Advertisement

பார்த்திபன் வார்த்தைகளை உச்சரித்தானா ? இல்லை தன்னை எச்சரித்தானா எனப் பிரியன் குழப்பம் கொண்டான்!

பார்த்திபனுடைய ஆளுமையிலும், அவனுடைய ஸ்திரமான பேச்சிலும் அங்கிருந்தவர்கள் நம்பிக்கை வரப்பெற்றவர்களாக மலரை காண, அவள் ஆம் என்று தலை அசைத்தாள்!

இருப்பினும் எதுவானாலும் தங்களிடம் சொல்லும்படியாக அவளுடைய உறவுகள் ஆயிரம் பாத்திரம் கூறினார்கள்.

அதோடு மலரின் ஒட்டுமொத்த உறவும், சிவகாமி உட்பட!

பார்த்திபன் சார்த்த குடும்பம் ஊர் உறவுகள் மத்தியில் பனிமலரின் கடந்த காலப் பேச்சுக்கள் இருக்கக் கூடாதென்று அது இன்றோடு அந்நொடியே விட்டுவிட வேண்டுமென்றும் அங்கிருந்த உறவுகள் பட்டாளம் முழுவதும் தங்கள் வீட்டு பெண்பிள்ளைக்கே நிகழ்ந்ததைப் போன்று வெளியே சொல்லாமல் மறைக்கவும் மறக்கவும் முடிவு செய்துகொண்டனர்.

டுத்து இரெண்டு நாட்களில் பார்த்திபனின் பரம்பரை ஜமீன்விடு அதகளப்பட்டுக்கொண்டிருந்தது….

அன்று தான் பனிமலரும் பிரியனும் அந்த வீட்டிற்குப் பனிமலரின் ஊரிலிருந்து வருகின்றனர்.

ஆம்! நீதிமன்ற தீர்ப்பு வக்கீலின் வாதத்தினாலோ வானையும் மண்ணையும் படைத்த இறைவனின் ஆசினாலோ அவர்களுக்குச் சாதகமாக முடிந்திருந்தது….

பார்த்திபன் பனிமலர் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில், பார்த்திபனுக்கு அழைத்துப் பனிமலரிடம் பேசியிருந்தான் சூரியவர்மன்!

“கேஸ்ல ஜெயிச்சுட்டோமா…. உனக்கும் நான் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கேன்.

உங்க சொந்தகாரங்க என்னமா சொல்லுறாங்க ? நாங்க ஏதும் பேசணுமா ? எப்ப வரீங்க ? சீக்கிரம் வந்துடுங்க” எனப் படபடவெனப் பேசி தள்ளியிருந்தான் சூரியவர்மன்.

இப்பொது பார்த்திபன் குடும்பம் மொத்தமும் ஜாமீன் வீட்டிற்குக் குடி வந்திருந்தனர். இன்னமும் நில புலன்கள் கை வந்து சேரவில்லை…அதுவொரு தனி வழக்காக நடந்துகொண்டிருக்கிறது…அடுத்து இரண்டு மாதத்தில் அதன் விசாரணையும் வரவிருக்கிறது…

அதிலும் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையில், வீட்டிற்குக் குடி வந்திருந்தனர்.

மற்றவர்கள் வந்து ஒருநாள் கழித்தே, பார்த்திபனும் பனிமலரும் அந்த வீட்டிற்கு வந்தனர்.

அவர்களை இம்முறை ஆலம்கரைத்து வரவேற்கும்படியாகத் தாமினி ஏற்பாடு செய்திருந்தார். திருமணமாகி முதன் முறையாக என்பதற்காக இந்த ஆலம் என்ற இரகசியம் அவரோடே தற்போதைக்கு இரகசியமாக இருந்தது…

இனி எப்போதும் அது இரகசியமாகவே இருக்கும்…

மலரின் உறவுகள் சில நாட்களுக்குப் பின் வருவதென்று முன்பே மலர் பார்த்திபன் சொல்லி வந்திருந்தனர்.

பனிமலர் மருமகளாய் ஜமின்வீட்டில் அடியெடுத்து வைத்தாள்….

