Advertisement

“யார, யார் வீட்டு இரத்தமுனு சொல்ற….? உனக்கு மூளை எதுவும் குழம்பி போயிட்டா அன்னம்….?” என்று அந்த வீடே அதிரும் அளவிற்கு கத்தினார் நவநீதம்.

“கத்துங்க, நல்லா கத்துங்க, கேக்கலை எனக்கு.. கேக்கவே இல்லை எனக்கு, இன்னும் வேகமாக கத்துங்க…” என்றார் பாட்டி அலட்சிய சிரிப்போடு.

“அத்தை! என்ன பேசிட்டு இருக்கீங்க…? நீங்க விளையாட என் பையன் தான் கிடைச்சானா…?” என்று ஓடிப்போய் அதியன் கையைப் பிடித்து நின்றார் மல்லிகா.

ஸனா அதியனை தான் பார்த்தாள், அவன் அதிர்ச்சியில் அப்படியே நின்றான்.

வரு ஓடிப்போய் தன் தாயை உலுக்கினார், “அம்மா! நீங்க சுய நினைவோடு தான் பேசுறீங்களா..?” என்றார் சந்தேகம் வந்ததால்.

பாட்டியின் சம்பந்தமே இல்லாத சிரிப்பு அப்படி பிரதிலிபித்தது.

“நீ ஏன் பதற அம்மாடி, என் தங்கமே நீ ஏன் பதற…..? அன்னைக்கு உனக்கு தலைச்சப் பிள்ளையா பொறந்து செத்தாத நீ தூக்கிட்டுப் போய் அழுது ஒப்பாரி வச்சு புதைச்சீயே, அந்த  ஆம்பள பிள்ளை தான் இந்த வீட்டு இரத்தம், இந்தா நிக்குறானே இந்த அதியன் இவன் உன் இரத்தம், உன் புருசன் ரத்தம்… நம்பலைனா, நல்லா கேட்டுக்கோ அந்தா நிக்குறாங்களே ஸனா அம்மா பீவி, இந்தா நிக்குறாளே உன் தங்கச்சி இவங்களுக்கு நல்லா தெரியும்..” என்றார் அனைவருக்கும் கேட்குமாறு.

ஸனா”அம்மா! பாட்டி சொல்றது உண்மையா…? இல்லல, அதியன் இந்த வீட்டுப் பையன் தானே..? பாட்டி ஏதோ தாத்தா மேல் உள்ள கோபத்தில் பேசுறாங்க போல, நீங்க சொல்லுங்க உண்மையை…” என்று தன் தாயை கெஞ்சினாள்.

ஸனாக்கு நன்றாக தெரியும், கண்டிப்பாக இதை அதியன் தாங்க மாட்டான் என்று.

இந்த குடும்பத்துக்காக அவனோட சந்தோஷத்தை இழக்கவும் யோசிக்க மாட்டான். அந்த குடும்பத்திலே அவன் பிறக்கலைனு சொன்னா எப்படி ஏத்துப்பான்…?

பீவி இப்படி ஒரு சூழ்நிலை வருமென்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.

“ஸமா! பாட்டி சொல்றது எல்லாமே உண்மை தான்.. ஆமா வரு! அன்னைக்கு உனக்கு பிரசவ வலி வந்தப்ப நானும், ஸனா அப்பாவும் தானே அழைச்சுட்டுப் போனோம், அந்த நேரத்தில் தான் மல்லிகாக்கும் பிரசவ வலி வந்து உன் அம்மாவும், தங்கச்சியும் கொண்டு வந்திருக்காங்க இவங்களை எனக்கு தெரியாது, ஆனா ஸனா அப்பாக்கு அடையாளம் தெரிய, உன்னை பத்தி சொன்னார், பிரசவ வலியில் வந்து இருக்கனு. சரியா மல்லிகாக்கும் வலி வர, இருவருக்கும் பிரசவம் நடந்தது.”

“முதலில் உனக்கு தான் மாப்பிள்ளை பிறந்தார், உன் அம்மா தான் முதலில் அவரை வாங்கியது, அவர் வாங்கிய நொடி, அதிர்ச்சியாய் செய்தி வந்தது மல்லிகா குழந்தை இறந்தே பிறந்ததுனு, ஆனா அவங்களை நான் நேரில் பாக்கலை அப்ப.. பாட்டி கதறி அழுதாங்க அதியன் மாப்பிள்ளையை கையில் வச்சுட்டு…”

மல்லிகா பிடித்திருந்த அதியன் கையை விட்டார், அப்படியே நின்றார் அதிர்ச்சியில், கோபத்தில், வெறுப்பில்..

