Advertisement

அத்தியாயம் – 14

 

 

“உண்மையை தான் சொன்னேன் மித்ரா. உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம் என்றான் செபாஸ்டியன்.

 

 

“அப்போ அஷ்… அஸ்வினிக்கு உங்களை… என்று அவள் முடிக்கவில்லை “அவ தான் வேற ஒருத்தரை விரும்புறாளே!! என்று முடித்தான் அவன்.

 

 

“புரியலை செபாஸ்டியன் நீங்க என்ன சொல்ல வர்றீங்க ப்ளீஸ் எனக்கு புரியற மாதிரி சொல்லுங்க என்றாள் மித்ரா.

 

 

“உங்களுக்கு தெரிஞ்சிருக்காதுன்னு நினைக்கறேன். நானும் வினியும் ரிலேஷன்ஸ்

 

 

“ஹ்ம்ம் தெரியும்

 

 

“எப்படி?? வினி சொன்னாளா!! யார்கிட்டயும் சொன்னதில்லைன்னு சொன்னாளே!!

 

 

“தெரியும் செபாஸ்டியன் ஆனா அவ சொல்லலை நானா தெரிஞ்சுக்க வேண்டியதா போச்சு என்றவள் அன்றைய நிகழ்வை பகிர்ந்தாள்.

 

 

“ஓ!! என்றான்.

 

 

“சரி நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க செபா

 

 

“சின்ன வயசுல இருந்தே எனக்கு வினியை தெரியும். அவளை ரொம்ப பிடிக்கும் எனக்கு மட்டுமில்லை எங்க வீட்டில இருக்கற எல்லாருக்கும் அவளை ரொம்ப பிடிக்கும்

 

 

“பொண்ணுங்க இல்லாத வீடு எங்களோடது அதனால வினிக்கு ரொம்ப செல்லம் எங்க வீட்டுல

 

“அவ கேட்டது உடனே கிடைக்கும் அவ நினைச்சது உடனே நடக்கும். அதுனால அவளுக்கு கொஞ்சம் பிடிவாதமும் உண்டு. அவளோட சில விசேஷ குணங்களும் உண்டு

 

 

“அதை நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியதில்லைன்னு நினைக்கிறேன். அதுக்கு காரணம் அவ வீடு மட்டுமில்லை. எங்க வீட்டில உள்ளவங்களும் தான்

 

 

“இப்படி தான் பழகணும் இப்படி தான் இருக்கணும்ன்னு நெறைய விஷயங்களை அவளுக்கு தப்பா கைட் பண்ணிட்டாங்க. அவளும் அது போலவே வளர்ந்திட்டா. மத்தப்படி அவ ரொம்ப நல்லப்பொண்ணு

 

 

“அது யாருக்கு தெரியுதோ இல்லையோ உனக்கு தெரிஞ்சிருக்கும் நினைக்கிறேன் மித்ரா. எங்க வீட்டில நான் வினியை விரும்புறதை சொன்னப்போ யாரும் எதிர்க்கலை

 

 

“சின்ன பொண்ணு கொஞ்ச நாள் போகட்டும் அவ வீட்டில பேசி கல்யாணம் பிக்ஸ் பண்ணிடலாம்ன்னு சொன்னாங்க

 

 

“நானும் நெறைய ஆசையை வளர்த்திட்டேன். அப்புறம் வினி படிச்சு முடிச்சுட்டு இங்க ஜாயின் பண்ண வைச்சேன். அவளை பக்கத்துல வைச்சு பார்த்துக்கணும்ன்னு ஒரு ஆசை அதான்

 

 

“அவகிட்ட என் மனசுல உள்ளதை நான் நேரடியா இதுவரை சொன்னதில்லை. அவளா புரிஞ்சுக்குவான்னு நினைச்சேன்

 

 

“பட் அது நடக்கலை அதுக்குள்ள அந்த இடி… சாரி சைதன்யன் குறுக்க வந்திட்டான் என்று மரியாதை இன்மையில் தன் கணவனை செபாஸ்டியன் பேசுவதை கண்டு அவனை முறைத்தாள் அவள்.“ப்ளீஸ் முறைக்காதீங்க மித்ரா. நீங்க என்ன வேணா நினைச்சுக்கோங்க எனக்கு அவன் மேல ரொம்ப கோபம் தான்

 

 

