விறலி விண்மீன் அதியனவள்
"எங்கடா கூப்புடுற...? நான் எங்கையும் வரல பாரி நீ போ, ப்ளீஸ் என்னைய அலோனா விடு.." என்று அதிகாரமாக ஆரம்பித்து கிட்டதிட்ட கெஞ்சினான்
அதியன்.
"இல்ல! தனியா எல்லாம் விட்டுப் போக முடியாது, இது தாத்தா ஆர்டர் என் கூட வாங்க, ஒரு முக்கியமான விஷயம் வீட்டுக்குப் போகனும்.."
"வீட்டுக்கா..? ஏன் என்ன ஆச்சு..? அம்மா நல்லா இருக்காங்கள..?...
அதியன் நேராக வாஷ் ரூம் சென்று தன்னை நிதானப்படுத்திவிட்டு தாத்தாவின் அறைக்குள் திரும்பினான்.
ஸனா வெளியேறியதை அங்கு பாரி மூலம் அறிந்தார்கள் நவநீதம் மற்றும் பரணி.
அறைக்குள் நுழைந்த அதியன் சாதரணமாக வந்து அமர்ந்தான், சிஸ்டத்தின் முன்.
ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த வேலையைத் தொடர ஆரம்பித்தான்.
மற்ற மூவருக்குமே கேள்வி இருந்தது ஸனாவின் வருகையைப் பற்றி அறிவதற்காக.
ஆனால் கேட்க தான்...
ஸனாவும், அதியனும் பேசிக்கவே முயற்சிக்கவில்லை.
அச்சு, மற்ற நண்பர்களும் அதியனிடம் பேசிப் பார்த்தனர்.
அஜியும் பேசிப் பார்த்தாள் ஸனாவிடம்.
எதுவும் வேலைக்கு ஆகவில்லை.
ஸனா விறலி படத்தில் நடித்துக் கொண்டிருந்தாள். படம் ஐம்பது பெர்சென்ட் முடிந்திருந்தது.
அன்று ஸனா"சார்! படத்தின் கிளைமேக்ஸ் இதான...?"
டேரக்டர்"ஆமா! ஸனா, நானுமே ரொம்ப யோசிச்சு தான் எழுதி இருக்கேன்.."
"ம்ம்ம்! ஆனா நெகட்டிவ் கிளைமேக்ஸ் ஏத்துக்கிறாங்க தான் இப்ப...
மாதம் ஒன்றுக்கு மேல் கடந்தது அதியனும், ஸனாவும் பிரிந்து. இடையில் இருவரும் பார்த்துக் கொள்ளவே இல்லை.
அதியனும் சரி, ஸனாவும் சரி அவரவர் பழைய வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர்.
அதியன் நேரம் பார்க்காமல் பிஸ்னெஸ் என சுற்ற ஆரம்பித்தான்.
ஸனா நடிப்பை முழு மூச்சாக ஏற்றாள்.
பகலில் எப்படியோ வேலை, பார்ப்பவர்கள், பழகுபவர்கள் என மனம் சிதறி எண்ணங்களை மாற்றினாலும், இரவில்...
வீட்டை விட்டு வெளியில் வந்த அதியன், வகீம் கையை உதறியவாறு நின்றான்.
அதை கண்ட ஸனா"அதியன்!" என்றாள்.
"நோ! ஐ கான்ட் மஸ்து, இது தான் என் வீடு, இங்க உள்ளவங்க தான் என் சொந்தம், வேற யாரும் எனக்கு வேணாம்.. நான் இங்கிருந்து எங்கும் போக மாட்டேன்" என அந்த வீட்டின் படியில் அமர்ந்தான்.
"அதியன்! நானும்...
"யார, யார் வீட்டு இரத்தமுனு சொல்ற....? உனக்கு மூளை எதுவும் குழம்பி போயிட்டா அன்னம்....?" என்று அந்த வீடே அதிரும் அளவிற்கு கத்தினார் நவநீதம்.
"கத்துங்க, நல்லா கத்துங்க, கேக்கலை எனக்கு.. கேக்கவே இல்லை எனக்கு, இன்னும் வேகமாக கத்துங்க..." என்றார் பாட்டி அலட்சிய சிரிப்போடு.
"அத்தை! என்ன பேசிட்டு இருக்கீங்க...? நீங்க விளையாட என் பையன்...
"அதியா!" என்ற நவநீதத்தின் குரல் ஓங்கி ஒலித்ததில் அடுத்த நிமிடம் வீட்டில் இருந்தவர்கள் ஹாலில் நின்றனர்.
"தாத்தா! என்ன ஆச்சு....?" என்று அருகில் வந்தான் அதியன்.
கைகளை தூக்கி தடுத்தவர் அவனை தூரமே நிற்க சொல்லாமல் சொன்னார்.
"தாத்தா!" என்றான் அவன் மறுபடியும்.
