Advertisement

மயக்கும் மான்விழியாள் 27

இன்று

இரவு முழுவதும் தன் பழைய நினைவிகளின் தாக்கத்தால் உறக்கத்தை துளைத்த மது விடியும் பொழுது தான் கண் அயர்ந்தாள்.வீட்டுப் பொறுப்புகளை ஏற்றதிலிருந்து சீக்கிரம் எழும் மது இன்று எழாமல் இருக்க பயந்த சுந்தரி அவளது அறையில் வந்து காண மதுவோ ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டு எழுப்ப மனம் வராமல் சென்றார்.பூமிநாதனுக்கோ காலை வேலை செல்லும் முன் தன்னைக் கண்டுவிட்டு செல்லும் மகள் இன்று வராமல் இருக்க அவருக்கு இருப்பு கொள்ளவில்லை.மனைவி வந்தால் அவரைக் கேட்கலாம் என்றால் அவரோ மகனை கிளப்புவது,சமையல் செய்வது என்று வீட்டு வேலைகளில் கவனமாகிவிட்டார்.

நிவேதா ஒருவித பதட்டத்துடனே கல்லூரி கிளம்பிக் கொண்டிருந்தாள்.அவளிடம் நம்பர் வாங்கிய ரூபன் இரவு அவளை அழைத்து பேச வேண்டும் என்று கூறி ஒரு காபி ஷாப்பிற்கு அழைத்திருந்தான்.அவளுக்குமே ரூபனிடம் தன் அக்காவைப் பற்றி பேச வேண்டும் அதனாலே வருகிறேன் என்றவள்,மதுவிற்கு இந்த விஷயம் தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.மதுவிற்கு தெரிந்தால் அவள் கண்டிப்பாக ரூபனை சந்திக்க அனுமதிக்க மாட்டாள்.எப்படியேனும் மதுவின் வாழ்வை சீராக்க வேண்டும் என்ற உறுதி நிவேதாவிற்கு,தன் குடும்பம் செய்த செயல்களும் மதுவின் இன்றைய நிலைக்கு காரணம் என்று மனதிற்குள் பல நாட்கள் வெதும்பியும் இருக்கிறாள்.

காலைவேளை என்பதால் வீடும் பரபரப்பாக இருந்தது ஆனந்திற்கு சிறப்பு வகுப்புக்கள் இருப்பதால் அவன் சீக்கிரம் கிளம்பிவிடுவான்.மதுவும் வேலை நாட்களில் சரியான நேரத்திற்கு சென்றுவிடுவாள்.எப்போதும் நிவேதாவும் மதுவுடன் தான் செல்வாள் அதனாலே நிவிக்கு சற்று பதட்டம்.தவளை தன் வாயலே கெடும் என்பார்களே அதே ரகம் தான் நிவேதாவும் மனதில் உள்ளதை மறைக்க வராது அதனாலே தவறு செய்தாலும் மாட்டிக்கொள்வாள்.அவ்வாறு மாட்டும் போது எப்போதும் காப்பாற்றும் ஒரே ஜீவன் மதுமிதா.இன்று அவளிடமே தான் மாட்டிக் கொள்வோமோ என்ற பயம் தான் நிவேதாவிற்கு.

இவ்வாறு பல சிந்தனைகளுடன் தன் அறையில் இருந்து வெளியில் வந்த நிவேதா மது தென்படுகிறாளா என்று தான் பார்த்துக் கொண்டே வந்தாள்.அப்போது தன் சித்தப்பாவின் அறையில் சத்தம் கேட்கவும் உள்ளே செல்ல அங்கே பூமிநாதனோ,

“சுந்தரி…சுந்தரி…”என்று தன் மனைவியை அழைத்துக் கொண்டிருந்தார்.சுந்தரியோ சமையல் அறையில் இருப்பதால் அவருக்கு பூமிநாதன் அழைத்தது அவருக்கு கேட்கவில்லை,நிவேதா பூமிநாதன் அறையைக் கடந்து தான் செல்ல வேண்டும் என்பதால் அவளுக்கு கேட்டது.உள்ளே வந்த நிவி,

