Wednesday, August 5, 2026

    மெய்யான காதல் மெய் சேர்ந்தது.

    விபீஷணன் மற்றும் நந்தனாவின் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே சென்றது. காலையில் எழுந்தவுடனே நந்தனாவை அழைத்து விடுவான் விபீஷணன். ஐந்து நிமிடம் பேசிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கச் சென்று விடுவார்கள். பின்னர் மதியம் சாப்பிடும் நேரம் வரும் போது ஒரு பத்து நிமிடம் பேசுவார்கள். அதன் பிறகு இரவு தான். அவர்களுக்குச்...
    விபீஷணன் அவளைப் புரியாமல் பார்க்க, மீண்டும் அவளோ தொடங்கினாள்,"பெரியப்பா பெரியம்மாகிட்ட என்னைக் கவனிச்சுக்கிறதைப் பார்த்து பரவால உனக்கும் நந்தனா மேல அக்கறை இருக்கானு? ஒரு மாதிரி நக்கலா கேட்டார். அதுக்கு பெரியம்மா அவங்களை முறைச்சுப் பார்த்து எனக்கு அக்கறை எல்லாம் நிறையவே இருக்கு. ஆனால் உங்களுக்குத் தான் அது தெரியலை. நான் ஒன்னும் கொடுமைக்காரி...
    நந்தனா தன் காதலை விபீஷணனிடம் கூறியதும் அவன் வானில் பறந்தான் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் அவனுக்கு அடிப்பட்டிருக்கிறது என்று தெரிந்ததும் அவள் துடித்துப் போய் இங்கே வந்தது அவனது மனதிற்கு ஆனந்தமாக இருந்தது. அடிப்படாத கையால் நந்தனாவை அப்படியே இடிப்பில் ஒரு கையை வைத்துத் தூக்கி அவனது மேஜை மேல் உட்கார வைத்தான்....
    இங்கு மாலை என்றால் ராகவிக்கு அங்குக் காலை. அதுவும் ஹரீஷ் வேலைக்குக் கிளம்பும் நேரம் அது. அதை எல்லாம் யோசிக்காமல் அவன் அழைத்தான். ராகவி அவன் இந்த நேரம் அழைக்க மாட்டேனே என்று யோசனையுடன் கைப்பேசியை எடுக்க, அவள் அட்டென்ட் செய்த அடுத்த நொடி,"ப்ச் ராக்ஸ் நீ சொன்ன மாதிரியே நந்தனாவை நான் இத்தனை நாள்...
    விபீஷணன் நந்தனாவை இறக்கி விட்டு அவன் மீண்டும் மருத்துவமனை நோக்கிச் சென்று விட்டான். அவளது பயம் அவனுக்கு நன்றாகப் புரிந்தது. அதனால் எதுவும் பேசவில்லை அவன். அந்தப் பயத்தை மட்டும் போக்க வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டான் விபீஷணன். இங்கு நந்தனாவோ அவளது எண்ணங்களை நினைத்து அவளுக்கே சந்தேகமாக இருந்தது. விபீஷணனின் காதலை அவளால் உடனே ஏற்றுக்...
    அவனை மூன்று முறை தான் பார்த்திருக்கிறாள். அந்த மூன்று முறையிலும் அவன் அவளிடம் கண்ணியமாகத் தான் நடந்திருக்கிறான். அவனுடன் இருக்கும் போது பாதுகாப்பாக இருப்பது போல் ஓர் உணர்வு. அதே போல் அவன் அவளுக்கு முக்கியத்துவம் தருவதும் பிடித்திருக்கிறது. இப்படி அவனிடம் இருக்கும் நிறைகளை மட்டுமே மனம் யோசிக்கிறது. அவனிடம் குறை என்ற ஒன்றை...
    விபீஷணன் சந்தோஷமான மனநிலையில் தான் வீட்டிற்கு வந்தான். என்ன தான் நந்தனா தனது காதலை ஒத்துக்கொள்ள வில்லை என்றாலும் அவனுக்கு ஆயிரம் மடங்கு நம்பிக்கை இருந்தது நந்தனா கூடிய சீக்கிரம் தனது காதலை ஒத்துக்கொள்வாள் என்று. அதனால் சந்தோஷமாகவே வீடு வந்து சேர்ந்தான். சசிகலா அவனது நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தார். என்ன தான்...
