Thursday, June 4, 2026

    என் வாசல் வருவாயா

    ‘அன்பும் காதலும் அவன் மட்டும் தான் காட்டணுமா? அதைக் கூட அவன் காட்டினா தான் காட்டுவியா?’ என்று அவள் மனமே அவளை கழுவி ஊற்றியது. “ரொம்ப ஓவராத்தான் பண்றார். இந்தா வரேன்” என்று எழுந்து குளித்து முடித்து வந்தவள், கிட்சனிற்குள் செல்ல, அங்கு ஏற்கனவே அப்பாவும் மகளும் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்தனர். “என்ன பண்றிங்க ரெண்டு பேரும்?”...
    வாசல் 23: அந்த இரவு நேரத்தில் மனைவி மகளுடன் பயணித்துக் கொண்டிருந்தவனின் மனதிலும் ஆயிரம் எண்ணங்கள் பயணம் செய்து கொண்டிருந்தது. எல்லாம் சரியாகி விட்டது என்று அவனுக்கு தோன்றினாலும் மனதின் ஏதோ ஒரு மூலையில் இருந்த வெறுமையும், கோபமும் அப்படியே இருப்பதைப் போன்று தான் இருந்தது. நதியும் அவனைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தாள். அவள் அணைத்த...
    “என்ன சார்? திடீர்ன்னு ஒரு மாசம் மெடிக்கல் லீவ் எடுத்திருக்கிங்க?” என்றான் குரு ஆச்சர்யமாய். “என்னோட லீவ் எல்லாம் அப்படியே தான் இருக்கு குரு. சரி கிடைக்கிறப்பவே எடுத்துக்குவோம். நமக்கும் ரெஸ்ட் வேணும்ல. இந்த லீவ் எல்லாம் என்ன பண்றது?” என்றான். “நீங்க இல்லாம எனக்கு எப்படி சார் வேலை ஓடும்?” என்றான் குறையாய். “இன்சார்ஜ் இன்ஸ்பெக்டர் வருவாங்கல்ல....
    வாசல் 22: அலுவலகத்தில் வேலையில் மும்பாரமாய் இருந்தாள் நதி. இந்த சோலார் பிரச்சனை இன்னும் எத்தனை நாட்களுக்கு இழுக்கும் என்று தெரியவில்லை. ஒரு பக்கம் சரியானால் ஒரு பக்கம் இழுபறி என்று போய்க் கொண்டிருந்தது. இதில் அடுத்தடுத்து பிரச்சனைகள், அரசியல் தலையீடு என்று எந்த நேரமும் தலைவலியோடு தான் சுற்றிக் கொண்டிருந்தாள். தியாவை குமரன் அழைத்துச் சென்று...
    அவன் வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டிருக்க, “ஒரு நிமிஷம்” என்றாள். அவனோ கேள்வியுடன் பார்க்க, “தியா குட்டியை உங்ககிட்டு இருந்து மறைச்சுட்டேன்னு தான உங்க கோபம்” என்றவள், “ரெண்டு வருஷம் உங்ககிட்டு இருந்து மறைச்சது தப்புத்தான். அதான் நான் ரெண்டு வருஷம் வளர்த்தேன்ல. இப்போ நீங்க ரெண்டு வருஷம் வளருங்க. சரியா போய்டும். நான் பார்க்க வர மாட்டேன். ரெண்டு...
    வாசல் 21: நதியோ பிடிச்ச பிடியில் ஏறாமல் நிற்க, குமரனுக்கோ பொறுமை பறந்து கொண்டிருந்தது. “நான் ஆட்டோவுலையே போயிக்கிறேன். எனக்காக யாரும் அவங்க நேரத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம்” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு. அவனோ எதுவும் பேசாமல் வண்டியை மட்டும் முறுக்கிக் கொண்டு நின்றான். அவன் நின்ற பிடியில் அவள் ஏறியே ஆக வேண்டும்  என்று அவன்...
    அந்த அறையை தியாவிற்கு காட்டியவள், “டாடி அங்க தான் இருக்காங்க தியா. நீ போய் பார்த்துட்டு வா. மம்மிக்கு டைம் ஆச்சு. மம்மி ஆபீஸ் போகணும்ல” என்றாள் பொறுமையாய். “நீங்களும் ஆங்க(வாங்க) மம்மி” என்று அவளையும் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள் தியா. கோதாவரி அவர்களையே ‘ஆ ‘வென்று பார்த்திருக்க, அவரைப் பார்த்த சங்கரன், “இன்னைக்கு கட்டாயம் நாம...