“சித்தப்பா…என்ன ஆச்சு…”என்று பதட்டமாக கேட்க பூமிநாதனோ,

“நிவி…மது எங்க டா…ஏன் இன்னும் என்னை வந்து பார்க்கல…”என்று பதட்டமாக கேட்க,நிவியும் இப்போது தான் வருவதால் அவளுக்கும் தெரியவில்லை அதனால்,

“தெரியல சித்தப்பா…நானும் இப்ப தான் காலேஜ்க்கு கிளம்பி வரேன்…இருங்க நான் பார்த்துட்டு வரேன்…”என்று கூறிவிட்டு எழ போக அப்போது உள்ளே வந்த சுந்தரி,

“அவ தூங்குறா நிவி…ஏன் என்ன ஆச்சு…”என்ற கேட்க

“எங்க போன நீ எவ்வளவு நேரம் உன்னை கூப்பிடுறது…”என்று பூமிநாதன் சுந்தரியிடம் பாய,

“நான் சமையல் வேலையில் இருந்தேன்ங்க…அதனால நீங்க கூப்பிட்டது கேட்கல…”என்று கூறினார்.

“சரி மது ஏன் இவ்வளவு நேரம் தூங்குறா…ஏதாவது உடம்புக்கு முடியலையா…”என்று மகளின் நிலை அறிய பூமிநாதன் பதட்டமாக கேட்க சுந்தரியோ,

“நானும் அவளுக்கு உடம்பு முடியலையோ பயந்து தொட்டு பார்த்தேங்க நல்ல தான் இருக்கா…ஏதோ அசதி போல அதான் நல்ல தூக்கம்…சின்ன சத்தம் கேட்டா கூட எந்திரிச்சிடு வா..இன்னக்கி நான் தொட்டது கூட அவளுக்கு தெரியல…நானும் ரொம்ப நாள் கழிச்சு தூங்குறாளேனு விட்டுட்டேன்….”என்று நீண்ட விளக்கம் தர அப்போதும் பூமிநாதனின் முகம் தெளியாமல் இருக்க அதனைக் கண்ட நிவேதா,

“சித்தப்பா…இன்னும் என்ன யோசனையிலேயே இருக்கீங்க…”என்று கேட்க

“ஒண்ணுமில்லமா…”என்று சலிப்பாக கூற அவரின் கையை பிடித்துக் கொண்ட நிவி,

“சித்தப்பா…நீங்க கவலைப்படாதீங்க எல்லாம் மாறும்…”என்று கூற அவளை புரியத பார்வைப் பார்த்த பூமிநாதன்,

“என்னம்மா சொல்லுற…”என்று கேட்க,

“அக்கா வாழ்க்கை என்னாகும் என்ற பயம் தான உங்களுக்கு….எல்லாம் சீக்கிரமே மாறிடும்…”என்று கூற பூமிநாதனுக்கு நிவேதா கூறுவது ஒன்றும் புரியவில்லை.அவர் நிவேதாவிடம்,

“என்ன டா சொல்லுற…”என்று கேட்டார்.அவருக்கு ரூபன் சென்னை வந்த விஷயம் எல்லாம் தெரியாது.நிவேதாவும் தான் ஏதாவது உலறிவிடுவோமோ என்று நினைத்தவள் பூமிநாதனை சமாளிக்கும் பொருட்டு,

“இனி எல்லாருக்கும் நல்லதே நடக்கும் சித்தப்பா…என் மனசுக்கு தோணுது அதை தான் சொன்னேன்…”என்று கூற அவளது தலையை வாஞ்சையாக தடவிய பூமிநாதன்,

“நீ சொல்லுரபடி நடந்தா எனக்கும் சந்தோஷம் தான் டா…”என்று கூறினார்.இவர்களிடம் பேசிவிட்டு தன் கல்லூரிக்கு கிளம்பினாள் நிவேதா.அன்றைய வகுப்புகளை கடனே என்று கழித்தவள் மாலை ரூபன் கூறிய இடத்திற்கு வந்தாள்.அவள் வருவதற்கு முன்பே அங்கு ஒரு டேபிளில் அமர்ந்திருந்தான் ரூபன்.இவளைக் கண்டவுடன் தன் கை தூக்கி தன் இருக்கும் இடத்தை காட்டியவன் அவளை வருமாறு அழைத்தான்.

