Advertisement

பீவி ஸனாவின் புகுந்த வீட்டிற்கு முதன் முறையாக வர ஆயுத்தமானார்.

வீட்டில் அதியனும், ஸனாவும் இருந்தனர். அவர்களின் நேரத்தை கேட்டுக் கொண்டு தான் அவரும் புறப்பட்டு வந்தார்.

“அதியா! அம்மா வந்துட்டு இருக்காங்க,
எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு, உன் தாத்தா எதுவும் சொல்லிடக் கூடாதுனு”

“ம்ம்ம்! எனக்கும் அந்த எண்ணம் இருக்கு, மஸ்து ஆனா பாத்துக்கலாம் கவலைப்படாத”

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே, கீழே யாரோ வரும் அரவரம் கேட்டது, அதியன்”மஸ்து! அத்தை வந்துட்டாங்க போல, வா போகலாம்” என்று வெளியில் சென்றான்.

மாலை ஆறு மணி தான் ஆகியது..

இருவரும் கீழ் வர, அங்கு மஞ்சரி குடும்பம் அமர்ந்திருந்தது.

அதியன் மனதில்’இவங்களா..?’ என்று தோன்றியது.

பரந்தராமன், பரமு, மஞ்சரி மூவரும் அமர்ந்திருக்க, அதியன் அவர்களிடம்
“வாங்க!” என்றான் பொதுவாக, நவநீதமும் இருந்தார்.

அவர்களோ அவனை சீண்டவில்லை.
அது ஸனாவிற்கு கோபம் வர, “அதியா! நீங்க வாங்க, அத்தையை போய் பார்க்கலாம்” என்று கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

நவநீதம் கண்டுக்கொள்ளாதவாறு அமர்ந்து இருந்தார். மனதில்’இவனுக்கு இது எல்லாம் தேவையா..? நான் சொல்றப்படி கேட்டு இருந்தா இப்படி அவமானப்படாம இருந்திருக்கலாம்’

“ஐயா! விஷயத்தை கேள்விப் பட்டு தான் வந்தோம், உங்க மருமக அதான் சோழாவோட மனைவிக்கு உடல்நிலை முடியலனு, பாத்துட்டு போகலாமுனு வந்தோம்” என்றார் பரமா.

“ஆமா! ஆமா! அன்று  இரவு முடியலை, மருத்துவமனை எல்லாம் போயிட்டு வந்தாச்சு, இப்ப பரவாயில்லை நீங்க போய் பாத்துட்டு வாங்க” என்றவர்,  “பாரி!” என்று அழைத்தார்.

தன் அறையில் இருந்து வந்த பாரி
“சொல்லுங்க தாத்தா!” என்றான், அவர்களை கண்டுக்காதவாறு.

“பாரி! வீட்டிற்கு வந்தவர்களை முதலில் வாங்கனு கூப்பிடனும்” என்று முறைத்தார்.

“சாரி தாத்தா!” என்றவன், “வாங்க!” என்றான் அவர்களிடம் பொதுவாக.

“ஹாய் பாரி! எப்படி இருக்கீங்க…?”
என்று கேட்டாள் மஞ்சரி.

“ம்ம்ம்! குட்” என்று வேண்டாம் வெறுப்பாக சொன்னான்.

“பாரி! சித்தியை பார்க்க வந்து இருக்காங்க, கூட்டிட்டு போ” என்றார் நவநீதம்.

“ஓகே!” என அவர்களிடம் திரும்பியவன்
“வாங்க போகலாம்”

“ஒரு நிமிஷம் தம்பி!” என்ற பரமா.

“ஐயா! உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்.”

“சொல்லு பரமா”

“என் பொண்ணு தான் இந்த வீட்டுக்கு  மருமகளா வரனுமுனு ஆசைப்பட்டேன், ஆனா அதில் என்னனவோ நடந்துட்டுனு எனக்கும் கோபம், அதான் அன்னைக்கு அப்படி பேசிட்டு போயிட்டேன். மன்னிச்சுடுங்க ஐயா”

“அதுக்கு என்ன, யாரா இருந்தாலும் இப்படி தான் பேசுவாங்க, உன் பொண்ணு வாழ்க்கைனு வரும் போது நீ பேசி தானே ஆகனும்..”

“ஐயா! எனக்கு ஒரு யோசனை..”

