Advertisement

“அவங்க தான் எனக்கு ட்ரைன் பண்ணுவாங்க, கம்மிங் ட்வென்டி சமிட் பண்ண வேண்டிய பிராஜக்ட் டிலே ஆகுது, நான் பண்ண கோடிங்ல தான் ஏதோ எரர். அவர் இருந்தா கிளியர் பண்ணுவாரு..”
“ஏய்..ஸ்டாப்..ஸ்டாப்..இதுக்கா அவனைப் பத்தி கேட்ட?”
அவள் தலையாட்ட, “அதை உங்க டீம்ல இருக்குற வேற யாருடையாவது ஹெல்ப் கேட்டு சால்வ் பண்ணிக்க வேண்டியது தானே! ஏன் அகில் அண்ணா கூட இருக்காங்களே?” என்றாள். 
“அது விஜய் தான் எனக்கு காலேஜ் டேஸ்ல இருந்து தெரியும், புது மனுஷங்களோட சட்டுன்னு பழகிட வராது” என்றாள் தயங்கித் தடுமாறி. 
“ஏன் மத்தவுங்களும் மனுஷங்க தானே இல்லை காட்டுல இருந்து வந்த மிருகமா? சரி நீ போ நான் அகில் அண்ணாட்ட கால் பண்ணி சொல்லுறேன்” 
“ரியலி..தேங்க்ஸ்ங்க ரொம்ப தேங்க்ஸ்” என்றவள் சிறு உற்சாகமோடு எழுந்தே விட, “ஆரான்னு சொல்லு மரியாதை எல்லாம் வேண்டாம்” என்றாள் கட்டளையாக. முகத்திலும் சிறு சிரிப்பு வந்துவிட, அவளும் சிரித்தாள். 
முதல் சந்திப்பிலே நட்பாகிவிடும் ஆராதனாவின் இயல்பின் மீது பெரும் ஈர்ப்பே வந்திருந்தது தியாவிற்கு. தலையசைப்போடு நன்றி உரைத்தவள் திரும்பினாள். 
புள்ளப்பூச்சிக்கு கொடுக்கு முளைக்காது, விஜயின் மீது இவளுக்கு விருப்பம் வராது என்பதை ஐயமுற ஆராய்ந்து அறிந்திருந்தாள் இந்த சில நிமிடங்களில். 
“ஹே..தியா..” 
செல்பவளை மீண்டும் குரல் உயர அழைக்க, திரும்பியவள் அவள் கையசைப்பைக் கண்டுகொண்டு விரைந்து வந்தாள். 
“என்ன ஆரா..?”
“கிவ் மீ யூர் மொபைல்..?”
“எதுக்கு..?” கேட்டபோதும் அவள் கைகள் தானாக அலைபேசியை எடுத்து நீட்டியிருந்தது. பதிலின்றி பறித்துக்கொண்ட ஆரா, அவள் அலைபேசியிலிருந்து விஜயின் எண்ணிற்கு அழைத்தாள். 
அவனுக்கு என்னவோ என அறிந்து கொள்ளும் அவளில் அழைத்துவிட்டாள். ஆனால் இரு தினங்களாக நான் அழைத்த போது ஏற்காதவன் இவள் அழைப்பை ஏற்று விடுவானோ என ஒரு மனம் பதைபதைத்து கொண்டுமிருந்தது.
நீண்ட நிமிடங்கள் காத்திருந்த போதும் அழைப்பு ஏற்கப்படாமல் போக, உள்ளுக்குள் ஒரு ஆசுவாசம், நிம்மதி அதை மூச்சாக வெளிவிட்டாள். 
அலைபேசியை அவளிடம் நீட்ட, வாங்கிப் பார்த்த தியா, “ஹோ..என் ஆரா உன் மொபைல் என்னாச்சு?” என்றாள். 
“ஷ்..ஒருவேளை விஜய் உனக்குக் கால் பண்ணா எனக்கு இன்போர்ம் பண்ற, என்ன புரிஞ்சதா?” என இன்னும் அந்த போலி மிரட்டலை கை விடாது கேட்டாள். 
