Advertisement

வீடு அமைதியாக இருந்தது.. தேவி மட்டும் அடுப்படிற்குள் புலம்பிக் கொண்டு நின்றார்.

“என் பையன் இந்த வீட்டில் எடுப்புடியாவே இருப்பானு எல்லாரும் நினைச்சுட்டாங்க போல, ஏன் அந்த மல்லி எனக்கு முன்னாடி பிள்ளையை பெத்துட்டா உசரத்தில் தான் இருக்கனும், நான் அடுத்து இருக்கனுமா…? நான் தான் இந்த வீட்டுக்கு முதலில் வந்தவள்..” என்று தேவி பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்த மாலினி.

“அக்கா! இப்ப எதுக்கு பேசி ஆற்றலை வீணாக்குறீங்க..? விடுங்க அதான் பாரி பொறுப்பு ஏத்துட்டான்ல” என்று ஆறுதல் சொன்னாள்.

“இல்ல! எனக்கு மனசே ஆறல மாலினி, இந்த அத்தையும், மாமாவும் ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு வைக்குற மாதிரி தான் அதியனையும், பாரியையும் பாக்குறாங்க, நடுவுலவரு சொன்னதை கேட்டீயா..? பொண்டாட்டி முடியாம தூங்குறாளாம், அவ காதில் விழக் கூடாதாம் நான் பெருமைப்படுறது. ஏன் அவளுக்கு முடியலை..? பிள்ளைக்கு கிடைக்க வேண்டிய மரியாதை, பதவி, ஆஸ்தி எல்லாத்தையும் புடுங்கி மாமனார் பாரி கிட்ட கொடுப்பேனு சொன்னதும் முடியாம போச்சாம் எல்லாம் நடிப்பு மாலினி. இப்ப மறுபடியும் திருப்பிக் கொடுத்தா உடம்பு நல்லா ஆகிடுமா…?” என்று மனதில் உள்ளவற்றை கொட்டினார்.

தன் அறைக்குள் சென்று உடை மாற்றிக் கொண்டு கீழே வந்து கிச்சனில் என்ன இருக்கென்று சாப்பிட  வந்த ஸனா காதில் தேவிப் பேசியது விழுந்தது.

அவளுக்கு மட்டுமில்லை, குடிக்க தண்ணீர் எடுக்க வந்த சோழர் காதிலும் விழுந்தது.

அப்படியே நின்றார். ஸனாக்கு ஏன்டா இப்ப வந்தமென்று தோன்றவும் திரும்பினாள்.

அங்கு மாமனார் நிற்பதை பார்த்து அவர் காதில் விழக்கூடாதென”என்ன மாமா வேணும்..?” என்று தடுமாறி கேட்டாள்.

அப்போது தான் ஸனாவை கவனித்த தேவி, மாலினி அமைதியாகினர்.

“தண்ணி வேணும்” என்று கையில் இருந்த ஃபிளாக்ஸை நீட்டினார். அவருக்கு அதற்கு மேல் நிற்க முடியவில்லை.

பாட்டிக்கும் அனைத்தும் கேட்டது.

சங்கவி அப்போது தான் வந்தாள்.
“சங்கவி! அம்மா பக்கத்தில் என்ன இருக்குனு பாக்க மாட்டீயா..?” என்று தன் மகளை அதட்டியவர், தன் அறை நோக்கி நடந்தார்.

சங்கவி ஸனாவிடம் ஃபிளாஸ்க் வாங்க கையை நீட்டினாள்.

“இல்ல சங்கவி நீ போ, நான் எடுத்துட்டுப் போறேன், படிச்சுட்டு இருந்தீயா..?”

“ஆமா அண்ணி! எக்சாம்” என்றாள் மெதுவாக, சுற்றி பார்த்தவாறு.

“ஓகே! ஓகே! நீ போ” என்று அவளை அனுப்பி வைத்து விட்டு, கிச்சனுக்குள் சென்று வெந்நீர் வைத்து நிரப்பிச் சென்றாள்.

மாமியார் அறைக்குள் சென்றவள், தண்ணீரை அங்கு வைத்துவிட்டு, சோழாவிடம்”நீங்க வேணா போய் டிவி பாருங்க மாமா, நான் இங்க இருக்கேன்” என்றாள்.

