Advertisement

“எங்கடா கூப்புடுற…? நான் எங்கையும் வரல பாரி  நீ போ, ப்ளீஸ் என்னைய அலோனா விடு..” என்று அதிகாரமாக ஆரம்பித்து கிட்டதிட்ட கெஞ்சினான்
அதியன்.

“இல்ல! தனியா எல்லாம் விட்டுப் போக முடியாது, இது தாத்தா ஆர்டர் என் கூட வாங்க, ஒரு முக்கியமான விஷயம் வீட்டுக்குப் போகனும்..”

“வீட்டுக்கா..? ஏன் என்ன ஆச்சு..? அம்மா நல்லா இருக்காங்கள..? என்ன பாரி இந்த நேரத்தில் வீட்டுக்குப் போகனுமுனு சொல்ற..?” என்று பதறிக்கொண்டே கேட்டான், ஏற்கனவே ஸனா மற்றும் தன் வாரிசை நினைத்து துயரத்தில் இருந்தவன்.

“வாங்க அண்ணா! சித்தி நல்லா இருக்காங்க.. நீங்க வாங்க, வீட்டில் போய் பேசிக் கொள்ளலாம்” என அதியன் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்.

அதியனுக்கு அதற்கு மேல் ஆர்க்யூ பண்ற சிந்தனை, தெம்பு இல்லை, பாரிப் போக்கிற்கு நடந்தான்.

***
ஸனாவை பார்த்தவர்கள் முகத்தில் அதிர்ச்சி முதலில் தெரிந்தாலும் பிறகு மகிழ்ந்தனர் பலர், சினமாகினர் சிலர்.

ஸனா வெளியில் இருந்தாள், இன்னும் வீட்டிற்குள் வரவில்லை.

அது நவநீதத்தின் ஆர்டர், “பரணி! அதியன் வரட்டும்.. அதுவரை காரிலே காத்திருங்க” என்றார்.

என்ன நடக்குதுனு புரியாமல், நவநீதத்தின் அழைப்பில் வெளியில் இருந்து அவசரமாக வந்த சேரர், சோழர், பாண்டியன் தன் தந்தையை கேள்வியாகப் பார்த்தனர்.

பாட்டி’என்ன ஸனா வந்துருக்கா, இந்த கிழம் அமைதியா நிக்குது’ என தனக்குள்ளே கேள்விக் கேட்டப் படி வேடிக்கைப் பார்த்தார்.

பீவியை ட்ரைவர் அங்கிள் அழைத்து வந்தார், நவநீதம் பரணி மூலம் சொல்லி அனுப்பியதால்.

அவர் காரில் இருந்த மகளை பார்க்காமல்”என்ன ஆச்சுங்க, அவசரமா வர சொன்னீங்கனு ட்ரைவர் சொன்னாரு..” என்றார் நவநீதத்திடம் சற்று பணிவாக.

“எல்லாம் நல்ல சேதி தான்.. அந்தா உங்க பொண்ணுக் கிட்ட போய் கேளுங்க…”

பீவி புரியாமல் திரும்ப, அங்கு ஸனா அமர்ந்திருந்தாள் காரில்..

“ஸமா!” என்று மகளிடம் ஓடினார்.

நல்ல சேதி என்றதும் பாட்டி ஓரளவு யூகித்தவராக ஸனாவின் முகத்தைப் பார்த்தார்.. அதில் தெரிந்த பூரிப்பு அவருக்கு அந்த நல்ல சேதியைக் கூறியது..

தேவி, மாலினி ஒருவர் ஒருவரைப் பார்த்தனர்.

மல்லிகா அதற்கு மேல் பொறுக்க முடியாமல், ஸனாவிடம் ஓடினார்.

“ஸனா! மாமா என்ன சொல்றாரு..?” என்று கேட்டப்படி.

அம்மா, மாமியார் மாறி மாறி கேட்க.. பரணி”அட என்னங்க, அந்த பொண்ணு முகத்தைப் பார்த்தா தெரியலையா…? நீங்க இருவரும் பாட்டி ஆகப் போறீங்க…” என்றார்.

