Advertisement

இங்கு மாலை என்றால் ராகவிக்கு அங்குக் காலை. அதுவும் ஹரீஷ் வேலைக்குக் கிளம்பும் நேரம் அது. அதை எல்லாம் யோசிக்காமல் அவன் அழைத்தான்.

ராகவி அவன் இந்த நேரம் அழைக்க மாட்டேனே என்று யோசனையுடன் கைப்பேசியை எடுக்க, அவள் அட்டென்ட் செய்த அடுத்த நொடி,”ப்ச் ராக்ஸ் நீ சொன்ன மாதிரியே நந்தனாவை நான் இத்தனை நாள் கான்டேக்ட் பண்ணவே இல்லை. அதே மாதிரி இன்னைக்கு அவள் கூப்பிடதும் கொஞ்சம் விளையாடினேன். அதுல அவள் முகமே சரியில்லை தெரியுமா!! பேசாமல் நான் தினமும் அவள்கிட்ட பேசிருந்தால் இந்நேரம் அவள் என் காதலை ஒத்துக்கிட்டு இருப்பா!! உன் பேச்சை கேட்டேன்ல!! ப்ச் போ ராக்ஸ்.” என்று பட படவென்று பொறுந்தி தள்ளிவிட்டான் விபீஷணன்.

“டேய் இப்போ இங்கே என்ன டைம் தெரியுமா? ஹரீஷ் வேலைக்குக் கிளம்பிட்டு இருக்கான். அவன் போனதும் நான் கால் பண்றேன். அதுவரை உன்னோட லட்டுவை நினைச்சுட்டு சோக கீதம் வாசிச்சுட்டு இரு.” என்று கூறிவிட்டு அவன் பேச இடமளிக்காமல் கைப்பேசியை வைத்து விட்டாள்.

அவள் வைத்ததும் தான் நேரத்தைக் கணக்குப் பண்ணிப் பார்த்தான் விபீஷணன். அப்போது தான் அவனது மடத்தனத்தை எண்ணி அவனது தலையில் அடித்துக் கொண்டான். அதன் பிறகுத் தான் ராகவி, ஹரீஷ் அலுவலகம் கிளம்பிச் செல்கிறான் என்று கூறியது நினைவு வர, அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. அவள் அழைக்கும் போது கண்டிப்பாக இதைப் பற்றிப் பேச வேண்டுமென யோசித்துக் கொண்டிருக்க, சொல்லிய படியே சிறிது நேரம் கழித்து அழைத்தாள் ராகவி.

“ராகவி, ஹரீஷ் வொர்க் ப்ரம் ஹோம் தான? அப்புறம் எதுக்கு ஆபிஸ் போகனும்? அதுவும் நீ இந்த மாதிரி இருக்கிற நேரத்துல? என்னமோ அன்னைக்கு வாய் கிழியப் பேசினான் உன்னை நல்லா பார்த்துப்பேன். அதனால இந்தியா அனுப்ப முடியாதுனு. இப்போ என்னாச்சு?” என்று கோபமாகக் கேட்டான் விபீஷணன்.

“ரிலாக்ஸ் விபீ, அவன் போக மாட்டேன்னு தான் சொன்னான். பட் ரொம்ப இம்பார்ட்டென்ட் மீட்டிங். அதனால நான் தான் வற்புறுத்தி அவனை அனுப்பினேன். நீ பேசாமல் அவனுக்குக் கால் பண்ணி எதுவும் பேசிடாதா சரியா.” என்று அழுத்தமாக அவள் கூறினாள்.

“அப்போ உன்னை யார் பார்த்துப்பா?”

“பக்கத்து வீட்டு ஆண்டி இந்தியன் தான். அவங்க பார்த்துப்பாங்க. ஹரீஷ் டூ ஹவர்ஸ்ல வந்துருவான். அப்புறம் டாக்டர் சொன்ன டேட்டுக்கு இன்னும் ஆறு நாள் இருக்கு விபீ.”

