Advertisement

காலைப்பொழுது அதியன், ஸனா இருவருக்கும் அழகாக விடிந்தது..

வாழ்க்கையில் பல போராட்டாங்களுக்கு பிறகு, சென்ற இரவு தான், சுதந்திர மனதோடு பேசி, அன்பை பரிமாறி தங்களை மறந்து உறங்கினர்.

விடிந்து கண் முழித்த ஸனா, அதியன் மார்பில் சாய்ந்து, “அதியா! நேத்து நினைச்சுப் பாத்து இருப்பமா இப்படி ஒன்னா கட்டிப்பிடிச்சு தூங்குவோமுனு…?” என்று கேட்டாள்.

கண்களை திறவாமல்”ம்ம்ம்! ஆனா நடந்துட்டே. ஏதோ மிராக்கல் நடந்த மாதிரி இருக்கு மஸ்து, நான் நானாவே இல்லை நீ போனதில் இருந்து, ஒரு பக்கம் உன்னைய போகாதனு சொல்ல முடியாத சூழ்நிலை, ஒரு பக்கம்…?” என்று நிறுத்தினான்.

“என்ன அதியா…?”

கண்களை திறந்து அவள் பக்கம் திரும்பியவன்”நான் இந்த வீட்டுப் பையன் இல்லைனு தெரிந்ததும் பெரியம்மா, சித்தி சரியில்லை.. அவங்களுக்கு முன்னாடியே தாத்தா எனக்கு எல்லாப் பொறுப்பும் கொடுத்ததே புடிக்கல.. இப்ப என்னை ஏதோ விரோதி மாதிரி பாக்குறாங்க..”

“ம்ம்ம்! தெரிஞ்சது தானே.. நீங்க எதையும் நினைக்காதீங்க அதியா..”

“இல்ல மஸ்து! என்னோட இடம் நியாயமா பாரிக்கு தான் போகனும். அதான் சரி, இதப்பத்தி தாத்தா கிட்ட நேத்தே பேசலாமுனு தான் இருந்தேன். அதுக்குள்ள நீ நேத்து வந்து நம்ம புதுவரவைப் பத்தி சொல்லி கலங்கடிச்சுட்ட.. அப்புறம் எல்லாமே என்னைய மீறி நடந்தது தான்..”

“ஓகே! நல்ல முடிவு தான்.. பாரிக்கு பொறுப்புக் கொடுப்பதில் எனக்கு சந்தோஷம் தான்.. நீங்க என்ன முடிவு எடுத்தாலும் ஐ ஆம் ரெடி டு டெல் ஓகே அதியா..” என்று அவன் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

“தேங்க்ஸ்! தேங்க்ஸ் சோ மச், இந்த மாதிரி சப்போர்ட் பண்ண யாருமே இல்ல இங்க”

“ஏன் அதியா..? தாத்தா, பாட்டி, பாரி, தங்கச்சிங்க.. எல்லாருக்கும் மேல அத்தை, மாமா இருக்காங்கள.? அப்புறம் என்ன…?”

“இல்ல மஸ்து! நீ போன அன்னைக்கு வரை, பெரியம்மா, சித்திக்கு நான் ஒரு போட்டியா இருந்தேன் ஆனா இந்த வீட்டுப் பையனு உரிமை இருந்தது.. என்னைக்கு நான் இந்த வீட்டுப் பொண்ணுக்கு பிறந்தவனு தெரிஞ்சதோ அப்ப இருந்து அவங்களுக்கு நான் எதிரி அதாவது சொத்தில் பங்குக்கு வந்த எதிரி.. ஆனா எனக்கு மனதில் என் குடும்பமுனு இருந்த உணர்வு எங்கோ மாற தொடங்கின மாதிரி ஒரு ஃபீல் மஸ்து.. ஏனா முன்னாடி மாதிரி பிஸ்னெஸ்லிலும், வீட்டிலும் முடிவு எடுக்க முடியலை.. ஆனா அவங்க இருவரை தவிர மத்தவங்க பாசமா இருக்காங்க, பாட்டிக்கு உன்னைய வெளியில் அனுப்பிட்டனு  கோபம் தான்..”

