Advertisement

மேடையில் நின்ற இருவர் இசை வெளியீடு நிகழ்ச்சிற்கு அனைவரையும் வரவேற்க தயாராகினர்.

அதில் ஒரு பெண், ஒரு ஆண் என இருவர் தொகுப்பாளர்களாக ஒலிப்பெருக்கி முன் நின்றார்கள்.

அதியனிற்கு அந்த பெண் தொகுப்பாளரைப் பார்த்ததும் ஸனாவுடனான முதல் சந்திப்பு நிகழ்ச்சி நினைவு வந்தது.

“ஸனா..”

“என்ன அதியன்..?” என்று லேசாக திரும்பி அவன் அருகே சென்றாள்.

“அந்த ஹோஸ்டர் யாருனு தெரியுதா…?”

ஸனா மேடையைக் கவனித்தாள்.

பிறகு சிரித்து”ம்ம்ம்! நல்லாவே தெரியுது, உங்களை எப்ப ஹீரோவா நடிக்கப் போறீங்கனு கேட்டு, என்னைய ஹீரோயினா போட சொல்லி, அவங்களுக்கும் ரோல் கேட்ட பொண்ணு தானே” என்று கூறினாள்.

இருவரும் சிரிக்க, இயக்குநர் அப்போது தான் வந்தார் அரங்கிற்குள்.

அவர் வந்ததும் ஸனா எழுந்து கை கொடுத்தாள்..

அதியனும் கை கொடுக்க,  அவரும் “ஹாய் அதியன்! எப்படி இருக்கீங்க..? ஹேப்பி வெட்டிங் விஸஸ்..” என்று கூறியவர், அதியன் அருகே அமர்ந்தார்.

“தேங்க்ஸ்!” என்றான் அதியன்.

“ஸனா! வெட்டிங் தான் சீக்ரெட்டா முடிச்சுட்டீங்க, அட்லீஸ்ட் ரிசப்சன் வைக்காலமே நம்ம இன்ட்ரெஸ்டி  மக்களுக்காக” என்று சிரித்தார் இயக்குநர்.

ஸனா என்ன சொல்வதென்று தெரியாமல் அதியனைப் பார்த்தாள்.

“அதுக்கென்ன மிஸ்டர் விதுன் கண்டிப்பா, நடத்திடலாம்” என்றான் அதியன்.

தொகுப்பாளர் ஆரம்பிக்க, புரொடியூசர் சரியாக நுழைந்தார்.

அனைவரையும் வணங்கிவிட்டு, அதியன் வருகையை எதிர்ப்பாராததால் அவனிடம் சென்று சிலவற்றை பேசிவிட்டு தன் இருக்கைக்கு சென்றார்.

ஸனாவிற்கோ அதியனின் மீட்டீங் நினைவில் இருக்க, மெதுவாக அவன் பக்கம் சாய்ந்து”அதியா! நீங்க கிளம்புங்க மீட்டீங் லேட் ஆகப் போது..” என்றாள்.

“ம்ம்ம்! நானும் அதுக்கு தான் பாத்துட்டு இருக்கேன் ஸனா, பட் எப்படி போறதுனு தெரியலை” என்றான்.

ஸனா சுற்றிப் பார்த்தாள்.

அதற்குள் தொகுப்பாளர்”ஹாய் மக்களே! இன்னைக்கு இந்த பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் வணக்கம்..” என்று ஆரம்பித்தார்.

அதியன் போனுக்கு மெசேஜ் வர, தொடர்ந்து காலிங் விடாமல் வந்தது.

பாரியும், பரணியும் மாறி மாறி அழைத்தனர்.

அதியன் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் எழப் போன நேரம், இயக்குநர்
“அதியன்! அப்புறம் உங்க கிட்ட பேசனும், நீங்க ஃபங்சன் முடிஞ்சதும் டின்னரில் மீட் பண்ணலாம்” என்றார்.

“யா! ஸ்யுர் விதுன்.” என்று எழாமல் அமர்ந்தான்.

