Advertisement

தான் அவன் வாழ்க்கையில் வந்திருக்க கூடாதென்று கூறிய ஸனாவை, நீ வரவில்லை, நான் தான் உன் வாழ்க்கையில் வந்தேன் என்று கூறி சமாதானம் செய்துக் கொண்டிருந்த அதியனின் செவியில் கதவு தட்டும் சத்தம் கேட்டது.

அது லேசாக தான் சார்த்திருந்தது, அதியன் சென்று திறந்தான், அங்கு பாட்டி நின்றுக் கொண்டிருந்தார்.

“பாட்டி! என்ன ஆச்சு…? உள்ள வாங்க” என்று அழைத்தான் அந்த நேரத்தில் அவர் வந்ததும்.

உள்ளே வந்த பாட்டி, ஸனாவிடம் தான் சென்றார்.

அவளின் முகம் சோர்வாக இருந்தது, அவருக்கு காரணம் தெரியாமல் இல்லையே!

“பேத்தி! நீ இனிமே தான் தைரியமா இருக்கனும், இந்தா உன் புருசன் உனக்கு பக்கப் பலமா இருக்கான்ல, அவன் இருக்க வரை நீ ஏன் வருத்தமா இருக்கனும். இது உங்க வாழ்க்கை சந்தோஷமா வாழுங்க, யாருக்கு புடிக்கலைனா என்ன…? உங்க ரெண்டு மனசும் ஒன்னு சேர்ந்துருச்சுல…” என்றார் பாட்டி.

“அது எப்படி பாட்டி, அப்படி நினைக்க முடியும். அதியனுக்கு இந்த குடும்பத்தின் மேல தான் பாசமே, அதுவும் அவரு தாத்தான சொல்லவே வேண்டாம், எனக்கு மனசே சரியில்லை பாட்டி”

“நீ ஏன் ரொம்ப யோசிக்குற…? எல்லாம் காலப்போக்கில் மாறும், நீங்க புருசன், பொண்டாட்டியா வாழுங்க அது தான் எல்லாருக்கும் பதில், உங்க அனியோன்ய வாழ்க்கை தான் இங்க எல்லாருக்கும் பதிலடி, அப்படி யோசிங்க” என்றார் மறைமுகமாக அவர்களின் இல்லற வாழ்க்கையை தொடங்க அஸ்திவாரம் போட்டவாறு.

அது புரியாத அளவிற்கு இருவரும் முட்டாள்கள் இல்லை..

“பாட்டி! என்ன பேசிட்டு இருக்கீங்க..? இப்ப நாங்க இருக்க சூழ்நிலையில் எங்க வாழ்க்கை ஆரம்பிச்சா அது சந்தோஷத்தில் முடியுமா…?” என்றான் அதியன்.

“இங்க பாரு பேரா!  சூழ்நிலை, பொருளாதாரம், சுற்றுப்புறம், குடும்பம், வேலை இப்படி எல்லாம் நீங்க பாக்க ஆரம்பிச்சா கடைசிவரை அதை மட்டுமே தான் பாக்க முடியும். நீங்க வாழ முடியாது, இப்ப என்ன நீங்க ஒளிஞ்சா வாழுறீங்க…? ஊரறிய புருசன், பொண்டாட்டினு சொல்லி தானே வாழ ஆரம்பிச்சு இருக்கீங்க..? என்ன இப்ப இந்த தாலி நீ கட்டலை அதானே..” என்ற பாட்டி அவர் கையில் இருந்த ஒரு தங்க செயினை தூக்கி காட்டினார்.

“இது என்னோட மாமியார் எனக்காக கொடுத்தது, ஏனா அவங்களுக்கு பொண்ணு இல்ல, அப்படி இருந்திருந்தா அவங்களுக்கு தான் போய் சேர்ந்திருக்கும். நான் இதை பாதுகாத்துட்டு வரேன், இப்ப இந்த செயினை உன்னோட பொண்டாட்டிக்கு தரேன் அவளோட தாலியை இதில் மாத்தி அவளுக்கு போட்டு விடு” என்றார்.

அதியன், ஸனா இருவருமே அதிர்ச்சியாக பார்த்தனர்.

