Advertisement

“என்னடி பிரச்சனை இவ்வளவு காலையில் வந்து இருக்க….?” என்று கேட்டார் தேவி.

“அம்மா வீட்டுக்கு தானே வந்து இருக்கேன், அதுக்கும் கேள்வியாம்மா..?” என்றாள் அவரின் மூத்தப் பெண்ணான ராகவி.

“அம்மா வீடு தான், ஆனா அதிகாலையில் அதும் புருசனோடு வராமல் இப்படி புள்ளைய மட்டும் கூட்டிட்டு வந்து இருக்கனா கேள்வி வராத…?”

“ம்ம்ம்! அவரால வர முடியலை, சித்தி எப்படி இருக்காங்க..?”

“இப்ப பரவாயில்லை தான், போய் முதலில் பாத்துட்டு வா, அப்புறம் பேசலாம், இல்லனா உன் பாட்டி அதுக்கும் என்னைய பழிச் சொல்லுவாங்க..”

“சரி! நீ இவனை போய் தூங்க வை, எழுந்திரிக்கும் போது எழட்டும்..” என்று தன் மகனை கொடுத்தாள் ராகவி.

அடுத்து மல்லிகாவை சென்று பார்த்தாள்.

“வா ராகவி! மாப்பிள்ளை நலமா…? வந்து இருக்கார..?” என்று எழுந்தார் சோழர்.

“இல்ல சித்தப்பா! அவருக்கு வேலை.. நான் சித்தியைப் பாத்துட்டு போக தான் வந்தேன். சித்திக்கு இப்ப எப்படி இருக்கு.?”

மல்லிகா தூக்கத்தில் இருந்தார்.

“பரவாயில்லை ராகவி, இப்ப கொஞ்சம் நார்மலா இருக்கா”

“ம்ம்ம்! எங்க அதியனை காணும்…? எல்லாம் கேள்விப் பட்டோம். தாத்தா கோபம் பத்தி அவனுக்கு தெரிஞ்சுப் போய் இப்படி வீம்பு பண்ணிட்டு இருக்கான்”

“தோளுக்கு மேல் வளர்ந்த பையனை கண்டிக்க முடியாதும்மா, அவன் வாழ்க்கை அவன் முடிவு” என்றார் பொதுவாக.

மல்லிகா கண் முழிக்க, கொஞ்ச நேரமும் இருவரும் பேசினர்.

***

“எப்பக்கா வந்த, நல்லா இருக்கீயா..?” என்று கேட்டப்படி பாரி நுழைந்தான் தேவி அறைக்குள்.

“ம்ம்ம்! நல்லா இருக்கேன், நீ..?”

“குட்! கிருஷ்ணா தூங்கிட்டு இருக்கான… மாமா வரலையா..?”

“இல்லை!”

“பாரி! உன் கிட்ட கொஞ்சம் பேசனும் அதான் வர சொன்னேன்” என்றார் தேவி.

“சொல்லுங்கம்மா!”

“இவ புருசனுக்கு ஒரு பிரச்சனையாம், ஏய்! என் கிட்ட சொன்னதை சொல்லுடி” என்று மகளை அதட்டினார்.

“என்ன பிரச்சனை அக்கா….?”

“மாமாக்கு பிஸ்னஸில் இழப்பு ஆகிட்டுடா.. அவர் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகி கேஸ் போட்டாங்க.”

“அய்யயோ! அப்புறம்..?”

“அவரு நேற்றில் இருந்து வீட்டில் இல்லை, போலிஸ் ஸ்டேசனில் இருக்காரு, நாங்களும் முயற்சி செய்தோம் ஒன்னும் முடியவில்லை, மாமா அந்த கிளைன்ட் கிட்ட பேசிட்டாரு அவங்க இமிடேட்டா பணம் கொடுத்துட்டு ரிலீஸ் பண்ணிக்க சொல்றாங்க..”

“எவ்வளவு..?”

“பத்து செக், மொத்தம் ஒரு கோடி..”

“ம்ம்ம்! ஏன் நீ நேத்தே சொல்லலை, அப்பா கிட்ட சொன்னியா..?”

“இன்னும் இல்லடா, அப்பா வாக்கிங் போய் இருக்கார்..”

“சரி வா அண்ணன் கிட்ட இதப்பத்தி பேசுவோம்..”

“டேய்! அவன் கிட்ட என்ன பேசப் போற..? இப்ப நீ தானே பொறுப்பில் இருக்க, நீயே முடிவுப்பண்ணு. உடனே பணத்தைக்கொடுத்து மாப்பிள்ளையை அழைச்சுட்டு வாடா..” என்றார் தேவி.

