Narungkavithai Avalo
அத்தியாயம் 09
அன்று காலை அலுவலகத்தில் நுழைந்ததுமே ஆராவை தேடிய விஜயின் கண்கள் எங்கும் காணாது ஏமாற்றமடைய, தன் இருக்கையில் சென்றமர்ந்தான். பக்கத்து இருக்கையிலிருந்த அகில் புறம் திரும்பியவன், “டேய் மச்சான் அந்த அராத்து எங்கடா?” என்றான்.
அகிலோ சந்தேகப் பார்வையும் மெல்லிய சிரிப்புமாய் பார்க்க, “என்ன லுக்?” என அதட்டினான் விஜய்.
“என்னடா நடக்குது உங்களுக்குள்ள?”
“நத்திங், ஓவரா...
விஜய் மீண்டும் முறைக்க, “சரிடா, போனா போகுது போற போக்குல ஒரு லவ் தானே பண்ணித் தொலையேன்” என்க, பொறுக்கமுடியாமல் மேசையிலிருந்த நோட் பேடை எடுத்து அவன் முதுகில் மொத்தினான்.
“போற போக்குல அந்த நாயை ஷூன்னு விரட்டிட்டு போங்குற மாதிரி அசால்டா சொல்லுற? லவ்டா..!”
“லவ் தானே விஜய்..”
“ஏன் மச்சான் என்னைப் பத்தி தெரியாதா உனக்கு?”
“தெரியும்...
அத்தியாயம் 22
விடியல் நேரம், விடுபடாத நெருக்கத்தில் இருந்தன ஜோடிக்கிளிகள், அதிலும் ஆராதனாவின் உடல் வழக்கத்தை விடவும் அதிக குளிரை உணர்ந்து நடுங்க, இதமான உஷ்ணம் வேண்டி, சுற்றியிருக்கும் போர்வையோடு மேலும் விஜயை நெருங்கிப்படுத்தாள்.
அதே நேரம் அவள் கைகளும் விஜயின் கழுத்தை வருட, உறக்கம் கலைந்தவன், “என்ன செய்யுற நீ..?” என அவள் கரத்தைப் பற்றித்...
அத்தியாயம் 08
அந்த வார இறுதியில் சுபத்ரா அன்னை வீட்டிற்கு வந்திருந்தாள். அவளை வரவேற்ற பவானி, “பேரனை கூட்டிட்டு வரலையா..?” என்க, “அவனுக்குக் காய்ச்சல் இப்போ தான் சரியாகியிருக்கும்மா, அதான் அலைச்சல் வேண்டாம்னு விட்டுட்டு வந்துட்டேன்” என்றாள்.
மனதில் ஏக்கமிருந்த போதும் பேரனின் நலம் விசாரிக்க, பதில் உரைத்த சுபத்ரா, “பொண்ணு வீட்டுல என்னம்மா சொன்னீங்க? அவர்கிட்ட...
“அவங்க தான் எனக்கு ட்ரைன் பண்ணுவாங்க, கம்மிங் ட்வென்டி சமிட் பண்ண வேண்டிய பிராஜக்ட் டிலே ஆகுது, நான் பண்ண கோடிங்ல தான் ஏதோ எரர். அவர் இருந்தா கிளியர் பண்ணுவாரு..”
“ஏய்..ஸ்டாப்..ஸ்டாப்..இதுக்கா அவனைப் பத்தி கேட்ட?”
அவள் தலையாட்ட, “அதை உங்க டீம்ல இருக்குற வேற யாருடையாவது ஹெல்ப் கேட்டு சால்வ் பண்ணிக்க வேண்டியது தானே!...
“என்ன விஜய் போதுமா? இல்லை இருந்து இன்னும் உன் அருமை பெருமை எல்லாம் ஆராவுக்கு எடுத்துச் சொல்லிச் சேர்ந்து வைக்கவா?” எனக் கேலியாகக் கேட்க, “தெய்வமே! நீ செய்ததே போதும், இன்னும் நீ இருந்து எந்த எருமையும் மேய்க்க வேண்டாம், கிளம்பு, கிளம்பு இடத்தை காலி பண்ணு..” என விரட்டாத குறையாக அனுப்பி வைத்தான்.
ஏதோ...
“அதுங்க, இரண்டு பேரும் விரும்புனது உண்மை தான். நீங்க சம்பந்தம் வேண்டாம்னு சொன்னதால எங்க அண்ணனுக்கு பிடிக்கலை அதனால காதல் வேண்டாம்னு இவன் சொல்ல, அவளும் போடான்னு கோபப்பட்டு கத்திட்டு போயிட்டா. பெண் பாவம் பொல்லாதது சும்மா விடுமா? அதான் இப்போ இவன் தவிக்கிறான்” என அசராது வெடியைக் கொளுத்திப் போட்டாள்.