சந்தோஷம் மேலிட இருவருமே ஸனாவை கொஞ்சினர்..

***

காரில் எதையோ பறிக்கொடுத்தது போல் அமர்ந்திருந்த அதியன், கார் வீட்டின் காம்பவுண்ட்குள் நுழைய, அனைவரும் வெளியில் நிற்பதை சற்று பயந்தவாறு பார்த்தான்.

அவன் கண்கள் தாத்தாவைத் தேடியது, அவர் நல்லா இருக்காரனு… நவநீதம் நடுநாயகமாக நிற்க மனதில் நிம்மதி வர, கார் நின்றதும் இறங்கினான்.

அவன் இருந்த மனநிலையில் சற்று தூரத்தில் நின்ற பீவி, ஸனா காரை கவனிக்கவில்லை.. நேராக வீட்டின் வாசலுக்கு சென்றான்.

“தாத்தா! என்ன ஆச்சு..?  ஏன் எல்லாரும் வெளியில் நிக்குறீங்க…?”

நவநீதம்”மல்லிகா! என்ன வேடிக்கைப் பாக்குற.. போ போய் ஆழாத்தி எடுக்க ரெடிப்பண்ணு..” என்று அதட்டினார்.

மல்லிகா வேகமாக உள்ளே செல்ல..
அதியனுக்கு சற்றுக் கோபம் வந்தது, தான் இருக்கும் நிலை அறிந்தும் தாத்தா என்ன பண்ணிட்டு இருக்கார் என..

மல்லிகா தட்டோடு வந்ததும்,

“தாத்தா!” என்று கோபமாக ஆரம்பித்தவனை, “ஒரு நிமிஷம் அதியா!” என்றவர்,

“பரணி! வரசொல்லு” என்றார்.

அதியன் யார் என்று திரும்பிப் பார்க்க, ஸனா நடந்து வந்தாள்.

அதியன் பேரதிர்ச்சியாக கண் சிமிட்டாமல்”மஸ்து!” என்றான் வாய்விட்டு.

பல் தெரியாமல் சிரித்து வந்தவள், அதியன் அருகில் நின்றாள்.

மல்லிகா ஆழம் சுத்தி, இருவருக்கும் குங்குமத்தை வைக்க, அதியன் இன்னுமே அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

அவனின் கையைப் பிடித்த ஸனா”எனக்குமே இது நம்ப முடியாத சூழல் தான் அதியா” என்றாள்.

“நீ எப்படி மஸ்து.. அப்ப…?” என்று அவளின் வயிற்றுச் சென்றது கண்.

“இல்ல!” என்று தலை ஆட்டியவள்,
நவநீதத்தைப் பார்த்தாள்.

“தம்பி! ஸனா பாப்பா இந்த குழந்தை வேணுமுனு முடிவு எடுத்துட்டு, ஆனா பாப்பாவை இங்க அழைச்சுட்டு வந்தது ஐயா தான், உங்களுக்காக.. ஆனா ஸனா பாப்பா கண்டிசனோடு தான் வந்திருக்கு அது தொழிலில் ஐயா தலையிடக் கூடாதுனு, அதுக்கும் ஐயா ஒத்துக்கிட்டார், எல்லாம் உங்களுக்காக தான்..” என்றார் பரணி.

அதியனுக்கு நம்பவே முடியவில்லை, மற்றவர்களுக்கும் தான்.. பாட்டி மனதில்
‘இந்த கிழமா..?’ என்று தோன்றியது.

“தாத்தா!” என்று அதியன் நவநீதத்தை கட்டிப் பிடித்தான்.. “தேங்க்ஸ் தாத்தா! தேங்க்ஸ் சோ மச்…” என்று கண்களில் கண்ணீர் அருவியாய் வழிந்தது.

அதை கண்ட பலருக்கும் சந்தோஷத்தில் நெகிழ, ஸனா அதியனையே நோக்கினாள்.

