Advertisement

இருவரும் எழுந்திரிக்க மனமில்லாமல் படுத்திருந்தனர்.

“மஸ்து! உனக்கு இன்னைக்கு ஷூட்டிங் இல்லையா…?”

“இருக்கு”

“அப்ப இப்படியே படுத்திருந்தா, எப்ப கிளம்ப போற…? ஷூட்டிங் எங்க..?”

“மகாபலிபுரம்”

“ஓ! அப்ப போக லேட் ஆகும், சீக்கிரம் ரெடி ஆகு…”

“ம்ம்ம்! இருடா கொஞ்சம் நேரம், நான் இந்த காலைப் பொழுதை அனுபவிச்சுட்டு இருக்கேன், என் புருசனோடு..” என்று அவன் மார்பில் அழுந்தினாள்.

“எனக்கும் ஆசை தான், ஆனா வேலை இருக்கே மேடம் உங்களுக்கு” என்று ஸனாவின் பக்கம் திரும்பி அவளை தன்னோடு இறுக்கினான்.

“ம்ம்ம்! ஏன் நீங்க ப்ரீயா…?”

“தெரியலையே!”

அதுவரை அவனின் மார்பில் புதைந்திருந்தவள், நிமிர்ந்து அதியனை நோக்கினாள்.

“அதியா!”

“ம்ம்ம்! எஸ் மை குயின்”

“நீங்க இன்னைக்கு ஆபிஸ் போகப் போறதில்லையா..?”

“போவேன், யு டோன்ட் வொரி, எழுந்து ரெடியாகுங்க மேடம்” என்று அவளின் நெற்றியில் முத்தம் வைத்தான்.

“ம்ம்ம்!” என்று எழப்போனவளை இழுத்து தன் மார்பில் சாய்த்தவன், “இப்படியே போனா எப்படி..? இது பகல் பொண்டாட்டி”

சுற்றிப் பார்த்தவள் கண்ணில் அவளின் புடவையின் ஒரு முனை அருகில் தொங்கியது தெரிந்தது. அதை இழுத்தவள், எடுத்து தன் மீது சுற்றிக் கொண்டு”ம்ம்ம்! பகலா இருந்தா என்ன…? இந்த குயினோட கிங் தானே இருக்கார்” என்று புருவத்தைச் சுளித்து அவனிடம் இருந்து விலகினாள்.

“அப்ப அந்த புடவையை கொடு” என்று உருவினான் அதியன்.

“அதியா! அடி வாங்கப் போறீங்க, விடுங்க” என்று அவன் கையை தட்டி விட்டவள், பாத் ரூமுக்குள் புகுந்தாள்.

சிரித்தவன் எழுந்து பெட்டின் மேற்பக்கம் அமர்ந்தான்.

தன் போனை எடுத்துப் பார்த்தவன் மணி ஏழு என காட்டியதை கண்டு, மனதில்’அம்மா! இந்நேரம் வந்து இருப்பாங்களே டீ எடுத்துட்டு நான் கீழே போகலைனா. ஒரு வேளை தாத்தாக்கு பயந்துட்டு வரலையோ, சரி நம்மளே போய் கீழே என்னனு பாப்போம்’ என்று எழுந்து உடையை மாட்டிக்கொண்டு சென்றான்.

மெதுவாக இறங்கியவன் பார்வையில் முதலில் பட்டது ஹாலில் நியூஸ் பேப்பர் படிக்கும் நவநீதம்.

‘என்ன தாத்தா இவ்வளவு லேட்டா பேப்பர் படிக்குறாரு..?’ என்று எண்ணி நடந்தான்.

வழக்கம் போல் நேற்று நடந்ததை மனதில் ஏற்றாமல்”குட் மார்னிங் தாத்தா” என்றான்.

அவர் அசையவே இல்லை.

பாட்டி வழக்கம் போல் சாமி அறை முன் அமர்ந்திருந்தார்.

மற்றவர்கள் ஆங்காங்கே இருந்தனர் காலை வேலைகளில்.

கிச்சனை எட்டிப் பார்த்தவன் பார்வையால் தேவி, மாலினி மட்டுமே தெரிந்தனர்.

