Advertisement

“என்ன விஜய் போதுமா? இல்லை இருந்து இன்னும் உன் அருமை பெருமை எல்லாம் ஆராவுக்கு எடுத்துச் சொல்லிச் சேர்ந்து வைக்கவா?” எனக் கேலியாகக் கேட்க, “தெய்வமே! நீ செய்ததே போதும், இன்னும் நீ இருந்து எந்த எருமையும் மேய்க்க வேண்டாம், கிளம்பு, கிளம்பு இடத்தை காலி பண்ணு..” என விரட்டாத குறையாக அனுப்பி வைத்தான். 
ஏதோ மாலை வரை அவர்கள் சமைத்து வைத்துவிட்டுச் சென்றதை உண்டு பொழுது கழிக்க, அசாத்தியமான அமைதி ஆராவிற்குச் சலிப்பூட்ட, “நாமளும் எங்க வீட்டுக்குப் போவோமா விஜய்..?” என மெல்ல கேட்டாள். 
விஜய்க்கு வந்ததது ஒரு கோபம், “ஏன் உன்னாலே இங்க இருக்க முடியாதா?” என்றவன் பற்களைக் கடிக்க, “இங்கிருந்து என்ன செய்ய..?” என்றாள் சலிப்போடு. 
“என்னென்னவோ செய்யலாமே, உனக்கு என்ன பிடிக்குமோ அதைச் செய்…” என கிசுகிசுப்பாக உரைத்தவன் அவளை நெருங்கி அமர்ந்து அவள் தோளோடு தோள் உரச, “பன்னீர் டிக்கா கிரேவி, வித் சப்பாத்தி செய்யுறேன், எனக்கு அதான் பிடிக்கும்..” என தன் அலைபேசியில் இருந்த சமையல் குறிப்பை அவனிடம் காட்டிவிட்டு உல்லாசமாக எழுந்து சென்றாள். 
“எப்போ பாரு சாப்பாடு..சாப்பாடு.. அதைத் தவிர எதுவும் தெரியாதா உனக்கு? என்னவோ பிறந்ததே அதுக்கு தாங்கிற போகுது பாரு, அரிசிமூட்டை அரிசிமூட்டை…” என தன் நெற்றியில் அடித்தபடி புலம்பினான். 
சில நிமிடங்களிலே வாசல் கதவு மூடியிருப்பதை உறுதி செய்துவிட்டு அவனும் எழுந்து சமையலறைக்குள் சென்றான். மாவு மிசைந்து கொண்டிருந்தவளின் பின் சென்றவன் இடையோடு இரு கரம் கோர்த்து இறுக அணைத்தான். 
கொஞ்சலாக “ஆராகுட்டி..” என்க, “சொல்லு ஆட்டுக்குட்டி..” என்றாள். 
“உனக்கு ஏன் என்னை பிடிச்சது?” என்க, “அதான் தெரியலைன்னு சொன்னேன்னே..” என்றாள். 
அவள் தோள் பட்டையில் தாடையால் அழுத்தியவன், “கூடவே இனி ஒன்னும் சொன்னீயே மறந்து போச்சா..?” என்க, அவளுக்குத் தெரியவில்லை. 
“சரி தான், உனக்கு மறந்திடும்னு தான் என்னை ஞாபகப்படுத்த சொன்னீயா?” என்றவன் ராகமிழுக்க, அப்படி எதை மறந்தோம் என அவளும் யோசித்திப் பார்த்தாள். 
“எனக்குத் தெரியலை விஜய், ஞாபகப்படுத்த சொன்னேனா? அப்போ என்னன்னு சொல்லு..” எனக் கேட்டாள். ஏதோ முக்கியமான விஷியமாக இருக்குமோ என்ற எண்ணம். 
“அது வந்து எதுக்கு என்னை பிடிச்சதுங்கிறதை கல்யாணத்துக்கு அப்பறம் கண்டுபிடிக்கிறேன்னு சொன்ன, என்னை ஆராய்ந்து, அளந்து, ஆழம் பார்த்து கண்டுபிடித்து பதில் சொல்லு பார்ப்போம்” எனக் கொஞ்சினான். 
“இதுக்கு எதுக்கு இத்தனை ஆராய்ச்சி? பார்க்கக் கொஞ்சமே கொஞ்சம் ஹேன்ட்சமா.. ஹாட்டா.. அதுவும் போக எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்டா சொல்லுற மாதிரி இருந்த, அவ்வளவு தான்…” என்க, ராக்கெட்டில் பறந்து கொண்டிருந்தவனின் முகம் புஸ்வானமாது. 
