Advertisement

கார் வேகமாக சென்று கொண்டிருக்க,  வெளியில் வேடிக்கைப் பார்த்தவாறு ஸனா அமர்ந்திருந்தாள்.

அதியன் போன் அடித்தது.

பாரி நம்பர் அது, காரை சற்று மெதுவாக ஓட்டியவன்,

அவன் போனை காரின் ஸ்பீக்கரில் ஆன் செய்தான், ட்ரைவிங்கில் இருந்தமையால்.

பாரி பேசியது ஸனாவிற்கும் கேட்டது.

“அண்ணா! தாத்தா தமிழில் அனுப்பி இருக்கிறார் டீடெயில்ஸ், நீங்க பக்கத்துல இருக்கீங்கனு நினைச்சு, நானும் நாங்க பாத்துக்குறோமுனு சொல்லி அனுப்பிட்டேன் ரிப்ளே. இதை எப்படி மாத்துவது..”

“நோ ப்ராப்ளம், பரணி அங்கிள் இருக்கார….?”

“ஆ! வந்துட்டாரு..”

“ஓகே! நீ காரை ஸ்டாப் பண்ணு பார்கிங்கில் எங்காயது முதலில்”

பாரி அதே போல் செய்தான்.

“ம்ம்ம்! ஓகே சொல்லுங்க…”

“சரி! பரணி அங்கிளை அதை படிக்க சொல்லு, நான் டிரான்ஸ்லேட் செய்வதை நீ எழுது கிண்ட்ஸா, நான் வந்து பாத்துக்குறேன்..”

பரணி படிக்கவும், அதியன் அதை டெக்னால்ஜி வோர்ட்ஸ் போட்டு சென்டன்ஸ்ஸாக ஃபார்ம் செய்து சொல்ல பாரி அப்படியே எழுதினான்.

முக்கியமான தகவல்கள் ஒரு பக்கமான அளவு தான். அதற்கு மேல் அதியன் அதை டெவெல்ப் செய்து பேசி விடுவான் என நவநீதம் அறிந்ததே.

அதியன் உடல்நிலை சரியில்லை என்று வராமல் இருந்திருந்தால் அங்கே பேப்பர்ஸா ரெடி செய்திருப்பான்.

நவநீதம் பாரியை அனுப்ப தான் யோசித்தார், அவனை இந்த மாதிரி நேரத்தில் தான் அனுபவப்படுத்த வேண்டும் என்று.

ஆனால் இது முக்கியமான மீட்டிங், அதனால் அதியன் தான் சரி என இரு மனதாக இருக்க, அதியனிடம் பேசும் போது அவனே செல்வதாக கூறினான்.

ஒரு வேளை அதியன் போகாமல் இருந்திருந்தால் பாரி அப்பா சேரன் கிண்ட்ஸ் கொடுக்க பாரி தான் சென்றிருப்பான். அதியனிற்கு முன் சேரன் தான் நவநீதத்திற்கு அனைத்துமாக இருந்தது.

அதியன் பொறுப்பேற்க நவநீதம் தன் பேரனை அனைத்திற்கும் தலைமை வகிக்க வைத்தார். அதில் சேரருக்கு சந்தோஷமே.. அவருக்கும் கண்ணில் பிரச்சனை ஏற்பட மீட்டிங்கில் ஸ்கிரீன் பார்த்துப் பேச இயலாது..

அதனால் அவர் கைடில் பாரியை அனுப்ப யோசித்தார் நவநீதம். வேலையே வைக்காமல் அதியன் போக முழு நிம்மதியில் இருந்தார் தாத்தா.

அதியன் பாரியிடம் அனைத்தையும் கூறி முடித்தான்..

“ஹப்பாட! இப்ப தானே புரியுது எதுக்கு தாத்தா அதியன் புராணமே பாடுறாருனு, செம அண்ணா நீங்க, எவ்வளோ சிம்பிளா முடிச்சுட்டீங்க அதே மாதிரி சீக்கிரம் வந்து, மீட்டிங் முடிச்சு நவநீதத்திடம் குட் பாய்னு அப்ரிசேசன் வாங்கிடுங்க…” என்றான் பாரி சிரிப்போடு.

“உன் மரியாதை ஓவரா இருக்கு, நீங்க கிளம்புங்க நான் வந்துடுறேன், லீ மெர்டியன் ஸ்பேஸ் டவர் பக்கத்தில் தானே இருக்கு” என்று  போனை கட் செய்தான்.