"அப்பா! என்ன நடந்தது, ஏன் இவ்வளவு கோபமா இருக்கீங்க...?" என்று கேட்டார் சேரர்.
"அதியா! அந்த கிளைன்ட்டுக்கு...
வீட்டில் நடக்கப் போகின்ற பிரளயம் தெரியாமல், அவரவர் வேலைகளில் இருந்தனர்.
பாரி போன் அடிக்க அதில் ஒளிர்ந்த பெயர் ஷர்தாவே தான்.
யோசனையுடன் எடுத்தான்.
"ஹாய் பாரி! ஹவ் ஆர் யூ..?"
"யா ஃபைன், ஹவ் அபௌவுட் யூ..?"
"குட், பாரி உங்க கிட்ட ஒரு விஷயம் பேசனும்.."
"சொல்லுங்க ஷர்தா."
"அப்பா, அம்மா உங்க வீட்டுக்கு வரனுமுனு ஆசைப்படுறாங்க"
பாரிக்கு புரியாமல்"எதுக்கு...?" என்று கேட்டான்.
"ஹலோ!...
வேகமாக வந்த பாரியை கண்ட பரணி
"தம்பி! எங்க போனீங்க....? உங்களால அதியன் தம்பி அடி வாங்கி இருக்கார்.. நல்ல வேளை இங்கு யாருமில்லை" என்றார் சிறிது கோபமாக.
"அங்கிள்! என்ன ஆச்சு...? சாரி அண்ணா.."
பரணி நடந்ததைக் கூறினார்.
"அய்யோ! இந்த தாத்தா ஏன் தான் இப்படி இருக்காரோ...? சாரி அண்ணா"
"சார்!" என்று ஆரம்பித்த அதியனிடம்.
"ப்ளீஸ் அண்ணா!" என்றான்...
"என்னடி பிரச்சனை இவ்வளவு காலையில் வந்து இருக்க....?" என்று கேட்டார் தேவி.
"அம்மா வீட்டுக்கு தானே வந்து இருக்கேன், அதுக்கும் கேள்வியாம்மா..?" என்றாள் அவரின் மூத்தப் பெண்ணான ராகவி.
"அம்மா வீடு தான், ஆனா அதிகாலையில் அதும் புருசனோடு வராமல் இப்படி புள்ளைய மட்டும் கூட்டிட்டு வந்து இருக்கனா கேள்வி வராத...?"
"ம்ம்ம்! அவரால வர முடியலை, சித்தி...
பீவி ஸனாவின் புகுந்த வீட்டிற்கு முதன் முறையாக வர ஆயுத்தமானார்.
வீட்டில் அதியனும், ஸனாவும் இருந்தனர். அவர்களின் நேரத்தை கேட்டுக் கொண்டு தான் அவரும் புறப்பட்டு வந்தார்.
"அதியா! அம்மா வந்துட்டு இருக்காங்க,
எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு, உன் தாத்தா எதுவும் சொல்லிடக் கூடாதுனு"
"ம்ம்ம்! எனக்கும் அந்த எண்ணம் இருக்கு, மஸ்து ஆனா பாத்துக்கலாம் கவலைப்படாத"
இருவரும் பேசிக்...
"உன்னோட விருப்பம் புரியுதும்மா, ஆனா இதுல முடிவு எடுக்க வேண்டியது உன் அம்மா தான்.." என்றார் அவளின் தந்தை.
"அப்பா! அம்மா என் விருப்பதுக்கு மறுப்பு சொல்ல மாட்டாங்கனு நம்பிக்கை இருக்கு, ஆனா நீங்க தான் சொல்லனும் ப்ளீஸ்பா.."
"ம்ம்ம்! ஒரு பெரிய கம்பேனியை ரன் பண்ற பொண்ணு, இப்படி கெஞ்சினா எப்பிடி..? அம்மா பூஜையில் இருக்கா...
வீடு அமைதியாக இருந்தது.. தேவி மட்டும் அடுப்படிற்குள் புலம்பிக் கொண்டு நின்றார்.
"என் பையன் இந்த வீட்டில் எடுப்புடியாவே இருப்பானு எல்லாரும் நினைச்சுட்டாங்க போல, ஏன் அந்த மல்லி எனக்கு முன்னாடி பிள்ளையை பெத்துட்டா உசரத்தில் தான் இருக்கனும், நான் அடுத்து இருக்கனுமா...? நான் தான் இந்த வீட்டுக்கு முதலில் வந்தவள்.." என்று தேவி பேசுவதை...
"அப்பா! உங்களை நான் எதிர்த்து இதுவரை எதுவும் பேசியதில்லை, ஆனா
என் பையனுக்கு இது பெரிய தண்டனைப்பா" என்று மனம் வருந்த கூறி வெளியில் சென்றார் சோழர்.
