Advertisement

“அப்பா! உங்களை நான் எதிர்த்து இதுவரை எதுவும் பேசியதில்லை, ஆனா

என் பையனுக்கு இது பெரிய தண்டனைப்பா” என்று மனம் வருந்த கூறி வெளியில் சென்றார் சோழர்.

நவநீதம் சேரா, பாண்டியனை பார்த்தார்,
“நீங்க என்ன சொல்லப் போறீங்க…? உங்க பங்குக்கு ஏதாவது சொல்லிட்டுப் போங்க” என்றார்.

அவர்கள் எதுவும் சொல்லாமல் சென்றனர்.

பாரி”தாத்தா! எனக்கு நீங்க பெரிய பதவி, மரியாதை கொடுத்து இருக்கீங்க, ஆனா என்னால இதை எல்லாம் சந்தோஷமா அனுபவிக்க முடியல, அண்ணனுக்கு அடுத்த இடத்தில் இருந்தப்போ மனசு சந்தோஷமா இருந்துச்சு இப்ப ஏதோ குற்ற உணர்வு தான் இருக்கு” என்று கூறிவிட்டு சென்றான்.

அனைவரும் செல்ல, பரணி மட்டுமே நின்றார்..

“பரணி! அதியன் என்னைய விட்டு தூரப் போறானோ..?” என்றார் நவநீதம் வருத்ததுடன்.

“அதியன் தம்பி, அப்படி எல்லாம் செய்ய மாட்டார் ஐயா, அந்த பொண்ணும் நல்ல…” என்று பரணி முடிப்பதற்குள்.

“பரணி! போதும் நீ போ” என்றார் வேகமாக.

அதற்கு மேல் பரணி நிற்கவில்லை.

***

அதியனுக்காக அறை மாற்றப்பட்டிருந்தது. சௌகரியங்களும் மாறியது.

அது அதியனுக்கு மனதில் படவில்லை.
அவனுடைய வேலையைத் தொடர்ந்தான். பாரி, பெரியப்பா, சித்தப்பா, அப்பா என அனைவரையும் சார் என்றே அழைத்தான்.

மதியம் உணவிற்கு கூட அவன் வெளியில் செல்லவில்லை.

பரணி வந்து கேட்க, “நான் பாத்துக்குறேன் சார்” என்றான், அவருக்கும் அது பெரிய வலியாக இருந்தது.

“தம்பி! ஆயிரம் நடக்கட்டும் நீங்க எனக்கு தம்பி, நான் உங்களுக்கு அங்கிள் அது மாறாது” என்று பதில் சொல்லிவிட்டு சென்றார்.

அதியனுக்கு மனம் சற்று லேசானது. ஸனாவின் மெசேஜ் வந்தாலும் அதியன்
“ஐ ஆம் ஓகே, யு கேரி ஆன்” என்று பதில் அனுப்பி அதற்கு மேல் போனை தொடவில்லை.

அன்று மாலை ஆனதும், அதியனுக்கு இண்டர்கமில் அழைப்பு வந்தது.

நவநீதத்தின் அறைக்குள் சென்றான்.

அங்கு குடும்ப உறுப்பினர்கள் நின்றனர்.

“அதியன்! இந்த டாக்குமென்ட்ஸில் கையெழுத்துப் போடனும் உன்னோட ரைட்ஸ் எல்லாம் பாரிக்கு மாறுது” என்றார் நவநீதம்.

அதியன் மறுவார்த்தை பேசாமல் கையெழுத்துப் போட்டான்.

அவனையே ஆழமாகப் பார்த்த நவநீதம்.

“நீ என்னோட ஆசை, கனவு  எல்லாம் உடைச்சு துண்டாக்கிட்ட அதியா, போ,
இன்னும் இரு தினங்களில் பேங்க் பார்மாலிக்டிக்ஸ் எல்லாம் பாரிக்கு மாத்தி கொடுத்துடு” என்று இப்போது
அவர் வெளியில் சென்று விட்டார் அனைவர் முன்னும்.

“ஏன்டா! இப்படி பண்ற…? உன் அம்மா இப்ப இருக்க நிலையில் இதை எல்லாம் தாங்குவாள…?”

