Geethamaagumo Pallavi
ஓம் ஒளியெலாமானாய் போற்றி!!
10
தெருவில் போவோர் வருவோரெல்லாம் அவ்விடத்தில் நின்று ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டுச் சென்றனர்.
பார்ப்பதற்கு தாஜ்மஹால் அல்ல.. டாஸ்மார்க் அது.!
அதன் வாசலில் அன்றாடம் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கும் ஒன்றுதான் இன்றும் நடந்து கொண்டிருந்தது.
“யோவ்..! ஏன்யா இப்படி தினமும் குடிச்சிட்டு ரோட்டுல குப்புற விழுந்து கிடக்குற.. பொட்டப் புள்ளைய வீட்டுல வெச்சுட்டு புத்தியே வராதாயா உனக்கு..? உனக்கு...
ஓம் ஔவைக்கு அருளினோய் போற்றி!!
12
கூடத்தில் இருந்து அறுசுவை உணவின் மணம் கமழ்ந்து வந்தது..!
விரிக்கப்பட்டிருந்த தலை வாழை இலையின் ஒரு ஓரத்தில், உப்பும் நார்த்தங்காய் ஊறுகாயும் இடம்பெற்றிருக்க.. இனிப்பு வகையில் பல்லவி கைப்பட தயாரித்த கருப்பட்டி லட்டோடு, சிவகாமி வைத்த காய்கறி அவியலோடு, சுந்தரேஸ்வரனின் சாம்பார் மணந்து கொண்டிருக்க, உளுந்து வடையும் பாசிப்பருப்பு பாயசமும் ஸ்வரன்...
மீதமிருந்த நேரத்தை ஏகக் கடுப்பில் கடத்திக் கொண்டிருந்தாள் பல்லவி. அவன் வந்ததும் ஒரு பெரிய பஞ்சாயத்தை துவங்குவதற்காகக் காத்திருந்தாள்.
அவன் மதிய உணவிற்கும் வீட்டிற்கு வராதுபோக பல்லவிக்கு மெல்ல மெல்ல பயம் சூழ்ந்தது. சுந்தரேஸ்வரன் கூட இரண்டு முறை ஸ்வரன் பற்றி விசாரித்துவிட்டார் அவளிடம்.
“எதோ முக்கியமான வேலைன்னு கிளம்பிப் போனாருங்க தாத்தா. வந்திருவாரு” என்று சொல்லியே...
நம்ப முடியாமல் ஸ்வரனைப் பார்க்க.. அவனோ அழகாய் கண் சிமிட்டி புன்னகைத்தான்.
பின் பல்லவி சரணையே பார்க்க, அவனோ அவளைக் கண்ட மாத்திரம் நாற்புறமும் கயிற்றால் கட்டி இழுக்கப்பட இளஞ்சிறுத்தை போல் எந்தப் பக்கம் பாய்வதென்று தெரியாது சீறிக் கொண்டு நின்றிருந்தான்.
“சரண்..! நீ உள்ள போ ப்பா” என்று சுந்தரேஸ்வரன் கூற, பல்லவியை முறைத்துக் கொண்டே...
“ஆதி..! நான் எதாவது தப்பு பண்ணிருந்தா அயம் சாரி. எதுவா இருந்தாலும் என்கிட்டே டைரெக்டா சொல்லிருக்கலாம் தானே. அதுக்கு ஏன் சரியா பேசாம இருக்கீங்க? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எப்போவும் போல பேசுங்க ஆதி” எனத் திரும்ப லேசாய் அதிர்ந்தாள்.
அவன் எப்போது அங்கிருந்து சென்றான் எனத் தெரியவில்லை. தற்போது அவன் அங்கு இல்லை....
ஓம் ஆதிகுருவே போற்றி!!
2
ஏகாந்த இரவுப் பொழுது அது..!
ஆனால் பல்லவிக்கு ஏகாந்தம் தரவில்லை. அகமெங்கும் எரிச்சலும் ஏமாற்றமும் தான் தந்தது.
எரிச்சலை இன்னுமாய் ஏற்றி வைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தபடி இருந்தனர் பாட்டியும் சுரேகாவும்.
கல்யாணம் எனும் நெடுங்கடலில் பாய்மரப் படகேற்றி விடப்பட்டவளோ, நடுக்கடலில் கப்பலை இறங்கித் தள்ளமுடியுமா என்பதாய் அமர்ந்திருந்தாள். தள்ள முடியும் என்றால்...
ஓம் ஓங்காரனே போற்றி!!
11
ஒன்பது மணி பத்து மணித்துளிகள்..!
கடிகாரம் காட்டிய நேரத்தில் குற்றவுணர்வு ஓங்க, ஒடுங்கிப்போய் நின்றிருந்தனர் ஸ்வரனும் பல்லவியும்.
சுந்தரேஸ்வரனை வீடு முழுக்கத் தேடிவிட்டனர். எங்கு சென்றார் என்று இதுவரையில் இருவருக்கும் தெரிந்திருக்கவில்லை.
