Advertisement

வேகமாக வந்த பாரியை கண்ட பரணி
“தம்பி! எங்க போனீங்க….? உங்களால அதியன் தம்பி அடி வாங்கி இருக்கார்.. நல்ல வேளை இங்கு யாருமில்லை” என்றார் சிறிது கோபமாக.

“அங்கிள்! என்ன ஆச்சு…? சாரி அண்ணா..”

பரணி நடந்ததைக் கூறினார்.

“அய்யோ! இந்த தாத்தா ஏன் தான் இப்படி இருக்காரோ…? சாரி அண்ணா”

“சார்!” என்று ஆரம்பித்த அதியனிடம்.

“ப்ளீஸ் அண்ணா!” என்றான் பாரி கண்களை சுருக்கி கெஞ்சியவாறு.

“ம்ம்ம்! சரி, எங்க போன…? என்ன ஆச்சு..?”

“அது வந்து அண்ணா…” என்று இழுத்தவன்.. பிறகு நடந்ததைக் கூறினான்.

“இதை நீ என் கிட்ட சொல்லி இருக்கலாமே பாரி..”

“இல்லண்ணா! உங்களுக்கு தெரிஞ்சா கண்டிப்பா தாத்தாக்கு தெரியாம எதுவும் செய்ய மாட்டீங்க, அக்கா பயந்தா, தாத்தா, அப்பாக்கு தெரிய வேணாமுனு அதான்…”

“சரி தம்பி! இப்ப தாத்தாக்கு என்ன பதில் சொல்வது, இப்ப அதியன் தம்பி பிரச்சனையில் இருக்கார்.”

“அண்ணா! நீங்களே எதையாவது செய்யுங்க, ப்ளீஸ் எனக்கு எதுவும் தோணலை.. ஆனா தாத்தாக்கு தெரிஞ்சா என்னை மட்டுமில்லை, அக்கா, மாமா எல்லாருமே அசிங்கமாகிடும்..”

“ம்ம்ம்! என்ன செய்றது பாரி..? நாளைக்கு கொடுக்க அந்த கிளைன்டே ஒத்துக்கிட்டாலும் தாத்தா ஒத்துக்க மாட்டார்..”

“ஆமா தம்பி! அந்த ஆளு ஏதோ பேசிட்டான் போல அதான் ஐயா இவ்வளவு கோபமா வந்திருக்கார்..”

“என்ன செய்வது..?”

“தம்பி! வேணுனா ஸனா பாப்பா கிட்ட கேட்கலாம…?” என்றார் பரணி தயங்கியப்படி.

“என்ன சொல்றீங்க அங்கிள்..?” என்றான் அதியன்.

“பணம் கேட்கலாமுனு…” என்று நிறுத்தினார் பரணி.

“அங்கிள்! கேட்டா உங்க ஸனா பாப்பா கண்டிப்பா தருவா. ஆனா அது தாத்தாக்கு தெரிந்தது அது இன்னும் பெரிய பிரச்சனையாகும்.. பாவம் அவளை ஏன் இதில் மாட்டி விடனும்..”

“இல்ல தம்பி! இன்னைக்குனா வேற வழி இல்லையே.. அதோடு இன்னைக்கு அல்ரெடி அமௌன்ட் டிரான்ஸ்பர் ஆகிட்டு, மறுபடியும் இங்க அமௌவுண்ட் எடுத்தா தாத்தாக்கு தெரியும், உங்க அக்கவுண்டில் பணம் இல்ல. இனி உங்க அக்கவுண்டுக்கு போடவும் முடியாது அது க்ளோஸ் ஆகப்போது இந்த அமௌவுண்ட் லாஸ்ட் ஒன்”

“ஆனா அங்கிள் பாரி எடுத்த அமௌவுண்ட் ஒரு கோடி, கிளைன்ட்டுக்கு கொடுக்க வேண்டியது ஐம்பது லட்சம் தான். தாத்தா மீதி பணம் யாருக்கு போய் இருக்குனு கேட்டா..”

“அதை அவர் இந்த வீக் என்ட்டில் தான் செக் பண்ணுவார். அதுக்குள்ள சரிப் பண்ணிடலாம்..” என்றார் பரணி.