“ஸனா இந்த படத்தில் நல்ல நடிப்பு அதியன், வந்த புதிதில் இருந்த குழந்தை தனம் எல்லாம் மாறி முழு அனுபவசாலியான நடிகையா மாறிட்டாங்க, எனக்கே அவங்க அப்ப நடித்ததிற்கும் இப்ப நடித்திருப்பதற்கும் லாட் ஆப் டிப்ரென்ட்ஸ் தெரியுது” என்று புகழ்ந்தார்.

அதியன் கேட்டு தலையை மட்டுமே ஆட்டினான்.

ஸனா அருகில் இருந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

படத்தின் பாடல்கள் பற்றிய தகவல்களை இசை அமைப்பாளர், பாடல் ஆசிரியர்கள், பாடகர்கள் என விவரித்துப் பேச ஆரம்பித்தனர்.

அதியனால் எழுந்து செல்ல முடியவில்லை, அது முடியாத நிகழ்வாக தெரிந்தது.

ஸனா அவன் முகத்தையே பார்த்துக் கொண்டே”அதியன்! ப்ளீஸ் கோ ஃபாஸ்ட், பாரி பாவம், ஹவ் ஹி வில் ஹேண்டில் ஆல்” என்றாள்.

அதியனிற்கோ அவள் கூறியது உண்மையாக இருந்தாலும், இப்போ அவளை தனியா விட்டுப் போனால் வித்தியாசமாக தெரியும் என்பது புரிந்தது.

அவன் மனமோ’ஆறு மாசம் கழிச்சு பிரியப் போறீங்க…? அப்ப வெளியுலகுக்கு தெரியப் போறதில்லையா..? இப்ப தெரியுறதைப் பற்றி கவலைப் படுற’ என்று கேலி செய்தது.

‘அது அபிசியலா நடக்கப்போறது, ஆனா இப்பவே எங்க வாழ்க்கையை கான்ட்வரோஸியாக்க விரும்பலை நான்.’ என்றான் தன் மனமிடம்…

ஆனால் நவநீதம் மண்டைக்குள் வந்தார்.

“ஸனா! கிளம்பட்டுமா..?” என்றான்.

உண்மையை சொல்லனும் என்றால் ஸனா முதன் முதலில் கணவனான அதியனோடு வந்த முதல் நிகழ்ச்சி, அவள் மிகுந்த கம்பர்ட்பிளா இருந்தாள்.

அனைவரின் பார்வையும் இப்போது அர்த்தமாய் அதியனின் மனைவி என்ற கோணத்தில் விழுவதாய் உணர்ந்தாள்.

அவன் கிளம்பவா என்று கேட்டதும், மனசு வேணாமுனு சொன்னாலும், மூளை பாரி தனியாக இருப்பான், நவநீதத்துக்கு இங்கிருப்பது தெரிந்தால் அதியன் நிலை அபாயம் தான் என்று உணர்த்த, “சரி” என்று தலையை ஆட்டினாள்.

அதியனிற்கு அவளின் பார்வை ஏனோ வருத்தத்தை அளித்தது, அவளை அந்த இடத்தில் தனியாக விட்டுப் போக மனம் ஏனோ முரண்டுப் பிடித்தது.

நவநீதத்தைத் தாண்டி ஸனா மஸ்துவாக மாறினாள் அவனுக்கு.

பிறகு’என்ன செய்வது..?’ என்று யோசித்தான்.

உடனே போனை எடுத்து, “பாரி! டு யுவர் பெஸ்ட் இன் டுடே மீட்டிங்” என்று அனுப்பினான்.

பதிலாக பெரிய கேள்விக் குறியை அனுப்பினான் அவனோ.