நிவேதா தன் முன் வந்து அமரவும் ரூபன்,

“எப்படிம்மா இருக்க…உங்க அக்கா எப்படி இருக்கா…”என்று விசாரிக்க,

“நானும் நலம்,என் அக்காவும் நலம்…”என்று புன்னகையுடன் கூற அவளது குறும்பில் மெலிதான புன்னகை சிந்திய ரூபன்,

“சரி முதல்ல சாப்பிடுவோம்…நீ வேற நேரா காலேஜிலிருந்து வர…”என்று கூற நிவேதாவும்,

“நல்லவேளை கேட்டீங்க அத்தான்….இல்லனா நானே கேட்டுருப்பேன்…ரொம்ப பசி எனக்கு, முதல்ல எனக்கு ஒரு சமோசா…”என்று கேட்க ரூபனுக்கு நிவேதாவின் இந்த உரிமையான அணுகுமுறை மிகவும் பிடித்திருக்க அவள் கேட்டதனைத்தையும் வாங்கி கொடுத்தான்.இருவரும் உண்டு முடித்திருக்க ரூபன் நிவேதாவிடம்,

“இப்ப சொல்லுமா…நானும் என் குடும்பமும் வந்து போனதுக்கு அப்புறம் என்ன நடந்தது…”என்று கேட்டான் இதுவரை சிரிப்புடன் பேசிக் கொண்டிருந்தவனின் முகத்தில் இப்போது தீவிரத்தைக் கண்டாள் நிவேதா.ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்துவிட்டவள் ரூபனிடம் அனைத்தையும் கூறினாள்.அருணாச்சலத்தின் வஞ்சகம்,பூமிநாதனின் இன்றைய நிலை,குடும்ப கஷ்டத்தை போக்க மது படிப்பை பாதியில் விட்டுவிட்டு வேலைக்கு செல்வது வரை கூறி முடித்தாள்.

அனைத்தையும் கேட்ட ரூபன் இறுகிய முகத்துடனும்,யோசனையுடனும் அமர்ந்திருதான்.அவன் யோசனை செய்யட்டும் என்று அமைதியாக இருந்த நிவேதா,பின் நேரம் ஆவதை உணர்ந்து,

“அத்தான்…நான் கிளம்புனும்…டையம் ஆச்சு….”என்று கூற தன் யோசனையிலிருந்து விடுப்பட்ட ரூபன்,

“ம்ம் சரிமா…நீ கிளம்பு…”என்று கூற கிளம்பிய நிவி சற்று தயக்கத்துடன் அவனை பார்த்துக் கொண்டு நிற்க அவள் தன்னிடம் ஏதோ கூற தயங்குகிறாள் என்பதை உணர்ந்தவன்,

“என்னமா என்கிட்ட உனக்கு என்ன தயக்கம்….சொல்லு…”என்று கூற,மற்ற விஷயம் என்றால் தயங்காமல் கேட்பாள் தான்,ஆனால் இது தன் அக்காவின் வாழ்க்கை சம்மந்தப்பட்டது.அதுமட்டுமல்லாது தனக்கு இதை பற்றி பேசக் கூடிய வயதும் கிடையாது என்று பலதரப்பட்ட சிந்தனையில் அவள் தவிக்க,அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரூபனுக்கு அவளின் தயக்கம் எதற்கு என்று புரிய அவனாகவே,

“மதுவை இனி நான் பார்த்துகிறேன்…நீ கவலைப்படாத….”என்று கூற தான் கூறாமலே தன் மனதில் உள்ளதை கூறிய ரூபனுக்கு,

“நன்றி அத்தான்….நான் கிளம்புறேன்…”என்று முகமும்,அகமும் மலர்ந்து கிளம்பினாள் நிவேதா.நிவேதா கிளம்பியவுடன் தன் அலுவலகத்திற்கு வந்தவன் சில வேலைகளை முடித்துவிட்டு கிளம்பினான்.