“ம்ம்ம்! புரியுது அதியா, இது இயற்கையா வருவது தானே.. சரியாகும் விடுங்க..”

“முன்னாடி எனக்கு தோணலை மஸ்து இந்த வீட்டை விட்டுப் போக கூடாதுனு ஆனா இப்ப தோணுது, என்னால இந்த வீட்டில் ஒரு கலவரம் வெடிப்பதற்குள் ஏன் போக கூடாது…” என்றவனை ஆச்சரியமாகப் பார்த்தான்.

“அதியா! நீங்களா பேசுவது…?”

“ஆமா! இந்த குடும்பம் தான் எனக்கு எல்லாமேனு நினைச்சு இருந்தேன். ஆனா அப்ப இங்க என்ன பிரச்சனை வந்தாலும் நான் சோழ ராகவன்- மல்லிகா பையனு உரிமை இருந்தது இப்ப அதே பாசம் இருந்தாலும் அந்த உரிமை போச்சு, எப்படி நான் இங்க வாழ முடியும் மஸ்து…?”

“அதுக்காக நேத்து வரை நீங்க இப்படி யோசிக்கலை இன்னைக்கு யோசிச்சா உங்க தாத்தா என்ன நினைப்பாரு..? நான் வந்து சொன்னதா நினைக்க மாட்டாரா..?”

“இது இன்னைக்கு எடுத்த முடிவு இல்லை மஸ்து, நீ போன கொஞ்ச நாளிலே எடுத்தது, யாருக்குமே பாதகம் இல்லாமல் வெளிநாடு போகலாமுனு நினைச்சேன்.. இந்த குடும்பத்தில் இருந்து சண்டைப் போட்டு போகாமல் விலகி அதே நேரம் நான் விலகி இருக்கேனு தெரியாம பாரியிடம் பொறுப்பை கொடுத்துட்டுப் போக தான் முடிவு எடுத்திருந்தேன்..”

“ஓகே அதியா! இதை நீங்க நான் இந்த வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி சொல்லி இருந்தா சரியா இருந்திருக்கும்.. ஆனா உங்க தாத்தாவே என்னைய வீட்டுக்கு அழைச்சுட்டு வந்த பிறகு, உங்க முடிவை சொன்னா பிரச்சனை பெருசா தெரியும். அப்புறம் உங்க தாத்தாக்கு தான் பெரிய அவமானம் அதியா..” என்று விளக்கமாக கூறினாள்.

“ஆனா! இப்படியே இருந்தா எத்தனை நாளைக்கு சரியா வரும்..?”

“வரும், சோழா மாமா, மல்லிகா அத்தைக்கு நீங்க தானே பையன். அப்ப அவங்களுக்கான உரிமை உங்களுக்கு இருக்கு.. இல்லைனா நான் சொல்றேனு தப்பா நினைக்காதீங்க அதியா, வரு அத்தை- வகீம் மாமா பிள்ளைனு சொல்லிட்டு கிளம்புங்க.. நானும் கூட வரேன்..” என்றாள் அழுத்தமாக.

“சத்தியமா அது முடியாது.. அவங்க யாருனே எனக்கு தெரியாது, அத்தையா கூட தெரியாதவங்க அம்மா இடத்தில் நான் எப்படி வைக்க முடியும்.. முடியாது..”

“அப்ப இதப்பத்தி பேசாதீங்க அதியா, உங்க தாத்தாக்கு தெரியும்.. என்ன செய்வதுனு..” என்றவளை பார்த்து சிரித்தான்.

“என்ன…?”

“இல்ல! என் தாத்தவே புடிக்காது உனக்கு ஆனா இன்னைக்கு இத்தனை சப்போர்ட்.. “

“ஆமா! அவரோட மொத்தக் குணமும் நம்ம விஷயத்தில் தலைகீழா மாறி இருக்கே.. பின்ன எப்படி புடிக்காமப் போகும். கொஞ்சம் நல்லவரு தான்..”
என்றவள் போன் அடித்தது.