அதியனும் வேறு வழியில்லாமல் ஸனாவிடம் பேச, அவளும் ஐம்பது லட்சத்தை அஜி கிட்ட சொல்லி செக் கொடுக்க சொன்னாள்.

எப்படியோ பாதிப் பணத்தில் கிளைன்ட் பிரச்சனை தீர்ந்தது.

***

மல்லிகா ஓரளவு உடல் தேறி இருந்தார்.

இரவு உணவின் போது டைனிங் டேபிளில் அனைவரும் அமர்ந்திருந்தனர்.

பெண்கள் பரிமாறினர். “மல்லிகா! நீ உட்காரும்மா” என்றார் நவநீதம்.

“இல்ல பரவாயில்லை மாமா!”

“உன் உடம்பு இப்ப தானே தேறி வருது, உட்காரு மத்தவங்க பரிமாறுவாங்க”

மல்லிகா சோழரின் அருகில் அமர்ந்தார்.

தேவி”மாமா! உங்க கிட்ட ஒரு விஷயம் பேசனும்” என்றார் பரிமாறிக் கொண்டே.

“ம்ம்ம்! சொல்லு”

“நானும் எத்தனை நாள் தனியா கஷ்டப்படுறது, இந்தா மல்லிகாக்கு மருமகள் வந்து தாங்குறா.” என்று நிறுத்தினார்.. அதில் ஸனாவை மல்லிகா ஏற்றுக் கொண்டதை மறைமுகமாக தாக்கினார்.

“அதில் உனக்கு என்ன குறை…?” என்றார் பாட்டி தன் மூத்த மருமகளை ஒரு பார்வைப் பார்த்து.

“இல்ல அத்த! அந்த மாதிரி என்னையும் என் மருமக தாங்க ஆசை இருக்காத…? அதான் பாரிக்கு ஒரு கல்யாணம் செய்ய பொண்ணு பாக்கலாமுனு மாமா” என்று இழுத்தார் தேவி.

அதியன் அவர்கள் பேசுவதை கேட்டவாறு ஹால் ஷோபாவில் அமர்ந்திருந்தான்.

ஸனா ஷூட்டிங் முடிந்து இன்னும் வரவில்லை.

மல்லிகாவிடம் அதியன் ஸனா வந்ததும் சாப்பிடுவதாக சொல்லிட்டான்.

பாரிக்கு மனதில்’அய்யோ! இந்த அம்மா புதுசா கோர்த்து விடுறாங்களே’ என்று கடுப்பாகினான்.

“அதுக்கு என்ன தேவி, பாரிக்கு கண்டிப்பா ஒரு பெண்ணை பாத்துடலாம்..” என்றார் நவநீதம்.

“ஆனா அதுக்கு முன்னாடி, நீ யாரையும் கல்யாணம் பண்ணி குழந்தை எதுவும் பெத்து ஸ்கூலுக்கு அனுப்பவில்லையே…?” என்றார் நக்கலாக பாரியிடம் அவர்.

“தாத்தா!” என்று முழித்தான் பாரி.

“பாரி! நான் ஏற்கனவே ஒருத்தன் கிட்ட ஏமாந்துட்டேன். நீயும் என்னைய ஏமாத்தமா உண்மையை சொல்லிடு…”

“இல்ல தாத்தா!” என்றான் மெதுவாக.

அதியனுக்கு புரியாமல் இல்லை.

“அக்கா! உங்க மருமகள் எப்படி இருக்கனும்..? நம்ம வீட்டு மூத்த மருமகள் மாதிரியா…?” என்று கேட்டு நக்கல் அடித்தாள் மாலினி.

“மாலி!” என்று அதட்டினார் பாண்டியன்.

“என் மருமக நல்லா புத்திசாலியா பெரிய ஆபிஸ் பொறுப்பை பாத்துகிட்டு என் புள்ளைக்கு துணையா இருக்கனும். ஆட்டக்காரி எல்லாம் எனக்கு எதுக்கு” என்று இழுத்தார் தேவி.

மல்லிகாக்கு கோபம் வந்தது.

“அக்கா! என் புள்ளை மனசுக்கு புடிச்ச மருமக ஸனா அது போதும் எங்களுக்கு” என்றார் உதட்டை சுளித்து மல்லிகா.