“அவர் என்னோட ஹஸ்பன்ட் அட்லீஸ்ட் என் முன்னாடி அவரை கொஞ்சம் மரியாதையா பேசுங்க ப்ளீஸ்

“இட்ஸ் ஓகே சாரி என்றவன் “அவனை பிடிச்சிருக்குன்னு என்கிட்டயே வந்து சொன்னா!! எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா அன்னைக்கு

 

 

“அப்போ தான் தெரியும் உனக்கும் அவளுக்கும் கூட அவனால பிரச்சனைன்னு. சாரி அவரால…

 

 

“அதான் அவர் அஸ்வினி சொன்னதை செய்ய முடியாதுன்னு தான் பிரிஞ்சுட்டார்ல அப்புறம் என்ன செபாஸ்டியன் நீங்க உங்க லவ்வை அவகிட்ட சொல்லியிருக்க வேண்டியது தானே

 

 

“வினிகிட்ட வேணும்ன்னா நமக்குள்ள ஒத்துவராதுன்னு அவர் சொல்லியிருக்கலாம். ஆனா அவர் வேலையை விட்டு போக வைச்சது நானு என்று குண்டை தூக்கி போட்டான் அவன்.

 

 

“என்ன… என்ன சொல்றீங்க செபாஸ்டியன்?? என்றவளுக்கு உள்ளே வலித்தது. ஆக அவன் இங்கு தொடர்ந்து இருந்திருந்தால் அஸ்வினியிடம் ஏதோவொரு விதத்தில் சமாதானம் ஆகியிருப்பான் அப்படி தானே என்று எண்ணி அவள் மனம் கூப்பாடு போட்டது.

 

 

“ஆமா மித்ரா நான் தான் போக வைச்சேன். அந்த காண்ட்ராக்ட் சைனிங் அத்தாரிட்டி நான் தான். அவங்க காண்ட்ராக்ட் நான் அன்னைக்கே கேன்சல் பண்ணிட்டு வேற ஆளுங்களை அப்பாயின்மென்ட் பண்ணிட்டேன்

 

 

“எதுக்காகன்னு பெரிசா யோசிக்க வேண்டியதில்லை. ஒரு வேளை அவங்க திரும்ப மீட் பண்ணியிருந்தா மனசுவிட்டு பேசி அவங்களுக்குள்ள எல்லாம் சரியாகியிருக்கும் அப்படிங்கறது என்னோட எண்ணம்

 

 

“நான் பண்ணது தப்புன்னு எல்லாம் அப்போ எனக்கு தோணவேயில்லை. அது அஸ்வினிக்கு நல்லதுன்னு நினைச்சு தான் அப்படி செஞ்சேன்

 

 

“அஸ்வினியை பொறுத்தவரை எனக்கு ஏதோவொரு பொண்ணோட பிக்ஸ் ஆகிடுச்சுன்னு நினைச்சுட்டு இருக்கா. அன்னைக்கு உன்கிட்ட கூட என்னோட பியான்சியான்னு கேட்டதா சொன்னா. என் மனசுல இருக்கறது அவ தான்னு அவளுக்கு இன்னும் தெரியாது

 

 

“ஏன்… ஏன் இன்னும் சொல்லாம வைச்சி இருக்கீங்க. நீங்க எவ்வளவு போல்ட் அவகிட்ட இந்த விஷயத்தை உங்களால சொல்ல முடியலையா!! நம்புற மாதிரி இல்லையே!!

 

 

“லவ் வந்தா வீரனும் கோழைன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதை நான் இப்போ உணர்றேன். அவகிட்ட சொல்ல எனக்கு ஐஞ்சு நிமிஷம் ஆகாது

 

 

“ஆனா அவ இன்னும் அவனோட நினைப்புல இருந்து வெளிய வராம இருக்காளே!! நான் இப்போ எப்படி போய் என்னோட லவ்வை அவளுக்கு புரிய வைப்பேன்

 

 

“அவளும் என்னை புரிஞ்சு என் லவ்வை அக்சப்ட் பண்ணா பரவாயில்லை. அவளுக்கு என்னோட லவ் புரியாம போச்சுன்னா என்ன செய்ய

 

 

“நான் ஒண்ணும் சைதன்யன் இல்லை ஒண்ணு இல்லைன்னா இன்னொண்ணு அப்படின்னு மாறிகிட்டே இருக்க

 

 

“மைன்ட் யுவர் டங் செபாஸ்டியன் என்றாள் மித்ரா ஆத்திரமாக.

