Advertisement

சோழா- மல்லிக்கு அதியன் தங்களோடு இருந்தாலும் வீட்டிற்குள் நடக்கும் கண்ணாமூச்சியில் அவன் மனது பாதிக்குதுனு புரிந்ததால், அதுவே அவர்களுக்கு மனக்காயமாக மாறியது.

இந்த மாதிரி சூழ்நிலையில் தான் நவநீதம் அன்று ஒரு மீட்டிங்கைப் போட்டார் வீட்டில்.

அனைவருமே இருந்தனர், ஒட்டு மொத்த குடும்பமும்.. தேவியின் இரு மகள்கள், நவநீயின் இரண்டாவது மகள் ராஜி குடும்பமும்..

வரு குடும்பத்தை தவிர, மற்றவர்கள் இருந்தனர்.

வக்கீல் வருகை தர, அனைவருக்குமே ஓரளவு விஷயம் புரிந்தது.

“நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்.. எல்லாருக்கும் முன்னாடி இதை சொல்ல தான் உங்க எல்லாரையும் வர சொன்னேன்” என்றார்.

“என்ன மாமா வக்கீல் எல்லாம் வந்திருக்கார்..? அப்படி என்ன முக்கியமானது” என்று கேட்டார் ராஜியின் கணவர் லோகநாதன்.

“அதை சொல்ல தான் காத்திட்டு இருக்கேன் மாப்பிள்ளை இருங்க..” என்றவர்.

“இந்த வீட்டு சொத்துக்களை பிரிச்சுட்டேன்..”

“அப்பா! என்ன அவசரம்.. ?” என்றார் சேரர்.

“அவசரமில்லை ஆனால் அவசியம் இருக்கு.. கொஞ்ச நாளாவே வீட்டில் சலசலப்பு தெரியுது.. அதான் பிரிச்சுட்டா அவங்கவங்களுக்கு தெளிவாகிடுமுல..”

“அது எல்லாம் எந்த தெளிவும் வேணாம்” என்றார் பாண்டியன்.

சேரருக்கும், பாண்டியருக்கும் தான் அவங்கவங்க பொண்டாட்டிப் பற்றி தெரியுமே.

“நீங்க படிங்க வக்கீல்.” என்றார் நவநீ.

அதியன் அருகில் தான் ஸனா நின்றாள்..

“அதியா! எதும் பிரச்சனையாகிடாதே..?”

“ஆகக்கூடாது மஸ்து.. அதுவும் என்னால..”

“ம்ம்ம்!”

“நவநீ குரூப்ஸ் அனைத்தும் அதியன் பெயரில் தான் ரன் ஆகும்….” என்று ஆரம்பிக்கும் போதே அதியனுக்கு வியர்த்தது, இது கண்டிப்பா எங்கோ போய் முடியப் போகுதென்று.

ஸனா அவனின் கையைப் பிடித்து ஆறுதலாக”நீங்க எதும் பேசாதீங்க. எல்லாம் படிச்சு முடியட்டும்..” என்றாள்.

“நவநீ சில்க்ஸ் பாரி பார்த்துக் கொள்வார், கார்மென்ட்ஸ் கம்பேனி பாண்டியன் பார்த்துக் கொள்வார், நவநீ டிரான்ஸ்போர்ட் அதியன் பார்த்துக் கொள்வார்.. வீட்டிற்காக வாங்கிய நகைகள் அனைத்தும் வீட்டின் மருமகள்கள், மகள் ராஜி, மகன், மகள் வழிப் பேத்திகள், சம பங்கீடு அதியன் மனைவி உட்பட.. பாரம்பரிய நகைகள் அன்னம் பாட்டியின் பொறுப்பு.. அவர் விருப்பம் அது யாருக்கு கொடுப்பதுனு..
ஐந்து இடங்களில் இருக்கும் சொகுசு பங்களாக்கள் மூன்று மகன்களுக்கும், மகள் ராஜிக்கும்.. மீதம் ஒன்று அதியனின் வாரிசுக்கு.. அசையா சொத்துகள் எல்லாம் மூன்றாக பிரிக்கப்பட்டது.. பண்ணை வீடு நவநீ மற்றும் அன்னம் தம்பதிகளுக்கு உரிமையானது.. இப்ப இருக்கும் வீடு அனைவருக்கும் பொதுவானது…” என்று படித்து முடித்தார்.

