Advertisement

அதியன் நேராக வாஷ் ரூம் சென்று தன்னை நிதானப்படுத்திவிட்டு தாத்தாவின் அறைக்குள் திரும்பினான்.

ஸனா வெளியேறியதை அங்கு பாரி மூலம் அறிந்தார்கள் நவநீதம் மற்றும் பரணி.

அறைக்குள் நுழைந்த அதியன் சாதரணமாக வந்து அமர்ந்தான், சிஸ்டத்தின் முன்.

ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த வேலையைத் தொடர ஆரம்பித்தான்.

மற்ற மூவருக்குமே கேள்வி இருந்தது ஸனாவின் வருகையைப் பற்றி அறிவதற்காக.

ஆனால் கேட்க தான் முடியவில்லை.

நவநீதம் பரணியோடு மற்றவைப் பற்றி உரையாடத் தொடங்கினார்.

பாரிக்கு அவர்கள் போல் அல்லாமல் அதியனிடம் பேசிய ஆக வேண்டும் எனத் தோன்றியது.

எவ்வளவோ முயன்று தன்னை நிதானப்படுத்திய அதியனுக்கு கண்களில் நீர் வழிந்தது.

அதை முதலில் கவனித்தது பாரி தான்,
அதற்கு மேல் அவன் காக்கவில்லை.

“அண்ணா! என்ன ஆச்சு…? எதுக்கு அண்ணி வந்தாங்க…?” என்று கேட்டான், நவநீதத்தை மறந்து.

அதியன் பதில் சொல்லவில்லை. நவநீதம் பாரியிடம்”உனக்கு என்ன அவசியம் உடனே தெரிஞ்சுக்க, போ போய் வேலையைப் பாரு” என்றார்.

“தாத்தா! உங்களை மாதிரி எல்லாம் என்னால உணர்ச்சியற்று இருக்க முடியாது, கொஞ்சம் திரும்பி பாருங்க அதியன் அண்ணாவை, அவர் கண்கள் கலங்கி ஏதோ ஒரு விஷயத்தை மறைக்குது.” என்றவன், அதியன் அருகில் சென்று அவன் முதுகில் கை வைத்தான் ஆறுதலாக.

நவநீதம் பேரன் முகத்தில் எதையோ உணர்ந்தவர்”அதியா! என்ன நடந்துச்சு…? எதுக்கு அந்த நடிகை வந்துட்டுப் போனது…?”

அவன் பதில் உடனே வரவில்லை.

“அதியா!” என்றார் மறுபடியும். பரணி
“தம்பி! ஸனாம்மா எதுக்கு வந்துட்டு போனாங்க…? எதும் பிரச்சனையா..?” என்று கேட்டார்..

“ஒன்னுமில்லைனு சொல்ல ஒரு செகண்ட் போதும், ஆனா உண்மை சொன்னாலும் எனக்கு பாவ மன்னிப்பு இல்லை” என்று நிறுத்தி அந்த டேபிளில் ஓங்கி அடித்தான்.

“அதியா!” என்று அதிர்ந்தார் நவநீதம்.

“ஆமா தாத்தா! அதியன் தான், உங்க அதியன், பிஸ்னஸ்ஸில் பல முடிவுகளை ஒரே நொடியில் எடுத்து நவநீதத்தின் பேரனாக திறமையாக செயல்படுபவன் சொந்த வாழ்க்கையில் முடிவு எடுக்க தெரியாத முட்டாளாக, மக்காக, வலிமை இல்லாதவனாக, அடிமையாக வாழுறேன்.. எனக்கு முடியல தாத்தா, நீங்களா…? அவளா..? னு வந்தப்ப, அவளை தூக்கிப் போட்டேன், சின்ன வயசில் இருந்து அப்பாவை பார்த்து வளர்ந்ததை விட தாத்தானு உங்க ஷாடோவில் வளர்ந்தது என் தப்பில்லையே, உங்களை மீறும் சக்தி இல்லாமல் இல்லை ஆனால் மனசில்லை, அவ்ளோ முக்கியமா தெரியுறீங்க, அப்படி என்ன நீங்க முக்கியமுனு அவ கேக்கல.. அப்படி கேட்டு இருந்தா என்னோட உயிர் எமனுக்கு இரையாகிருக்கும்.. அத புரிஞ்சுகிட்டு அவ விட்டுக் கொடுத்தா எனக்காக.. அதான் நானும் இன்னைக்கு விட்டுக் கொடுத்துட்டேன்.. எங்க அன்புக்கு பரிசா கிடைத்ததை.. நான் அவளுக்காக எதுவுமே செய்யலை, பின்ன எதுக்கு அவ எனக்காக கேரியரை விட்டுக்கொடுக்கனும்..” என்று ஆத்திரத்தில் ஆரம்பித்து இயலாமையில் முடித்தான்.

