Advertisement

“உன்னோட விருப்பம் புரியுதும்மா, ஆனா இதுல முடிவு எடுக்க வேண்டியது உன் அம்மா தான்..” என்றார் அவளின் தந்தை.

“அப்பா! அம்மா என் விருப்பதுக்கு மறுப்பு சொல்ல மாட்டாங்கனு நம்பிக்கை இருக்கு, ஆனா நீங்க தான் சொல்லனும் ப்ளீஸ்பா..”

“ம்ம்ம்! ஒரு பெரிய கம்பேனியை ரன் பண்ற பொண்ணு, இப்படி கெஞ்சினா எப்பிடி..? அம்மா பூஜையில் இருக்கா வரட்டும்” என்று பேப்பரை படிக்க ஆரம்பித்தார் வகீம் லாசன்.

கற்பூரத் தட்டோடு வந்த பெண்மணி மகளுக்கு மட்டும் நெற்றியில் திரு நீற்றை வைத்தார்.

“என்ன மேடமுக்கு காலையிலே பக்தி பரவசம் கூடிட்டு..?” என்று கிண்டல் செய்தாள் ஷர்தா.

“ம்ம்ம்! எல்லாம் நீ சொல்ல போற விஷயத்தைக் கேட்டு பிரஷர் ஆக கூடாதுனு தான்..” என்று சாமி அறைக்குள் சென்று தட்டை வைத்தவர், தன் நெற்றியில் குங்குமத்தை இட்டு திரும்பினார்.

ஷர்தா வகீம் தன் அம்மாவை அர்த்தமாகப் பார்த்தாள்.

பிறகு அப்பா பக்கம் திரும்பியவள்
“ஹலோ மை டியர் வகீம் பொண்டாட்டி கிட்ட என்ன எல்லாம் சொல்லி வச்சு இருக்கீங்க…? நான் எதும் சொல்ல வேண்டியது இருக்கா..?” என்று கேட்டாள்.

“நோ! நோ! நான் ஜஸ்ட் லைன் மட்டும் தான் போட்டு இருக்கேன், யு ஃபில் இன் பிளாங்க்ஸ்”

“அவரு கிட்ட ஏன் பாயுற..? விஷயத்தை சொல்லு என் கிட்ட ஷர்தா”

“ஆமாம்மா! எனக்கு ஒரு பையனை புடிச்சு இருக்கு, அவரை கல்யாணம் செய்ய ஆசைப்படுறேன்” என்றாள் தைரியமாக.

“ம்ம்ம்! பையன் யாரு…? என்னனு விசாரிச்சீங்களா…?” என்று தன் கணவரிடம் கேட்டார்.

“அது எல்லாம் முடிஞ்சுட்டு, ஆனா நீ தான் பர்மிசன் கொடுக்கனும், எனக்கு நோ அப்ஜசன்”

“சரிங்க! பையனை பத்தி சொல்லுங்க.?”

“பையன் நல்லவன், நல்ல குடும்பத்தில் வளர்ந்து இருக்கான், வளர்ப்புனா சாதரண வளர்ப்பில்லை.. நம்ம ஷர்தாக்கு ஏத்த பையன்”

“ஆமாம்மா! அவரு எனக்கு சீனியர் காலேஜில், அப்பவே புடிக்கும் ஆனா அப்ப அதை நான் ஜஸ்ட் இன்பேக்லேசனு பெரிதா கன்சிடர் பண்ணலை, ஆனா அதுக்கு அப்புறம் நம்ம கம்பேனி சார்பா நிறைய மீட்டிங் போகும் போது சந்தித்தேன், அவரும் சொந்த கம்பேனி தான்.. நாங்க ப்ரண்ட்ஸா தான் பேசிட்டு இருந்தோம், லாஸ்ட் மீட்டிங்கில் அவருக்கு நான் ப்ரோபோஸ் பண்ணினேன், பட் அவருக்கு புடிச்சு இருந்தாலும் அசெப்ட் பண்ணலை, ஆனா எனக்கு தெரியும் ஹி ஆல்சோ லவ்டு மி” என்றாள் தெளிவாக.