“என்ன யோசனை…?”

பாரியும், பரணியும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டனர்.

“எங்க சேராவை காணும், அவரும் இருந்தா இந்த விஷயம் பேச நல்லா இருக்கும்..”

“பாரி! அப்பாவை வர சொல்லு” என்ற தாத்தாவை, கோபம் வந்தாலும் அமைதியாக பார்த்து தலை ஆட்டி சென்றான்.

அவர் வர, தேவி அவர்களுக்கு குடிக்க டீ போட்டு வந்தார்.

பாட்டி மாலினியோடு கோயிலுக்கு சென்று இருந்தார்.

“வாங்க!” என்று அவர்களை சேரர் வரவேற்றார்.

“ஐயா! நான் நேரா விஷயத்திற்கு வரேன். என் பொண்ணுக்கு உங்க மூத்த பையன் சேரரின் மகனை கல்யாணம் பண்ண கேக்குறேன், நீங்க தான் பதில் சொல்லனும்..” என்றார் வில்லங்கமாக.

அங்கு அது எல்லாருக்குமே அதிர்ச்சியான விஷயம் தான்.

பாரிக்கு கடுப்பாகியது, ஆனால் தாத்தா பதிலை எதிர்ப்பார்த்து நின்றான்.

மஞ்சரியோ பாரியை பார்த்தாள் சிரித்தவாறு.

பரணி”தம்பி! இது என்ன புதுக்கதையா இருக்கு, அதியன் தம்பி தப்பிச்சுட்டார் நீங்க மாட்டுனீங்க போல” என்றார் மெதுவாக.

‘என் மகனுக்கு இப்ப தான் நல்ல நேரம் வந்திருக்குப் போல, எல்லாம் அவனை தேடி வருது’ என பெருமைக் கொண்டார் தேவி.

சேரர் தன் அப்பா எதும் பதில் சொல்லிட போறார், யோசித்து சொல்லலாம் என எண்ணி”அப்பா!” என்றழைத்தார்.

மகன் அழைப்பை காதில் வாங்காதவர்,
“பரமா! நீ சொல்வது உன்னோட யோசனை, ஆனா எனக்கு என்னவோ இது சரி வராதுனு தோணுது..” என்றார்.

பாரிக்கு ஹப்பாடா! என்றிருந்தது.

சேரர்”ஆமா! நானும் இதை தான் நினைத்தேன்” என்றார்.

“என்னங்க சொல்றீங்க..? மணமேடையில் பொண்ணு இல்லனா பொண்ணோட தங்கச்சியை கல்யாணம் செய்வதில்லையா…? ஏன் நம்ம நிச்சயம் கூட இன்னும் முடிக்கவில்லை உங்க மூத்தப் பேரனோடு” என்றார் மஞ்சரி அம்மா பரமு.

“மாமா!” என்று ஏதோ சொல்ல வந்த தேவியை கை அமர்த்திய நவநீதம்
“இல்ல! இது சரி வராது, உங்களுக்கு காத்திருக்க விருப்பம் இல்லைனா வேற இடத்தில் பாத்துக்கோங்க உங்க பொண்ணுக்கு” என்றார் ஒரே வாக்கியமாக.

பாரி அதுக்கு மேல் காத்திருக்காமல்
“வாங்க! சித்தியை பார்க்க போகலாம்”

மூவரும் எழுந்து மல்லிகாவின் அறைக்கு சென்றனர்.

அங்கு அதியன், ஸனா, சோழா அமர்ந்திருந்தனர்..

மல்லிகாவிடம் பொதுவாக நலம் விசாரித்து விட்டு, சோழாவிடம் பேசியப்படிட்யே கிளம்பினர்.

***

“என்னப்பா இது, பாரிக்கு தான் எல்லா பொறுப்பும் வந்துட்டுனு சொன்னீங்கனு நானும் கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டேன்.. ஆனா அந்த கிழவர் ஒத்து வராதுனு ஒரேடியாக சொல்லிட்டார்…” என்றாள் கடுப்பாக மஞ்சரி.

“அதான் எனக்கும் புரியலை..”

“என்னங்க புரியலை,  அவரு தான் முகத்தில் அடித்தாற்போல் சொல்லிட்டாரே.. அதியன் விஷயம் முடியும் வரை காத்திருக்கவும் இல்லனா வேற மாப்பிள்ளை பாத்துக்கோங்கனு.” என்றார் பரமு..