“பாட்டி! இந்த நேரத்தில் எதுக்கு, அதுவும் யாருக்கும் தெரியாமல்…?” என்று அதியன் கேட்டான்.

“தெரிஞ்சா மட்டும் ஊரக் கூட்டி அப்படியே செல்வ செழிப்போட இந்த செயினை போட சொல்ல போறாங்களா…? நான் சொன்னதை செய். இத்தனை நாள் உன் தாத்தா சொன்னதை கேட்டல இப்ப நான் சொல்றேன் கேளு” என்றார்.

“பாட்டி!” என்று ஸனா ஆரம்பிக்க, பாட்டி அவளிடம்”உஷ்ஷ்!” என்றார்.. அவள் தாலியை கேட்டவாறு கையை நீட்டினார்.

பிறகு ஸனா எதுவும் சொல்லாமல் கழட்டிக் கொடுத்தாள்.

பாட்டியே அந்த மாங்கலயத்தை எடுத்து செயினில் கோர்த்து அதியன் கையில் கொடுத்தார்.

அந்த சங்கிலி இரண்டு சரடு இணைந்த ரெட்டை வடம் அமைப்பு, நெருக்கமாக காணப்படும் பார்க்க, கண்டிப்பாக இப்ப உள்ள டிசைன் கிடையாது, அந்த காலத்து வகையான நகை.

“அதியா! நல்ல நேரம் என்பது பகலில் தான் வருமுனு கிடையாது, அந்த காலத்தில் ராத்திரியில் கூட கல்யாணம் நடக்கும், இதுவும் அப்படி தான், நீ இங்க வந்து நில்லு இதான் கிழக்குப் பக்கம்” என்று அவனை நகர்த்தி நிற்க வைத்தார்.

இருவரும் அருகருகே நிற்க, அதியன் யோசிக்க பிறகு பாட்டியின் பார்வையில் ஸனாவின் கழுத்தில் அதை மாட்டி விட்டான்.

மகிழ்ச்சியான பாட்டியின் முகத்தில் நிம்மதி உருவானது.

அதியன் ஸனாவிடம் கண்களால் பாட்டி காலில் விழ சொன்னான்.

இருவரும் விழுந்தனர்.

“என் குல விளக்குங்க நீங்க, அது அணையாம எப்பையும் இப்படியே ஒற்றுமையா வாழனும், உங்களுக்குனு தலைமுறையை உருவாக்கி அவங்களை சந்தோஷமா வாழ விடுங்க” என்று ஆசிவதித்தார்.

அவரின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“பாட்டி! என்ன ஆச்சு…?” என்று இருவரும் அவரை நெருங்கி கைகளைப் பிடித்தனர்.

“ஒன்றுமில்லை, பழைய நெனப்பு என் பொண்ணு வாழ்க்கையை இப்படி நான் ஆசிர்வாதம் பண்ணி இருந்தா அவளும் நல்லா இருந்திருப்பாளோனு தோணுது..”

“என்ன சொல்றீங்க பாட்டி…? யாரை பத்தி பேசுறீங்க…? பெரிய அத்தையா…?” என்று கேட்டான் அதியன்.

“ம்ம்ம்!” என்று அவரின் கண்களை துடைத்தவர், “சரி! சரி! அது எல்லாம் முடிஞ்சுப் போச்சு, நீங்க சந்தோஷமா இருங்க, நான் இருக்கேன் உங்களுக்கு, பேத்தி என் பேரனை பத்திரமா கைகுள்ள வச்சுக்க..” என்று கூறி சிரித்து விட்டு வெளியேறினார்.

அவர் பின்னே சென்ற அதியன், தூரமாக பாட்டி செல்வதையே பார்த்துவிட்டு பின் கதவை சாத்தி தாழிட்டான்.

திரும்பியவன்”மஸ்து! பாட்டி பாவம் இல்ல…? அத்தை நினைவா இருக்காங்க எப்போதும். ஆனா என்ன நடந்துச்சுனு தெரியலை..” என்றான்.

“ம்ம்ம்! ஒரு விஷயம் அதியன், உங்க தாத்தாவும், பாட்டியும் பேசாமல் இருப்பது உங்க அத்தையோட இறப்பாக் கூட இருக்கலாம்.”