“நீ எனக்காக உன் பொண்டாட்டி,  பிள்ளையே விட்டுக்கொடுக்கப் போயிட்ட
அதியா, பரணி என்னை நாக்கப்புடுங்குற மாதிரி கேட்டான் நீங்க செத்தா தான் அதியன் தம்பி நல்லா இருப்பாருனா செத்துடுங்க ஐயானு.. நீ விட்டுக்கொடுத்து என் மேல இருக்க பாசத்தை நிரூபிச்ச, ஆனா நான்….? நீ விட்டுக்கொடுத்தா தான் என் மேல பாசம் வச்சு இருக்கனு நம்பினேன். அது தப்புடா தப்பு, நீ சின்ன பிள்ளை ஆனா பெரிய மனசா நடந்த ஆனா நான் சின்னப்புத்தியா இருந்துட்டேன் உன் விஷயத்தில், அதான் உன் சந்தோஷத்தை தாண்டி தான் எனக்கு எல்லாமே.. இந்த பொண்ணு தான் உன் சந்தோஷமுனு தெரிஞ்சு எப்படி விட முடியும்.. வாங்க வீட்டுக்குள்ள.” என்றார் நவநீதம்.

அதியனுக்கு மகிழ்ச்சியில் ஒன்னும் புரியவில்லை.

ஸனாவோடு உள்ளே நுழைந்தான்.

மல்லிகாக்கு அதுக்கு மேல் தாமதிக்காமல், அவசரமாக ஓடினார் சாமி அறைக்குள்.. விளக்கேற்றி குங்குமத்தை எடுத்து வந்து நவநீதம் கையில் கொடுத்தவர்.. வேகமாக சென்று மாமியார் கையைப் பிடித்து அழைத்து வந்தார்.

“அத்த! வாங்க, நீங்களும் மாமாவும் எங்க பிள்ளைங்களை ஆசிர்வாதம் செய்யுங்க..” என்றார்.

சோழாவும் அதே கூறினார்.

பாட்டிக்கும் மனம் மகிழ்ச்சியாக தான் இருந்தது.

இருவரின் காலில் அதியன் – ஸனா விழுந்தனர்.

நவநீதம் இருவரையும் ஆசிர்வதித்தார்.. பாட்டியும் ஆசிர்வதிக்க.. “பாட்டி! என் கூட பேசுவீங்கள..?” என்று அவரை  அணைத்தான் அதியன்.

“உன் கூடப் பேசாம இருப்பேனா. என் பேத்தி தான் வீட்டுக்கு வந்துட்டாளே.. ஆனாலும் இன்னொரு குறை இருக்கு அதும் உன்னால தான் முடியும் அதியா” என்று கணவனை ஒரக்கண்ணால் பார்த்தார்.

அது அதியனுக்கு புரியவில்லை, ஆனால் ஸனாக்குப் புரிந்தது.

“என்ன பாட்டி குறை…?” என்று கேட்டான். அவன் மனதில் வரு இருந்தால் தானே உணர்வான்.

ஆனால் ஸனா”பாட்டி! எல்லாம் நடக்கும் நீங்க நம்புங்க..” என்றாள் ஆறுதலாக.

“போதும்! போதும்! அதியா சந்தோஷமா, இனி உன் முகத்தில் சந்தோஷம் மட்டும் தான் இருக்கனும்.. நீ இந்த நவநீதத்தின் வாரிசு.. உன் பொண்டாட்டி, பிள்ளையும் இந்த வீட்டில் தான் இருக்கனும்.. எல்லாருக்கும் புரியுமுனு நினைக்குறேன்..” என்று ஹாலில் சென்று அமர்ந்தார்.

வீடே சந்தோஷ கடலில் மூழ்கியது, பாரி, மற்ற இளம் வீட்டுப் பெண்கள் ஸனாவோடு பேச ஆரம்பித்தனர்.

அதியன் அப்பப்ப ஸனாவையே பார்த்தான்.

பீவி, மல்லிகா மகிழ்ச்சியாக பேச, இரு உள்ளங்கள் பொருமியது.. தேவி, மாலினி.. இது எல்லாம் அநியாயம் என்று..

****

இரவு…

பீவி இரவு வரை பெண்ணோடு இருந்தார்..