பார்த்திபனின் உறவுகள் அனைத்தும் மலருக்கும் நெருக்கமான உறவுகளாகவே மாறிப்போனர். பூவம்மாள் பாட்டியையும் தாமினி தனியாக இருக்கவேண்டாமென்று கையோடு அழைத்து வந்திருந்தார்.

மலர் ஜமீன் வீட்டிற்கு வந்த தினத்தையே பார்த்திபனும் பனிமலரும் சங்கமிக்கவிருக்கும் நாளாக, தாமினி தேவி நேரம் காலம் பார்த்துக் குறித்திருந்தார்.

ஆம்! பார்த்திபன் பனிமலர் இருவரும் பனிமலரின் வீட்டினில் இருந்த போதிலும் கூட, தாமினியின் ஆசிக்காகத் தங்களின் வாழ்க்கையைத் தொடங்குவதைத் தள்ளி வைத்திருந்தனர்.

பார்த்திபனின் குடும்பம் முழுவதுமாக தங்களை ஏற்ற பின்பு தான் மலர் பார்த்திபன் இருவரும் வாழ்க்கையை தொடங்குவதென்ற முடிவோடு காத்திருந்தனர் என்று பட்டும் படாமல் தாமினி பூவம்மாளிடம் கூறியிருக்க, அதுவே அவ்வீட்டினர் எல்லோருடைய காதுகளுக்கும் சென்றது!

அன்றைய தினத்தைப் பார்த்திபன் பனிமலர் இனிமையாகக் கழிக்க எளியமுறையில் அலங்காரம் செய்திருந்தனர்…

தனித்துவிடப்பட்ட பனிமலர் பார்த்திபனிடம்,

“காதல்ங்கிற வார்த்தையே இல்லாமல் காதல் சொல்லியது நீங்களா தான் இருக்கும்…

இப்பவாச்சும் நான் உன்னைக் காதலிக்கிறேன்னு சொல்லுவீங்களா ?” எனப் புன்னகையுடன் கேட்க,

“நானாவது, காதல்ங்கிற வார்த்தையில்லாமல் சொன்னேன்…

ஆனால் நீ வார்த்தைகளே இல்லாமல் காதல் சொல்லிட்டியே ?” என அவளை மடக்க, அவளிடம் புன்னகை கலந்த மௌனம் மட்டுமே!

“எப்படினு கேட்கமாட்டியா ?” எனப் பார்த்திபன் கேட்க,

“கேட்டு தான் தெருஞ்சுக்கணுமா ?” என மலர் பதில் கூறினாள்.

“சுரஸ்யமா தான் இருக்கு…சொல்லு! நீ சொல்லாமல் உன்னோட காதலை நான் எப்படிக் கண்டுபிடிச்சேன்னு நீயே சொல்லு” எனப் பார்த்திபன் கேட்க,

“என்னோட உதடு மட்டும் தான் பேசல…என்னோட மனசும் கண்ணும் பேசிக்கிட்டே தான் இருந்தது. அந்தச் சத்தம் உங்க மனசுக்கு கேட்ருக்கனும், கண்ணுக்கு புரிஞ்சிருக்கணும்….சரி தானே ?” எனக் கேட்க,

பனிமலரை அள்ளி சுற்றி தன்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தினான், பார்த்திபன்!

“ஐயோ தலை சுத்துது… இறக்கி விடுங்க!” என மலர் சொல்ல,

“தலை மட்டுமா சுத்துது ? நானும் உன் பின்னாடி தானே சுத்துறேன்!” எனக் காதல் பேசினான், பார்த்திபன்!

“அடடா! ரொம்பத் தான்…அப்படியே நீங்க என் பின்னாடி உருகி மறுகி சுத்துனது தெரியாத என்ன ?” என அவனைச் சீண்ட,

“மலர்! காதலிக்கிறவங்க சொல்லணும்னு இல்ல…உணரணும்….சுத்தணும்னு இல்ல…. சொல்லாமலே புரிஞ்சுக்கணும்” என அவளுடைய கண்களை ஊடுருவி பார்த்தபடி ஆழமாகக் கூறினான்!

“நான் ஒன்னு கேட்கவா ?” என மலர் கேட்க,

“முத்தமா ?” எனப் பார்த்திபன் சீண்ட,

“மொத்தனும் உங்கள!” என அவனுடைய நெஞ்சில் ஓங்கி கை வைத்து குத்தினாள்!