“ஆனால் ஷர்தா, வெளிப்படையா அசெப்ட் பண்ணாத பையன் கிட்ட போய் நாங்க என்ன பேச முடியும். அது எங்களுக்கு தானே அசிங்கம் அப்படி ஒன்னும் நீ குறைஞ்சவ இல்லையே..?
VL groups மேனெஜிங் டேரக்டர்..” என்றார் தாய்.

“எப்படி வெளிப்படையா அசெப்ட் செய்வான் அந்த பையன், நீயும் அப்படி தானே இருந்த வரு(வரலெட்சுமி), உன்னோட அண்ணன் பையன் பாரி நவநீதம் ராகவன் மட்டும் எப்படி ஒத்துப்பான். இப்ப சொல்லு…?” என்றார்  வகீம்.

வரு சற்று அதிர்ச்சி ஆனாலும், ஷர்தா தான் அதிக அதிர்ச்சி ஆனது.

“என்னப்பா சொல்றீங்க..?”

“ஆமா ஷர்தா! உன் அம்மாவோட மூத்த அண்ணன் சேரர் பையன் தான் பாரி”

ஷர்தா தன் தாயை காண, அவரோ பழைய நினைவிற்கு சென்றார்.

அன்று..

வகீம், வருவின் காதல் வீட்டிற்கு தெரிய வந்தது.

நவநீதம் எரிமலையாக வெடித்தார், அந்த கோபம் வெறும் காதலுக்கு மட்டுமில்லை, வகீம் இஸ்லாமியர் என்பதால் அதிகமாகியது.

வரு தன் தந்தையின் குணம் அறிந்து தான் வகீம் காதலை ஏற்கவில்லை, ஆனால் மூடி வைத்த காதல் மலர, ஒரு கட்டத்தில் தந்தையை எதிர்க்க செய்தது.

வருவை அடித்து வீட்டில் அடைத்தார் நவநீதம். வகீமுக்கு அவரின் நண்பர் சலீம் உதவினார் வருவை மீண்டும் பார்க்க, நவநீதத்தின் இப்போதைய பி ஏ வாக இருக்கும் பரணியின் மூலம்.

அது இன்றளவும் நவநீதத்திற்கு தெரியாது, பரணியின் தந்தை தான் நவநீதத்திடம் வேலைப் பார்த்தது, பரணிக்கு நண்பன் சலீம்.

சலீமிற்கு வகீம் தெரிந்தவன், அந்த தொடர்பில் வரு வகீமை சந்திக்க, அது வீட்டை விட்டு ஓட வைத்தது.

பரணிக்கு வருவின் காதல் முக்கியமாக பட்டது அன்றைக்கு, அவரின் வயதும் இளமையில் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

வரு வகீமோடு சென்ற பின், நவநீததிற்கு அதை தாங்க முடியவில்லை, வருவின் அனைத்துப் பொருட்களையும் எரித்தார், அவரின் போட்டோவிற்கு மாலைப் போட்டார்.

அது உச்சக்கட்டமாக இருக்க, அன்னம் பாட்டியால் அதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, உயிரோடு இருக்கும் தன் மகளுக்கு மாலைப் போடக் கூடாது என காலில் விழுந்துக் கெஞ்சினார்.

நவநீதம் கேட்கவில்லை, அடுத்ததாக அவர் செய்தது வரலெட்சுமிற்கு காரியம், இறந்தவருக்கு செய்யும் அத்தனையும் செய்து கடலில் தகனம் செய்தார் வரலெட்சுமியின் நினைவுகளை.

அன்னம் பாட்டிக்கு தன் கணவரை கட்டுப்படுத்த முடியாத கோபம் அவரோடு மொத்தமாக பேசுவதை நிறுத்த செய்தது.

மூன்று மகன்களும் அப்பா வழியில் நிற்க, அவரும் கடைசி மகளாகிய ராஜலெட்சுமி மட்டுமே தாயிக்குத் துணையாக நின்றார்.

பரணிக்கு மட்டுமே தெரியும் வரலெட்சுமி, வகீம் சென்ற இடம்.