விறலி படத்தின் டைரக்டர் தான்.

“டைரக்டர் சார் கூப்புடுறாரு அதியா!”

“அட்டென்ட் பண்ணு..”

“ம்ம்ம்!” என அட்டென்ட் பண்ணி காதில் வைத்தாள்..

“குட் மார்னிங் சார்!”

“குட் மார்னிங் ஸனா, ஹவ் ஆர் யு..?”

“யா ஓகே சார்.. எனிதிங் இம்பார்ட்டென்ட் திஸ் மச் இயர்லி காலிங்..”

“ம்ம்ம்! ஆமா, மிஸ்டர் நவநீதம் ஐயா கால் பண்ணினார்..” என்று அவர் நிறுத்த.

சற்று அதிர்ச்சி ஆனாலும்”சொல்லுங்க சார்..”

அதியன் ஸனாவின் முக மாற்றாத்தை கண்டு’என்ன…?’ என்றான் புருவத்தால்.

கண்களை அசைத்து வெயிட் என்றவள்.

“அவர் வீட்டுக்கு வாரிசு வரப்போதாம். அதனால் உன்னைய கவனமா ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்துக் கொள்ளனுமாம்”

“சாரி சார்” என்று நிறுத்த.

“ஸனா! நீ கன்சீவ்வாக இருப்பது எனக்கு சந்தோஷம் தான். ஆனால் உனக்கே தெரியும் நம்ம ப்ராஜெட் பத்தி, இந்த நிலையில் நீ…? எனக்கு புரியலைமா..”

“சார்! நான் கண்டிப்பா ப்ராஜெட்டை முடிச்சு தந்துடுறேன்”

“எப்படி ஸனா..? இன்னும் படம் பாதி இருக்கு.. ஆறு மாசம் ஆகும்.. அது ஒரு எஸ்டிமேசன் தான்.. இது ஒன்னும் மறைக்க கூடிய விஷயமில்லையே..? இன்னும் மூன்றோ இல்ல நான்கு மாதத்தில் உன் நிலை வெளியில் தெரியும். பத்திரிக்கை, சோசியல் மீடியாவில் உன் வயிறையே ஃபோகஸ் பண்ணி கதை கதையா போடுவாங்க. வாட் நெக்ஸ்ட் எனக்கு புரியல…?” என்றார் வருத்தமாக..

“சார்! ஐ அண்டர்சேன்ட்.. நான் நடிச்சுக் கொடுத்துடுறேன். நீங்க ஷூட்டிங்கில் என் போர்ஷனை சீக்கிரம் எடுக்க மட்டும் ஹெல்ப் பண்ணுங்க போதும்.. கண்டிப்பா ஐ வில் டு இட்..”

“ம்ம்ம்! ஐ நோ அபௌவட் யு ஸனா, நீ ரொம்ப டெடிகேஷனான பொண்ணு அதனால் தான் உன்னைய திட்டவும் மனசு வரலை, எனக்கும் பேமிலி இருக்கு உன்னைய வேற மாதிரி டிசைடுப் பண்ண சொல்ல மனசு வரலை. ஆனா புரோடீசர் என்ன சொல்றானு தெரியலை.. பாப்போம் கதையை எதும் சேன்ஞ்ச் பண்ண முடியுமா இல்லை, ஷார்ட் டெர்ம் ஷூட்டிங் வைக்கலாமனு பிளான் பண்ணனும். நீ பத்து நாட்கள் ரெஸ்ட் எடு. அதுக்குள்ள நான் ஒரு டிசைடு பண்ணிடுறேன் வாடஎவர்.. படத்தை உன்னைய வச்சு தான் முடிக்கனும்..” என்று  ஃபோனை வைத்தார்.