அதியன் அறையில் இருந்தனர். அதனால் அதியன் அறைக்கே போகவில்லை.. பரணி நடந்ததை விளக்கினார் அதியனிடம்.

ஸனா”அம்மா! நீங்க வரு அத்தை கிட்ட சொல்லிடுங்க, இங்க நடந்ததை அவங்க பாட்டி ஆகப் போறாங்கனு..”

“ம்ம்ம்! சரி ஸமா, ஆனா பெரியவரு உன்னை மாதிரி அவளையும் ஏத்துக்கிட்டா நல்லா இருக்குமுல..”

“அதுக்கு தான் பாட்டி ஏங்குறாங்க. அது அதியன் நினைத்தால் முடியும்..”

“நீ பேசு ஸமா மாப்பிள்ளை கிட்ட…”

“வரு அத்தை பத்தி அவர் என்ன நினைக்குறாருனு கூட தெரியலை.. பேசுறேன்..”

சிறிது நேரம் பேசினர், பிறகு பீவி கிளம்ப
ஸனா வழியனுப்ப வாசலுக்கு வந்தாள்.

அதியனும் சென்று வழியனுப்பினான்.

அதியன் தன் அறைக்கு செல்ல, சாரு, சங்கவி, சைந்து ஸனாவோடு ஏததோ கதையில் இருந்தனர்.

இன்று தான்  அவர்கள் ஸனாவோடு சுதந்திரமாக பேச ஆரம்பித்தனர். நவநீதத்தின் முன்னிலையிலும்.

நவநீதம் பரணியோடு கணக்கில் இருக்க, “ஐயா! பாருங்க பிள்ளைங்க எல்லாம் சந்தோஷமா இருக்குதுங்க. நமக்கு இனி என்ன வேணும் சொல்லுங்க…”

“ம்ம்ம்!”

“இன்னைக்கு நைட் நான் தூக்கத்திலே செத்தா கூட நிம்மதியா போயிடுவேன் ஐயா…”

“என்ன பேசுற பரணி..? உனக்கும் குடும்பம் இருக்கு..”

“அடப்போங்கய்யா! நீங்க இருக்கீங்க உங்களுக்கு அப்புறம் அதியன் தம்பி இருக்குறாரு.. எனக்கு அந்த கவலை இல்லை.. “

பரணியை பெருமையாக பார்த்த நவநீதம்”இவ்வளவு அன்பு, மரியாதை, நம்பிக்கை வச்சு இருக்க நீ ஏன் நான் பெத்தப் பொண்ணு ஓடிப்போக உதவின பரணி..?” என்றார் கண்களை ஊடுருவி.

“எனக்கு இப்ப பயமில்லை சொல்றேன்.. வரும்மா அன்னைக்கு அவ்வளவு கெஞ்சும் நீங்க  ஒத்துக்கல. அந்த பையன் முஸ்லீம் என்ற காரணத்தால். உங்க ஸ்டேடஸ்க்கு வெளியில் அசிங்கம் மத்தவங்க என்ன சொல்வாங்கனு யோசிச்சீங்க.. அதுவும் சரி தான் சமூகத்தை சந்திக்கனுமுல என்ன இருந்தாலும். அதான் உங்களை எதிர்க்க முடியலை இன்னைக்கு மாதிரி அன்னைக்கு நான் பேசி இருந்தா என் அப்பாவே என்னைய கொன்னுப் போட்டு இருப்பார்.. அப்ப என் வயசு அவங்க ஓடிப்போவது தப்பில்லைனு சொன்னுச்சு  அதான் உதவினேன்..” என்றார் தெளிவாக.

நவநீதம் எதுவும் பேசவில்லை.. அமைதியாக சென்றார் தன் அறைக்குள்..

***

அதியன் தன் அறையில் காத்திருக்க, ஸனா ரொம்ப நாள் கழித்து அதியனை எந்த வித பிரச்சனையும் இல்லாமல் சந்திக்கப் போறதை நினைத்து மகிழ்ச்சியாக அறைக்குள் நுழைந்தாள்.