தன் வீடு திரும்பும் வழியில் சிக்னலில் நின்று கொண்டிருந்த நேரம் எதிரே ஒரு ரெஸ்டாரன்ட்டிலிருந்து மது வெளி வருவதைக் கண்டான்.இவள் எங்கே இங்கு என்று யோசனை செய்யும் வேலையில் அவளோடு பேசிய படியே கௌதமும் பின்னருந்து வர,ரூபனுக்கு என்ன விஷயமாக இருக்கும் என்று யோசித்தவாரே மதுவின் முகத்தை ஆராய்ந்தான்,ஆனால் அவள் இயல்பாக கௌதமிடம் பேசிக் கொண்டிருந்தாள்.அவளது தெளிவான முகத்தைக் கண்ட ரூபனுக்கு மனது சற்று சமன்பட்டது.அதற்குள் அவனுக்கு சிக்னலும் பச்சை விழ,எப்படியும் நாளை கௌதமை பார்க்கும் பொழுது கேட்டு தெரிந்து கொள்வோம் என்று நினைத்தவன் வீட்ற்கு சென்றான்.

மதுவின் வீட்டில் சுந்தரி வாசலையே பார்த்துக்கொண்டிருக்க,கல்லூரி முடித்து வந்த நிவி அவரைக் கண்டு,

“என்ன சித்தி…யாரை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கீங்க…”என்று கேட்க,

“மதுவ தான் நிவி…சீக்கிரம் வந்துடுறேனு சொல்லிட்டு போனா…இன்னும் வரல போன் போட்டாலும் நாட் ரீச்சபுல்னு வருது…அதான்….”என்று கூற நிவேதா,

“வந்துடுவா சித்தி…நீங்க டென்ஷன் ஆகாம இருங்க….”என்றுவிட்டு செல்ல சுந்தரிக்கு மனது கேட்கவில்லை மகளுக்கு விபத்து நடந்ததிலிருந்து மனதில் ஏதோ இனம் கொள்ளா பயம் சூழ்ந்து கொண்டது.ஏற்கனவே மகளின் எதிர்கால வாழ்வை எண்ணி பயந்து கொண்டிருந்தவருக்கு இப்போது மகள் நல்லபடியாக வீடு வந்து சேரவேண்டும் என்ற பயமும் சேர்ந்து கொண்டது.இவ்வாறு பல சிந்தனைகளில் அவர் உழல வீட்டு வாசலில் ஸ்கூட்டியின் சத்தம் கேட்கவும் வாயிலுக்கே சென்றுவிட்டார்.

தன் வீட்டின் முன் வண்டியை நிறுத்திய மது தன்னைக் கண்டவுடன் வேகமாக வரும் அன்னையை கண்டு,

“என்னம்மா…ஏன் இப்படி ஓடி வர….”என்று பதட்டத்துடன் கேட்க அவளை முறைத்த சுந்தரி,

“ஏன்டி சீக்கிரம் வரேன் சொல்லிட்டு போனவ வர நேரமா இது…..போன் போட்டாலும் எடுக்கல…நான் பயந்துட்டேன்…”என்று அதுவரை மகளைக் காணுமே என்ற தவிப்பில் இருந்தவர் தன் ஆதங்கத்தை கொட்ட,

“ம்மா நான் என்ன சின்ன பிள்ளையா….இப்படி பயப்படுறீங்க….”என்று கேட்க அவளை தன்னால் முடிந்த மட்டும் முறைத்து விட்டு,