“இல்ல பராவாயில்லை, உங்களுக்கு எதுக்கு சிரமம்..?”

“நான் உங்க பையனுக்கு மனைவி, இவங்களை பாத்துக்க எனக்கும் உரிமை இருக்கு, நீங்க பயப்புடாதீங்க உங்க அப்பா திட்ட முடியாது என்னை. அதுக்கு இன்னும் மாதங்கள் இருக்கு” என்றாள்.

சோழா எதுவும் பேசவில்லை, என்ன பதில் சொல்வது.

“அதியன் போன் செஞ்சான..?” என்றார் மெல்ல.

“இல்ல மாமா, ஆனா அச்சு பேசுனாரு அவங்க கூட தான் இருக்காங்கனு, வந்துடுவார்.”

“ம்ம்ம்! மல்லிகாக்கு எதுவும் தெரியாது, அதியன் பத்தி..”

“ஆபிஸில் என்ன நடந்தது மாமா, விருப்பமுனா சொல்லுங்க. ஏனா இதை நான் அதியன் கிட்ட கேட்க முடியும். ஆனா அவரை கேட்டு கஷ்டப்படுத்த விரும்பலை..”

முதலில் அமைதியை கடைப்பிடித்த சோழர், பிறகு அவள் கேட்பது தவறு இல்லையே என்று தோன்றியதால் நடந்ததை கூறினார்.

ஸனாக்கு சற்று அதிர்ச்சி தான், ஆனால் மனதை தேற்றினாள்.

“இதில் என்ன இருக்கு மாமா..? பாரி தானே கம்பேனியை ரன் செய்யப் போறார், அதியனுக்கு வருத்தம் அதில் இருக்காது ஆனா தாத்தா தன்னை பேரனாக பாக்கலையேனு தான் வருத்தப்படுவார்.. நீங்க கவலைப்படாதீங்க..” என்றாள் பொறுமையாக.

அவர் பதில் பேசவில்லை.

“நீங்க என்ன யோசிக்குறீங்கனு தெரியுது, இது எல்லாமே என்னால தான் நான் வெளியில் போனா எல்லாம் சரி ஆயிடும், உங்களை ஏன் சமாதானம் செய்றேனு தானே யோசிக்குறீங்க..? சரி தான்.. ஆனா அதியனும், நானும் மனசார காதலிக்குறோம் இந்த வசதிக்காக ஏன் வாழ்க்கையை விட்டுப் பிரியனும்…? உங்க எல்லாருக்காக வேணா பிரியலாம். ஆனா அதுக்கு அப்புறம் அதியன் சந்தோஷமா இருப்பார..? ஒரு அப்பாவ உங்களுக்கு பதில் தெரிஞ்சா என்னைய வெளியில் போகச் சொல்லுங்க” என்றாள்.

சோழர் அவளை பார்த்தார். “அப்படி அவன் மறப்பதாக இருந்தால் இன்னைக்கு நடந்தது எதுவுமே நடந்திருக்காதே. ஒரு அப்பாவாக யோசித்தால் முடியாது தான். ஆனா இந்த குடும்பத்துக்காக யோசித்தால் உங்க காதல் என்னால ஏத்துக்க முடியலை. ஆனா.? நடப்பது நடக்கட்டும்” என்று வெளியே சென்றார்.

ஸனாக்கு சற்று ஆறுதலாக இருந்தது, மாமனார் தன்னை இந்த அறையில் அனுமதித்து அவர் வெளியேறியது.

அவர் அவளை ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் தடுக்கவும் இல்லை.

மல்லிகா இன்னும் கண் முழிக்கவில்லை மருந்தின் வீரியம் அவரை மறந்து உறங்கினார்.

ஸனா அவர் பெட்டின் அருகே சற்று தள்ளி அமர்ந்தாள்.

மனதில் பல யோசனைகள்’அதியன் பெரியம்மா பேசியதும் நியாயம் தானே, பாரி அவரின் மகன், அவருக்கு உரிமை எதிர்ப்பார்ப்பது தப்பில்லையே, என்ன அது பொறாமையாக வெளிப்படுது.’ என்பவை ஓடியது.