“ம்ம்ம்! அவனுக்கு தான் இப்ப ஒன்னும் இல்லையே..? அவளை விட்டா தானே இந்த வயசானவர் சொத்துக் கொடுப்பார் ஆனா அவன் அவளை  விடுவானு நம்பிக்கை இல்லை, எதுக்கு அதுக்கு காத்திருக்கனும். வேற இடத்தில் மாப்பிள்ளை பார்க்கலாம்”

“அப்பா! என் கிட்ட கேக்கனும் நீங்க பாட்டுக்கும் முடிவு எடுக்காதீங்க. நவநீ குரூப்ஸ் வீட்டுல கல்யாணம் பண்ணப் போறேனு எல்லார் கிட்டையும் பெருமையா சொன்னனேன், என் ப்ரண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க…?”

“ஏம்மா! அதுக்காக என்ன பண்றது, நீ சொன்னனு தான் பாரியை பேசினேன். ஆனா நவநீதம் ஒத்துக்கல, அது மட்டுமில்லை அந்த பாரி அதியன் மாதிரி தன்மையானவன் இல்லை, அதியன் பேருக்காவது வாங்கனு சொன்னான் அவனோ திமிரா பார்த்தான். அந்த பாரி உனக்கு சரிவர மாட்டான். நீ சொல்றதை கேக்கவும் மாட்டான் உன் சுதந்திரம் பறிப்போயிடும்மா, விடு இவனுங்களை விட நல்ல மாப்பிள்ளையா பாக்குறேன்” என்று பெண்ணை சமாதானம் செய்தார்.

மஞ்சரிக்கும் தன் தந்தை சொல்வது சரினு பட, அமைதியாகினாள்.

***

“பாவம் அந்த மஞ்சரி, ஏமாந்துப் போயிட்டா போல, எப்படி முகம் இருந்துச்சுப் பாத்தீங்களா…? எல்லாம் இவனால் தான்” என்று மல்லிகா குற்றப்பத்திரிக்கை வாசித்தார் சோழாவிடம்.

அதியன் கண்டுக்காமல் அமர்ந்திருக்க, ஸனாவும் அமைதியா இருந்தாள்.

“ஏன் சித்தி, அவளுக்கு என்ன நல்லா தானே இருந்தா….?” என்றான் பாரி கடுப்பாக.

“என்ன பாரி பேசுற, அதியனை கல்யாணம் செய்யும் ஆசையில் இருந்தா அந்த பொண்ணு, ஆனா இப்ப பாரு அவ முகமே சரியில்லை”

“அய்யோ சித்தி! வெளியில் நடந்தது உங்களுக்கு தெரியல” என்று நடந்ததைக் கூறினான்.

மல்லிகா அதிர்ச்சியாகி”அப்படியா..? மஞ்சரி ஒத்துக்கிட்டாளா..?”

“ஒத்துக்காமையா, அவ அப்பா, அம்மா பேசும் போது அமைதியா இருந்தா, எல்லாம் சுயநலம் சித்தி, பணத்திற்கு தான் மதிப்பு அவங்களுக்கு”

“புரியலை பாரி”

“அதியன் அண்ணா பொறுப்பில் இல்லை, அண்ணியையும் அவர் பிரிய மாட்டாருனு தெரிஞ்சுட்டு அடுத்து நான் இப்ப அவர் இடத்தில் இருப்பதால் என்னைய கேக்குறாங்க, நல்ல வேளை தாத்தா ஓகே சொல்லலை” என்று சந்தோஷமானான்.

அதியனும், ஸனாவும் சிரித்தனர் அவனை பார்த்து.

“என்ன சிரிப்பு உங்களுக்கு, தாத்தா சரினு சொல்லி இருந்தா நான் நேரா அந்த மஞ்சரி முகத்தில் அடித்தாற் போல் சொல்லி இருப்பேன் உன்னை எனக்குப் பிடிக்கலைனு அண்ணா” என்றான் பாரி.

“சரி விடுடா, அதான் தாத்தா ஓகே சொல்லலையே..” என்றான் அதியன்.

“ஏன்டா! அந்த பொண்ணுக்கு என்ன குறைச்சல் நல்லா தானே இருக்கா..? இல்ல நீயும் இவனை மாதிரி எவளையாவது விரும்பிட்டு இருக்கியா..?” என்று கேட்டார் மல்லி.