“என் கஷடம் எல்லாம் உனக்கு எங்க புரிய போது…போய் முகத்தை அலம்பிட்டு வா…சாப்பிடலாம் “என்று கூறிவிட்டு சென்றார்.தன் அறைக்கு வந்த மது முகம் கழுவி வந்து சாப்பிட உட்கார,அவளுடன் நிவியும் சாப்பிட அமர்ந்தாள்,

“என்னக்கா…எங்க போன சித்தி உனக்காக ரொம்ப நேரமா பார்த்துட்டு இருந்தாங்க…”என்று கேட்க,

“ம்ம்…”என்றவள் தன் சாப்பாட்டில் கவனம் செலுத்த நிவி,

“அக்கா….வேலை விஷயம் என்ன ஆச்சு…”என்று கேட்க,

“ம்ம்…என்னோட பிரண்டோ கம்பெனியில வர சொல்லிருக்கான் பார்ப்போம்…”என்று கூறிவிட்டு ஏதோ யோசனை செய்தவாரே சாப்பிட்டு முடித்தவள் தன் அறைக்கும் சென்றுவிட்டாள்.நிவேதாவும் மது புது வேலையை பற்றி யோசனையில் இருக்கிறாள் என்று தொந்திரவு செய்யவில்லை.

தன் அறைக்கு வந்த மதுவிற்கு இன்று கௌதம் தன்னிடம் கூறியதே மனதில் ஓடியது.பழைய வேலை செய்யும் இடத்தில் அவளது கணக்கு வழக்குகளை முடித்துவிட்டு வெளி வந்த மதுவிற்கு அடுத்து எங்கு சென்று வேலை கேட்பது என்பதிலேயே சிந்தனை.அதனால் அன்றைய நாளிதழ்களில் காலை பார்த்து வைத்திருந்த வேலை நேர்காணலுக்கு சென்றவளுக்கு தோல்லவியே மிஞ்சியது.அடுத்து எங்கு செல்வது என்று யோசனையிலேயே சாலையில் நடந்து வந்துவளை உரசிய படு நின்றது ஒரு வாகனம் ஒரு நிமிடம் ரூபனோ என்று பயந்தவள் காரிலிருந்து கௌதம் இறங்கவும்,

“ஏய் விட்டா ஏத்திடுவ போல…”என்று நக்கலாக கூற அவளை முறைத்த கௌதம்,

“இந்த மாதிரி ரோட்டுல கனவு கண்டுக்கிட்டு நடந்தா ஏத்தாம என்ன செய்வாங்க..”என்று மதுவைக் கூற இப்போது அசடுவழிவது மதுவின் முறையானது.

“அப்படி என்ன யோசனை மேடத்துக்கு…”என்று கேட்க மது பதில் ஏதும் கூறாமல் அமைதியாக நிற்க,அவளது முகத்தையே கண்டவனுக்கு என்ன தோன்றியதோ,

“சாப்பிட்டியா மது…”என்று கேட்க மதுவிற்கு தங்கள் கல்லூரி நாட்கள் நியாபகத்திற்கு வர,

“ஏன் ஏதாவது வாங்கி தர போறியா…”என்று குறும்பாக கேட்டாள்.

“என்ன வேணும் உனக்கு வா…அதோ அங்க ஒரு ரெஸ்டாரன்ட் இருக்கு வா…”என்று கூப்பிட மதுவும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் சென்றாள்.அவளுக்கும் சற்று நேரம் நிம்மதியாக தன் கஷ்டங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு இருக்க வேண்டும் என்று தோன்றியது.தற்செயலாக கௌதமைக் காணவும் தன் கல்லூரி கால வாழ்க்கை நியாபகத்திற்கு வர அவனிடம் எப்போதும் கல்லூரியில் கேட்பது போல கேட்டாள்.கௌதமும் எந்த பிகுவும் பண்ணாமல் அவளை அழைத்தது மனதிற்கு சற்று இதமாக இருந்தது.