“என்னால தான் தாத்தா எங்கயோ போயிட்டாரு” என்று புலம்பிய பல்லவியிடம்,
“அனு..! நீ கொஞ்ச நேரம் பேசாம இரு. போதும் இவ்வளவு நேரம் பேசுனதே”...
“இது லைஃப் டைம் வேலிடிட்டி. என்னிக்கும் எக்ச்பைர்ட் ஆகாது. ஒரு டைம் லைசென்ஸ் எடுத்தா எடுத்ததுதான்” என்றான் அவளருகே அமர்ந்துகொண்டு.
அவன் உடனுக்குடன் பதிலளிக்கவும்,
“சோ, தாலி கட்டிட்டா இனி உரிமையா என்ன வேணாலும் செய்வீங்க. யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி தானே?” என்றாள் எரிச்சலுடன்.
அவன் என்னவோ இதுவரை இயல்பாய் தான் பேசிக்கொண்டிருந்தான். இந்த சண்டைக்...
அவள் அமைதியாய் இருக்க,
“கோபம்.. யோசிக்குற சக்தியையே நம்ம கிட்ட இருந்து பறிச்சிடுது. அது அந்த ஒருநொடி நிகழ்வு தான். தெரிஞ்சே யாரும் செய்யுறதில்ல. அந்த ஒருநொடி நம்ம கட்டுப்பாட்டை இழந்திடுறோம். ஆனா தெளிவானதும், நம்ம நடந்துகிட்ட விதத்தை நினைச்சு ஒவ்வொரு நொடியும் வருந்துவோம். உன்னை முதல் முறையா சந்திக்கும்போது நான் அடிச்சதும் அப்படித்தான். இன்னுமே...
ஓம் கேசவன் மருகா போற்றி!!
19
அந்தி சாயும் நேரம்..!
பகலவனைப் போல் பொலிவிழந்து காணப்பட்டாள் பல்லவி.
அலுவலகத்தில் இருந்து வந்தவள் சோர்ந்துபோய் வீட்டினுள் நுழைய, அவளை என்றும் இன்முகமாய் எதிர்கொள்ளும் ஸ்வரன் இன்று எதிர்கொள்ளாதிருக்க, யோசனையோடு வந்தமர்ந்தாள் வரவேற்பறையில் இருந்த சோபாவில்.
“வந்துட்டயா பல்லவி..!” என்றபடி கிச்சனில் இருந்து வெளியே வந்தார் சிவகாமி.
“ம்மா..! ரொம்ப டயர்டா இருக்கு ஒரு கப்...
பெரியவர்கள் என்றும் பெரியவர்களே.. வயதாலின்றி, குணத்தால் மனத்தால் நேசத்தால் பாசத்தால் என அனைத்திலும் உயர்ந்தவர்கள். அதை சுந்தரேஸ்வரன் நிரூபிக்க, சிவகாமின் மனதிலும் உயர்ந்து நின்றார்.
அதுவரை அமைதியாய் இருந்த சிவகாமி,
“அம்பிகா..! நேரநேரத்திக்கு மாத்திரை போடனுமல்ல.. இரு நான் சாப்பிட எதாவது பண்ணித் தர்றேன். சாப்ட்டுட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடு” என்றுவிட்டு கிட்சனுள் புக,
“உங்களுக்கு எதுக்கு ம்மா...
ஓம் கொற்றவா போற்றி!!
20
மருத்துவமனை வளாகம்..!
இதயத்துடிப்பு நொடிக்கு நொடி அதிகரிக்க.. அதன் ஆதீத அளவை அவன் இதயமே அவனிடம் இயம்பியது.
இதுவரை அவன் கண்டிறாத அளவில் பயமும் பதற்றமும் சூழ, சுழலில் சிக்கித் தவித்திருந்தான் ஆதீஸ்வரன். அச்சப் பேரலைகளில் இருந்து தன் அகத்தை அமைதிப்படுத்த முயன்று, பெரிதாய் தோற்றான்.
இதுநாள் வரை அவனை இன்புற வைத்தவள் தான் இப்போது...
ஸ்வரன் கூறியதில் அவளுக்கே லேசாய் சிரிப்பு வந்தது. அவளைக் கண்ட அவனுக்கும் தான். பின் இருவரும் பிரகாரத்தைச் சுற்றி வந்து அங்கிருக்கும் சிறிய சந்நிதிகளை எல்லாம் தரிசித்துவிட்டு கோவில் மண்டபத்தில் அமர்ந்தனர்.
ஆலயவழிபாடு அகத்தில் இருக்கும் அத்தனை விடைகாண முடியா வினாக்களுக்கும் விடையைத் தேடித்தந்து, அமைதியை நிலவச் செய்தது பல்லவிக்கு. அவளாகவே ஸ்வரனோடு இயல்பாய் பேச...
ஓம் ஈசற்கினிய சேயே போற்றி!!
4
ஸ்வர பல்லவியாய் கோவில் சென்று, ஸ்வரம் தப்பியதில் பல்லவி மட்டுமே வீடு வந்தாள்.