“அண்ணா! சத்தியமா புரியலை, என்ன விட்டுக் கொடுத்த…?”

“எங்க குழந்தைடா.. இன்னும் வளரவே ஆரம்பிக்காத எங்க குழந்தையை..” என அவன் கண்களில் நீர் வழிந்தது.

“தம்பி! என்ன சொல்றீங்க….? ஸனாம்மா!” என்று அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் கேட்டார் பரணி.

“ஆமா அங்கிள்! எவ்வளவு சந்தோஷமான விஷயம். அவளுக்கு கமிட்மென்ட்ஸ், எதுவும் செய்யாத நான் இருக்கேனு சொல்ல முடியாத நிலை எனக்கு, என்னுடைய பிறப்பே ஒரு வித்தியாசமான வாழ்க்கை இதில் என் வாரிசும் கஷ்டப்படனுமா என்ன…?” என்று கோபத்தை அந்த டேபிளிலே மறுபடியும் காட்டினான்.

“அது உன் குழந்தை…..” என்று நவநீதம் ஆரம்பிக்க.

“தாத்தா! ப்ளீஸ், என் குழந்தை அது, நீங்க வேற ஏதாவது கேட்டு உங்க தரத்தை கெடுத்துக்காதீங்க.. என்னால முடியாது இதுக்கு மேல.. நீங்க இனிமே இதபத்தி பேச குழந்தைனு எங்களுக்கு இருக்கப்போவதில்லை, நீங்க இதை மறந்துடுங்க. எனக்கு ஒன் ஹவர் டைம் வேணும், நான் தனியா இருக்கனும்..” என்று எழுந்து வெளியில் சென்றான்.

பாரியை கண் காட்டினார் பரணி, கூடவே போகுமாறு.

நவநீதம் அமைதியா இருந்தார்.

பரணி சென்று கதவை சாத்தினார்.

“ஐயா! நான் உங்க கிட்ட இத்தனை வருசங்கள் வேலைப் பாக்குற உரிமையில் இப்ப பேசவா..?” என்றார் சற்று வேதனையான கோபத்தோடு.

“என்ன பரணி…?” என்று கேட்டார் நிமிராமல்.

“நான் இதை சொல்றதுக்கே ரொம்ப கஷ்டப்படுறேன்.. ஆனாலும் வேற வழியில்லை.. அதியன் தம்பி சந்தோஷமா நிம்மதியா வாழனுமுனா நீங்க செத்துடுங்க ஐயா.” என்றார் மிகுந்த கோபத்தோடு, கண்கள் கலங்கியது.

“பரணி!” என்றார் நிமிர்ந்து கண்கள் சிவக்க..

“ஆமா ஐயா! உண்மை தான். அந்த பிள்ளை உங்க அன்புக்கு கட்டுப்பட்டு இருக்குனு தானே இத்தனை வீம்பா திரியுறீங்க.. தம்பியோட சந்தோஷத்தை பறிச்சுட்டு உங்க வீம்பும், நீங்களும் இருந்தா என்ன, செத்தா என்ன…?”

“நான் கெட்டவனு சொல்றீயா…? இந்த குடும்பத்தையே கட்டி ஒரு நிலைக்கு கொண்டு வந்த நான் கெட்டவனா…? அன்னைக்கு நான் பெத்தப் பொண்ணு வேற ஒரு மதத்துக்குக்காரனை கூட்டிட்டுப் போனப்ப என் சொந்தம், நண்பர்கள் கூட்டம் எல்லாருமே என்னை எப்படி பாத்தாங்கனு உனக்கே தெரியும்..? அப்படிப்பட்ட சமூகத்தில் அதை எல்லாம் தாண்டி நான் வந்தேன் பரணி, அதியனும் அதே தப்பை செஞ்சா நான் எப்படி ஏத்துப்பேன்.. நான் ஒன்னும் அவனை கஷ்டப்படுத்தலை, நானா…? அவளா..? னு கேட்டேன் நானு கூடவே இருக்கான். அவக்கூட போயிருந்தாலும் நான் வேணாமுனு சொல்லலையே..”

