Advertisement

நேரம் பத்து மணியைத் தாண்டியதால்,

சாலைகளில் கூட்டம் குறையத் தொடங்கியிருந்தது..

அந்த பி எம் டபிள்யூ காரும் சீரான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது.

சுற்றிலும் ஆட்கள் இருந்தப்படியால்  அதியன், ஸனா இருவருக்குமே மேடையில் இருந்து இறங்கிய பின்  பேசிக் கொள்ள நேரமில்லை.

பிறகு சாப்பிடும் நேரமும் இயக்குநர், தயாரிப்பாளர், நாயகன் என அமர்ந்துப் பேச, தனிமைக்கு இடமில்லை.

இப்போதும் காரில் அமைதியே சாட்சியாக இருவரும் அமர்ந்திருந்தனர்.

அதியன் மனதில் இயக்குநர் கூறியது ஓடியது..

‘அதியன்! ஸனா முதன் முதலில் நடிக்க வரும் போது குழந்தைக் குணம். அவரின் குணத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் இப்போது இருக்கும் ஸனா முற்றிலும் வேற, முதிர்ச்சியான நடிப்பு, தெளிவான முடிவு, தேவைக்கு மட்டுமே வார்த்தைகள், சுற்றி நிற்பவர்களை அருகில் விடாமல் தூர நிறுத்தும் முகப்பாவனை. எல்லாமே இருக்கு. இப்படி பட்டவங்க உங்களை தேர்ந்தெடுத்து இருக்காங்கனா சும்மாவ..? இருக்காது, நீங்க அவங்க மனசை வெற்றிக் கொண்டவர் தான், ஒத்துக்குறேன். ரெண்டுப் பேரும் ஹேப்பியா வாழ என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார் மனதார.

அதை  நினைத்தப்படி வந்தவனுக்கு, சட்டென்று தன்னை தேர்ந்தெடுத்தாள…?மேடையில் பேசியது உண்மையான வார்த்தைகளா..? என்று தோன்ற, ஆழமான மூச்சை வெளியிட்டான்.

ஸனாவும் மேடையில் பேசியப்பிறகு அதியன் எதுவுமே சொல்லவில்லையே என்ற எண்ணத்தில் குழம்பியப்படி வந்தாள்.

மேடையில் பேசியது எதுவுமே அவள் அறியாமல் நடந்ததில்லை, ஆனால் மனதில் இருப்பதை தன்னிலை அறியாமல் சொல்லிவிட்டாள்.

கார் வேகம் சிறிது குறைந்தது. அதியனுக்கு அவள் கிட்ட பேசனும், மேடையில் நடந்ததைப் பற்றி கேட்கனும் என்ற எண்ணம் மேலோங்கியது.

ஆனால் மனதில் ஒரு பயம் வந்தது, ஒரு வேளை தான் பேசியது எல்லாம் மீடியாக்காக என்று சொல்லிவிட்டால் என் மனசு தாங்குமா…? இல்ல, அவள் பேசியது பொய் மாதிரி தெரியலையே என்று தனக்குள் யோசித்தான்.

‘அவ சொன்னது பொய்னா அது உனக்கு நல்லது தானேடா, அவ கூட நீ என்ன சேர்ந்தா வாழப் போற.?’ என்று கேட்டது மனசாட்சி.

‘இருந்தாலும் அவ மேடையில் பேசியது உண்மைனா, எனக்கு அது இந்த வாழ்வின் மிகப்பெரிய சந்தோஷமே.. அதை மறக்க மாட்டேன்..’

‘அப்ப உன்  தாத்தா..?’ என்ற மனதிடம் பதில் சொல்வதற்குள்.. ஸனா களைத்தாள் மௌனத்தை.

“அதியன்! தண்ணீ வேணும்..?”

உடனே”ஒன் மினிட்!” என்று அவன் சைடில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தான்.

அதை வாங்கி குடித்தாள் மடமடவென்று.

பிறகு கார் சீரான வேகத்தில் செல்ல, அதியன் அதற்கு மேல் மனதில் போட்டு  புழுங்காமல்”ஸனா!” என்றழைத்தான்.

“ம்ம்ம்!”

“உன் கிட்ட ஒன்று கேக்கனும்…?”

“என்ன கேளுங்க.”

“நீ மேடையில் பேசியது உண்மையா…?”

“என்ன பேசினேன்” என்றாள் எதுவுமே தெரியாதது போல்.

அதியனுக்கு நொடியில் நடப்பது கனவோ என்ற பயம் வந்தது, உடனே காரை பிரேக் அடித்தான்.

“என்ன ஆச்சு அதியன்.?”

தன்னிலை உணர்ந்தவன் கார் நடுரோட்டில் நிற்பதை அறிந்து ஓரமாக கொண்டு நிறுத்தினான்.