“மாப்பிள்ளை எங்கம்மா நீ மட்டும் வர்ற?”
“ம்மா அவருக்கு எதோ முக்கியமான வேலையாம், அதை முடிச்சிட்டு வரேன்னு போயிருக்காரு”
அவள் பேச்சில் சிவகாமி உணர்ந்த சொந்தம் அத்தனை இனித்தது அவருக்கு. அதை அவர் முகம் அப்படியே காட்ட, அவளுக்கும் அது...
ஓம் கிரிமகள் புதல்வா போற்றி!!
15
ஆதீஸ்வரனின் அகத்தினில் அளவிற்கும் அடங்காத ஆழிப்பேரலைகள் ஆர்ப்பரித்தது.!
ஆனால் முகமோ பேரமைதியை சுமந்திருக்க.. அவன் முன் எழுந்து வந்து மண்டியிட்டு அமர்ந்த அனுபல்லவி, அவன் இருபக்கத் தொடை மீது தன்னிரு கைகளையும் ஊன்றியபடி அவன் முகம் கண்டாள்.
ஒற்றைத்துளி..!
அவள் கைமேல் விழுந்த அவனது கண்ணீர் துளி அவளுக்கு அவன் நிலையை நன்கு உணர்த்தியது.
அவன்...
அனைத்தும் சரியாக இருக்கவேண்டும் அவனுக்கு. வாடிக்கையாளர்கள் எவ்வகையிலும் அதிருப்தி அடைந்துவிடக் கூடாது என்பதில் அதிக கவனமாய் இருப்பான். அதுபோல் தான் அந்த ஆர்டரும் அவர்களுக்கு நிறைவாய் இருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருந்தான்.
மதிய வேளையில் பல்லவி உறங்கிக் கொண்டிருக்க, ஸ்வரன் வெளியே சென்றிருக்க, அன்றைய சமையலை மெல்ல ஆரம்பித்திருந்தார் சிவகாமி. எது...
ஓம் கீர்த்தியனே போற்றி!!
16
அவன் ஒற்றைப் புன்னகை அத்தனை வசீகரம்.!
அவர்களது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு, பகற்கனவில் பாகாய் உருகிக்கொண்டிருந்தாள் பல்லவி.
ஸ்வரனையே ரசித்துப் பார்த்திருந்தவள் பார்வை மெல்ல அவனருகில் நின்றிருக்கும் தன்புறம் செல்ல, உடனே உதட்டை நெளித்து சுளித்தாள்.
‘கொஞ்சம் சிரிச்சிருக்கலாம் பல்லவி நீ.. அப்போவே சுரேகா சொன்னா ஒழுங்கா போஸ் கொடுன்னு. கேட்டியா..?...
ஓம் உமைபாலா போற்றி!!
5
அதிகாலையில் விழிப்பு வந்த ஸ்வரன் மெல்ல கண்விழித்துப் பார்த்தபோது அவனுக்கு வெகு அருகில் இருந்தது பல்லவியின் முகம்.
டெட்டி பியரைக் கட்டிப் பிடித்துத் தூங்குவதுபோல் அவனைப் பிடித்துக் கொண்டிருந்தாள். அவனது அனுவின் செயலால் ஆனந்த அதிர்ச்சி கொண்டவனின் அதரங்கள் அழகாய் விரிய.. அவளிடம் அசைவு தெரிய.. உறங்குவதுபோல் அப்படியே அசையாது படுத்துக் கொண்டான்.
சிறிது...
ஓம் இளம் பூரணனே போற்றி!!
3
தூக்கம்.. அதிலும் அதிகாலை வேளை தூக்கம் அள்ளித் தெளிக்கும் சுகமே அலாதி தான்.
ஆனால் அப்போது தான் அலாரம் கரடி வேலையைக் கரெக்ட்டாக பார்த்து வைக்கும். அப்படியில்லையெனில் யாராவது வந்து கதவைத் தட்டி கரடி வேலை பார்த்து வைப்பர்.
அனுவிற்கும் அப்படித்தான் யாரோ கரடி வேலை பார்த்தனர்.
“ச்சே.. யார்டா அது காலங்காத்தால தூங்க...
ஓம் கார்த்திகேயா போற்றி!!
14
அந்தி வான வண்ணப் பட்டுடுத்தி, அங்கத்தில் அழகிய ஆபரணங்கள் பூட்டி, அளவான ஒப்பனைகளோடு அலங்காரப் பூஷிதையாய் காட்சிகொடுத்தாள் சுரேகா.
கல்யாணப் பெண்ணிற்கே உரிய கலையான முகத்தோடு, இன்னும் சற்று நேரத்தில் தன் சகலமும் ஆகப் போகிறவனின் கைப்பற்றி திருமணச் சடங்குகளில் ஈடுபட்டிருந்தாள்.
மணமக்கள் இருவரும் அன்யோன்யமாய் சடங்குகளில் ஈடுபட்டு, இனிமையாய் பேசி சிரித்து, அவர்களது...