பாரி அதியனை பொதுவான இடத்தில் வாங்க, போங்கனு சொல்வான். தனியா இருந்தா வா, போனு சொல்வான். அது அவன்  மூடைப் பொறுத்தது.

ஸனா லேசாக சிரித்தாள்.

“என்ன சிரிப்பு….?” என்றான்.

“இல்ல ஒரு மீட்டிங் போக, இத்தனை பிரிபேர்சன். ஆனா நான் எதுமே பிரிப்பேர் செய்யாம  போறேன். எல்லாம் ஜாப் பொறுத்து மாறுதுல..”

“ம்ம்ம்! ஏன் நீயும் எப்படி பேசனுமுனு மைன்ட் லோட் பண்ணிட்டு தானே போவ.”

“அது எல்லாம் சிறப்பா தான் போவேன். ஆனா அங்க அதை விட மிக சிறப்பா கேள்விகள் இருக்கும்…” என்று சிரித்தாள்.

“ஏன்…?”

“ம்ம்ம்! எனக்கு காதல் இருக்கா..? எப்ப கல்யாணம்…? எந்த  ஹீரோவோடு நடித்தது பிடிக்கும்..? இப்படி பெர்சனல் கேள்வி தான் பொதுவா இருக்கும்.. இன்னைக்கு அதை விட சம்பவம் இருக்கு..”

“என்ன சம்பவம்..?”

“அதான் இப்ப நான் மேரிட் ஆக்டரிஸ்.. சோ கேள்விகள் இப்படி தான்..
எப்ப குழந்தை…? இனி நடிப்பீங்களா..? உங்க ஹஸ்பேண்ட் பேமிலியில்  நடிக்க ஓகே சொல்லிட்டாங்களா…? ப்ளா ப்ளா.. இப்படி..”

“ஓ! அப்ப எதுக்கு நீ இந்த ஃபங்சனுக்கு போற.. சிம்பிளி அவாய்ட் பண்ணிடலாமே..”

“ம்ம்ம்! மோஸ்ட்லி போறது இல்லை.
ஆனா இந்த டைரக்டர் எனக்கு லைஃப் கொடுத்தவரு சினி இன்ரெஸ்ட்ரியில் அவருக்கு நான் வந்தா ப்ரோமோசன் படத்திற்கு, சோ கேட்டாரு மறுக்க முடியவில்லை…”

“ம்ம்ம்! தென் ஒய் டு யு திங்கிங் அன்வான்டடு திங்க்ஸ். ஹேப்பிலி கோ அன்ட் என்ஜாய் எவரி  செகன்ட்ஸ்..” என்றான் பாசிட்டிவாக.

ஸனாக்கு ஒரு மாதிரி பூஸ்ட் அப் ஆக இருந்தது..

“தேங்க்ஸ்..”

“எதுக்கு..?”

“பாசிட்டிவ் ஸ்பீச்சுக்கு தான்..”

“ஓ! அப்பனா நிறைய சொல்றேன். ஆனா உன் தேங்க்ஸை மட்டும் நீயே வச்சுக்கோ, என்னால நோ மென்சன் சொல்ல முடியாது..”

“ம்ம்ம்! நக்கலா…?”

“ச்சே! ச்சே! ஒரு சோசியல் சர்வீஸ்.”

“அதியா!” என்று முறைத்து பின் லேசாக சிரித்து விட்டு திரும்பினாள்.

அதியனுக்கு தான் அது படு இம்சையாக இருந்தது.

“ஆமா! எப்படி நீ இவ்ளோ அழகா இருக்க, டூயிங் எனி ஸ்பெஷல் கேர் ஃபார் யுவர் பியூட்டி..” என்று கேட்டு சிரித்தான்.

“ம்ம்ம்! என் அம்மா நான் வயிற்றில் இருக்கும் போது, பக்கத்து வீட்டு ஆன்டியே பாத்துட்டு இருந்தாங்க அதான் நான் அவங்களை மாதிரி அழகா பொறந்துட்டேன்” என்றாள் நக்கலாக அவளும்.

“ப்பா! இப்படி யாரும் சொல்லி இருக்க மாட்டாங்க, அழகா  இருக்க காரணம்..”

“அதான் நான் சொல்லிட்டேன்ல..” என்றாள் வாயினுள் சிரித்து.