“தாத்தா மேல தப்பா பாட்டி இதுவரை எதும் சொன்னதே இல்லை மஸ்து, அம்மா, பெரியம்மா, சித்தி தாத்தாக்கு ஏதாவது செய்ய மறந்தாலும் அதை ஞாபகப்படுத்தி செய்ய சொல்லி திட்டுவாங்க”

“ம்ம்ம்!” என்ற ஸனா சென்று ஜன்னலோரத்தில் நின்றாள்.

அதியன் பாத்ரூம் சென்று விட்டு, படுக்க ஆயத்தமாக அப்போதும் ஸனா அங்கே நின்றாள்.

“மஸ்து!”

“ம்ம்ம்!”

“தூங்கலையா…? போ ரெப்பெரஷ் ஆகிட்டு வந்து படு” என்றான்.

ஸனாவும் மெதுவாக நடந்து பாத் ரூம் சென்று ரெப்பெரஷ் ஆக முகத்தை நன்கு  கழுவினாள்.

கண்ணாடியில் அப்போது தான் கவனித்தாள் புது தாலியை.

அது அழகாக தொங்கியது. லேசாக சிரித்தவள் அதை தொட்டுப் பார்த்தாள்.
ஏனோ உடலில் ஒரு உணர்வு வந்தது, உரிமை கிடைத்த நிம்மதி.

பிறகு டவலை எடுத்து முகத்தை துடைத்துவிட்டு, வெளியே வந்தாள்.

அதியன் ஸனா நின்ற அதே இடத்தில் நின்றான். வெளியில் வானத்தை வேடிக்கைப் பார்த்தவாறு.

ஸனா புடவையை மாற்ற கூட இல்லை, அது நினைவுக்கே வரவில்லை.

ஏதோ யோசனையுடன் வந்தவள், அதியனை கவனிக்காமல் படுக்கைக்கு சென்று படுக்க சென்றாள்.

வானத்தையே பார்த்திருந்தவன், அவள் வரும் அரவரம் கேட்டு திரும்பி பார்த்தான்.

அவளோ யோசனையுடன் வந்து தன்னையும் கண்டுக்காமல் படுக்க செல்வதை பார்த்தவன், அவளின் கையைப் பிடித்தான்.

“மஸ்து!”

திரும்பி அவனின் கை தன் கையைப் பிடித்திருப்பதை கண்டவள், “என்ன அதியா…?” என்றாள்.

கண்களால் அருகில் அழைத்தான்..

அவளும் மெதுவாக நகர்ந்து அவன் முன்னே வந்தாள்.

அவளை திருப்பி முன் பக்கம் நிற்க வைத்து, அவளின் பின்னே நின்று வானத்தை பார்த்தான்.

ஸனாவுமே வானத்தையே பார்த்தாள். பிறகு”என்ன அதியா…? தூக்கம் வரலையா..?” என்றாள் திரும்பாமல்.

“இல்ல” என்றவன் அவளின் மெல்லிடையில் தன் இடது கையை வைத்து அவளின் வயிற்றோடு இறுக்கினான்.

பிறகு அவளின் பின்னே ஒட்டியவன் அவள் தோளில் தன் முகத்தை வைத்தான்.

ஸனா அதியனின் நெஞ்சில் பின்னே சாய்ந்து அவன் வசமானாள்.

“அந்த வானத்தில் தெரியும் நட்சத்திரம் எனக்கு நீயா தெரியுற மஸ்து..”

“ஏன்…?”

“ம்ம்ம்! எத்தனையோ பொண்ணுங்க மத்தியில் என் கண்களுக்கு விண்மீனாய் மிளிர்ந்தவள் நீ”

“ம்ம்ம்!”

அவளின் காது ஓரமாய் இருந்த முடிகளை விலக்கியவன், காது மடலில் தன் இதழைப் பதித்தான்.

“அதியா!”

“ம்ம்ம்!”

“நான் இங்க வரலைனா நீங்க ஹேப்பியா உங்க பேமிலியோடு வாழ்ந்து  இருப்பீங்கள…?”

“ம்ம்ம்!” என்று அவளின் காது அருகில் தன் தலையை சாய்த்து முடியின் வாசனையை நுகர்ந்தான்.

அவனின் பதிலில் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள்.