மேற்கொண்டு அவளே தொடர்ந்து, “விளையாடம இப்போ பதில் சொல்லுங்க! இரெண்டு நாளா நீங்களே இதைக் கேட்பீங்கனு நினைச்சேன். ஆனால் நீங்களா கேட்கவே இல்லை…அதை நான் இப்போ கேட்குறேன்.

என்னை இத்தனை கொடுமை செஞ்சது பிரியன்னு உங்கனால புரிஞ்சுக்க முடியும். நான் பிரியனை ஏன் காமிச்சு கொடுக்கலைனு உங்களுக்குள்ள கேள்வி வரவே இல்லையா ?” என மலர் வினவ,

“எனக்குப் பதில் தெரியும் போது, நான் ஏன் கேள்வி கேட்கணும்…” எனச் சாதாரணமாகப் பதிலளித்தான், பார்த்திபன்!

“என்ன உங்களுக்குத் தெரியுமா ? என்ன தெரியும் ?” என ஆர்வமானாள்!

“உன்னைத் தெரியும் மலர்! நீ எப்படி யோசிச்சிருப்பனு தெரியும்! சொல்லவா ?”

“சொல்லுங்களேன்!”

“பிரியன் அப்படினு அவனுடைய பேரை நீ அங்க சொல்லிருந்தால் பாதிப் பேர் அவனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும் மீதி பேர், ஆனாது ஆச்சுக் கட்டிக்கப் போறவன் தானே ? வேற யாரையும் கல்யாணம் செஞ்சுக்கிட்டால் பின்னாடி பிரச்னை வரும்னு சொல்றதுக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்சிருக்கும்….

அதுக்கு நீ ஒத்துக்க மாட்ட!

ஆனாலும் அந்தப் பேச்சு நிச்சயமா சபைல வந்திருக்கும். அந்தப் பேச்சு வரதுக்கு வாய்ப்பே கொடுக்கக் கூடாதுனு தான் நீ கடைசி வரைக்கும் பிரியனோட பெயரை எடுக்கல” என மிகச் சரியாக அவளுடைய உணர்வை கூறியிருந்தான், பார்த்திபன்!

“பிரியனுக்குத் தண்டனை கிடைக்கலன்னு நீங்க நினைக்கிறீங்களா ?” என அடுத்தக் கேள்வியை மலர் முன்வைத்தாள்!

“இதைவிடப் பெரிய தண்டனையைக் கொடுக்கவே முடியாது…. ஏன்னா, நீ சொல்லிருந்தால் அப்பவே அவனை அடிக்கக் கூடச் செஞ்சிருப்பாங்க…அப்புறம் கொஞ்சநாள்ல மறக்கவும் செஞ்சிருவாங்க.

ஆனால், நீ இப்போ பிரியனுக்குக் கொடுத்திருக்கியே ஒரு பயம், அந்தப் பயம் அவனை வாழவும் விடாது சாகவும் விடாது…

எப்போ நீ அவனைப் பற்றிய உண்மைய சொல்லிடுவியோன்னு அவன் எப்பவும் பயத்தோடவே தான் வாழனும்” எனக் கூறிவிட,

தன்னுடைய மனதை மிகச் சரியாகக் கணித்திருந்த பார்த்திபனின் மீது பனிமலர் மேலும் மேலும் பித்தானாள்!

நிறைந்த மனதுடனும் காதலுடனும், “நீங்க எப்பவும் என்கூடவே இருக்கணும்….” என மலர் கூற,

“நான் வாழுற வரை உன்கூட உனக்காக மட்டும்” என்ற பெரும் வாக்கை கொடுத்திருந்தான், பனிமலரின் பார்த்திபன்!

ன்றைய காலையில், பூதத்தின் மீது பறந்து வந்து ஒரு தட்டு விழுந்தது….

“கணுவுல விழுந்தா வலிக்குமா என்ன ?” என முணுமுணுத்தபடி பூதம் எழுந்து அமர,

“கனவுல விழுந்தால் வலிக்காது! ஆனால் காலுல விழுந்தால் வலிக்கும்!” என அவனுடைய போர்வையை முழுதாக உருவி வீசியிருந்தாள், குறிஞ்சி!