“ஆமா! ஆமா! அப்ப அந்த ஆன்டியை நீயும் பாரு, உன் குழந்தையும் அழகா பொறக்கட்டும். அதுக்கு முன்னாடி ஆன்டி இருக்காங்களா..”

“ஹலோ! ஆன்டி இருக்காங்க, சூப்பரா இருக்காங்க. ஆனா நான் குழந்தை பெத்துகிட்டா தானே.. அதான் வாய்ப்பில்லையே”

“ஏன்…?”

“அதியா! இந்த கேள்வி உங்களுக்கே நான்சென்ஸா இல்ல…”

“ஆறு மாசம் கழிச்சு நீ உனக்குனு ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்க மாட்டீயா…?”

“ஹலோ மிஸ்டர் அதியன், இந்த ஆறு மாசம் கணக்கு உங்களுக்கும், உங்க தாத்தாக்கும் தான், நான் இன்னும் முடிவுப் பண்ணல.”

“உனக்கே வெறுத்துப் போய் நீயே போயிடுவ ஸனா எங்க வீட்டுச் சூழ்நிலை எதுக்கு நீ கஷ்டப்படனும்..”

“நான் ஏன் கஷ்டப்படனும், நீங்களும் உங்க தாத்தாவும் தான் கஷ்டப்படனும். அது தான் எனக்கு வேணும்” என்றாள் கடுப்பாக.

“ஸனா!”

“என்ன ஸனா! நீங்க யாரு முதலில்.. அதியனா இல்லை அந்நியனா..? நினைச்சா ஸனா இல்லை மஸ்து.. அப்ப நான் யாரு…? உங்க தேவைக்கு கிள்ளு கீரையா…?”

“என்னைய ஏன் படுத்துற..?”

“ஓ! இப்ப தான் தெரியுதா நான் படுத்துறேனு அதுக்கு தானே நான் வந்தேன் உங்க வீட்டுக்கு.. பின்ன…”

“நான் சொன்னது அந்த படுத்துறது இல்லை.. ஸனா..? மஸ்துவா..? மாறி மாறி படுத்துற. எனக்கு உன் மேல கோபம் வரலை, ஏனு தெரியலை நீ திட்டினா கூட ஐ ஆம் ஹேப்பி தான்..”

அவனை முறைத்தாள்..

“ஒன்னு செய்யுங்க.. எங்க பக்கத்துக்கு வீட்டு ஆன்ட்டி அட்ரஸ் தரேன். அந்த மஞ்சரியை அழைச்சுட்டு போய் அவங்களை பாக்க சொல்லுங்க, உங்களுக்கு அழகான பிள்ளை பொறக்கும்..”

“அவளை அங்க அழைச்சுட்டு போனா எனக்கு எப்படி அழகான பிள்ளை பொறக்கும்..”

“ம்ம்ம்! அவ தான் உங்க தாத்தா பாத்த பொண்ணு நீங்க கல்யாணம் செய்ய…”

“ஓ! அப்ப நீ டைவர்ஸ் தர ரெடினு சொல்லுற…?”

“நான் எப்ப சொன்னேன்..”

“அப்புறம் எப்படி நான் மஞ்சரியை கல்யாணம் செய்ய முடியும்..”

“ம்ம்ம்! ஏன் உங்க தாத்தா சொன்னா செய்ய மாட்டீங்களா என்ன..? நான் இடைஞ்சலா இருந்தாலும்.” என்றாள் வேகமாக.

அதியன் அமைதியாக இருந்தான்..

“என்ன பதிலையே காணும்…?”

அதியன் அதுவரை அவளோடு வாயாடினாலும், இப்படி ஒரு சூழ்நிலை வந்தா அவன் என்ன செய்வான் என்று நினைக்க முடியவில்லை..

“என்ன சார், மிஸ்டர் அதியனா இது…? சைலன்ட் ஆகிட்டீங்க.. தாத்தா மேல அவ்வளவு பயம்..” என்றாள் உதட்டை சுளித்து.

“நீ டைவர்ஸ் குடுக்காம இருந்தா, நான் மஞ்சரியை கல்யாணம் செய்ய முடியாதுல ஸனா..”

“வாட்!”

“அப்ப நீ டைவர்ஸ் கொடுக்காத, ஆனா ஆறு மாசம் கழிச்சுப் போயிடு..” என்றான் லூசுதனமாக.

ஆனா ஸனா கேட்டே விட்டாள்..

“டேய்! லூசாட நீ…?”