பாரிக்கு ஷர்தா முகம் தான் வந்துப் போனது.

“நீங்க வேற சித்தி, நான் எல்லாம் விரும்பிட்டாலும், அப்புறம் உங்க உடம்பு ஓகேவா” என்று பேச்சை மாற்றினான்.

சற்று சூழ்நிலை மாற, அனைவரும் சிரித்துப் பேச ஆரம்பித்தனர்.. அந்த அறையில் மட்டுமே கேட்குமாறு, சோழா, பாரி, மல்லி, அதியன், ஸனா.

ஸனா பெரிதாக பேசவில்லை, உள்ளுக்குள் தன் அம்மா வரவை எதிர்ப்பார்த்து காத்திருந்தாள்.

மல்லி அதை கவனித்தார் தான்.
ஆனால் கண்டுக்கொள்ளவில்லை.

அதியன் மெதுவாக கூறினான்.

“அப்பா! மஸ்து அம்மா வராங்க இப்ப, அம்மாவை பார்க்க”

“ம்ம்ம்! வரட்டும் அதுக்கென்ன” என்றார்.

“இல்ல! தாத்தா என்ன சொல்ல போறாருனு தெரியல, அதான் பயமா இருக்கு..”

“அதுக்கு என்ன செய்றது அதியா, நீ தான் சமாளிக்கனும், எனக்கும் உன் அம்மாக்கும் பிரச்சனையில்லை..”

“ஓ! அதான் இவ பேய் அடிச்ச மாதிரி இருக்காள..? இவ்வளவு தைரியமா ரெண்டுப் பேரும் எல்லாம் செஞ்சீங்க,  அப்புறம் ஏன் பயப்புடனும்…? வரட்டுமே..” என்றார் மல்லி.

“இல்ல அத்தை! அம்மாக்கு இங்க நடப்பது எதுவும் தெரியாது, என்னைய முதலில் ஏத்துக்கலைனு தெரியும் அப்புறம் ஏத்துக்கிட்டாங்க நான் இங்கு சந்தோஷமா இருக்கேனு அம்மா நம்பிட்டு இருக்காங்க”

“ஓ! ஏன் நீ உன் அம்மா கிட்ட இங்க நடப்பதை எல்லாம் சொல்லலையா..?”

“இல்ல, அதுல எனக்கு விருப்பமில்லை, எதுக்கு இங்க நடக்கிறதை நான் சொல்லனும் அவங்களுக்கு உங்க எல்லார் மேலையும் நல்ல எண்ணம் வராதுல.. அவங்க மனசும் கஷ்டப்படக் கூடாது, அதான்” என்று இழுத்தாள்.

“ம்ம்ம்!” என்று அவளை ஒரு மாதிரி பார்த்தவர், பாரியிடம்”வேலை செய்யும் பெண் கிட்ட, ஏதாவது செய்ய சொல்லு வரவங்களுக்கு கொடுக்க” என்றார்.

அதியனுக்கு மனம் நிம்மதியானது.

“பரவாயில்லை அத்தை! அவங்க ஸ்நாக்ஸ், ஸ்வீட்ஸ் எதுவும் சாப்பிட மாட்டாங்க, வெறும் டீ தான் நானே போட்டுக் கொடுத்துடுவேன்..”

“ஏன்…?”

“அப்பா இறந்தது முதல் அவங்க அப்படி தான், பலகாரம், ஸ்வீட் எதுவும் சாப்பிட மாட்டாங்க, இட்லி, சாதம், சப்பாத்தி இந்த மாதிரி அதுவும் அளவா எடுத்துப்பாங்க..”

ஆச்சரியமான மல்லி, சோழா “அதிசயமா இருக்கு” என்றனர்.

“ஏன் அண்ணி..? அது மட்டும் சாப்பிட்டா தான் உங்க அப்பாக்கு புடிக்குமா. இன்னுமா அந்த கால உடன்கட்டைப் போல இந்த விரதம் எல்லாம்..”

அதியன், ஸனா என்ன சொல்றானு அவளையே பார்த்தான்.

