Wednesday, July 22, 2026

    என் வாசல் வருவாயா

    ‘அன்பும் காதலும் அவன் மட்டும் தான் காட்டணுமா? அதைக் கூட அவன் காட்டினா தான் காட்டுவியா?’ என்று அவள் மனமே அவளை கழுவி ஊற்றியது. “ரொம்ப ஓவராத்தான் பண்றார். இந்தா வரேன்” என்று எழுந்து குளித்து முடித்து வந்தவள், கிட்சனிற்குள் செல்ல, அங்கு ஏற்கனவே அப்பாவும் மகளும் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்தனர். “என்ன பண்றிங்க ரெண்டு பேரும்?”...
    “என்ன சார்? திடீர்ன்னு ஒரு மாசம் மெடிக்கல் லீவ் எடுத்திருக்கிங்க?” என்றான் குரு ஆச்சர்யமாய். “என்னோட லீவ் எல்லாம் அப்படியே தான் இருக்கு குரு. சரி கிடைக்கிறப்பவே எடுத்துக்குவோம். நமக்கும் ரெஸ்ட் வேணும்ல. இந்த லீவ் எல்லாம் என்ன பண்றது?” என்றான். “நீங்க இல்லாம எனக்கு எப்படி சார் வேலை ஓடும்?” என்றான் குறையாய். “இன்சார்ஜ் இன்ஸ்பெக்டர் வருவாங்கல்ல....
    இதோ குமரனின் குல தெய்வக் கோவிலில், இப்போது நரேனின் மடியில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தாள் தியா. அவளைச் சுற்றி தீபாவின் மகன்களும், கல்யாணின் குழந்தைகளும் நிற்க, மொட்டை போடும் போது அழவில்லை. ஆனால் காது குத்தும் போது, அவள் சத்தம் ஊரையே கூட்ட, நதியோ அவளுக்கு மேல் அழுதிருந்தாள். “உன்னை மாதிரியே ஊசி எடுத்தாலே பயப்படுவா போலயே?”...
    வீடு வந்தவன் கண்டது என்னவோ, சோபாவில் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்த நதியையும், அவள் மடியில் தலை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்த தியாவையும் தான். இரண்டு நிமிடம் மனைவியையும் மகளையும் கண்களில் நிரப்பிக் கொண்டவன், சத்தம் செய்யாமல் சென்று குளித்து விட்டு வந்தான். நதியின் தூக்கம் கலையாமல் தியாவை தூக்கி அறையில் படுக்க வைத்துவிட்டு வந்தவன்,...
    வாசல் : 2 இரண்டு மணி நேரமாக நடந்த பேச்சு வார்த்தையில், எந்த முடிவும் எட்டப்படவில்லை. தீராநதிக்கு தீராத தலைவலி வந்தது தான் மிச்சம் என்றானது. இப்படித்தான் நடக்கும் என்று தெரிந்ததாலோ என்னவோ குமரனிடம் பெரிதாக மாற்றம் ஒன்றும் தென்படவில்லை. அவளுக்கு அருகில் அமர்ந்திருந்தவனுக்கு அவள் உடல் சூட்டின் உஷ்ணம் தெரியவர, அவளை யோசனையுடன் பார்த்தான். அருகில்...
    வாசல் 25: ஆபீஸ் வந்தவள் பொறுமையின்றி அவனுக்கு அழைப்பெடுத்தாள். “வந்துட்டு இருக்கேன் நதி” என்றவன் அழைப்பை துண்டித்திருக்க, தியாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தாள். இருவரும் ஒன்றாய் கடைக்குச் சென்று தியாவிற்கு தேவையானதை வாங்கிவிட்டு  வீடு திரும்பும் வரை அதிகம் பேசிக் கொள்ளவில்லை. வீடு நுழைந்தது தான் மாயம் பிடித்துக் கொண்டாள் அவனை. “இப்ப எதுக்கு இப்படி இருக்கீங்க?” என்றாள் ஆதங்கத்துடன். “என்னாச்சு? நல்லாத்தானே...
    “என்ன மிஸ்டர் குமரன்? நான் அவ்வளவு சொல்லியும் நீங்க கேட்கலைன்னா நான் என்ன தான் பண்றது?” என்ற மருத்துவரின் குரல் வெளியே கேட்க, “எனக்கு ஸ்லீப்பிங் பில்ஸ் போட்டாத்தான் தூக்கமே வருது டாக்டர். இந்த ஒரு தடவை ரெபர் பண்ணுங்க. நான் எவ்வளவு ட்ரை பண்ணாலும், தூக்கம் வர மாட்டேங்குது டாக்டர். தூக்கம் வர்ற மாதிரி...