அதியன் அவளை திரும்பிப் பார்த்தான். அவன் பேசியது அவனுக்கே புரியாத ஒன்று தான்..

“என்ன ஆச்சு..?”

“ம்ம்ம்! நீங்க இப்ப சொன்னது லூசுதனமா இல்லை.. டைவர்ஸ் கொடுக்காத ஆனா வீட்டை விட்டு போயிடுனு…”

“அப்ப நீ செய்வது மட்டும் என்ன நியாயம் ஸனா. டைவர்ஸ் தர மாட்டேன் ஆனா வீட்டில் இருந்து பழி வாங்குவேனு சொல்றது..”

“ஆமா! அப்ப  உங்க கூட சேர்ந்து வாழ சொல்றீங்களா…?”

“அது தான் முடியாதே. நீ என்னைய விட்டு போயிடுனு சொல்றேன். நீ என்ன நினைச்சு வந்தியோ அது சரியா நடக்குது. ஆமா! எனக்கு உன்னை பக்கத்தில் வச்சுட்டு சாதரணமா இருக்க முடியலை. நான் பண்ணது தப்பு தான். பெரிய தப்பு தான். ஆனா இப்ப பக்கத்துல இருந்து கொல்லுற. நெருங்கவும் முடியலை, உன்னைய விட்டு விலகவும் முடியலை. ஆனா நீ என் கூட  இருக்க அது சந்தோஷமா இருக்கு ஆனா அவஸ்தையா இருக்கு. நான்  விரும்பினவள் பக்கத்தில் ஆனா என்னை விரும்புவர்கள் மத்தியில் அவளை விரும்பாத மனிதர்கள் சுற்றி நிற்க.. நான் என்ன செய்றது..” என்றான்.

ஸனா அமைதியா இருந்தாள்..

“நீ என்ன நினைச்சி வந்தீயோ அது நடக்குது, நான் மனதளவில் கஷ்டப்படுறேன் மஸ்து, ஆனா இது தொடர்ந்தா நான் நீ நினைப்பதை விட பெரிய மனநோயாளியா மாறிடுவேன். அப்ப நீ ஜெயிச்சுடுவ இல்லையா..? நான் அந்த கடவுள் கிட்ட வேண்டிகிறேன். இது எல்லாம் இந்த ஆறு மாதத்தில் நடக்கனுமுனு..” என்று காரை வேகமாக செலுத்தினான்.

ஸனாக்கு அவனின் காதல் புரியாத புதிராக இருந்தது.

இவன் ஏன் இப்படி லவ் பண்றான் என்னைய.. ஆனா…?

ஸனாவின் மனதை அதியனின் காதல் கரைத்தது என்பது தான் உண்மை.

ஸனா அமைதியாக இருந்தாள்.

அதியன் சிறிது தூரம் சென்றதும்.

“ஹலோ மிஸஸ் ஸனா மஸ்தூரா! இப்படியே போனீங்கனா பிரைட்டா தெரிய மாட்டீங்க. அப்புறம் டைரக்டர் ஏதோ உங்களை கம்பெல் பண்ணி வர வச்சு இருக்காருனு மீடியாவுக்கே தெரிஞ்சுடும்..” என்றான் சிரித்தப்படி.

ஸனா அவனை திரும்பி முறைத்தாள்.

“ஏன் நான் பிரைட்டா இல்லையா இப்ப..?”

“இல்ல, இப்படி முகத்தை வச்சுகிட்டா எப்படி பிரைட்டா இருக்கும். சிரிங்க மேடம்..”

“ஹிஹிஹி! போதுமா..” என்றாள் பற்களை மட்டும் காட்டியவாறு.

“இப்படி சிரிச்சா, சின்ன கவுண்டர் ஆச்சி தான் மண்டைக்கு வராங்க…” என்று பயந்த மாதிரி நடித்தான்.

“ஹே! அவ்வளவு மோசமாவ இருக்கு.” என்று கார் மிரரில் அதே மாதிரி சிரித்துப் பார்த்தாள்.

பின் அதியனைப் பார்த்தவள் நார்மலாக சிரித்தாள்.

“அதியன்!” என்று அவனை லேசாக அடித்தாள்.

“இது சூப்பர்.. இப்படி சிரிச்சா ஃபேன்ஸ் ஹேப்பி ஆவாங்க. நானும் தான்..” என்றான் சிரித்தப்படி.

“எப்படி… இப்படி அடிச்சா..”என்று வேகமாக அவனை அடித்தாள்.