“இதான் பிளாக்மெயில், நானா..? அவளா..? னு கேட்டா அதியன் தம்பி முடிவு தெரியும் உங்களுக்கு தெரிஞ்சு தானே கேட்டீங்க..? அதே அந்த பொண்ணும் கேட்டு இருந்தா..? அவங்க காதல், அன்பு தான் உண்மை. நீங்க பாசமுனு அதியனை மிரட்டிக் கூட வச்சு இருக்கீங்க…”

“பரணி! நீ தேவையில்லாததை பேசுற..”

“இன்னைக்கு நான் பேசலைனா அப்புறம் நான் பேசுற எதுவும் தேவையில்லாம போயிடும். அதியன் தம்பி கண்கள் கலங்கி எப்படி பேசிட்டுப் போகுதுனு பாத்தீங்கள..? அவரோட வாரிசு சாகப்போற வலி, அது உங்களுக்குப் புரியலையா..?  அப்ப என்ன பெரிய பாசம் உங்களுக்கு அவர் மேல.. எல்லாம் வேஷம்.. வரலெட்சுமி அன்னைக்கு நீங்க முக்கியம் இல்லனு போனாங்க நான் தான் உதவிப் பண்ணினேன் நல்ல வேளை,  இல்லைனா நீங்க அதியன் மாதிரி தான் எமஷோனல் பிளாக்மெயில் பண்ணி அவங்க மனசை உடைச்சு யாருக்கோ கட்டி வச்சு இருப்பீங்க.. ஆனா இன்னைக்கு அதியன் தம்பி கிட்ட நான் பேச முடியலை. அவருக்கு தாத்தா தான் உலகம். உங்களுக்காக அவரு உயிரா நேசிச்ச ஸனா பாப்பாவை விட்டுக் கொடுத்து உங்க மேல உள்ள பாசத்தை நிரூபிச்சுட்டாரு.. ஆனா நீங்க…? எதை விட்டுக் கொடுத்தீங்க…? அதியன் தம்பிக்காக எதை விட்டுக் கொடுத்தீங்க.. உங்க பாசம் இவ்வளவு தானா ஐயா..?” என்றார் அதிரடியாக நவநீதத்தை தாக்கியவாறு.

நவநீதத்திற்கு வரு கல்யாணத்திற்கு தான் உதவினேன் என பரணிக் கூறியதால் கோபம் தலைக்கு ஏறியது.

“வெளியில் போ பரணி..” என்று கத்தினார்.

“இப்ப  போறேன். நானும் சரி, அதியன் தம்பியும் சரி நீங்க அடிச்சுத் துரத்தினாலும் உங்க கூடவே நிப்போம், நீங்க உயிரோடு இருக்கும்வரை..” என்று வெளியில் சென்றார்.

****

ஸனா காரில் ஏறி அமர்ந்ததும், ட்ரைவர் அங்கிளிடம் ஒரு மருத்துவமனை பெயர் சொல்லி போக சொன்னாள்.

“ஸனாம்மா! உடம்புக்கு முடியலையா…? அம்மாவை போய் அழைச்சுட்டுப் போகலாம…?” என்றார் அவர் அக்கரையாக.

“இல்ல அங்கிள், சும்மா நார்மல் தான் அம்மா பயப்புடுவாங்க.. நீ போங்க..”

“அப்ப அஜி பாப்பாவையாவது அழைச்சுட்டுப் போகலாம். நீங்க தனியாவ போகனும்..?”

“அஜி இப்ப தான் அச்சுவோட அப்பா, அம்மாவை முதன் முதலாக பாக்கப் போய் இருக்கா. அவளை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் அங்கிள்.. நான் என்ன சின்ன குழந்தையா..? நீங்க போங்க அங்கிள்..”

“ம்ம்ம்! சரிம்மா” என்று அவர் சீரான வேகத்தில் காரைக் கிளப்பினார்.

“இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்..?”