அதை எதிர்பார்த்து போலே கள்ளச்சிரிப்பு ஒன்றை அவள் சிரிக்க, அவனோ வார்த்தையின்றி அவள் கழுத்து வளைவில் முகம் புதைய உரசினான். தேகம் சிலிர்த்தவள், “உன் கன்னம் சொரசொரன்னு இருக்குது, கூசுது விஜய் தள்ளிப் போ..” என்றாள். 
சட்டென அவளை திருப்பியவன் தூக்கிச் சமையல் மேடையில் அமர வைத்து விட்டு, “ஏன் இது நீ கிஸ் பண்ணும் போது தெரியலையாக்கும்?” என அவள் செந்நிற கீழ் உதடுகளைப் பற்றிக் கிள்ளினான். 
அவன் கைகளைத் தட்டிவிட்டவள், வலியில் முகம் சுருக்கியபடி, “கிஸ் பண்ணதால தான் தெரிஞ்சது..” என்றாள் அசராமல். 
அவளுக்கு இருபுறமும் கையூன்றி அவள் முகம் நெருங்கியவன், “ஏன்? அது இத்தனை நாள் முத்தமிடும் போதும் தெரியலையாக்கும்” என்க, “இத்தனை நாள்ல நான் எப்போ கிஸ் பண்ணேன்..” என்றாள் புருவம் உயற்றி. 
அவள் முன் நெற்றியோரம் வழிந்திருந்த சுருள் முடியை தன் விரல்களுள் சுருட்டி விளையாடிக் கொண்டிருந்தவன் யோசித்தான். 
ஒரு நொடி யோசித்தவனுக்குக் காதல் சொன்ன நாளைத் தவிர, அவள் முத்தமிட்டதில்லை என்ற உண்மை என்று புரிய, “ஆமாம், ஏன் அவ்வளவு கோபமா?” எனக் கேட்க, ஆமென தலையை அசைத்தவள், “விலகி இருன்னு சொன்னியே அதான்..” என்றபடி சுட்டுவிரலை அவன் இதயத்தில் வைத்து அவனை பின்னுக்கு தள்ள முயன்றாள். 
சட்டென அவள் கரத்தை உள்ளங்கைக்குள் பற்றி அவளை தன்னருகே இழுத்தவன் முன் நெற்றியில் வலிக்காது முட்டி, “தெரியாம சொல்லிட்டேன், தப்பு தான் மறந்துட்டேன்” என வேண்டினான். 
“அது எப்படி தெரியாம சொல்ல முடியும்? உனக்கு நான் டாச்சரா தெரிஞ்சிருக்கேன், அதனால தான் சொல்லி இருக்க, நீ ஈஸியா சொல்லிட்ட, எனக்குல வலிக்குது. அதுவும் அன்னைக்கு தள்ளிவிட்டுட்டு தூக்கி விடாம கூட நீ பாட்டுக்கு போயிட்ட, எனக்கு எப்படி வலிச்சது தெரியுமா?” என அந்த வலியை இன்றும் உணருவது போல் அவள் கலங்க, நெஞ்சோடு அணைத்தவன் ஆறுதலாக முதுகு தடவிக் கொடுத்தான். 
“அன்னைக்கு நீ செஞ்ச வேலைக்கு உன் மேல கோபம் தான், ஆனால் கீழ விழுந்தது எல்லாம் ஆக்ஸிடன்டலா நடந்து தான், வேணும்னே ஏதும் செய்யலை. அதுவும் தூக்கிவிட வந்தா நீ மொத்த ஆபீஸ்க்கும் கேட்குற மாதிரி கத்துற, அதான் நான் போய் தர்ஷினியை அனுப்பி வைத்தேன்” 
“தள்ளி விடுறது நீ, தூக்கிவிடுறது மட்டும் தர்ஷினியா? நீயும் தர்ஷினியும் எனக்கு எப்படி ஒன்னாக முடியும்?” என அணைப்பிலிருந்து விலகி அவன் சட்டையைப் பற்றிக்கேட்டாள். 
முறைத்துக் கொண்டிருந்த மூக்கின் மீது சட்டென இதழ் பதித்தவன், “அப்படியென்ன உனக்கு நான் ஸ்பெஷல்..?” என்றான் ஆவலாக. 
“யாருமே என்னை தவிர்த்ததில்லை, என் அன்பை நிறுத்ததில்லை. நீ தான் கேட்ட, இவ்வளவு தானா உன் காதல்னு கேட்ட, எனக்கு வலின்னா என்னனு உணர வைத்ததே நீ தான். அந்த வகையில நீ எனக்கு ஸ்பெஷல் தான்..” என்றவளின் குற்றச்சாட்டில் உள்ளம் வாடினான். 