“இல்ல பாரி! அம்மாக்கு அப்பான உயிர், அவரு நாங்க சின்ன வயசா இருக்கும் போதே இறந்துட்டார். அவர் நினைவு போகவில்லை சாப்பாடு சாப்பிடாம எங்களை பாத்துக்க முடியாதுல, அவங்களுக்கு ஒரு கட்டுப்பாடு மாதிரி போட்டுக்கிட்டாங்க, அது அவங்களுக்கு அப்பா கூடவே அவர் நினைவா இருக்க ஒரு ஃபீல்.. அது அவங்க உணர்வு அதை நாங்களும் தடுக்கவில்லை..”

“மஸ்து! இதை நீ சொன்னதே இல்லையே. பரவாயில்லை வித்தியாசமான அன்பு உங்க அப்பா, அம்மாவோடது” என்றான் அதியன்.

***

பீவி வீட்டிற்கு வந்தார்.. டிரைவர் ஃபோன் பண்ணி சொல்ல, ஸனா, அதியன் வெளியில் வந்தனர்.

அவர்களை வரவேற்று அழைத்து வந்தனர்.

ஹாலில் நவநீதம் அமர்ந்திருந்தார்.

சேரரும் இருக்க, அதியன்”தாத்தா! இவங்க ஸனாவோட அம்மா” என்றான் அறிமுகமாக.

சேரர் உடனே”வாங்க! உட்காருங்க” என்றார்.

பீவி”வணக்கம்!” என்றார் இருவருக்கும்.

நவநீதமும் மரியாதை முன்னிட்டு, “வாங்க!” என்றவர், “உன் அம்மா அறைக்கு கூட்டிட்டுப் போ” என்றார்.

பீவி பார்க்க சாந்தமாக, புடவைக் கட்டி இருந்தாலும் தலையில் புடவையின் முந்தானையால் மறைத்தவாறு இருந்தார்.

எந்த ஆடம்பரமும் இல்லை, கழுத்தில் ஒற்றை செயின் இருந்தது.. நூல் காட்டன் புடவையில் பார்த்தால் வேகமாக எல்லாம் பேச வராது எதிரில் இருப்பவருக்கு, அதனால் கூட நவநீதம் அமைதியாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கு..

பீவியும் ஆண்களிடம் அவ்வளவே பேசாமல் இருப்பதால், தவறாக எண்ணாமல் மல்லியை பார்க்க சென்றார்.

மல்லி, சோழா அவரை வரவேற்று பேச ஆரம்பித்தனர். பெரிதாக ஒட்டுதல் இல்லை என்றாலும் ஒதுக்காமல் பேசினர்.

“ஸமா சொன்னா அதான் பார்க்க வந்தேன், உங்க உடம்பு எப்படி இருக்கு..? கவலைப்படாதீங்க கூடவே எல்லாரும் இருக்கோம்” என்று ஆறுதல் கூறினார்.

மல்லிக்கும் அது நல்ல விதமான உரையாடலாக தெரிந்தது.

“உங்க பொண்ணு உங்களை மாதிரி தான் போல.. அதே பேச்சு” என்றார் மல்லி.

“ஆமா! அவளுக்கு இந்த நடிப்புத் துறை எதிர்ப்பாராமல் அமைந்தது தான். அவளோட குணத்திற்கு ஏத்ததா இல்லை ஆனா எங்களுக்கு வேற வழியில்லைங்க, அவ அப்பா இல்லாத குறை அவளுக்கு இப்படியொரு வாழ்க்கைப் பாதை கிடைத்தது, அதுக்காக நான் கண்ணீர் வடிக்காத நாளே இல்லை.. ஆனா அதியன் மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணி உங்க குடும்பத்திற்கு வந்ததும் தான் எனக்கு நிம்மதியானது, அவளுக்கும் எல்லா பொண்ணுங்க மாதிரி வாழ்க்கை கிடைச்சிருக்குனு” என்றார் மனதார.

அதை கேட்ட சோழா, மல்லிக்கு ஸனா மீது கூடுதல் அக்கரை வந்தது என்பது தான் உண்மை.

பாரி”ஆன்டி! நீங்க கவலைப்படாதீங்க, என் அண்ணா தங்கமா தாங்குவார் அண்ணியை” என்றவன்.. “இல்லை அண்ணா!” என்று அதியனை பார்த்து கண் அடித்தான்.

“அதில் என்ன சந்தேகம், மஸ்து என் வாழ்க்கையில் எனக்காக வந்த பொக்கிஷம் கண்டிப்பா நல்லா பாத்துப்பேன்.” என்று தன் மாமியார் மனம் குளிர வைத்தவன். ஒரு நிமிடம் தாயை திரும்பி பார்த்தான்.