லேசான சிரிப்போடு அவளின் நெற்றியை முட்டி”இப்பவும் நான் ஹேப்பி தான் பொண்டாட்டி, என் குடும்பத்தோடு இருக்கேன், இதோ உன்னோட நம்ம தனி அறையில். நீ வரலைனா இந்த சந்தோஷம் எப்படி கிடைச்சிருக்கும்” என்றான்.

“உங்க குடும்பத்தோடு இருக்கீங்க, ஆனா சந்தோஷம் இல்லையே…? கீழே இப்ப நடந்தது எல்லாம் நினைக்கும் போது எனக்கு கஷ்டமா இருக்கு அதியா.”

“ம்ம்ம்! யாரோ என்னையும், என் குடும்பத்தையும் பழிவாங்க வந்ததா சொன்னாங்க, அது யாருனு தெரியுமா மேடம் உங்களுக்கு..?” என்றான் நக்கலாக, அவளின் இடையில் இரு கைகளையும் வைத்து இறுக்கி அணைத்து, வலது கழுத்தில் முகம் புதைத்தவாறு.

“அது அப்போ, அதியன் யாருனு தெரியாதப்போ” என்றாள் அவள், வானத்தைப் பார்த்தவாறு.

“இப்போ..?”

“இப்ப என்னோட புருசன், மஸ்துவின் காதலன், இந்த விண்மீனின் ரசிகன்” என்று கூறி அவனின் தலையில் சைடாக மோதினாள்.

“புரியுதுல, அப்ப எதுக்கு நடந்ததையே யோசிக்குற..? எல்லாம் மாறும் அதுவரை பொறுமையா இரு மஸ்து..” என்று நிமிர்ந்து அவனும் வானத்தையே பார்த்தான்.

“ம்ம்ம்!”

“ஆனாலும் இன்னைக்கு நீ செம அழகாக  இருக்க…”

“ஏன் அதியன்..? நான் அழகாக இருக்கேனு தான் காதலிச்சீங்களா..?”

“நீ அழகா இருக்கேனு உனக்கு திமிருனு தான் நான் எண்ணி, என்னைய காதலிக்க வைக்க நினைச்சேன் ஆனா உன்னோட மனசு அதில் இருந்து நீ பேசிய மென்மையான வார்த்தைகள், யாரையும் காயப்படுத்தாத அன்பான பேச்சு, அதை உணர்ந்ததும் தான் காதலிக்க ஆரம்பித்தேன் மஸ்து”

அவனை முறைத்து”அப்படி காதலிச்சு கைவிட தானே பாத்தீங்க…?”

“ம்ம்ம்! இன்னைக்கு நடந்த மாதிரி நடந்துடக்கூடாதுனு ஒரு பயம்…”

“ஆனா நடந்துட்டே அதியன், உங்களுக்கு தாத்தாக்காக என்னைய வீட்டு விட்டு அனுப்ப தோணலையா…?”

“அனுப்பி இருப்பேன், ஒரு வேளை நானும் உன் மனசில் இருப்பது தெரியாமல் இருந்திருந்தால் மஸ்து”

அவனை விடாமல் நோக்கியவள்”நான் சொல்லாமல் இருந்திருக்கலாமோ…?”

அவளை முறைத்தவன், “ஏன் இப்படி யோசிக்குற…? என் மனசுல நீ தான்டி இருக்க, உன் மனசில் நான் இல்லனு நினைச்சு தான் உன்னைய விட்டு ஈஸியா விலக நினைச்சேன் ஆனா எப்ப நீயும் என்னைய விரும்பறேனு தெரிஞ்சுதோ, அப்பவே நான் திடமாகிட்டேன். உனக்காக உன்னைய விடக் கூடாதுனு..” என்று அவளை தன் பக்கம் திருப்பியவன், “ஐ லவ் யு மஸ்து” என்று அவள் முகத்தை கையில் ஏந்தினான்.

ஸனாவும் மெல்ல சிரித்தாள்.

ஆனால் முகத்தில் சோகம் மறையவில்லை.

“ஏய்! இன்னும் ஏன் டல்லா இருக்க…?”

“நிஜமா உங்க மனசுல வருத்தம் இல்லையா…?”