ஆனால் அதியன் அடுத்த  நொடியே அவரின் கையைப்பிடித்துக் கொண்டான். ஏனோ மல்லிகாவிற்கு அந்த நொடியில் அத்தனை உணர்வுகளும் உடைந்து நொறுங்கியது, அதியன் அவரை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

“அப்ப வகீம் அண்ணாவும் இல்லை, சோழா அண்ணாவும் இல்லை” என்றார் பீவி.

நவநீதம் அப்படியே சரிந்து அமர்ந்தார் ஷோபாவில், பரணி தான் ஓடிப்போய்”ஐயா!” என்று பிடித்தார். அதியன்”தாத்தா!” என்று அவரிடம் செல்ல, அவர் அவனை கை அமர்த்தி தள்ளி நிக்க சொன்னார்.

அதியன் சிலையாக நின்றான்..

பாட்டி”மல்லிகா உனக்கு குழந்தை உண்டாக பிரச்சனையானதால் தானே மும்பை போனோம், அந்த மருத்துவமனையில் தான் என் பொண்ணுக்கும் இவன் பிறந்தான், அன்னைக்கு என் பொண்ணுக்கு உயிரோடு கருமாதி பண்ணதை வேடிக்கைப் பாத்துட்டு சும்மா தானே நின்றார்கள் நான் பெத்த மூன்னு ஆம்பளை பிள்ளைகளும் அதான் அவங்க வாரிசு வர வேண்டிய இடத்தில் ஏன் அதியனை வைக்கக் கூடாதுனு யோசிச்சேன்”

“இந்த பெரிய மனுசனுக்கு ஒரு பாடத்தை சொல்லனுமுல, பாசம், இரத்தம் எல்லாம் நம்ம மனசுப் பொறுத்ததுனு.. இந்த வீட்டு ரத்தமுனு தான் பொத்தி, போற்றி உன்னை வளர்த்தார் அதியா, என் பொண்ணுக்கு கிடைக்காத எல்லா மரியாதை, அன்பு உனக்கு இங்க கிடைக்க வச்சேன்.. என்ன தப்பு  பண்ணா என் பொண்ணு, அவ மனசுக்கு புடிச்சவனை கட்டிக்கிட்டா அதுக்காக அவளை உயிரோடு காரியம் செஞ்சா என் பெத்த மனசு தாங்குமா…?”

“இப்படி செய்யாதீங்கனு நான் கதற இந்த வீட்டில் யாருமே கேக்கலை என் கடைசிப்பொண்ணை தவிர, அப்புறம் எதுக்கு நான் உங்க வாரிசுக்கு உரிமைக்  கொடுக்கனும். இப்பவும் பாரியும், அதியனும் ஒன்னு தான் எனக்கு, ஆனா உங்க எல்லாருக்கும் புரியனுமுல இந்த வகீம் புள்ளை அதியனும், நவநீதத்தின் பேரன் சேரர் பையன் பாரியும் ஒன்னு தானு.. அதுக்கும் நான் என் பொண்ணு வயித்துப் பேரனை இங்க வளர விட்டேன்..”

“ஏ பெரிய மனுசா! நீங்க என்ன தான் அதியனை தூக்கி மார்பில், தோளில் போட்டு வளர்த்து, என் பேரன், என் வீட்டு இரத்தம், குடும்ப சொத்துனு சொல்லி பெருமை பேசினாலும், அவனுக்கு உங்க குணம் இல்லை, இதோ நிக்குறாரே என் மாப்பிள்ளை இவரோடு குணம்.. அன்னைக்கு இந்த மனுசன் எப்படி எல்லாம் என் பொண்ணை தாங்கினார் தெரியுமா..? பிள்ளை செத்துப் போச்சுனு அவளை மனசு கலங்க விடாமல் அங்க இருந்த ஒரு வாரமும் அப்படி பாத்துக்கிட்டார், நான் தினமும் அதை பார்த்து பார்த்து பெருமை பட்டேன்.. அவ நல்லா இருப்பானு நம்பிக்கையோடு அதியனை பிரிச்சு அழைச்சுட்டு வந்தேன்..”