“ட்ராபிக் எல்லாம் தாண்டிப் போனா ஒரு மணி நேரம் ஆகிடும்..”

“சரி அங்கிள், எனக்கு டயர்டாக இருக்கு நீங்க ஹாஸ்பெட்டல் வந்ததும் சொல்லுங்க” என கண்களை மூடி நித்திரையைத் தேடினாள்.

***

அதியன் தன் அறையில் அமர்ந்து தன் முகத்தில் கை வைத்து, அடித்துக் கொண்டே அழுதான்.

‘எதுக்கு எனக்கு இப்படி நடக்கனும்..?’ என அலறலோடு.. பின்னாடியே சென்ற பாரி அவன் அருகில் ஓடிப்போய் சமாதானம் செய்ய, அவனை கட்டிக் கொண்டு தேம்பி தேம்பி அழுதான்.

பாரிக்கு அதியனா….? என்ற ஆச்சரியம்.

கோபம் வர”அண்ணா! நீ என்ன முட்டாளா..? இவ்வளவு அன்பை ஏன் மறைக்கனும், வா அண்ணியை போய் தடுப்போம் தாத்தா கெடக்குறாரு.. புரிஞ்சுகாத அவரின் வீண் வீராப்புக்காக நீ ஏன் பலியாகனும்..? வா போவோம்..” என்று அவனை எழுப்பினான்.

அதியன் நிமிர்ந்து தெளிவாக அமர்ந்தான்.

“இல்ல! நான் போக மாட்டேன். தாத்தா இந்த அதியன் மனசை புரியாமல் தப்பு செஞ்சுட்டமோனு யோசிக்கட்டும். அந்த பிள்ளை பிறந்து ஸனாக்கு கேள்விக்குறியா இருக்க வேண்டாம்.. நீ போ பாரி.. நவநீதத்தின் பொண்ணுக்கு பிறந்தாலும் அவரு வளர்த்தவன் தானே நான்.. நானும், ஸனாவும் முடிவு எடுத்தது எடுத்தது தான். எங்க பிரிவு தான் அவருக்கு சந்தோஷமுனா அட்லீஸ்ட் ஹி வில் ஹேப்பி. மஸ்துக்கு நான் தூரமா இருந்தாலும் துணையா இருப்பேன் குழந்தைப்பற்றியது அவ முடிவு, அதுக்கு நான் ஆதரவுக் கொடுத்துட்டேன். நீ போ நான் தனியா இருக்கனும்..”என்று கத்தினான்.

பாரி வெளியில் வரவும், பரணி வெளியில் வரவும் சரியாக இருந்தது.

***

ஸனாக்கு கண்கள் மூடியதும், அதியன் தான் நின்றான்..

‘மஸ்து!’ என்ற அவனின் அழைப்புக் கேட்டது.

ட்ரைவர் அங்கிளுக்கு ஒரு போன் கால் வர, காரில் ஓடிய பாடலை அமர்த்தியவர் போனில் பேசினார், அதை எல்லாம் உணர்ந்த ஸனா கண்களைத் திறக்கவில்லை.

மீண்டும் பாடல் ஒலித்தது..

அதியன் மண்டையில் அங்கும் இங்கும் ஓடினான். அது அதியன் தானா..? என அவளுக்கு குழம்பியது.

சின்ன உருவமாக தெரிந்தது. இல்லை அது அதியன் இல்லை அவனின் உயிர் அவர்களின் சிசு.. அவளிடம் எதையோ கேட்டதுப் போல் தோன்றியது.

ஸனாக்கு மூளை, மனம் மாறி மாறி கேள்விக் கேட்டது.

அதியனின் ஒரே அடையாளம், பரிசு, அன்பு, காதல் எல்லாமே இப்போது இந்த கரு தானே..? அதை அழிப்பதா..? என்பது தான் அந்த கேள்வி.

அப்ப இனி அதியனின் அடையாளமாக நீ எதை சுமப்ப, அதியன் அத்தியாயம் இதை அழிச்சா முடிஞ்சுடுமே..? என மனம் அடம் பிடித்தது.

அது எப்படி முடியும் அத்தியாயம்…? குழந்தை வைத்தா எங்க காதல் வந்தது.. காதல் மூலமாதானே இந்த குழந்தை…. என்றாள் ஸனா மனமிடம்.

