நந்தனாவிற்கு பாட்டு மற்றும் நடனம் என்றால் உயிர். அதிலும் பரதம் மீது ஏனோ தீரா காதல். அதனால் தான் வீட்டில் எவ்ளோ கூறியும் அவள் நடனம் மற்றும் பாட்டில் பட்டப்படிப்புப் பயின்றாள். வார இறுதியில் சிறு பிள்ளைகளுக்குப் பயிற்சி தரும் நந்தனா வார நாட்களில் அவள் பயின்ற கல்லூரியிலே உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறாள். இப்போது கூட அவளது ஆசிரியர் கூறியதால் ஒரு நிகழ்ச்சியில் நடனம் ஆடச் செல்வதற்காகத் தான் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காகக் காத்திருந்தாள். அப்போது தான் விபீஷணன் அவளைப் பார்த்து அவளை அழைத்துச் செல்ல அவளிடம் போராடி அழைத்துக் கொண்டு செல்கிறான்.

நந்தனா அவனது காரில் உட்கார்ந்ததும், அவளிடமிருந்து வாங்கிய பொருட்களை காரின் பின் சீட்டில் வைத்துவிட்டு ஓட்டுநர் இருக்கையில் வந்து அமர்ந்தான் விபீஷணன்.

நந்தனா சற்றுப் பயந்தவள் போல் அமர்ந்திருக்க, அதைப் பார்த்த விபீஷணன்,”தைரியமா நீ வரலாம். எனக்கு உன்னை கிட்நாப் பண்ற ஐடியாலாம் இப்போ எதுவுமில்லை.” என்று கூறினான் அவன்.

“இப்போ இல்லைனா என்ன அர்த்தம்? அப்போ உங்களுக்கு அந்த எண்ணம் இருக்குனு தான அர்த்தம்? நீங்க முதல்ல காரை நிப்பாட்டுங்க, நான் ஆட்டோலயோ கேப்லயோ போயிக்கிறேன்.” என்று அவள் வேக வேகமாகக் கூற, அவன் அவளைப் பார்த்துச் சத்தமாகச் சிரித்தான்.

“டோன்ட் வொர்ரி, நான் தான் சொன்னேல இப்போ அந்த எண்ணம் இல்லைனு. ஆனால் கண்டிப்பா உன்னை நான் கடத்திட்டு போவேன் அதுவும் லைசென்ஸ் ஓட!!” என்று அவன் கூறவும் அவள் புரியாமல் அவனை முறைத்தாள்.

“எனக்குப் புரியலை!”

“ஓ லைசென்ஸ்னு நான் சொன்னதா? அது தான் மேடம் மஞ்சள் கயிறு அதாவது தாலி. அதை உன் கழுத்துல கட்டி நான் உன்னைக் கடத்திட்டு போவேன். இப்போ புரியுதா மேடம்.” என்று அவன் தைரியமாகக் கூறவும் அவளுக்குப் பதில் பேச வார்த்தை வரவில்லை. அப்படியே முகத்தை ஜன்னல் பக்கம் திரும்பி அமைதியாகிவிட்டாள்.

அவள் அமைதியாகவும் விபீஷணன் விசிலடித்துக் கொண்டே,”ஓகே ஓகே நோ வெட்கம். இப்போதைக்கு அதை விட்டுடலாம். சொல்லு எங்க போகனும் நீ?” என்று அவன் கேட்டான்.

அவள் மீண்டும் அவனை முறைத்துப் பார்த்து,”நான் ஒன்னும் வெட்கப்படலை. கனவுக் காணாமல் சரியா வண்டி ஓட்டுங்க.” என்று கூறி அவள் போகும் இடத்தின் பெயரைக் கூறினாள் நந்தனா.

“அங்க என்ன விஷயமா போற? டான்ஸ் ஆடப் போறியா?” என்று கேட்டான்.