முகங்கள் எல்லாம் மாறுதலில் இருந்தது..

“என்ன எல்லாருக்கும்  புரிந்ததா படிச்சது…?” என்று கேட்டார் நவநீ.

“மாமா! எல்லாம் சரி, அதியன் இந்த வீட்டுப் பையனே இல்லை, அப்புறம் எப்படி நவநீ குரூப்ஸ் அத்தார்டி அவர் தலைமையில் இருக்கு..? அப்ப என் பையன் ரஞ்சித்தும் உங்க மக வயித்துப் பையன் தானே..?” என்று கேட்டார் லோகநாதன்.

ராஜி”ஏங்க! இது நமக்கு சம்பந்தம் இல்லாதது..”

“எது, உன்  அக்கா பையனுக்கு கிடைக்கும் உன் பையனுக்கு உரிமை இல்லையா…?”

“மாப்பிள்ளை! அதியன் என் இரண்டாவது மகனின் பையன்.. அதை மட்டும் மனசில் வைங்க…”

“சரி மாமா! அப்ப எங்க பையன் உங்க மூத்த மகனின் சொந்த ரத்தம்.. அவனுக்கு  இல்லாத பொறுப்பு வீட்டை விட்டு வெளியில் போன ஒருத்திக்கு பிறந்தவனுக்கு கொடுப்பீங்கனா..? நான் எதுக்கு இந்த வீட்டுக்காக வாரிசு பெத்தேன்..” என்றார் தேவி.

“அம்மா!” “தேவி!”என சேரர், பாரி அழைப்பு எல்லாம் அவர் காதில் விழவில்லை.

“நான் இப்ப பேசனும்.. நீங்க எல்லாம்  அமைதியா இருங்க..” என்றார் ஒரே வார்த்தையாக தேவி.

“நான் என்ன  நடக்க கூடாதுனு நினைச்சனோ அது நடந்துட்டு இருக்கு மஸ்து..” என்ற அதியன,

“தாத்தா!” என்றழைக்க.. “அதியா! நான் சொல்லும் வரை நீ வாயைத் திறக்க கூடாது..” என்றார் அழுத்தமான வார்த்தையாக.

“எல்லாரும் கேளுங்க இந்த வீட்டில் இருக்கும் அந்தஸ்து என்னோட சொந்த உழைப்பில் ஆரம்பமானது, அதை யாருக்கு எல்லாம் எப்படி பிரிச்சுக் கொடுக்கனுமுனு தெரியும், என் விருப்பம்..” என்றார்.

“நல்லா இருக்கு மாமா உங்க நியாயம்.. அப்ப நானும் என் வீட்டுகாரரும் மட்டும் விட்டுக்கொடுக்கனுமா…? தேவி அக்கா  பாரியை வச்சு சண்டைப் போடுறாங்க நான் யாரை வச்சுக் கேக்குறது.. ?” என்றார் மாலினி.

“நண்டு குஞ்சு எல்லாம் கொளுத்தா வலையில் தங்காதாம்.. இந்தா வந்துட்டுல வெளியில்.. இனி அது எப்படி வலைக்குப் போகும். இரையாகி தானே ஆகனும்..” என்றார் பலமாக இழுத்தப்படி பாட்டி.

“அத்த! எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான்.. இப்படி என் மகனை எல்லார் கிட்டையும் வசைப்பாட வச்சுட்டு பழமொழி சொல்லி கேலிப்பண்றீங்களா…?” என்று தன் மாமியாரை வசைப்பாடினார் மல்லிகா.

“ஏன் அதான் உன் வளர்ப்பு மகனை அரியணையில் ஏத்திட்டாரே இந்த பெரியவர், நீ எதுக்கு நடிக்குற மல்லிகா..” என்றார் தேவி.

“இதான் முடிவு.. சேரா, சோழா, பாண்டியா சொல்லுங்க…” என்றார் நவநீ.

“அப்பா! எங்களுக்கு சம்மதம் தான்..” என்றனர் சேரர், பாண்டியனும்.

“அப்பா! எனக்கு என்ன கொடுத்து இருக்கிங்களோ அது போதும் அதியனுக்கு அதுக்கு மேல வேணாம். அவனுக்காக தனியா ஒதுக்கினா தானே சண்டை.. எனக்கு இந்த வீட்டில் பங்கு இருக்குல.. அது பிள்ளைக்கும், பொண்ணுக்கும் போகட்டும்.. ” என்றார் சோழா.