“என்னம்மா பேசுறீங்க…?  அண்ணன் கிட்ட, தாத்தா கிட்ட பேசனும். அப்புறம் தான் முடிவு எடுக்க முடியும். நானா முடிவு எடுக்க இது சின்ன தொகையா..? கோடி  ரூபாய்..”

“பாரி! இது தாத்தா, அதியனுக்கு எல்லாம் தெரிஞ்சா, என் குடும்ப மானம் தான் போகும். ப்ளீஸ்டா யாருக்கும் தெரியாம ஹெல்ப் பண்ணுடா..”

“அக்கா! என்ன நீயும் அம்மா மாதிரி புரியாம பேசுற..? அதியன் அண்ணனுக்கு தெரியனும், அவரு உதவி இல்லாம பணம் வித் ட்ரா பண்ண முடியாது.. ஏனா இன்னும் பேங்க் அக்கவுண்ட் ப்ரொஸிசர் எல்லாம் என் பேருக்கு மாறவில்லை. அப்படியே இருந்தாலும் அண்ணனுக்கு தெரியாம நான் தர முடியாது..”

“டேய்! அம்மா, தம்பினு உங்களை நம்பி வந்தா, இப்படி எல்லார்கிட்டையும் சொல்லி தான் மானத்தை வாங்குவேனா விடு, நான் போய் சாகுறேன் என் பிள்ளையோட” என்று தன் மகனை தூக்கப் போனாள் ராகவி.

“இருடி! டேய் ஏன்டா இப்படி இருக்க..? போதும் உன் அப்பா தம்பிங்கனு உருகினது, இப்ப நீயும் அண்ணனு உருகுறது. நீ என்ன செய்வீயோ தெரியாது, யாருக்கு தெரியாம இந்த பிரச்சனையை முடி. அப்பா கிட்ட கூட சொல்லாம, அவரு உடனே உன் தாத்தா கிட்ட சொல்ல ஓடுவார். அவரு இவளை மானகேடா குத்திப் பேசுவார் இது எல்லாம் தேவையா..?” என்று கண்ணீர் பொழிந்தார் தேவி.

“அம்மா! நான் மட்டும் என்ன செய்றது…?”

“ஏன்! நீ தானே இப்ப பொறுப்பில் இருக்க, உன்னைய யாரு கேக்க போறா..? ஒரு கோடி ரெடிப்பண்ண முடியாதடா உனக்கு..?” என்றார் தாய்.

ராகவி தலையில் அடித்து அழுதாள்.

“என் விதி உங்க கிட்ட எல்லாம் கெஞ்சனுமுனு..” என்று கூறிக் கொண்டே.

“சரி! நான் ஆபிஸ் போயிட்டு, மாமாவை போய் பாக்குறேன்” என யோசனையோடு சென்றான் பாரி.

***

“அதியா! அம்மா கிட்ட அத்த, மாமா எல்லாம் நல்லா பேசினாங்கள, எனக்கு செம ஹேப்பி, அதோட உன் தாத்தா எதுமே சொல்லவில்லை..”

“ம்ம்ம்! உன் அம்மா முகத்தை பார்த்தா எப்படி சண்டைப் போட தோணும்..” என்று சிரித்தான்.

“அப்ப என் முகமும் என் அம்மா மாதிரி தான் இருக்கு ஆனா என் கூட சண்டைப் போடுறார்…”

“உன்னைய என் பொண்டாட்டியா பாக்குறார்ல.. அப்புறம் எப்படி…?”

“ம்ம்ம்! இருந்தாலும் உன் தாத்தாக்கு ரொம்ப தான் வீம்பு அதியா..” என்று தான்  கிளம்ப டிரஸ்களை எடுத்து வைத்தாள்.

“இன்னைக்கு எங்க ஷூட்…?”

“இன்டோர் தான், ஈசிஆர் செட்ல..”

“என்னனு தெரியலை தலையே வலிக்குது மஸ்து” என்று பெட்டில் பின்னால் சாய்ந்து கண்களை மூடினான்.

“ஏன்! நேத்து தானே ஹேங் ஓவர் இன்னைக்கு நார்மல் அதியனா தான் தெரியுறீங்க..?” என்று கிண்டல் அடித்தாள்.

“அது அப்ப, இது  இப்ப…” என்றான் கண்களை திறக்காமல்.