கதவை திறந்ததும் அறையே பிரகாசித்தது இருட்டில்..

“அதியா!” என்றாள் அவனை தேடியவாறு..

கதவை சாற்றி தாழிட்டவன், அவளை பின்னால் இருந்து அணைத்தான்.

“இதை தான் அண்ணனும், தம்பியும் ரெடிப் பண்ணிங்களா.. பாரி எங்கனு கேட்டதுக்கு அண்ணனோடு பிஸியா இருக்காருனு சைந்து சொன்னா.. இதானா அது…?”

“தம்பியுடையான் படைக்கு அஞ்சான்” என்று அவள் கழுத்தில் முகத்தை வைத்து தேய்த்தான்.

“மன்னர் இப்ப எந்த நாட்டைப் படை எடுக்கப் போறீங்க..?”

“இப்ப மன்னருக்கு அந்தப்புரத்தில் தான் வேலை. போர் எல்லாம் பிறகு தான்..” என்று அவளை மேலும் இறுக்கினான்.

அவன் கைகளோடு தன் கைகளை வைத்தவள், “அதியா! இது எல்லாம் ஏதோ பிரமை மாதிரி இருக்குல.?”

“ம்ம்ம்! என்னால நம்பவே முடியலை மஸ்து, எல்லாமே முடிஞ்சுட்டுனு நினைச்ச அடுத்த மணி நேரத்தில் போனது எல்லாம் கிடைச்ச மாதிரி இருக்கு…” என்று அவளை தன் பக்கம் திருப்பினான்.

அவளை நகர்த்தி கட்டிலில் அமர வைத்தவன், மண்டியிட்டு வயிற்றில் தலை சாய்த்து முத்தம் வைத்தான்.

அவனின் தலையை தன்னோடு அணைத்தவள் குனிந்து அவள் தலையில் முத்தம் வைத்தாள்.

“உங்க கிட்ட பேசிட்டு போனதும் நம்ம குழந்தையை அழிக்க எனக்கு மனசு வரலை அதியா, என்ன ஆனாலும் பெத்துடனுமுனு நினைச்சேன். ஆனா உன் தாத்தா வருவானு நான் நினைக்கவே இல்லை.. இப்ப புரியுது நீ ஏன் அவரை இந்தளவு நம்பி இதே வீட்டில் இருக்கனு..”

“ம்ம்ம்! அவரு நல்லவரு தான் மஸ்து. அவரோட மனசு அது, சீக்கிரம் மாறாது ஏத்துக்காது தான். அதனால் ஆரம்பத்திலே நான் விலகினேன் ஆனா நம்ம விதி அது நம்மளை பிரிய விடலை..”

“என்னனமோ நடந்துட்டு அதியா, எதிர்ப்பார்க்காத சில ரகசியங்கள் கூட வெளிவந்துட்டு..” என்றாள்.

சட்டென்று நிமிர்ந்த அதியன், எழுந்து அமர்ந்தான் அவளை விட்டு..

“அதியா!”

“அது வெளியில் வராமல் இருந்திருக்கலாம் மஸ்து..”

“ஆனா உண்மையை மறைக்க முடியாது ரொம்ப காலத்துக்கு.”

“எது உண்மை…? இந்த வீட்டை விட்டு வெளியில் போன வரலெட்சுமி பையன் நான்.. பிறந்ததில் வளர்த்த மல்லிகா என் அம்மா இல்லை என்பதா..?”

“இல்லைனு சொன்னாலும் அது மாறாதே அதியா…”

“ப்ளீஸ் மஸ்து.. இது நமக்கான நேரம். அதை கெடுத்துடாத… எனக்கு எந்த உண்மையும் வேணாம்..” என்றான் இயலாமையோடு.

அவன் அருகில் சென்று மார்பில் சாய்ந்தவள், “நான் சொன்னேன்ல ஒரு பக்கத்து வீட்டு ஆன்டி.. எனக்கு தமிழ் சொல்லி தந்தவங்க, அவங்களையே என் அம்மா பார்த்ததால் தான் நான் அழகா பிறந்தேனு.. நம்ம விளையாட்டுக்குப் பேசினமே.. அவங்க தான் வரு அத்தை அதியா.. நீ அவங்களை அம்மானு ஏத்துக்க வேணாம் ஆனா வெறுக்காதீங்க ப்ளீஸ்..” என்றாள் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தவாறு.

