Wednesday, August 5, 2026

    மெய்யான காதல் மெய் சேர்ந்தது.

    நந்திதா அவளது வீட்டிலிருந்து கிளம்பி நேராகச் சென்றது VSB Multispeciality Hospital. அவளது கரை வண்டிகள் நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு மருத்துவமனை உள்ளே நுழைந்தாள். பின்னர் மகப்பேறு பிரிவு எந்தத் தளத்தில் இருக்கிறது என்பதைப் பார்த்து விட்டு அந்தத் தளத்திற்கு அவள் மின்தூக்கியின் உள்ளே நுழைய, கதவு மூடிவிட, சரியாக அந்த நேரம் மின்தூக்கியைக்...
    "நீங்க புதுசுல அதான் உங்களுக்குத் தெரியலை. விபி டாக்டர் ரொம்ப ஜாலி டைப். பேருக்குத் தான் அவர் நியூரோ டிபார்ட்மென்ட்ல வேலைப் பார்க்கிறார். ஆனால் ஹாஸ்பிட்டல்ல இருக்கிற எல்லாருக்கும் இவரைத் தெரியும். கூட்டித் துடைக்கிற ஆயால இருந்து நம்ம எல்லாருக்கும் சம்பளம் தர எம்.டீ. வரைக்கும் எல்லார்கிட்டயும் ஸ்டேட்டஸ் பார்க்காமல் பழகுவார். என்ன அவர்...
    மூன்று வருடங்கள் கழித்து, சென்னையில் விபீஷணனின் வீடு கோலாகலமாக இருந்தது. இன்று நந்தனாவிற்கு வளைகாப்பு. அதுவும் இது முதல் முறை அல்ல, அவள் இரண்டாவது முறை கருப்பம் தரித்ததற்குத் தான் இந்த வளைகாப்பு. அதுவும் முதல் முறை வளைகாப்பை யார் செய்வது என்று பெரிய பஞ்சாயத்தே நடந்தது. நடராஜனும் மேனகாவும் தாங்கள் தான் செய்வோம் என்று...
    நந்தனாவிடம் வந்த நந்திதா அவளது கண்களைக் கட்டியிருந்த துணியை எடுக்க, கண்களைக் கசக்கிக் கொண்டு திறக்க முடியாமல் திறந்தாள் நந்தனா. அவளிற்கு அவர்கள் இருவரும் யாரென்று தெரியவில்லை. புரியாமல் அவர்களைப் பார்க்க, நந்திதா அவளிடம்,"என்ன எங்களை யார்னு பார்க்கிறியா?" என்று கேட்டாள். அதற்கு நந்தனா ஆம் என்று தலையசைக்க, நந்திதா கோபமாக,"கிட்டத்தட்ட பத்து வருஷம் எனக்குத் தான்...
    விபீஷணனை அங்கு எதிர்பார்க்காத நந்திதா அப்படியே எழுந்து நின்று அவளது கையைக் கிள்ள அது வலியைக் கொடுக்க, அவள் காண்பது கனவில்லை நிஜம் தான் என்று புரிய, அவளது செயல்களைப் பார்த்துக் கொண்டிருந்த மூவரும் அவளை வியப்பாகப் பார்க்க, அவளோ விபீஷணனிடம் வந்து,"சீனியர் நீங்களா?" ஆயிரம் வாட் பல்பின் ஒலியைப் போலப் பிரகாசமாக அவளது...
    "ப்ச் என்னத்தை சொல்றது மா எல்லாம் விதி. அவனுக்கு விருப்பம்னு சொல்லி நாங்க ஜாதகம் கூடப் பார்க்காமல் கல்யாணம் பண்ணி வைச்சோம். ஆனால் அது தப்போனு இப்போ தோனுது. சரி அதை விடு மா அது முடிஞ்சு போயிடுச்சு. நீ சொல்லு மா, உனக்கு இன்னும் விபீ மேல விருப்பம் இருக்கா?" கண்களில் ஆசைப்...
    ராஜாராம் எல்.ஐ.சி.யில் வேலைப் பார்த்துப் போன வருடம் தான் ஓய்வு பெற்றார். சசிகலாவும் அரசாங்கப் பள்ளியின் ஆசிரியராக இருந்து ஆறு வருடங்களுக்கு முன்பு சில உடல்நலக் குறைவால் அவர் விருப்ப ஓய்வு பெற்று விட்டார். பிள்ளைகள் மூவரையும் நன்குப் படிக்க வைத்தனர். அதுவும் விபீஷணன் இவர்களுக்கு அதிகச் செலவு வைக்காமல் தன்னுடைய அத்தனை படிப்பையும்...