ஸனாக்கு கொஞ்சம் நிம்மதியா இருந்தது, நல்ல வேளை தாத்தா ஆரம்பிச்சு நல்ல படியா முடிஞ்சுட்டு என நினைத்தவள், அதியன் கிட்ட விஷயத்தைக் கூறினாள்..

“ஓகே! ரிலாக்ஸ் ஆகு, எதுவா இருந்தாலும் ஃபேஸ் பண்ணிக்கலாம். ஐ ஆம் வித் யு..”

“ம்ம்ம்! தேங்க்ஸ் அதியா.. நான் போய் உன் தாத்தாவை பாத்து ஒரு தேங்க்ஸை போட்டு வரேன்.. அவர் ஆரம்பித்ததால் டைரக்டர் சார் மனசு கொஞ்சம் ரீகன்சிடர் பண்ணுதுப் போல…” என்று எழுந்தாள்.

“தாத்தா உன்னைய ஏதாவது சொல்ல போறார் மஸ்து..”

“அதை நான் பாத்துக்குறேன்.. நீங்க எழுந்து ரெப்பெரஷ் ஆகுங்க..” என நவநீதம் அறைக்கு சென்றாள்.

“உள்ளே வரலாம..?”

நவநீதம் திரும்பி பார்க்க, பாட்டி பாத் ரூமில் இருந்து வெளியில் வந்தார்.

“வாம்மா பேத்தி” என்றார் பாட்டி.

நவநீதம் யாருனு பாத்துட்டு திரும்பிக் கொண்டார்..

“பாட்டி! நான் தாத்தவை பாக்க தான் வந்தேன்..”

“ஓ! எப்ப தாத்தா ஆனாரு” என்று நக்கலாக கேட்டார் பாட்டி.

“ம்ம்ம்! உங்க பேரனுக்காக விட்டுக் கொடுத்ததால்…” என்று சிரித்தாள் ஸனா.

“என்ன விஷயம்…?” என்று அதட்டினார் நவநீ.

“நீங்க டைரக்டர் சார் கிட்ட பேசுனீங்கனு சொன்னாரு.. அதுக்கு ரொம்ப நன்றி தாத்தா..” என்றாள் அவர் அருகில் சென்று.

“அது என் பேரனுக்காக தான்.. உனக்காக இல்லை.. கிளம்பு” என்றார் அவர்.

பாட்டி முகத்தை சுளித்து விட்டு வெளியில் போக நடக்க…

“பாட்டி! ஒரு நிமிஷம்.. இங்க வாங்க..”

“என்னம்மா..?”

“வாங்க ப்ளீஸ்!” என்றவள் அறையின் கதவைச் சாத்தினாள்.

பெரியவர்கள் இருவருமே புரியாமல் பார்க்க..

“உங்க ரெண்டுப் பேர் கிட்டையும் நான் ஒரு விஷயம் பேசனும்..”

“என்ன” என்பது போல் நோக்கினர் இருவரும்.

“அதியனுக்கு இந்த வீட்டில் வித்தியாசமான உணர்வு வந்துட்டு அதாவது உரிமை இல்லாத நிலை. அவரே ஒரு முடிவு எடுத்திருந்தார் ஆனால் அது தப்புனு நான் சொல்லிட்டேன்..” என அதியன் கூறியதை விளக்கிக் கூறினாள்.

“தாத்தா! உங்க பேரன் மனசு உங்களுக்குப் புரியுமுனு நினைக்குறேன். நீங்க தான் நல்ல முடிவா எடுக்கனும். அதியனுக்கும், எனக்கும்  இந்த வீட்டில் சொத்து, பணம் வேண்டாம், உரிமையான பாசம் இருந்தால் போதும்.. இல்லைனா..” என்று நிறுத்தினாள் ஸனா..

“இல்லைனா..?” என்று கேட்டார் நவநீ அவளை ஒரு பார்வைப் பார்த்து.

“இல்லைனா! இது சொன்னா நீங்க கோபப்படுவீங்க ஆனா உண்மை இதானே.. அதியனை அவருக்கு உரிமையானவர்களிடம் ஒப்படைச்சுடுங்க தாத்தா. ஏனா! இந்த வீட்டில் வேற எந்த அசாதரண வாக்குவாதம் வந்தா அதியன் உடைஞ்சுப் போயிடுவார்..”