அதியனுக்கு சற்று நிம்மதியானது மனம்.

“ஏன் மாமா! இப்ப தான் புரியுது எனக்கு, உங்க மூத்தப் பொண்ணு வரலெட்சுமிக்கு நேராக் கொடுத்தா நாங்க ஒத்துக்க மாட்டமுனு அதியன் மூலமா கொடுக்குறீங்களா..? அது என்ன ஒரு பங்களா அதியன் வாரிசுக்கு அப்ப வரு வீட்டு வாரிசு உங்கப் பொண்ணு வீட்டு பேரப்பிள்ளைக்குனு சொல்லுங்க.. பொண்ணே இல்லைனு கருமாதி பண்ணிட்டு, அவ பெத்தப் பிள்ளையை நடுவீட்டில் வச்சு பட்டாபிகேஷம் பண்ணுவீங்க நாங்க வேடிக்கைப் பாக்கனும், அதுக்கு அவளை உள்ள கூப்புட்டு விருந்து வைங்களே.. எதுக்கு இந்த நாடகம்…” என்றார் தேவி.

மாலினியும் அதுக்கு ஒத்து ஓதினார்.

நவநீ அனைத்தையும் அமைதியாக கேட்டார்.

சேரர் தேவியை அடிக்கப் பாய்ந்தார்.

அவரை தடுத்தார்கள் சோழரும், பாண்டியனும்.. அதியனும் ஓடிப்போய்.

“பெரியப்பா என்ன செய்றீங்க…?”

“நீ போ அதியா இவளுக்கு பணப்பேய் போட்டு ஆட்டுது.. இத்தனை வருசம் இங்கிருந்த நீ விரோதி மாதிரி தெரியுற.?” என்று வருந்திய சேரர்.

“ஆமான்டி! நல்லதோ கெட்டதோ வரு இந்த வீட்டுப்பொண்ணு ராஜிக்குப் போற மாதிரி அவளுக்கும் பங்கு போகனும். அதை அப்பா அதியனுக்கு கொடுத்து இருக்கார், உனக்கு என்ன அதில்.. அவன் தான் இந்த மொத்த சொத்தையும் நிர்வகிப்பான்.. எனக்கும் என் புள்ளைக்கும் சம்மதம்.. உன்னைய கேக்க அவசியம் இல்லை..” என்றார் சேரர்.

“அப்பிடி சொல்லுங்கப்பா!” என்றான் பாரி.

“என்னப்பா பேசுறீங்க….? அதுக்கு அத்தையை வீட்டில் கூப்புட்டு பாசத்தைக் கொட்ட வேண்டியது தானே எதுக்கு தாத்தா ரெட்டை வேஷம் போடுறார்.” என்று தன் தாயிக்கு சப்போர்ட் செய்தனர் பார்கவி, ராகவி.

“ராகவி! அன்னைக்கு உன் புருசன் வாங்கின பணத்துக்கு ரெடிப் பண்ணிக் கொடுத்ததுக்கு  தாத்தா கிட்ட அறை வாங்கியது அதியன். நீ வாயை மூடிட்டு இரு” என்றார் சேரர்.

அவளின் கணவன் அவளை முறைத்தான், வேடிக்கை மட்டும் பாருனு.

“சரி மாமா! அப்ப உங்க மகள் வருவை கூப்புட்டு இந்த சொத்தை நேராக் கொடுங்க போதும் உங்க நாடகம்” என்றார் மாலினி.

“அப்பா! எங்களுக்கு அம்மா இந்த வீட்டில் இல்லைனாலும் பரவாயில்லை அவங்களை வெளியில் அனுப்பிடுங்க” என்றனர் சைந்து, சாரு..

“அதை தான் செய்யப் போறேன் இன்னொரு தடவை வாயைத் திறந்தா.” என்றார் பாண்டியன்.

“அடியேய் பசப்பிகளா! என் மக ராணியாட்டம் வாழ்ந்துட்டு இருக்கா.. இந்த சொத்து எல்லாம் அவ கால் செருப்பளவு தான்.. ஒன்னுமே இல்லாம போனாலும் என் பேரன் அந்த வீட்டில்  அதிபதி.. அது தெரியாம பேசுறாள்க.. ஏய் கிழவாடி! நான் சொன்னேன்ல சொத்தைப் பிரிச்சுக் கொடுத்து பாத்தா தெரியும் குடும்பத்தின் லட்சணமுனு.. இந்தா புளிப் போட்டு விளக்கினாப்ல பளிச்சுனு தெரியுதா…?” என்றார் பாட்டி.

