Pa Paa Poo
மறுநாள் காலையில்தான் சொசைட்டியிலிருந்து பணம் வருவதாக இருந்தது... சற்றே பெரிய தொகை என்பதால், அன்று வரும்படியாகக் கூறினார்கள்.
பார்த்திபனை வேறுபுரம் திசைதிருப்பிவிட்டு, பாட்டி, பனிமலர் பூதம் என மூவரும் சொசைட்டி நோக்கி புறப்பட்டிருந்தனர். அங்குச் செல்கின்ற வழியில் தான், சூரிய வர்மன் பணிபுரியும் வங்கியும் இருப்பதால், சூரிய வர்மன் அறியாமல் செல்லவேண்டுமென்று பிரயத்தனம் செய்து சென்ற...
பகுதி - 23
பழைய லாரி ஒன்றை இரண்டாவதாக வாங்குவதென்ற முடிவில் அதற்கான அனைத்து ஏற்பாடையும் தொடங்கியிருந்தான். ஆம்! பார்த்திபனை பூதம் தனது வழிக்குக் கொண்டு வந்திருந்தான்...
"நண்பா இந்தப் பூதம் உசுரோட இருக்குறதும் பூச்சி மருந்து குடிச்சுச் சாகுறதும் உன் கைல தான் இருக்கு..." எனப் பார்த்திபனை மிரட்ட,
"என் கைலையா?" எனக் கேள்வியாகப் பார்த்திபன் நக்கலுடன்...
"ஏன் இப்படித் தோணுது? என்ன ஆச்சு எனக்கு ? பார்த்திபா சூதானமா இரு... " என அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டு அங்கிருந்து விறுட்டென்று வெளியேறிவிட,
பனிமலரோ கோபமாக, "எல்லாரும் ஏன் அவரைச் சாப்பிடவிடாம அனுப்பிவிடீங்க ?'' எனக் கேட்க,
"ஓ அவன் சாப்பிடாமல் போய்ட்டானு நினைச்சியா? தட்டு காலி ஆகிடுச்சு...அவன் தட்டுமட்டுமில்ல. நீ கொண்டுவந்த தட்டே காலி...
பகுதி – 22
பார்த்திபனுக்கு அந்தச் சாப்பாடைவிட, தன்னைத் தேடி தனக்காக ஒருத்தி நாடி உணவை தயாரித்து வைத்திருக்கிறாள் என்பதே அத்தனை ஆனந்தத்தைக் கொடுக்க, வேர்க்க விறுவிறுக்க ஓடிவந்தான்...
பூவம்மாள் பாட்டியின் வீட்டிற்குள் நுழையும் போதே, நெய் மனம் கமகமவெனக் கமழ்ந்து அவன் நாசியை நிறைக்க, பனிமலரின் மலர்ந்த முகம் அவனுடைய மனதை முதல் முறையாக நிறைத்தது.
இதுநாள்வரை...
பகுதி - 21
பார்த்திபன் கண்களில் கூர்மையுடன், எதிரிலிப்பவர் கூறவிருக்கும் வார்த்தைக்காகக் கண்களை இடுக்கி பார்க்க, பார்த்திபனுக்கு ஓரடி பின்னால் பூதம் நின்றிருந்தான்.
அவர்கள் நின்றிருந்த இடம், வேலுசாமியின் மில். அங்கே பார்த்திபனின் முதலாளி ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க, பார்த்திபன் அவரே தொடங்கட்டும் என்று நின்றிருந்தான்.
அங்கு வேலுசாமி இல்லை. வேலுசாமி வருகைக்காகத் தான் பார்த்திபனின் முதலாளியும் விஷயத்தைச்...
அதற்கான காரணத்தை மலர் அப்போது ஆராயவில்லை. ஆராயவேண்டுமென்று கூட அவள் உணரவில்லை. ஏதோவொன்று உடனடியாகப் பார்த்திபனுக்கு ஏதேனும் செய்யவேண்டுமென்று தோன்றியது. பூதம் சாப்பாடு விஷயத்தைத் தொடங்கவும், சட்டென்று பார்த்திபனுக்கு என்ன உணவு பிடிக்குமென்று கேட்டிருந்தாள்.
"அவனுக்குச் சாப்பிட்றதுல எல்லாம் பிடிக்கும். எதையும் ஒதுக்கமாட்டான்...குறிப்பா பால் சேர்த்த பலகாரம்னா ரொம்பப் பிடிக்கும். இந்தப் பால்கோவா , பால்...
பகுதி – 20
பூதத்தின் அம்மா, தங்களுடைய பணியார கடையைப் பார்த்துக்கொள்ளும்படி பூதத்திடம் அறிவுறுத்திவிட்டு, பக்கத்தில் ஒரு வேலையாகச் சென்றிருக்க, ஆழ்ந்த சிந்தனையில் பூதம் அமர்ந்திருந்தான்.
