Advertisement

“ம்ம். போட்டுட்டு கிளம்பி போயிட்டே இருக்க வேண்டியதுதானே?”, என்று வார்த்தைகளை விட்டவன், காரை சாலை ஓரத்தில் நிறுத்தினான். கதவின் பக்கவாட்டில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கைகளை கழுவி பின், அறிவழகியை நோக்கி கைநீட்ட, அவள் திரு திருவென விழித்தாள்.
அவன் இவள் மடியிலிருந்த பார்சலைப் பார்க்க, “ஓஹ். சாரி மறந்துட்டேன்”, என்று அவசரமாக பிரித்து அதிலிருந்து ஒரு ஸாண்ட்விச் எடுத்து அவனுக்கு நீட்டினாள். அவன் கேட்ட கேள்வியில் சிறுதீனி வாங்கியது எங்கே ஞாபகம் இருந்தது?
“ம்ம் அப்பறம்?”, ஏதோ கதை கேட்பவன் போல மேலே கூறுமாறு சொன்னான்.
“அந்த ஆபிஸ்ல, அத்தை பேர்ல இருக்கற சொத்தை, மாமாக்கு தெரியாம அவ தன் பேருக்கு மாத்திக்கறதா தெரிஞ்சிகிட்டேன்.”
“ம்ம் சரி?”
“அத மாமாகிட்ட சொல்லலாம்னு போனேன்”
“எதுக்கு? எங்க வீட்டு சொத்து எங்கம்மா பேர்ல இருந்தா என்ன? எனக்கு வரப் போற பொண்டாட்டி பேர்ல இருந்தா என்ன?” என்று அவளைப் பார்த்து சொல்லி விட்டு , “எனக்கு ஒரு நல்லது நடந்தா ஆண்டவனுக்கே பிடிக்காது போல?”, என்று முணுமுத்தான்.
“அந்த பொண்ணு சரியில்ல”, என்றால் குற்றச்சாட்டாக.
“ஸ்ரீஜா”, என்றான் வெகு சிரத்தையாக.
‘ஆமா இப்போ ரொம்ப முக்கியம்’ மனதுக்குள் நொடித்தபடி, ” ம்ம். ஸ்ரீஜா, அவ போன்ல உங்களைப்பத்திதான் யாரோடையோ பேசிட்டு இருந்தா..”
“ஒட்டு கேட்டியா என்ன?”, என்று அன்பரசன் குறுக்கிட..
கோபப்படக்கூடாதுன்னு நினச்சா விட மாட்டான் போலவே? என்ற யோசனையுடன், பொறுமையை இழுத்துப் பிடித்து, “அவ என் எதிர்ல தான் உக்காந்து பேசிட்டு இருந்தா”, என்றாள்.
ஆராய்ச்சியாக அறிவழகியைப் பார்த்து, “ம்ம்.. நீ என்னோட எக்ஸ் வொய்ப் னு தெரிஞ்சு உன் எதிர்ல பேசினாளா?”, அவன் விசாரணை செய்யும் த்வனியில் கேட்க….
அவனது ‘எக்ஸ் வொய்ப்-இல் கோபம் வந்தே விட்டது. அன்பரசனை  முறைத்தபடி, “யாருக்கும் புரியாதுன்னு நினைச்சு குஜராத்தில் பேசினா”, குரலும் உயர்ந்திருந்தது.
“அவங்கண்ணி குஜராத்தி காரங்க, அதனால பேசியிருப்பா. அப்படி நீ தப்பா நினைக்கற அளவுக்கு என்ன பேசினா?”, முதல் சாண்ட்விச் முடித்து, அவள் மடியிலிருந்த பார்சலைப் பார்க்க அனிச்சையாக அடுத்த  சாண்ட்விச்-சை நீட்டினாள்.
அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்து, “உங்க அத்தை பொண்ணே உங்களை லூசுன்னு சொல்லி ரிஜெக்ட் பண்ணினதா, உங்க அப்பா உங்களை வீட்டை விட்டு துரத்திட்டாரு-ன்னு”, கூறினாள்.
அன்பரசனின் கண்கள் வேறெங்கோ நிலைகுத்தி இருக்க, “ஹூம். உண்மைதானே?”, என்றான்.
அவன் முகம் பார்க்க அறிவாசகிக்கு வருத்தமாக இருந்தது, ஆயினும் முற்றிலும் சொல்லாமல் இருக்க முடியாதல்லவா? எனவே தொடர்ந்தாள். “உங்க வொய்ஃப், அதாவது நான் யார்கிட்டயும் சொல்லாம கொள்ளாம போயிட்டதால ஒன்னு நீங்க சைக்கோ-வா  இருக்கனும் இல்லைன்னா..”, எச்சில் கூட்டி விழுங்கி மேலும் சொல்ல தயங்கினாள்.
“ம்ம் இல்லைன்னா?”,
மெதுவாக, “அவனா நீ? கேசா இருக்கணும்னு சொன்னா.”, என்றாள்.
உணர்ச்சி் துடைத்த பார்வையோடு அறிவழகியின் முகத்தை பார்த்த அன்பரசன், “ஹூம். இவ்ளோதானே? இதைப்போல நிறைய கேட்டாச்சு”, என்று கசந்த முறுவலுடன் கூற, அறிவழகிக்கு தொண்டை அடைத்தது. அப்போதே அவனை ஆரத்தழுவி ஆறுதல் சொல்ல வேண்டும்போல் எழுந்த உணர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினாள்.
“சாப்பிடல?”, கையிலிருந்ததைக் காண்பித்து அன்பரசன் கேட்க..
“ம்ம், தோ”, என்று ஒன்றை எடுத்துக் கொண்டாள்.
இருவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை அவரவர் சிந்தனையில் அமைதியாக இருந்தனர்.
“then ?”
“உங்ககிட்ட ஃபிட்னெஸ் சர்டிபிகேட் கேட்டிருக்கறதா சொன்னா”, என்றாள்.
“சரி, அதுக்கும் நீ இங்க வந்ததுக்கு என்ன சம்பந்தம்?”
சில நொடிகள் தாமதித்தவள், “மாமாகிட்ட பேசும்போதுதான் நீங்க அவருக்கும் தெரியாம எனக்கு டாகுமெண்ட் அனுப்புனீங்கன்னும், அதுக்காக மாமா கோச்சிக்கிட்டு உங்களை வீட்ல சேர்க்கல-ன்னு தெரிஞ்சது”
மேலே சொல் என்பதுபோல அவன் பார்க்க, “எங்கம்மாக்கு கொடுத்த வாக்கை காப்பாத்த முடியலைன்னு அவர் வருத்தப்பட்டார்.”, என்றுவிட்டு மீண்டும் அவனைப் பார்க்க அவன் இன்னமும் கேள்வியாக அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.  “அதான்..”
“ஓஹோ? அப்போ எங்கப்பா நல்லவர்ன்னு தெரிஞ்சதால, அவரோட ப்ராமிஸை நிஜமாக்கறதுக்காக, என்னை சகிச்சிக்கலாம்னு வந்திருக்க, அப்படித்தான?”
அன்பரசனை திகைத்து பார்த்து , இதற்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் முழித்தாள்.