“பாட்டி! தப்பு பண்ணிட்டீங்க.. பெரிய தப்பு பண்ணிட்டீங்க.. தாத்தாக்கு தண்டனை கொடுப்பதா நினைச்சி எனக்கு தான்  இப்ப தண்டனைக் கொடுத்து இருக்கீங்க..” என்றான் அதியன் அழுத்தமான வார்த்தைகளால்.

“அத்த! அதியன் என் பையன்.. நீங்க சொல்றதை எல்லாம் நான் ஏத்துக்க மாட்டேன்.” என்று அலறினார் மல்லிகா.

“என்ன உன் பையனா…? அவன் என் மகளுக்கு பிறந்தவன்.. என்ன உங்களை பத்தி எல்லாம் தெரியாதுனு நினைச்சீங்களா…? நீயும், தேவியும் ஒரு ஆம்பள பிள்ளையை பெத்து இந்த வீட்டுக்கு வாரிசு ஆக்க தானே  போட்டிப் போட்டீங்க…? அதோ அவ இப்ப வரை ஆம்பளை பிள்ளை இல்லைனு எனக்கு பங்கு இல்லையானு கேக்குறா..? நீங்க பிள்ளை பெத்து பாசத்தை, பண்பை சொல்லி வளர்க்க ஆசைப்படலை, இந்த வீட்டில் பணத்தை ஆள தான் ஆசைப்பட்டீங்க…? உனக்கு பிள்ளை இறந்து தான் பிறந்தது மல்லிகா.. அது என் பொறுப்பு இல்லை. அதியனை வச்சு இந்த வீட்டில் நீ போட்ட ஆட்டம் எல்லாம் கொஞ்ச நஞ்சமா…? அவ தான் மூத்த மருமக ஆனா நீ தானே இங்க ஆட்சியில் இருக்க ஆசைப்பட்ட…?”

“அவ எப்படானு இருந்தா, அதியன் ஸனாவை கட்டிக்கிட்டதும் இந்த மனுசன் சாமியாட, பாரியை அரியணையில் உட்கார வச்சு இப்ப வேடிக்கைப் பாக்குறா…? இந்தா அரியணை ஏறிய அடுத்த நாளே கோடியைத் தூக்கி அக்காக்கு கொடுத்துட்டு, அதியன் தலையில் வச்சான்ல.. உனக்கு ஏதோ  உடம்பு முடியாம போனதும், அதியன் மனசை புரிஞ்சுங்க ஆரம்பிச்ச இப்ப தான்.. அதுக்காக முன்னாடி நடந்தது எல்லாம் இல்லைனு ஆகிடுமா…?” என்று வெளுத்து வாங்கினார் ஒரு மாமியாராக மூவரையும்.

“அத்த! அதுக்காக அதியன் மேல என் பாசம் பொய்னு சொல்றீங்களா…? நான் வெறும் பணத்துக்காக மட்டும் தான் அவனை வளர்த்தேனு நினைக்குறீங்களா…?”

“ஒத்துக்குறேன், அவன் மேல நீ பாசம் வச்சு தான் வளர்த்தேனு.. அப்படி பாசம் வச்சது உண்மைனா, அவன் வாழ்க்கைக்கு புடிச்சதை அவனை செய்ய விடு, கவலைப்படாத அதியன் உன்னை ஒதுக்க மாட்டான். உங்களை எப்போதும் அவன் அப்பா, அம்மா ஸ்தானத்தில் தான் வச்சுப்பான்..” என்றார் பாட்டி.

மல்லிகா அழுது தேம்ப, சோழா அவரை அணைத்து”அம்மா! எங்களுக்கு நீங்க கொடுத்த தண்டனை இது, புரியுது அன்னைக்கு நான் தங்கச்சிக்கு செய்த பாவம் இப்ப அனுபவிக்கனும் தானே.. கண்டிப்பா ஏத்துக்குறோம்” என்றார் கண் கலங்க.

“அய்யோ! எல்லாம் நிறுத்துங்க, இங்க என்ன நடக்குது…? நான் இந்த வீட்டுப் பையன் தான்.. பாட்டி ப்ளீஸ் நீங்க இதுக்கு மேல பேசாதீங்க.” என்றவன்,

நேராக வரலெட்சுமியிடம் சென்று
“ப்ளீஸ்! நீங்க வெளியில் போங்க” என்றான்.