ஏனென கேள்வி தோன்றிய போதும் கேட்காது சந்தேகக் குறியிட்டு உள்ளுக்குள் வைத்துக்கொண்ட தியா, சில நிமிட சிநேகத்தில் உதித்த சிரிப்போடு தலையசைத்து சென்றாள்.
அவள் செல்ல மீண்டும் அதே இருக்கையில் நெற்றியை வருடியபடி அமர்ந்தாள் ஆராதனா. இனி இந்த டேன்ஷனை எல்லாம் சுமந்து கொண்டிருப்பது வேலைக்காவது இரண்டில் ஒரு முடிவு இன்று தெரிந்தேயாக வேண்டும் என்ற உறுதியோடு எழுந்து சென்றாள். 
மாலை வேலை நேரம் முடிய விஜயின் வீட்டிற்கே செல்வது என்ற முடிவோடு தன் காரை நோக்கி வந்தாள். எதற்கும் இறுதியாக ஒரு முறை அவனுக்கு அழைத்துப் பார்ப்போமென நினைத்து காரில் அமர்ந்தபடி அலைபேசியில் அழைப்பு விடுத்தாள். 
இம்முறை அழைப்பு சென்ற இரண்டே வினாடியில் ஏற்கப்பட, எதிர்பார்த்து காத்திருந்தவளுக்குக் கேட்டது, “ஹோ..லோ..” என்ற ஸ்ரீயின் மழலைக் குரல்.
அவளிடம் பேசியும் சில தினங்கள் கடந்திருக்க, “ஸ்ரீகுட்டி…!” உற்சாகம் போங்க அழைத்தாள் ஆராதனா. 
“ஆரா..” அவளும் அழைக்க, அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே என்னும் அளவிற்கு இருவரும் நட்பு பாராட்டினர். 
“என்ன பண்ற ஸ்ரீ?” 
“சித்தா மொபைல்ல கேம் விளையாடுறேன்”
“கேமா..! ஸ்கூல் போய்ட்டு வந்துட்டீங்களா குட்டிம்மா?” 
“இல்லை..இன்னைக்கு ஸ்கூல் லீவ்ல..” 
“லீவா..! இன்னைக்கி என்ன லீவ்..?” 
“சித்தாவுக்கு பீவர்ல அதான் எனக்கும் லீவ்” 
“அடிப்பாவி இந்த வயசுலையே ஸ்கூல் கட் அடிக்கிறீயா நீ..?” 
“அவங்களுக்கே லீவ் கொடுத்தா நாங்க ஏன் கட் அடிக்கப் போறோம்?”
“அதான் ஸ்டார்ட்டே, சண்டே லீவ் இருக்குல” 
“பத்தாது..வீக்லிலி பைவ் டேஸ் லீவ் வேணும்” 
“சரிதான், உங்க சித்தப்பாவை சி.எம் ஆகி அப்படியொரு ரூல் கொண்டுவரச் சொல்லு” 
ஆரா உரைக்கும் போதே ஆழ்ந்த உறக்கத்திலிருந்த விஜயை உலுக்கி எழுப்பியிருந்தாள் ஸ்ரீநிதி. 
“சித்தா நீ சி.எம் ஆனா எனக்கு புல் டேஸ் லீவு தானே?” என்க, அவனோ சிணுங்களோடு சரியென்றபடி திரும்பிப்படுத்தான். 
“எப்போ சி.எம்.ஆவான்னு கேளு..” என விளையாட்டாக ஆரா சொல்லிக்கொடுக்க, அதையே ஸ்ரீயும் அவனிடம் கேட்டாள். 
“பீவர் சரியாகவும்..” என்றான் உறக்கம் கலையாத கலக்கத்துடன். 
“எப்போ சரியாகும்?” மீண்டும் ஆரா சொல்லிக்கொடுத்ததையே ஸ்ரீ கேட்க, விஜய் முழுதாக சுயநினைவோடு விழித்திருந்தான். 
“யார் பேசுறது..?” என்ற விஜயின் கேள்வியை ஸ்ரீ ஆராவிடம் கேட்க, அதன் பின்பே தன் அலைபேசியில் இவ்வளவு இயல்பாக ஸ்ரீ பேசுவது ஆராவிடம் மட்டும் தான் என்பது நினைவில் வந்தது. 
