Advertisement

“இல்ல அதியா, நானே கலைக்கப் போயிட்டு உங்க மனசுக்காக திரும்பிட்டேன்  அதுக்காக தான் இந்த தண்டனை எனக்கு.. வேணும் எனக்கு..” என்று கண்களில் நீர் பெருகியது.

“மஸ்து! நான் உன் கூட தானே இருக்கேன். நீ இனிமே எதை பத்தியும் கவலைப்படாத.. இது ஒரு இயற்கையான விஷயம்.. யாரும் பொறுப்பில்லை.. அப்படி பொறுப்புனா நான் தான் உன்னை கவனமா பாத்துக்க தவறிட்டேனு சொல்லனும். குடும்பம் குடும்பமுனு உன்னை பலி ஆடாக சுற்ற விட்டேன்.. இப்ப நம்ம பிள்ளை பலியாகிட்டு..” என அவன் கண்களை  கலங்கி நீர் சொட்டாக அவளின் கைகளில் பட்டது.

“அதியா!”

“ஆமா! வெளியில் உன் வரு அத்தை என்னை அடி அடினு அடிச்சுட்டாங்க மஸ்து.. நான் தான் உன்னோட நிலைக்கு காரணமுனு தெரியுமா..?”

“என்ன சொல்றீங்க அதியா….? நீங்க எப்படி காரணம்..? அவங்களுக்கு என்ன பைத்தியமா, வரட்டும்..” என திட்டியவள், நர்ஸ் நுழைய.

“நர்ஸ்! வெளியில் இருப்பவர்களை வரசொல்லுங்க” என்றான் அதியா.

இருவரும் சமாதானம் ஆக. அனைவரும் நுழைந்தனர்..

நவநீயும் வந்தார்..

“ஸமா!” என்று பீவி அவளிடம் அழுகையை ஆரம்பிக்க.

“நான் சொல்லி தானே அழைச்சுட்டு வந்தேன் பீவி அண்ணி.. அமைதியா இருங்க..” என்ற வரு, “ஸனா! ஓகே வா.. நாளைக்கே போயிடலாம் வீட்டுக்கு ப்ரீயா இரு..” என்றார்.

“வரு அத்த! எதுக்கு அதியனை அடிச்சீங்க…? அவர் எப்படி இதுக்கு எல்லாம் காரணமாவார்.. நானே தான் இந்த குழந்தையை கலைக்க வந்தேன் ஆனா அவருக்காக தான் எதுவும் செய்யாமல் திரும்பினேன். ஆனா இப்ப அதுவா போயிட்டு அதுக்கு அதியன் எப்படி பொறுப்பு.. நீங்க எப்படி திட்டலாம், அடிக்கலாம்..?” என்று கோபமாக கேட்டாள்.

அனைவருக்குமே மனதில் இருந்த பாரம் போய், ஸனாவின் காதல் அதியன் மேல் எந்தளவு இருக்குனு புரிந்தது..

வரு”அதுக்குள்ள சொல்லிட்டீயா..? அவ என்னமோ நான் எதிரி மாதிரி பேசுறா அதியா…?”

அதியன் ஸனாவைப் பார்த்தான், நீயே பேசுனு..

“அவர் கிட்ட எதுக்கு கேக்குறீங்க…? நானே சொல்றேன். அதியனுக்கு எதிரினா எனக்கும் தான்.. அது யாரா இருந்தா என்ன.” என்றவளை கண்டு அதியன் சிரித்தான் லேசாக.

ஷர்தா”ஆமா! ஆமா! அப்ப அதியன் அண்ணா நீங்களே சொல்லிடுங்க உங்களுக்கு யார் எல்லாம் எதிரினு…?”

அதியன்”எனக்கு எதிரி எல்லாம் இல்லை ஷர்தா..” என்றான் மெதுவாக.

தனி தனியாக ஸனாவோடு பேசிக் கொண்டிருந்தனர்..

அவளின் கருப்பபை பலவீனம் பற்றி, அதியனே சொல்லட்டும் என மற்றவர்கள் யாரும் சொல்லவில்லை..

அடுத்த நாள் டாக்டர் செக் அப் செய்ய வந்தார்.. அனைவரும் வெளியில் இருந்தனர்..

“ஸனா! ஆர் யு ஃபீல் ஓகே….?”

“எஸ் டாக்டர்.. எனக்கு ஏன் இப்படி ஆனது..?”