    விபீஷணன் வேகமாக அவள் முன்னால் வந்து,"வித் யுவர் பெர்மிஷன்." என்று கூறி அவளது கையிலிருந்த கைப்பேசியை எடுத்தான். அவனது செயல் நந்தனாவை திடுக்கிடச் செய்தது. "எதுக்கு என் மொபைல இப்போ எடுத்தீங்க?" "அட என்ன டா நந்தான இப்போ தான வித் யுவர் பெர்மிஷன்னு சொன்னேன். அப்போ என்ன அர்த்தம் உன்னோட பெர்மிஷனோட தான் நான் எடுத்தேன்னு...
    நந்தனாவிற்கு பாட்டு மற்றும் நடனம் என்றால் உயிர். அதிலும் பரதம் மீது ஏனோ தீரா காதல். அதனால் தான் வீட்டில் எவ்ளோ கூறியும் அவள் நடனம் மற்றும் பாட்டில் பட்டப்படிப்புப் பயின்றாள். வார இறுதியில் சிறு பிள்ளைகளுக்குப் பயிற்சி தரும் நந்தனா வார நாட்களில் அவள் பயின்ற கல்லூரியிலே உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறாள். இப்போது...
    "கல்யாணம் எப்போ கூடி வரும்?" "அதெல்லாம் எப்போவோ கூடி வந்துருச்சு. இன்னும் ஆறு ஏழு மாதத்துக்குள் கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்கும். என்ன ஒன்னு...." என்று நிறுத்தினார் அவர். "என்னங்க ஜோசியரே? எதுவா இருந்தாலும் சொல்லுங்க!" "இந்த ஜாதகருக்கு மனசுக்குப் பிடிச்ச பொண்ணோட தான் கல்யாணம் நடக்கும். ஆனால் கல்யாணம் நடந்து மூனு மாசத்துக்குள்ள ஒரு பெரிய கண்டம்...
    விபீஷணன் தன் காதலை மறைமுகமாகச் சொல்லிச் சென்ற பின் நந்தனாவிற்குத் தான் என்னச் செய்வதெனப் புரியவில்லை. அவனை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை வேண்டாம் என்று ஒதுக்கவும் முடியவில்லை. அதை விட அவன் காதல் சொன்ன விதத்தில் அவள் அசந்து தான் போனாள். சரி இப்போதே எதுவும் முடிவு செய்ய வேண்டாம், சில நாட்கள் பொறுத்துப்...
    வெளியே வந்த விபீ அவனது காரை எடுத்துக் கொண்டு அவர்களது தெருவிலிருந்து வெளி வரும் வரை அவனுக்கு மனம் படப்படப்பாகத் தான் இருந்தது. எங்கு அவர்கள் எதுவும் குடைந்து கேட்டு விடுவார்களோ என்று பயந்து விட்டான். அவன் தவறு எதுவும் செய்யவில்லை. ஆனால் ஒரு விதப் படப்படப்பு அவனுக்கு வரத் தான் செய்தது. நேற்று போலவே...
    அன்று ஞாயிற்றுக் கிழமை. எப்போதும் போல விபீஷணன் அவனது வேலைக்குத் தயாராகிக் கீழே இறங்கி வந்தான். வந்தவன் வீட்டின் கூடத்தில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்ததும் சந்தேகம் வந்தது. போவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு நின்றிருக்க, அவன் நிற்பதைப் பார்த்து விட்டார் சசிகலா. "கீழே வா விபீ. அப்படியே தப்பிச்சிடலாம்னு நினைக்காத." அவர் பேசுவதிலே விஷயம் புரிந்து போனது...
    "க்ளாஸ் எப்படிப் போச்சு பசங்களா?" "சூப்பரா போச்சு. இன்னைக்கு என்னைய மாஸ்டர் தண்ணிக்குள்ள தள்ளி விட்டுட்டார். ஆனால் நான் பயப்படாமல் மேல வந்துட்டேன். அபய் தான் பயந்து அழுதுட்டான்." என்று ஆத்விக் கூற, விபீஷணன் அபயைப் பார்த்தான். "அப்படியா அபய்?" என்று அவனிடம் கேட்டான். "ஆமா மாமா. ஆனால் முதல்ல தான் அழுதேன். நெக்ஸ்ட் டைம் நானும் மேல...