“ப்ச் என்ன ராக்ஸ் நீ!! சரி கேர்ஃபுல்லா இரு சரியா.”

“ம் ம் நீ எதுக்கு அவ்ளோ அவசரமா எனக்குக் கூப்பிட்ட? அதை முதல்ல சொல்லு!” என்றாள்.

விபீஷணன் நடந்த அனைத்தையும் கூற, ராகவி வேகமாக,”ஏய் லூசு நான் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ அவள் நாளைக்கே உனக்கு ஓகே சொல்ல போறா பார்.” என்று கூறினாள் ராகவி.

“உண்மையா சொல்றியா ராக்ஸ்?”

“அட லூசு, அவள் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா அதனால் தான் அவளுக்கு நீ கால் பண்ணாமல் இருந்தது மனசுக்குக் கஷ்டமா இருந்திருக்குது.”

“அப்படியா சொல்ற?”

“ஆமா!! சோ நீ எதுவும் யோசிக்காமல் அமைதியா இரு. நந்தனாவே வந்து உன்கிட்ட அவளோட லவ்வை சொல்லுவா சரியா.” என்று கூறினாள்.

அப்போது தான் விபீஷணனுக்கு நிம்மதியாக இருந்தது. பிறகுச் சிறிது நேரம் பேசிவிட்டுக் கைப்பேசியை வைத்தார்கள் இருவரும்.

அடுத்த நாள் எப்போதும் போல் விபீஷணன் மருத்துவமனைக் கிளம்பிச் சென்றான். அவன் வண்டியை ஓட்டிக் கொண்டு செல்லும் போது அவனது கைப்பேசி இசைத்தது.

யார் அழைக்கிறார்கள் என்று பார்க்க வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு அவனது கைப்பேசியை எடுத்துப் பார்க்க, லட்டுக் குட்டி என்று வரவும் வேகமாகக் கைப்பேசியை எடுத்தான்.

“சொல்லு நந்தனா.” நேற்று போல் எதுவும் விளையாடாமல் அப்படிக் கேட்டது நந்தனாவுக்கு நிம்மதியாக இருந்தது.

“நீங்க இப்போவும் என்னை லவ் பண்றீங்களா?” என்று கேட்டாள்.

அவன் சிரித்துக் கொண்டே,”அதுல உனக்கு என்ன டவுட் மேடம்?” என்று கேட்டான்.

“நான் உங்களைப் பார்க்கனும். எப்போ மீட் பண்ணலாம்?” என்று கேட்டாள்.

“நான் இப்போ ஹாஸ்பிட்டல் போய்கிட்டு…..” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே டொம் என்று ஏதோ சத்தம் கேட்க, இந்தப் பக்கமிருந்த நந்தனாவுக்கு என்ன நடந்தது என்று ஒன்றும் புரியவில்லை.

அவள் ஹலோ ஹலோ என்று கூறிக் கொண்டிருக்க, விபீஷணன் பக்கமிருந்து எந்தத் தகவலும் இல்லை. அவளுக்குப் பயம் வந்து விட்டது. அவளது கல்லூரிக்குச் செல்ல பேருந்து நிலையத்தில் நின்று தான் அவனுக்கு அழைத்தான்.

அதனால் சற்றும் தாமதிக்காமல் அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறிக் கொண்டாள். எங்குச் செல்ல என்று எதுவும் தெரியாமல் ஆட்டோ ஓட்டுநரை போகச் சொல்லிவிட்டு அவள் மீண்டும் விபீஷணனுக்கு அழைத்தாள். அவன் எடுக்கவே இல்லை. மிகவும் பயந்து விட்டாள் நந்தனா. 

அனைத்துக் கடவுளையும் வணங்கிக் கொண்டே மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டிருந்தாள் அவனுக்கு. அவளது வேண்டுதல் பலித்தது போல் அவன் அவளது அழைப்பை எடுத்தான்.