சங்கவி, சைந்தவி, சாரு மூவரும் ஹால் ஷோபாவில் அதியனை பார்த்தும் பார்க்காதது போல் ஏதோ புத்தகத்தில் தலையை நுழைத்திருந்தனர்.

“சங்கவி! அம்மா எங்க…?”

அவளோ”அம்மா!” என்று ஆரம்பிக்க, நவநீதம் திரும்பி பார்க்கவும் அமைதியானாள்.

சைந்தவி, சாருவை பார்க்க, அவர்கள் திரும்பவே இல்லை..

பாரி தூரத்தில் இருந்து இவனையே பார்க்க, அதியன் இப்ப தான் அவனை பார்த்தான்..

பாரி கண்களால் பாட்டியிடம் கேட்க சொன்னான்..

அவர் மட்டுமே இப்போதைக்கு பேசக் கூடியவர் தாத்தாவை எதிர்த்து.

உடனே பாட்டியிடம்”பாட்டி! அம்மா எங்க…? இவ்வளவு நேரம் ஆகியும்  என்னைய பாக்க வராம இருக்க மாட்டாங்களே..?”

“அதியா! ஒன்னுமில்லை பயப்புடாத, நைட் அவளுக்கு லேசா முடியலை, டாக்டர் கிட்ட போயிட்டு வந்ததால் அவ அறையில் படுத்திருக்கா, போய் பாரு” என்று முடிப்பதற்குள், “என்ன பாட்டி சொல்றீங்க…?” என்று அவசரமாக பெற்றோர் அறைக்குள் ஓடினான்.

அங்கு மல்லிகா மருந்தின் வீரியத்தால் நன்கு உறக்கத்தில் இருந்தார்.

அருகில் அமர்ந்து போனை பார்த்தவாறு இருந்தார் சோழர்.

“அப்பா! அம்மாக்கு என்ன ஆச்சு…?” என்று பதறியவாறு நுழைந்த மகனை பொறுமையாக பார்த்தவர் பதில் எதும் சொல்லவில்லை.

மல்லிகா அருகில் சென்ற அதியன் அவரின் கைகளைப் பிடித்து அமர்ந்தான்.. கண்கள் கலங்க”அப்பா! பதில் சொல்லுங்க, என்ன பிரச்சனை அம்மாக்கு, ஏன் என் கிட்ட எதும் சொல்லல..?”

என்ன இருந்தாலும் மகனின் கண்கள் கலங்கியதை தாங்காமல், “நைட் லேசா நெஞ்சு வலிக்குதுனு சொன்னா, அப்புறம் வலி அதிகமாச்சுனு டாக்டர் கிட்ட போனோம், செக் பண்ணாங்க ஹார்ட் வீக்னெஸ், ப்ரஷர் அதிகமாச்சு அதோட எபெக்ட் இதயத்தில் பலவீனம்,
ஹார்ட் ரொம்ப வீக்கா இருப்பதால் கவனமா இருக்க சொல்லி இருக்காங்க, அவளால் நேற்று நடந்ததை தாங்க முடியவில்லை போல, தாத்தா உன்னைய எல்லா பொறுப்பில் இருந்தும் நீக்குவதா சொன்னதில் இருந்து புலம்பிட்டே இருந்தா, என் பையனை ஒதுக்கிட்டார் அவன் தானே எல்லாம இருந்தானு, அதையே நினைத்ததால் இந்த நிலை இவளுக்கு இப்ப..”

“அம்மா!” என்று அவரின் கையைப் பிடித்து அழுதான் அதியன்.

“அவ தூங்கட்டும் விடு, இப்ப தான் மருந்தால் தூங்குறா”

“அப்பா! நான் தப்பு செஞ்சுட்டேனு நினைக்கிறீங்களா…? அம்மாவோட இந்த நிலைக்கு நான் தான் காரணமா…?”

“அதியா! நீ ஒன்னும் சின்ன பையன் இல்லை, எது செஞ்சா சரியா நடக்கும், செய்ற விஷயம் எல்லாரையும் எப்படி பாதிக்குமுனு தெரிஞ்சு தானே ஆரம்பிச்ச, இப்ப அதோடு பலனை அனுபவிக்கனும், நாங்களும் சேர்ந்து தான்..” என்று தலையை குனிந்து அவர் வேலையை தொடர்ந்தார்.