நவநீதம் செய்த நல்ல விஷயம், வரு வீட்டை விட்டு வெளியில் வகீமோடு சென்று விட்டார் என அறிந்ததும் அவரை தேட முயற்சிக்கவில்லை.

பரணிக்கு தான் கஷ்டமாகியது, தான் நவநீதத்திற்கு துரோகம் செய்து விட்டதாக.

ஆனால் வரு சந்தோஷமாக இருந்தால் போதும் என நினைத்தார்.

அன்றில்  இருந்து நவநீதத்தின் அடிமையாகவே வாழ்ந்து வருகிறார்.
ஏதோ பாவ பிராய்சித்தம் செய்வதாக எண்ணி.

****
ஷர்தா”அம்மா!” என்றழைத்தாள்.

வருவிற்கு பழைய நினைவுகள் அலையாய் அடித்தது..

“அப்ப பாரி எனக்கு மாமா பையனா..?”

“ம்ம்ம்!”

“அப்ப ஈஸி தானே, நாங்க கல்யாணம் செய்வது.?”

“நீ என் மகளா இருக்கும் வரை அது நடக்காது ஷர்தா” என்றார் வகீம்.

“ஏன்பா! நீங்க மதம் வேறு என்பதாலா..? இந்த காலத்தில் அது பெரிய விஷயமே இல்லைப்பா, நான் நன்கு படித்திருக்கேன், வி எல் குரூப்ஸை மேனெஜிங் பண்றேன், நான் திறமையானவள் பாரிக்குப் பொருத்தமானவள். இது போதாத..?”

வருவிற்கு ஒரு எண்ணம் வந்தது.

“ஏங்க நம்ம ஏன் பாரிக்கு நம்ம பொண்ணை கல்யாணம் செய்ய கேட்டுப் பார்க்க கூடாது…?” என்று கேட்டார்.

“நீ சுயநினைவோடு தான் பேசுறீயா..? அதும் உன் அப்பா இன்னும் அந்த வீட்டில் அதே ஆட்சி செஞ்சுட்டு இருக்கார் அது தெரிந்துமா.. நீ பேசுற…?”

“ஆமாங்க! ஏற்கனவே அந்த வீட்டில் ஒருத்தி காதல் கல்யாணம் பண்ணி போய் இருக்காளே, அவளை வெளியிலா அனுப்பிட்டார். இல்லல, அப்ப நாம ஏன் விட்டுக் கொடுக்கனும் பேசுவோம் என் அண்ணன், அண்ணி கிட்ட.. என் அண்ணி பத்தி எனக்கு தெரியும், நம்ம வசதியைப் பார்த்து கண்டிப்பா ஒத்துப்பாங்க, நான் இந்த சந்தர்ப்பத்தை வச்சு அந்த வீட்டுக்குள் போக தான் போறேன். செத்தவ உயிரோடு போனா எப்படி இருக்குமுனு காட்ட வேணாம.. எனக்காக என் அம்மா இருக்காங்க அங்க இன்னும்..” என்றார் உறுதியாக வரு.

வகீமுக்கு மனைவி, மகள் பேச்சை மீறி யோசிக்க தெரியாது, அதை விரும்பவும் மாட்டார்.

வகீம் வருவை கல்யாணம் செய்யும்  போது சாதரண ஆள் தான். ஆனால் இன்று மும்பையில் விரல் விட்டு எண்ண கூடிய பணக்காரர்களில் ஒருத்தர்.

****

காலையில் முதலில் எழுந்த ஸனா ஒரு தடவை சென்று மாமியாரை பார்த்து விட்டு, வரும் போது சுடுதண்ணீரில் எலுமிச்சைப் பழம் பிழிந்துப் போட்டு கொண்டு வந்தாள்.

அதியன் கண் முழிக்கவில்லை, முழித்தப் போது தலைவலி மண்டையை பிளந்தது.

எழுந்தமர்ந்தவன் தலையைப் பிடித்தப்படி நொந்தான்.

“அதியா! இதை குடிங்க” என்று கிளாஸை நீட்டினாள் ஸனா.

“மஸ்து!”