இருவரும் தங்களுக்கென்று ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அமர,அவர்களை நோக்கி வந்தான் பேரர்.அவனிடம் தங்களுக்கு வேண்டிய உணவை ஆடர் கொடுத்துவிட்டு சிறிது நேரம் தங்கள் கல்லூரி கதைகளை பேசிக் கொண்டிருந்தனர்.பின் தங்களது உணவை உண்டுவிட்டு மேலும் சற்று பேசினார்கள்.அப்போது மது,

“தேங்க்ஸ் கௌதம்…ரொம்ப நாளைக்கு அப்புறம் கொஞ்சம் பிரஷ் ஆன மாதிரி இருக்கு…”என்று கூற அவளை கண்டு புன்னகைத்தவன்,

“ம்ம் எனக்கும் தான்…சரி சொல்லு என்ன பிரச்சனை…ரோட்ல ஏதோ யோசனையில போற…”என்று கேட்க அதுவரை இதமாக இருந்த மதுவின் மனநிலை மீண்டும் இறுகியது.அவளது முகத்தையே பார்துக்கொண்டிருந்த கௌதமுக்கு,ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரிந்தது.

“ஒண்ணுமில்ல கௌதம்…சும்மா ஏதோ…”மழுப்ப பார்க்க,அவளை கூர்மையாக பார்த்த கௌதம்,

“மது உனக்கு சொல்ல விருப்பமில்லனா விடு…”என்று கூற அவனது குரலிலேயே அதிர்ப்தி தெரிய அதற்கு மேலும் மறைக்க தோன்றாமல் தனக்கு வேலை போனதையும்,தற்போது வேலைக்காக அலைவதையும் கூறினாள்.அவள் கூறிய அனைத்தையும் கேட்ட கௌதம்,

“ஏய் மது…எனக்கு ஒரு ஐடியா தோணுது…”என்று உற்சாகமாக கூற,அவனைக் கேலியாக பார்த்தவள்,

“அது உருப்படியானதா இருக்குமா…”என்று கேட்டாள்.அவளை முறைத்தவன்,

“ஏய் என்ன கிண்டல் பன்றியா…முதல்ல நான் சொல்லுறத கேளேன்….”என்றுவிட்டு அவளிடம் தன் கம்பெனியில் வேலைக்கு அக்கௌன்ட் செக்‌ஷனிற்கு ஆள் தேவைப்படுவதாக கூறினான்.

“இல்ல கௌதம்…எனக்கு வேற எங்காவது வேலை இருந்தா சொல்லேன்….”என்று மறுப்பாக கூற,

“ஏன் நீ என் கம்பெனிக்கெல்லாம் வேலைக்கு வரமாட்டியா….”என்று கோபமாக கேட்க,அவனை முறைத்தவள்,

“ஏய் நான் அதுக்கு சொல்லப்பா…அது நான் என் படிப்பைக் கூட முழுசா முடிக்கல,அதுமட்டுமில்லாம….”என்று மேலும் தான் மறுப்பதற்கான காரணத்தைக் கூறவர கௌதம் எதையும் கேட்பதாக இல்லை.

“ஓய் ரொம்ப பண்ணாத…நாளைக்கே வா….நாம ஆபிஸ்ல பேசிக்கலாம்…எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு…அதுமட்டுமில்லாம நீ அகௌன்ட்ஸ் பார்த்தனா எனக்கும் கொஞ்சம் டென்ஷன் பிரியா இருக்கும்…ப்ளீஸ்…”என்று கெஞ்சவே தொடங்க,