“அப்பா!” என்றழைத்தான்.

அவர் நிமிரவில்லை.

மல்லிகாவோடு சிறிது நேரம் அமர்ந்திருந்தவன், எழுந்து வெளியில் வந்தான்.

பாட்டி டீயை நீட்டினார் அவனிடம்.

“வேணாம் பாட்டி!” என்று தன் அறையை நோக்கி சென்றான்.

போகும் அவனையே பார்த்து செய்வதறியாமல் நின்றார் பாட்டி.

***

அறைக்குள் சென்ற அதியன் கட்டிலில் வந்து பொத்தென்று அமர்ந்தான். அப்போது தான் குளித்து முடித்து வந்த ஸனா கண்ணாடி முன் நின்றவாறு, அதன் வழியே அவனை பார்த்தாள்.

ஏதோ சரியில்லை என்று தோன்ற, அவன் அருகில் சென்று அமர்ந்தவள்
“அதியா!” என்றாள்.

“மஸ்து! அம்மாக்கு நைட் உடம்பு முடியலை,  ஹாஸ்பெட்டல் வரை போயிட்டு வந்திருக்காங்க, இது எதுமே தெரியாமல் நான் மட்டும் சந்தோஷமா இங்க, ச்சே! நான் எல்லாம் ஒரு மகனா…?” என்று முகத்தில் அடித்துக் கொண்டு அழுதான்.

“அதியா!” என்று அவன் கையைப் பிடித்தாள்.

அழுதுக் கொண்டிருந்தவன் சட்டென்று ஏதோ தோன்ற, “சாரி மஸ்து! அம்மாக்கு ஹார்ட் வீக்கா இருக்காம், அவங்களுக்கு நான் தான் எல்லாமே, தாத்தா என்னைய எல்லாத்தில் இருந்து ஒதுக்கியதை தாங்க முடியவில்லை, இனி கவனமா அவங்களை பாத்துக்க சொல்லி இருக்காங்களாம்” என்று கண்ணீருடன் கூறினான்.

“காம் டவுன் அதியா, முதலில் ரிலாக்ஸ் ஆகுங்க, அம்மாக்கு எதும் ஆகாது, அதான் நீங்க கூடவே இருக்கீங்கள.. அதுவே அவங்களுக்கு சப்போர்ட் தான், அவங்க புரிஞ்சுப்பாங்க” என்று ஆறுதல் செய்தாள், அங்கிருந்த தண்ணீரை எடுத்து அவனுக்கு குடிக்க கொடுத்தாள்.

அதியனும் சற்று நிதானமானான்.

கதவு தட்டும் சத்தம் கேட்டது.

ஸனா தான் சென்று திறந்தாள்.

“வாங்க அங்கிள்!”

தலையை ஆட்டிவிட்டு, உள்ளே வந்த பரணி”தம்பி! தாத்தா உங்களை பத்து மணிக்கு ஹெட் ஆபிஸிற்கு வர சொன்னார்” என்றார்.

அதியன் எதுவும் கேட்கவில்லை, “சரி அங்கிள்!” என்று மட்டுமே சொன்னான்.

பரணிக்கு அதியனை பார்க்க பாவமாக இருந்தது. ஸனாவிடம் தலை ஆட்டி விடைப் பெற்றார்.

“எதுக்கா இருக்கும் அதியா..?”

“தெரியல மஸ்து, போனா தான் தெரியும்.. சரி நான் கிளம்புறேன்.” என்று டவலை எடுக்க சென்றான்.

“அம்மா உங்க கிட்ட பேசினாங்களா…?”

“அவங்க தூங்குறாங்க நல்லா”

“ம்ம்ம்!” என்று அவன் அருகில் சென்றவள், “நீங்க ஸ்ட்ராங்கா இருங்க அதியன், அம்மாக்கு எதுவும் ஆகாது, நீங்க அவங்க கூட தான் இருக்கீங்கனு உணர்ந்தாலே போதும்..” என்றாள்.