“ஐ கான்ட் கம் நவ் ப்ளீஸ் அன்டர்சேன்ட். யு வில் யூஸ் திஸ் சிட்டிவேசன் அன்ட் டு பெஸ்ட் இன் மீட்டிங் வித் மை நோட்ஸ்”

“அண்ணா! தாத்தா பத்தி யோசிச்சீயா..? என்ன நடக்குமுனு தெரியல, நான் உன் அளவுக்கு பண்ணுவேனானு சந்தேகம் தான், மீட்டிங் சக்ஸஸ் ஆகலனா என்னைய விட உன்னைய தான் தாத்தா கேப்பாரு அதை நினைச்சா, எனக்கே பயமா இருக்கு.. உனக்கு..?”

“ம்ம்ம்! ஐ நோ, வில் மேனெஜ்.. டு வாட் ஐ சே, நோட்ஸ் மட்டும் கவனமா வச்சுயோ டீடெயில்ஸ் இம்பார்ட்டென்ட்..”

“ம்ம்ம்! ஓகே” என்று பதில் வந்ததும் போனை ஆப் செய்தே விட்டான் அதியன்.

ஸனாவிற்கு இது தெரியாது, அவளோ அடிக்கடி அதியன் முகத்தையே பார்த்தாள்..

ஒரு கட்டத்தில் அதியன் அவள் அருகே குனிந்து”ஸனா! பாரி கிட்ட இன்பார்ம் பண்ணிட்டேன், மீட்டிங் அட்டென்ட் பண்ண சொல்லி நீ ப்ரீயா இரு, இப்படி என்னையே அடிக்கடி கேள்வியா பாத்துட்டு இருந்தினா நாளைக்கு நம்ம ரெண்டுப் பேரும் கான்ட்ரோவெஸி போட்டோ லிஸ்ட்ல வந்துடுவோம்..” என்று கூறி நக்கலாக சிரித்தான்.

ஸனாக்கும் சிரிப்பு வர, சிறிது லேசாக சிரித்து”ஆர் யு ஓகே அதியன்..?” என்றாள்.

“ம்ம்ம்! ஆல்ரைட்” என்றான் அந்த நேரத்து சூழ்நிலையை அனுபவித்தவாறு.

இருவரும் சிரித்தது கேமராவில் அழகிய புகைப்படமாக பதிவாகியது.

ஆனால் ஸனா மனதில் அதியன் உயரத்திற்கு சென்றான். அவளால் அவனை விட்டு தர முடியவில்லை யாருக்காக இருந்தாலும். அந்தளவு பாதித்தான் நொடிக்கு நொடி அவளை. ஸனாவின் பார்வை அதியனையே பார்த்து பார்த்து மீண்டது.. ரசித்தாள் முழுக்க முழுக்க ரசித்தாள்..  கணவனாக, காதலனாக..

நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருந்தது இவர்கள் பேச்சுக்களை தாண்டி.

இருவருக்குமே ஏதோ ரிலாக்ஸாக தோன்றியது..

அதியனிற்கு தாத்தா பற்றிய பயம் இருந்தாலும் இந்த நிமிடங்களை மஸ்துவோடு அனுபவிக்கத் தோன்றியது.

ஸனாக்கு உள்ளுக்குள் பட்டாம் பூச்சிகளின் சங்கமமே நிகழ்ந்தது.

படத்தின் ஹீரோ ஏதோ ஒரு ஷூட்டிங் முடித்து வர நேரமானதால், இப்போது தான் வந்தார்.

வயது ஏறிய நடிகர் என்றாலும் ஃபேன்ஸ் அப்படி, ஆண்களுக்கு தான் வயது என்பது ஆமை வேகம் தானே. பெண்களுக்கு தான் குதிரை வேகமாய் ஓடுகிறது.

அவர் வந்ததும் பயங்கர விசில் சத்தம், கைத்தட்டல் என அரங்கமே அதிர்ந்தது.

அவரும் அனைவருக்கும் வணக்கம் வைத்து வந்து அமர்ந்தார்.

ஒவ்வொரு ஆட்களாக கூப்பிட்டு அனுபவங்களை பகிர்ந்தனர் தொகுப்பாளர்கள்.

ஹீரோ முறை வர, மேடை ஏறினார்.

“வணக்கம் சார்! ஹார்ட்லி வெல்கம் டு யு…” என்று வரவேற்றனர்.