“நந்தனா அது வந்து…” என்று அவன் பேச ஆரம்பிக்கும் முன்பே,

“உங்களுக்கு எதுவும் இல்லை தான? என்ன சத்தம் கேட்டுச்சு? இப்போ நீங்க எங்கே இருக்கீங்க? ப்ச் நான் உங்களை இப்போவே பார்க்கனும்.” என்று அவள் படபடவென்று கூற, அவனுக்கு அவளது தவிப்பைக் கேட்க ஆனந்தமாக இருந்தது.

“எனக்கு எதுவுமில்லை நந்தனா. நான் நல்லா தான் இருக்கேன். இப்போ ஹாஸ்பிட்டல் தான் போயிட்டு இருக்கேன். நீ பயப்படாத சரியா.” என்று அவன் நிதானமாகப் பேச அதிலே அவனுக்கு ஒன்றுமில்லை என்று புரிந்தது. இருந்தாலும் அந்தச் சத்தம் அவன் இந்நேரம் வரை கைப்பேசியை எடுக்காமல் இருந்தது அவளுக்குச் சந்தேகத்தை விளைவித்தது.

“நிஜமா உங்களுக்கு எதுவும் இல்லை தான?” என்று மீண்டும் ஒரு முறைக் கேட்டாள் நந்தனா.

“அட நிஜமா எனக்கு ஒன்னும் இல்லை. நான் ஹாஸ்பிட்டல் வந்துட்டேன் அப்புறம் பேசுறேன்.” என்று கூறிவிட்டு வைத்து விட்டான்.

அவன் நன்றாக இருக்கிறேன் என்று கூறினாலும் ஏனோ நந்தனாவால் நம்ப முடியவில்லை. அதனால் அவனை நேரில் காண முடிவெடுத்து அவன் வேலை செய்யும் மருத்துவமனைக்குச் சென்றாள்.

என்ன தான் விபீஷணன் நன்றாக இருக்கிறேன் என்று கூறினாலும் அவனுக்கு கையிலும் தலையிலும் அடிப்பட்டு இருந்தது. அவளிடம் பேசும் போது வலியை மறைத்துக் கொண்டு தான் அவன் பேசினான். நிரம்ப வலி எடுக்கத் தான் அவன் அவளிடம் மருத்துவமனை வந்துவிட்டது என்று பொய் கூறிக் கைப்பேசியை வைத்தான்.

சரியாகப் பத்து நிமிடத்தில் அவன் வேலைச் செய்யும் மருத்துவமனைக்கு வந்துவிட்டான். கையில் காயங்கள் உடன் எமர்ஜென்சி பகுதிக்குச் சென்று அதற்குத் தேவையான சிகிச்சையைச் செய்து விட்டு அவன் அங்கிருந்து வரவும் நந்தனா மருத்துவமனை உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

அவளைச் சத்தியமாக அங்கு எதிர்பார்க்க வில்லை விபீஷணன். அவன் மெய் மறந்து அப்படியே நிற்க, அவனது கையிலும் தலையிலும் கட்டைப் பார்த்த நந்தனாவுக்குக் கண்ணீர் வந்து விட்டது.

அவளது கண்ணீர் அவனை நடப்புக்குக் கொண்டு வர, வேகமாக அவளிடம் வந்து அவளது கையைப் பற்றி அவனது அறைக்கு அழைத்துச் சென்றான்.

அவனது அறைக்குள் நுழைந்தவுடன் நந்தனா தன்னைத் தப்பாக நினைத்தாலும் பரவாயில்லை என்று அவளை அணைத்துக் கொண்டான் விபீஷணன்.

அவனது திடீர் அணைப்பு பெண்ணவள் உடலில் பல 

விதமான ரசாயன மாற்றங்களை விளைவித்தது. அப்படியே உறைந்து போய் விட்டாள் நந்தனா.

அவன் அவனது அணைப்பிலிருந்து அவளை விடுவிடுத்து  அவளது தோள்களில் தன் ஒரு கையை வைத்து,”நீ வருவனு நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை. அதான் ஒரு எமோஷன்ல நான் டக்குனு ஹக் பண்ணிட்டேன். டோன்ட் மிஸ்டேக் மீ.” என்று கூறிவிட்டு அவனது கையை எடுத்தான்.