“இருக்கு தான், ஆனா இப்ப தாத்தா பத்தி யோசிச்சா வருத்தம் தான் மிஞ்சும், அவருக்கு என்னைய ரொம்ப புடிக்கும் மஸ்து, எனக்கு தீங்கா எதுவும் நினைக்க மாட்டார். பாப்போம்..”

“ஆனா என்னைய புடிக்காதே!”

“புடிக்கும் ஒரு நாள்” என்று அவளின் நெற்றியில் முத்தம் வைத்தவனிடம் அடுத்துப் பேச போனாள்.

ஆனால் அவளின் வாயை மூடி, அவளை அப்படியே தன் இரு கைகளால் தூக்கினான்.

“அதியா!” என்றாள் ஸனா அதிர்ந்து.

“உஷ்!” என்று அவளை சுமந்தப்படி படுக்கைக்கு சென்று கிடத்தினான்.

இரவு விளக்கைப் போட்டவன், ஸனா அருகில் நகர்ந்து அவளை அணைத்து தன்னோடு படுக்க வைத்தான்.

அதியனின் மார்பில் தன் தலையை வைத்த ஸனா, “அதியா! இது கனவா..? நனவா…? தெரியல, ஆனா நான் ஹேப்பியா இருக்கேன், உங்க பக்கத்தில் இருக்கேன், ஏதோ இன்னைக்கு தான் நீங்க முழுமையா எனக்கு கிடைச்ச உணர்வு…”

“ஏன்…?”

“இல்ல! தாலியை நானே கட்டிக்கிட்டேன், ரெஜிஸ்டரில் உங்களுக்கு தெரியாம தான் கையெழுத்துப் போட்டீங்க, அதனால எனக்கு உள்ளளுக்குள் ஒரு உறுத்தல் இருக்கும் ஆனா இன்னைக்கு அது இல்லை, என் புருசன் என்னோட உரிமைனு தோணுது” என்று இன்னும் நெருங்கிப் படுத்தாள்.

“பாட்டிக் கொடுத்த செயினை நான் போட்டதால உனக்கு இந்த ஃபீல் கிடைச்சு இருக்கும், அப்புறம் நான், இந்த அணைப்பு, இது எல்லாம் நிஜம் தான் மேடம், வேணுனா உறுதிப்படுத்தவா!” என்று அவளின் இதழை பற்றினான் தன் இதழால்.

சட்டென்று முத்தத்தில் இறங்கியவன் விழிகளை வெறித்து நோக்கினாள்.

அவளின் விழிப்பார்வை புரியாமல், அவளை விலக்கி விட்டவன்.

“என்ன மஸ்து..?”

ஒன்னுமில்லை என்று தலையை ஆட்டினாள்..

“சொல்லு!”

“இல்ல! என்னோட ஃபாஸ்ட் பத்தி தெரியாம நீங்க என்னைய காதலிச்சீங்களா…?”

“நான் உன்னைய தான் காதலிக்குறேன்..
உன்னோட ஃபாஸ்டை  இல்லை..”

“அப்படியில்லை அதியா! நாளைக்கே நம்ம உறவில் ஏதாவது ஒரு வார்த்தை தப்பா என்னைய பற்றி உங்களுக்கு நினைக்க வச்சா அது நம்ம காதலுக்கே அர்த்தம் இல்லாமல் போயிடும்..”

“மஸ்து! உனக்கு தான் ஃபாஸ்ட் இருக்கா..? ஏன் எனக்கு இல்லையா…? நீ ஏன் அப்படி யோசிக்கவே இல்லை. எனக்கும் டேட்டிங் இருந்திருக்கு கேர்ள் ப்ரண்ட்ஸ் கூட…”

ஸனா ஆச்சரியமாக பார்த்தாள்.

“ஏன் அப்படி பாக்குற…?”

“இல்ல! உங்க தாத்தாவை மீறியா…?”

“அதான் விசயமே, ப்ரண்ட்ஸ் கூட போகும் போது எல்லாரும் நான் தாத்தாக்கு பயந்துட்டு பொண்ணுங்க பக்கம் போக மாட்டேனு அவனுங்க டீஸ் பண்ணினாங்க, அப்ப தான் ஏன் நான் டேட்டிங் செய்யக் கூடாதுனு தோணுச்சு தாத்தாக்கு தெரிஞ்சா தானேனு தெரியாம எல்லா வேலையும் பார்த்திருக்கேன், ஆனா தாத்தாக்கு சுத்த அக்மார்க் நல்ல பையன், அவரும் அப்படி தான் மஸ்து..”