“ம்ம்ம்!” என்று லேசாக தலையை ஆட்டியவன், அவளை இறுக்கி அணைத்தான் சட்டென்று.

“தேங்க்ஸ்! தேங்க்ஸ்! மஸ்து, கீழ போனப்ப யாருமே என் கூட பேசலை, அப்பா கூட கடமைக்காக விஷயத்தை சொன்னார் தெரியுமா…? தாத்தா என்னைய எமோஷனல் அட்டாக் செய்றார், இதை நான் எப்படி ஃபேஸ் பண்றதுனு தெரியலை..” என்று புலம்பினான்.

“அதியா! நான் வேணா வீட்டை விட்டுப் போகட்டுமா…?” என்றாள் மெல்ல.

அவளை சட்டென்று விலக்கியவன், அவளை முறைத்தான்.. “இனி இப்படி மட்டும் கேக்காத, இது தான் லாஸ்ட் வார்னிங்” என்று குளிக்க  சென்றான்.

ஸனாவிற்கு ஏனோ  இது பெரிய இக்கட்டான சூழ்நிலையாக இருந்தது..

****

அதியன் குளித்து வெளியில் வந்து ஆபிஸ் போக தயாரானான்.

ஸனாவும் ஷூட்டிற்கு ரெடியானாள்.

அதியன் எதுவுமே பேசவில்லை.

ஸனா அவன் முகத்தையே பார்த்துக் கொண்டே தயாரானாள்.

இருவரும் கிளம்பி முடிக்க, ஸனா அதற்கு மேல் பொறுக்க முடியாமல், கண்ணாடியில் தன்னை சரிப்பார்த்த அவன் முன் நின்று, “ஓகே! சாரிடா, இனி அப்படி கேட்க மாட்டேன், பேசு அதியா” என்றாள்.

அவளின் கண்களையே பார்த்தவன்,
பிறகு லேசாக சிரித்து”இங்க பாரு மஸ்து, இந்த குடும்பத்தையே எதிர்த்து நான் நிக்க நீ மட்டும் தான் காரணம் அது எல்லாருக்குமே தெரியும். நீ ஈஸியா விட்டுப் போகவா நான் இவங்களை எதிர்த்தேன். எனக்கு கஷ்டம் தான் இப்போ ஆனா நீ போயிட்டா நான் ஹேப்பியா இருப்பேனா…? சொல்லு.”

அவனை இறுக கட்டி அணைத்தாள்.

“சாரி! உனக்கு வர எமோஷனல் அட்டாக் என்னால பார்க்க முடியலை அதியா. அதான் எனக்கு கில்டியா இருக்கு. நீ சொன்ன பாரு அம்மாக்கு உடம்பு முடியலை நான் இங்க சந்தோஷமா இருந்தேனு அது எனக்கும் தானே பொருந்தும். நமக்கு எதுவுமே தெரியாம சுயநலமா சந்தோஷமா இருக்கமோனு தோணுது. அப்படி இல்லைல…?”

“நமக்கு தெரியாது மஸ்து, தெரிந்தும் கண்டுக்காம இருந்தா தான் சுயநலம். சரி விடு இனி கவனமா இருப்போம். நீ எதையும் போட்டு குழப்பாம இரு, முதலில் நீ நம்பு நான் உன் கூட இருக்கேனு. ஓகேவா.. கிளம்பு போகலாம்.” என்று அவளை அணைத்து விடுவித்தான்.

இருவரும் கீழ வந்தனர்.

டைனிங் டேபிளில் சாப்பாடு இருந்தது, பாட்டி சாப்பிட சொன்னார்.

அதியன் யோசிக்க, ஸனா கண்களால் வா என்றாள்.

மல்லிகா இன்னும் கண் முழிக்கவில்லை.

அதியனும், ஸனாவும் கடமைக்ககாக சாப்பிட்டனர். ஆண்கள் சென்று விட்டனர்.

பெண்கள் அடுப்படிற்குள் இவர்களை கண்டுக்கொள்ளாமல் நின்றனர்.