 

 

“தப்பா ஒண்ணும் சொல்லலையே மித்ரா. அவன் தான் முதல்ல அஸ்வினிக்கு கடலை போட்டு இருக்கான், இப்போ உன்னை கல்யாணமே பண்ணிக்கிட்டானே. அவனை பத்தி என்ன உயர்வா நான் சொல்ல முடியும்

 

 

“நீங்க ரொம்ப பேசறீங்க செபாஸ்டியன். நான் மட்டும் தான் அவரை விரும்புறேன்… என்றவளின் கண்களில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது.

 

 

“அப்புறம் எதுக்கு அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. உங்ககிட்ட அவன் தப்பா….

 

“ஷட் அப் செபாஸ்டியன். நீங்க ஏன் அவரை தப்பாவே நினைக்கறீங்க. உங்களுக்கு ஏன் அவரை பிடிக்கலைன்னு எனக்கு தெரியலை என்றவள் இருவரின் திருமணம் எந்த சூழ்நிலையில் நடந்தது என்பதை அவனுக்கு கூறியவள் அதன் பின்னான நிகழ்வுகளை அவனிடம் கூறாமல் தவிர்த்தாள்.

 

 

“சோ நான் சொன்னது சரி அவன் அவனோட சுயநலத்துக்காக உன்னை கல்யாணம் பண்ணிகிட்டான் அப்படி தானே

 

 

“ப்ளீஸ் செபாஸ்டியன் என் முன்னாடி அவரை நீங்க இதுக்கு மேல தப்பா பேசினீங்க நான் மனுஷியா இருக்க மாட்டேன்

 

 

“ஓகே நான் பேசலை. அது உங்க விஷயம் என்னமோ பண்ணிக்கோங்க!! உங்க கல்யாண விஷயம் அஸ்வினிக்கு இதுவரை தெரியாதுன்னு நினைக்கிறேன். தயவுசெய்து அதை அவளுக்கு தெரியப்படுத்துங்க

 

 

“முடியாதுன்னா என்ன செய்வீங்க!! என்று வீம்பு செய்தாள் மித்ரா.

 

 

“அதான் எனக்கு இப்போ விஷயம் தெரிஞ்சிடுச்சுல. நானே சொல்லிக்கறேன் என்றான் அவன்.

 

 

“சொல்லிக்கோங்க என்றுவிட்டு அவள் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.

 

 

“மித்ரா ஒரு நிமிஷம் என்று செல்லும் அவளை அவன் குரல் நிறுத்த நின்று திரும்பினாள் என்ன என்பது போல்.

 

 

“ஒண்ணே ஒண்ணு கடைசியா கேட்கணும். ஓகே நான் கேட்டிறேன். நீங்க எப்போல இருந்து அவனை சாரி உங்க அவரை விரும்பறீங்க என்று உங்க என்பதை அழுத்திச் சொன்னான்.

 

 

“நீங்க இவ்வளவு தூரம் பேசினதுல நான் என்னோட பெர்சனல் விஷயம் எல்லாமே உங்ககிட்ட சொல்லணும்ன்னு அவசியமில்லை செபாஸ்டியன். உங்ககிட்ட அவரை பத்தி பேசினதுனால அவரை நீங்க இளக்காரமா பேசுறதை எல்லாம் என்னால கேட்டிட்டு இருக்க முடியாது

 

 

“மித்ரா என்னை உங்களோட பிரதரா நினைச்சு என்கிட்ட சொல்லலாமே என்றவனின் குரல் இப்போது கனிந்திருந்தது.

 

 

“எனக்கு ஒரு அண்ணன் இருந்திருந்தா இப்படி என் புருஷனை தப்பா பேசுறவரை பார்த்திட்டு நான் சும்மா இருந்திருக்க மாட்டேன். அவரை சுயநலவாதின்னு சொன்னீங்களே. உங்க… உங்க அஸ்வினி மட்டும் எந்த விதத்துல சேர்ப்பீங்க

 

 

“இல்லை நீங்க தான் எந்தவிதத்துல சேர்த்தின்னு சொல்லுங்க. உங்களுக்கு உங்களோட காதல்ன்னு சுயநலம்.. அஸ்வினிக்கு அவளோட காதல்ங்கற சுயநலம்…ஆனா அவர் குடும்பத்துக்காக பார்த்தது மட்டும் பெரிய தப்புல!! அது அவரோட சுயநலம்ன்னு பேசுவீங்கள்ள!!