“ஹீரோ சார் இருக்கும் போது ஹீரோயின் மேம் கூப்புடாம இருக்க முடியுமா..? மேடம் ப்ளீஸ் கம் ஆன் ஸ்டேஜ்” என்றாள் அந்த பெண்.

ஸனா எழுந்து அதியனிடம் தலை அசைத்து விட்டு மேடைக்குச் சென்றாள்.

ஸனா நடந்து சென்று படிகளில் ஏறி மேடைக்குப் போகும் வரை, கைத்தட்டல், விசில் சத்தம் கேட்க, அதியனும் ரசித்துக் கைகளைத் தட்டினான்.

மேடையில் ஸனா அழகான பூச்சென்டாக நின்றாள்.

“வெல்கம் டு யு  அன்ட் லுக் லைக் அஸ் ஃப்ரஸ் ரோஸ் மேம்” என்றான் ஆண் தொகுப்பாளர்.

“தேங்க்ஸ்” என்று ஸனா சிரித்தாள்.

“ஹீரோ சார்! நீங்க சொல்லுங்க, இந்த படத்தோட அனுபவத்தைப் பற்றி..?”

“அனைவருக்கும் வணக்கம்.. இந்த கேள்வியை என் கிட்ட கேட்பதை விட, ஸனா கிட்ட கேட்டா தான் சரியா இருக்கும். ஏனா அவங்க தான் ஹீரோக்கும் மேல கேரக்டர் பண்ணி இருக்காங்க, நான் ஜஸ்ட் ஃபார் சப்போர்டிங் ரோல் தான்..” என்றார் ஹீரோ.

“மேம்! சார் சொல்றது புரியலை.. நீங்க கொஞ்சம் க்ளியரா சொல்லுங்க..”

“ஹாய்! குட் ஈவ்னிங்.. வணக்கம்.
இது சாரோட பெருந்தன்மை, இது ஹிரோயின் பேஸ்டு மூவி தான் ஆனா என்னோட ரோல் டாப் லெவலுக்குப் போக சாரோட கேரக்டர் இல்லனா முடியாது.. சோ வீ ஆர் ஃபோத் இம்பார்ட்டென்ட் இன் திஸ் மூவி.. மூவி டிப்பெரென்ட் தாட்டை கொடுக்கும் கண்டிப்பா. டோன்ட் வொரி..” என்றாள் மென்மையாக.

அதியனிற்கு ஸனா பேசியது அழகாக தெரிந்தது, ‘பிராடிக்ஸ் பண்ணலனு தெளிவாப் பேசுறாளே!’ என்றிருந்தது.

“சார்! மேம் சொல்லிட்டாங்க அப்ப மூவிப் பத்திச் சொல்லுங்க.. ப்ளீஸ்..”

“மூவிப் பத்தினா டைரக்டர் சார் தான் சொல்லனும் கண்டிப்பா. எங்களுக்கு அந்த ரைஸ் இல்லை..” என்றார் ஹீரோ.

டைரக்டர் சிரித்தார் கீழ் இருந்தவாறு.

“மேம்! நீங்களாச்சும் சொல்லுங்க..?”

“சாரே சொல்லலை நான் மட்டும் எப்படி…? வித்அவுட் எக்ஸ்பெட்டேசனில் போய் பாருங்க அப்ப தான் நியூ அன்ட் ப்ரஷா தெரியும்..” என்றாள் ஸனா.

“ஆக மொத்தம் அடிச்சுக் கேட்டாலும் சொல்லாதீங்கனு விதுன் சார் சொல்லி அனுப்பிட்டாரு உங்களை..” என்ற ஆண் தொகுப்பாளர்..

“நீங்க வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் சார்..” என்றான்.

ஹீரோ கீழே மூவ் ஆக.. ஸனாவும் மைக்கை கொடுக்கப் போக.

“மேம்! வெயிட் உங்களை நாங்க இப்ப விடுறதா இல்லை.. அதும் புதுப் பொண்ணு நீங்க!” என்று சிரித்தாள் பெண் தொகுப்பாளர்.

