக்கு அருகில் நின்றிருந்தான் இன்பசாகரன். உள்ளே அமர பிடிக்காமல் வெளியே வந்த தர்ஷினி, அங்கே இன்பாவை கண்டதும் திரும்பி சென்று விடலாமா என யோசித்தாள். உள்ளே செல்லவும் மனமின்றி சத்தமில்லாமல் மாடிப்படிகளில் ஏறினாள்.
மாடியில் காய்ந்த துணிகள் கொடிகளில் பறக்க,...
மயக்கும் மான்விழியாள் 27
இன்று
இரவு முழுவதும் தன் பழைய நினைவிகளின் தாக்கத்தால் உறக்கத்தை துளைத்த மது விடியும் பொழுது தான் கண் அயர்ந்தாள்.வீட்டுப் பொறுப்புகளை ஏற்றதிலிருந்து சீக்கிரம் எழும் மது இன்று எழாமல் இருக்க பயந்த சுந்தரி அவளது அறையில் வந்து காண மதுவோ ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டு எழுப்ப மனம் வராமல் சென்றார்.பூமிநாதனுக்கோ...
அத்தியாயம் - 13
பிரேம் சென்ற பின்பு நாட்கள் ரொம்ப மெதுவாக செல்வதாகவும்... இயற்கையழகுடன் காணப்பட்ட அந்த இடம் சலிப்பைத் தருவதாகவும் தோன்றியது. ‘ஏன் இப்படி..? அவனிருக்கும்போது நாட்கள் சுவாரஸ்யமாக சென்றதால் இப்படித் தோன்றுகிறது...’ என்று அவளே சமாதானமும் கூறிக் கொண்டாள்.
ஏற்கனவே நன்றாகப் பழகிக் கொண்டிருந்த யமுனாவுக்கும் கீதாவுக்குமான இடைவெளி மிகக் குறைந்து அவர்களுக்குள் ஒரு...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-7
அத்தியாயம்- 7
இன்பாவுடனான திருமணப் பேச்சை தர்ஷினி மறுத்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. முருகேசனின் அக்கா குணசேகரி தன் மகன் சீனுவுடன் திருவண்ணாமலையிலிருந்து வந்திருந்தார். சாதாரணமாக வரவில்லை. தன் மகனுக்கு தர்ஷினியை திருமணம் செய்வதை பற்றிப் பேசவென்றே வந்திருந்தார். முதல் நாள் இரவே இதுபற்றி தன் தம்பியிடம் பேசியும் விட்டார். முருகேசனோ எந்த பதிலும்...
அத்தியாயம் 2
அத்தியாயம் 2
ஆளவந்தானிடம் வானதியோ, பானுரேகாவோ எதுவும் பேசவுமில்லை. கேட்கவுமில்லை. வானத்திற்கு உண்மை தெரிந்து விட்டது. இனி அவள் விலகிக் கொள்வாள் என்றெண்ணி அமைதியாக இருந்தனர். ஆனால் அவள் அமைதியாக இருக்கவில்லை. அடிபட்ட சிங்கம் போல் சீறிப் பாய ஆரம்பித்தாள் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.
மனைவியும் மகளும் சென்னை செல்லும்வரை ஆளவந்தானால் வானதியோடு பேச முடியவில்லை....
இதயம் இணையும் தருணம்
அத்தியாயம் 8
சிறிது நேரத்திலேயே ஆகாஷும் முகேனும் வினோதாவுடன் சரளமாகப் பேசிக்கொள்ள, நிவேதா ஆச்சர்யமாகப் பார்க்க, “இதெல்லாம் மறக்கிற பீஸா.... சும்மா டென்ஷன் பண்ணி பார்க்கதான் தெரியலைன்னு சொன்னோம்.” என்றதும், நிவேதாவும் நம்பி விட்டாள்.
நிவேதாவின் குணமே அதுதான். அவள் நண்பர்கள் சொன்னால் அதை ஆராய எல்லாம் மாட்டாள். அப்படியே ஏற்றுக்கொள்வாள். இன்னமும் ஆகாஷையும்...
“அங்கிள், இங்க இருந்து அங்க போக ட்ரைன் இருக்கு. ஏறினா ஒரு மணி நேரத்தில இறங்கப் போறா... அதனால தூரம் பத்தி பிரச்சனை இல்லை.” என்றாள்.
வீட்டிற்குள்லையே இருப்பதற்கு வேலைக்குச் சென்று வரட்டும், நல்ல வரன் வந்தால் திருமணம் முடித்து விடலாம் என்ற எண்ணம் முரளிக்கும், அதனால் சரி என்றார்.
“நான் உங்ககிட்ட சம்மதம் எல்லாம்...
Epilogue
கொரோனாவின் இரண்டாம் அலை மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் தருணம். கௌஷி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.
யார் வேணுமானாலும் எந்த நேரத்திலும் உள்ளே செல்லலாம் என்றுதானே தனியார் மருத்துவமனையை நாடுகிறோம். ஆனால் இந்த கொரோனாவால் அதிகம் கூட்டம் கூட முடியவில்லை.