    வாசல் 20: மகளை விட்டுவிட்டு சென்றவனின் மனமெல்லாம் அங்கேயே தான் இருந்தது. ஜீப்பில் தலை சாய்ந்து அமர்ந்திருவனின் முகத்தில் அலைப்புறுதலைப் பார்த்த குரு, “உங்களுக்கு தூக்கமே வராத சார்? நேத்தும் ஒரு பொட்டுத் தூங்கலை. இன்னைக்கும் பகல் முழுக்க வேலை.  இப்போ இப்படி நைட் ரவுண்ட்ஸ். இப்படியே இருந்தா உடம்பு என்னத்துக்கு சார் ஆகும்?” என்றான் குரு. “இன்னைக்குத்...
    அங்கே தியாவைத் தூக்கிக் கொண்டு சென்ற குமரனைப் பற்றி சொல்லவே வேண்டாம். மகளின் அருகாமையிலும், அணைப்பிலும் மீண்டும் ஜனனம் எடுத்திருந்தான். “சார் அப்போ நிஜமாவே பாப்பா உங்க பொண்ணா?” என்ற குருவிற்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. “இதையே எத்தனை தடவை கேட்ப குரு?” என்றவன் மகளை இன்னமும் ஜீப்பில் தான் வைத்து சுற்றிக் கொண்டிருந்தான். கங்காரு தன் குட்டியைத்...
    வாசல் 19: வரதன் கூறியதைக் கேட்டுக் கடுப்பான சாரதா, “ஆமா எல்லாத்தையும் இப்ப சொல்லுங்க, இதைத்தான நான் ஆரம்பத்துல இருந்து சொல்லிக்கிட்டு இருக்கேன். என் பேச்சை அப்பாவும் மகளும் காது குடுத்து கேட்டிங்களா?” என்று ஆதங்கத்தில் பேசினார். “என்ன பேசுற சாரதா? நான் நதிகிட்ட பேசலைன்னு நீ பார்த்தியா? எனக்கு நிம்மதி வேணும்னு அழுத பொண்ணுகிட்ட வேற...
    “ஏன்னா குழந்தை அபார்ஷன் ஆனது உண்மை. ரெண்டு குழந்தையில ஒன்னு கருவுலையே அழிஞ்சு போனது உண்மை. அதுக்கு காரணம் நீங்க தான்றதும் உண்மை. போதுமா?” என்றாள் நதி அழுகையுடன். சட்டென்று தடுமாறி நின்றான் குமரன். தன் குழந்தையை தான் அழிக்கவில்லை என்று மனதின் ஏதோ ஒரு மூலையில் ஆசுவாசம் அடைந்திருந்தவனுக்கு, நதியின் வார்த்தைகள் மீண்டும் பாரத்தை...
    வாசல் 18: குமரனின் பார்வையோ நதியை குற்றம் சாட்டும் பார்வை பார்த்துக் கொண்டிருக்க, அந்த பார்வையில் இருந்த கோபத்தில் மிரண்ட நதி, அவன் கண்கள் காட்டிய உணர்வுகளில் செத்துவிட்டாள். குமரனின் கரமோ மகளை விடவே மாட்டேன் என்பதைப் போல் பிடித்திருக்க, இத்தனை நாள் குற்ற உணர்வில் மறுகிக் கொண்டிருந்தவனின் நெஞ்சம், நதியின் செயலில் ஒரேயடியாய் செத்துவிட்டிருந்தது. நடப்பது நிஜம்...
    “நீங்க வெளிய அரேஞ்ச் பண்ணியிருந்தா கூட இப்படி ஒரு டேஸ்ட்டியான புட்டா இருந்திருக்குமான்னு தெரியாது. ரியல்லி வெரி டெலிஷியஸ்” என்றான். “தேங்க் யு சார். அம்மா பிரிப்ரேஷன் தான் சார்” என்றாள். “நான் தான் தேங்க்ஸ் சொல்லணும், உங்க வொண்டேர்புல் லஞ்ச்க்கு” என்றவன் நன்றாகவே சாப்பிட்டான். “நீங்களும் சாப்பிடுங்க நதி,  நோ பார்மாலிட்டிஸ்” என்றான். “நான் அப்பறம் சாப்பிட்டுக்கிறேன் சார்”...