‘சரி பெத்துட்டு அப்பானு அடையாளம் காட்டினா அந்த அன்பு இந்த குழந்தைக்குக் கிடைக்குமா…?’ என்றது மூளை..

இரண்டையும் அடக்கினாள் ஸனா, என் அதியன் ரத்தம் இது, எங்க காதல்… எங்க பிள்ளை, இதை ஏன் நான் அழிக்கனும்.
அதியன் எப்படி தவிச்சார், என்னால எப்படி முடியும் ஒரு உயிரை மறுபடியும் அழிக்க…? அன்னைக்கு புரியாத காதல், இன்னைக்கு புரிந்த காதல் நான் அதியனை வெறுக்கலையே இன்னும் அதிகமா தானே காதலிக்குறேன்.. அப்ப சரி, நான் பாக்காதப் பிரச்சனையா இந்த ஃபீல்டில் நான் ஏன் பயப்புடனும், நான் இந்த குழந்தையை பெத்துப்பேன். எத்தனை கஷ்டம் வந்தாலும் பெத்து அதியனுக்காக வளர்ப்பேன்.. என கண்கள் மூடிய நிலையிலே வயிற்றில் கை வைத்தவள்,
“அங்கிள்! ஹாஸ்பெட்டல் வேணாம் வீட்டிற்குப் போங்க..” என கண்களை திறந்தாள்.

ட்ரைவர் அங்கிள் காரை சரியாக ஓர் இடத்தில் நிறுத்தினார்.

சுற்றிப் பார்த்தவள், “அங்கிள்! எங்க வந்து இருக்கீங்க…? இது எந்த இடம்..?”

“ஸனாம்மா! மன்னிச்சுடுங்க, இந்த இடத்திற்கு ஒருத்தர் சொல்லி தான் வந்தேன்..”

“யாரு..?”

“இருங்க, அவரே வருவார்..” என்ற சிறிது நேரத்தில் பரணி வர, ஸனா இறங்கினாள்.

“அங்கிள் நீங்களா..?”

“ஆமாம்மா! நான் தான் ட்ரைவர் கிட்ட இங்க அழைச்சுட்டு வர சொன்னேன்..”

“எதுக்கு அங்கிள்..?”

“ஸனா! நீ எங்கப் போயிட்டு இருக்க…?”

“நான் ஒரு முடிவு எடுத்து ஹாஸ்பெட்டல் போயிட்டு இருந்தேன். ஆனா அது தப்புனு புரிஞ்சு, வீட்டிற்கு தான் போக சொல்லிட்டு இருந்தேன்.. என்ன ஆச்சு அங்கிள்…?”

“ஒன்றுமில்லை.. எதுக்காக ஹாஸ்பெட்டல் போகனும்..”

“அங்கிள்! நானும், அதியனும் அப்பா, அம்மா ஆகப்போறோம். ஆனா என்னோட கமிட்மென்ட்ஸ் இந்த குழந்தையைப் பெத்துக்க பிரச்சனையா இருக்கு. அதான் அதியன் கிட்ட கேட்டேன். அவரு என்னோட விருப்பமுனு சொல்லிட்டார்..”

“சரி! உன் விருப்பமுனா உனக்கு சாதகமாக முடிவு எடுக்க வேண்டியது தானே..”

“இல்ல அங்கிள், அதியன் இதை ஏத்துக்க தவிப்பார். அவரால வேணாமுனு சொல்ல முடியலை ஆனா அவர் கண்ணில் அது தெரிந்தது அதான் வேணாமுனு முடிவு எடுத்துட்டேன்.. என்ன பிரச்சனை வந்தாலும் ஃபேஸ் பண்றேன்.. எங்க காதலுக்கான  அடையாளம் இதை அழிக்க எனக்கு உரிமையில்லை..”

“நல்லதும்மா, உன்னைய மாதிரி ஒரு பொண்ணை மிஸ் பண்ணினது அந்த குடும்பத்தின் தப்பு.. நீ கவலைப்படாத..  உன்னைப் பார்க்க ஒருத்தர் நிக்குறார்.. இரும்மா” என்று பின்னால் திரும்பிப் பார்க்க, சற்றே தூரத்தில், பின்னால் இருந்து நவநீதம் வந்தார்.