ஸனா சிறிது வெட்கப்பட.. “என்ன தான் படத்தில் வெட்கம் வர  நடித்தாலும் இப்படி இயற்கையா வெட்கப் படுவது அழகு தான் மேம்.. அப்படிப் பட்ட இந்த வெட்கத்திற்கு காரணமானவரை மேடைக்கு அழைக்கலனா எப்படி..? அதியன் சார் ப்ளீஸ் கம் ஆன் ஸ்டேஜ்..” என்றாள் பெ. தொ.

அதியன் எதிர்ப்பார்க்காததால் சட்டென்று புரியாமல் இருக்க, அருகில் இருந்த டைரக்டர்”போங்க அதியன், நீங்க தான் மேடமோட ரியல் ஹீரோ..” என்றார்.

அதியன் வேகமாக எழுந்து நடந்தான் மேடைக்கு, தாவலோடு.

ஸனா அவனையே பார்த்தாள்.

அவன் கையில் மைக் கொடுக்கப்பட்டது.

“குட் ஈவ்னிங் சார்! ஃபர்ஸ்ட் உங்க கூட
நான் பேச மாட்டேன்” என்றாள் பெ. தொ.

“ஏன்மா! என்ன ஆச்சு..?” என்று கேட்டு நக்கல் அடித்தார் ஆ. தொ.

“பின்ன என்ன போன நிகழ்ச்சியில் ரெண்டுப் பேரும் என்னைய ஏமாத்திட்டாங்க, சைலன்ட்டா லவ் பண்ணிட்டு இருந்திருக்காங்க அது தெரியாம சாரை ஹீரோவா நடிக்க சொல்லி, மேமை ஹீரோயினா ஆக்க சொல்லி, எனக்கும் ஒரு ரோல் கேட்டேன். கடைசியில் அவங்க ரியல் லைஃப் ஹீரோ, ஹீரோயின்ஸ் ஆகிட்டாங்க..” என்று வருந்துவதுப் போல் நடித்தாள்.

ஸனா, அதியன் இருவருமே சிரித்தனர்.

“டோன்ட் ஸ்மைல் ஃபோத் ஆப் யு.. அதுக்கு பதிலா நீங்க ரெண்டுப் பேரும் உங்க லவ் ஸ்டோரியை சொல்லுங்க..?” என்றாள்..

இருவருமே ஒருவர் ஒருவரைப் பாரத்தனர்..

“இன்னைக்கு எஸ்கேப் ஆக முடியாது, என்ன ப்ரண்ட்ஸ்.. ஆம் ஐ கரெக்ட்..” என்று மைக்கில் கத்த, சத்தமுமம்”ஆமாம்!” என்றனது.

இருவருமே மைக்கை பிடித்தப் படி சிரித்து நழுவப் பார்த்தனர்.

“நோ வே! நீங்க இப்ப ஸ்டார் பேர் லிஸ்ட்ல இருக்கீங்க, நட்சத்திர ஜோடியோட காதல் கதையை கேக்கலைனா எப்படி, சொல்லுங்க யாரு ஃபர்ஸ்ட் நீங்களே சொல்லுங்க…” என்றாள் பெ. தொ.

ஸனா பாவமாக அதியனைப் பார்த்தாள், அதை கண்ட அதியன் அவனே ஆரம்பித்தான் முதலில்.

“வணக்கம் நண்பர்களே! என்னோட லவ் ஸ்டோரி டிப்ரென்ட், அதை முழுசா சொல்ல முடியாது, இட்ஸ் சீக்ரெட், நான் இந்த துறையை சார்ந்தவன் இல்லை அதனால ஸனா எனக்குப் பழக்கமும் கிடையாது நான் கலந்துகிட்ட அந்த அவார்ட் ஃபங்சன் வரை, ஆனா அதுக்கு அப்புறம் தான் எனக்கு அவங்க மேல ஒரு க்ரஷ் வந்தது. அது க்ரஷ்னு மட்டும் தான் நினைச்சேன் ஆனா இப்ப கல்யாணம் முடியும் வரை வந்துட்டு, தேங்க்ஸ் சோ மச் ஃபார் காலிங் இன் திஸ் ஸ்டேஜ்” என்று சிம்பிளாக முடித்தான் அதியன்.