சாப்பிட்டு முடிக்க, அதியன்”ஸனா! நான் போய் அம்மாவை பாத்துட்டு வரேன், நீ வெயிட் பண்ணு..”

“ம்ம்ம்! நானும் வரேன் வாங்க..”

“இல்ல! வேணாம்..” என்றவனிடம், “ப்ளீஸ்! வாங்க” என்றாள்.

அதியன் முன்னே செல்ல, ஸனா பின்னே சென்றாள்.

அடுப்படிற்குள் இருந்த தேவி”மாலினி! அவ கழுத்தைப் பாரு, பரம்பரை செயின் இந்த அத்தை தான் கொடுத்திருக்கனும்.. பாத்தீயா…?”

“ஆமா அக்கா! அத்தை சரியான ஆளு தான்.”

***

மல்லிகா கண் விழித்து கணவனிடம் தண்ணீர் கேட்க, ஆபிஸ் கிளம்பிக் கொண்டிருந்த சோழர், எடுத்துக் கொடுத்தார்.

“மல்லி! அப்பா பத்து மணிக்கு ஹெட் ஆபிஸ் வர சொல்லி இருக்கார், போயிட்டு நான் உடனே வந்துடுறேன்.”

“ம்ம்ம்! அதியன் எங்க…?”

“வந்தான் நீ தூங்கிட்டு இருந்த..”

“அவனும் ஆபிஸ் வரான்ல..?”

“ம்ம்ம்!” என்று சொல்ல, அதியன் ஸனாவோடு நுழைந்தான்.

“அம்மா! இப்ப எப்படி இருக்கு உடம்பு..?” என்று அவர் அருகில் அமர்ந்தான்.

ஸனா பின்னால் நின்றாள்.

சோழாவும் ஸனாவை கண்டு ஒன்றும் சொல்லாமல் நிற்க, மல்லி மகனை மட்டுமே பார்வையில் வைத்துக் கொண்டார், ஸனாவை பொருட்படுத்தவில்லை.

“எனக்கு என்ன உடம்புக்கு, மனசு தான் சரியில்லை. நீ செய்வது சரியா அதியா.?  தாத்தா கிட்ட போய் பேசு, அவரு சொல்றபடி கேக்குறேனு சொல்லுடா.. என் பிள்ளை பழைய மாதிரி இருக்கனும் இந்த வீட்டில்” என்று புலம்பினார்.

“அம்மா! ப்ளீஸ் முதலில் நீங்க எதையும் மனசில் வச்சுகாம அமைதியா இருங்க, நான் இப்ப உங்க கூட தானே இருக்கேன். அதை மட்டுமே யோசிங்க.  மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க, நான் பழைய அதியனா தான் இருப்பேன் நீங்க கவலைப்படாதீங்க…”

“அப்ப நீ இவளை விட்டுட போறீயா..? தாத்தா சொல்ற மாதிரி கேக்கறீயா..?” என்றார் சந்தோஷமாக.

“அம்மா! ப்ளீஸ், அமைதியா இருங்க. நான் ஆபிஸ் போயிட்டு வரேன்..” என்று எழுந்தான்.

“சாப்பிட்டீயா?”

“ம்ம்ம்! நீங்க சாப்பிட்டு மாத்திரைப் போடுங்க முதலில்”

“அப்பா! நான் கிளம்புறேன்” என்று அவன் நடக்க, போன் வந்தது எடுத்துப் பேசிட்டே சென்றான்.

ஸனா அதியன் சென்றதும், மல்லியிடம் சென்றாள்..