 

 

“அவ என்னோட பிரண்டு தான் இல்லைங்கலை. ஆனா அவளை பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும்ன்னு எனக்கு தெரியாது. உங்களைவிட அவளை எனக்கு நல்லா தெரியும்

 

 

“பேசினா வார்த்தைகள் தான் வளரும். வீணா மனசு கஷ்டம் ஆகும். வேணாம் இதோட விட்டிறலாம். நீங்க பேசினீங்க அப்படிங்கறதுக்காக நானும் பதிலுக்கு பதில் பேச விரும்பலை

 

 

“லாஸ்டா ஒண்ணு இனிமே என் ஹஸ்பன்ட் பத்தி நீங்க என்கிட்ட பேச வேண்டாம்ன்னு உங்களை எச்சரிக்கறேன். என்னோட பர்சனல் பத்தி நீங்க இதுக்கு மேல எதுவும் பேசுனீங்கன்னா நான் மேனேஜ்மெண்ட்கிட்ட கம்பிளைன்ட் பண்ணிடுவேன். நமக்குள்ள ஒன்லி ஆபீசியல் டாக் தான் குட் பை என்றுவிட்டு அவள் தன் போக்கில் கிளம்பி சென்றாள்.

 

 

வீட்டிற்கு வந்தும் அவளுக்கு ஆத்திரம் தீரவில்லை. செபாஸ்டியனுக்கு எங்கிருந்து அவ்வளவு தைரியம் வந்தது சைதன்யனை பற்றி பேச என்று எண்ணி எண்ணி தலையை வலித்தது அவளுக்கு.அவனிடம் தங்களை பற்றி சொல்லியிருக்கக் கூடாது என்று காலங்கடந்து அவள் சிந்தனையில் தோன்றியது.

 

 

வீட்டிற்கு வரும் வழியெல்லாம் இதையே எண்ணியபடியே வந்திருந்தவள் வீட்டின் சூழ்நிலையை கவனிக்க தவறினாள்.வழக்கம்போல் வீட்டிற்கு வந்து அவள் செய்யும் வேலைகள் அனைத்தும் செய்து முடித்து ஓய்வாய் அவள் அறைக்கு சென்ற பின்னே தான் அவளுக்கு சைதன்யன் அங்கில்லாதது உரைத்தது.

 

 

வீட்டிற்கு நுழையும் போதே மகேஸ்வரி அவளை ஒரு மாதிரி பார்த்தாரோ என்று இப்போது எண்ணத் தோன்றியது.மாமியாரிடம் கேட்கலாமா!! இல்லை அவனுக்கே போன் செய்யலாமா!! என்று யோசித்தவள் அவனிடமே கேட்டுவிடுவோம் என்று எண்ணி அவனுக்கு போன் செய்தாள்.

 

 

அவன் போன் சுவிட்ச் ஆப்பில் இருந்தது. அவனுக்கு என்னாவாயிற்றோ என்ற பதற்றம் மெல்ல அடிவயிற்றில் தோன்றி பெரும் பீதியை அவளுக்கு கொடுத்தது.

 

 

காலையில் அவனிடம் ரொம்பவும் அதிகமா பேசிட்டோமே!! என்று பேசிய பின்னே வருந்திக் கொண்டிருந்தாள். நீ பேசாத வார்த்தைக்கு நீ எஜமானன் நீ பேசிய வார்த்தைக்கு அது உனக்கு எஜமானன் என்பது அவள் விஷயத்தில் உண்மையாய்.

 

 

நேரே மாமியாரிடம் சென்றவள் தயங்கிக் கொண்டே “அத்தை அவ… அவர் எங்க போய்ட்டார் அத்தை. போன் பண்ணேன் சுவிட்ச் ஆப்ன்னு வருது என்றவளின் முகத்தில் கலவரத்தை பார்த்து வியந்தார் அவர்.

 

 

“என்ன சொல்ற அவன் தான் அப்போவே ஊருக்கு கிளம்பிட்டானே!! உனக்கு போன் பண்ணி சொல்றேன்னு சொன்னானே!! உனக்கு போன் பண்ணலையா இல்லை உன் போனை நீ வழக்கம் போல ஆப் பண்ணி வைச்சிருந்தியா என்றார்.