பின் ஸனா பக்கம் திரும்பியவன்”ஸனா! நீ கேட்டது நிஜம் தானா..?”

“என்ன கேட்டேன்…?”

“மேடையில் என்ன பேசினேனு கேட்டீயே..”

“ஆமா!”

“அப்ப நீ மேடையில் பேசியது எதுவும் நினைவில்லையா…?”

“நிறையப் பேசினேன் அதியன், நீங்க எதைப் பத்தி கேக்குறீங்க…?” என்றாள் சாதரணமாக.

அதியனுக்கு உண்மையில் பைத்தியம் பிடிப்பதுப் போல் இருந்தது.

ஸனா அவனோட விழிகளை ஆராய்ந்தப் படி மனதில் சிரித்தாள்.

அதியனுக்கு மண்டையே வெடித்தது, கண்களை மூடி தன்னை நிதானப் படுத்தினான். மூடிய விழிகளுக்குள் ஸனா சிரிப்பது போல் தோன்றியது. சட்டென்று விழிகளைத் திறந்தவன்,
அவளோட முகம் சாதரணமாக இருக்க,

“சரி! நான் நேரா விஷயத்திற்கு வரேன்.
மஸ்து! நீ என்னைய காதலிக்குறேனு சொன்னது உண்மையா..?  பொய்யா..?”

ஸனா அதியனை ஆழ்ந்துப் பார்த்தாள், நொடிகள் பார்த்தவள், “அது உண்மையா…? பொய்யா…? னு உங்க மனசுக்கு கண்டுப்பிடிக்க தெரியலையா அதியன்…?”

அதியன் இப்போது தான் அவளோட விழிகளைப் பார்த்தான், அவளின் மனதின் சிரிப்பு கண்களில் சோளப்பொறியாய் தெறித்து சிதறியது..

“மஸ்து! ஆனா நீ….? என்னையும் என் குடும்பத்தையும் பழி வாங்க தானே வந்த…?”

“என்னைய எல்லாரும் ஸனானு தான் கூப்புடுவாங்க, அப்ப எல்லாம் நான் ஒரு நடிகை அப்படிங்குற ஃபீல் மட்டும் தான் வரும், ஆனா என் அம்மா மட்டும்  ஸமானு சொல்வாங்க அப்ப நான் ஒரு மகள், என் அம்மாவுக்கான அன்பு நான் அப்படினு தோணும் சந்தோஷமா உணருவேன்..”

“ஆனா நீங்க அழைக்க ஆரம்பித்த இந்த ‘மஸ்து’ முதலில் ஒரு அன்பினில் என்னைய விழ வைக்குற அழைப்பா  நீங்க நினைச்சி கூப்பிட்டிருந்தாலும் அப்பவே அதில் நான் விழுந்தது என்னவோ உண்மை தான். ஆனால் என் மனசை நான் கண்ட்ரோல் செய்தேன். ஏற்கனவே நான் பட்ட அடி, வலி என்னைய உங்களுக்கு பாதகமாக தான் யோசிக்க வச்சது..”

“அதையும் மீறி எனக்கு உங்க மேல ஒரு வித ஈர்ப்பு வந்தது, நீங்க யாருனே தெரியாம தாலிக் கொடுத்தப்போது..”

“அதை வாங்கிட்டு நான் பலவித மன உளைச்சலுக்கு ஆளானேன். உங்க கிட்ட என் மனசு தாவ நேரம் பார்த்தது. ஆட் ஷூட்டிங் வரும் போது ஒரு வேளை அந்த ANR நீங்க தானோனு சந்தேகம் வந்தது, ஆனா மஞ்சரி வந்தப்பிறகு அதுவும் மாறியது. நீங்களும் ANR ம் ஒரே ஆள் என்று தெரியவர,  நான் முடிவு எடுத்தது இது தான்,  நான் நேரில் பார்க்கும் போது
கடைசி வரை உங்களை நான் விரும்பலைனு சொல்ல தான் வந்தேன். அதுக்கு மாறாக நீங்க சொன்ன உண்மையில் எனக்கு உயிரோடு சமாதியான உணர்வு. காதலிக்க வச்சு ஏமாத்த நினைச்சேனு நீங்க சொன்னது தான் என்  காதில் விழுந்தது அதியன்..”

“அதுக்கு மேல நீங்க சொன்னது எல்லாம் காதில் விழுந்தாலும் மனசில் வெறுப்பானது. ச்சீ! நீங்களும் அதே ஆண் வர்க்கம் தானே என்ற உணர்வு தலைத் தூக்கியது, நீங்க காதலிக்குறீங்கனு சொன்னதை விட தாத்தாக்காக நான் விட்டு விலகுறேனு சொன்னது அதுக்கு மேல வலித்தது, நானும் ஒரு பொண்ணு தானே அதியன் எனக்கும் ஃபீலிங்க்ஸ் இருக்குமுல..?” என்று விழிகளில் நீர் வடிந்தது..