“அப்பா! எனக்கு இதான் வழி நான் என்ன செய்ய..? நீங்க இன்னும் தாத்தா, அம்மா மனசு கஷ்டப்படக்கூடாதுனு நினைக்குறீங்க. அதே மாதிரி தான் நானும் தாத்தா, அம்மா, என் பொண்டாட்டி என எல்லாரையும் பத்தி யோசிக்குறேன், எனக்கு டைம் கொடுங்க, என்னால  முடிஞ்ச வரை தாத்தாவை கன்வின்ஸ் செய்ய முயற்சி செய்றேன் அப்பா, சாரி சார்” என்றான்.

“சோழா! அதியன் சின்ன பையன் இல்லை, அவனுக்கும் எல்லா தெரியும் நம்மளும் அவனை கஷ்டப்படுத்த வேண்டாம், நம்ம ஒதுங்கி இருப்போம் அவன் விருப்பம்” என்றார் பெரியப்பா.

“அண்ணா! நீங்க சொல்றது புரியுது, ஆனா நம்ம எல்லாம் ஒற்றுமையா இருந்தாலும் வீட்டில் பொம்பளைங்க மத்தியில் போர்களமா இருக்குமே..?” என்றார் பாண்டியன்.

“ம்ம்ம்! அதை எல்லாம் நம்ம தடுக்க முடியாது, நடப்பது நடக்கட்டும் என்ன நடக்குதோ அது தான் கடவுள் நமக்கு கொடுக்குறதுனு நினைப்போம் அது நல்லதோ, கெட்டதோ.. அப்பா அவர் வீம்பில் இருக்கார். அதியன் அவன் வீம்பில் பிடிவாதமாக இருக்கான். நடுவில் நம்ம ஒன்னும் செய்ய இயலாது” என்று சேரர் வெளியேறினார்.

கூடவே தம்பிகளும் சென்றனர்.

அதியன் நின்றான். “அண்ணா! உனக்கு நான் இருக்கேன், நீ கவலைப்படாத, வா வீட்டுக்குப் போகலாம்” என்றழைத்தான் பாரி.

“இல்லங்க சார்! நீங்க போங்க நான் வரேன்”

“தயவு செஞ்சு அப்படி சொல்லாத ப்ளீஸ்”

“இது ஆபிஸ், இப்படி தான் கூப்புடனும், எனக்கு கம்பேனி கார் இருக்கு நீங்க போங்க” என்று அதியன் நடந்தான்.

பாரிக்கு வெறுத்து வந்தது..

***

அது ஒரு உயர்ரக ஹோட்டல் தான்..

“டேய்! இனி எல்லாம் இந்த மாதிரி ஹோட்டலுக்கு நான் வர மாட்டேன். ஏனா நான் சாதரண மிடில் கிளாஸ் பேமிலி பையன், நானும் என் பொண்டாட்டியும் அதுக்கு தகுந்த மாதிரி இருக்கனுமுல” என்று இதோடு எத்தனையாவது முறை சொல்லி இருப்பான் அதியன் என்று தெரியவில்லை.

அச்சு, மாதவன், தீரன் என மூவரும் சுற்றி அமர்ந்திருந்தனர்.

ஆபிஸில் இருந்து அச்சுவை தான் அழைத்தான் அதியன். அதன் பின் நண்பர்கள் ஒன்று சேர்ந்தனர்.

அதியன் நடந்ததை எல்லாம் சொல்ல, நண்பர்களுக்கு என்ன சொல்வதுனு தெரியவில்லை.

அச்சு”டேய்! இப்படி புலம்புவதை நிறுத்து, ஸனாவை கூட்டிட்டு வெளியில் வாடா..”

“ஆமாட! உனக்குனு ஒரு லைஃப் இருக்குல.. அத பாரு” என்றான் தீரன்.

“அப்படி எல்லாம் எடுத்தேன் கவுத்தேனு வர முடியாதுடா, அதுக்கும் சேர்த்து மஸ்து தான் பொறுப்பு ஆவா.. இப்ப என் கவலை எல்லாம், அம்மாவை சமாளிப்பது, மஸ்துவை சமாளிப்பது தான்.”

“ஏன்டா…?” என்று கேட்டான் மாதவன்.