'இவுங்க இரெண்டுபேரையும் கோர்த்துவிடணும்னு முடிவு செஞ்சாச்சு. ஆனால் எப்படினு தெரியலையே... முன்னேபின்ன லவ்ஸ் பண்ணிருந்தால் தெரிஞ்சிருக்கும்... எவண்ட போய் ஐடியா கேக்குறது ?' எனத் தீவிரமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தான்.
அப்போது பூதத்தின் எதிரே...
பகுதி - 19
மலரின் தாய் தந்தை மரணத்திற்குப் பார்த்திபன் காரணமில்லை என்று அவர்களின் வார்த்தைகள் கூறினாலும், அன்று காவல் நிலையத்தில் அந்தக் காவலர் எதற்காகப் பார்த்திபனை சுட்டி காண்பித்தார் ? என்ற கேள்வி அவளுடைய மனதில் விஸ்வரூபமெடுத்து நின்றது.
தன்னைச் சுற்றி என்ன தான் நடந்தது ? நடக்கிறது ? நடக்கபோகிறதென்று விடை தெரியாமல் நடந்தவளை...
பகுதி – 18
மேகம் திரண்டு இருட்டிக்கொண்டு வந்தது... சட்டென்று வெளிச்சம் மந்தமாகி மண்வாசத்துடன் மழை காற்று உடலை ஊடுருவி செல்ல, அணிந்திருந்த துப்பட்டாவை தலையைச் சுற்றி போட்டபடி, பிரதானசாலையிலிருந்து சற்றே ஒதுக்குப்புறமாய் ஓடிய கிளை வழி சாலைக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தாள், மலர்!
திரண்டு இருட்டிக்கொண்டு வந்த மேகத்தை போலவே, அவள் வாழ்வில் இருண்ட பக்கங்கள்...
பகுதி - 17
"வாங்க...வாங்க..." என்ற ஆர்ப்பாட்டமான வரவேற்போடு, பார்த்திபனை மலர் வரவேற்க, புருவங்கள் முடிச்சிட மலரை ஏறிட்டான் பார்த்திபன்.
"ஒன்னும் விளங்கலியா? ஏதோ பெரிய ஜமீன் குடும்பம்னு சொன்னாங்க. ஆனால் இது ஜெகஜால கில்லாடி குடும்பமாவுல இருக்குது?
படத்துலெல்லாம் ஜமீன் குடும்பம் எல்லாரும் அள்ளி அள்ளி கொடுக்குறது போலக் காட்டுவாங்க. இங்க மத்தவங்களோட பொருளை கொஞ்சம் கூட...
மலர் பார்த்திபனை பார்த்து, 'இது தான் உன் ஜமீன் குடும்பமா ?' எனப் பார்வையால் எள்ளி நகையாட,
"ஆமாம்! இஷ்டமில்லை! அவளோட நகையை நீங்க எடுக்க இஷ்டமில்லைதான். போதுமா ? ஏ..உன்னோட நகையை எடுத்து எங்கவேணும்னாலும் வச்சுக்கோ. இல்லை தூக்கி கூட ஏறி. ஆனால், அதுனால எங்க குடும்பத்துக்குள்ள பிரச்சனை வரக்கூடாது" எனப் பொதுவாக ஆரம்பித்து,...
பகுதி – 15
முழுவதுமாகச் சூழ்ந்துவிட்டிருந்த இருளை உமிழ்ந்துகொண்டிருந்த குழல் விளக்கு விரட்டிக்கொண்டிருக்க, அந்த வெள்ளை விளக்கொளியில் இருள் சூழ்ந்த கண்களுடன் பனிமலர் மட்டும் மாடியில் தனித்திருந்தாள்...
அவளுடைய கண்கள் கடந்தகாலத்தைக் காட்சிப்படுத்திக்கொண்டிருந்தன...அவளுடைய சிந்தனைகள் யாவும் முதன் முதலில் அவள் பார்த்திபனை காண நேர்ந்த சூழலை சுற்றி வட்டமிட தொடங்கின.
சில மாதங்கள் பின்னோக்கி சென்றன, அவளுடைய நினைவலைகள்!
"மேனேஜர்?...
பகுதி – 14
சற்றுத் தொலைவில் வந்த காவல் வாகனத்தைக் கண்டதும் பூதம் சந்தோசமாக, "டேய் நண்பா என் நாக்கை பாரு...புள்ளி புள்ளியா இருக்கா ?" எனப் பார்த்திபனிடம் கேட்க,
"அடேய்? என்ன உளறுற ?" எனப் பார்த்திபன் குழப்பத்துடன் எதிர் கேள்விகேட்டான்.
"இல்லை நண்பா, போலீஸ் வண்டி வரும்னு சொன்ன என் வாய் முஹூர்த்தம் பளிச்சிடுச்சு பாத்தியா?...
பகுதி – 13
"என்னடா தெரியும்?" எனப் பூதம் வினவ,
"நீ என்ன சொல்லப்போறன்னு தெரியும்'' எனச் சாதாரணமாகக் கூறினான் பார்த்திபன்.