    விபீஷணன் மதிய உணவைப் பெரும்பாலும் மருத்துவமனையில் தான் உண்பான். அன்றும் எப்போதும் போல மருத்தவமனையில் உள்ள கேன்டீனிற்குச் சென்று தனக்குத் தேவையான உணவு வகைகளைக் கூறிவிட்டு அதைக் கையோடு வாங்கிக் கொண்டு ஒரு நாற்காலியில் சென்று அமர, நந்திதா வந்து விட்டாள். அவளை ஆச்சரியமாகப் பார்த்த விபீஷணன்,"என்ன நந்திதா ஆப்ரேஷன் முடிஞ்சதா?" என்று அவளிடம் கேட்டான். "எஸ்...
    "அப்படிச் சொல்லாத நந்திதா. அவள் இங்க இருக்கா. இப்போ மட்டுமில்லை எப்பவும்." என்று அவனது இதயத்தைத் தொட்டுக் காட்டிக் கூற, நந்திதாவின் முகம் ஒரு நொடிச் சுருங்கி மீண்டும் சாதாரணமாக மாறியது. அவளுக்கு ஒரு விஷயம் நன்றாகப் புரிந்தது விபீஷணன் மனதில் அவள் இடம்பிடிக்கப் பிரியா கூறியது போல் நிறையப் போராட வேண்டும் என்பது....
    நந்திதா நிதர்சனத்தைப் புரியாமல் ஆர்வமாகவும் ஆசையாகவும் விபீஷணனைப் பார்க்க மருத்துவமனை வந்தாள். அன்று அவளுக்கு இரவு வேளையில் தான் வேலை. விபீஷணன் மருத்துவமனையில் இருக்கிறானா என்று கேட்காமலே அவனைச் சந்திக்க அவனது தளத்திற்கு அவள் சென்றாள். அன்று இவளுக்கு நல்ல நேரம் சரியாக அவள் அவனின் தளத்திற்கு வரவும் விபீஷணன் அவனது உடைமைகளை எடுத்துக்...
    "ப்ச் என்னத்தை சொல்றது மா எல்லாம் விதி. அவனுக்கு விருப்பம்னு சொல்லி நாங்க ஜாதகம் கூடப் பார்க்காமல் கல்யாணம் பண்ணி வைச்சோம். ஆனால் அது தப்போனு இப்போ தோனுது. சரி அதை விடு மா அது முடிஞ்சு போயிடுச்சு. நீ சொல்லு மா, உனக்கு இன்னும் விபீ மேல விருப்பம் இருக்கா?" கண்களில் ஆசைப்...
    ராஜாராம் எல்.ஐ.சி.யில் வேலைப் பார்த்துப் போன வருடம் தான் ஓய்வு பெற்றார். சசிகலாவும் அரசாங்கப் பள்ளியின் ஆசிரியராக இருந்து ஆறு வருடங்களுக்கு முன்பு சில உடல்நலக் குறைவால் அவர் விருப்ப ஓய்வு பெற்று விட்டார். பிள்ளைகள் மூவரையும் நன்குப் படிக்க வைத்தனர். அதுவும் விபீஷணன் இவர்களுக்கு அதிகச் செலவு வைக்காமல் தன்னுடைய அத்தனை படிப்பையும்...
    "நீங்க புதுசுல அதான் உங்களுக்குத் தெரியலை. விபி டாக்டர் ரொம்ப ஜாலி டைப். பேருக்குத் தான் அவர் நியூரோ டிபார்ட்மென்ட்ல வேலைப் பார்க்கிறார். ஆனால் ஹாஸ்பிட்டல்ல இருக்கிற எல்லாருக்கும் இவரைத் தெரியும். கூட்டித் துடைக்கிற ஆயால இருந்து நம்ம எல்லாருக்கும் சம்பளம் தர எம்.டீ. வரைக்கும் எல்லார்கிட்டயும் ஸ்டேட்டஸ் பார்க்காமல் பழகுவார். என்ன அவர்...
    error: Content is protected !!