ஸனா தலைவலி மருந்தை எடுத்து பின்னால் நின்றவாறு அவன் நெற்றியில் தேய்த்தாள்.

“ம்ம்ம்! உன் கைப்பட்டாலே டிப்ரென்ட் தான் மஸ்து”

அவளோ இருப் பக்கமும் நன்கு அழுத்தி மசாஜ் செய்தாள்.

“ஹவ் இஸ் நவ்..? ஓகே வா..?”

“ம்ம்ம்! லிட்டில் டிப்ரென்ஸ்.. ஆனா இந்த வலி போக இன்னொரு மருந்து இருக்கு” என்று நொடியில் அவளை இழுத்து தன் முன் சரித்தான்.

“ஏய்! என்ன பண்றீங்க…?” என்று எழ முயன்றவளை, விடாமல் கட்டி அணைத்தான்.

“அதியா!”

“என்ன அதியா…? ஐ நீட் யு நவ்…”

“டேய் இது பகல், அதும் விடியற்காலை. விடு, நீயும் ஆபிஸ் போகனும். நானும் ஷூட் போகனும்..”

“சோ வாட்! அதுக்கு டைம் இருக்கு. இப்ப புருசனோட தலைவலியைப் போக்கு பொண்டாட்டி” என்று தள்ளிவிட்டு அவள் மேல் படர்ந்தான்.

“தலைவலிக்கு இப்படி ஒரு மருந்து இருக்குனு எனக்கு தெரியாது அதியா..” என்று முறைத்தாள் ஸனா.

“இப்ப தெரிஞ்சுக்க.” என்று அவளின் வயிற்றில் கை வைத்து தன்னோடு அணைத்து, அவளை மேல் கொண்டு வந்தான்.

“அதியா! ப்ளீஸ், அப்புறம் நான் டயர்டு ஆகி தூங்கிடுவேன். ஷூட்டுக்கு கூட போக முடியாது, நைட் கண்டிப்பா ஓகே, அப்ப உன்னோட தலைவலியை சரியாகிடுறேன்” என்று கண்களை சுருக்கி கெஞ்சினாள்.

“அடிப்பாவி! அப்ப அதுவரை நான் தலைவலியோடு போராடுட்டுமா…?”

“யாரு சொன்னா, இப்ப அதுக்கு ட்ரீட்மென்ட் தரேன்” என்று அவன் நெற்றியில் வரிசையாக முத்தம் வைத்தாள், கண்களில் அழுந்த இதழ் பதிக்க, பிறகு கன்னங்கள் இதழ் இறங்கியது, மூக்கு முடிந்து இதழில் வந்து கரை சேர்ந்தது.

இதழில் ஆழ்ந்த நிலைக்கு சென்ற ஸனாவை, அப்படியே புரட்டிப் போட்டு மேல் படர்ந்தவன், அவளின் இடையில் கைகளால் வருடினான்.

அதுவரை கண் மூடியிருந்த ஸனா விழிகளை விரிக்க, இருவரின் இதழும் பிரிந்தது.

புருவத்தை உயர்த்திய அதியன்”இப்ப ஓகே தான், ஆனா நைட் நோ எஸ்க்யூஸ் மஸ்து, அப்புறம் இந்த அதியனை நீ வில்லனா தான் பாக்கனும்..”

“ம்ம்ம்! இப்ப எல்லாம் ஹீரோ விட வில்லன் தான் பேமஸ் ஆகுறான். சோ நீங்க வில்லன் ஆனாலும் க்யூட் தான் புருசா…” என்று அவன் மூக்கை  ஆட்டியவள்.

“குளிக்கனும் அதியா”

“சரி!”

“லீவ் மீ”

“போ!” என்று அவளின்  மேல்  இருந்து நகராமல் இருந்தான்.

“சரி! ஓகே” என்று அவனை இறுக்கி அணைத்தாள்.

“ஏய்! ஏய்! ஏன்டி கொல்லுற மாதிரி கட்டிப் பிடிக்குற.. ஆள விடு” என்று எழுந்தான்.

“அப்ப மரியாதையா விலகி இருக்கனும்..” என்றவள், எழுந்து குளிக்க சென்றாள்.

“ம்ம்ம்! அதியன் பத்தி தெரியலை இருக்கட்டும் ஸனா மஸ்தூரா உங்களை வச்சுக்குறேன்..”

“நீ தானே என் புருசன் அப்புறம் ஏன் வச்சுக்குற..? நானே உனக்கு தான் லூசு. போய் ஆபிஸ் கிளம்புங்க காலையிலே ரொமான்ஸ் பண்ற மூஞ்சை பாரு.. கீழே போய் பாத்துட்டு வாங்க, நான் அதுக்குள்ள வந்துடுறேன்” என்று கதவை சாத்தினாள்.