“ஹே! ஹே! இரும்மா, நான் ட்ரைவிங்கில் இருக்கேன் அப்புறம் அவ்ளோ தான். நீ அடிச்சது எல்லாம் யாருக்கு தெரியும். ஸனாவின் கணவர் ஸனாவை கொல்ல கார் ஆக்ஸிடென்ட் பண்ணிடாரோனு…? கேள்விக் குறியோடு போடுவானுங்க..” என்று அவ. கையைத் தடுத்தான் ஒற்றை கையால்.

“ம்ம்ம்! இருக்கலாம்.. யாருக்கு தெரியும்…” என்றாள் அவளும்.

அவன் பிடித்திருந்த  கையை அப்படியே இழுத்தவன் தோள் அருகே சாய்ந்தாள்.

“அப்படி எல்லாம் நான் செய்ய மாட்டேன். நீ கனவில் கூட யோசிக்காத இப்படி.” என்று திரும்பி அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்.. அடுத்த நொடி திரும்பி ரோட்டை பார்த்தான்.

ஸனாக்கு  இது என்ன விதமான அன்பென்று புரியவில்லை..

ஸ்பேஸ் டவர் வந்தது..

“ஓகே ஸனா! நான் உன்னை இறக்கி விட்டு கிளம்புறேன்” என்று காரை பார்கிங் போக யோசித்தவன்,

“ஆனா ஸனா, உன்னைய பார்க்கிங்கில் இறக்கி விட்டா க்ரவுடு ஆகிடுமே.”

“ஆமா, பரவாயில்லை நான் வேகமாக போயிடுறேன் அதியா…”

“இல்ல, இல்ல இட்ஸ் நாட் குட்.” என்று சுற்றிப் பார்த்தவன்.

“ஓகே! டவர் வாயிலில் விடுறேன் நீ போயிடு..” என்று  காரை அந்த பக்கம் திருப்பிட்டான்.

“நோ அதியா, அங்க மீடியா, ரீப்போர்ட்ஸ் இருப்பாங்க. நீங்க எப்படி மூவ் ஆவிங்க, இல்ல நீங்க இங்கயே விடுங்க, நான் மேனெஜ் பண்ணிக்குறேன்…”

“எப்படி மேனெஜ் பண்ணுவ, உன்னை பாத்தா எல்லாம் சூழ்ந்துடுவாங்க, வெயிட்” என்று கூறியவன் கார் வாயிலில் நேராக போய் நின்றது.

“ஓகே! டேக் கேர், ட்ரைவர் கிட்ட சொல்லிடு டைமுக்கு வர சொல்லி.. எனக்கு வொர்க் இருக்கு” என்றான்.

“ம்ம்ம்! ட்ரைவர் அங்கிள் வந்துடுவார் நோ ப்ராப்ளம்.” என்று இறங்க தயாரானாள், புடவையை சரி செய்தவாறு.

ஆனால் நேரம் அதியனை சுற்றியது..

ஸனா முகத்தைப் பார்த்த மீடியாக்கள், யூ டியூப்பர்ஸ், பி எம் டபிள்யூவை சூழ்ந்தார்கள்..

பாதிப்பேர் ஸனா பக்கம், பாதி அதியன் பக்கம்..

அவர்களை பேட்டி எடுக்க.. அதியன் இப்போது அவர்களுக்கு ஸனாவின் கணவனாக தெரிந்தான்..

அங்கு க்ரவுட் ஆனதை பார்த்து, ப்ரொடெக்சன் டீம் புரோகிராம் ஆர்கைன்ஸர் வந்து விட, “சார்! இறங்குங்க கார் பார்கிங் பண்ணிடுவாங்க, நீங்க மூவ் பண்ண முடியாது, மேடம் வாங்க” என்று சில ஆட்கள் பாதுகாவலர்களாக வந்தனர் அவர்கள் இறங்க காத்திருக்க.

“நோ! ஐ ஹேவ் வொர்க்.. வில் மூவ், ப்ளீஸ் க்ளியர் தட் க்ரவுடு” என்றான்.

“சாரி சார், நீங்களும் தானே ஃபங்சன் வந்து இருக்கீங்க, மேடமோடு மூவ் ஆகுங்க. இல்லனா இங்க க்ரவுட் மூவ் ஆகாது..” என்றார்.

ஸனா முழிக்க.. அதியன் அதற்கு மேல் முழித்தான்..