அவளைப் பார்த்ததும் பதறி எழுந்த பூதம், “என்னமா ?” எனக் கேட்க,

“காபி கொடுக்கக் கரடியா கத்துறேன்! எந்திரிச்சால் என்ன ?” என அதட்ட,

“கரடி தேன் தான் குடிக்கும்ல?” எனப் பூதம் சொல்ல, மீண்டும் குறிஞ்சி உக்கிரமானாள்!

றுபுறம், சிவகாமி தனது கணவர் முன் தலை குனிந்து அமர்ந்திருந்தார்….

“என்னாச்சு சிவகாமி ? எதுக்காக மலர் கல்யாணத்துல இருந்தே இப்படித் தொய்வா இருக்க ?” என விசாரிக்க,

“மலருக்கு இத்தனை அநியாயம் செஞ்சவன் யாரு தெரியுமாங்க ?” எனச் சம்மந்தமில்லாமல் வினவினார்.

“திடிர்னு கேட்குற ? யாரு அவன் ? உனக்குத் தெரியுமா ?” என வினவ,

“நம்ம ஆசையா வளர்க்குறோமே! நம்ம பிரியன்! அவன் தாங்க அந்தப் பாவி” எனத் தலையில் அடித்துக்கொண்டு அழ, அவர் பதறிப்போனார்.

ஆம்! அன்று பனிமலரும் பிரியனும் தனியாகப் பேச சென்ற போது, மருமகள் தனது மகனை திருமணம் செய்து கொள்வாளோ என்ற எதிர்பார்ப்பில் பின்னோடு சென்று ஜன்னல் வழியே மறைந்து நின்று பார்க்க, மலரின் பேச்சை கேட்க கேட்க தலையில் இடியொன்று இறங்கியதை போல உணர்ந்தார்.

அதை மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தனக்குள்ளையே நொந்து கொண்டிருந்தவர், இன்று தான் தனது கணவனிடம் கூறியிருந்தார்!

சிவகாமி அவருடைய கணவன் இருவருக்கும் இது பேரதிர்ச்சி தான் என்றாலும், பிரியனை அப்படியே விட அவர்களுக்கு மனம் வரவில்லை!

அதனால், அவனுக்கான தண்டனையை அவர்கள் தீர்மானித்தார்கள்….

பிரியன் மலரிடம் இவ்வாறு நடந்துகொள்ள மலரின் சொத்தும் காரணம் என்று யூகித்தவர்கள், அவர்களுடைய சொத்தை ஒரு ஆசிரமத்தை நடத்த எழுதிவைத்துவிட்டு, அதற்கான ட்ரஸ்ட்டி-யாக மட்டுமே மகனையே நியமித்தார்கள். இல்லாதவர்கள் படும் துன்பத்தைக் கண்டேனும் பிரியன் மனம் மாறவேண்டும் என்ற சிந்தனையில் அப்படியொரு முடிவை அவர்கள் எடுத்திருந்தனர்.

ன்று பார்த்திபன் ஊரில் கோவில் குடமுழுக்கு விழா!

இம்முறை முதல் மரியாதையைப் பார்த்திபனுக்கென்று தாமினி முடிவு செய்திருந்தார். அதற்குச் சூரியவர்மனும் எந்தவித மறுப்பும் சொல்லவில்லை….

தாமினியின் இந்த முடிவுக்குக் காரணம், அவருடைய கணவனின் வார்த்தைகள்!

“எனக்கு மூணு பிள்ளைகளும் சமம்… ஆனால் என்னவோ பார்த்திபன் தான் என்னுடைய வாரிசா வருவான்னு தோணுது” எனச் சொல்லியிருந்தார்.

கணவனின் வார்த்தை எத்தனை மெய் என்பதை, கணவனின் குணங்களைக் கொண்டே பிறந்திருந்த பார்த்திபன் தனது குணத்தால் நிரூபித்திருக்க, இம்முறை பரிவட்டம் அனைவருடைய சம்மதத்துடன் பார்த்திபனுக்கே கட்டப்பட்டது!

பார்த்திபன் பனிமலரின் வாழ்க்கை பயணத்தில் இருவருக்கும் உற்ற துணையாகப் பூதம் பயணிக்க, அந்தப் பயணம் சிறப்பாகத் தொடங்கியது!

ப பா பூ

சுபம்

Advertisement