“உனக்கு யூட்ரெஸ் வீக்னெஸ் ஸனா.. மற்றது பற்றி அதியன் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க…”

“ம்ம்ம்!” என்று அமைதியானாள்.

வீட்டிற்கு போகலாம் என சொல்ல, ஸனாவை ரெடி செய்தனர்.

இதற்கிடையில் பாரி, சேரர், பாண்டியன், அதியனின் தங்கைகள்.. அச்சு, அஜி எல்லாம் ஸனாவைப் பார்த்து சென்றனர்.

நவநீயும் வீட்டிற்கே செல்லாமல் இருக்க, அதியன் கூட போயிட்டு வாங்கனு சொல்லியும் கேட்கவில்லை.. யாரிடமும் பேசவில்லை.

ஸனா கிளம்பும் நேரத்தில்.. நவநீ
“ஸனா! உனக்கு நிறைய நான் பாவம் பண்ணி இருக்கேன் அதுக்காக மன்னிப்புக் கேட்டுக்குறேன்..”

“தாத்தா! என்னது இது எல்லாம். விடுங்க அது எல்லாம் முடிஞ்சுட்டு..”

“ஆமா! தாத்தா இனி பழைய விஷயங்கள் பேச வேண்டாம்..” என்றான் அதியன்.

“ஆமா அதியா! இனி புது விஷயங்கள், புது வாழ்க்கை.. உனக்கு..”

“என்ன தாத்தா சொல்றீங்க..?”

“ஆமா அதியா! இப்ப எங்க கிளம்புற ஸனாவை கூட்டிட்டு…?”

“நம்ம வீட்டுக்கு தான்”

“அது இனி உனக்கு சொந்தமான வீடு இல்லை. பாரிக்கு சொந்தமான வீடு. உனக்கு தான் நான் எதுவுமே கொடுக்கலையே..”

“அதுக்கு என்ன தாத்தா.. நான் சம்பாதிப்பேன்.. எனக்கு பிரச்சனையில்லை…”

“நீ சம்பாதிப்ப ஆனா அந்த வீட்டில் எப்படி நீ ஸனாவோடு தங்க முடியும்..?”

அதியன் ஸனாவைப் பார்த்தான்..

மற்றவர்களும் புரியாமல் பார்த்தனர்.

சேரர்”அப்பா! அதியனுக்கு நம்ம வீட்டில் இடம் இல்லைனு யாரு சொன்னா..?” என்றார்.

“அப்படியில்லை சேரா.. இருக்க வேண்டிய இடத்தில் இருந்தா தான் அவரவருக்கு மரியாதை அந்த காலத்திலே சொல்லி இருக்காங்க அது என் மண்டைக்கு இப்ப தான் எட்டுது.. அதியனுக்கும் அந்த மரியாதை சரியா கிடைக்கனுமுனா அவன் அவனோட அம்மாவோட போகட்டும்.. அதான் சரி..”
என்றார்.

“அப்பா! நான் நேத்து பேசியது தப்பு தான்.. அதிகமா பேசிட்டேன். அம்மா எனக்கு புரிய வச்சுட்டாங்க. என்னைய மன்னிச்சுடுங்கப்பா.. அதியனுக்காக தான் நீங்க மாறுனீங்க அது எனக்கும் தெரியும். ஆனா நேத்து ஏதோ ஒரு ஆதங்கத்தில் அப்பிடி பேசிட்டேன்..” என்று கெஞ்சினார் வரு.

“உன் அம்மா அன்னைக்கு உனக்காக சப்போர்ட் பண்ணி என்னைய எதிர்த்தா.. அதே என் பொண்டாட்டி உன்னைய எதிர்த்து எனக்கு சப்போர்ட் பண்ணி இருக்கா.. அவ ஒரே மாதிரி தான் இருக்கா. யாரையும் விட்டுக் கொடுக்காம ஆனா நான் தான் பொண்டாட்டி, புள்ளைங்க, பேரன், ஏன் கொள்ளுப்பேரக்குழந்தை வரை விட்டுட்டேன் புரிஞ்சுகாம.. வரட்டு கௌரவம்.. இனி நான் என் பொண்டாட்டி சொல்றதை தான் கேக்கப் போறேன்.. அவ ஆசைப்படி தான் நடக்கப்போறேன்.. சொல்லு அன்னம் நான் இப்ப என்ன செய்ய…..” என்று கேட்டார் நவநீ.