“ம்ம்ம்! என்ன மாயம் நடந்துச்சோ..? நீ மாறிட்ட மல்லிகா.. மாமா பேச்சை நீயும் மீறிட்ட அதியன் மாதிரியே.” என தேவி நவநீதத்திடம் ஏற்றி விட்டார்.

“என்ன மல்லிகா, பிள்ளை பாசம் கண்டதை மருமகளா ஏத்துக்க வச்சுட்டா..?” என்று கேட்டார் நவநீதம்.

அதியனுக்கு கோபம் வந்தாலும் அமைதியாக இருந்தான்.

“அப்பா! இப்போதைக்கு ஸனா இந்த வீட்டில் எங்க மருமகளா இருக்கும் பெண். தப்பா பேச வேண்டாம். அதான் எங்க பையனுக்கு தண்டனை கொடுத்து இருக்கீங்களே, அது போதுமுப்பா…” என்றார் சோழா வருத்தமாக.

“என்ன சோழா, நீயும் வேற மாதிரி பேசுற…?”

இது திசை திரும்புவதற்குள் சேரர்
“அப்பா! நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க, சோழா நீ சாப்பிடு.. பிறகு பேசிக் கொள்ளலாம்” என்றார்.

நவநீதம்”இந்த வீட்டில் வர வர எல்லாரும் முடிவு எடுப்பது நல்லதா படலை..” எழுந்து வேகமாக சென்று விட்டார்.

மற்றவர்கள் சாப்பிட்டு முடிக்க, ஸனா வந்தாள் வீட்டிற்கு.

அதியனை பார்த்தவள் வேகமாக கை சைகையால் உடை மாற்றி வருகிறேன் என தங்கள் அறைக்குள் ஓடினாள்.

உடையும் மாற்றி ஓடி வந்தவள், “சாரி அதியா! லேட் ஆச்சா..? வாங்க சாப்பிடலாம்.”

“ம்ம்ம்! நீ லேட்டா வந்ததும் நல்லதுக்கு தான், வா” என்று சென்று அமர்ந்து சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தனர்.

மற்றவர்கள் அங்கங்கே இருக்க, மல்லி
“எதுக்கு இத்தனை நேரம்..?” என்று கேள்விக் கேட்டார் ஸனாவிடம்.

“ஷூட்டிங் லேட் ஆச்சு அத்த. சாரி.” என்றாள்.

“ம்ம்ம்! உன் இஷ்டத்துக்கு வர இது ஒன்னும் சத்திரம் இல்லை, மத்தவங்க பேசுற மாதிரி நடந்துக்காத, அது என் பையனுக்கு தான் அசிங்கம்” என்ற மல்லி அறையை நோக்கி நடந்தார்.

ஸனா புரியாமல் பார்த்தாள் அதியனை.

அவனோ அவளை கண்களால் சரிசெய்து, சாப்பிட சொன்னான்.

பாட்டி அவர்கள் இடையில் பேசவில்லை. மல்லிகா இந்தளவு இறங்கி வந்ததே அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

ஸனா சாப்பிட்டு வர அவளிடம்”பேத்தி! இனி நேரமா வரப்பாரு” என்றார் சுருக்கமாக.

ஸனாவின் தொழில் பற்றி பாட்டிக்கு பெரிதாக தெரியாது..

“சரி பாட்டி!” என்று தங்கள் அறைக்கு சென்றாள்.

***

“என்ன அதியன் ஆச்சு..?”

“வழக்கம் போல தான்..” என நடந்ததை கூறினான்.

“ஓ! அப்ப அத்தை, மாமா நமக்காக சாரி எனக்காக பேசினாங்களா..?”

“அதான் தாத்தாக்கு கோபம் மஸ்து.”

“ம்ம்ம்!” என்றாள் பெட்டில் படுத்தவாறு.

“என்ன ம்ம்ம்! ஆர் யு ஃபீல்…?”

“இல்ல! டைமுக்கு வரது என்னோட வேலையில் முடியாதே அதியா. அதான் யோசனையா இருக்கு..”

“முடிந்தவரை டைம் பாத்துக்கோ அதுக்கு மேல வரலைனா நோ ப்ராப்ளம் நான் பாத்துக்குறேன்..”

“அதியா! பேசாம நான் வேணா புதுசா எந்த கால்சீட் கொடுக்காம, கொடுத்ததை மட்டும் நடிச்சு முடிக்கவா..?”