“ஏய் சரி சரி வரேன்…ஆன எனக்கு ஒத்து வரலனா கண்டிப்பா ஒத்துக்க மாட்டேன்…ஓகே வா…”என்று கூறிவிட்டு தான் வந்திருந்தாள்.தற்போது படுக்கையில் நாளைக்கு கௌதமின் கம்பெனிக்கு செல்வதா வேண்டாமா என்ற சிந்தனை தான்.அங்கு சென்றால் கண்டிப்பாக ரூபனைக் சந்திக்க நேரும் அதனால வேண்டாம் நினைத்தவள்,நாளைக்கு எப்படியாவது கௌதம் கிட்ட இத சொல்லி வேற வேலைக்கு தான் பார்க்கனும் என்று முடிவு எடுத்துவிட்டு உறங்க முற்படும் நேரம் அவள் அறை கதவை யாரோ தட்டினார்கள்.இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசித்தவாரே கதவை திறக்க அங்கே அவளது தம்பி ஆனந்த் நின்று கொண்டிருந்தான்.

“சாரி க்கா…தூங்கிட்டியா…”என்று தயக்கத்துடன் கேட்க,

“டேய் அதெல்லாம் இல்லை…சொல்லு…”என்று கேட்க,

“அக்கா அது …”என்று அவன் தான் சொல்லவந்ததை தயங்க,

“என்ன ஆனந்த்…சொல்லு நீ சொன்னா தான தெரியும்…”என்று கூற

“அக்கா…எனக்கு ஸ்கூல் பீஸ் கட்ட நாளைக்கு கடைசி நாள்…நீ எப்போதும் கரெட்டா கட்டிடுவ இந்த தடவை மறந்துட்ட…”என்று தான் வந்ததன் காரணத்தைக் கூற மதுவிற்கு கஷ்டமாக போய்விட்டது,எப்போதும் சம்பளம் போட்டவுடன் அவள் செய்யும் முதல் வேலை ஆனந்திற்கும்,நிவேதாவிற்கும் பீஸ் கட்டுவது தான்.இந்த மாதம் நடந்த குளருபடிகளால் மறந்து போயிருந்தாள்.தன் தம்பியை நேர் கொண்டு பார்க்க முடியாமல்,

“சாரி டா…நந்து  நான் மறந்தே போயிட்டேன்….நாளைக்கு கட்டிடுறேன்….”என்று கூறி அவனை அனுப்பியவளுக்கு அப்போது தான் நிவேதா என்ன செய்தாள் என்று யோசித்தவாறே அவளது ரூம் சென்று விசாரித்தாள்.நிவேதா தன் பகுதி நேர வேலையில் இருந்து கிடைத்த பணத்திலிருந்து கட்டியதாக கூற,

“ஓ…அந்தளவுக்கு பெரிய மனுஷி ஆகிட்டியா நீ…”என்று மது அவளிடம் காய ஆரம்பிக்க பின் நிவேதா இனி இதுபோல செய்ய மாட்டேன் என்று கூறிய பிறகே விட்டவள்,

“இனி இதுபோல முட்டாள் தனம் செஞ்ச அப்புறம் இருக்கு உனக்கு…”என்று எச்சரிக்கை விடுக்கவும்,அவளது அன்பில் கரைந்த நிவேதா மதுவை கட்டிக் கொண்டாள்.

நிவேதா அறையிலிருந்து வெளி வந்த மது தன் அறைக்கு செல்லும் போது நித்யாவின் அறையில் ஏதோ அழும் சத்தம் கேட்க நின்றவள் நித்யாவின் அறைக்கு செல்ல நினைக்கையில் வேகமாக அறையை திறந்து கொண்டு வந்த நிர்மல் கதவை அறைந்து மூடிவிட்டு சென்றான்.ஏதோ கணவன்,மனைவி பிரச்சனை போல் என்று நினைத்து தன் வழியே சென்றுவிட்டாள் மது.அப்பொழுதே மது நித்யாவிடம் கேட்டிருந்தால் பின்னால் வரப்போகும் பிரச்சனைகளிலிருந்து தப்பித்திருக்கலாம்.ஆனால் விதி யாரை விட்டது என்பது போல நடக்கபோகும் விபரீதங்களை யாராலும் தடுக்க முடியாதும் போனது.   

Advertisement