 

 

“இல்லை அத்தை போன் ஆன்ல தான் இருந்துச்சு. ஒரு வேளை அவர் போன் ஆப் ஆகிட்டு போல அதான் போன் பண்ணியிருக்க மாட்டார். எதுக்கு அத்தை இவ்வளவு சீக்கிரமா கிளம்பி போனார்

 

 

“அங்க இருந்து போன் பண்ணியிருந்தாங்கன்னு சொன்னான்ம்மா அதான் கிளம்பிட்டான் என்றார் மகேஸ்வரி.

 

 

மகேஸ்வரி வேண்டுமானால் அவன் சொன்னதை நம்பியிருக்கலாம் மித்ராவால் அவன் சொல்லிச் சென்ற காரணத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘எல்லாம் தன்னால் தான் என்னால் எனக்கும் நிம்மதியில்லை அவருக்கும் நிம்மதியில்லை என்று எண்ணி கண்ணீர் விட்டாள்.

 

 

ஏற்கனவே செபாஸ்டியனிடம் பேசியதில் வேறு மனம் அதிக காயப்பட்டு போயிருந்தது. இப்போது சைதன்யனும் அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் கடலூருக்கு கிளம்பிவிட்டான்.

 

 

நெஞ்சில் ஆராரணம் ஒன்று ஏற்பட்டு வலி எடுக்க ஆரம்பித்தது அவளுக்கு. ஒரு புறம் சைதன்யனின் மீது கோபம், வருத்தம், தன் இயலாமை நினைத்து ஆத்திரம் எல்லாமாக ஒன்று சேர்ந்து அவளை நிலைக்கொள்ளாது தவிக்க வைத்தது.

 

 

வெறும் கூடாகவே இருந்தது அவள் நடமாட்டம். அலுவலகத்திலும் யாரிடமும் பேசப்பிடிக்கவில்லை. வீட்டிலோ யாரிடமும் அதிகமாய் பேசவில்லை.

 

 

வீட்டில் இருந்த நேரங்களில் ஒன்று சமையல் அல்லது எப்போதும் மதுவை கட்டிக்கொண்டு அவளுடனே மட்டுமே அவள் பொழுது கழிந்தது.

 

 

இரண்டு நாட்கள் சென்றிருக்கும் அதிகாலை வேளை மித்ரா அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் எழுந்திருந்தாள். தெரு வாயிலை கூட்டி தண்ணீர் தெளித்து அவள் கோலம் போட்டு எழவும் சைதன்யன் அவளை தாண்டி உள்ளே செல்லவும் சரியாக இருந்தது.

 

 

இத்தனை நாட்கள் மாதங்கள் அவனை பிரிந்திருந்தது கூட அவளுக்கு தெரியவில்லை. இந்த இரண்டு நாட்களாய் அவனை காணாது ஜென்ம ஜென்மாய் காணாதது போல் இருந்தது அவளுக்கு.

 

 

அவன் பின்னோடு வேகமாய் அவளும் உள்ளே நுழைந்தாள். காபியை போட்டுக்கொண்டு அவர்கள் அறைக்குள் நுழைய சைதன்யன் குளியலறையில் புகுந்திருந்தான்.

 

 

அவன் வெளியே வரும் வரை காத்திருந்தவள் அவனிடம் காபியை நீட்ட அவனோ அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை. “என்னங்க காபி என்று அழைத்தாள்.

 

 

“வேண்டாம்…

 

 

“ஏன்??

 

 

“என்னை பிடிக்காதவங்களுக்கு கஷ்டம் கொடுக்க நான் விரும்பலை

 

 

‘நான் எப்போடா உன்னை பிடிக்காதுன்னு சொன்னேன் என்று அலறியது அவள் உள்ளம்.

 

 

ரணப்பட்டிருந்த மனது சும்மா இல்லாமல் மேலும் ரணப்பட்டது. “உங்களுக்கு பிடிக்கலைன்னு சொல்லுங்க என்னை எதுக்கு காரணம் சொல்றீங்க என்றாள்.

 

 

“எதுக்கு அம்மாகிட்ட சீன் போட்டே??

 

 

“சீனா!! நானா!! என்ன சொல்றீங்க எனக்கு புரியலை!!

 

 

“நீ என்னமோ எனக்காக உருகற மாதிரி அம்மா என்னை போன் பண்ணி திட்டுறாங்க. என்ன தான்டி உனக்கு வேணும். என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டியா!!