“நான் தான் உங்களுக்கு பிடிக்காதவள், ஆனா உங்க பையனை உங்களுக்கு புடிக்குமுல, அப்ப அவரு மனசு புரியும் உங்களுக்கு, இப்ப கூட உங்களை விட்டுப் போக கூடாதுனு தான் கூடவே இருக்க நினைக்கிறார், அவரோட நல்ல மனசா…? இல்ல அவருக்கு உங்க மாமனார் தர அந்தஸ்தா…? எது உங்க கண்ணுக்கு தெரியுதுனு பாருங்க, அவரு மனசு உங்க கண்ணுக்கு தெரிஞ்சா இப்படி நீங்க படுத்து இருக்க மாட்டீங்க. உங்க பையன் மேல முழு நம்பிக்கை வைங்க, இதே மாதிரி ஒரு சாம்ராஜ்ஜியத்தை அவர் தனி ஆளா உருவாக்க முடியும். ஆனா குடும்பம் தான் வேணுமுனு அடங்கி இருக்கார்.. என்னைய ஏன் லிஸ்டில் சேர்க்குறீங்க…? நான் ஆகாதவளா இருந்துட்டுப் போறேன். உங்க உடலின் நிலை உங்க பையனை இன்னும் பலவீனமாக ஆக்கிடும். அதை புரிஞ்சு ஸ்டாங்கா இருங்க..” என்று கூறிவிட்டு வேகமாக வெளியில் சென்றாள்.

மல்லிகா தன் கணவனை திரும்பி பார்த்தாள்.

“புடிக்காத பொண்ணா இருந்தாலும் அவ சொன்னதை யோசி மல்லிகா, அதியன் நடுவில் தொங்கிட்டு இருக்கான்.” என்று ஆபிஸிற்கு கிளம்பி சென்றார்.

‘என் பையன் பத்தி இவ சொல்லி தராளா.. அவன் ஆளப்பிறந்தவன். இவ வந்ததால் தான் எல்லாமே…’ என்று தனக்குள்ளே புலம்பினாலும், ஸனா சொல்லியதை யோசிக்க ஆரம்பித்தார்.

*****

ஸனா ஷூட்டிங் சென்றாள்.. அதியன் ஹெட் ஆபிஸிற்கு சென்றான்.

பத்து மணிக்கு அனைவரும் அந்த மீட்டிங் ஹாலில் இருந்தனர்..

நவநீதத்தின் குடும்பத்தின் ஆண்கள், மேனெஜர்கள், பரணி, நவநீத குரூப்ஸின்  முக்கிய ஹெட் ஆபிஸர்ஸ்.

அதியன் தான் கடைசியாக வந்தது. ட்ராபிக்கில் மாட்டியதால்.

பர்மிசன் கேட்டு உள்ளே நுழைந்தான்.

நவநீதம் தலையை மட்டுமே ஆட்டினார்.

“சரி! இங்க எல்லாருமே இருக்கீங்க, இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை சொல்ல நினைக்குறேன்.. இந்த நவநீத குரூப்ஸின் சில திருத்தங்கள் நடக்க இருக்கு.” என்று சுற்றிப் பார்த்துவிட்டு

எழுந்து நின்றார் நவநீதம்.

“இது வரை இந்த நவநீத குழு தலைவராக அதியன் நவநீத ராகவன் இருந்தார்.. இனி பாரி நவநீத ராகவன் பொறுப்பு ஏற்க போகிறார்.” என்றதும் அனைவரும் அதியனைப் பார்த்தனர்.

அதியன் அதிர்ச்சி எல்லாம் ஆகவில்லை, சந்தோஷமாக கையைத் தட்டினான்.

எழுந்து பாரிக்கு கையை குலுக்கினான்.

“மை விஸஸ் பாரி, கீப் கோயிங் குட்.”

பாரி முழித்துக் கொண்டே”அண்ணா!” என்றான் மெதுவாக.

“அப்புறம் முக்கியமான விஷயம், பாரி புதிதாக பதவிக்கு வருவதால், அவருக்கு உதவியாளராக அதியனை நியமியக்குறேன்” என்றார் நவநீதம்.

மற்றவர்கள் குழம்பினர்.

“ஓகே! நீங்க கிளம்பலாம்” என்று மற்றவர்களை அனுப்பியவர், குடும்ப உறுப்பினர்களை அமர வைத்தார். பரணி   கூடவே இருந்தார்.