அவருக்கு சிறிது வெட்கம் வர, “ஆமா! காலம்போன கடைசியில் கேக்க வந்துட்டாரு.. எப்ப  அதியனை அவன் அம்மா கூட போக சொன்னிங்களோ அதுவே எனக்கு போதும்..”

“அப்பா!” என்று ஆரம்பித்த சேரரிடம்.

“சேரா! நம்ம வீட்டில் கடைசிப் பேத்தி கல்யாணம் வரை எல்லாரும் ஒன்னா தான் இருக்கனுமுனு தான் உயில் எழுதி இருக்கேன்.. அதனால அந்த வீட்டில் அதியன், ஸனா தங்க வேண்டாம். அவன் ஆளப்பிறந்தவன் இருக்க வேண்டிய இடம் என் பொண்ணு வரலெட்சுமியோட.. என் மாப்பிள்ளை வகீமோட.. அங்கயே இருக்கட்டும். எனக்கு என்ன இனி எங்க வேணாலும் இருப்பேன்.. ஆனா  சோழா- மல்லி உங்களுக்கு தான் நான் என்ன செய்றதுறு தெரியலை.” என்று வருந்தினார்.

“மாமா! அதியன் வரலெட்சுமியோட போறது தான் சரி, பாசமுனு சொல்லி அவனை மறுபடியும் அவமானப்பட விட எங்களுக்கு மனசில்லை..” என்றார் மல்லி.

அதியா”தாத்தா! ஆனா..” என்று ஆரம்பித்தவனை.. “நான் சொல்லிட்டேன் அதியா நீ போ.. என் பொண்ணுனு நானே ஏத்துக்கிட்டேன் நீயும் ஏத்துக்க அவளை அம்மாவ..” என்றார்.

வரலெட்சுமி”அப்பா! என்னைய மன்னிச்சுடுங்கப்பா” என்று அவர் கையைப் பிடித்து கெஞ்சினார்.

“நான் ஒரு அப்பாவ செய்ய கூடாததை செஞ்சேன்.. அதுக்கு எனக்கு பரிகாரமாக தான் உன் பையனை வளர்க்கும் பொறுப்பு கிடைச்சிருக்கு.. இன்னைக்கு அவனை உன் கிட்ட ஒப்படைச்சுட்டேன்.. அழைச்சுட்டுப் போ..” என்றார் அவரின் தலையை தடவி.

“மாமா! நீங்களும் வாங்க வீட்டுக்கு..” என்றார் வகீம்.

“அதுக்கென்ன மாப்பிள்ளை, குடும்பமா வரோம்… உங்க பையனை அழைச்சுட்டுப் போய் அறியணையில் உட்கார வைங்க.. உங்க இளவரசியை பொண்ணு கேட்டு அவன் காலடிக்கு வரட்டும் அந்த பேச்சு பேசின வாய் எல்லாம். நான் வர வைக்குறேன்.. நீ போங்க” என்றார்.

பாட்டி சிரித்தார், ஷர்தாவைப் பார்த்து..

“தாத்தா! நான் உங்க குடும்பத்துக்கு வந்தா உங்க எல்லாருக்கும் பிரச்சனை தான் என் அம்மாவை பிரிச்சு வச்சத்துக்கு.. பாத்துகோங்க.. சொல்லிட்டேன்..” என்றாள் அவள்.

“அது தான் வேணும். நீ வந்து ஆள தானே அந்த ஆண்டவன் கணக்குப் போட்டிருக்கான்.. என் மகளுக்கு நான் பண்ணின பாவத்துக்கு ஒரு பாதி அதியனை வளர்த்தோம். அடுத்து நீ .. எங்களுக்கு சந்தோஷம் தான்..” என்றார்.

அனைவரும் சிரிக்க.. அதியனை யோசனையோடு ஸனாவை பார்த்தான்.

அவளோ கண்களால்’போகலாம் அதியா’ என்றாள்.

அன்று அதியன் கண் அசைவிற்கு ஸனா வீட்டை விட்டுப் போனாள்.. இன்று அவனுக்கு ஸனாவின் கண் அசைவே போதும்  அதை மீறப் போவதில்லை சந்தோஷமாக தலையை ஆட்டினான்..

***

இரவுப்பொழுது..

அந்த அறை புதிதாக இருந்தது இருவருக்கும்.