ஐயையோ அராத்து! எனப் பதறியவன் மீண்டும் குப்புறப்படுத்து போர்வையையும் இழுத்து மூடிக்கொண்டான். 
“ஆபிஸ்ல இருந்து பேசுறோம்னு சொல்லு” என ஆரா சொல்லியதை ஸ்ரீ  தெரிவித்தாள். 
அதற்கு விஜய் பதிலளிக்க, “சித்தா தூக்குறேன்னு சொல்லச் சொன்னாங்க” என அவன் விழித்திருப்பதை அறியாது அவள் போட்டுக்கொடுத்து விட, நெற்றில் அறைந்து கொண்டான் விஜய். 
அந்த பக்கம் குலுங்கிச் சிரித்த ஆரா, “இம்போர்ட்டனா பேசனும்னு சொல்லு” என்றாள். 
ஸ்ரீ கேட்டதும், “ஏதாவது இருந்தாலும் நாளைக்கு ஆபிஸ் வந்து பேசிக்கோங்க சித்தாவுக்கு ஹேவி பீவர்ன்னு சொல்லு” என்றான். 
ஸ்ரீ என்ன தான் உள்வாங்கி எதிரொலித்தது போதும் அவன் அசதியான வலுவிழந்த குரல் அவள் செவிகளையும் எட்டியிருந்தது. அவனுக்காக வருந்தவும் அவன் நலம்பெற வேண்டவும் மட்டுமே இந்நிலையில் தான்னால் இயலும் என்பதால் அந்நொடியே அதை மறவாது செய்திருந்தாள். 
அதே நேரம் விஜயின் அறைக்குள் கையில் கசாயத்தை ஆற்றியவாறு பவானியும் உடன் கௌஷியும் வந்தார். பாட்டியின் கைகளில் ஏதோ இருப்பதைக் கவனித்து ஸ்ரீ அலைபேசியை அப்படியே விட்டுவிட்டு எழுந்து சென்றாள். 
“ஏழு கழுதை வயசாகுது இன்னும் இந்த குட்டிப்பிசாசடோட மழையில நனையிற ஆட்டத்தை விடுறானா பாருங்க அத்தை. ஒருநாள் ஆட்டிட்டு ஒன்பது நாள் படுத்துக்கிட வேண்டியது, கொஞ்சமாவது உடம்பை கெடுத்துக்க கூடாதுங்குற பொறுப்பு இருக்கா?” என தன் அக்கறையும் கோபமாக வெளிப்படுத்தினாள் கௌஷி. 
அவள் குற்றச்சாட்டில் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டவன், “காய்ச்சல் சரியாகிடுச்சு நான் நல்லா தான் இருக்கேன்” என்றான். 
“என்ன நல்லாயிருக்க? நல்லாப் பாரு, நாலு கிலோ இழைச்சிப் போயிருக்கடா. இப்படியே தெருவுல இறங்கு நல்லியிலும்புன்னு நாய் கவ்விட்டு போகும்” 
“ஆமாம், இந்தம்மா மட்டும் அர்னால்டுக்கு அக்காவாக்கும்..!”
“அக்கென்ன முணுமுணுப்பு? இப்படி படுத்துக்கிட்டு பச்சப்புள்ளைக்கும் மேல எங்களைப் படுத்தி எடுத்துட்டு இருக்க”
“இப்போ எதுக்கு நீ கத்திட்டு இருக்க?” 
“ஆமாம், நான் பேசுனா உனக்கு கத்துற மாதிரி தானே இருக்கும்! எல்லாம் வரவா வந்து வகையா பேசும் போது தெரியும்!” 
“அதெல்லாம் பேசவிடாமா எப்படி கவனிச்சிக்கணும்னு எங்களுக்குத் தெரியும், நீ கிளம்பு, கிளம்பு கொஞ்சமாவது காத்து வரட்டும்” என விரட்ட, அவளோ முகத்தை சிலுப்பிக் கொண்டாள். 
அதுவரை காரியமே கண்ணாய் கசாயத்தை ஆற்றிய பவானி மிதமான சூட்டில் விஜயிடம் கொடுத்தார். 