“இதோ, இவ்வளவு நடந்ததுக்கு அப்பறமும் உன்னையே கல்யாணம் செய்து என் காதல் எவ்வளவுன்னு நான் நிரூபவிச்சிட்டேனே, இது போதுமா?” எனக் கலங்கிய குரலில் உரைக்க, உண்மை தானே மேலும் இறுக்கமாக இழுத்து அணைத்தான். அந்த நொடி அவன் வார்த்தைகள் என்னாவோ பாவம் செய்துவிட்டதை போன்று அவனுக்குப் பெரிதாகத் தெரிய, ஆறுதல் அவனுக்குத் தேவையாக, உடல் நடுங்கினான். 
அதை உணர்ந்தவள் மீண்டும் அவனை தன்னிடமிருந்து விலக்கி, “நீ எப்படி அப்படி கேட்கலாம், அது தப்பு தானே? அப்படிக் கேட்பியா?” என்ற மிரட்டலோடு அவன் கன்னத்தில் அடிக்க, சுகமாக தாங்கியவன் இன்னும் கொஞ்சம் அடியேன் என்பது போல் நிலையாக நின்றான். 
“தப்பு தான், இன்விடேஷன்னு நீ சொல்லவும் உனக்குத் தான் கல்யாணம்னு தவறுதா புரிஞ்சிகிட்டேன். எங்க உன்னை இழந்துட்டேனோன்னு பரிதவிப்பு, படபடப்பு அதான் கொஞ்சமும் யோசிக்காம அப்படி பேசிட்டேன். அதுவும் போக, அக்கா வேற உனக்கு கல்யாணாம்னு சொன்னாங்க, நீயும் இன்விடேஷனோட வந்து உக்காத்துருக்க, நான் வேற என்ன தான் நினைக்கட்டும்..” என்றான் ரோஷமாக. 
சுபத்ரா இவனை சோதித்துப் பார்த்ததால் வந்த சொதப்பல் என்பது புரிய, மனதில் கோபம் குறைய மனம் சற்றே அமைதியடைந்தது ஆராவிற்கு. 
“சரி சரி, மறந்துட்டேன். இறக்கி விடுங்க என் வேலையை பார்க்கணும்..” என்றவள் குழந்தை போலே கைகளைத் தூக்கி, விரித்து நீட்டினாள். அவனோ அந்த விரித்த கைகளுக்குள் உடலைக் குறுக்கி, மீண்டும் அழகாக அணைத்துக் கொண்டான். 
“கொஞ்சம் இரு, உங்கிட்ட வந்தாலே, நான் எதுக்கு வந்தேங்கிறதே ரீசனே மறந்து போகுது” என்க, “ஆமா, எதுக்கு என்னையே சுத்தி சுத்தி வந்த?” என்றாள். 
“சாரி, நான் உன்னை சொன்ன வார்த்தைகள் எல்லாம் ரொம்ப தவறானது, உன்னை காயப்படுத்திட்டேன். மன்னிச்சிடு ஆராகுட்டி. ஆரம்பத்துல மன்னிப்பு கேட்கக் கூட எனக்குத் தயக்கம் தான், ஆனால் மன்னிப்பு கேட்காம என்னால நிம்மதியா இருக்க முடியலை, அதுவும் தப்பு பண்ணிட்டேன்னு தெரிஞ்ச பிறகும். சாரி அம்முகுட்டி, என்னை மன்னிச்சிடு ஆராகுட்டி” 
கேட்ட ஆராவிற்கு தானிருந்த மயக்க நிலை எல்லாம் விடுபட, கோபத்தில் புஸுபுஸுவென மூச்சு வாங்கினாள். முகம் பார்க்காத போதும் அணைத்திருந்த நிலையில் அதை அவனால் உணர முடிந்தது. 
அவன் செவிமடல்களை கடித்து இழுத்தவள், “அப்போ என் பின்னால சுத்தி சுத்தி வந்தது எல்லாம் மன்னிப்புக் கேட்க தானா..?” என்றாள் குரலில் ஏமாற்றம் வழிய. 
சட்டென அவளை நிமிர்த்தி முகம் பார்த்தவன், “அப்போ நீ என்னனு நினச்சே?” என்றான் கேள்வியாக. என்னவென்று சொல்வாள் உன்னைக் காதல் மன்னனாக நினைத்தேன் என்றா? 
கள்ளச்சிரிப்போடு பதிலுக்குக் காத்திருந்தவனின் முகம் அவளை வசீகரிக்க, இவ்வாறு தான் நினைத்தேன் என்பதை உணர்த்துவது போல் சட்டென தன் கரத்தால் அவன் விழிகளை மூடி, இதழால் இதழ் மூடினாள். 