“ம் ஆமா, கேன்சர் ஃபன்ட் ரெயிசிங்க் ப்ரோக்ராம்னு மேம் சொன்னாங்க. அந்த ப்ரோக்ராம்ல நிறையக் கலை நிகழ்ச்சி இருக்கும். அதுல ஒரு ப்ரோக்ராம்மா என்னோட டான்ஸ் இருக்கு.”

“வாவ் சூப்பர். உள்ள வர டிக்கெட் வேணுமா?” நந்தனாவின் நடனத்தைப் பார்க்கும் ஆவலில் அவன் கேட்டான்.

“எஸ், டிக்கெட்ல வர பணத்தை அப்படியே கேன்சர் பேஷனட்ஸ்கு யூஸ் பண்ணப் போறாங்க. அண்ட் இதுல ப்ரோக்ராம் பண்ற யாரும் மணி வாங்க மாட்டாங்க.”

“ஓ செம போ!! ம் அப்புறம் நான் கொடுத்த என் விசிடிங்க் கார்ட்டை தொலைச்சுட்டியா?”

“இல்லையே ஏன் கேட்கிறீங்க?”

“நீ எனக்கு ஃபோன் பண்ணுவனு நான் ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணேன். பட் நீ கூப்பிடவே இல்லை. இட்ஸ் ஓகே எக்ஸ்பெக்டேஷன்ஸ் ஹர்ட்ஸ்னு சும்மாவா சொன்னாங்க.” சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அவன் கூற, ஒரு நிமிடம் அவள் அவன் உண்மையிலே சோகமாகத் தான் இருக்கிறான் என்று நம்பிவிட்டாள்.

அவளுக்கு அவனது சோகம் பாதித்தது. அவனைச் சிரித்தே பார்த்தவள் இப்போது சோகமாக இருப்பதைப் பார்க்கப் பிடிக்கவில்லை. அவனைச் சமாதானப்படுத்த அவள் வாயைத் திறக்க, அதற்கு முன்பு அவனே,”நீ கூப்பிடலைனு நான் ரொம்ப சோகமா ஆகிட்டேன் நந்தனா. ஸோ எனக்கு காம்பென்சேட் பண்ற மாதிரி உன் நம்பர் என்னன்னு சொல்லு. அப்போ கண்டிப்பா என்னோட எக்ஸ்பெக்டேஷன் ஹர்ட் ஆகுது சரியா. அதே மாதிரி உன்கிட்ட நம்பர் வாங்கிட்டு உன்னை மாதிரி நான் கூப்பிடாமல் இருந்து உன்னோட எக்ஸ்பெக்டேஷனை ஹர்ட் பண்ண மாட்டேன். எப்படி என் ஐடியா?” என்று கேட்டு விட்டு அவளைப் பார்த்து அவனது சட்டைக் காலரைத் தூக்கிக் காட்ட, இவனுக்கா நாம் வருத்தப்பட்டோம் என்று அவளையே நிந்தித்துக் கொண்டு தன் தலையில் அடித்துக் கொண்டு மீண்டும் ஜன்னல் பக்கம் திரும்பி அவனை மனதிற்குள் வசைபாடிக் கொண்டிருந்தாள் நந்தனா.

அவள் அவனைத் திட்டுகிறாள் என்று அவளது முகத்தைப் பார்த்தே புரிந்து கொண்டான் விபீஷணன். இலகுவாக ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு,”தாராளமா நீ வாய் விட்டே திட்டலாம் நந்தனா. நான் ஒன்னும் உன்னைக் கடிச்சு வைச்சிட மாட்டேன்.” என்று கூறினான். 

அதற்கும் அவள் முறைப்பை மட்டுமே பதில் தந்தாள். எதுவும் பேசவில்லை. அவளது அமைதி விபீஷணனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. தான் ஒரு வேளை அதிகமாகப் பண்ணுகிறோமோ! என்று யோசிக்க ஆரம்பித்தான்.