“ஓ!”

“என்ன ஓ! அப்படி ஆரம்பித்தது தான் உன்னோட நம்பர் வாங்கி சாட்டிங். ஆனால் நீ என்னைய வேற மாதிரி யோசிக்க வச்சுட்ட..”

“உங்க தாத்தாவை ரொம்ப புடிக்குமுனு சொல்றீங்க…? அப்ப எதுக்கு அவருக்கு தெரியாம அவருக்கு புடிக்காத விஷயங்களை பண்ணனும் அதியா…?”

“எனக்கு புடிச்சு இருக்கே மஸ்து, அவருக்கு தெரியாம என்னோட லைஃபை நான் என்ஜாய் செஞ்சுட்டு தான் இருந்தேன்…”

“அப்போ நான் மட்டும் தான் அப்பாற்பட்டு உங்க தாத்தா பார்வைக்கு வந்தது, நீங்க மாட்டிகிட்டீங்க..?”

“ச்சே! ச்சே! நீ தாத்தா பார்வைக்கு வந்தா அவரு உன்னைய சமமா நினைக்க மாட்டாருனு என் மனசுக்கு பட்டுச்சு அதான் ஒதுங்கினேன், ஏனா உனக்குனு ஒரு செல்ப் ரெஸ்பெக்ட் இருக்கு. தாத்தாவை மீறி அதை உனக்கு வாங்கி தர முடியாதுனு நினைச்சேன் ஆனா இப்ப அது நடக்க முதல் முயற்சி எடுத்திருக்கேன். பார்க்கலாம்”

“ம்ம்ம்!”

“இப்ப என் ஃபாஸ்ட் தெரிஞ்சுட்டா…?”

அவனை முறைத்தாள்..

“ஆனாலும் இந்த பொண்ணுங்களுக்கு இந்த பொறாமை எப்படி தான் வருதோ..?” என்று சிரித்தான்.

ஸனா அவனை மார்பில் அடித்தாள்.
“அப்படி எல்லாம் இல்லை, அந்த மாதிரி பொறாமைப்பட நான் முதலில் வெர்ஜினா இருக்கனும்.. எனக்கு தான் வாழ்க்கை அப்படி அமையலையே..”
என்று வருத்தமாக கூறினாள்.

“லூசாடி நீ! ஏன் அதையே யோசிக்குற..? அப்ப நான் யாரு…? நானும் ஒழுக்கமா இல்லையே..? ஆனா அதுக்காக நம்ம வாழ்க்கையை ஒழுக்கம் இல்லாம வாழ முடியுமா..? இப்ப நான் புருசன், நீ பொண்டாட்டி அதை மட்டும் யோசி. வேற எதையும் போட்டுக் குழப்பிக்காத” என்றான்.

“ம்ம்ம்!” என்றாள் அவள்.

“இதுக்கு மேல உனக்கு புரிய வைக்க முடியாது, நீயா புரிஞ்சுகிட்டு என் பக்கத்தில் வா, என்னைய கணவனா மட்டும் நினைச்சா” என்று அதியன் விலகி சென்றான் பெட்டின் மறு ஓரத்திற்கு.

ஸனாக்கு ஏதோ இழந்தது போல் தோன்ற, உடனே விலகிய நொடியில் அவனை இழுத்து அவன் மேல் படர்ந்து அவன் இதழில் தன் இதழை பதித்தாள்.

அதியன் விழிகள் அவளின் விழிகளையே நோக்கியது.

இந்த முறை ஸனாவின் விழியோரத்தில் காதல் மட்டுமே தெரிந்தது.

அவளை அப்படியே இரு கைகளாலும் கட்டி அணைத்தவன், இதழ்கள் பிரியாமல் அவளை பக்கவாட்டில் கிடத்தி, அவள் மேல் படர்ந்தான்.

நொடி நிமிடமாக ஸனாக்கு காற்று வேண்டி புருவத்தால் அதியனை கெஞ்சினாள்.