ஸனாக்கு அதிர்ச்சி ஆச்சரியம்..

“அங்கிள்! இவர்…?”

“ஆமாம்மா! உன் கிட்டப் பேசனுமாம்..”

ஸனா நவநீதத்தைப் பார்க்க.

அவரோ தொண்டையை இருமிக்கொண்டு”என் பேரனுக்காக ஒரு முடிவை எடுக்கப் போறேன். அவனோட குடும்பத்தை அதான் உன்னையும், உன் வயிற்றில் இருக்கும் குழந்தையும் அவனிடமே ஒப்படைப்பது..” என்றார் எங்கோ பார்த்தவாறு.

ஸனா அமைதியா நிற்க..

“இது எனக்காக இல்லை. அதியனுக்காக மட்டுமே.. கிளம்பு வீட்டுக்குப் போகலாம்..” என்றார் அவளை பார்த்து.

ஸனா நெற்றியைச் சுருக்கினாள்..

“ஒரு நிமிஷம், நான் ஒரு நடிகை…”

“தெரியும், ஆனால் என் பேரனுக்கு உன்னைய தான் புடிச்சுருக்கு அவனை மனம் தளர நான் விடமாட்டேன். நீ தான் வேணும் அவன் சந்தோஷத்துக்கு அவன் சந்தோஷத்துக்காக விட்டு தரேன்.. நீ மட்டும் தான் விட்டு தருவீயா..? நானும் என் பேரனுக்காக செய்வேன்..” என்றார் அழுத்தமாக.

“ஓ! சூப்பர். மிஸ்டர் நவநீதமா இது…? நீங்க கூப்புட்டதும் அப்படியே நான் நாய் மாதிரி அடிமையா வர மாட்டேன் எனக்குனு சில விஷயங்கள் இருக்கு..”

“என்ன…?” என்றார் கண்ணாடி வழியே கண்கள் பெரிதாக.

“நான் ஒரு நடிகை, நவநீதத்தின் வீட்டிலும் நடிகையா தான் வாழுவேன்..  எனக்கு அதியன் தான் முக்கியம், அதுக்காக எல்லாத்தையும் தூக்கிப் போட்டு வர முடியாது உங்களுக்காக.. அதியனுக்காக நான் செய்வேன் ஆனா அவர் என்னோட ப்ரோப்ஷனலில் தலையிட மாட்டார். பட் உங்களை பத்தி நல்லா தெரியும்..”

“இப்ப நீ என்ன சொல்ல வர..? என் வீட்டுக்கு வரதுனா நடிப்புத்தொழிலை விட மாட்ட அதானே…”

“ஆமா! நான் ஸனா மஸ்தூரா அப்படி தான் அங்க வருவேன். அதுக்கு அப்புறம் நீங்க உங்க அடிமை மாதிரி என் தொழிலை பத்தி பேசக்கூடாது.” என்றாள் உள்மனம் மகிழ, அதியனை பாக்கப் போறோமுனு சந்தோஷம்.

“ம்ம்ம்! இது எல்லாம் என் பேரனுக்காக மட்டும் தான். அவன் அழுது நான் பார்த்தது இல்லைனு சொல்ல மாட்டேன் ஆனா இந்த வயதில் நான் காணாதது..  பரணி அழைச்சுட்டு வந்து சேரு நேரா வீட்டுக்கு.. அதியனையும் பாரியிடம் சொல்லி அழைச்சுட்டு வரசொல்லு..” என்று தன் காரை நோக்கி நடந்தார்.. அந்த நடையில் தோல்வியை தாண்டி அதியனின் மேல் அவர் பாசம் புரிந்தது பரணிக்கும், ஸனாக்கும்..

“ஸனாம்மா! கூப்புட்டதும் தலை ஆட்டாம உன்னோட பிடியில் நின்ன பாரு அதான் சரி.. இந்த மனுசனுக்கு இன்னும் புரிய வேண்டியது இருக்கு. நீ வா போகலாம். அதியன் தம்பிக்கு நீ வரப்போறது தெரியாது..” என்று பரணி காருக்கு சென்றார்.

ஸனாக்கு நொடியில் ஏதோ அதிசயம் நிகழ்ந்தது போல் இருந்தது..

அதியனவள் அடுத்து….

Advertisement