நவநீதம் வெளியில் உலாவிக் கொண்டு இருந்தார், மனதிலும், உடலிலும் புழுக்கம் அதிகமாகியதால்.

மணி ஆகியது, அவரவர் சாப்பிட யோசித்துக் கொண்டிருந்தனர்.

மல்லிகா கண் விழித்தார். ஸனா அவர் முழிப்பதை கண்டு அருகில் சென்றாள்.

அவரோ தன் கணவரையும், மகனையும், மகளையும் தேடினார்.

எவருமில்லை அருகில் என்றதும், அவரே எழுந்து அமர்ந்தார்.

“எங்க போய் தொலைச்சாங்க எல்லாரும்?”என்று கேட்டுக் கொண்டே பாத் ரூம் செல்ல எழுந்தார்.

ஆனால் நெடுநேரம் படுத்தே இருந்ததால் அவர் எழுந்த வேகத்தில் விழப்போனார்.

ஸனா வேகமாக வந்து அவரை பிடித்தப்படி”பாத்து! வெயிட் பண்ணுங்க” என்று உட்கார வைத்தாள்.

“விடு! நீ இங்க என்ன செய்ற…? வெளியில் போ” என்றார் வேகமாக.

“மாமா இங்க தான் இருந்தாங்க நான் தான் போய் டிவி பாக்க சொன்னேன், அதியன் இன்னும் வரலை, சங்கவிக்கு எக்சாம் படிச்சுட்டு இருக்கா. என்ன வேணும் சொல்லுங்க செய்றேன்..” என்றாள் நிதானமாக.

“நீ இந்த வீட்டை விட்டு வெளியில் போகனும் போறீயா…?”

“ம்ம்ம்! அது அதியன் சொல்லட்டும். அப்படி சொன்னா போறேன் அத்தை” என்றாள் கேஷ்வலாக.

“அவன் சொல்ல மாட்டானு தைரியம். ஒரு வேளை சொலிட்டான….?”

“அத அப்ப பாத்துக்கலாம், நீங்க வாங்க பாத்ரூம் தானே போகனும், புடிச்சுக்குறேன்” என்று கைகளை நீட்டினாள்.

“அது எல்லாம் ஒன்னும் வேணாம், போய் மாலினியை வரசொல்லு, இல்லனா வேற யாராச்சும் கூப்புடு” என்றார்.

மனதில்’யாரை கூப்புடுவது, அதியன் சித்தியா..? ம்ம்ம், அதுக்கு மாமாவையே கூப்புட்டுவிடுவோம்’ என வெளியில் சென்று சோழரை அழைத்து வந்தாள்.

அவரும் வர, ஸனா பின்னாலே வந்தாள்.

“மாலினியை தானே வர சொன்னேன்.. சரி நீங்க பாத் ரூம் புடிச்சுட்டு போங்கங்க, தலை சுத்துது” என்று எழப்போனார் மல்லி.

“அவங்க எல்லாம் ஏதோ வேலையா இருப்பாங்க போல, நீ வா” என்று மனைவியை கைதாங்கலாக பிடித்தார்.

அவரின் புடவை சரிந்தது. ஸனா உடனே அதை சரிசெய்து விட்டாள்.

“உன்னைய யாரு கூப்புட்டா, போய் உன் வேலையை பாரு” என்று எரிந்து விழுந்தார் மல்லி.

“மல்லி! இந்த நேரத்தில் இப்படி வேகமாக பேசாத, அது நல்லதில்லை உடலிற்கு” என்று பாத்ரூம் சென்று விட்டவர் வெளியில் வந்தார்.

மல்லி, தான் அழைப்பதாக கணவரை வெளியில் அனுப்பினார்.

சற்று நேரத்தில் சத்தம் கேட்க,

சோழரும், ஸனாவும் ஓடினர். மல்லி கீழே விழுந்து கிடந்தார்.

மயக்கம் வர பிடிமானம் இல்லாமல் விழுந்தார்.

உள்ளே சென்றவர்கள் அதிர்ச்சியாகி, அவரை பிடித்து தூக்கினர்.

