Advertisement

ஸனா அவசர சிகிக்சைப் பிரிவில் இருந்தாள்..

பீவி ஒரு பக்கம் அழுதுக் கொண்டிருக்க, மல்லிகா ஒரு பக்கம் அழுதப் படியிருந்தார்.

அதியன் என்னவென்றே புரியாத நிலையில் தாத்தா அருகில் அமர்ந்திருந்தான்.

வரு வந்த வேகத்தில் யாரிடம் கேட்பது என தெரியாமல் நேராக மகனிடமே சென்று விட்டார்.

“அதியா! என்ன ஆச்சு ஸனாக்கு, எங்க இருக்கா…?” என்று கண்ணீருடன் கேட்டார்.

வகீம் வருவை சமாதானம் செய்ய நினைக்க, முடியாமல் சோழா அருகிலே நின்றார்.

ஷர்தா பாட்டியிடம்”அண்ணி எப்படி இருக்காங்க பாட்டி, டாக்டர் பாத்தாச்சா..?” என்று கேட்டாள்.

பாட்டி”டாக்டர் உள்ள போய் இருக்காங்கடா.. இன்னும் வெளியில் வரலை…”

“அதியா! சொல்லுடா, அவ உண்டாகி கூட நான் வந்து பாக்கலை, நானே வரேன் அத்தைனு சொன்னாளே, இப்படியா ஹாஸ்பெட்டலில் இந்த நிலையில் பாக்க வரனும். அய்யோ! கடவுளே எனக்கு ஏன் தான் இப்படி நடக்குதோ, பெத்தப்பிள்ளை இருந்ததே தெரியாம நான் உயிரோடு வாழ்ந்திருக்கேன்.. உயிரோட இருக்க எனக்கு காரியம் பண்ண மாதிரி நான் செத்து இருந்தா இதை எல்லாம் பாக்காம போய் இருப்பேன்.. என் பிள்ளைனு தெரிஞ்சும் உரிமை இல்லை, வாரிசு வரப்போதுனு அறிஞ்சும் அண்ட முடியல.. இந்த கொடுமைக்கு என்னைய அழைச்சிக்கோ, என் பிள்ளைங்க நல்லா இருக்கனும் கடவுளே” என்று புலம்பினார்.

டாக்டர் வெளியில் வந்தார்.. அனைவரும் எழுந்து என்னவென்று கேட்க நின்றனர்.

நவநீ”டாக்டர்! என் பேத்தி எப்படி இருக்கா..? ஒன்னும் பிரச்சனையில்லையே..?” என்று கேட்டார் நம்பிக்கையாக.

“ஸனாக்கு ஒன்றும் இல்லை, அவங்க ஃபைன். பட் அவங்க கரு தான்…” என்று நிறுத்தியவரை.

“டாக்டர்!” என்றான் அதியன்.

“சாரி! மிஸ்டர் அதியன் உங்க குழந்தையை நீங்க பாக்கவே முடியாது, கரு கலைஞ்சுட்டு, கொஞ்சம் என் கேபின் வாங்க, பேசனும்..” என்று நடந்தார்.

அதியன் அசைவற்று அமர்ந்தான்.. நவநீ
அவன் கையைப் பிடித்து தேற்றினார்.

பீவி”இதுக்கா நான் காத்திருந்தேன் அல்லா!” என கண்ணீர் சிந்தினார்.

வரு”அய்யயோ! இத கேக்கவா நான் வந்தேன்.. அடேய்! அவளை என் கூட அனுப்பி இருந்தா நான் பத்தரமா பாத்திருப்பனே.. என்னடா நடந்தது..? சொல்லி தொலைடா, இன்னும் நீ என்ன எல்லாம் பண்ணுவ அவளை.. உனக்காக எவ்வளவோ விட்டுக் கொடுத்தா, அவளுக்காக கிடைத்ததை கடைசியில் அந்த கடவுளே பறிச்சுட்டானே..” என அதியனை அடித்தார் கன்னா பின்னவென்று.

வகீம் பிடிக்க.. “விடுங்க, இவனை கேக்க ஆள் இல்லைனு தானே இந்த ஆட்டம் போட்டான். தாத்தா தாத்தானு அவரை மட்டுமே நினைச்சானே தவிர ஸனாவை பத்தி யோசிச்சான.. அவரு ஸனாவை வீட்டுக்கு கூப்புட்டு போனதால ஏத்துக்கிட்டான். இல்லைனா..? இவன் எல்லாம் ஒரு மனுசனு அவ காதலிச்சா பாருங்க..” என்றவர், தன் தாயை பார்த்து
“இப்படிபட்டவனை நான் பெத்தேனு ஏன்மா சொன்னீங்க..? எனக்கு இவன் மகனா இருக்க முடியாது.. இவன் ஸனாக்கும் புருசனா இருக்க லாயகில்லை.. தாத்தா கூடவே கட்டிட்டு அழுவட்டும்..” என திரும்பியவர் தன் தந்தை நவநீதத்தைப் பார்த்தார்.