    குமரன் வீட்டிற்குள் நுழையும் போதே, ஆரம்பித்து விட்டார் கோதாவரி. “என்ன நினைச்சுட்டு இருக்க குமரா? வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் ஆகுது. ஒரு போன் பண்ணி தகவல் சொல்றதும் இல்லை. நாங்களா போன் பண்ணினா, சரியா பேசுறதும் இல்லை. வர வர உன் போக்கு சரியில்லை..” என்று எப்போதும் போல் ஆரம்பித்தார். ‘இருக்கிற பிரச்சனையில் இவங்க வேற?’...
    “ஏன்னா குழந்தை அபார்ஷன் ஆனது உண்மை. ரெண்டு குழந்தையில ஒன்னு கருவுலையே அழிஞ்சு போனது உண்மை. அதுக்கு காரணம் நீங்க தான்றதும் உண்மை. போதுமா?” என்றாள் நதி அழுகையுடன். சட்டென்று தடுமாறி நின்றான் குமரன். தன் குழந்தையை தான் அழிக்கவில்லை என்று மனதின் ஏதோ ஒரு மூலையில் ஆசுவாசம் அடைந்திருந்தவனுக்கு, நதியின் வார்த்தைகள் மீண்டும் பாரத்தை...
    வாசல் 3: இரண்டரை வருடங்களுக்குப் பிறகான நதியின் அருகாமையில் அவன் தான் வெந்து தணிந்து கொண்டிருந்தான். அவள் அவனிடமிருந்து  விலகி அமர்ந்திருக்க, சற்று பின்னால் தள்ளி அமர்ந்தான் குமரன். அவன் நகர்ந்து கொண்டே நெருங்கி அமர்வது நதிக்கும் தெரிந்து தான் இருந்தது. “இப்ப எதுக்காக என்மேல சாஞ்சுட்டே வர்றீங்க?” என்றாள் கோபமாக. “நீ சாய மாட்டேங்குற. அதான் நானே...
    அவன் வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டிருக்க, “ஒரு நிமிஷம்” என்றாள். அவனோ கேள்வியுடன் பார்க்க, “தியா குட்டியை உங்ககிட்டு இருந்து மறைச்சுட்டேன்னு தான உங்க கோபம்” என்றவள், “ரெண்டு வருஷம் உங்ககிட்டு இருந்து மறைச்சது தப்புத்தான். அதான் நான் ரெண்டு வருஷம் வளர்த்தேன்ல. இப்போ நீங்க ரெண்டு வருஷம் வளருங்க. சரியா போய்டும். நான் பார்க்க வர மாட்டேன். ரெண்டு...
    கோவிலில் வைத்து அவன் புதுத் தாலிச் செயினை அவளுக்குப் போட்டுவிட, “உதய் நான் தாலியை வேண்டாம்னு போடாம இல்லை. அது செயின் அறுந்துட்டது, அதான்” என்றாள். “அத்தை சொன்னாங்க நதி. அதான் புதுசு வாங்கினேன். அது இருந்தாலும் இல்லைன்னாலும் நான் உன் புருஷன்கிறது மாறப் போறது இல்லையில்ல” என்றான். “அப்பறம் எதுக்கு அன்னைக்கு கோபப்பட்டிங்க?” என்றாள். “என்னை மொத்தமா வேண்டாம்னு...
    “எனக்காக எதைத் தாங்குனிங்க உதய்? உங்க வீட்டுக்காகத் தாங்குனிங்க? அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? நானா உங்களை சாகடிக்கிறேன். இல்லை, நீங்க எல்லாரும் சேர்ந்து தான் என்னை சாகடிக்கிறிங்க? உங்களை சாகடிக்கிறவளோட ஒன்னும் நீங்க இருக்க வேண்டாம். நான் போறேன். உங்களுக்கு எப்பவும் உங்க குடும்பம் தான் முக்கியம். என்னைப் பத்தியெல்லாம் கவலையே...
    வாசல் 23: அந்த இரவு நேரத்தில் மனைவி மகளுடன் பயணித்துக் கொண்டிருந்தவனின் மனதிலும் ஆயிரம் எண்ணங்கள் பயணம் செய்து கொண்டிருந்தது. எல்லாம் சரியாகி விட்டது என்று அவனுக்கு தோன்றினாலும் மனதின் ஏதோ ஒரு மூலையில் இருந்த வெறுமையும், கோபமும் அப்படியே இருப்பதைப் போன்று தான் இருந்தது. நதியும் அவனைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தாள். அவள் அணைத்த...