அதியன்”இங்க என்னவோ புதுசா இருக்கு மஸ்து…”

“ம்ம்ம்! புது இடமுல….ஆமா நீங்க ஏன் வரு அத்த கூட சரியா பேச மாட்டேனுங்குறீங்க… ஆனா வகீம் மாமா கிட்ட பேசுறீங்க..”

“அது தெரியலை, அவங்க கொஞ்சம் டெரரா தெரியுறாங்க, ஆனா அப்பா கொஞ்சம் ப்ரண்ட்லியா தோணுது..”

“ஆமா அதியா, மாமா செம ஜாலி டைப். ஆனா அத்தை சரியான டெரர் தான்..  உங்க தாத்தாக்கு தப்பாத பொண்ணு”

“ஹலோ! என்ன சைடு கேப்பில் கிண்டல் பண்றீயா…? அவங்க எனக்கு அம்மா மேடம்..”

“இருக்கட்டுமே.. எனக்கு மாமியார்.. அவ்ளோதான்..”

“ம்ம்ம்! இங்க புது இடம் ஆனா மனசு ப்ரியா இருக்கு மஸ்து..”

“இருக்காத, குருவி எங்க பறந்தாலும் கூட்டுக்கு வந்தா தான் நிம்மதியாகும்..”

“ம்ம்ம்! உனக்கு பெயின் எதும் இல்லையே…?” என்று அவளை தன்னோடு அணைத்தான்.

“இப்ப இல்ல, ஆனா மனசு தான் வலிக்குது.. நமக்கு ஏன் இப்படி நடக்கனும்.. நான் டாக்டர் கிட்ட பேசினேன் அதியா இங்க வந்த பிறகு.. அவங்க சொன்னாங்க..” என்று அதுவரை சந்தோஷமாக பேசியவள் கண்களில் கண்ணீர் பெருகியது.

“மஸ்து! முதலில் அழுவதை நிறுத்து.. கடவுளுக்கு தெரியும் நமக்கு எப்ப குழந்தை கொடுக்கனுமுனு. எனக்கு இந்த டெக்னால்ஜி மீது எல்லாம் நம்பிக்கை இல்லை… கொஞ்சம் நாள் ஆகட்டும் நீ உடம்பை சரிப்பண்ணு, உன் கமிட்மென்ட்ஸை முடி. நம்ம நம்மோட வேலையில் கவனத்தை செலுத்துவோம். அப்புறம் யோசிப்போம்.. எதையுமே நம்ம பிளான் பண்ண முடியாது.. காலப்போக்கில் என்ன நடக்குதோ அதான். நம்ம என்ன நடந்தாலும் ஏத்துப்போம். எனக்கு நம்பிக்கை இருக்கு.. ஏதோ ஒரு நல்லதுக்குனு நினைச்சுப்போம் இப்ப நடந்தது.. ஒரு வேளை குழந்தைக்கு சரியான குரோத் இல்லாமல் இருந்திருக்கலாமுனு நினைச்சி அதை மறப்போம். நம்மளா எதும் செய்யலை மஸ்து தானா நடந்தது..
நீ நார்மல் ஆகு நான் இருக்கேன் இனி நம்ம லைஃபை ஒவ்வொரு விஷயத்தையும் ரசிச்சு வாழலாம். குழந்தை பற்றிய முடிவை கடவுளிடம் விட்டுவிடுவோம். ஓகேவா…”

“ம்ம்ம்ம்! தேங்க்ஸ் சோ மச் அதியா” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்..

“ஐ லவ் யூ மஸ்து.”

“ஐ லவ் யூ..” என்று அவன் மார்பில் சாய்ந்தாள்.

அதியன்- ஸனா இருவருக்கும் வாழ்க்கை ஏனோ உடனுக்குடன் ஒரு அதிர்ச்சியை அளித்துக் கொண்டே இருந்தது… அனைத்தையும் கடந்து வந்தார்கள்..

சில வருடங்கள் கடந்தது…

அதியனவள் அடுத்து….

(ஹாய் ப்ரண்ட்ஸ்…

அப்ப கிளைமேட்ஸ் அப்படி தான..? இப்படி தான…?  கேட்டா…😀😃😃😃 ஹிஹி நீங்க  நினைப்பதற்கு நான் பொறுப்பில்லை.. ஏனா நீங்க நினைப்பதற்கு ஆப்போஸிட்டா தான் நான் எழுதனுமுனு நினைப்பேன்.. 😄😃😃😀😀)

Advertisement