கோபம் கொப்பளிக்க”ஏன்பா! இப்ப சந்தோஷமா உங்களுக்கு, என் வீட்டு வாரிசுப்பா அழிஞ்சது.. இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க…?  இப்ப நிம்மதியா..? அவன் வாழ்க்கையை கெடுத்து அவனோட பிள்ளையும் அழிச்சுட்டீங்க.. இன்னும் ஏன் அவனை மட்டும் மிச்சம் வச்சு இருக்கீங்க…?” என்றார் உக்கிரத்தில்.

“வரு! அவரு என்னடி செஞ்சாரு…? அதியன் வாரிசுனு தெரிந்ததும் ஸனாவை வீட்டுக்கே அழைச்சுட்டு வந்தாருடி அவரை ஏன் திட்டுற.. பாவம் அவரு..” என்றார் பாட்டி கணவனுக்கு துணையாக.. இத்தனை நாள் எதிராக நின்றவர்.

நவநீதம் மனம் உடைந்தது, அன்னத்தை ஏறிட்டுப் பார்த்தார்.

“என்னம்மா..? புருசனுக்கு சப்போர்ட்டா..? அவருக்கு என்னைய தான் புடிக்காது என் பிள்ளை, என் வீட்டு வாரிசு மட்டும் புடிக்குமா…? இது என்ன நியாயமா..? எல்லாத்துக்கும் காரணம் இதோ இவன். டேய்! உன்னால தான் ஸனா கரு அழிஞ்சது… நீ தான்டா பொறுப்பு.. நீ மட்டும் தான்டா பொறுப்பு” என்று அதியனை அடித்தார் கோபம் தீர.

நவநீ அப்படியே அமர்ந்திருந்தார் கல்லாக.

அதியனுக்கு ஏதோ ஒரு உணர்வு தானாக  தோன்ற, அதுவரை மனதில் நடந்த போராட்டங்களில் வலியின் உச்சத்திற்கு சென்றவன், அவரின் கால்களில் விழுந்து அழுதான்..

“நல்லா அடிங்கம்மா, என்னைய இப்படி அடிக்காம விட்டதால் தான் மஸ்துக்கு கஷ்டத்தையேக் கொடுத்தேன்.. நல்லா அடிங்க… நான் செத்துட்டனேனு தானே நினைச்சீங்க, அது உண்மையாகட்டும் அடிங்க.. பாவம் அவ.. நீங்க சொன்ன மாதிரி நான் தான் பாவம் செஞ்சுட்டேன்..” என்று கதறி அழுதான்.

மல்லி மனம் கேளாமல் ஓடிப்போய் அதியனை தாங்கினார்.

“இங்க சத்தம் போடாதீங்க, டாக்டர் அதியன் சாரை வர சொல்றாருங்க..” என ஒரு நர்ஸ் கூறி சென்றார்.

வருக்கு தன்னை அம்மானு அதியன் அழைத்ததை நினைத்து மகிழ்வதா, இல்லை ஸனாக்கு இப்படி ஆனதை நினைத்து வருந்துவதானு தெரியாமல் அவன் முன் அமர்ந்தார்.

அவனை தன்னோடு அணைத்தவர், அவன் நெற்றியில் முத்தம் வைத்து,
வா டாக்டரை பாத்துட்டு வரலாமுனு அவனை எழுப்பினார்.

அவன் கண்களை துடைத்து விட்டு எழ, வரு அவன் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்றார் டாக்டர் அறை நோக்கி..

வகீம் சோழாவை கண் காட்டி கூடவே அழைத்துச் சென்றார்.

ஷர்தா”இங்க வாங்க நீங்க உட்காருங்க” என ஒரு நாற்காலியில் அமர வைத்தாள்.. மல்லிகா உடல்நிலை கருத்தில் கொண்டு..

பீவி ஸனா தெரிகிறாள என அறையின் மிரர் வழியே எட்டிப் பார்த்து புடவையின் முந்தியால் கண்ணீரைத் துடைக்க, ஷர்தா”அத்த! ஸனா அண்ணி நல்லா இருப்பாங்க கவலைப்படாதீங்க.. அவங்களுக்கு என்ன வயசாகிட்டா அடுத்து கண்டிப்பா குட் சிட்டிவேசன் வரும்..” என்று ஆறுதல் செய்தாள்.

நவநீ அருகில் சென்ற அன்னம்”அவ பேசியதை எதும் மனசுல வச்சுகாதீங்க ஏதோ மனவருத்தத்துல பேசுறா. நீங்க ஸனாக்கும், பிள்ளைக்கும் எதும் ஆகனுமுனு நினைக்கவே இல்லை.. எனக்கு தெரியும் அது” என ஆறுதலாக அமர்ந்தார் கணவனோடு.