“ஸனா! நீ கால்களை பிடி” என்று சோழர் சொல்ல, ஸனாவும் உதவினாள்.

இருவரும் சேர்ந்து மல்லிகாவை தூக்கிட்டு வந்து கட்டிலில் போட்டனர். தலையில் இரத்தம் வழிந்தது.

சோழர் அப்போது தான் இரத்ததை கவனித்தார்..

“அய்யோ! என்னம்மா இரத்தம் வருதே..? இப்ப என்ன செய்றது..?” என்று பதறினார்.

“மாமா! வெயிட் பயப்புடாதீங்க” என்ற ஸனா அருகில் கண்ணில் பட்ட  ஒரு துணியை லேசாக கிழித்து ரத்தம் வராமல் கட்டி விட்டாள்.

“அநேகமாக மயக்கம் வந்து விழுந்திருப்பாங்க மாமா, அதில் பட்ட அடியா இருக்கும் நீங்க டாக்டருக்கு கால் பண்ணுங்க எதுக்கும் வந்து செக் பண்ணட்டும்” என்றாள்.

பாரி தன் அறைக்கு சென்று குளித்து முடித்து ரெப்பெரஷ் ஆகி மல்லிகாவை பார்க்க வந்தவனுக்கு, அங்கு பார்த்தவை அதிர்ச்சியாக, விசாரித்து அவனே டாக்டரை அழைத்தான்.

பிறகு தான் அனைவருக்கும் தெரிந்து ஓடி வந்தனர்.

டாக்டர் வந்து பரிசோதனை செய்தார்.

“சோழா! நான் தான் சொல்லி இருந்தேன்ல, மாத்திரை பவர் கூடுதலா இருக்கும். தனியா நடக்க விடாதீங்கனு. அதான் மயங்கி விழுந்துட்டாங்க.. நல்ல வேளை அடி பலமா படலை பட் பிளட் லாஸ் இருக்கு, நான் அதுக்கு இன்செக்சன் ட்ரிப்ஸில் போட்டு விடுறேன். டு டேஸ் மட்டும் யூரின் பேக் வச்சு விடலாம், அவங்க நடக்காம இருக்க தான். மோஷன் வந்தா கூடவே போயிட்டு வாங்க யாராவது. சரி ஆகிடும் டோன்ட் வொரி” என்று அறிவுறுத்தினார்.

அவரவர் நின்று விட்டு ஆறுதல் கூறிச் சென்றனர்.

சங்கவி மட்டும் அழுதப்படி அமர்ந்திருந்தாள். சாருவும், சைந்தவியும் ஆறுதல் கூறினர்.

ஸனா”சங்கவி! அம்மாக்கு ஒன்றுமில்லை இது சாதரண மயக்கம் தான், நீ போய் எக்சாமுக்கு படி, நானும் அப்பாவும் கூடவே இருக்கோம். இப்ப உன் அண்ணனும் வந்துடுவார் பயமே இல்லை” என்று கூறி சைந்தவி, சாருவோடு அனுப்பி வைத்தாள்.

சோழருக்கு மனம் பாரமாக இருந்தது.

“மாமா! நீங்க பெரியவங்க ஸ்டாங்கா இருங்க, அத்தைக்கு ஒன்னுமே இல்லை, சீக்கிரம் கண் முழிச்சு பாருங்க என் கூட சண்டைப் போடுவாங்க” என சிறிது சிரிப்போடு சொன்னாள்.

அவருக்குமே சிரிப்பு வந்தது.

“இப்ப தான் தெரியுது அதியன் ஏன் உன்னைய விட்டுக் கொடுக்காம இருக்கானு ஸனா” என்றார்.

பாட்டி இருவருக்கும் சாப்பாடு எடுத்துட்டு வந்தார்.

“உனக்காவது புரிஞ்சுட்டே அது வரை நல்லது, சாப்புடுங்க ரெண்டுப் பேரும்” என்று தட்டுகளை நீட்டினார்.

“மாமா சாப்பிடட்டும் பாட்டி, நான் அதியன் வந்ததும் சாப்பிடுறேன்..”