வரலெட்சுமி லேசாக சிரித்தார்.

“அதியா! இதுவரை நீ நவநீதத்தின் பேரனா இருந்து பேசின, ஆனா இப்ப நீ இந்த வீட்டில் தங்க அவரு அனுமதிக் கொடுக்கனும். புரியுதா…?  நான் சொல்றது..” என்றார் தன் மகனின் நிலையை உணர்த்தி ஒரு தாயாக.

அதியன் திரும்பி தாத்தாவைப் பார்த்தான்.

அவர் முன்னே சென்று”தாத்தா! நீங்க சொல்லுங்க, நான் இந்த வீட்டில் தான் இருப்பேனு. நீங்க சொன்ன மாதிரி கேக்குறேன். உங்களுக்கு என்ன நான் ஸனாவை பிரியனும் அதானே. பிரியுறோம் அவ நான் சொன்னா கேட்பா, அவளுக்கு என்னோட காதலும் புரியும், இந்த வீட்டு பாசமும் புரியும். அவ என்னைய விட்டுப் போயிடுவா.. பதில் பேசுங்க தாத்தா..” என்றான்.

பீவி அதிர்ச்சியானார்.. “ஸமா!” என்று மகளைப் பார்த்தார்.

அவளோ கண்களால் சிரித்து”அம்மா! எனக்கு இதில் வருத்தம் இல்லை, நானும் அதியனும் ஒன்னா வாழுற வாழ்க்கையை விட மனதால வாழுவோம். அவரை பத்தி தெரிஞ்சு தான் காதலித்தேன்.. எனக்கு இது அதிர்ச்சி இல்லை. அதியன் எடுக்கும் முடிவு தான் எனக்கும்” என்றவள், தாத்தாவிடம் சென்றாள்.

“இங்க பாருங்க அதியன் சொல்றது எனக்கும் சம்மதம், நான் போறேன். நீங்க அதியனை ஏத்துக்கோங்க…” என்றாள் அவன் அருகில் அமர்ந்து.

பாரி, மற்ற பெண்கள் தாத்தாவிடம் கெஞ்சினர்.

“தாத்தா! அதியன் அண்ணா இங்க தான் இருக்கனும்” என்று.

“அப்பா! பேசுங்கப்பா” என்று சேரரும், பாண்டியனும் கூறினர்.

பரணி”ஐயா! என்னய்யா இது, அதியன் தம்பி நம்ம பிள்ளை.. உங்க வாயால சொல்லுங்க…” என்றார்.

வரலெட்சுமி கண் கலங்க, வகீம் அவரை அமைதிப்படுத்தினார்.

ஷர்தா”அப்பா! அதியன் அண்ணா எதுக்கு இவர் கிட்ட கெஞ்சனும், வாங்க நம்ப கூட்டிட்டுப் போகலாம்” என்றாள்.

“பொறுமையா இரு ஷர்தா..” என்றார் வகீம்.

நவநீதம் கண்களை இறுக மூடித் திறந்தார்.

எழுந்து நின்றவர்”இந்த வீட்டு வாரிசு பாரி மட்டும் தான், அவங்க பிள்ளையை கூப்புட்டுகிட்டு வெளியில் போகலாம், செத்துப் போனவங்க எல்லாம் உயிர் பிழைக்க முடியாது, அதே மாதிரி அடுத்தவங்க பிள்ளையை நான் உரிமைக் கொண்டாட முடியாது..” என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்று கதவைச் சாத்திக் கொண்டார்.

இதை எதிர்ப்பார்க்காத அதியன், அப்படியே அமர்ந்து தரையில் கவிழ்ந்து அழுதான்.

பாட்டிக்கு இப்போது, தான் தப்பு பண்ணிட்டமோ என்று மனம் துடித்தது.

‘இல்லை! இல்லை! நான் செஞ்சது தான் சரி’ என தெளிவானவர், வரலெட்சுமியிடம்”நீ அதியனை அழைச்சுட்டுப் போ..” என்றார்.

“அம்மா! எப்படி…? அவனை பாத்தீங்கள.. நீங்க ஏம்மா இப்படி பண்ணீங்க…?  இந்த உண்மையை சொல்லாமலே இருந்திருக்கலாம்.. அவன் தாங்க மாட்டான்மா..” என்று கண்ணீர் வடித்தார்.