அவள் முகத்தை அப்படியே இரு கைகளால் தாங்கியவன், இதழ் நோக்கி குனிந்தான்.

கண்கள் அவனையே பார்க்க, விழிகளால் கெஞ்சினான்.

உதட்டில் வந்து புன்னகை கண்களில் பிரதிபிலிக்க.. அவளின் இதழை மென்மையாக சீண்டி அத்தனை நாள் பிரிவை அதில் உணர்த்தினான்.

இதழ் தடம் நீள, அவளை தன்னோடு அணைத்து அப்படியே கட்டிலில் சரிந்தான்.

மூச்சுவிட சிரமமின்றி அணைத்த இதழை விடாமல் சுவைத்தவன், விடுவித்தப்போது ஸனா கண்களில் நீர் வழிந்தது..

“என்ன மஸ்து..?” என்றான் அவளை தன் மார்பில் சாய்த்தவன்.

“ஒரு வேளை தாத்தா ஏத்துக்கவே இல்லைனா, நம்ம வாழ்க்கை தனிமையிலே போயிருக்குமுல.”

“ம்ம்ம்! அத நினைக்க கூட நான் விரும்பலை.. வேணாமே மஸ்து. அப்படி ஆககூடாதுனு விதி நம்மளை சேத்துட்டு போல.. நம்ம குழந்தை தான் இதுக்கு காரணம்.. இதுக்கு மேல என் கிட்ட கேட்டீனா நான் ஒரு சுயநலவாதி, அடிமையானவன் பாசத்திற்கு குடும்பத்திற்குனு சொல்லுவேன் கெட்டவன், உன்னை காயப்படுத்தியவன் இப்படிதான் இருந்திருப்பேன் மஸ்து” என அவளின் வயிற்றில் கைகளால் தடவி தன் சிசுவிற்கு நன்றிக் கூறினான்.

“அதியா ப்ளீஸ், நான் எதுமே தெரியாமல் இல்லை.. விடுங்க.. ஐ லவ் யூ…” என்று அவனை இறுக்கி அணைத்தாள்.

“ஐ லவ் யூ போத்” என்று தன் குழந்தையோடு அணைத்தான் அவளை.

“நீ டைரக்டர் கிட்ட பேசிட்டீயா..?”

“இல்ல, இன்னைக்கு நடந்ததில் மறந்துட்டேன்.. காலையில் தான் பேசனும்..”

“நான் வேணா பேசட்டுமா…?”

“இல்ல! நானே பேசுறேன்..”

“ம்ம்ம்! சரி நீ தூங்கு, இன்னைக்கு தான் தலையணைக்கு பதிலா என்னவளே இருக்கா பக்கத்தில்… “

“எனக்கும் தான்..” என்று அவன் நெற்றியில் முத்தம் வைக்க.

“வேணாம் பொண்டாட்டி, இவ்வளவு தான் மரியாதை.. அப்புறம் என் மூட் மாறிடும். நீ பாவம்..”

“என்ன மூட் மாறும்..?” என்றாள் வேண்டுமென்றே.

“ம்ம்ம்! உனக்கு தெரியாது..?”என்று அவள் நெற்றியில் மெதுவா மோதியவன்.

“தூங்குடி!” என்றான் திரும்பிப் படுத்தவாறு.

“ஹலோ! இது சரியில்லை.. அப்புறம் நான் போய் தாத்தா கிட்ட கம்பளைன்ட் பண்ணுவேன்..”

“என்னனு..?” என்று திரும்பியவன்.

“ம்ம்ம்! என்னைய கட்டிப்பிடிக்காம திரும்பி படுத்துக்கிறார் உங்க பேரனு..”

“அடிப்பாவி! அவர் மரியாதை எப்படி எல்லாம் டேமெஜ் பண்ற…? வேணாம் அதுக்கு கட்டிப்பிடிக்குறேன் ஆனா நீ என்னைய இம்சைப்பண்ணாம படுக்கனும்..”