ரவி அதிர்ந்தே விட்டான்!...
அத்தியாயம் 16
ரவியிடம் தேவைக்கென சுருக்கமாக இருவார்த்தைகளில் பேசுவாள் அதுவும் பவானி, விஜய் முன் மட்டும் தான் தனிமையில் எனில் ஸ்ரீயிடம் தான் சொல்லிவிடுவாள். வாரத்திற்கு ஒன்று அல்லது இரு முறை தந்தையிடம் பேசுபவள் தற்போது அடிக்கடி பேசினாள்.
பேசும் போதெல்லாம் எப்போது வருவீர்கள் அப்பா? என அடிக்கடி கௌஷி கேட்க, எதார்த்தமாக அது ரவியின் காதுகளில்...
அத்தியாயம் 04
தென்துருவத்தில் நீ! வடதுருவத்தில் நான்!
இணைக்கும் கற்பனை ரேகையாய்
அலைவரிசை இணைக்கும் அலைபேசி!
“விஜய்..” எனப் பல முறை அழைத்தும் அவனிடமிருந்து பதில் வராததால் அவன் அருகில் வந்தமர்ந்து தலைகோதினார் அன்னை பவானி. அப்போதே கலைந்தவன், “கூப்பிடீங்களாம்மா..” என்றான் மெல்லிய குரலில்.
“ம்ம், ஆறுமுறை..” என்றவர் அடுத்த கேள்வி கேட்பதற்குள், “என்ன விஷயம்?” என்றான்.
“சுபத்ராவுக்கு ஒரு ஃபோன் போட்டு...
அத்தியாயம் 05
பல வேலைகளுக்கு இடையிலும் ஆராதனா சொல்லினால் என நினைவில் வைத்துக்கொண்டு அகில், தர்ஷினி இருவருடமும் பேசிப்பார்த்தான் விஜயரூபன். ஏனடா பேச்சை ஆரம்பித்தோம் என வருந்துமளவிற்கு இருவரும் புலம்பித் தள்ள, ஆறுதல் மட்டுமே அவனால் சொல்ல முடித்தது. அவன் நிலைய அறிந்திருந்த ஆராதனா கேலிச்சிரிப்போடு சுற்றிவிட்டு அன்று ஸ்ரீயிடமும் கதை சொல்லிச் சிரித்து கொண்டிருந்தாள்.
வார...
“என்ன கௌஷி நீ இங்க?” எனக் கேட்க, “ஒரு விசாரணை அண்ணி, நீங்களும் உள்ள வாங்க” என அழைத்தாள்.
உள்ளே வந்த சுபத்ராவிடம் கௌஷி நடந்த கதையை விவரிக்க, “ஏன் கௌஷி நேத்தே சொல்லலை?” எனக் கேட்டாள் சுபத்ரா.
“விசாரிச்சிட்டு சொல்லாம்னு இருந்தேன் அண்ணி, நீங்களும் வந்துட்டீங்க வாங்க சேர்ந்தே விசாரிப்போம்” என அழைத்தாள்.
விஜயின் மீது விருப்பம்,...
அத்தியாயம் 06
திங்களன்று இன்முகமாக இணைந்து வரும் நண்பர்கள் இருவரையும் விஜய் ஆச்சரியமாகப் பார்க்க, கண்டிப்பாக ஆராதனாவின் வேலை இதில் உள்ளது என்றது உள் மனது! அது மட்டுமின்றி இருவர் முகத்திலிருந்த மலர்ச்சி அவன் மனதையும் குளிர்விக்க மகிழ்வுற்றான்.
வெளி மரத்தடியின் நின்றிருந்த விஜயின் அருகில் வந்த அகில், “எங்கடா மச்சான் ஆரா?” என்க, “ஏன் என்னை...
அத்தியாயம் 19
ஒரு சுப நாளில் ரவியோடு அவன் குடும்பம் மொத்தமும் சுபத்ரா வீட்டிற்கு வந்திருந்தனர். விஜய்க்கு திருமணம் என்பதால் பவானிக்கு மகிழ்ச்சி, பள்ளி விடுமுறை என்பதால் ஸ்ரீக்கு மகிழ்ச்சி.
சுபத்ராவின் குடும்பத்தோடு அனைவருமே நல்ல நேரம் பார்த்து ஆராவின் வீட்டிற்குச் செல்ல, ஆராவின் பெற்றோர்கள் இன்முகமாக வரவேற்றனர். சுபத்ரா தன் வீட்டினரை அறிமுகப்படுத்த பொதுவாக பேசிக்...
பார்ப்பதற்கே ரௌடி போன்று இருந்தவனிடம் சில நிமிடங்களாக யாருமின்றி வாதிட்டுக்கொண்டிருந்தாள். அது வரையிலும் உள்ளுக்குள் ஒரு பயம், விஜயின் வரவை கண்டதும் அத்தனை ஆசுவாசம், ஒரு தைரியம்!