“அவன் ப்ரண்ட்ஸோடு போனா வீட்டுக்கு எப்பையும் சாப்பிட வரமாட்டான் ஸனா, நீ சாப்பிடு” என்றார் சோழர்.

“இல்ல பரவாயில்லை” என்று இழுத்தவள் கையில் திணித்து மிரட்டி சாப்பிட சொன்னார் பாட்டி.

ஒரு வழியாக முடித்து, ஆளுக்கொரு பக்கம் அமர்ந்திருந்தனர்.

பத்து மணி மேல் ஆகியது.

வெளியில் கார் சத்தம் கேட்க,

“நீ போம்மா! அதியன் வந்துட்டான் போல…”

“இங்க தானே வருவாரு மாமா, அத்தையை பாக்காம போக மாட்டார் வரட்டும்..”

ஸனா போன் அடித்தது.

அது அச்சு தான்.

அவசரமாக எடுத்துப் பேசினாள்.

“ஸனா! எங்க இருக்கீங்க..?”

“வீட்டில் தான் அச்சு..”

“நான் வெளியில் காரில் இருக்கேன். அதியனை மாதுவும், தீரனும் அழைச்சுட்டு வராங்க, நீங்க வெளியில் வாங்க..”

“ஏன் என்ன ஆச்சு..?” என்று பதறி அவசரமாக ஓடியவளை புரியாமல் பார்த்த சோழரும் பின் தொடர்ந்தார்.

அச்சு காரில் இருக்க, அதியனை காரில் இருந்து கைதாங்கலாக வெளியில் இழுத்தனர்.

வெளியில் வந்த ஸனா சற்று அதிர்ச்சி கலந்த பயத்தில் சுற்றிப் பார்த்தாள்.

யாரும் இருக்காங்களானு.. பின்னால் வந்த சோழருக்கு அதியன் மேல் கோபம் வந்தது..

“அச்சு! என்ன இது..? இப்ப வீட்டில் இருக்கும் நிலை தெரியாமல்..” என்றாள்.

“மஸ்து!”என்று உளரினான் அதியன்.

“ஸனா! அவன் பாவம் ரொம்ப டிப்பெர்சனில் குடிச்சுட்டான். தப்பா நினைக்காதீங்க, அம்மா, உங்களுக்கு பதில் சொல்லனுமேனு பயந்தான். அம்மாக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்க, என்னால தான் எல்லாமுனு நினைச்சி நீங்க வீட்டை விட்டு போயிடுவீங்கனு பயந்து அதிகமாக குடிச்சுட்டான், ஸாரி ஸனா நாங்களும் அவன் நிலை தெரிஞ்சு விட்டுட்டோம்..” என்றான் அச்சு.

“குடிச்சா எல்லாம் சரி ஆகிடுமா…? அவனுக்கு இவ்வளவும் செய்ய தைரியம் உன் கிட்ட இருந்து தான் வந்திருக்கும். உன்னோட பழகுறதை நிறுத்த சொல்லிருந்தேன். அதான் தேவை இல்லாத எல்லாரும் அவன் கூட சேர்ந்து இந்த நிலைக்கு ஆளாக்கிட்டீங்க, இன்னும் என்ன எல்லாம் பாக்கனுமோ தெரியலை, சோழா இப்ப புரியுதா நான் ஏன் அப்பப்ப அதியன் கிட்ட கண்டிப்பா இருந்தேனு. அப்படியும் இந்தா உருப்புடாம நிக்குறான். சுத்தி நிக்குற கூட்டத்தைப் பாரு, குடும்பம் வெளங்குமா..?” என்று கூறினார், அப்போது தான் தோட்டத்தில் இருந்து வந்த நவநீதம் கேவலமாக பார்த்துவிட்டு.

அவர் உள்ளே சென்றுவிட, சோழரும் சென்று விட்டார்.

“அச்சு! நீங்க ஃபீல் பண்ணாதீங்க. அதியனை ரூமுக்கு அழைச்சுட்டுப் போகா ஹெல்ப் பண்ணுங்க, நான் பாத்துக்குறேன்..” என்றாள் ஸனா.

நண்பர்கள் உதவியோடு அறைக்கு சென்று படுக்க வைத்தாள்.

அவர்கள் கிளம்பினர்.