    "அப்படிச் சொல்லாத நந்திதா. அவள் இங்க இருக்கா. இப்போ மட்டுமில்லை எப்பவும்." என்று அவனது இதயத்தைத் தொட்டுக் காட்டிக் கூற, நந்திதாவின் முகம் ஒரு நொடிச் சுருங்கி மீண்டும் சாதாரணமாக மாறியது. அவளுக்கு ஒரு விஷயம் நன்றாகப் புரிந்தது விபீஷணன் மனதில் அவள் இடம்பிடிக்கப் பிரியா கூறியது போல் நிறையப் போராட வேண்டும் என்பது....
    நந்திதா நிதர்சனத்தைப் புரியாமல் ஆர்வமாகவும் ஆசையாகவும் விபீஷணனைப் பார்க்க மருத்துவமனை வந்தாள். அன்று அவளுக்கு இரவு வேளையில் தான் வேலை. விபீஷணன் மருத்துவமனையில் இருக்கிறானா என்று கேட்காமலே அவனைச் சந்திக்க அவனது தளத்திற்கு அவள் சென்றாள். அன்று இவளுக்கு நல்ல நேரம் சரியாக அவள் அவனின் தளத்திற்கு வரவும் விபீஷணன் அவனது உடைமைகளை எடுத்துக்...
    விபீஷணனின் அணைப்பு அதிகரிக்க, சுய உணர்வுப் பெற்ற நந்தனா அவனைத் தள்ளிவிட்டு வேகமாகப் படிகளில் ஏறி அவளது அறைக்கு ஓடிச் சென்றாள். நந்தனா விபீஷணனை தள்ளி விட்டு ஓடியதும் அவனிற்கு ஒரு புறம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு புறம் வருத்தமாகவும் இருந்தது. மற்றவர்களுக்கு நந்தனாவின் செயல் ஆச்சரியத்தை உண்டு செய்தது. அவர்களுக்குத் தான் தெரியுமே நந்தனா...
    விபீஷணன் மதிய உணவைப் பெரும்பாலும் மருத்துவமனையில் தான் உண்பான். அன்றும் எப்போதும் போல மருத்தவமனையில் உள்ள கேன்டீனிற்குச் சென்று தனக்குத் தேவையான உணவு வகைகளைக் கூறிவிட்டு அதைக் கையோடு வாங்கிக் கொண்டு ஒரு நாற்காலியில் சென்று அமர, நந்திதா வந்து விட்டாள். அவளை ஆச்சரியமாகப் பார்த்த விபீஷணன்,"என்ன நந்திதா ஆப்ரேஷன் முடிஞ்சதா?" என்று அவளிடம் கேட்டான். "எஸ்...
    "க்ளாஸ் எப்படிப் போச்சு பசங்களா?" "சூப்பரா போச்சு. இன்னைக்கு என்னைய மாஸ்டர் தண்ணிக்குள்ள தள்ளி விட்டுட்டார். ஆனால் நான் பயப்படாமல் மேல வந்துட்டேன். அபய் தான் பயந்து அழுதுட்டான்." என்று ஆத்விக் கூற, விபீஷணன் அபயைப் பார்த்தான். "அப்படியா அபய்?" என்று அவனிடம் கேட்டான். "ஆமா மாமா. ஆனால் முதல்ல தான் அழுதேன். நெக்ஸ்ட் டைம் நானும் மேல...
    ராகவியை அங்குப் பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சியாக அவளைப் பார்த்தனர். விபீஷணன் அவளிடம் வந்து,"ராகவி நீ இங்க என்ன பண்ற? எப்போ இந்தியா வந்த? நீ வரத் தான் இன்னும் நாள் இருக்கே!!" என்று கேட்டான். "ஏதாவது சொல்லிடப் போறேன் விபி!! கால் பண்ணால் எடுக்கனும்னு தோனாதா உனக்கு?எத்தனைத் தடவை உனக்குக் கால் பண்ணேன்!! அப்புறம் எதுக்கு...