“மஸ்து!” என்று அவள் கையைப்பிடிக்கப் போனான் அதியன். அவன் கையைத் தட்டி விட்டவள்..

“அன்னைக்கு இப்படி தானே போனீங்க அதியன், தாத்தா முக்கியமுனு இப்ப வரைக்கும் அதானே  சொல்லுவீங்க..? ஆனா நான் மனதளவில் பட்ட துயரத்தைக் கண்டு ராணி, அஜி தான் கேட்டாங்க, அவன் தான் சொல்லிட்டுப் போயிட்டான்ல அந்த தாலியைத் தூக்கிப் போட்டு வேலையைப் பாருனு.. அப்ப தான் எனக்கு தோன்றியது தாலி கட்டினா தான் கல்யாணமா…? அதையே அடையாளமா வச்சு உங்க வீட்டுக்கு வந்து உங்க குடும்பத்தையே பழிவாங்க நினைச்சேன். என்னைய நீங்க யூஸ் அன்ட் த்ரோவா நினைச்சது இல்லாம தாத்தாக்காக குடும்பம் தான் முக்கியமனு விலகியது ஏதோ என்னைய தீண்ட தகாத பெண் மாதிரி உணர வச்சது. நடிகைனா அத்தனை இளக்காரம…? அந்த எண்ணத்தில் தான் உங்க வீட்டுக்கே வந்தேன்..”

“ஆனா! நீங்க நான் நெனச்ச மாதிரி இல்லை, கோபப்படுவீங்க, என்னைய எதிர்ப்பீங்க, வெளியேப் போனு மிரட்டுவீங்கனு இப்படி பல நினைச்சு இருந்தேன். நீங்க எதுவுமே செய்யல, என்னைய எப்படி காதலோடு விட்டுப் பிரிஞ்சீங்களோ அதே அளவில் மாறாம இருப்பதை நினைச்சு ஆச்சரியமா இருக்கு அதியன், நான் உங்க காதலுக்கு வொர்த்தானு தெரியலை.. ஆனா இன்னைக்கு இந்த ஃபங்சனில் நான் உங்களை ரொம்பவே டிப்பெண்ட் பண்ணினேன் அது ஏனு சத்தியமா புரியலை”

“ஷுட்டிங்காக நாடு நாடா தனியா போய் இருக்கேன் அப்ப எல்லாம் கூட துணை வேணுமுனு உணரல, நான் ஒரு  மெட்ரியிலா இருந்தேன்.. ஆனா இன்னைக்கு நான் சேஃபா, அதியனோட மனைவினு ஒரு அடையாளத்தோடு போனது ஈடு இல்லா சந்தோஷத்தை கொடுத்தது, அப்ப நான் அடிமையாகிட்டனேனா….? இல்லை கண்டிப்பா இல்லை.. இது தான் என் கனவு, ஏங்கிய வாழ்க்கை.. இந்த வாழ்க்கை  யாரால உங்களால்.. முடிவுக்கு வராத உறவில் ஆரம்பித்த வாழ்க்கை இத்தனை சந்தோஷத்தைக் கொடுக்கும் போது..”

“நான் ஏன் மறைக்கனும் என் மனதில் உள்ளவற்றை, எஸ்! ஹானஸ்ட்லி டோல்டு அதியன், ஐ லவ் யூ.. லவ் யூ சோ மச்.. இது டயலாக்ஸ் இல்லை என் மனசு, அதில் இருந்து வரும் உண்மையான வார்த்தைகள்.. ஐ லவ் யூ.. நான் இந்த அதியனவள் உணர்ந்துட்டேன்.” என்று தள்ளி விட்ட அவன் கைகளைப் பிடித்து அவனை தன் அருகில் இழுத்தவள்,
நெற்றியில் தன் இதழைப் பதிக்க, அடுத்தடுத்து கன்னங்கள் தாவியது, இறுதியில் நின்றது இதழோடு இதழாக..

அதியன் ஸனா பேச ஆரம்பித்ததில் இருந்து தன்னை நினைத்து வெறுத்து, பிறகு அவளின் இறுதியான காதல் வெளிப்பாட்டில் திக்குமுக்காட அதை உணரும் முன்னே கிடைத்த இதழ் அணைப்பு என அவன் வானத்தில் பறந்துக் கொண்டிருந்தான்.

சிறகுகள் தேவையா பறப்பதற்கு…? அது உடலுக்கு தானே, மனம்…? அது விண்வெளி வரை போய் திரும்பும் அத்தகைய சக்தி வாய்ந்தது.