பாட்டி வகீமைப் பார்த்தார்.

“உங்களுக்கு புரியனும் மாப்பிள்ளை அவனை அழைச்சுட்டுப் போங்க..” என்றார்.

வகீம் அதியனிடம் சென்று அவனை எழுப்பி, தன்னோடு அணைத்துக் கொண்டார்.

“அதியா! வா, எதுமே உடனே மாறாது.. கொஞ்சகாலம் ஆகனும்..” என்றார்.

அதியன் அவர் கையை விலக்கிவிட்டு, வேகமாக தாத்தா அறைப் பக்கம் சென்றான்..

“தாத்தா! கதவை திறங்க, நான் இங்க தான் இருப்பேன். நீங்க திறந்து வெளியில் வாங்க, நான் நவநீதத்தின் பேரனா தான் வளர்ந்தேன், இவங்க பிள்ளையை மாத்தினா என் தப்பு என்ன இருக்கு..? நீங்க என் மேல உண்மையான பாசம் தானே வச்சு இருக்கீங்க, வாங்க வெளியில்.. நான் உங்க பேரன் அதியன் மட்டுமே தான். வந்து சொல்லுங்க. நான் உயிரா நினைச்சவ என் மஸ்து, அவளையே உங்களுக்காக விட்டு தரேன் தாத்தா.. எனக்காக நீங்க விட்டு தர மாட்டீங்களா…? உங்க பிடிவாதத்தை எனக்காக விட்டு தந்து என்னைய ஏத்துக்கோங்க தாத்தா. எனக்கு இந்த வீட்டில் எந்த அந்தஸ்தும் வேணாம் அன்பு இருந்தா போதும்.. அவங்க தான் என் அப்பா, அம்மான அவங்க தானே உங்களுக்கு பிடிக்காம கல்யாணம் செஞ்சாங்க, அதே ரத்தம் நானும் அதே தப்பை நான் செஞ்சுட்டேன் ஆனா நான் விட்டு தரேன்.. என் காதலை விட்டு தரேன்.. நீங்க வாங்க வெளியில். நான் உங்க பேரனு சொல்லுங்க..” என்று கத்தி கதறினான்.

அதியனால் நொடியில் மாறிய தன் பிறப்பை  ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அந்த கதவு திறக்கவே இல்லை..

“தாத்தா! நீங்க வரலை இப்ப, அப்புறம் இந்த  அதியனை நீங்க நினைச்சாலும் பாக்க முடியாது.. உங்க கண் முன்னே வர மாட்டேன்… வாங்க தாத்தா” என்று கெஞ்சினான்.

பாட்டி வேகமாக வந்து அவன் கன்னத்தில் ஒரு அறை வைத்தார்.

“போ முதலில் வெளியே.. புரியுதா உனக்கு, மனுசனா கொஞ்சமாச்சும் மனிதாபிமானம் இருக்கனும்.. அது சுத்தமா இல்லாத மனுசனிடம் போய் கெஞ்சுற..? நீ எதுக்குடா உன் காதலை விட்டு தர…? இவ என்ன விளையாட்டுப் பொம்மையா நீ வேணுமுனா விளையாடிட்டு தூக்கிப்போட.. இன்னுமே கொஞ்ச நாள் உயிர் வாழப் போற அந்த கிழவனுக்காக நீ ஏன் உன் வாழ்க்கையை அழிச்சுக்குற..? போ, போய் உன் பொண்டாட்டியோட வாழு. இது அடிமைக் குடும்பம்.. அடிமைப்பட்டு தான் கிடக்கும்.. இனி தெரியும் இந்த நவநீதத்திற்கு இங்க இருப்பது எல்லாம் எப்படினு.. இந்த அதியன் இல்லனா புரியும்.. நீ போ” என்று வகீமைப் பார்த்தார்.

வகீம் அதியனை அழைத்துக் கொண்டு நடந்தார்..

ஸனாவை வரலெட்சுமி கையில் பிடித்தவாறு சென்றார்.

அந்த கதவுத் திறக்குமா என அதியன் திரும்பி பார்த்தப்படி நடந்தான்.

அது திறக்கவே இல்லை.

சில மணி நேரம் கழித்து…

வீடே அமைதியாக இருந்தது..

கதவைத் திறந்துக் கொண்டு நவநீதம் வெளியில் வந்தார்.

அதியனவள் அடுத்து..

Advertisement