“பாப்பா கூட விளையாடலை, இரண்டு நாள் முன்ன வரும் போதே மழையில லேசா நனைச்சிட்டு லேட்டா தான் வந்தான் கௌஷி” 
“நல்லா சொல்லுங்கம்மா, உண்மை தெரியாம அவ கற்பனையை காட்சிப்படுத்திக் கத்திக்கிட்டு இருக்க” 
“ஹோ, அதான் காய்ச்சலா?”
“அப்படியும் தெரியலை கௌஷி, அன்னைக்கு ஒன்னும் இவன் முழுசா நனையலை ஆனால் வரும்போதே அவன் முகமெல்லாம் சிவந்து ஒரு மாதிரி, சரியா சொல்லணும்னா பயந்த மாதிரி தான் இருந்தான்?” 
பவானியின் கூற்றில், அப்படியென்ன என கௌஷி வியப்பாப் பார்க்க, அன்னை தன்னை இத்தனை தூரம் கவனித்துள்ளாரா? என நினைத்து சங்கோஜத்தோடு நெளிந்தான் விஜய். 
“எதனாலடா உனக்கு இந்த திடீர் காய்ச்சல்?” என கௌஷி நேரடியாகவே கேட்க, ஆராதனாவும் அவள் முத்தமிட்ட காட்சிகளுமே  கண்முன் வந்தது. 
கனவிலிருந்து அரண்டு விழிப்பது போல் ஒரு நொடி பதறியவன், “எனக்குத் தூக்கம் வருது, நீங்க கிளம்புங்க” என்று சட்டென படுத்தும் விட்டான். 
அவனை வினோதமாகப் பார்த்தாள் கௌஷிகா. “ஸ்கூல்கு தான் போகலை ஹாம் ஒர்க்கையாவது செய்” என ஸ்ரீயை இழுத்துச் செல்ல, பவானியும் பின் சென்றுவிட்டார். 
நிம்மதி மூச்சை விட்டவன் படுத்த பின்பே அருகிலிருக்கும் அலைபேசியையும் அதில் தொடர்பில் இருக்கும் ஆராவையும் கவனித்தான். 
ஐயோ ஐயோ..! மானம் போச்சே! மனதில் நினைத்தபடி நெற்றியில் அறைந்து கொண்டவன், மூச்சை இழுத்துக்கொண்டு சிறு சந்தமின்றி தொடர்பை கட் செய்தான்.  
அது வரையிலும் இதழில் மலர்ந்த நகையோடு கேட்டுக்கொண்டிருந்த ஆரா, ‘வாடா நீ நாளைக்கு, ஆபிஸ் தானே வருவ அப்போ வச்சிக்கிறேன்’ என நினைத்தாள். 
கார் கண்ணாடியில் தன் முகம் பார்த்தாள். முத்தமிட்ட மூன்றாம் நாளில் வந்து ஒட்டிக்கொண்ட வெட்கத்தில் அவளையும் மீறி முகம் சிவக்க, ஒரு முத்தத்துக்கே காய்ச்சலா..! ஹையோ, இவனையெல்லாம் கட்டிகிட்டு…நோ..நோ ஆரா உன் கற்பனைகளுக்கு சென்சார் போடு என்ற மனதின் குரலைக் கேட்டு, சட்டென்று இரு கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள். 
கோபப்படுவானோ, தன்னை தவிர்ப்பானோ என்றெல்லாம் தவித்திருந்தவளுக்கு, தன் முத்தம் அவனை தடுமாற வைத்துள்ளது என்பதை அறிய, சிறு நம்பிக்கையும் உற்சாகமும் ஊற்றெடுத்தது! அதில் உல்லாசமாகக் காதல் பாடலை இசைக்க விட்டபடி காரை எடுத்தாள். 
கண் மூடி படித்துவிட்ட விஜய்க்கு கண்முன்னும் அதே காட்சியே! எதைத் தின்றால் இப்பித்தம் தீரும் எனும் நிலையிலிருந்தான். இன்னும் அவன் உள்ளத்தின் படபடப்பு அடங்கவில்லை! 
மழலை முத்தம் மட்டுமே அறிந்தவனுக்கு அவள் முத்தம் புதிதாய் இருந்தது. பற்றிய நெருப்பு விடுவதாயில்லை, காய்ச்சல் குறைந்திருந்த போதும் உடல் உஷ்ணம் குறையாதது போன்ற பிரமை! 

Advertisement