“சரி! எல்லாரும் பேசியாச்சா…?”

“எங்களுக்கு உடன்பாடு இல்லை” என்றனர் தேவி, மாலினி, லோகநாதன், பார்கவி.

அமைதியாகியது அந்த இடம்….

அதியன்”தாத்தா! உங்களோட அன்பு மட்டும் போதும் எங்களுக்கு எதுவும் வேணாம்..” என்று ஸனாவைப் பார்த்தான்.

“ஆமா தாத்தா! உங்களுக்கு அதியன் மேல எவ்வளவு பாசம்  இருக்குனு என்னைய இந்த வீட்டில் அழைச்சுட்டு வந்து காமிச்சுட்டீங்க.. இப்ப சொத்துக்கு அதிபதி ஆக்கிதான் காட்டனுமுனு இல்லை.. ப்ளீஸ் எதுவுமே வேணாம்..” என்றாள் ஸனா.

“ம்ம்ம்! பரணி அந்த ஃபைலைக் கொடு..”

பரணி நீட்டினார்..

“வக்கீல்! இதை படிங்க” என்றார்.

வக்கீல் ஆரம்பித்து… படித்து முடிக்கவும் அனைவரின் முகமும் அதிர்ச்சியாக..

ஏனா இதான் உண்மையான பாகப்பிரிவனை…. பாரி தலைமையில் சொத்து.

அதியன், ஸனா மகிழ்ந்தனர். பாட்டி இளக்காரமாக பார்த்தார் மருமகள்களை.

அதியனுக்கும், ஸனாவுக்கும் நவநீ எதுமே கொடுக்கவில்லை.. மற்றவர்களுக்கு மட்டுமே பங்கிடப்பட்டது.

“ரொம்ப தேங்க்ஸ் தாத்தா!” என்று நவநீயைக் கட்டிப்பிடித்து நிம்மதி பெருமூச்சு விட்டான்.

“நீ சாதரண ஆள் இல்லைடா, இதுக்கு எல்லாம் மேல நீ சம்பாரிக்கும் திறமை படைத்தவன் இந்த பணம், கம்பேனி, நகை எல்லாம் எதுக்கு..” என்றார் பெருமையாக தாத்தா.

“அப்பா! எனக்குனு வந்ததை நான் பையனுக்கு கொடுப்பேன அதை யாரும் கேள்வி கேட்க முடியாது” என்றார் சோழர்.

“அது உன் முடிவு சோழா.. என் வேலை முடிஞ்சுட்டு….” என்றார் நவநீ.

மகிழ்ச்சியாக சிரித்த ஸனா, அதியன் கையைப் பிடித்து ஆறுதலாக நின்றாள்.

“ஐ  ஆம் ஆல்சோ ஹேப்பி மஸ்து..”
என்றவனிடம் தாத்தா.

“அதியா! இனி நீ சுதந்திரப் பறவை உன் பொண்டாட்டியோட எங்க வேணா போ, உன் வாழ்க்கை.. நான் உன் கூடவே இருப்பேன் சாகும் வரை..” என்று கட்டிப்பிடித்தார் பேரனை.

ஸனாக்கு ஏதோ ஒரு உணர்வு வர, அடிவயிற்றில் கை வைத்து.. “ஆ!”என்று பிடித்தாள்.

அதியன் அவளின் கையைப் பிடித்து
“என்ன மஸ்து..?” என்றான் பதறியப்படி.

“அதியா! வயிறு வலிக்குது.. ரொம்ப..” என்று அவன் மேல் சாய்ந்தாள்.

அடுத்து அதியன், நவநீ, பாட்டி, சோழா, மல்லி இருந்தது மருத்தவமனையில்…

ஸனா எமெர்ஜென்ஸியில் இருந்தாள்..

பீவி அலறி அடித்து ஓடி வந்தார்.. வருக்கு விஷயம் பீவி மூலமாக தெரிய வகீம், ஷர்தா வந்து சேர்ந்தனர்..

அதியனவள் அடுத்து..

Advertisement