***

பாரிக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

யாரிடம் சொல்வது இதை பற்றி என்று, மனமோ அதியனிடம் சொல்ல சொல்லியது.

ஆபிஸில் இருந்தான். அப்போது தான் பரணி வந்தார்.

“தம்பி! ஒரு கிளைன்ட்டுக்கு அமௌவுண்ட் டிரான்ஸ்ராக்சன் ஆகனும். அதியன் தம்பி செக்கில் சைன் போட்டுட்டு, ஆனா கிளைன்ட் நேம் நீங்களே ஃபில் பண்ணிடுங்க.. உங்க கிட்ட கொடுக்க சொன்னாரு..”

“ஏன் அங்கிள், அண்ணனே அனுப்ப வேண்டியது தானே..”

“இல்ல! உங்களுக்கு தெரியனுமாம், தாதாக்கு டீடெயில்ஸ் எக்ஸ்பிளைன் பண்ண தேவைப்படுமாம். சைன் மட்டும் போட்டாரு, இதில் கிளைன்ட் அதர் டீடெயில்ஸ் இருக்கு செக் பண்ணிட்டு ஃபில் பண்ணுங்க, நான் வரேன்..” என்று அவர் கிளம்பினார்.

பாரி அதைவாங்கி வைத்துவிட்டு அவரை அனுப்பினான்.

அதை எடுத்துப் பார்க்கும் நேரத்தில் ராகவி ஃபோன் செய்தாள்.

“பாரி! எதும் ட்ரை பண்ணீயா.? சனி, ஞாயிறு வருதுடா.. அப்புறம் திங்கட்கிழமை தான் வெளியில் வர முடியும்.. என்னோட நகை எல்லாம் ஏற்கனவே அடகில் வச்சுட்டாருடா..”

“என்ன சொல்ற..? இதை எல்லாம் முன்னாடி சொல்லாம திடீருனு சொன்னா எப்பிடிக்கா.? எனக்கும் டைம் வேணுமுல..”

“இல்லடா! உங்க யாருகிட்டையும் சொல்லாம சமாளிக்க தான் ட்ரை பண்ணோம் ஆனா முடியலடா.. ப்ளீஸ்டா, அதியனுக்கும், அப்பாக்கும் தெரிஞ்சா தாத்தா கிட்ட சொல்லாம விட மாட்டாங்க..” என்று அழுதாள்.

பாரி யோசனையோடு அந்த செக்கை பார்க்க, அதில் சைன் மட்டுமே இருந்தது.

“சரி! வை நான் போய் பாத்து மாமாவை கூட்டிட்டு வரேன், நீ உன் வீட்டுக்கு போ” என்று ஃபோனை வைத்தான்.

உடனே போலிஸ் ஸ்டேசன் சென்று, அந்த  செக்கை ஃபில் பண்ணி, கிளைன்டுக்கு கொடுத்து பணத்தை உடனே வித்ட்ரா பண்ணி செட்டில் செய்து, ராகவி கணவன் தமிழின்பனை அழைத்து வந்தான்.

“தேங்க்ஸ் பாரி” என்றான் தமிழ்.

“என்ன மாமா! இப்படி லாஸ்ல போகும் போது முன்னாடியே எங்க கிட்ட சொல்ல கூடாத…? இப்ப நான் தான் வீட்டில் சொல்ல முடியாமல் பணத்தை ரெடிப் பண்ண வேண்டியதாயிற்று. தாத்தாக்கு தெரியாது, எப்படி சமாளிக்குறதுனு தெரியலை” என்று புலம்பினான்.

“நான் சீக்கிரம் தந்திடுறேன் பாரி”

“இல்ல மாமா, அதுக்கு சொல்லலை, சரி நீங்க வீட்டுக்குப் போங்க  அக்கா பயந்துட்டு இருக்கு, இனி கவனமா இருங்க” என்று கூறிவிட்டு ஆபிஸ் வந்தான்.

மதியத்தை தாண்டி விட்டது..

அதியன் அக்வுண்ட் என்பதால் வித் டிரா பணம் மெசேஜ் வந்தது அவனுக்கு.

அதை பார்த்த அதியனுக்கு அதிர்ச்சி ஆகியது.

‘இவ்வளவு பணம் இல்லையே அந்த கிளைண்ட்டுக்கு, பாரி தப்பா எழுதி கொடுத்துட்டான் போல’ என்று எண்ணி பாரியை தேடி வந்தான்.