அவன் பேச ஆரம்பித்ததும் தான் அவள் நடப்பிற்கு வந்தாள். அவனை மீண்டும் ஒரு முறை நன்றாகப் பார்த்தவள்,”உங்களுக்கு ஒன்னுமில்லைனு சொன்னீங்க? இப்போ கைல தலைல எல்லாம் கட்டுப் போட்டிருக்காங்க? அப்போ என்கிட்டப் பொய்ச் சொன்னீங்களா?” என்று கோபமாகக் கேட்டாள்.

“உன்னைத் தேவையில்லாமல் டென்ஷன் பண்ண வேண்டாம்னு தான் நான் எனக்கு எதுவும் ஆகலைனு பொய் சொன்னேன். ஆனால் நீ என்னைத் தேடி வந்ததைப் பார்க்கும் போது ஐ ஆம் ஃபீலிங் லைக் ஃப்ளையிங்.” என்றான் விபீஷணன்.

“நான் ஃபோன் பண்ணும் போது வண்டி ஓட்டிட்டா இருந்தீங்க? என்னால தான உங்களுக்கு அடிப்பட்டுச்சு. ஐ ஆம் சாரி. நான் கால் பண்ணிருக்கவே கூடாது.” என்று கூறி அவளை அவளே கண்ணத்தில் அடித்துக் கொண்டாள்.

“ஹேய் என்ன பண்ற நீ? லூசு மாதிரி பண்ணாத சரியா!! உன் மேல எந்தத் தப்பும் கிடையாது லட்டு. நீ ஃபோன் பண்ணதும் நான் வண்டியை ஓரமா நிறுத்தித் தான் பேசினேன். ஆனால் பின்னாடி ஒரு பையன் அப்போ தான் டிரைவிங் கத்துட்டு இருக்கான் போல, அந்தப் பக்கம் லாரி வருதுனு நிப்பாட்ட போனவன் பயத்துல ப்ரேக்குக்கு பதில்லா ஆக்சிலேட்டர்ரை அமுக்கிட்டான். அதுல நம்ம காரை அவன் இடிச்சுட்டான். கொஞ்சம் ஜெர்க்காகி கையிலயும் தலையிலயும் அடிப்பட்டுருச்சு. வேற எதுவுமில்லை. முக்கியமா உன் மேல தப்பு இல்லை சரியா.”

“இல்லை நான் ஃபோன் பண்ணாமல் இருந்திருந்தா நீங்க காரை நிப்பாட்டியே இருக்க மாட்டீங்க. என் மேல தான் தப்பு.” என்று அவள் கூற, அவனுக்குத் தான் ஐயோ என்றானது.

அதன்பிறகு அவளைச் சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது விபீஷணனுக்கு.

“இங்க பார் லட்டு உன்னால கிடையாது. எனக்கு அடிப்படனும்னு இருந்துருக்கு அடிப்பட்டுருச்சு. அவ்ளோ தான். நீ தேவையில்லாம ஏதோ ஒன்னை கற்பனைப் பண்ணிக்காத சரியா!! உன்னால எனக்கு எப்போவும் நல்லது மட்டும் தான் நடக்கும் லட்டு. கீப் தேட் இன் மைன்ட்.” என்று அவன் கூற, அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

“என்ன லுக்கு?”

“ஐ லவ் யூ.” என்று கூறி அவனை அணைத்துக் கொள்ள, அவன் திக்குமுக்காடிப் போனான்.

அவனும் அவளை அணைத்துக் கொண்டு,”நான் கூட உன்கிட்ட ஐ லவ் யூ சொல்லலை. பட் நீ சொல்லிட்ட, ஐ லவ் யூ சோ மச் என் லட்டுக் குட்டி.” என்று கூறிவிட்டு அவளது நெற்றியில் அவனது முதல் அச்சாரத்தைப் பதித்தான் விபீஷணன்.

Advertisement