    "ஓ!! சரி அப்போ நீங்க முதல்ல போங்க, செக் அப் பண்ணும் போது நானும் கூட வரேன்." "டோண்ட் வொர்ரி இன்னைக்கு செக் அப் பண்ண முடியாதுனு நினைக்கிறேன். அதை விட அப்பா தான் அவளைப் பார்த்துக்கிறது. அவர் தான் இங்கே இருக்காரே!!" என்று அவன் கூறவும் விபீஷணனும் சரியென்று கூறினான். அவனிடம் பேசியதும் அனைவரும் அமர்ந்திருந்த...
    "சரி நான் எதுவும் பேசலை. நீ அதுக்கு அப்புறம் நந்தனாவை பார்த்தியா?" "ம்ஹூம் இல்லை, மே பி அவங்க வீட்டுக்குக் கூப்பிட்டுப் போயிருக்கலாம்." "நீ எதுவும் சொன்னியா அவங்ககிட்ட?" "இல்லை நான் எதுவும் பேசலை. நீ தான வேண்டாம்னு சொன்ன." "ம் ஓகே!! நாங்க அங்க வந்ததுக்கு அப்புறம் பேசிக்கலாம்." என்று ராகவி கூறிவிட்டுக் கைப்பேசியை வைத்தாள். "என்னாச்சு ராகவி? உங்க...
    அன்று ஞாயிற்றுக் கிழமை. எப்போதும் போல விபீஷணன் அவனது வேலைக்குத் தயாராகிக் கீழே இறங்கி வந்தான். வந்தவன் வீட்டின் கூடத்தில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்ததும் சந்தேகம் வந்தது. போவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு நின்றிருக்க, அவன் நிற்பதைப் பார்த்து விட்டார் சசிகலா. "கீழே வா விபீ. அப்படியே தப்பிச்சிடலாம்னு நினைக்காத." அவர் பேசுவதிலே விஷயம் புரிந்து போனது...
    அசோக் மூன்று மாதங்களுக்கு முன்பு தான் கவுதம் வேலைச் செய்யும் அதே நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அதிலும் கவுதம் தான் அவனது குழுத் தலைவர். அதனால் தினமும் இருவரும் சந்திப்பதால் அவர்களது உறவு முறை நெருக்கமானதாக மாறியிருந்தது. ராகவி கோவிலிற்கு வந்து நந்தனா உயிரோடு தான் இருக்கிறாள் என்று கூறிய தினம் கவுதம் தன் தந்தை...
    விபீஷணன் மிகுந்த எதிர்பார்ப்போடு வி.ஜி.இல்லத்தில் தன் காலை எடுத்து வைத்தான். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு நந்தனாவைக் காணச் செல்கிறான். அதிலும் அவள் இவனைப் பார்த்து யாரென்று தான் கேட்கப் போகிறாள். அதை நினைக்கும் போது மனம் கனத்தது. வேணுகோபால் அவரது வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கி விபீஷணனிற்காகக் காத்திருக்க, அவனும் வந்து வண்டியை நிறுத்தி...
    அவன் எதுவும் பதில் பேசாமல் அமைதியாக அமர்ந்திருக்க, சீதாவே தொடர்ந்தார்,"சரி சொல்லு விபீஷணன். எதுக்கு என்னைப் பார்க்கனும்னு சொன்ன? என்ன விஷயம்?" என்று கேட்டார். "மேம் நந்தனா உங்களைப் பார்க்க வந்தாளா?" என்று மொட்டையாக அவன் கேட்க, அவருக்கு ஒன்றும் புரியவில்லை. "புரியலை விபீஷணன். நந்தனா தான் இறந்துட்டாளே!!" என்றார். "மேம் நான் சொல்றது இப்போ இல்லை." என்று...
    பின்னர் வேகமாக விபீஷணன் அவனிடமிருந்த அவர்களது கல்யாணப் பத்திரிக்கை, புகைப்படங்கள் பின்னர் திருமணத்தைப் பதிவு செய்த சான்றிதழ் என்று அனைத்தையும் எடுத்து அவரிடம் நீட்ட, அவரும் பக்கத்திலிருந்த கண் கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டு அவன் கொடுத்ததைப் பார்த்தார். "இப்போ நந்தனா எங்கே இருக்கா டாக்டர்? நான் அவளைப் பார்க்கனும்." என்று கண்களில் ஆவலை அடக்கிக்...
    error: Content is protected !!