அதிர்ச்சியாய் பார்த்தார் நவநீதம்.

‘வா பேத்தி! அப்படி சொல்லு, இதை தான் யாரு சொல்வானு பாத்தேன்.. நீ ஆரம்பிச்சுட்ட.. பாப்போம்..’ என சிரித்த பாட்டி.. “ஸனாம்மா! சொன்னா எல்லாம் புரியாது.. உன் புது தாத்தா கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லு. இந்த வீட்டில் உள்ளவங்களுக்கு சொத்தைப் பிரிச்சுக் கொடுத்தா போதும், அன்னைக்கு எல்லாம் வெளிச்சத்திற்கு வரும். அதியனுக்கும் விடிவுப்பொறக்கும்..” என்று  வெளியில் கதவை திறந்துட்டு சென்றார்.

ஸனா தாத்தாவைப் பார்க்க..

“இன்னும் என்ன சொல்லனும்..?”

“பாட்டி சொன்ன மாதிரி நீங்க முடிவு எடுத்தா, அதியனுக்குனு பங்குனு எதுவும் செய்யாதீங்க தாத்தா. அது பெரிய பிரச்சனையாகும்..” என்று நகர்ந்தாள்.

நவநீதம் யோசித்தார்.. அதிகமாக யோசித்தார்..

****

வரு ஸனா கிட்ட போன் பேசினார்.

“ஸனா! எப்படி இருக்க…? இந்த சூழ்நிலையில் உன்னை நேரில் பார்க்க ஆசையா இருக்கு, பீவி சொன்னதும்.. என்னால மனசை அடக்க முடியலை உண்டாகி இருக்க உன்னை பாக்க. என் அப்பா இந்தளவு அதியனுக்காக மாறுவாருனு நினைக்கலை.. இப்ப நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..” என்று மூச்சு விடாமல் பேசினார்.

“அத்த! போதும் மூச்சை விடுங்க.. எனக்குமே இது எதிர்ப்பார்க்காத சந்தோஷம் தான்.. தாத்தா அதியனுக்காக தான் என்னை இங்கு கூட்டி வந்தார். அதுவே ஹேப்பி.. நான் வரேன் அத்தை அங்க.. கவலைப்படாதீங்க.. பத்து நாட்கள் ஷூட்டிங் இல்லை.. இப்ப கிளம்பினா அதியனே திட்டுவார் வெளியில் போகாதுனு.. ஷூட்டிங் போகும் போது வரேன்.. அதுவரை போனில் பேசுவோம்..” என்று சிரித்தாள்.

“ம்ம்ம்! அதியன் எப்படி இருக்கான்.. எங்களை பத்தி எதும் பேசுவான…?”

“இது பேராசை அத்த, அவருக்கு நீங்க மண்டையில் இனி தான் வருவீங்க. கவலைப்படாதீங்க..”

“ஆமா! திடீருனு அப்பா, அம்மானு சொன்னா அவனும் என்ன செய்வான்.. பொறுமையா காத்திருக்கிறோம்..”

****

ஒரு வாரம் சென்றது..

வீட்டில் அனைவரும் சாதரணமாக இருந்தனர்.. ஆனால் உள்ளுக்குள் ஆயிரம் பிரிவினை உண்டாகி இருந்தது..

தேவியும், மாலினியும் தான் உச்சத்தில் இருந்தது.. தேவிக்கு அவரின் மகள்கள் துணையாக நின்றனர்.. ஆனால் வெளியில் தெரியாமல்.

மாலினிக்கு மகள்கள் துணை இல்லை. ஆனால் பாண்டியனை பேசியே டார்ச்சர் செய்தார்.. எனக்கு ஆம்பளை பிள்ளை இல்லைனு தானே உங்க அப்பா ஓரவஞ்சனை செய்றாருனு.

Advertisement