“இதுக்கு ஸ்ரீஜா எவ்வளவோ பரவால்லயே?, கொஞ்சம் யோசிச்சு பாரு. நீ சொன்ன எல்லா காரணமும் அவளோட பாயிண்ட் ஆப் வியூல பாத்தா எனக்கு சரியாத்தான் தோணுது. நான் ஏற்கனவே Psychiatry [மன நல மருத்துவம் ] ட்ரீட்மெண்ட் எடுத்துகிட்டவன்தான். பிஸிக்கல் பிட்னெஸ் கேட்டது , என்னோட முதல் வொய்ப் சொல்லாம கொள்ளாம ஓடிப்போனதுனால. ஒரு வேளை எனக்கு உடல் தகுதி இல்லாம அதனாலதான் ஓடிப்போனாளோ-ன்னு  அவ நினைச்சிருக்கலாம். சோ எனக்கு தப்பா தெரியல”
“சொத்து பத்தி எந்த வில்லங்கமும் இருக்கக்கூடாதுன்னு நினைச்சிருக்கா, அதனாலதான் முக்கியமா உன்கிட்ட  ரிலீஸ் டீட் கேட்டிருக்கா. இதுலயும் ஒண்ணும் தப்பில்லை.  கூடவே அம்மா சொத்து மொத்தமும் அவ கண்ட்ரோல்-ல வச்சிக்கணும்னு நினைச்சிருக்கா.ஒரு செக்யுரிட்டின்னு தோணியிருக்கலாம். அதனாலதான் எல்லாத்தையும் அவ பேர்ல மாத்த சொல்லியிருக்கா. ஒரு மெண்டல் டிஸார்டர் இருந்த என்னை நம்பி அவ வாழ்க்கையையே கொடுக்கறான்னா இதெல்லாம் அடஜஸ்ட் பண்ணிக்கலாம், சரிதானே?”
“கல்யாணத்துக்கு பின்னால ஏதானும் பிரச்சனைன்னா டிவோர்ஸ் பண்ணிடுவாளாம்”, கோள் செல்வதாவது ஒன்றாவது? அந்த பெண் செய்ததெல்லாம் சரி என்கிறானே? இனி எல்லாவற்றையும் உடைத்துக் கூற வேண்டியதுதான் என்று முடிவெடுத்து பேச ஆரம்பித்தாள்.
“தப்பில்லையே?”, என்றான் இலகுவாக.
“அவ ரொம்ப அல்ட்ரா மாடர்ன், அவ விசயத்துல தலையிட்டா மாமா அத்தைய வெட்டி விட்டுவேன்னு சொன்னா”, குற்றம் சாட்டும் குரல் தானாகவே வந்திருந்தது.
முகம் கடுகடுக்க அறிவழகியைப் பார்த்து, “என்னை என்ன முட்டாள்னு நினைச்சியா?  எனக்கு என்னை, என் குடும்பத்தை பாத்துக்க தெரியாது? யார் சொன்னாலும் நான் கேட்டுடுவேனா?”
திடீரென அவனது குரல் உயரவே…, அறிவழகிக்கு உள்ளுக்குள் உதற ஆரம்பித்தது. “அதையும் தவிர அந்த பொண்ணுக்கு சொத்து மேல ஆசை இருந்தா, மாடர்னா இருந்தா அது என்னோட ப்ரச்சனை, நான் அவளுக்கு ஏத்த மாதிரி சம்பாதிச்சிட்டு போறேன், இல்ல நானும் அவகூட கிழிஞ்சுபோன ஜீன்ஸ் போட்டு சுத்தறேன். உனக்கென்ன?”
“அவ ஏற்கனவே ஒருத்தரை காதலிச்சிருக்கா..”
“சோ வாட்? நான் ஏற்கனவே கல்யாணமே பண்ணினவன்”,
இந்த பதிலை கேட்டு திகைத்து விழித்தாள். “அப்போ உங்களுக்கு அந்த பொண்ண பிடிச்சிருக்கா?”, காற்றாய் போன குரலில் அன்பரசனைப் பார்த்து அறிவழகி கேட்க,  இந்த கேள்விக்கு அவன் ‘ஆமாம்’ என்று சொல்லாமலிருக்க வேண்டுமே என்று அவளது மனம் அடித்துக் கொண்டது.
கண்களை இருக்க மூடி கார் ஸ்டியரிங்கை நோக்கி குனிந்தவன், ஆழ மூச்செடுத்து, “இப்போ நாம அத பத்தி பேசல. நீ இங்க எதுக்கு வந்த?”