“அம்மாக்கு உடம்பு பத்தி சொன்னேன்ல, இந்த லட்சணத்தில் தாத்தா கொடுத்த பிஏ வேலை தெரிஞ்சா அம்மா அவ்ளோ தான்  நொந்துடுவாங்க. மஸ்துக்கு அவளால் தான் எனக்கு இந்த நிலைனு ஃபீல் பண்ணி, நான் போறேனு சொல்வா..”

“ம்ம்ம்! பொதுவான விஷயம் தானேடா. உன்னைன கெத்தா பாத்துட்டு இப்படி பாக்க முடியலை,  ஸனாக்கும் இது கஷ்டமான விஷயம் தான்.” என்று சமாதானம் செய்தான் அச்சு.

“இப்ப எனக்கு ஒன்னும் புரியலை” என்று டேபிளில் இருந்த ஹாட் விஸ்கியை எடுத்து ஒரே மடக்காக குடித்தான்.

முதலில் அளவாக குடித்தவன், பிறகு அது அளவை மீறியது.

“டேய்! போதுமுடா… வேணாம் நீ வீட்டுக்குப் போகனும்” என்றான் அச்சு.

“ஆமான்டா! அதியா போதும்” என்றனர் மற்ற நண்பர்களும்.

ஆனால் அதியனுக்கு ஒரே நாளில் எல்லாம் தன்னை விட்டுப் போன உணர்வு தோன்ற, தன்னை அறியாமல் குடித்தான்.

தடுக்க நினைத்த நண்பர்கள் ஒரு கட்டத்தில் அவன் புலம்புவதை நிறுத்த அதுவே மருந்து என முடிவெடுத்தனர்.

அச்சு”டேய்! நானும் வரேன், ஆனா அதியனை உள்ளே அழைச்சுட்டுப் போய் விடுறது நீங்க ரெண்டுப் பேரும் தான்” என்றான்.

“யாரு அந்த ஹிட்லர் கிட்ட யாரு மாட்டுவா..? பரணி அங்கிள் இருப்பாருடா வா பாத்துக்கலாம்” என்றான் தீரன்.

கடும் போதையில் இருந்த அதியனை அழைத்துக் கொண்டு புறப்பட்டனர் நண்பர்கள் பத்து மணி வாக்கில்..

***
அன்று ஷூட்டிங் முடிந்ததால், ஸனா ஆறு மணிக்கே வீட்டிற்கு திரும்பினாள்.

அதியன் போன் ஆப் மோடில் இருந்தது.

அஜிக்கு எல்லா விஷயமும் ஸனா சொல்லி இருந்ததால், அச்சுக்கு போன் செஞ்சி கேட்க, தங்களோடு இருப்பதாக சொல்லி அழைத்து வருவதாக கூறியிருந்தான், அதியன் இருக்கும் நிலை பற்றி சொல்லவில்லை.

ஸனா வீட்டில் வந்திறங்க, டிரைவர் அங்கிள்”ஸனாம்மா! அம்மா கிட்ட ராணி உங்க மாமியாருக்கு முடியலனு சொல்லி இருப்பா போல”

“ஆமா அங்கிள், அஜி கிட்ட சொல்லும் போது, ராணி கூட தான் இருந்தா அவ மதியமே போயிட்டாளே..”

“ம்ம்ம்! அம்மா உங்க நம்பருக்கு கூப்புட்டாங்களாம் கிடைக்கலையாம். நாளைக்கு காலையில் உங்க மாமியாரை பார்க்க வராங்களாம், சொல்ல சொன்னாங்க”

“ஓ! இப்பவா அங்கிள், வேணாமே அம்மா கிட்ட நான் சொன்னா பயப்புடுவாங்க நீங்களே சொல்லுங்க இன்னொரு நாள் போகலாமுனு..”

“எப்ப இருந்தாலும் இப்படி தான் இந்த வீடு, பரணி சொன்னாப்ல ஏதோ அவரு நல்ல மனுசன் எனக்கு உங்களை பத்தி விசாரிக்க இருக்காரு, உங்க சார்பா ஒருத்தவங்க வரனும்மா, அப்ப தான் இந்த வீட்டில் உங்களுக்கு மரியாதை.. அம்மாவை நாளைக்கு நான் அழைச்சுட்டு வரேன். நீங்க போங்கம்மா” என்று கூறிவிட்டு கிளம்பினார்.