“முதலில் குடிங்க”

“ம்ம்ம்!” என்று வாங்கி குடித்தான்.

சிறிது நேரம் சென்றது..

“அதியா! போய் முதலில் குளிச்சுட்டு வாங்க, ஒரு விஷயம் சொல்லனும்”

“என்ன ஆச்சு மஸ்து..?”

“ப்ளீஸ்! கோ அன்ட் பாத்..”

அதியனுக்குமே மண்டை பாரமாக இருப்பது டென்சன் ஆகியது.

சென்று குளித்து வந்தான்.

காத்திருந்த ஸனா, அவன் வந்ததும்
“அதியா! ட்ரஸ் மாத்திட்டு போய் அத்தையை பாத்துட்டு வாங்க”

“மஸ்து!”

“ஒன்னுமில்ல பயப்புடாதீங்க!” என்று நேற்று நடந்ததைக் கூறினாள்.

அப்படியே பெட்டில் அமர்ந்தவன், “ச்சே! நான் எல்லாம் எதுக்கு இருக்கனேனு தெரியலை.. அம்மாக்கு இப்படி ஆச்சே..?இதில் தாத்தா வேற என்னை அந்த கோலத்தில் பார்த்து, எல்லாமே உனக்கு தான் பிரச்சனை மஸ்து..” என்று நொந்தான்.

“அது எல்லாம் எனக்கு பிரச்சனையே இல்லை, நீங்க அத்தைக்கு முன்னாடி போய் உங்க முகத்தை காட்டிட்டு வாங்க, அப்பதான் அவங்களுக்கு நிம்மதியாகும்..”

“ம்ம்ம்!” என்று உடனே எழுந்து நடந்தவன், ஏதோ தோன்ற திரும்பி வந்து, ஸனாவை இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தம் வைத்தான்.

“தேங்க்ஸ் பொண்டாட்டி!” என்றவாறு.

“எதுக்கு…?”

“என்னைய எந்த கேள்வியும் கேக்கலையே இதுவரை.. அதுக்கு தான்”

“ம்ம்ம்! ஐ அன்டர்சேன்ட் அதியா, ஐ ஆம் ஆல்வேஸ் வித் யு..” என்றாள் சிரித்தவாறு.

“தேங்க்ஸ்! சோ மச்”

“அதியா! இன்னொரு விஷயம், அம்மா வராங்க அத்தையை பார்க்க.. தெரியல எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க எல்லாரும்.”

“நோ ப்ராப்ளம், நான் பாத்துக்குறேன். நான் ஆபிஸ் போறதுக்குள்ள வர சொல்லு.. இல்ல ஈவ்னிங் வரசொல்லு..”

“ஓ! அது கூட சரி, ஈவ்னிங் வர சொல்றேன்.. அதான் ஓகே..”

“குட்!” என்று அதியன் தன் அம்மாவைப் பார்க்க சென்றான்.

ஸனாவும் கூடவே போனாள்.

அங்கு இருந்த சோழர் அதியனை கோபமாகவே பார்த்தார்.

மல்லிகா கண் முழித்து தான் இருந்தார்.

“அம்மா! இப்ப எப்படி இருக்கீங்க…?”

“அதியா! எங்க போன. உன்னைய தேடிட்டே இருந்தேன். நான் நல்லா ஆகிடுவேன். ஆமா! ஆபிஸ் போகலையா.? லேட் ஆகுது தாத்தா திட்டப் போறார்..” என்று பேச, ஸனா சோழரை கண்களால் சமாதானம் செய்தார்.

அதியனுக்கு குற்ற உணர்வு தலைத்தூக்கியது.

“அம்மா! நான் உங்க கிட்ட எதையும் மறைக்காம இருக்க தான் நினைக்குறேன். உண்மையை சொல்லிடுறேன் நைட் நான் வீட்டுக்கு குடிச்சுட்டு லேட்டாதான் வந்தேன். இப்ப தான் தெரியும் உங்க உடல்நிலை, என்னைய மன்னிச்சுடுங்க அப்பா என் மேல கோபமா இருக்கார். எனக்கு சத்தியமா உங்களுக்கு இப்படி ஆகுமுனு தெரியாது.. ” என்றான்.