நவநீக்கு இப்போது தான் புரிந்தது பொண்டாட்டினா இதான். இந்த ஆறுதல் வேற யாரிடமும் கிடைக்காதுனு. இத்தனை நாள் முகம் காட்டிப் பேசாத அன்னம் இன்னைக்கு தனக்கு ஆறுதலா இருப்பது ஏதோ ஒரு பிறவிபலன் அடைந்ததுப் போல் இருந்தது அவருக்கு..

****

“டாக்டர்! ஸனாக்கு இப்ப எப்படி இருக்கு..?” என்று கேட்டார் வரு.

“நீங்க…?”

சோழா”அவங்க தான் ஸனா மாமியார்..”

“ஓ! ஸனாக்கு யூட்ரெஸ் ரொம்ப வீக்கா இருக்கு.. அல்ரெடி  மிஸ்கேரெஜ் ஹேப்பெண்டு.. சோ அதோடு பலம் குறையத் தொடங்கிட்டு.. இப்ப அவங்க யூட்ரெஸ் பதினைந்து வார கருவையே தாங்க முடியாம வெளியே அனுப்பிட்டு..”

“ஸனா உடம்புக்கு பிரச்சனை இல்லையே டாக்டர்..” என்று கேட்டான் அதியன்.

“அவங்க இப்ப ஓகே தான் அதியன், ஆனா எதிர்க்காலத்தில் அவங்க மறுபடியும் கன்சீவ் ஆனா த்ரீ மன்த்ல யூட்ரெஸ் ஸ்டிச்சிங் செய்யனும், அது ஒரு சேஃப்டி பட் ஸனா யூட்ரெஸ் வீக்னெஸ்க்கு ட்வென்டி வீக்ஸ் தாங்கினாலே ஆச்சரியம் தான்.”

“இதுக்கு என்ன தான் தீர்வு டாக்டர்..?” என்று கேட்டார் வகீம்.

“சார்! ஸனாக்கு கருமுட்டை உருவாவதில் பிரச்சனை இல்லை, ஆனால் அதன் வளர்ச்சியை தாங்குவதில் தான் பிரச்சனை.. இதையுமே நான் ஷ்யரா சொல்ல மாட்டேன். சிலருக்கு இந்த மாதிரி நடந்தாலும் அடுத்த குழந்தை பத்து மாதம் வரை கருப்பையில் ஆரோக்கியமா இருந்து பிறந்திருக்கு ஆனால் அது கடவுளின் ஆசிர்வாதம்.. அந்த மாதிரி நடக்க டாக்டரை மீறிய சக்தி கடவுள் பலன் தான்.. ஆனா டாக்டரா நான் சொல்வது இன்னொரு தடவை ரிஸ்க் எடுக்காமல் இப்ப உள்ள டெக்னால்ஜிக்கு போவது சரியா இருக்கும்.. அவங்க மறுபடியும் கன்சீவ் ஆகி, அதுவும் ப்ரீடெர்மில் கலைஞ்சுட்டா அவங்க உடம்புக்கு சரியா விஷயமில்லை.. இனி உங்க விருப்பம்..”

“டெக்னால்ஜினா எப்படி சொல்றீங்க டாக்டர்…?” என்று கேட்டான் அதியன்.

“சரோகேஸி தான் அதியன்.. யூ போத் கேப்புல் ஆப் டு மேக் சைல்டு.. பட் ஸனா யூட்ரெஸ் நாட் ஸ்டென்த் டு கேரி..”

“ம்ம்ம்! ஓகே டாக்டர், நாங்க இத பத்தி அப்புறம் யோசிக்குறோம்.. இப்ப ஸனாவைப் பாக்கலாம..” என்று கேட்டான்.

“ஓ! எஸ்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. நார்மல் வார்டுக்கு மாத்தட்டும்..”

***

டாக்டரை பாத்துட்டு வந்தவர்கள், மற்றவர்களிடம் இதை பற்றி சொன்னார்கள்..

அவரவர் தனி சிந்தனையில் இருக்க, நர்ஸ் வந்து ஸனாவைப் பார்க்க போக சொன்னார்.

சோழா”அதியா! நீ முதலில் போய் பாத்துட்டு, ஸனாவை ஆறுதல் செய்துட்டு வா.. நாங்க அப்புறம் வரோம்” என்றார்.

பீவியும் அதே தான் கூறினார்.

ஸனா கண் முழித்து தான் படுத்திருந்தாள்.

அதியன் உள்நுழைய, அவனை கண்டவள் கண்களில் கண்ணீர் வழிந்தது..

வேகமாக அருகில் சென்றவன் , “நீ எதுக்கு அழுதுட்டு இருக்க, இது எதிர்ப்பாராமல் நடந்தது மஸ்து.. கவலைப்படாத.. நமக்குனு கிடைக்குறது கிடைக்கும்..” என்று அவளின் கைகளைப் பிடித்து ஆறுதல் செய்தான்.

Advertisement