“இது உன்னோட முடிவு மஸ்து, பொதுவா இந்த ஃபீல்டில் நடிப்பு என்பது வயதிற்கு ஏற்றவாறு மாறும். உனக்கு எது முக்கியமுனு யோசிச்சுக்கோ.. ஐ சப்போர்ட் யு..”

அவன் அருகில் சென்று அவனோடு ஒன்றியவள், “ம்ம்ம்! புரியலை, அது வேணானு முடிவு எடுத்துட்டு அப்புறம் ஃபீல் பண்ணுவோனு தோணுது, இல்ல அது வேணுமுனு முடிவு எடுத்து இதை இழந்துடுவேனானு தோணுது..”

“சரி! உனக்குனு ஒரு ஆசை இருக்குமுல அது என்ன…?”

“இரண்டையும் விடாம சக்ஸஸ் பண்ணனும்.. சொந்த வாழ்க்கை, நடிப்பு ஆனா எந்த நடிகைக்கும் இது அமைந்தது இல்லை, ஒரு சாய்ஸ் தான்.. எய்தர் திஸ் ஆர் தட்..” என்றாள் சோகமாக.

“பட்! இது இந்த ஃபீல்டு அமைப்பு ஸனா.. இப்ப ஒரு நாற்பது முதல் அதுக்கு அப்புறம் சில காலங்கள் நடிகையாக நடிக்கலாம் அதன் பிறகு..? இப்படி யோசி..”

“இப்ப எல்லாம் கல்யாண ஆனா கூட அசெப்டு.. குழந்தை பிறந்தா மார்கெட் பாதி மார்க்கெட் போயிடும். அதன் பிறகு மொத்தமா சரிஞ்சுடும்..”

“ம்ம்ம்! அப்ப நமக்கு குழந்தை மஸ்து..?”

“கண்டிப்பா அதியா, எனக்கு ஆசை இருக்கு..”

“தேங்க்ஸ்!”

“எதுக்கு..?”

“இல்ல மஸ்து! குழந்தை பிறந்தா உனக்கு வேலைப் பாதிக்குமே ஆனா ஆசை இருக்குனு சொல்லுற…?”

“அதியா! நான் அப்படி எல்லாம் யோசிக்கலை, குழந்தை உண்டான அதுக்கு ஏத்த மாதிரி பிளான் பண்ணிக்கலாம். அதான் நீங்க இருக்கீங்களே சப்போர்ட் செய்ய..”

“கண்டிப்பா! ஐ லவ் யு மஸ்து” என்று அவளை அணைத்தான்.

“என்ன சார் சரியான பார்மில் இருக்கீங்க போல..?” என்று அதியன் கன்னங்களில் முத்தத்தை வைத்தாள்.

“ம்ம்ம்! தேங்க்ஸ்”

“இது எதுக்கு..?”

பாரி செய்ததை இப்ப தான் கூறினான்.

“ஓ! அதுக்கு தான் அந்த பணமா..? அப்ப ஒன் க்ரோர் மாத்தி இருக்கலாமே அதியா..?”

“இல்ல மஸ்து, உனக்கு சிரமம் வேணாம். பாதி எப்படியாவது ரெடிப் பண்ணிடலாம்”

“எனிவே அப்படி பிரச்சனை ஆனா என் கிட்ட இல்ல அஜி கிட்ட சொல்லுங்க அனுப்பிடுவா..”

“உன் கிட்ட பணம் வாங்க கூடாதுனு இல்லை ஆனா தாத்தாக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும் அதான் யோசிக்குறேன்..”

“ம்ம்ம்! புரியுது.. ஆனா அதியா இது மறைக்கக் கூடிய விஷயம் இல்லை.. எனக்கு என்னவோ பெரிய மாமா இல்லை, மாமா கிட்ட சொன்னா நல்லதுனு படுது. ஒரு வேளை உங்க தாத்தாக்கு தெரிஞ்சா உங்களை தான் பாயிண்ட் அவுட் செய்வார்..”

“பட் பாரி, ராகவி அக்கா அசிங்கப்படுவாங்க மஸ்து”

“தாத்தா கிட்ட நேரா கேட்டு இருந்தா கொடுக்க மாட்டாங்களா…?”