நவநீதம் சேரா, பாண்டியனை பார்த்தார்,
"நீங்க என்ன சொல்லப் போறீங்க...? உங்க பங்குக்கு ஏதாவது சொல்லிட்டுப் போங்க" என்றார்.
அவர்கள் எதுவும் சொல்லாமல் சென்றனர்.
பாரி"தாத்தா! எனக்கு நீங்க பெரிய பதவி, மரியாதை...
இருவரும் எழுந்திரிக்க மனமில்லாமல் படுத்திருந்தனர்.
"மஸ்து! உனக்கு இன்னைக்கு ஷூட்டிங் இல்லையா...?"
"இருக்கு"
"அப்ப இப்படியே படுத்திருந்தா, எப்ப கிளம்ப போற...? ஷூட்டிங் எங்க..?"
"மகாபலிபுரம்"
"ஓ! அப்ப போக லேட் ஆகும், சீக்கிரம் ரெடி ஆகு..."
"ம்ம்ம்! இருடா கொஞ்சம் நேரம், நான் இந்த காலைப் பொழுதை அனுபவிச்சுட்டு இருக்கேன், என் புருசனோடு.." என்று அவன் மார்பில் அழுந்தினாள்.
"எனக்கும் ஆசை தான்,...
தான் அவன் வாழ்க்கையில் வந்திருக்க கூடாதென்று கூறிய ஸனாவை, நீ வரவில்லை, நான் தான் உன் வாழ்க்கையில் வந்தேன் என்று கூறி சமாதானம் செய்துக் கொண்டிருந்த அதியனின் செவியில் கதவு தட்டும் சத்தம் கேட்டது.
அது லேசாக தான் சார்த்திருந்தது, அதியன் சென்று திறந்தான், அங்கு பாட்டி நின்றுக் கொண்டிருந்தார்.
"பாட்டி! என்ன ஆச்சு...? உள்ள வாங்க"...
கார் வீட்டு வாசல் முன் சென்று நின்றது.
இரவு நேரம் கடந்தாலும், வீட்டில் அனைத்து மின் விளக்குகளும் ஒளிந்தப் படி இருந்தது.
அதியனுக்கு அதுவே பல விஷயங்களை சொல்லியது.
மனதில் ஒரு முடிவோடு இருந்ததால், எதையும் யோசிக்கவில்லை அவன்.
ஆனால் ஸனாவிற்கு தான் ஏனோ மனதில் பயம் பந்தாக உருண்டோடியது, தாத்தாவைப் பார்த்ததும் அதியன் எப்படி மாறுவான் என்று அவளிற்கு...
நேரம் பத்து மணியைத் தாண்டியதால்,
சாலைகளில் கூட்டம் குறையத் தொடங்கியிருந்தது..
அந்த பி எம் டபிள்யூ காரும் சீரான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது.
சுற்றிலும் ஆட்கள் இருந்தப்படியால் அதியன், ஸனா இருவருக்குமே மேடையில் இருந்து இறங்கிய பின் பேசிக் கொள்ள நேரமில்லை.
பிறகு சாப்பிடும் நேரமும் இயக்குநர், தயாரிப்பாளர், நாயகன் என அமர்ந்துப் பேச, தனிமைக்கு இடமில்லை.
இப்போதும் காரில் அமைதியே...
மேடையில் நின்ற இருவர் இசை வெளியீடு நிகழ்ச்சிற்கு அனைவரையும் வரவேற்க தயாராகினர்.
அதில் ஒரு பெண், ஒரு ஆண் என இருவர் தொகுப்பாளர்களாக ஒலிப்பெருக்கி முன் நின்றார்கள்.
அதியனிற்கு அந்த பெண் தொகுப்பாளரைப் பார்த்ததும் ஸனாவுடனான முதல் சந்திப்பு நிகழ்ச்சி நினைவு வந்தது.
"ஸனா.."
"என்ன அதியன்..?" என்று லேசாக திரும்பி அவன் அருகே சென்றாள்.
"அந்த ஹோஸ்டர் யாருனு தெரியுதா...?"
ஸனா...
கார் வேகமாக சென்று கொண்டிருக்க, வெளியில் வேடிக்கைப் பார்த்தவாறு ஸனா அமர்ந்திருந்தாள்.
அதியன் போன் அடித்தது.
பாரி நம்பர் அது, காரை சற்று மெதுவாக ஓட்டியவன்,
அவன் போனை காரின் ஸ்பீக்கரில் ஆன் செய்தான், ட்ரைவிங்கில் இருந்தமையால்.
பாரி பேசியது ஸனாவிற்கும் கேட்டது.
"அண்ணா! தாத்தா தமிழில் அனுப்பி இருக்கிறார் டீடெயில்ஸ், நீங்க பக்கத்துல இருக்கீங்கனு நினைச்சு, நானும் நாங்க பாத்துக்குறோமுனு...