“ம்ம்ம்!” என்றவளை நெருங்கி அணைத்துக் கொண்டான் கண்களை மூடியப்படி.

ஆனால் ஸனா அவன் கண்கள், மூக்கு, காது மடல் என இதழால் வருடினாள்.

கண்களை மூடியப்படி”மஸ்து!” என்றான்.

“ம்ம்ம்!”

“தூங்கு!”

“நீங்க தூங்குங்க, நான் என் வேலையைப் பாக்குறேன்.. நீங்க இப்ப என்னைய எதுவும் பண்ண முடியாது பிகாஸ் நான் உங்க குழந்தையை சுமந்துட்டு இருக்கேன் ஆனா நான் உங்களை எது வேணா செய்யலாம். பிகாஸ் திஸ்  இஸ் பனிஷ்மென்ட்.. என்னை இத்தனை நாள் தவிக்க விட்டதுக்கு.. ஓகே! உஷ்ஷ்ஷ் மை புருசா..” என அவள் வேலையைத் தொடர்ந்தாள்.

கழுத்து, மார்பு என இறங்கினாள் இதழ் வருடலில்.

அதியனுக்கு அவஸ்தையாக இருந்தது..
“மஸ்து!”

“நோ வே அதியா! யூ டோன்ட் டு எனிதிங்..” என அவனின் காது மடல்களை அழுந்த கடித்தால்.

“ஆ!” என்று கத்தினான்.

“டேய்! நான் கத்தினா கூட பரவாயில்லை நீ கத்தினா அசிங்கமாகிடும்.. ஷ்ஷ்” என்றாள்.

“ஏய் நீ கொடுமை பண்றடி..”

“சோ வாட், தண்டனை கொடுத்து தான் ஆவேன்..” என்று கன்னங்களை கடித்தாள் அடுத்து.

அவனின் முடிகளைப் பிடித்து இழுத்து இதழைக் கடித்து விடாமல் சிரித்தாள் அழகாக கண்களால்.

அதியனுக்கு வலித்தாலும் அவளின் இம்சையை மனதார ரசித்து ஏற்றான்.
எத்தனை நாள் பிரிவு, அவளின் கோபம் தெரிந்தது, அதுக்கு அவன் தானே காரணம்.

அதியனின் மூக்கில் கடித்தவளின் கை, அவனின் இடுப்பில் பதம் பார்த்தது..

கண்களால் அர்த்தமாக நக்கலோடு சிரித்தவள், புருவத்தை உயர்த்தி புன்னகைக்க.. அதியன்
“மஸ்து! ப்ளீஸ் போதும். உன் அதியன் பாவமுல.”

“யாரு நீ பாவம்..?” என்று அந்த நக்கல் சிரிப்பை மெய்யாக்கினாள். அதியன்”ஆ!”என்று கத்த, அவனின் வாயை, தன் வாயால் மூடினாள். எவ்வளவு நேரம் நீடித்ததோ அவர்களின் இதழ் மோதல்.. ஸனாவின் கைகள் மென்மையை கையாள, அதியன் முகத்தில் மஸ்துவின் முகமே மூடி இருந்தது.

அவளின் விழிகளில் கண்ணீர் வழிய, அவனின் கன்னங்களை நனைத்துச் சென்றது..

அதியனுக்கு ஏதோ நிம்மதி வந்தது, அவளின் இத்தனை நாள் ஏக்கம் தன்னால் பாதிக்கப்பட்ட அவள் மனம் அமைதியடைந்தது, தன்னை அவளின் அன்பால் ஆள ஆரம்பித்தாள் இப்போது..

அவனிடம் இருந்து முகத்தை எடுத்தவள், அப்படியே சரிந்து மார்பில் சாய்ந்துக் கண்களை மூடினாள்.

“லவ் யூ அதியா!”

“லவ் யூ டி”

இருவருமே உறக்கத்திற்கு சென்றனர்..

அதியனவள் அடுத்து…

Advertisement