அதியன் அவளை விடுவித்து, முகம் முழுவதும் முத்ததால் கவிதை வாசித்தான். ஸனா கண்களை இறுக மூடி இருந்தாள்.

“மஸ்து!”

“ம்ம்ம்!”

“இதோட ஸ்டாப் பண்ணிட்டா நல்லதுனு தோணுது..”

விழிகளை விரித்தவள், அதே விழிகளால்
‘ஏன்..?’ என்றாள்.

அவளின் கைகள் அவனின் முதுகில் படர்ந்திருந்தது..

அதியன் கை விரல்களால் அவளின் முகத்தில் மெல்லிய கோடுகளை இழுத்தப்படி பேசினான்.

“ம்ம்ம்! உனக்கு தான் பிரச்சனை..? உன் ப்ராஜெட் நினைவு இல்லையா..?”

ஸனாக்கு நினைவில் வந்தது ஷூட்டிங் வேலைகள் மிச்சமிருப்பது.

ஆனால் அதை தாண்டி, இந்த நிமிடம் அதியனின் கூட இருப்பது தான் அவளுக்கு வரமாக தெரிந்தது.

“அதியா! எனக்கு தெரியல, ஆனா இப்ப எனக்கு நீங்க மட்டும் போதுமுனு தோணுது, ஐ வான்ட் யு, நான் என்ன செய்ய..? நீங்களே சொல்லுங்க…”

அதியனுக்கு ஸனாவின் நிலை புரிந்தது.
அவளுக்கு இந்த நிமிசத்தில் அவனோடு வாழ்க்கை ஆரம்பிக்க ஆசை, ஆனா கமிட்மென்ட்ஸ் யோசிக்க முடியல.

அதியன் அவனோட வேலைனா யோசிக்காமல் பதில் சொல்வான் ஆனால் ஸனாவின் நிலை…?

அவளை விட்டு எழுந்தமர்ந்த அதியன் அமைதியாக ஸனாவையே பார்த்தான்.

“என்ன உங்களுக்கும் பதில் சொல்ல முடியலையா…? இட்ஸ் ஓகே.. ரொம்ப யோசிக்க வேண்டாம். இப்படி நம்ம ஒன்னா சேருவோமோனு நம்ம நினைச்சமா என்ன.. அதே மாதிரி எல்லாம் நன்மைக்கே மை டியர் புருசா”
என்று  இரு கைகளையும் நீட்டினாள்.

அதியன் சிரித்து அவள் அருகே சென்றான்.

அருகில் வந்தவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

இருவருக்கும் அந்த நிமிடம் எதுவுமே, யாருமே நினைவில் இல்லை.

புடவையில் அன்று ஸனா அழகில் ஓவியமாக இருந்தாள்.

அதியன் அவளின் வெற்றிடையில் கைகளை படரவிட்டு, ஸனாவின் முகம், கழுத்து என முன்னேறினான் முத்தத்தால்.

“அதியா! குழந்தைனா உங்களுக்கு புடிக்குமா…?”

“இது என்ன கேள்வி…? குழந்தைனா புடிக்காம இருக்குமா..? இப்ப எதுக்கு கேக்குற…?”

“சும்மா தான்” என்று ஓர் நினைவுக்கு சென்றாள்.

‘இந்த குழந்தையை கலச்சுடு, வெளியில் தெரிஞ்சா உனக்கு தான் அசிங்கம்’

‘நம்ம அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கலாம்’

‘இப்ப என்னால முடியாது, இதை கலச்சுடு, குழந்தை எல்லாம் நீ பெத்துக்கிட்டா சினிமா சான்ஸ் கிடைக்காது, அப்புறம் உன் எதிர்காலம் ஸ்பாயில் ஆகிடும், நான் கிளம்புறேன்’

ஸனா மனம் நொந்து அமர்ந்தாள், அது எதிர்ப்பார்க்காத நிலை, ஆனால் எதிர்ப்பார்த்தவனின் அடையாளம் காட்டிய நாள்.

களைத்துப் பாவம் செய்தாள் அன்றே.
அது பாவமாக இருந்தாலும், பிறந்த பின் அந்த குழந்தை பாவப்பெயரோடு வளரக் கூடாது என்ற ஒரே எண்ணம் தான் அவளின் மனதில் இருந்தது.