    வாசல் 17: யாரோ தன்னைப் பார்ப்பதைப் போல் உணர்ந்தவன், அப்போது தான் கடந்து சென்ற காரை கவனித்தான். “என்ன சார் தாசில்தார் இப்பவே வந்துட்டாங்க?” என்றான் குரு. “அவங்க ஹயர் அபீசியல்ஸ் வர்றதுக்கு முன்னாடி அவங்க இங்க வர்றது தான முறை குரு” என்றான் கைகளைக் கழுவிக் கொண்டே. “சார் நீங்க சரியா சாப்பிடலை” என்றான் குரு. “தாசில்தார் ஸ்டேஷன் வரும்...
    அறைக்குள் இருந்த குமரனோ,“இன்னும் எத்தனை நாளைக்கு தான்டி என்னை இப்படி உயிரோட சித்திரவதை பண்ணுவ?” என்று தலையைப் பிடித்துக் கொண்டவனுக்கு, அன்று அவள் உடையில் தோய்ந்திருந்த ரத்தமும், மருத்துவமனையில் அவள் கதறிய கதறலும் மீண்டும் கண் முன் வர, அவன் மீது அவனுக்கே ஆத்திரம் பொங்கியது. “நதி நதி” என்று புலம்பியவன், தன் ஆத்திரமும் கோபமும்...
    வாசல் 16: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, அவளுக்குண்டான அரசு வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் தீராநதி. ஆட்சியர் அவசர கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்க, அதை முடித்துக் கொண்டு கிளம்பியிருந்தாள். அன்று காலையில் இருந்து அவளுக்கு அதிகப்படியான வேலைப்பளு.உடல் ஓய்விற்கு கெஞ்சியது. கண்கள் தீயாய் எறிய, எப்போதடா வீடு செல்வோம் என்றிருந்தது. ஏனோ அந்த சந்திப்பின்...
    “சார், அவங்க கோரிக்கையிலும் நியாயம் இருக்கு. இவர் என்னதான் எல்லா இடத்தையும் பிராப்பரா ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணியிருந்தாலும் முன்னூறு ஏக்கர் நிலத்துல நூறு ஏக்கர் புறம்போக்கு நிலம் தான். அதைக் கேட்க அவங்களுக்கு உரிமை இருக்கு. இத்தனை காலமும் அது அவங்க பயன்பாட்டுல தான் இருந்திருக்கு” என்றாள் நதி. “மேடம் புறம்போக்குன்றது கவர்மென்ட் ப்ராப்பர்ட்டி. இதுவும் கவர்மென்ட்...
    “பார்த்து முடிச்சு விடுப்பா, ரிட்டையர்ட் ஆக ஒரு வருஷம் தான் இருக்கு, அதுக்குள்ள என்னை முடிச்சு விட்ருவாங்க போல” என்றவர் உள்ளே செல்ல, “என்ன சார் எல்லாரும் உள்ள போயிட்டா, எங்களுக்கு யார் பதில் சொல்றது?” என்றான் அவன். குமரன் குருவிடம் கைகாட்ட, வீடியோவை ஆப் செய்தான். “பதில் தானே,இதோ நான் சொல்றேன்” என்ற குமரன், அவனை இழுத்து...
    வாசல் 15: சரியாக அதே நேரத்திற்கு ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வந்தது குமரனுக்கு. “சார் நாலு கிராம மக்களும் சேர்ந்து தாலுகா ஆபீசுக்கு முன்னாடி முற்றுகைப் போராட்டம் பண்றதுக்காக போய்க்கிட்டு இருக்குறதா தகவல் வந்திருக்கு சார்” என்றார் அந்த காவலர். ஒரு நிமிடம் யோசித்த குமரன், “நான் இங்க தான் இருக்கேன். நீங்க ஸ்டேஷன்ல இருக்க ஸ்ட்ரென்த் எல்லாரையும் இங்க...
    அவன் நினைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து  சாப்பிட முடியுமே என்ற ஆச்சர்யம் தான். நேராக ஸ்டேஷன் சென்றவன், அங்கு பார்க்க வேண்டிய வேலைகளை முடித்துவிட்டு, தாலுகா ஆபீஸ் நோக்கி சென்றான். அங்கு நதியோ சோர்வுடன் வேலை செய்து கொண்டிருந்தாள். வேலையில் சேர்ந்த உடனே விடுமுறை எடுக்க அவள் மனம் ஒப்பவில்லை. அதனால் வந்துவிட்டாள். அந்த சோலார் பிரச்சனை...
    error: Content is protected !!