இங்கும் அதியனின் மனமோ விண்மீனில் அவனின் காதல் விறலி நட்சத்திரத்தோடு அலை பாய்ந்தான்.

விண்மீனில் நீர் துளிகள் படர, அலை அடிப்பது போல் தோன்றியது அவனுக்கு. தன்னிலைக்கு வந்தவன் முகமும் ஈரத்தில் பிசுபிசுத்தது.

பின்னே உணர்ந்தான் அது ஸனாவின் கண்ணீர் என்று.

அவள் முகத்தை விலக்கி  கையில் ஏந்தியவன்”மஸ்து! ஏன் அழுவுற..? அதான் நான் இருக்கேன்ல…?”

“ஒன்னுமில்லை!” என்று தலையை ஆட்டியவள் மனதில் நவநீதம் வந்தார்.

அவனிடம் இருந்து விலகப் போனவளை இழுத்து அணைத்தான்.

“நீ இவ்ளோ நேரம் பேசினீல. நான் பொறுமையா கேட்டேன்ல.. இப்படி விலகிப் போகதானா…?” என்றான் அவளை இறுக்கியவாறு.

“அதியன்! இது இந்த நிமிடப் போராட்டம் ஆனா அடுத்த நொடி..?”

“ம்ம்ம்! உனக்கே தோன்றும் போது என் மண்டையில் தோன்றதா…?” என்றான் சாதரணமாக.

அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், “எனக்கு தோன்றியது உங்க தாத்தா முகம்.”

“ம்ம்ம்! எனக்கும் தான்.”

“எப்படி அதியன்…? எனக்கு புரியலை..”

“மஸ்து! நான் தான் உன்னைய காதலிச்சேனு நினைச்சி பிரிஞ்சேன். ஒரு வகையில் அதுவும் நல்லதுனு தோன்றியது ஆனா…? உன்னோட மனக்காயம், காதல் எல்லாமே என்னால், எனக்காக தானே. அதை எப்படி நான் மறுக்க முடியும்…? மாற்ற முடியும்..? நான் வேறொருத்தியை கல்யாணம் பண்ணினா அவளுக்கு சந்தோஷத்தை கொடுப்பேனா…? இல்ல உன்னைய தான் இழக்க முடியுமா…? என் முன்னாடி இப்ப பெரிய கேள்விக்குறி????? இருக்கு. போதும் உனக்கு இனி கஷ்டம் வேணாம் மஸ்து, நானே முடிவு எடுக்குறேன் உன்னைய  இழக்க மாட்டேன். நீ தான், நீ மட்டும் தான் என் பொண்டாட்டி, அதை மாற்றவே முடியாது” என்று நெற்றியில் அழுந்த முத்தம் வைத்தான்.

விலகியவன்”வா! போகலாம் நம்ம வீட்டிற்கு, தாத்தா கிட்டப் பேசுறேன், ஆனா நீ எந்த ஒரு சூழ்நிலையிலும் என்னைய விட்டு விலகக் கூடாது, அதே நேரத்தில் தாத்தாவும், குடும்பமும்  எனக்கு முக்கியம். அதை  நீ மனசில் வச்சுக்கோ சரியா…?”

“ம்ம்ம்!” என்று அவன் தோளில் சாய்ந்தாள்.

அதியன் காரை வேகமாக கிளப்பினான்..

***

நேரம் இரவு பதினொன்று.

வீடே சுனாமி அலை வந்து ஓய்ந்ததுப் போல் அடங்கி இருந்தது..

யாருமே தூங்கவில்லை, ஒவ்வொரு மனதிலும் ஒவ்வொரு எண்ணம் ஓடியது.

நவநீதம் விழிகள்  இரத்த சிவப்பில் காட்சியளித்தது.

இப்ப எல்லாம் ஆடியோ லான்ஞ் பார்க்க,  டிவியில் வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை. ஃபேஸ்புக், யூட்யூப், பல நெட் சேனல்கள் கிளிப்ஸ் கிளிப்ஸாக வெளியிடும்.

அந்த கிளிப்ஸ்களை காட்டி தான் மஞ்சரியின் அப்பா நவநீதத்தை நாறு நாறாகத் தொங்கவிட்டார் வார்த்தைகளால்.

ஏற்கனவே அதியன் மீட்டீங் அட்டென்ட் செய்யாமல் போனதே அவரின் கோபம்  பல மடங்கில் உச்சத் தீயில் வைத்திருக்க, மஞ்சரி அப்பா அதில் தேவையான எண்ணெய்யை இல்லை மண்ணணெய், பெட்ரோல் என முடிந்தளவு ஊற்றிச் சென்றிருந்தார்.

அதியனவள் அடுத்து….

Advertisement