"அதானே பார்த்தேன்...எங்கடா நீ உன்னோட குடும்பத்தைப் புருஞ்சுகிட்டியோன்னு நினச்சுட்டேன்" எனச் சலிப்புடன் கூற,
"நீ என்ன சொல்லவர? என்னோட அண்ணன் என்னைவிடப் பணத்தைத்தான் மதிக்கிறாருனு சொல்லவரியா ? எங்க அக்காக்குக் குடும்பத்தை விட, அவளோட தனிப்பட்ட விருப்பம்...
பூவம்மாள் பாட்டி மேற்பார்வை பார்க்க, பூதமும் நண்டும் அனைவர்க்கும் பந்தி பரிமாறினார்.
பார்த்திபனும் பரிமாற முயல, புதுமணத் தம்பதிகள் அருகே அமர்ந்து உணவு உண்ணும்படி பூவம்மாள் கண்டிப்புடன் கூறி அதட்டி உக்காரவைத்திருந்தார்.
அந்த உணவு பனிமலருக்கும் பார்த்திபனுக்கும் ஒரு பிடிகூட இறங்கவில்லை. பார்த்திபனுக்கு அவள் யாரென்றும் அவள் வந்ததன் நோக்கமும் தெரியவேண்டும்...மலருக்கு பார்த்திபனின் நிம்மதி வேண்டும்...
இருவரும் அவர்கள்...
பகுதி – 12
உப்பரிகையில் (மொட்டைமாடி) தென்னெங்கீற்றால் வேயப்பட்ட அழகிய சிறு குடில்... அந்த வீடே சிறிது தான் என்பதால், உப்பரிகையின் அளவுமே சிறிதுதான். அதில் இருவர் தங்குவதற்குப் போதுமானதாய் அந்தக் குடிசை வேய்யப்பட்டிருந்தது...
திட்டமும் பூவம்மாளுடையது, அதற்கான செலவுமே அவருடையது தான். சில ஆயிரங்கள் பிடித்திருந்தது. ஆம்! இது பார்த்திபன் பனிமலருக்காகக் கட்டப்பட்டிருந்த வீடு.
வீட்டின் உரிமையாளர்,...
இன்னமும் தெளியாத தூக்கத்துடன், தலையைச் சொரிந்தபடி எழுந்தரமர்ந்தவனை முறைத்த கலா,
"ஏண்டா? காலு காலுன்னு கத்துறேனே ? கொஞ்சமாச்சும் அசருறீங்களா ?"
"காலு காலுன்னா கத்துனீங்க? அண்ணி, அப்போ நீங்க என்ன எந்திரிக்கச் சொல்லலியா ? அப்போ சரி நான் இன்னும் கொஞ்சம் தூங்குறேன்" என மீண்டும் போர்வையை இழுத்து போர்த்த முனைய,
"அடேய்! கிளீனர் பையலே. உன்ன...
பகுதி - 11
வந்தவள் யார் ? அவளின் நோக்கமென்ன ? நாடகத்தின் ஆதாயமென்ன ? என அனைத்தையும் தெரிந்துகொள்வதும், இன்றோடு அதற்கு ஒரு முடிவுகட்டுவதும் என்ற உறுதியுடன் நுழைந்தவனை, அலட்சியமாக உடைத்தெறிந்தாள், பனிமலர்!
அவனின் உறுதியை மட்டுமல்ல; உள்ளத்தையும்!
"அடடா...என்ன வந்துட்ட? நீ ஸ்லொவ் மோஷன்ல நடந்து போறதை பார்த்து, அண்டார்டிகாவுக்கே போயிருப்பனுல நினச்சேன்.
ஹா...உனக்கு அண்டார்டிக்கானா தெரியுமா...
பகுதி - 10
பார்த்திபன் அதற்கு மேல் அங்கு ஒரு நொடி கூடத் தாமதிக்கவில்லை. அந்த நிமிடத்தில் தனது உடலை சுமப்பது கூட அவனுக்குப் பெரிதாக இருந்தது. சற்றே தடுமாறியவன், சிவந்த விழிகளுடன் தலை கவிழ்ந்து நடக்க,
"நண்பா...நில்லுடா! நானும் வரேன்" எனப் பின்னோடு கூப்பிட்டபடி பூதம் ஓட,
"தப்பு பண்ணிட்ட தாமினி... பெத்த தாய் வாயிலயிருந்து எந்த...
பகுதி - 9
பூவம்மாளின் வீட்டிற்கு முன்னால் சில ஆட்கள் நின்றுகொண்டிருந்தனர். நேரம் காலை 6 .30 என்ற அளவில் தான் இருந்தது. ஆனாலும் பூவம்மாள் தேனியாய் அங்குமிங்கும் ஓடியாடி எதையோ செய்துகொண்டிருந்தார்.
நிற்கும் ஆட்களையோ, பூவம்மாளின் செயலையோ பெரிதும் இலட்சியம் செயாமல், அடுத்து தனது ஆட்டத்தை எங்கிருந்து தொடங்குவதென்ற சிந்தனையுடன் மலர், பூவம்மாளின் வீட்டை நோக்கி...