“மேம்! நாங்க எக்ஸ்பர்ட் பண்ண அளவுக்கு சார் சொல்லலை ஆனா நீங்க கொஞ்சம் மனசு வச்சு சொல்லுங்க” என்றான் ஆ. தொ.

அதியன் மனதில்’லவ் பண்ண நானே சொல்ல இதான் இருக்கு, அவ என்ன சொல்ல முடியும்’ என்று நினைத்து சிரித்தான்.

ஸனா”படத்துல லவ் பண்றது ரொம்ப ஈஸி பிகாஸ் ஸ்கிரிப்ட் படி காதலிச்சுடலாம், ஆனா ரியல் லைஃப்ல அது இயற்கையா வரனும். எனக்கு இயற்கையா காதல் வந்துச்சானு தெரியாது, பட் நவ் ஐ ஃபீல் பெட்டர் வித் அதியன், ஹி இஸ் எ குட் க்யூமன் பீயிங்.
என்னையை  டீப்பா லவ் பண்ணி மூவில தான் பாத்து இருக்கேன் ஆனா ரியல் லைஃப்ல ஐ ஆம் பிளஸ்டு வித் ஹிம்” என்று முடித்தாள்.

“மேம்! சார் லவ் பண்ணாரு சரி.. நீங்க..? அதை சொல்லவே இல்லையே!” என்றாள் பெ. தொ.

ஸனா மெல்ல சிரித்து”யா, ஐ டிட்டின்ட் எக்ஸ்பெரஸ் மை லவ் ஸ்டில் வித் ஹிம்” என்று அதியனை பார்த்தாள்.

அதியன் அப்படியே அதிர்ச்சியாக நின்றான்.

“வாட்! ஸ்டில் டிட்டின்ட் எக்ஸ்பெரஸ். சர்ஃப்ரைஸ் அன்ட்  ஷாக் மேம்..” என்றாள் பெ. தொ.

“எஸ்! ஐ ஃபெல்ட் லவ் வித் ஹிம். பட் ஐ டிட்டென்டட் ரியலைஸ்.. அவரோட சில செயல்கள் தான் அதையும் உணர வச்சுது, அவரோட மனைவினு கிடைத்த உரிமை எனக்கு பாதுகாப்பா, நிம்மதியா இருக்கு இந்த நிமிடம். இத்தனை நாள் எனக்குள் இருந்த ஏக்கம் அது நிறைவேறியது, அவரோட மிஸஸா. இதை விட லவ்வை எப்படி எக்ஸ்பெரஸ் செய்ய முடியும்.. இது எல்லாமே அந்த மூன்று வார்த்தையில் அடங்குமுனா, எஸ் அதியன்..

“ஐ லவ் யு” என்றாள், அவன் கையைப் பிடித்து.

அதியனிற்கு தான் அதிர்ச்சி தாண்டி, ஸனாவா இது என்றிருந்தது.

ஏனோ அவளின் ப்ரோப்ஸலை மனமார தான் ஏற்க தோன்றியது.

அதியன் ஸனாவின் கைகளை அழுத்தி,
“தேங்க்ஸ் மஸ்து” என்றான் மைக்கில்.

“வாவ்! என்ன லவ். செம போங்க.. ஸனா மேம்.. மஸ்து செல்லப் பெயரா..? சூப்பரா இருக்கு.. உங்களோட ஹேப்பியான மூமென்ட்டோட இந்த ஆடியோ ரிலீஸ் செய்யலாம்” என்று பலரை மேடைக்கு அழைக்க.

அதியனும், ஸனாவும் ஒட்டினர் மேடையில் கூட்டத்தின் நடுவே.

அதியனவள் அடுத்து…

Advertisement