“அது வந்து.. உங்க குடும்பத்துக்கு அந்த பொண்ணு சரி வராதுன்னு….”
“பு**ட்..”, அமர்ந்திருந்த இருக்கையை விட்டு விருட்டென எழுந்து வெளியே சென்றான். அவன் எழுந்த வேகத்தில் கார் வேகமாக குலுங்கியது. அறிவழகியும் காரிலிருந்து வெளியே வர, சுற்றி அவளருகே வந்தவன், “அப்படின்னு அப்பாகிட்ட சொன்னியா? அதனாலதான் காலைல அவங்கக்கூட சண்டையா?”
“நோ நோ, இதெல்லாம் மாமாகிட்ட நான் சொல்லவேயில்லை, அவருக்கு தெரியாம ப்ராபர்ட்டி மாத்தறது பத்தி மட்டும்தான் நான் அவர்கிட்ட சொன்னேன்”
“அது ஒன்னு போதாதா?”, என்று முணுமுணுத்த அன்பரசன், தொடர்ந்து,
“அன்னிக்கு உன் ஃபிளாட்ல, நிஜமா என் wife-ன்னு மாறமுடியுமா-ன்னு கேட்டதுக்கு நீ நோ சொன்ன. இப்ப இங்க மிஸ்ஸர்ஸ். அன்பரசன்னு என் மனைவியா வந்து நிக்கற. அன்னிக்கு நீ சொன்ன காரணங்கள் அத்தனையும் அப்படியேதான் இருக்கு. நானும் அதே அன்பரசன் தான், எங்கயும் எதுவும் மாறல, ஏன் வந்தன்னு காரணம் கேட்டா ஸ்ரீஜா சரியில்லேங்கிற..”, இப்போது காரின் முன்புற பேனட்-டில் சற்றே சாய்ந்தபடி நின்றிருந்தான்.
அறிவழகிக்கு  இப்படி இவன் கேள்விகளால் துளைப்பான் என்று தெரியாதே? ஏன் வந்தேன்? நிஜமாகவே ஸ்ரீஜா சரியில்லாததுதான் காரணமா?’ ஒருவேளை ஸ்ரீஜா நல்லவளாக இருந்தால் கையெழுத்திட்டு போயிருப்பேனோ? அவளுக்கே தெரியவில்லை. “அது மாமாக்காக…”, தெளிவில்லாத குரலில் அறிவழகி பதிலுரைத்தாள்.
ஆழ மூச்சிழுத்து விட்டு தனது உணர்வுகளை மறைக்க கண்களை மூடியவன், “நீ சுதா கூட நாளைக்கே கிளம்பி போயிடு.. எங்கப்பாவை சமாளிக்க எஎனக்கு தெரியும், இல்லையா நானே உன்னை துரத்திட்டேன்னு சொல்லிக்கறேன், அவர் திட்டும், குத்தல் பேச்சும் எனக்கொன்னும் புதுசில்ல, அடுத்தவங்களுக்காகவோ பரிதாபப்பட்டோ வர்ற வாழக்கைய உன்னால மட்டுமில்ல என்னாலயும் ஏத்துக்க முடியாது. அது நீடிக்கவும் செய்யாது”, என்னதான் அமைதியாக தன்னை சமன் செய்துகொண்டு பேச ஆரம்பித்தாலும் வார்த்தைக்களில் கோபம் தெறித்தது.
அவன் காரில் ஏறியதுகூட தெரியாமல் திக்ப்ரமை பிடித்தாற்போல் நின்றிருந்தாள், அறிவழகி.
+++++++++++
flow சரியா இருக்கான்னு படிச்சு கூட பாக்கல, ஸ்பெல் செக் பண்ணல. அடஜஸ்ட் பண்ணிக்கோங்க friends .

Advertisement