ஸனாக்கு புரியவில்லை, அதியனிடம் இது பற்றி பேச வேண்டும் என்று நினைத்தாள்.

ஸனா வந்த நேரம் தான் பாரியும் வந்தது.

ஸனா ட்ரைவரிடம் பேசிவிட்டு நடக்க, பாரி உள்ளே நுழையும் முன் தேவி அவசரமாக வந்தார்.

“பாரி! நில்லு வரேன்..” என்று.

“என்னம்மா!”

“இருடா!” என்று ரெடியாக வைத்திருந்த ஆராத்தி தட்டை எடுத்து சூடம் வைத்துக் கொளுத்தி சுத்தினார்.

வீட்டில் மற்றவர்கள் இருந்தனர்.

“என்னம்மா இது புதுசா..?”

“ஆமா! புதுசா தானே நீ நிர்வாகப் பொறுப்பேற்று இருக்க, அதான் திருஷ்டி கழிக்குறேன், இருடா” என்று மூன்று முறை சுத்தி அவன் நெற்றியில் குங்குமத்தை வைத்தார்.

அதை களைத்தவன், “அம்மா! இது எல்லாம் நல்லா இல்ல, போயிடுங்க” என்றான்.

ஸனாக்கு புரியவில்லை, பாரி பின்பக்கமாக நின்றாள்.

தேவி அதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் வேலை செய்யும் பெண்ணை அழைத்து வெளியில் ஆராத்தியை கொட்ட சொன்னார்.

பாரி உள்ளே கோபமாக வர, “இருடா!” என்று செய்து வைத்திருந்த கேசரியை எடுத்து வாயில் வைக்க சென்றார்.

அதை தட்டி விட்டவன், “அம்மா! வில் யு ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்” என்றான்.

ஸனா பார்வையாளராக நின்றாள்.

“என்னடா! ஏன் இப்படி வெறுப்பா நடந்துக்குற. தாத்தா தானே  உனக்கு பொறுப்பு கொடுத்திருக்கார்”

“அதியன் அண்ணன் கிட்ட இருந்து புடுங்கி கொடுத்தது இது, நானா சம்பாரித்த பதவி இல்லை” என்றான்.

ஸனாவிற்கு புரிந்தது மெல்ல அனைத்தும்.

“என்னடா, புடுங்கி கொடுத்துட்டாரு, அவரு சொல்றதை கேட்காம இவ தான் முக்கியமுனு சொன்னான் அதான் தாத்தா குடும்பத்துக்காக இதை செஞ்சார், நீ என்னமோ பெருசா உருகி பேசுற.. அவன் சுயநலமா யோசிக்குறான். அது உனக்கு புரியலையா…?”

“அம்மா! ப்ளீஸ் விடுங்க, அண்ணனை பத்தி எதுவும் பேசாதீங்க..”

“பேசட்டும் விடு பாரி, பணம் தான் இந்த வீட்டை இன்னும் பாடாய் படுத்தப்போது.. பேசட்டும்” என்றார் பாட்டி.

“அத்தை! உங்களுக்கு  அதியன் வந்தா சந்தோஷம் என் பிள்ளை பொறுப்பேத்தா சந்தோஷம் இல்லையா. அவனும் இந்த வீட்டுப்பையன் தானே.?”

“அதியன், பாரி எனக்கு வேற இல்லை, நான் உன்னைய மாதிரி பணத்தை வச்சு பார்க்க மாட்டேன் மூத்த மருமகளே!”

“அண்ணி! பாரிக்கு நீங்க சந்தோஷமா வரவேற்பு செய்யுங்க, ஆனா  தேவையில்லாததை பேசி, உள்ள தூக்கத்தில் இருக்கும் மல்லிகாவை கஷ்டப்படுத்திடாதீங்க, ஆபிஸில் நடந்தது அவளுக்கு எதுவும் தெரியாது” என்றார் சோழர்..