மல்லி தன் கணவனை பார்த்தார்.

“ஆம்!” என்று தலையை ஆட்டினார்.

“ஏன் அதியா! எதுக்கு அப்படி குடிக்கப் போன, என்ன பிரச்சனை.. தாத்தா திட்டினார..?”

அதியன் தன் அப்பாவைப் பார்த்தான்.

ஸனா முன் வந்து”நான் பேசினா உங்களுக்கு புடிக்காது ஆனா நீங்க புரிஞ்சக்கனும். அதியன் உங்க பையனா வேணுமா..? இல்லை நவநீதத்தின் பேரனா வேணுமா அதாவது ஆஸ்தியோட..?” என்று கேட்டாள்.

மல்லிக்கு கோபம் வர”நான் உன் கிட்ட பேசலை.. அதியா நீ சொல்லு..?”

“நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க..?”

“அதியன் எனக்கு மகன் அதுக்கு அப்புறம் தான் உனக்கு புருசனே அதை புரிஞ்சுக்கோ முதலில்  நீ..”

“மாமா! அதியன்! அப்புறம் ஏன் மறைக்குறீங்க..? சொல்லுங்க, தாத்தா அதியனை கம்பேனியில் இருந்து நீக்கிட்டு பாரிக்கு பொறுப்பு கொடுத்துட்டார். இனி அதியன் அந்த கம்பேனியில்  பாரிக்கு பி ஏ என்று..”

மல்லிக்கு அதிர்ச்சியாக, அதியன் அவர் கையைப் பிடித்திருந்தான்.

“அதியா!”

“ஆமாம்மா, ஆனா நான் சந்தோஷமா தான் இருக்கேன். நீங்களும் எனக்காக யோசிங்க ப்ளீஸ். நான் இருக்கேன் உங்களுக்கு அந்த பதவி எதுக்கும்மா..?”

மல்லி கண்களை மூடித் திறந்தார்.

“நேத்து குடித்ததுக்கு காரணம் இதான..?”

“இல்லை! உங்களையும், இவளையும் இழந்துடுவேனு பயம்..”

மல்லி ஸனாவை திரும்பிப் பார்த்தார்.

“சரி! நீ தைரியமா இரு, அதான் நான் இருக்கேன்ல. அந்தா அவளும் குத்துக்கல்லா நல்லா தானே  நிக்குறா. நீ சந்தோஷமா இருந்தா போதும். அம்மா உன்னைய தொந்தரவு செய்ய மாட்டேன்டா.. எனக்கு உடம்பு சரியில்லாம போனதால் தான் பல விஷயங்கள் புரியுது.. எது முக்கியமுனு.. அப்பா சொன்னார் நேத்து நடந்தது எல்லாம். நான் தான் முட்டாள பணம் இருந்தா மரியாதைனு தப்பா நினைச்சுட்டேன்.. உன் சந்தோஷத்தை பாக்கவே இல்லை. இனி உன்னோட சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம்.. இவ தானே உனக்கு வேணும். எங்களுக்கு பிரச்சனையில்லை ஆனா நான் கோபம் வந்தா நாலு திட்டு திட்டுவேன் சொல்லிட்டேன். என்ன இருந்தாலும் உனக்காக தானே ஏத்துக்குறேன்” என்றார் உதட்டை சுளித்து.

சோழர் சிரித்தார்.

ஸனாக்கும் சந்தோஷம் வந்தது, “தேங்க்ஸ் அத்தை!” என்றாள் அதியன் அருகில் நின்றவாறு.

“உடனே சந்தோஷமாகாத.. நான் இன்னும் முழுசா ஏத்துக்கலை என்புள்ளைக்காக மட்டும் தான்” என்றார்.

அதியனும் லேசாக சிரித்து “தேங்க்ஸ்ம்மா” என்றான்.

அவருக்கு தன் மகனின் மகிழ்ச்சி மனம் நிறைந்தது.

அதியனவள் அடுத்து..

Advertisement