பதித்த இதழை இறுக்கமாகப் பற்றிக்கொண்டவன் விடுவதாயில்லை. அவள் இடை வளைத்திருந்த கரங்கள் நழுவி மொத்த உடலையும் தழுவி, கைகளில் தூக்கிக் கொண்டது. அதை எதிர்பாராது அவன் கழுத்தை இறுக்கப்பற்றியவள் மேலும் அவனோடு நெருக்கமாக ஒட்டிக் கொண்டாள். 
அவள் இசைவும், நெருக்கமும் அவனுள் உஷ்ணத்தைக் கொடுத்தது. இதழ் பிரித்தவன் முகம் முழுவதும் ஈரம் படர முத்தமிட்டான். பனி கடலில் குதித்ததை போல் அவள் இதயம் தடதடக்க, அவன் உஷ்ண முத்தம் ஒத்தடமானது. 
அவன் பின்ன தலையை வருடியவள், “விஜய்…” என் மெல்லிய குரலில் கிசுகிசுத்தாள். என்ன குரலில் இருக்கும் பாவனை தான் என்னவோ? அழைப்பா? வேண்டலா? மயக்கமா? கிறக்கமா? சிணுங்கலா? புரியவில்லை ஆனால் புது போதை தந்தது. 
மீள முடியாத மயக்கத்தில் மூழ்கும் ஆசை, படுக்கை அறைக்குள் வந்திருந்தவனுக்குக் கதவை மூட வேண்டுமென்ற எண்ணம் கூடயில்லை, சுற்றமும் மறந்து போனான். நினைவெல்லாம் அவள் மட்டுமே நிறைய, நெஞ்சமெல்லாம் அவள் மீதான நேசம் மட்டுமே நிறைய, உடலெல்லாம் அவள் பற்ற வைத்த உஷ்ணம் மட்டுமே நிறைந்தது. 
அவன் முத்தமிட்ட இடமெல்லாம் சிலிர்க்க, சுகமானதொரு அணைப்பின் மயக்கத்தில் இருந்தவளை, “ஆரா…” என மென் குரலில் விழிக்கச் செய்தான். கரங்களோ அவளை அளக்கத் தொடங்கியிருக்க, விடுபட்ட மையலில் விழி திறந்தவள் கேள்வியாகப் பார்க்க, அந்த விழியிடம் மொழிப் பேசக் கற்றுக்கொண்டான். 
ஆனால் விழியால் கூட மொழி பேச இயலாது நாணத்தால் சிவந்திருந்தவள் ஒரு கரத்தால் அவன் உடலை தன் நெஞ்சோடு அணைத்தாள். அந்த சுகத்தில் தன்னை மறந்தவன் அவள் மென்மையில் வன்மையை உணர்ந்தான். அதை ஆழத் துடிக்கும் வேகம், காத்திருந்த தருணத்தில் காற்றும் நுழை அனுமதிக்காது நெருக்கம் அதிகமானது. தன் தேவைகளை அவளுள் தேடத் தொடங்கினான். 
நெருக்கத்தில் உணரும் அழுத்தமும், மென்மையும், இடையிடும் எண்ணிலடங்காத முத்தங்களும் தீரா மோகத்தைத் தர, தீர்க்கும் வழியாய் மீண்டும் மீண்டும் அவளுள் மூழ்கித் தொலைத்தான், அவள் தந்த இன்பத்தில் கால நேரம் கணக்காறியாத பித்தனானான். குழைந்து கொஞ்சி அவளை கொண்டாடினான், ஆயிரம் முத்தங்களால் ஆராதித்தான். 
வேகமில்லாத நிதானம் அவளை மீளாத கிறக்கத்தில் வைத்திருக்க, மீளும் எண்ணம் அவளுக்கும் இல்லை. அவனிடம் கண்ட அனுபவம் புதுமை! புதுமையிலும் பல வித்தைகள் கண்டி, அவளுள் அமிழ்ந்தவன், அவளையும் தெளியவிடாது, கருந்துளை போலே காதலோடு தன்னுள் இருந்து மீள முடியாது இழுத்துக் கொண்டான். 
மேற்கில் சென்ற ஆதவன் கிழக்கில் கீழ் எழத் தயாராகி விட்டான். இருவரின் வாசமே அவர்களுக்கு சுவாசமாக, களைத்திருந்த உடலின் வியர்த்திருந்த ஈரம். மென் காற்றாலும் சென்று ஆற்றமுடியாத நெருக்கத்தில் அயர்ந்த உறக்கத்திலிருந்தனர். 

Advertisement