கீழே வந்த ஸனா, மாமியார் அறைக்கு போக.. சோழர்”நீ போம்மா  அதான் நான் இருக்கேன் பாத்துப்பேன். அவனோடு இரு” என்று அவள் முகம் பார்க்காமல் கூறினார்.

“மாமா!”

“உன் மேல எனக்கு  எந்த வருத்தமும் இல்லை, நீ போ”

“ம்ம்ம்! அதியனும் பாவம் மாமா, அவன் மேல கோபப்படாதீங்க” என்றாள் மெதுவாக.

நிமிர்ந்து அவளை பார்த்தவர், “தெரியல, ஆனா எங்களை விட நீ அவன் மேல ரொம்ப பாசம் வச்சு இருப்பதை பார்க்க பொறாமையா தான் இருக்கு, ஆனா சந்தோஷமான நிம்மதி வருது, எங்களுக்கு அப்புறம் அவனுக்கு நீ நாங்களா இருப்பனு, போம்மா” என்றார்.

“ஏதாவது தேவைனா கூப்புடுங்க” என்று தங்கள் அறைக்கு வந்தாள்.

அதியன் ஷூ, சர்டை கழட்டி விட்டு, அவனை நேராக படுக்க வைத்தாள்.

அருகில் சென்று அவனோடு படுத்தவளுக்கு, நேற்றைய இரவு மனதில் நின்றது.

அவன் அருகில் நகர்ந்துப் படுத்தாள்.

மதுவின் வீரியம் வந்தாலும், அவனின் கவலை தான் அவளுக்கு தெரிந்தது.

“சாரி அதியா! நான் ஏதோ நினைச்சு உன் வாழ்க்கையில் வந்தேன். ஆனா இங்க நடப்பது எல்லாம் உன்னைய காயப்படுத்துவது மட்டும் தான்..”

“மஸ் து!” என்று மட்டுமே உளரியவாறு அவளோடு நெருங்கினான்.

அவனின் நெருக்கத்தை அவள் தடுக்கவில்லை, அவனின் மனக்காயம் ஏனோ அவளையும் சுட்டது, அதுக்கு அவளே மருந்தாக ஆசைப்பட்டாள்.

“சா ரி மஸ் து!” என்றான் அந்த போதையிலும்.

“எதுக்கு…?” என்றாள் மெதுவாக.

“என க்கு என் ன பண் றதுனு தெரி யல, அம் மா தி ட்ட போ றா ங்க” என்றான் அவளின் மேல் கைகளை போட்டவாறு.

“திட்ட மாட்டாங்க நீங்க ஃபீல் பண்ணாம தூங்குங்க” என்று அவனை தட்டிக் கொடுத்தாள்.

“சா ரி மஸ் து! எ ன்னை ய வி ட்டு போ யிடா த ப் ளீஸ்” என்றான் அவளை இறுக்கியப்படி.

“போகமாட்டேன், நீ அமைதியா தூங்கு அதியா”

அவனின் கைகள் என்ன செய்றோமுனு தெரியாமல் ஸனாவை வலுக்கட்டாயமாக அழுத்தியது உடல் எங்கும்.

ஸனாக்கு அது வலி என்றாலும் அதியனின் மனமே அதில்  பெரிதாக நின்றது..

“அதியா! ஆர் யு ஓகே..?” என்றாள் அவனை தன் மார்போடு அணைத்தவாறு.

“மஸ் து!” என்று அவளினுள் சுருங்கிப் படுத்தான் அவளின் தற்போதைய காதல் நோயாளி.. அவனின் நோயிற்கு அவளே பிணி தீர்ப்பவள்.

மெல்ல மெல்ல அவனை தன்னுள் மூழ்க வைத்து, அந்த இரவில் அவனின் மனதை சாந்தமாக்கினாள் அவள், கலவி இல்லா கூடலும் அழகு தான், மனங்கள் மட்டும் இணைந்து மார்பில் பந்தாடும் போது..

அவனும் அவளும்
காதலும் அன்பும்
இரவும் நிலவும்
என தங்களின் மனங்களை பரிமாறி நித்திரைக்குச் சென்றனர்..

அதியனவள் அடுத்து..

Advertisement