இந்திராவை மட்டும் அழைத்துக் கொண்டு ஷக்தி மருத்துவமனைக்கு சென்றிருந்தான்.
உள்ளே செல்பவர்களுக்கு கூட PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட...
அத்தியாயம் 25-2
மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பண்ணை வீடு இரவில் அழகாக ஜொலிக்க "ஷக்தி கதவ பூட்டிக்காப்பா நாங்க போறோம். காலைல வரோம்" என்று சந்திரா சொல்ல
"என்ன அவசரம் அத்த? மதிய சாப்பாடு எடுத்துட்டு வந்தா போதும்" என்றவாறே ஷக்தி கதவை பூட்டி இருக்க,
"துரத்தாத குறையா உன் மகன் கதவ பூட்டுறான் பாரு" சந்திரா சொல்ல, இந்திராவும்,...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-6
அத்தியாயம்-6
அஜந்தா தொழிற்சாலை வழக்கை இன்பா எடுத்து நடத்தப்போவதாக அறிந்ததிலிருந்து தர்ஷினி அவனை தவிர்க்க ஆரம்பித்தாள். இன்பா வந்தாலே அந்த இடத்திலிருந்து சென்றுவிடுவாள் தர்ஷினி. அவன் ஏதாவது வம்பு பேசினாலும் எப்பொழுதும் போல இவளும் வம்பு பேசாமல், எந்த பதிலும் கூறாமல் ‘நீ என்ன வேண்டுமென்றாலும் பேசிக்கொள் எனக்கு ஒன்றும் இல்லை’ என்பதாக இருந்துகொண்டாள்....
மணிப்புறாவும் மாடப்புறாவும்-6(2)
அத்தியாயம்- 6(2)
தர்ஷினி ஒரு புறத்தில் இருந்து நெட்டை அவிழ்த்து கொண்டிருக்க மறுபக்கம் நின்று அவிழ்த்தான் இன்பா. நெட்டை மடித்து வைக்க உதவி செய்தான். தர்ஷினி எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல அவளது கையைப் பிடித்து நிறுத்தினான்.
“கையை விடு” என்றாள் தர்ஷினி.
“என்னை அவாய்ட் பண்ணாதடி.. கஷ்டமா இருக்கு” என்றான்.
“நீ பண்றதெல்லாம் மட்டும் எனக்கு சந்தோசமா இருக்கு”...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-6(1)
அத்தியாயம் 6(1)
அஜந்தா தொழிற்சாலை வழக்கை இன்பா எடுத்து நடத்தப்போவதாக அறிந்ததிலிருந்து தர்ஷினி அவனை தவிர்க்க ஆரம்பித்தாள். இன்பா வந்தாலே அந்த இடத்திலிருந்து சென்றுவிடுவாள் தர்ஷினி. அவன் ஏதாவது வம்பு பேசினாலும் எப்பொழுதும் போல இவளும் வம்பு பேசாமல், எந்த பதிலும் கூறாமல் ‘நீ என்ன வேண்டுமென்றாலும் பேசிக்கொள் எனக்கு ஒன்றும் இல்லை’ என்பதாக...
அத்தியாயம் 25-1
வீடு குடிபுகுந்து நான்கு நாட்களாகி இருக்க, வீடே அமைதியாக இருந்தது. யாரும், யாருடனும் பேசிக்கொள்ளாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான சிந்தனையில் இருந்தனர்.
சந்த்யா கர்ப்பமாகி இருப்பதால் அவள் எதைப் பற்றியும் சிந்திக்கக் கூடாது. ஆரோக்கியமாக இருக்க வேண்டும் வேளாவேளைக்கு அவளுக்கு உணவு கொடுக்க வேண்டும் "அத்த நீங்க இப்படி இருந்தால் சரியா?" இந்திராவை யோசிக்க விடாது...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-5
அத்தியாயம் 5
மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த நடிகர் லிங்கேஷின் அந்த பெரிய பங்களா. வாட்ச்மேனிடம் பிரபஞ்சனின் கார்டை இன்பா நீட்ட, இன்டர்காமில் பேசிவிட்டு கேட்டை திறந்து விட்டான் வாட்ச்மேன். வெளியே இருந்த அந்த தோட்டத்தை தாண்டி வீட்டை சென்று அடையவே ஐந்து நிமிடங்கள் நடக்க வேண்டியிருந்தது.
வியந்து பார்த்துக் கொண்டே,...
கணனிக் காதல்
அத்தியாயம் 1
வருடம் 2008
ஊட்டிக் குளிர் சில்லென்று உடலை தாக்க ஆளவந்தான் குளிருக்கு இதமாக பாட்டிலை திறந்து கோப்பையில் மதுபானத்தை நிரப்பி வாயில் சரித்துக் கொண்டார்.
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தேயிலை காடு. நடுவில் பெரிய பங்களா. அங்கே தனியாக ஆளவந்தான். தனிமை அவரை கொல்லாமல் கொல்ல. குளிர் கூட உதவி செய்து கொண்டிருந்தது.
ஆளவந்தானுக்கு வயது...