“மிஸ்டர் அதியன்! உங்களுக்கு ஒரு சான்ஸ் தரேன், அதாவது நீங்க இன்று முதல் இந்த கம்பேனியில் ஒரு சாதரணமான ஸ்டாப் தான், நீங்களும் உங்க மனைவியும் தங்கும் செலவு, சாப்பாடு செலவுக்கு உங்க சம்பளத்தில் இருந்து அலோவன்ஸாக கழிக்கப்படும். பாரிக்கு பி ஏ.. வேற எந்த சொகுசும் கிடைக்காது ஏனா நீங்க ஒரு ஸ்டாப் தான், இதுக்கு எல்லாம் ஓகேனா இந்த ஆறு மாத அக்ரீமென்டில் கையெழுத்துப் போடுங்க, இல்லைனா வீட்டை, ஆபிஸை விட்டு தாரளமாக போகலாம்..” என்றார்.

இந்த முறை சோழர் தன் அண்ணனை பார்க்காமல்”அப்பா! என்ன இருந்தாலும் அதியன் என்னோட பையன், அவன் செஞ்சத தப்பு தான் அதுக்காக இந்தளவு அவனை தாழ்த்தக் கூடாது, அவன் இருந்த பொஸிஸனுக்கு.” என்றார் வருத்தமாக.

“இது தான் என் முடிவு, உனக்கு மறுப்பா இருந்ததுனா நான் வீட்டை விட்டுப் போறேன், நீங்க உங்க குடும்பங்களை பாருங்க” என்றார் அதிகாரமாக.

சோழர் அமைதியாக, சேரரும், பாண்டியரும் வாய் திறக்கவில்லை.

“இப்ப கூட அவருக்கு வாய்ப்பு இருக்கு, அந்த பொண்ணை வேணாமுனு சொன்னா, ஆறு மாசம் பிறகு கையெழுத்துப் போட்டு அனுப்பிட்டா, இந்த வீட்டுப் பையன், இல்லனா ஆறு மாதம் நம்ம வீட்டில் இதே ஸ்டாப்பாக இருப்பவர், ஆறு மாசம் முடிஞ்சு வீட்டை விட்டு போயிடலாம். நமக்கும் அவருக்கும் தொடர்பில்லை.”

“அதியா! யோசிடா, உன் அம்மாக்கு இது தெரிஞ்சா பாவமுடா..” என்றார் சோழர்.

அதியன் கண்களை மூடித் திறந்தான்.

“தாத்தா! இந்த ஆறு மாசமும் நானும், என் மனைவியும் இந்த வீட்டில் தான் இருப்போம், அதுக்கு தேவையான பணத்தை என்னோட சம்பளத்தில் கழிச்சுட்டு கொடுங்க போதும், நான் இன்று முதல் இந்த ஆபிஸில் சாதரண ஸ்டாப் தான். எனக்கு சம்மதம்” என்று அந்த அக்ரீமென்டை எடுத்து கடகடவென்று கையெழுத்துப் போட்டான்.

நவநீதம் அவனையே பார்த்தார் ஆழமாக.

“ஆறு மாசம் முடிஞ்சு…?”

“அப்ப பாத்துக்கலாம் தாத்தா, நான் மாறமாட்டேன், ஒரு வேளை நீங்க மாறினால், இந்த நவநீதம் ராகவன் மனசு ஒன்னும் கல் இல்லையே, உணர்வுகள் இன்றி வாழ, இவ்வளவு பெரிய குடும்பத்தை ஆள்பவர் மனம் என்னோட மனதை புரிந்துக் கொள்ளாமல் போயிடுமா..? நான் வெயிட் பண்றேன் உங்க மாற்றத்துக்காக தாத்தா.. சாரி! சாரி! இது ஆபிஸ்ல..
அப்ப நான் வரேன் சார்..” என்று வெளியில் சென்று விட்டான்.

மனம் முழுவதும் ரணமாக இருந்தது, நவநீதம் எறிந்த கல் நன்றாக அவனை தாக்கியது. அனைவரையும் இழந்த உணர்வு அவன் நவநீதத்தை சார் என்ற அழைத்தப்போது..

இந்த நிலை நவநீததிற்கு வராமல் இருக்குமா…? ஆசைப்பேரன் தன்னை சார் என்று அழைத்ததும் மனம் ஏனோ கலங்கியது, ஆனால் வைராக்கியம் அதிகமாகியது, ஒரு சின்ன பையனிடம் தோற்றிடக் கூடாது என்று..

அதியனவள் அடுத்து…

Advertisement