ஒரு ஐந்து நிமிடம் கடந்திருக்கும். இருவரும் எதுவும் பேசவில்லை. அப்போது தான் நந்தனாவும் கவனித்தாள் அவன் அமைதியாக வருவதை, அவளுக்கு அது ஒரு மாதிரியாகி விட்டது. அவளாகப் பேச்சை ஆரம்பிக்கக் கூச்சமாக இருந்தது. என்ன செய்வதெனப் புரியாமல் அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது விபீஷணன் வாயைத் திறந்தான். பேசுவதற்கு அவன் வாயைத் திறக்கவில்லை மாறாக அவளைப் பார்த்து பாட்டுப் பாடினான். 

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே

எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்

இரவும் பகலும் சிந்தித்தேன்….

இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன்

இளமை இளமை பாதித்தேன்….

கொள்ளை கொண்ட அந்த நிலா

என்னைக் கொன்று கொன்று தின்றதே

இன்பமான அந்த வலி

இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே….

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்

உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்

என் உயிரில் நீ பாதி என்று

உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்

எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்

இப்படி என் மனம் துடித்ததில்லை

இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு

உறங்கச் சொல்வதில் நியாயமில்லை

நீ வருவாய இல்லை மறைவாயோ?

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்!

தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்

உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி

மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்

உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி

மரபு வேலிக்குள் நீ இருக்க

மறக்க நினைக்கிறேன் முடியவில்லை

இமயமலை என்று தெரிந்த பின்னும்

எறும்பின் ஆசையோ அடங்கவில்லை

நீ வருவாயோ? இல்லை மறைவாயோ? ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்!

தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

அந்தப் பாட்டைக் கேட்கக் கேட்க நந்தனாவின் மனம் ஓட்டப்பந்தயத்தில் ஓடி முடித்து விட்டு வரும் போது எவ்ளோ வேகமாக இதயம் துடிக்குமோ அது போல் அவளது இதயமும் தாறுமாறாகக் குதித்துக் கொண்டிருந்தது. அதுவும் அவன் ஒவ்வொரு வார்த்தையும் உணர்ந்து அவளைப் பார்த்துப் பாடுவது அவளைப் பணியாய் உருகிக் கொண்டிருந்தது. அவனைப் பார்க்க முடியாமல் அவள் திண்டாட, அவளுக்கு மேலும் கஷ்டத்தைத் தராமல் அவள் கூறிய இடம் வந்தது.

வேகமாக நந்தனா இறங்கக் கதவில் கை வைக்க, விபீஷணன் உடனே,”ஹேய் நந்தனா வெயிட் பண்ணு. டோன்ட் கெட் டவுன் நவ்.” என்றான் அவன்.

அவள் ஏன் என்ற கேள்வியுடன் கேள்வியுடன் அவனைப் பார்க்க, அவனோ கதவைத் திறந்து கொண்டு இறங்கி மறுபக்கம் வந்து அவளுக்குக் கதவைத் திறந்து விட, அதிசயத்து விட்டாள் நந்தனா. இந்தக் கவனிப்பு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவளது சூழ்நிலையில் இது சரியா தவறா என்று புரியவில்லை. விபீஷணன் செய்யும் அத்தனைச் சேட்டையையும் அவள் ரசித்தாள். ஆனால் மனம் ரசிக்க மட்டுமே அனுமதி தந்தது. அவனிடம் அதைப் பகிர நூற்றி நாற்பத்தி நான்கு உத்தரவைப் போட்டு விட்டது.

அவள் யோசனையுடனே இறங்கினாள். விபீஷணன் அவளது பொருட்களைப் பின் சீட்டிலிருந்து எடுத்து அவள் கையில் தந்தான்.

“தேங்க்ஸ். எனக்கு வேற என்ன சொல்றதுனு தெரியலை.” என்று கூறிவிட்டு அவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.