“டோன்ட் வொரி, குழந்தை வந்தா பாத்துக்க நம்ம வீட்டில் நிறையப் பேர் இருக்காங்க” என்ற அதியனின் குரல் எங்கயோ கேட்பது போல் இருந்தாலும் அது இனிமையாக இருந்தது.

சுய உணர்விற்கு வந்தவள், அதியனின் ஸ்பரிசத்தை மனதார ஏற்றாள்.

“அப்ப நீங்க…?”

“நானா!” என்று அவளின் முகத்து அருகே வந்தவன், “அடுத்தக் குழந்தைக்கு உன்னை ரெடிப்பண்ணுவேன்…” என்று நெற்றியில் முத்தம் வைத்தான்.

“டேய்!  இது ஓவரா இல்ல..” என்று அவனை அடித்தாள்.

“பின்ன இது கேள்விக் கேக்குற நேரமா..? நீ விட்டா விடிய விடிய பேசிகிட்டே இருப்ப மஸ்து, நோ மோர் டாக்ஸ் இல்ல இல்ல நோ டாக்ஸ்..” என்று அவளின் வாயை மூடினான்.

“ம்ம்ம் உம்ம்!” என்ற ஸனாவிடம், “உஷ்ஷ்ஷ்!” என்றான் அதியன்.

“ப்ளீஸ்டி! பேசக்கூடாது” என்றவனை அவள் பார்த்த பார்வையில் வாயில் இருந்த கையை தானாக எடுத்தான்.

விழிகளில் முழு சந்தோஷம் தெரிய, புன்னகை அங்கு பிராகசித்தது.

புருவத்தை உயர்த்தியவளிடம், அதியன் வீழ்ந்தான் முழுமையாக..

அவளின் புடவையை களைத்து, அவளின் ஆடையாக மாறினான்..

ஸனாவின் கைகள் தானாக போர்வையை தேடியது, கையில் பட அதில் தங்களை நுழைத்தாள்.

போர்வைக்குள் இரு உயிர் ஓருடலாய் இணைந்தனர்.

ஸனாவின் மனதில் அதியன் மட்டுமே நிறைந்து இருந்தான்.

அவளின் தாலி மட்டுமே நெஞ்சில் கிடக்க, அது தடையாக இருந்தாலும் அதியனுக்கு தன் மனைவி என்ற உணர்வை அளிப்பதாக தெரிந்தது.

கனவு தான் தங்கள் வாழ்க்கை என்று எண்ணி வாழ நினைத்தவர்கள் நனவில்
இன்று தாம்பத்ய தம்பதியாய் கூடலில் சேர்ந்தார்கள்.

அவர்களின் இல்லற வாழ்க்கை அழகாக தொடங்கப்பட்டது.

தங்கள் அன்பை பலவாறு நிரூபித்தனர் போட்டிப் போட்டு, மனதின் காயங்கள் வடுவாக கூட தெரியாமல் பார்த்துக் கொண்டனர்.

அதியனுக்கு மஸ்து மாய லோக தேவதையாக தெரிந்தாள். அவளை ஆள்பவனாக அதியன் வலம் வந்தான்.

வீட்டில் நடந்ததை  இருவரும் மறந்து திளைத்திருக்க, விடியல் நோக்கி இரவு நகர்ந்தது.

மெய்மறந்து போர்வையை ஆடையாக கொண்டு, அதியன் மார்பில் கிடந்தாள் ஸனா.

அதிகாலை பறவைகளின் ஓசை எங்கோ கேட்க, விழி அகல அருகே வந்தது சத்தம்..

அதியன் கண் முழிக்காமல் இருக்க, ஸனா மட்டும் முழிக்க நிமிர்ந்தாள்.

அதியன் மார்பில் மேலும் நகர்ந்து ஆழமாக ஒன்றினாள் மறுபடியும் கண்களை மூடியவாறு..

“ஹேய் பொண்டாட்டி! இது காலை தான் மேடம், குட் மார்னிங்” என்றான் அவளை அணைத்தவாறு.

“குட் மார்னிங் புருசா!” என்றாள் அவளும் இறுக்கி அவனை.

எழுந்திரிக்க மனம் இல்லாமல் படுத்திருந்தனர் இருவரும்.

அதியனவள் அடுத்து..

Advertisement