“ஆமா தம்பி! உங்க பொண்டாட்டி பெருமை பட்டப்போ நாங்க எல்லாம் ஓரமா நின்னு வேடிக்கை பாத்தோம் இப்ப நான் சந்தோஷப்பட அவ பர்மிசன் வாங்கனும். எல்லாம் என் நேரம் நான் மூத்த மருமகனு தான் பேரு ஆனா எல்லா மரியாதையும் உங்க பிள்ளை, பொண்டாட்டிக்கு தானே கிடைக்குது..” என்று  ஆரம்பித்தார் தேவி.

“தேவி! அமைதியா இரு” என்றார் சேரர்.

“எங்கடா நீங்க வாயை திறக்கலைனு பாத்தேன். இப்படியே அடக்கி வைங்க. நானும் என் பிள்ளையும் அடங்கியே போறோம்” என்று மூக்கை உறிஞ்சினார்.

“அக்கா! நீங்களாச்சும் ஆம்பளை பிள்ளையை பெத்து வச்சுட்டு வாய்ப்பு கிடைக்குதுனு சந்தோஷம் படுறீங்க நான் எல்லாம்  என்ன செய்றது” என்றார் மாலினி இடையில்.

“ஏய் இடையில் நீ ஏன் பேசுற..?” என்றார் பாண்டியன்.

“பேசட்டும் விடுங்க, எல்லாரும் பேசட்டும் இது எல்லாம் நடக்க தானே ஒருத்தன் விட்டுக் கொடுத்துட்டுப் போனான் யாரோ ஒருத்திக்காக, வேடிக்கை பாக்கட்டும் நடத்துங்க உங்க இஷ்டத்துக்கு” என்று கூறினார் நவநீதம்.

பாட்டி அவரை முறைத்துப் பார்த்தார்,
‘இவ்வளவுக்கும் காரணகர்த்தாவ இருந்துட்டு இப்ப அதியன், ஸனா  மீதும் பழியைப் போடும் பெரியவரை”

ஸனா அனைத்தையும் வேடிக்கைப் பார்த்து விட்டு, எதையுமே கண்டுக்காமல்  நேராக சோழாவிடம் சென்றாள்.

“மாமா! அத்தை எப்படி இருக்காங்க…?” என்றாள் உரிமையாக.

அவரோ  சுற்றிலும் பார்த்துவிட்டு, தன்னிடம் பேசுகிறாள் என்று உணர்வுக்கு வந்தவர், சிறிது திக்கி
“மா த் தி ரை போ ட் டு தூங்கிட் டு
இ ருக்கா” என்றார் மெதுவாக.

பாட்டிக்கு அப்படி ஒரு சந்தோஷம் வந்தது.

ஸனா நேராக மாமியார் அறைக்குள் சென்றாள், தூங்கும் மாமியாரை பார்த்துவிட்டு, வெளியில் வந்தவள்.

“தூங்கட்டும் நான் வந்து பாத்துக்குறேன்  நீங்க உங்களுக்கு வேலை இருந்தா கவனிங்க மாமா” என்று தன் அறைநோக்கி செல்லப் போனவள்.

“கங்கிராட்ஸ் பாரி, புதுசா ஜி எம் ஆ பதவி ஏறுத்ததுக்கு, அதியன் கண்டிப்பா சந்தோஷமா தான்  உங்களுக்கு கொடுத்திருப்பார் இந்த பதவியை நீங்க கில்டியா ஃபீல் பண்ணாம நல்ல படியா கம்பேனியை தொடருங்க, நாங்க ஹேப்பி தான்” என்று கை கொடுத்தாள் அவனுக்கு.

பாரியும் புரியாமல் கையை நீட்ட, குலுக்கி விட்டு மாடியை நோக்கி புறப்பட்டாள்.

அங்கிருந்த அனைவரும் ஆ! வென பார்த்தனர்.

பாட்டி தான் ஒய்யாரமாக அமர்ந்திருந்தார்.

“ஆசாமி போடுற கணக்கு எல்லாம் சாமி போடுற கணக்கு முன்னாடி ஒரு முடியையும் புடுங்கி போட்டுடாது அந்தளவு பலம் வாய்ந்தது. என் பேரனும் அப்படி தான் அவன் சாமி இந்த வீட்டு சாமி, அது மாறாது” என்றார் சத்தமாக பாட்டி.

அதியனவள் அடுத்து…

Advertisement