“அதான் சொல்லிட்டீயே அப்புறம் எதுக்குடா என்னைய பாக்குற..? நீங்க நல்லா இருந்தா எங்களுக்கு சந்தோஷம் தானே..”

அதியனுக்கு மகிழ்ச்சி ஆக”தேங்க்ஸ்மா” என்றான்.

பீவி சிறிது நேரத்திலே கிளம்பி விட்டார் மற்றொரு நாள் வருவதாக சொல்லி.

***

“என்னப்பா வர சொன்னீங்க…?” என்று பாரி வந்தான் தன் தந்தை அறைக்குள்.

“அதை ஏன் கேக்குற..? உன் அம்மாவை சமாளிக்க முடியலை நீயே பேசு”

“என்னம்மா..?”

“அப்புறம் என்னடா, அந்த மஞ்சரி அப்பா உன்னைய மாப்பிள்ளையாக்க கேட்டார் உன் தாத்தா முடியாதுனு சொல்லிட்டார். ஏன் அதியனுக்கு பேசியப் போது புடிச்சது இப்ப உனக்குனா பிடிக்கலையா..?”

“அய்யோ அம்மா! அவளா..? ஏன் உங்களுக்கு இப்படி போகுது யோசனை. எனக்கு அவளை புடிக்காது நல்ல வேளை தாத்தா நோ சொல்லிட்டாருனு சந்தோஷம் படுறேன் நான்..”

“ஏன்டா! அவளுக்கு என்ன குறைச்சல்..? நல்ல அழகா இருக்கா, வசதி, படிப்பு இருக்கு ஏன் பிடிக்கலை…? உன் தாத்தாக்கு தான் ஓரவஞ்சனை, உனக்கும், உன் அப்பாக்கும் என்ன பிரச்சனை..?”

“அம்மா! என்னமோ எனக்கு பொண்ணே கிடைக்காத மாதிரி இவளை ஆஃபர் பண்றீங்க…? இவளை விட அழகா, ஒரு பெரிய கம்பேனியை ரன் செய்ற பொண்ணு தானா வந்து ஃப்ரோபஸ் பண்ணுச்சு, அவ்ளோ லெவெல் உங்க பையனுக்கு..” என்று உளரினான் பாரி.

“யாருடா பாரி அது…?” என்று கேட்டார் சேரர் சற்று கடுமையாக.

பாரி தடுமாற, பிறகு”வி எல் குரூப்ஸ் பொண்ணுப்பா, பேரு ஷர்தா.. அந்த பொண்ணு தான் ப்ரோபஸ் பண்ணுச்சு ஆனா நான் அசெப்ட் பண்ணல.. ஏற்கனவே அதியன் அண்ணன் பிரச்சனை போகுது இதுல நான் வேறயானு..”

“ஓ!” என்றார் சேரர்.

“ஏன்டா அந்த பொண்ணு நல்ல வசதியா…?” என்றார் தேவி.

“தேவி! அவங்க பெரிய குரூப்ஸ் மும்பையில். அந்த கம்பேனி முழுவதும் அந்த பொண்ணோட கண்ட்ரோல் தான். திறமையான பொண்ணு நானும் பாத்து இருக்கேன். அந்த பொண்ணுக்கு எப்படி இவனை புடிச்சதுனு தெரியலை.”

“அப்பா!” என்று முறைத்தான்.

“ஏங்க நீங்களும் உங்க அப்பா மாதிரி என் பிள்ளையா இளக்கரமா பாக்குறீங்க….?”

“எப்படிடா..?” என்றார் மகனிடம்.

“அன்னைக்கு மீட்டிங் அதியன் அண்ணாக்கு பதிலா பண்ணேன்ல அப்ப தான் ப்ரோபஸ். ஆனா அவ எங்க  காலேஜில் படிச்சாப்பா..”

“ஓ! ஓகே.. சரி விடு.. எதும் புது பிரச்சனையை இழுத்துட்டு வந்துடாத” என்று அறிவுரை வழங்கி வெளியில் அனுப்பினார்.

ஆனால் தேவிக்கு மனதில் ஆசைப் பெருகியது.

அதியனவள் அடுத்து…

Advertisement