அங்கு பாரி இல்லை.

கிளைன்ட் கால் வந்தது, எப்ப செக் ரெடி ஆகுமுனு.. அதியன் நாளைக்கு ரெடி ஆகிடுமுனு சொல்லி வைத்தான்.

அதியன் குழம்பி, அந்த வித் டிரா மெசேஜை மறுபடியும்  பார்க்க, அது வேற யாரோ பெயருக்கு போய் இருந்தது..

பரணியை அழைத்து விசாரித்தான்.

“தம்பி! பாரி தம்பி கிட்ட தான் அந்த செக் இருக்கு..”

அதியன் பாரிக்கு போன் செய்தான்..

“நான் ஆபிஸ்க்கு தான் வரேன். நேரில் வந்து சொல்றேன் அண்ணா” என்று போனை கட் செய்தான்.

அதியன் புரியாமல் பரணியை பார்த்தான்.

“தம்பி! பாரி தம்பி வரட்டும் பொறுமையா இருங்க” என்று ஆறுதல் கூறினார்.

அந்த கிளைன்ட் நீண்ட கால தொடர்பில் இருப்பவர், ஆனால் பணம் விஷயத்தில் கர்ணன்னா அது யார் என்பார்..?  அன்று பணம் வரலைனு தெரிந்ததும் நேரடியாக நவநீதத்துக்கு போன் பண்ணி,
“உங்க கம்பேனியில் இருந்து இன்னும் செக் வரலை, நாளைக்கு தரதா சொல்லி இருக்காங்க நவநீதன். அப்பனா நீங்க என் கிட்ட முன்னாடியே இன்பார்ம் செய்யனும் இல்லையா..? இது என்ன பிஸ்னஸ்மேன் அழகு…? நாளைக்கே தாங்க நோ ப்ராப்ளம், ஆனா என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லனும்” என்று பதில் எதிர்ப்பாராமல் போனை வைத்தார்.

அவரும் நவநீதத்தின் கேட்டகரி தான். ஆனால் பணம் என்றால் கறாரான பார்ட்டி, அதனால் அவரின் விஷயத்தில் எப்போதும் அதியன் கவனமா இருப்பான்.

நவநீதத்திற்கு கோபம் வந்தது.

உடனே எழுந்து அதியன் அறை நோக்கி வந்தவர், அங்கு பரணி, அதியனை பார்த்து”என்ன ஆச்சு அந்த கிளைன்ட் செக்…?” என்றார்.

“ஐயா! அது வந்து..” என்று பரணி இழுக்க.

“சார்! ஒரு தப்பு நடந்துட்டு, செக் இஷ்வில் நாளைக்கு சரி பண்ணிடுறேன்..” என்று அவன் முடிப்பதற்குள் நவநீதம் அதியன் கன்னத்தில் ஒரு அறை விட்டார்.

“இங்க நீ வேலை தான் செய்யுற.. நாளைக்கு அனுப்ப நீ ஒன்னும் முதலாளி இல்லை, உன்னோட பெயரில் அக்கௌவுண்ட் இருப்பதால் தான் இது உன் வேலையாக இருக்கு, அந்த கிளைன்ட் பத்தி தெரியுமுல…? பணத்தை உடனே டிரான்ஸ்க்சன் செய்..”

அதியனுக்கு புரியவில்லை எப்படி…? இருந்த மொத்த அமௌவுண்டை பாரி எடுத்திருக்கான்.. எதில் இருந்து செக் கொடுப்பது..

“ஓகே சார்!” என்றான்.

நவநீதம் வெளியில் சென்றார்.

“தம்பி! இந்தாங்க தண்ணி குடிங்க, வர வர இவருக்கு வயசு தான் ஆகுது ஆனால் மூளையே இல்லை” என்று திட்டினார்.

“அங்கிள்! தாத்தாவை  திட்டாதீங்க. அந்த கிளைன்ட் பத்தி தெரியுமுல, தாத்தாக்கு நியூஸ் வந்திருக்கு அதான் என் கிட்ட காட்டிட்டு போறார். இப்ப பணத்தை ரெடி செய்யனும். இந்த பாரி எப்ப வருவானு தெரியலை…”

“இருங்க தம்பி! நான் கூப்புட்டு பாக்குறேன்” என்று போனை எடுக்க, பாரி அவசரமாக உள்ளே நுழைந்தான்.

அதியனவள் அடுத்து..

Advertisement