 

 

“உன்னை கஷ்டப்படுத்த வேணாம்ன்னு நான் கிளம்பி போனா அம்மா திட்டுறாங்க. சொல்லு மித்ரா நான் என்ன செய்யணும், சத்தியமா எனக்கு புரியலை

 

 

“நீ என்ன எதிர்பார்க்குறன்னு எனக்கு தயவு செஞ்சு சொல்லிடு. நான் ரொம்ப விருப்பப்பட்டு படிச்ச படிப்பு. நெறைய செய்யணும்ன்னு கனவோட இருக்கேன்

 

 

“என்னால ஊருக்கு போய் நிம்மதியா எந்த வேலையும் பார்க்க முடியலை. உன்கிட்ட நெருங்கி வந்தா நீ விலகி விலகி போற. சரின்னு விலகி போன உன்னை மாதிரி ஒருத்தி இல்லைன்னு எங்கம்மா எனக்கு அர்ச்சனை பண்றாங்க

 

 

“ஏதாச்சும் பேசுடி எப்போ பார்த்தாலும் உன் மைன்ட் வாய்ஸ் கட்டிட்டு அழதா. இன்னைக்கு எனக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சே ஆகணும். எனக்கு உன்னோட நிம்மதி ரொம்ப முக்கியம் சோ நான் என்ன பண்ணணும்ன்னு நீயே சொல்லு என்றான்.

 

 

‘என்னோட நிம்மதி உங்ககிட்ட தான் இருக்குன்னு கூட உங்களுக்கு புரியாது. கடைசில அம்மா சொன்னாங்கன்னு தான் வந்திருக்கார் என்று தோன்றவும் உள்ளே எதுவோ ஒன்று உடைந்தார் போல இருந்தது.

 

 

அவன் பேசிய பேச்சை சரியாக கவனிக்காதவள் அதில் அவளுக்கு சா(பா)தகமானதை மட்டும் எடுத்துக்கொண்டாள்.“அப்போ நீங்க அத்தை சொல்லி தான் வந்தீங்க. எனக்காக எல்லாம் வரலை அப்படி தானே

 

 

“லூசா நீ உன் நிம்மதிக்காக தான் நான் ரெண்டு நாள் முன்னாடியே ஊருக்கு போனேன். இப்படி பேசுற வார்த்தைக்கு எல்லாம் நீயா அர்த்தம் கண்டுபிடிச்சுக்கிட்டா நான் ஒண்ணும் பண்ண முடியாது மித்ரா

 

 

“அப்போ உங்களுக்கு என் நிம்மதி தான் முக்கியம் அப்படி தானே

 

 

“அதுல உனக்கு என்ன டவுட்டு

 

 

“சரி கேட்டுக்கோங்க நான் இனிமே வேலைக்கு போக மாட்டேன்

 

 

“ஏன்??

 

 

“இப்போ தானே சொன்னீங்க என்னோட நிம்மதி முக்கியம்ன்னு

“சரி போக வேண்டாம்… வேற

 

 

“என்னை எங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கணும் என்றதும் அவனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

 

 

“எதுக்கு அங்க போகணும்?? என்னை ஊர்புராவும் கேவலப்படுத்தணுமா மித்ரா?? என்றவனின் பேச்சில் வலி இருந்தது.

 

 

அதையெல்லாம் அவள் கவனிக்கவேயில்லை. “நான் ஒண்ணும் நிரந்தமா அங்க போய் இருக்கணும்ன்னு சொல்லலை. எனக்கு நிம்மதி வேணும் நானும் மதுவும் அங்க போய் கொஞ்ச நாள் இருக்க போறோம்

 

 

அவள் பேசுவதை எல்லாம் கண்ணை மூடி கேட்டவன் “அவ்வளவு தானா இன்னும் இருக்கா என்றான்.

 

 

“இப்போதைக்கு இவ்வளவு தான்

 

 

“சரி உன்னிஷ்டம் நான் தடுக்க மாட்டேன்

 

 

“ஊருக்கு நீங்க தான் என்னை கூட்டிட்டு போய் விடணும்

 

 

“ஓ!! நான் வராம போகணும்ன்னு வேற உனக்கு நினைப்பிருக்கா!! என்றவன் அறியவில்லை அவனால் போக முடியாத சூழல் வருமென்று.

 

 

மறுநாளே அவள் வேலையை ரிசைன் செய்வதாக எழுதிக்கொடுத்தாள். ஒரு மாத கால அவகாசத்தின் பின் தான் அவளை விடுவிக்க முடியும் என்றுவிட ஒரு மாதமும் முடிந்தது….

Advertisement