“அவங்க தாத்தாக்கு பயப்புடுறாங்க மீறி நான் போய் சொன்னா தாத்தா ரியாக்சன் எப்படி மாறுமுனு தெரியாது அதுக்கு நான் ஒரு ஆள் அகெயிஸ்ட் லிஸ்டில் இருக்கேன் அதுவே போதும் அவருக்கு.”

“ஆனா தாத்தா உங்களை இன்னும் அதிகமா தப்பா தான் நினைப்பார்.”

“ம்ம்ம்! நீ என் கூட இருக்குறப்ப சமாளிச்சுடுவேன் மஸ்து” என்று அவளின் இதழ் நோக்கி குனிந்தான்.

அதியனும், ஸனாவும் வீட்டில் எது நடந்தாலும் அவர்களின் காதலை தொய்வில்லாமல் பெருக்கிக் கொண்டனர்..

***

வார இறுதி அக்கவுண்ட்ஸ் பார்க்கப்பட்டது.

அதியன் பாரிக்கு பல வழிகளில் உதவி, ஐம்பது லட்சங்களை சேமிப்பில் கொண்டு வந்தான்..

அச்சு, மாதவன், தீரன் மற்றும் மீண்டும் ஸனா என தான் அந்த பணத்தை சேமிப்பில் கொண்டு வந்து முடித்தான்.

நவநீதம் அக்கவுண்ட்ஸ் செக் பண்ண, ஒவ்வொரு பிரிவிற்கும் முழுவதும் வருவாய், செலவு பார்ப்பார்.

அதில் ஒரே செக் ஒரு கோடி டிரான்ஸ்பெர் ஆகியிருக்க, பாரியிடம் விசாரித்தார்.

அவனும் ஏததோ சொல்லி சமாளித்தான்.. அதியன் ட்ரைனிங் தான்.

அனைத்தும் முடிந்து நவநீதம் நம்பி கணக்கை முடித்தார்.

பாரி அதியனுக்கு நன்றியை கூறினான்.

“இதில் பெரிய உதவி உன் அண்ணி தான் அவ கிட்ட சொல்லு பாரி”

ஸனா வந்ததும் அவள் கிட்டையும் நன்றி கூறினான்.

இது எதுவும் தேவிக்கு தெரியாது.

அடுத்த சில நாட்களில், நவநீதத்தை அந்த கிளைன்ட் வட்டம் சந்திக்க நேர்ந்தது.

நவநீதம் சரியாக முகம் கொடுக்கவில்லை, அன்று ஏதோ நான் ஏமாத்துவது போல் பேசினான் இவன் எல்லாம் ஒரு ஆளு, அதியனை அடிக்கவும் இவன் தான் காரணம் என ஒதுங்கினார்.

ஆனால் அவர் விடவில்லை.

“நவநீதம்! எப்படி இருக்கீங்க…?”

“ம்ம்ம்! நலம்” என்று விலகப் போனவரிடம்.

“என்ன நவநீதம் அன்று செக் தான் நான் வரலைனு கொஞ்சம் வேகமாக கேட்டேன் ஆனா உடனே செக் வந்துட்டு உங்களை பத்தி தெரியாத எனக்கு.. ஆமா! அது யாரு ஸனா மஸ்தூரா…? அந்த நடிகை தானே, உங்க பேரன் அதியன் மனைவி அவங்களும் உங்க ஆபிஸில் ஷேர் கோல்டரா..?”

“என்ன உளருகிறாய்…?”

“நவநீதம்! அன்னைக்கு வந்த செக் அதியன் மனைவி பெயரில் தான் இருந்தது, எப்படியோ என் பணம் கிடைத்தது, நன்றி.. என்ன இருந்தாலும் வெளியில் நடிகை, அப்படி இப்படினு நீ ஒதுக்கி வச்சேனு கேள்விப்பட்டேன். இப்ப எல்லாம் ஒன்னா ஆகிட்டீங்க..” என்று சிரித்து விலகினார்.

நவநீதத்துக்கு புரியவில்லை. “அப்ப ஒரு கோடி மொத்த டிரான்ஸ்ராக்சன் யாருக்கு…? அந்த நடிகை எதுக்கு பணம் கொடுத்தா…? அதியா..?” என கோபமாக வீட்டை நோக்கிப் புறப்பட்டார்.

அதியனவள் அடுத்து…

Advertisement