ஸனா மெதுவாக”நான் அப்பவே சொன்னேன் நீங்க தான்  கேக்கலை.. இப்ப எப்படி போவீங்க” என்றாள்..

புரொடியூசரின் மேனெஜர் வர, “அதியன் சார்! வாங்க வாங்க, மேடமோட வருவீங்கனு எக்ஸ்பெர்ட் பண்ணல. தேங்க்ஸ் வாங்க” என்று அழைத்தார்.

“ஸனா, ஓகே யு வில் வெயிட்.. நத்திங் டூயிங் நவ். நான் உள்ள வந்துட்டு கிளம்புறேன்..”

வேறு வழியில்லாமல், அதியன் இறங்கினான்.

காரை சுற்றி வந்தவன், அவள் பக்கம் வந்து, கதவைத் திறந்தான் இறங்குவதற்கு.

ஸனா இறங்க, மீடியா”மேடம்! பொதுவா நீங்க ஆடியோ லான்ஞ்ச் வர மாட்டீங்க, இதுக்கு மட்டும் எப்பிடி வந்தீங்க…?” என்று கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர்.

ஆனால் அதியன் ஸனாவின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டே முன்னேறினான்.

அவர்களை சுற்றி பாதுகாவலர்கள் செல்ல, அதியன் கையைப் பிடித்து சென்ற ஸனாக்கு ஏனோ மெய்மறந்து அவனையே பார்க்கத் தோன்றியது.

கூட்டம் நெருங்க, அதியன் அவளை அணைத்தவாறு அழைத்துச் சென்றான்.

இருவரும் மிக நெருக்கமாக நடந்தனர்..

அது அழகாக கேமராவில் பதிவாகியது..
உள்ளே சென்றதும் அனுமதி சீட்டுகள் மட்டுமே அனுமதித்ததால் கூட்டம் இல்லை.

செலிப்ரட்டிகள் செல்ல தனி வழி இருந்ததால், அதன் வழியே சென்றனர் அதியன்- ஸனா..

அப்போதும் அதியன் ஸனாவின் கையைப் பிடித்திருக்க, ஸனா”தேங்க்ஸ் அதியா” என்றாள் அவன் காதருகில் மெதுவாக.

அவனோ திரும்பி பார்க்க, ஸனா புன்னகைத்தாள்..

அவனும் சிரித்து, “வா, இந்த கூட்டத்தில் எப்படி நீ வர முடியும். இவங்க என்ன ஆர்கைன்ஸிங் பண்ணி இருக்காங்க, ஸ்டுபிட்ஸ்” என்றான் சிறிது கோபமாக.

“இதில் நடந்து வந்தா தானே அவங்களுக்கு ப்ரோமோசன் ஆகும் அதியா..” என்றாள் சிரிப்போடு.

அதியனுக்கு புரிய, அவளின் கையை இறுக்கிப் பிடித்தான், “மஸ்து! ஐ ஆம் வித் யு ஹியர், டோன்ட் வொரி, கம் வித் மி” என்று நடந்தான்.

ஸனாவும் ஏதோ தேவலோகத்தில் நடப்பது போல் நடந்தாள் கூடவே..

இருவரும் உள்ளே செல்ல, டவர் ஆடிட்ரோரியத்தில் பப்ளிக் சத்தம் அதிகமானது..

ஸனா பெயரைச் சொல்லி கத்தினர்..
ஏனோ இன்று ஸனாக்கு அதியனோடு வரும் போது, இந்த சத்தம் பிடிக்கவில்லை. அவனுக்கு பிடிக்கலைனா என்று மனம் வருந்தியது..

அவன் முகத்தையேப் பார்த்தாள்.

அதியன் திரும்பி”ஸனா! ஃபேன்ஸ் பயங்கரம் போல, கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு உன்னைய பார்க்க.” என்று சிரித்தான்.

“ம்ம்ம்!” என்றாள் வருத்தமாக.

“ஹேய்! சிரி ஏன் டல்லா இருக்கே. அதான் வந்தாச்சுல.. ஃபீல் ப்ரீ.. இட்ஸ் யுவர் டே” என்றான். அதற்குள் அமரும் இடம் வர, இருவருக்கும் வி ஐ பி சீட் பக்கம் பக்கமாக போடப்பட்டிருந்தது..

அதியன் வரும் போதே ஏற்பாடு செய்து விட்டார்கள்..

இருவரும் அமர்ந்தார்கள்..

அதியனவள் அடுத்து…

Advertisement