“நீ தாமே என் வண்டியில இச்சே, எம்மா பத்திரமா பந்துஷா வச்சிருப்பேன் தெரியுமா என் வண்டியே?” என்றவன் கத்த,
“இல்லை நான் ரிவர்ஸ் வரும் போது நீங்க தான்...
“ஷ்..தெரியாத மாதிரி நடிக்கணும் புரியுதா..?”
“எதுக்கு..?”
“ம்ம், நான் உன் ஆக்டிங் ஸ்கில் எப்படின்னு செக் பண்ணப் போறேன்”
“ஹே..! ஆக்டிங்ல ஹையஸ்ட் அவார்ட் என்ன ஆரா?”
“ம்ம்..ஆஸ்கர்..”
“அப்போ எனக்கு நீ அது வங்கித் தரணும்..” என்க, இரு கட்டை விரல்களையும் உயர்த்தி சம்மதம் தெரிவித்தவள், பவானி வருவதைக் கவனித்ததும் வேகமாக எழுந்து சோஃபாவில் அமர்ந்தாள்.
“பாட்டி யார் இந்த ஆன்ட்டி?”...
அத்தியாயம் 10
ரவியின் வீட்டு வேலைகளும் பெரும்பாலும் முடியும் நிலையை நெருங்கி இருந்தது. ஆராதனா வீட்டில் அவள் அண்ணன் அஸ்வினுக்கு பெண் பார்க்க தொடங்க, அவனோ தங்கைக்குப் பின்னே தான் திருமணம் செய்து கொள்வேன் என பிடிவாதாமாக உரைக்க, அவளுக்கு வரன் பார்க்கத் தொடங்கியிருந்தனர். ஆராதனாவின் பெற்றோர் அது குறித்து சுபத்ரா, ஜெயபிரகாஷிடமும் தெரிவித்திருந்தனர்.
தர்ஷினியும் ஆராதனாவும்...
அத்தியாயம் 20
வைகறை பொழுதில் பட்சிகள் படபடக்கும் ஒலியும் கீச்சொலியும், ஜன்னல் தாண்டி செவிகளில் நுழைந்த போதும் அசதியில் அயர்ந்திருக்கும் உடலை அசைத்து எழ முடியவில்லை அவளால். இன்னும் விழி திறக்காது சோம்பலில் இருந்தவளுக்கு எழும் எண்ணம் கூட இல்லை. யாரேனும் எழுப்பி, தூக்கிவிட்டால் கூட சுகமாக இருக்கும்.
கன்னத்தில் அழுத்தத் தீண்டும் கலாபம் போன்று ஏதோ...
அதே நேரம் அத்தெருவின் திருப்பத்தில் கார் ஒன்று நுழைத்து அவர்களை நோக்கி வர, அதன் முகப்பு விளக்கு ஒளியில் கண்ணகள் கூசியது. அதையும் விட அவனை நோக்கி வருகையிலே ஆராவின் வீட்டினரோ அக்காவின் வீட்டினரோ என நினைக்கையிலே அவன் அருகில் வந்து நின்றிருந்தது அந்த கார்.
அக்காவின் வீட்டினர் ஒரு பார்வை அவனை கீழிறக்கிப் பார்த்தாலும்...
அத்தியாயம் 12
அன்று தன் தோற்றத்தில் அதிக கவனம் எடுத்து தன்னை அழகுபடுத்திக் கொண்டு, நடையிலொரு உற்சாகத் துள்ளலோடு காதல் பாடலொன்றை முணுமுணுத்தபடி அலுவலகம் வந்தாள் ஆராதனா.
ஏன், எப்போது, எதனால் என்றெல்லாம் தெரியாது ஆனால் அவனை பிடித்திருந்தது. நலம் நாடும் நல்லுள்ளம், ஆளுமையல்லாத ஒரு தோழமை, அரிதாரமல்லாத வசீகரம், இது தான் என்றில்லை ஏதோ ஒன்று...
அத்தியாயம் 18
நள்ளிரவை நெருங்கும் நேரம், விஜய் இன்னும் வீடு வரவில்லை. விஜய் வரத் தாமதமாகும் எனச் சொல்லி விட்டதால் பவானியும் ஸ்ரீயும் உறங்கியிருந்தனர். கௌஷிகா வாசலை வெறித்தபடி ஹாலில் அமர்ந்திருந்தாள்.
ரவி பல முறை முயன்று பார்த்தும் அழைப்புகள் ஏற்கப்படவில்லை. பொறுப்பற்றவன் இல்லை வந்துவிடுவான் தான், இருந்தாலும் சிறு பயம். இன்று தான் ஆராவோடு சண்டையிடுவதை...