    “சார், அவங்க கோரிக்கையிலும் நியாயம் இருக்கு. இவர் என்னதான் எல்லா இடத்தையும் பிராப்பரா ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணியிருந்தாலும் முன்னூறு ஏக்கர் நிலத்துல நூறு ஏக்கர் புறம்போக்கு நிலம் தான். அதைக் கேட்க அவங்களுக்கு உரிமை இருக்கு. இத்தனை காலமும் அது அவங்க பயன்பாட்டுல தான் இருந்திருக்கு” என்றாள் நதி. “மேடம் புறம்போக்குன்றது கவர்மென்ட் ப்ராப்பர்ட்டி. இதுவும் கவர்மென்ட்...
    இரண்டு நாட்களாக அதை கையில் எடுப்பதும், பின் வேண்டாம் என்று பார்க்காமல் வைப்பதுமாய் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தாள். இன்றும் கையில் எடுத்தவளுக்கு, மனம் படபடவென்று அடித்துக் கொள்ள, டக்கென்று வைத்துவிட்டாள். “நேர்லயே பார்த்துப்போம்” என்று நினைத்தவளுக்கு அப்படியேவும் இருக்க முடியவில்லை. “என்னக்கா? ஓவர் எக்சைட்மென்டா?” என்று கிண்டல் பண்ணியபடி வந்தாள் மகதி. “அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை” என்றவள் புடவையை சரி...
    அங்கே தியாவைத் தூக்கிக் கொண்டு சென்ற குமரனைப் பற்றி சொல்லவே வேண்டாம். மகளின் அருகாமையிலும், அணைப்பிலும் மீண்டும் ஜனனம் எடுத்திருந்தான். “சார் அப்போ நிஜமாவே பாப்பா உங்க பொண்ணா?” என்ற குருவிற்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. “இதையே எத்தனை தடவை கேட்ப குரு?” என்றவன் மகளை இன்னமும் ஜீப்பில் தான் வைத்து சுற்றிக் கொண்டிருந்தான். கங்காரு தன் குட்டியைத்...
    ஒரு வாரம் கழித்து அலுவலகம் சென்றவள், ட்ரான்ஸ்பரை ஏற்றுக் கொள்வதாய் சொல்ல, பிரியாவிற்கு தான் அதிர்ச்சி. “என்ன நதி? போகலைன்னு சொன்ன?” என்றாள். “இப்ப போகணும்னு தோணுது பிரியா” என்றாள். “கொஞ்சம் யோசிக்கலாம் நதி. இது வாழ்க்கை விஷயம். எடுத்தோம் கவுத்தோம்னு பண்ணாதடி” என்றாள் பிரியா. “இனி எடுக்கவோ கவுக்கவோ ஒன்னும் இல்லை பிரியா. உனக்கு ஒரு அட்வைஸ் சொல்லட்டுமா,...
    “ஆமா இந்த கல்யாண செலவெல்லாம் யாரோடது?” என்றாள். “ஏன்? எல்லாம் குமரனோடது தான். அவன் தான் அப்பாகிட்ட பணத்தை கொடுத்து விட்ருக்கான்” என்றான் கல்யாண். “அப்போ சரி” என்றாள் ராணி. “எதுக்கு கேட்ட?” என்றான். “எடுக்குற புடவையை நல்லா எடுக்கலாமேன்னு தான்” என்றவள் தீவிரமாய் புடவை அலசலில் இறங்கினாள். கல்யாணும், கண்ணனும் ஆண்களுக்கான உடையை பார்க்க சென்றிருந்தனர். “புடவை என்ன பிரைஸ்க்கு பார்க்கட்டும்...
    வாசல் 20: மகளை விட்டுவிட்டு சென்றவனின் மனமெல்லாம் அங்கேயே தான் இருந்தது. ஜீப்பில் தலை சாய்ந்து அமர்ந்திருவனின் முகத்தில் அலைப்புறுதலைப் பார்த்த குரு, “உங்களுக்கு தூக்கமே வராத சார்? நேத்தும் ஒரு பொட்டுத் தூங்கலை. இன்னைக்கும் பகல் முழுக்க வேலை.  இப்போ இப்படி நைட் ரவுண்ட்ஸ். இப்படியே இருந்தா உடம்பு என்னத்துக்கு சார் ஆகும்?” என்றான் குரு. “இன்னைக்குத்...
    error: Content is protected !!